32.

கறை நிறுத்திய கந்தர சுந்தரக் கடவுள்
உறை நிறுத்திய வாளினால் பகை இருள் ஒதுக்கி
மறை நிறுத்திய வழியினால் வழுதியாய்ச் செங்கோன்
முறை நிறுத்திய பாண்டிய நாட்டு அணி அது                                                        மொழிவாம்.

1
உரை
   
33. தெய்வ நாயகன் நீறு அணி மேனி போல் சென்று
பௌவம் ஏய்ந்து உமை மேனி போல் பசந்து பல்                                                   உயிர்க்கும்
எவ்வம் ஆற்றுவான் சுரந்திடும் இன் அருள் என்னக்
கௌவை நீர் சுரந்து எழுந்தன கனைகுரல் மேகம்.
2
உரை
   
34. இடித்து வாய் திறந்து ஒல் என வெல் ஒளி மழுங்கத்
தடித்து வாள் புடை விதிர்த்து நின்று இந்திர சாபம்
பிடித்து நீள் அம்பு கோடை மேல் பெய்து வெம்                                                  பெரும் போர்
முடித்து நாம் என வருதல் போல் மொய்த்தன                                                  கொண்மூ.
3
உரை
   
35. முனித நீள் வரை உச்சி மேல் முழங்கி வான் நிவந்து
தனித நீர் மழை பொழிவன தடம் சிலை இராமன்
கனித நீர்மையால் ஆலவாய்க் கண் நுதல் முடிமேல்
புனித நீர்த் திரு மஞ்சனம் ஆட்டுவான் போலும்.
4
உரை
   
36. சுந்தரன் திரு முடி மிசைத் தூய நீர் ஆட்டும்
இந்திரன் தனை ஒத்த கார் எழிலி தென் மலை மேல்
வந்து பெய்வ அத்தனி முதல் மௌலிமேல் வலாரி
சிந்து கின்ற கைப் போது எனப் பல் மணி தெறிப்ப.
5
உரை
   
37. உடுத்த தெண் கடல் மேகலை உடைய பார் மகள் தன்
இடத்து உதித்த பல் உயிர்க்கு எலாம் இரங்கித் தன்                                                    கொங்கைத்
தடத்து நின்று இழி பால் எனத் தடவரை முகடு
தொடுத்து வீழ்வன விழும் எனத் தூங்கு வெள் அருவி.
6
உரை
   
38. கரு நிற மேகம் என்னும் கச்சு அணி சிகரக் கொங்கை
அருவி ஆம் தீம்பால் சோர அகன் சுனை என்னும்                                                     கொப்பூழ்ப்
பொருவில் வேய் எனும் மென் தோள் பொதியம் ஆம்                                                சைலப் பாவை
பெருகு தண் பொருநை என்னும் பெண் மகப் பெற்றுள்                                                         அன்றெ.
7
உரை
   
39. கல் எனக் கரைந்து வீழும் கடும் புனல் குழவி கானத்து
ஒல் எனத் தவழ்ந்து தீம் பால் உண்டு ஒரீத் திண்                                              தோள் மள்ளர்
செல் எனத் தெழிக்கும் பம்பைத் தீம் குரல் செவி                                              வாய்த் தேக்கி
மெல் எனக் காலில் போகிப் பணைதொறும்                                       விளையாட்டு எய்தி.
8
உரை
   
40. அரம்பை மெல் குறங்காம் ஆவின் அவிர்த் தளிர் நிற                                            மாத் தெங்கின்
குரும்பை வெம் முலையா வஞ்சிக் கொடி இறு                                                  நுசுப்பாக் கூந்தல்
சுரும்பு அவிழ் குழலக் கஞ்சம் சுடர் மதி முகமாக்                                                   கொண்டு
நிரம்பி நீள் கைதை வேலி நெய்தல் சூழ் காலில் வைகி.
9
உரை
   
41. பல் மலர் மாலை வேய்ந்து பால் நுரைப் போர்வை                                                போர்த்துத்
தென் மலைத் தேய்ந்த சாந்த மான் மதச் சேறு பூசிப்
பொன் மணி ஆரம் தாங்கிப் பொருநை ஆம் கன்னி                                                      முந்நீர்த்
தன் மகிழ் கிழவன் ஆகத் தழீக் கொடு கலந்தது                                                      அன்றெ.
10
உரை
   
42. வல்லை தாய் இருபால் வைகும் சிவாலய மருங்கு மீண்டு
முல்லை ஆனைந்தும் தேனும் திரைக் கையான் முகந்து                                                        வீசி
நல்ல மான் மதம் சாந்து அப்பி நறு விரை மலர் தூய்                                                      நீத்தம்
செல்லல் ஆல் பூசைத் தொண்டின் செயல் வினை                                                 மாக்கள் போலும்.
11
உரை
   
43. அரும்பு அவிழ் அனங்க வாளி அலை தர ஆகம்                                                 பொன் போர்த்து
இரங்கி வால் அன்னம் ஏந்தி இருகையும் சங்கம் சிந்தி
மருங்கு சூழ் காஞ்சி தள்ளி வரம் பிற ஒழுகும் வாரி
பரம் பரற்கு ஐயம் பெய்யும் பார்ப்பன மகளிர் போலும்.
12
உரை
   
44. வரை படு மணியும் பொன்னும் வைரமும் குழையும்                                                      பூட்டி
அரை படு அகிலும் சாந்தும் அப்பி இன் அமுதம்                                                      ஊட்டிக்
கரை படு மருதம் என்னும் கன்னியைப் பருவ நோக்கித்
திரை படு பொருநை நீத்தம் செவிலி போல் வளர்க்கும்                                                       மாதோ.
13
உரை
   
45. மறை முதல் கலைகள் எல்லா மணி மிடற்றவனே                                                      எங்கும்
நிறைபரம் என்றும் பூதி சாதன நெறி வீடு என்றும்
அறை குவது அறிந்தும் தேறார் அறிவு எனக் கலங்கி                                                      அந்த
முறையின் வீடு உணர்ந்தோர் போலத் தெளிந்தது மூரி                                                      வெள்ளம்.
14
உரை
   
46. மறை வழி கிளைத்த வெள் எண் கலைகள் போல்                                      வருநீர் வெள்ளம்
துறை வழி ஒழுகும் பல் கால் சோலை தண் பழனம்                                                      செய்தேன்
உறை வழி ஓடை எங்கும் ஓடி மன்று உடையார்க்கு                                                      அன்பர்
நிறைவு அழியாத உள்ளத்து அன்பு போல் நிரம்பிற்று                                                      அன்றே.
15
உரை
   
47. இழிந்த மாந்தர் கைப் பொருள்களும் இக பரத்து ஆசை
கழிந்த யோகியர் கைப் படில் தூயவாய்க் களங்கம்
ஒழிந்த வாறு போல் உவரி உண்டு உவர் கெடுத்து                                                      எழிலி
பொழிந்த நீர் அமுது ஆயின புவிக்கும் வானவர்க்கும்.
16
உரை
   
48. ஈறு இலாதவள் ஒருத்தியே ஐந் தொழில் இயற்ற
வேறு வேறு பேர் பெற்று என வேலை நீர் ஒன்றே
ஆறு கால் குளம் கூவல் குண்டு அகழ் கிடங்கு                                                  எனப்பேர்
மாறி ஈறு இல் வான் பயிர் எலாம் வளர்ப்பது மாதோ.
17
உரை
   
49. களமர்கள் பொன் ஏர் பூட்டித் தாயர் வாய்க் கனிந்த                                                  பாடற்கு
உளம் மகிழ் சிறாரின் ஏறு ஒருத்தலும் உவகை தூங்க
வளம் மலி மருதம் பாடி மனவலி கடந்தோர் வென்ற
அளமரு பொறி போல் ஏவல் ஆற்றவாள் வினையின்                                                  மூண்டார்.
18
உரை
   
50. பல நிற மணி கோத்த என்ன பல் நிற ஏறு பூட்டி
அலமுக இரும்பு தேய வாள் வினைக் கரும் கால்                                                        மள்ளர்
நில மகள் உடலம் கீண்ட சால் வழி நிமிர்ந்த சோரிச்
சலம் என நிவந்த செம் கேழ்த் அழல் மணி இமைக்கும்                                                        மன்னோ.
19
உரை
   
51. ஊறு செய் படை வாய் தேய உழுநரும் நீர்க்கால்                                                   யாத்துச்
சேறு செய்குநரும் தெய்வம் தொழுது தீம் செந்நெல்                                                   வீசி
நாறு செய்கு நரும் பேர்த்து நடவு செய்கு நரும்                                                   தெவ்வின்
மாறு செய் களை கட்து ஒம்பி வளம் படுக்கு நரும்                                                  ஆனார்.
20
உரை
   
52. பழி படு நறவம் தன்னைக் கடைசியர் பருகிச் செவ்வாய்
மொழி தடுமாற வேர்வை முகத்து எழ முறுவல் தோன்ற
விழி சிவந்து உழலக் கூந்தல் மெல் துகில் சோர                                                  உள்ளக்
கழி பெரும் களிப்பு நல்கிக் கலந்தவர் ஒத்தது அன்றெ.
21
உரை
   
53. பட் பகை ஆகும் தீம் சொல் கடைசியர் பவளச்                                                     செவ்வாய்க்
குட்பகை ஆம்பல் என்று ஒண் நறும் குவளை நீலம்
கட் பகை ஆகும் என்றும் கமல நன் முகத்துக்கு                                                    என்றும்
திட் பகை ஆகும் என்றும் செறுதல் போல் களைதல்                                                        செய்வார்.
22
உரை
   
54. கடைசியர் முகமும் காலும் கைகளும் கமலம் என்னார்
படை விழி குவளை என்னார் பவள வாய் குமுதம்                                                   என்னார்
அடையவும் களைந்தார் மள்ளர் பகைஞராய் அடுத்த                                                  எல்லை
உடையவன் ஆணை ஆற்றால் ஒறுப்பவர்க்கு உறவு                                                   உண்டாமோ.
23
உரை
   
55. புரை அற உணர்ந்தோர் நூலின் பொருளின் உள்                                            அடங்கி அந்நூல்
வரை அறை கருத்து மான வளர் கருப் புறம்பு                                             தோன்றிக்
கரை அமை கல்வி சாலாக் கவிஞர் போல் இறுமாந்து                                                   அந்நூல்
உரை என விரிந்து கற்பின் மகளிர் போல் ஒசிந்தது                                                   அன்றெ.
24
உரை
   
56. அன்பு உறு பத்தி வித்தி ஆர்வ நீர் பாய்ச்சும்                                         தொண்டர்க்(கு)
இன்பு உரு ஆன ஈசனின் அருள் விளையும் ஆப்போல்
வன்பு உறு கரும்கால் மள்ளர் வைகலும் செவ்வி                                                 நோக்கி
நன்புலம் முயன்று காக்க விளைந்தன நறும் தண் சாலி.
25
உரை
   
57. அகன் நில வேறுபாட்டின் இயல் செவ்வி அறிந்து                                                     மள்ளர்
தகவினை முயற்சி செய்யக் காமநூல் சாற்று நான்கு
வகைநலார் பண்பு செவ்வி அறிந்து சேர் மைந்தர்க்கு                                                     இன்பம்
மிகவிளை போகம் போன்று விளைந்தன பைங் கூழ்                                                     எல்லாம்.
26
உரை
   
58. கொடும் பிறை வடிவில் செய்த கூன் இரும்பு அம் கை                                                        வாங்கி
முடங்கு கால் வரிவண்டு ஆர்ப்ப முள்ளரைக் கமல                                                        நீலம்
அடங்க வெண் சாலி செந்நெல் வேறு வேறு அரிந்திடு                                                        ஆக்கி
நெடும் களத்து அம் பொன் குன்ற நிரை எனப் பெரும்                                                 போர் செய்தார்.
27
உரை
   
59. கற்று அவை களைந்து தூற்றிக் கூப்பி ஊர்க்காணித்                                                  தெய்வம்
அற்றவர்க்கு கற்றவாறு ஈந்து அளவை கண்டு ஆறில்                                                    ஒன்று
கொற்றவர் கடமை கொள்ளப் பண்டியில் கொடு                                            போய்த் தென்னாடு
உற்றவர் சுற்றம் தெய்வம் விருந்தினர் கூட்டி உண்பார்.
28
உரை
   
60. சாறு அடு கட்டி எள்ளுச் சாமை கொள் இறுங்கு                                                        தோரை
ஆறு இடு மத மால் யானைப் பழுக்குலை அவரை                                                      ஏனல்
வேறு பல் பயறோடு இன்ன புன்னில விளைவு மற்றும்
ஏறொடு பண்டி ஏற்றி இரு நிலம் கிழிய உய்ப்பார்.
29
உரை
   
61. துறவினர் ஈச நேசத் தொண்டினர் பசிக்கு நல் ஊண்
இறவினைப் பிணிக்குத் தீர்க்கு மருந்துடல் பனிப்புக்கு                                                     ஆடை
உறைவிடம் பிறிது நல்கி அவர் அவர் ஒழுகிச் செய்யும்
அறவினை இடுக்கண் நீக்கி அருங்கதி உய்க்க வல்லார்.
30
உரை
   
62. நிச்சலும் ஈசன் அன்பர் நெறிப்படிற் சிறார் மேல்                                                    வைத்த
பொச்சமில் அன்பு மன்னர் புதல்வரைக் கண்டால்                                                    அன்ன
அச்சமும் கொண்டு கூசி அடி பணிந்து இனிய கூறி
இச்சையார் ஒழுகிய உள்ளக் குறிப்பு அறிந்து ஏவல்                                                    செய்வார்.
31
உரை
   
63. நறை படு கனி தேன் பெய்த பாலோடு நறுநெய்                                                 வெள்ளம்
நிறைபடு செம் பொன் வண்ணப் புழுக்கலான் இமிர்ந்த                                                   சோறு
குறைவு அற உண்டு வேண்டும் பொருள்களும்                                           கொண்மின் என்ன
மறை முதல் அடியார் தம்மை வழி மறித்து அருத்து                                                  வார்கள்.
32
உரை
   
64. பின் எவன் உரைப்பது அந்தப் பெரும் தமிழ் நாடு                                               ஆம் கன்னி
தன் இடை ஊர்கள் என்னும் அவயவம் தாங்கச் செய்த
பொன் இயல் கலனே கோயில் மடம் அறப்புற                                                   நீர்ச்சாலை
இன் அமுது அருத்துசாலை என உருத் திரிந்தது                                                   அம்மா.
33
உரை
   
65. இன் தடம் புனல் வேலி சூழ் இந் நில வரைப் பில்
குன்ற முல்லை தண் பணை நெய்தல் குலத்திணை                                                   நான்கும்
மன்ற உள்ள மற்று அவை நிற்க மயங்கிய மரபின்
ஒன்றொடு ஒன்று போய் மயங்கிய திணைவகை                                                     உரைப்பாம்.
34
உரை
   
66. கொல்லை ஆன் நிரை மேய்ப்பவர் கோழ் இணர்க்                                                  குருந்தின்
ஒல்லை தாய் அதில் படர் கறிக் கருந்துணர் உகுப்ப
முல்லை சோறு எனத்தேன் விராய் முத்து இழை சிற்றில்
எல்லை ஆய மோடு ஆடுப எயின் சிறு மகளிர்.
35
உரை
   
67. கன்றோடும் களிவண்டு வாய் நக்க ஈர்ங் கரும்பு
மென்று பொன் சொரி வேங்கை வாய் உறங்குவ மேதி
குன்று இளம் தினை மேய்ந்து பூம் கொழு நிழன்                                                       மருதம்
சென்று தங்குவ சேவகம் என முறச் செவிமா.
36
உரை
   
68. எற்று தெண் திரை எறி வளை எயிற்றியர் இழைத்த
சிற்றில் வாய் நுழைந்து அழிப்பச் சிறுமியர் வெகுண்டு
பற்றிலார் எனச் சிதறிய மன அணி பரதர்
முற்றிலா முலைச் சிறுமியர் முத்தொடும் கோப்ப.
37
உரை
   
69. முல்லை வண்டு போய் முல்லை யாழ் முளரி வாய்                                                     மருதம்
வல்ல வண்டினைப் பயிற்றிப் பின் பயில்வன மருதம்
கொல்லையான் மடி எறிந்து இளம் குழவி என்று இரங்கி
ஒல்லை ஊற்று பால் வெள்ளத்து உகள்வன வாளை.
38
உரை
   
70. கரும் பொன் கோட்டு இளம் புன்னைவாய் கள் உண்டு                                                        காளைச்
சுரும்பு செவ்வழிப் பாண் செயக் கொன்றை பொன்                                                        சொரிவ
அரும் தடம் கடல் வளை எடுத்து ஆழியான் கையில்
இருந்த சங்கு என விறைகொளப் பூவைமேல் எறிவ.
39
உரை
   
                             
71. கழிந்த தெங்கின் ஒண் பழம் தரீ முள் பலாக் கனி                                                        கீண்டு
அழிந்த தேன் உவர்க் கேணி பாய்ந்து அகற்றுவ                                                     வுவரை
வழிந்த தேன் மடல் கேதகை மலர் நிழல் குருகு என்று
ஒழிந்த தாமரைப் போது புக்கு ஒளிப்பன கெண்டை.
40
உரை
   
                             
72. ஆறு சூழ் கழிப் புலால் பொறாது அசைந்து கூன்                                                      கைதை
சோறு கால்வன ஆம்பல் வாய் திறப்பன துணிந்து
கூறுவார் எனக் குவளை கண் காட்டிடக் கூடித்
தூறுவார் எனச் சிரித்து அலர் தூற்றுவ முல்லை.
41
உரை
   
                             
73. துள்ளு சேல் விழி நுளைச்சியர் சுறவொடு அருந்தக்
கள்ளும் ஆறவும் கூனல் அம் காய் தினை அவரை
கொள்ளும் ஆறவும் கிழங்கு தேன் கொழும் சுவைக்கு                                                       அன்னல்
எள்ளு மாறவும் அளப்பன விடைக் கிடை முத்தம்.
42
உரை
   
                             
74. அவம் மிகும் புலப் பகை கடந்து உயிர்க்கு எலாம்                                                    அன்பாம்
நவமிகும் குடை நிழற்றி மெய்ச் செய்ய கோல் நடத்தி
சிவ மிகும் பரஞான மெய்த் திருவொடும் பொலிந்து
தவம் இருந்து அரசு ஆள்வது தண் தமிழ்ப் பொதியம்.
43
உரை
   
                             
75. வான ஆறு தோய்ந்து உயரிய மலயமே முக்கண்
ஞான நாயகன் அம் மலை போர்த்த கார் நால்வாய்
ஆனை ஈர் உரி அம் மழை அசும்ப தன் புண் நிர்
கூனல் வான் சிலை குருதி தோய் கொடு போன்று                                                     அன்றெ.
44
உரை
   
                             
76. சுனை அகன் கரைச் சுழல் வாய்ச் சுரும்பு சூழ் கிடப்ப
நனை அவிந்த செம் காந்தண் மேல் நாகு இள                                                 வேங்கைச்
சினைய விழ்ந்த வீகிடப்ப பொன் தோய் கலத் தெள்                                                       நீர்
அனைய பொன் சுடு நெருப்பொடு கரி இருந்த அனைய.
45
உரை
   
                             
77. குண்டு நீர்ப்படு குவளை வாய் கொழும் சினை மரவம்
வண்டு கூப்பிடச் செம் மறுய் புது மது வார்ப்ப
அண்டர் வாய்ப் பட மறைவழி பொரி சொரிந்து ஆன்                                                        நெய்
மொண்டு ஆக்கி முத்தி வினை முடிப்பவர் அனைய.
46
உரை
   
                             
78. அகிலும் ஆரமும் அழல் மடுத்து அகழ்ந்து எறிந்து                                                அழல் கால்
துகிரும் ஆரமும் தொட்டு எறிந்து ஐவனம் தூவிப்
புகரின் மால் கரி மருப்பினால் வேலிகள் போக்கி
இகல் இல் வான் பயிர் ஓம்புவ எயினர் தம் சீறூர்.
47
உரை
   
                             
79. அண்ட வாணருக்கு இன் அமுது அருத்துவோர்                                                     வேள்விக்
குண்ட வார் அழல் கொழும் புகை கோலும்                                                 அக்குன்றில்
புண் தவாத வேல் இற உளர் புனத்து எரி மடுப்ப
உண்ட கார் அகில் தூமமும் ஒக்கவே மயங்கும்.
48
உரை
   
                             
80. கருவி வாள் சொரி மணிகளும் கழை சொரி மணியும்
அருவி கான்ற பல் மணிகளும் அகன் தலை நாகத்து
இரவி கான்ற செம் மணிகளும் புனம் கவரி மான்
குருவி வீழ்ந்திடக் கொடிச்சியர் கோத்துஎறி கவண்கல்.
49
உரை
   
                             
81. மாயவன் வடிவாய் அது வைய மால் உந்திச்
சேய பங்கயமாய் அது தென்னன் ஆடலர் மேல்
போய மெல் பொகுட்டு ஆயது பொதியம் அப்                                                  பொகுட்டின்
மேய நான்முகன் அகத்தியன் முத்தமிழ் வேதம்.
50
உரை
   
                             
82. ஏகம் ஆகிய மேருவும் பொதியமே இரும் பொன்
ஆகு மேருவைச் சூழ்ந்த சாம்பூநத ஆறும்
நகர் ஆடு தண் பொருநை நாவல் ஆரு உடுத்த
போக பூமியும் பெருநை சூழ் பூமியே போலும்.
51
உரை
   
                             
83. சிறந்த தண் தமிழ் ஆலவாய் சிவன் உலகு ஆனால்
புறம் தயங்கிய நகர் எலாம் புரந்தரன் பிரமன்
மறம் தயங்கிய நேமியோன் ஆதிய வானோர்
அறம் தயங்கிய உலகு உருவானதே ஆகும்.
52
உரை
   
                             
84. வளைந்த நுண் இடை மடந்தையர் வன முலை மெழுகிக்
களைந்த குங்குமக் கலவையும் காசறைச் சாந்தும்
அளைந்த தெண் திரைப் பொருநையோ அந் நதி                                                      ஞாங்கர்
விளைந்த செந்நெலும் கன்னலும் வீசும் அவ்வாசம்.
53
உரை
   
                             
85. பொதியிலே விளைகின்றன சந்தனம் பொதியின்
நதியிலே விளைகின்றன முத்தம் அந் நதி சூழ்
பதியிலே விளைகின்றன தருமப் அப் பதியோர்
மதியிலே விளைகின்றன மறை முதல் பத்தி.
54
உரை
   
                             
86. கடுக் கவின் பெறு கண்டனும் தென் திசை நோக்கி
அடுக்க வந்து வந்து ஆடுவான் ஆடலின் இளைப்பு
விடுக்க வார மென் கால் திரு முகத்து இடை வீசி
மடுக்கவும் தமிழ் திருச் செவி மாந்தவும் அன்றோ.
55
உரை
   
                             
87. விடை உகைத்தவன் பாணினிக்கு இலக்கணம் மேல்                                                      நாள்
வட மொழிக்கு உரைத் தாங்கி அயன் மால் மாமுனிக்கு
திடம் உறுத்தி அம் மொழிக்கு எதிர் அக்கிய தென்                                                    சொல்
மட மகட்கு ஆங்கு என்பது வழுதி நாடு அன்றோ.
56
உரை
   
                             
88. கண் நுதல் பெரும் கடவுளும் கழகமோடு அமர்ந்து
பண் உறத் தெரிந்து ஆய்ந்த இப் பசுந் தமிழேனை
மண் இடைச் சில இலக்கண வரம்பு இலா மொழி போல்
எண் இடைப் படக் கிடந்ததா எண்ணவும் படுமோ.
57
உரை
   
                             
89. தொண்டர் நாதனைத் தூது இடை விடுத்ததும் முதலை
உண்ட பாலனை அழைத்தது எலும்பு பெண் உருவாகக்
கண்டதும் மறைக் கதவினைத் திறந்ததும் கன்னித்
தண் தமிழ்ச் சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்.
58
உரை
   
                             
90. வெம்மையால் விளைவு அஃகினும் வேந்தர் கோல்                                                     கோடிச்
செம்மை மாறினும் வறுமை நோய் சிதைப்பினும் சிவன்                                                        பால்
பொய்ம்மை மாறிய பத்தியும் பொலிவு குன்ற வாய்த்
தம்மை மாறியும் புரிவது தருமம் அந்நாடு.
59
உரை
   
                             
91. உலகம் யாவையும் ஈன்றவளும் அருள் உயர்ந்த
திலக நாயகி பரம் சுடர் சேய் என மூன்று
தலைவரால் முறை செய்த நாடு இஃது அன்றிச் சலதி
சுலவு பாரின் உண்டகுமோ துறக்கத்தும் அஃதே.
60
உரை