27.

நாயகன் கவிக்கும் குற்ற நாட்டிய கழக மாந்தர்
மேய அத் தலத்தினோர்க்கு என் வெள்ளறி உரையில்                                                                   குற்றம்
ஆயுமாறு அரிது அன்றேனு நீர் பிரித்து அன்னம்                                                        உண்ணும்
தூய தீம் பால் போல் கொள்க சுந்தரன் சரிதம்                                                      தன்னை.

27

உரை
   
28.

கவைக் கொழும் அழனாச் சுவை கண்ட ஊன்                                                      இமையோர்
சுவைக்க விண் அழுது ஆயின துளக்கம் இல்                                                      சான்றோர்
அவைக் களம் புகுந்து இனிய ஆல வாய் உடையார்
செவிக் களம் புகுந்து ஏறுன் சிறியனேன் பனுவல்.

28
உரை
   
29.

பாய வாரி உண்டு உவர் கெடுத்து உலகெலாம் பருகத்
தூய ஆக்கிய கார் எனச் சொல் பொருள் தெளிந்தோர்
ஆய கேள்வியர் துகள் அறுத்து ஆல வாய் உடைய
நாய னார்க்கு இனியது ஆக்குப நலம் இலேன் புன்                                                         சொல்.

29
உரை
   
30.

அல்லை ஈது அல்லை ஈது என மறைகளும் அன்மைச்
சொல்லின் ஆற்றுதித் திளைக்கும் இச் சுந்தரன்                                                       ஆடற்கு
எல்லை ஆகுமோ என் உரை என் செய்கோ இதனைச்
சொல்லுவேன் எனும் ஆசை என் சொல் வழி கேளா.

30
உரை
   
31.

அறு கால் பீடத்து உயர் மால் ஆழி கடைந்த அமுதை                                       அரங்கேற்று மா போல்
அறுகால் பேடு இசைபாடும் கூடல் மான்மியத்தை                                               அரும் தமிழால் பாடி
அறுகால் பீடு உயர் முடியார் சொக்கேசர் சந்நிதியில்                                                  அமரர் சூழும்
அறுகால் பீடத்து இருந்து பரஞ்சோதி முனிவர் அரங்கு                                                ஏற்றி னானே.

31
உரை