அண்ணல் பால் தெளிந்த நந்தி அடிகள் பால் சனற்குமாரன் உள் நிறை அன்பின் ஆய்ந்து வியாதனுக்கு உணர்த்த வந்தப் புண்ணிய முனிவன் சூதற்கு ஒதிய புராணம் மூ ஆறு எண்ணிய இவற்றுள் காந்தத் தீச சங்கிதையின் மாதோ.
அறைந்திடப் பட்டது ஆகும் ஆலவாய் புகழ்மை அந்தச் சிறந்திடும் வடநூல் தன்னைத் தென் சொலால் செய்தி என்று இங்கு உறைத்திடும் பெரியோர் கூறக் கடைப் பிடித்து உறுதி இந்தப் பிறந்திடும் பிறப்பில் எய்தப் பெறுதும் என்று உளம் தேறா.
திருநகர் தீர்த்தம் மூர்த்திச் சிறப்பு மூன்று அந்த மூர்த்தி அருள் விளையாடல் எட்டு எட்டு அருச்சனை வினை ஒன்று ஆக வரன் முறை அறுபத்து எட்டாம் மற்று அவை படலம் ஆக விரி முறை விருத்தச் செய்யுள் வகைமை ஆல் விளம்பல் உற்றேன்.