தொடக்கம் |
|
|
92. |
மங்கலம் புனை பாண்டி நாடு ஆகிய மகட்குச் சங்கலம் புகை தோள் இணை தட முலை ஆதி அங்கம் ஆம் புறம் தழுவிய நகர் எலாம் அனைய நங்கை மா முகம் ஆகிய நகர் வளம் பகர்வாம். |
1 |
|
|
உரை
|
|
|
|
|
93. |
கொங்கையே பரங்குன்றமும் கொடும்குன்றும் கொப்பூழ் அங்கமே திருச் சுழியல் அவ்வயிறு குற்றலம் செம் கை ஏடகம் மேனியே பூவணம் திரள் தோள் பொங்கர் வேய் வனம் திருமுக மதுரை ஆம் புரமே.
| 2 |
|
|
உரை
|
|
|
|
|
94. |
வருவு இல் மாநில மடந்தை மார் பிடைக் கிடந்து இமைக்கப் படுவில் ஆரமே பாண்டி நாடு ஆரம் மேல் பக்கத்து இடுவின் மா மணி அதன் புற நகர் எலாம் இவற்றுள் நடுவின் நாயக மாமணி மதுரை மா நகரம். |
3 |
|
|
உரை
|
|
|
|
|
95. |
திரு மகட்கு ஒரு தாமரைக் கூடமே திருமான் மரு மகட்கு வெண் தாமரை மாடமே ஞானம் தரு மக்கட்கு யோகம் தனிப் பீடமே தரை ஆம் பெரு மகட்கு திலகமே ஆனது இப் பேரூர். |
4 |
|
|
உரை
|
|
|
|
|
96. |
திக்கும் வானமும் புதை இருள் தின்று வெண் சோதி கக்கு மாளிகை நிவப்பு உறு காட்சி அந் நகருள் மிக்க வால் இதழ்த் தாமரை வெண்மகள் இருக்கை ஒக்கும் அல்லது புகழ் மகள் இருக்கையும் ஒக்கும். |
5 |
|
|
உரை
|
|
|
|
|
97. |
நெல் கரும்பு எனக் கரும்பு எலாம் நெடும் கமுகு என்ன வர்க்க வான் கமுகு ஒலி கலித் தெங்கு என வளர்ந்த பொன் கவின் குலைத் தெங்கு கார்ப் பந்தரைப் பொறுத்து நிற்க நாட்டிய கால் என நிவந்த தண் பணையே. |
6 |
|
|
உரை
|
|
|
|
|
98. |
சிவந்த வாய்க் கரும் கயல் கணாள் வலாரியைச் சீறிக் கவர்ந்த வான் தருக் குலங்களே கடி மணம் வீசி உவந்து வேறு பல் பலங்களும் வேண்டினர்க்கு உதவி நிவந்த காட்சியே போன்றது நிழல் மலர்ச் சோலை. |
7 |
|
|
உரை
|
|
|
|
|
99. |
ஒல் ஒலிக் கதிர்ச் சாவிகள் புறம் தழீஇ ஓங்க மெல் இலைப் பசும் கொடியினால் வீக்கு உறு பூகம் அல் எனும் களத்து அண்ணல் தன் அணி விழாத்தருப்பைப் புல் லொடும் பிணிப்பு உண்ட பொன் கொடி மரம் போலும். |
8 |
|
|
உரை
|
|
|
|
|
100. |
சீத வேரி உண்டு அளி முரல் கமலம்மேல் செருந்தி போத வேரியும் மலர்களும் சொரிவன புத்தேள் வேத வேதியர் செம் கரம் விரித்து வாய் மனுக்கள் ஓத வேமமும் அதகமும் உதவுவார் அனைய. |
9 |
|
|
உரை
|
|
|
|
|
101. |
விரை செய் பங்கயச் சேக்கை மேல் பெடையொடும் மேவி அரச அன்னம் நல் மணம் செய அம்புயப் பொய்கை திரை வளைக் கையான் உண் துளி செறிந்த பாசடை ஆம் மரகதக் கலத் தரள நீராஞ்சனம் வளைப்ப. |
10 |
|
|
உரை
|
|
|
|
|
102. |
இரும்பின் அன்ன தோள் வினைஞர் ஆர்த்து எறிந்து வாய் மடுக்கும் கரும்பு தின்று இடி ஏற்று ஒலி காட்டியின் சாறு சுரும்பு சூழ்கிடந்து அரற்றிடச் சொரிந்து வெம் சினத்தீ அரும்புகள் களிறு ஒத்தன வாலை இயந்திரங்கள். |
11 |
|
|
உரை
|
|
|
|
|
103. |
பள்ள நீர் குடைந்து அம் சிறைப் பாசி போர்த்து எழுந்த வெள்ளை அன்னத்தைக் காரன மெனப் பெடை வீழ்ந்த உள்ளம் ஈட்டல மரச் சிறகு உதறி உள் அன்பு கொள்ள ஆசையில் தழீஇக் கொடு குடம் பை சென்று அணையும். |
12 |
|
|
உரை
|
|
|
|
|
104. |
இரவி ஆழி ஒன்று உடைய தேர் ஈர்த்து எழும் இமையாப் புரவி நா நிமிர்த்து அயில்வன பொங்கர் வாய்த்தளிர்கள் கரவு இலார் அகத்து எழு புகை கற்பக நாட்டில் பரவி வாட்டுவ பனி எனப் பங்கயப் பொய்கை. |
13 |
|
|
உரை
|
|
|
|
|
105. |
பிறங்கு ஆலவாய் அகத்து எம்பிரான் அருளால் வந்து அறம் கொள் தீர்த்தம் ஆய் எழு கடல் அமர்ந்த வா நோக்கிக் கறங்கு தெண் திரைப் பெரும் புறக் கடலும் வந்து இவ்வூர்ப் புறம் கிடந்ததே போன்றது புரிசை சூழ் கிடங்கு. |
14 |
|
|
உரை
|
|
|
|
|
106. |
எறியும் வாளையும் அடிக்கடி எழுந்து உடல் பரப்பிப் பறியும் ஆமையும் வாளோடு கேடகம் பற்றிச் செறியும் நாள் மலர் அகழியும் சேண் தொடு புரிசைப் பொறியுமே ஒன்றி உடன்று போர் புரிவன போலும். |
15 |
|
|
உரை
|
|
|
|
|
107. |
கண் இலாத வெம் கூற்று எனக் கராம் கிடந்து அலைப்ப மண்ணினார் எவரேனும் இம்மாடு இடை வீழ்ந்தோர் தெண் நிலா மதி மிலைந்த வர்க்கு ஒப்பு எனச் சிலரை எண்ணினார் இருள் நகரம் நீத்து ஏறினும் ஏறார். |
16 |
|
|
உரை
|
|
|
|
|
108. |
குமிழ் அலர்ந்த செந்தாமரைக் கொடி முகிழ் கோங்கின் உமிழ் தரும் பா ஞானம் உண்டு உமிழ்ந்த வாய் வேதத் தமிழ் அறிந்து வைதிகம் உடன் சைவமும் நிறுத்தும் அமிழ்த வெண் திரை வைகையும் ஒரு புறத்து அகழ் ஆம். |
17 |
|
|
உரை
|
|
|
|
|
109. |
பிள்ளையும் பெடை அன்னமும் சேவலும் பிரியாக் கள்ள முண்டகச் செவ்வியால் கண்டவர் கண்ணும் உள்ளமும் திரும்பா வகை சிறைப் படுத்து ஓங்கும் புள் அலம்பு தண் இடங்கு இது புரிசையைப் புகல்வாம். |
18 |
|
|
உரை
|
|
|
|
|
110. |
மாக முந்திய கடி மதின் மதுரை நாயகர் கைந் நாகம் என்பதே தேற்றம் அந் நகர் மதில் விழுங்கி மேகம் நின்று அசைகின்ற அவ் வெம் சினப் பணிதன் ஆகம் ஒன்று தோல் ஊரிபட நெளிவதே ஆகும். |
19 |
|
|
உரை
|
|
|
|
|
111. |
புரம் கடந்த பொன் குன்று கோபுரம் எனச் சுருதிச் சிரம் கடந்தவர் தென்னராய் இருந்தனர் திருந்தார் உரம் கடந்திட வேண்டினும் உதவி செய்தவர் ஆல் வரம் கடந்திடப் பெற எதிர் நிற்பது மானும். |
20 |
|
|
உரை
|
|
|
|
|
112. |
சண்ட பானுவும் திங்களும் தடைபடத் திசையும் அண்ட கோளமும் பரந்து நீண்டு அகன்ற கோபுரங்கள் விண்ட வாயில் ஆல் வழங்குவ விட அரா வங்காம் துண்ட போல் பவும் உமிழ்வன போல் பவும் உழலா. |
21 |
|
|
உரை
|
|
|
|
|
113. |
மகர வேலை என்று யானை போல் மழை அருந்து அகழிச் சிகர மாலை சூழ் அம் மதி திரைக் கரம் துழாவி அகழ ஓங்கு நீர் வைகையால் அல்லது வேற்றுப் பகைவர் சேனையால் பொரப் படும் பாலதோ அன்றே. |
22 |
|
|
உரை
|
|
|
|
|
114. |
எல்லைத் தேர் வழித் தடை செயும் இம் மதில் புறம் சூழ்ந்து தொல்லை மேவலர் வளைந்துழி உடன்று போர் ஆற்றி வெல்ல மள்ளரும் வேண்டுமோ பொறிகளே வெல்ல வல்ல அம் மதில் பொழி செயு மறம் சிறது உரைப்பாம். |
23 |
|
|
உரை
|
|
|
|
|
115. |
மழுக்கள் வீசுவன நஞ்சு பூசு முனை வாள்கள் விசுவன முத்தலைக் கழுக்கள் வீசுவன குந்த நேமி எரி கால வீசுவன காலன் நேர் எழுக்கள் வீசுவன அப் பணங்கள் விடம் என்னவீசுவன வன்னெடும் கொழுக்கள் வீசுவன கற்கள் வண் கயிறு கோத்து வீசுவன ஆர்த்தரோ. |
24 |
|
|
உரை
|
|
|
|
|
116. |
நஞ்சு பில்கு துளை வாள் எயிற்று அரவு நா நிமிர்த்து எறியும் அலையரா வெம் சினம் கொள் முழை வாய் திறந்து பொருவாரை விக்கிட விழுங்கும் ஆல் குஞ்சரம் கொடிய முசலம் வீசி எதிர் குறுகுவார் தலைகள் சிதறும் ஆல் அஞ்சு வெம் பொறி விசைப்பினும் கடுகி அடு புலிப் பொறி அமுக்கும் ஆல். |
25 |
|
|
உரை
|
|
|
|
|
117. |
எள்ளி யேறு நரை இவுளி மார்பு இற எறிந்து குண்டு அகழி இடை விழத் தள்ளி மீளும் உருள் கல்லிருப்பு முளை தந்து வீசி உடல் சிந்தும் ஆல் கொள்ளி வாய் அலகை வாய் திறந்து கனல் கொப்பளிப்ப உடல் குப்புறத் துள்ளி ஆடுவன கைகள் கொட்டுவன தோள் புடைப்ப சில கூளியே. |
26 |
|
|
உரை
|
|
|
|
|
118. |
துவக்கு சங்கிலி எறிந்து இழுக்கு அரி தொடர் பிடித்த கை அறுக்க விட்டு உவக்கும் ஒன்னலர்கள் தலைகளைத் திருகி உடன் நெருக்குமர நிலைகளால் சுவைக் கொழுந்து அழல் கொளுத்தி வீசும் எதிர் கல் உருட்டி அடும் ஒல் எனக் குவைக் கதும் கல் மழை பெய்யும் அட்ட மணல் கொட்டும் மேவலர்கள் கிட்டவே. |
27 |
|
|
உரை
|
|
|
|
|
119. |
உருக்கி ஈய மழை பெய்யு மாலய உருக்கு வட்டுருகு செம்பின் நீர் பெருக்கி வீசும் விடு படை எலாம் எதிர் பிடித்து விட்டவர் தமைத் தெறச் செருக்கி வீசு நடை கற்ற மாடமொடு சென்று சென்று துடி முரசோடும் பெருக்கி மீளு நடை வைய மேல் அடவி எய்யும் வாளி மழை பெய்யும் ஆல். |
28 |
|
|
உரை
|
|
|
|
|
120. |
வெறி கொள் ஐம் பொறியை வெல்லினும் பொருது வெல்லுதற்கு அரிய காலனை முறிய வெல்லினும் வெலற்கு அரும் கொடிய முரண ஆய மரராணெலாம் அறிவினான் இறுவு கம்மியன் செயவு அரிய வாயவனர் புரியும் இப் பொறிகள் செய்யும் வினை இன்ன பொன் அணி புரத்து வீதிகள் உரைத்தும் ஆல். |
29 |
|
|
உரை
|
|
|
|
|
121. |
கழையும் தாமமும் சுண்ணமும் மணி நிழல் கலனுங் குழையும் தூபமும் தீபமும் கும்பமும் தாங்கித் தழையும் காதலர் வரவு பார்த்து அன்பு அகம் ததும்பி விழையும் கற்பினார் ஒத்தன விழவு அறா வீதி. |
30 |
|
|
உரை
|
|
|
|
|
122. |
ஆலம் நின்ற மா மணிமிடற்று அண்ணல் ஆனந்தக் கோல நின்ற சேவடி நிழல் குறுகினார் குணம் போல் வேலை நின்று எழு மதி எதிர் வெண் நிலாத் தெள் நீர் கால நின்றன சந்திர காந்த மாளிகையே. |
31 |
|
|
உரை
|
|
|
|
|
123. |
குன்ற நேர் பளிக்கு உபரிகை நிரை தொறும் குழுமி நின்ற பல் சரா சரமும் அந் நீழல் வாய் வெள்ளி மன்று அகம் பொலிந்து ஆடிய மலரடி நிழல் புக்கு ஒன்றி ஒன்றறக் கலந்த பல் உயிர் நிலை அனைய. |
32 |
|
|
உரை
|
|
|
|
|
124. |
கறித்து அருந்து புல் குவை கழீஇக் கால் தொடர் பரியத் தெறித்து அகன்று அயன் மரகதத் சித்திரத்து எற்றி எறித்த பைங்கதிர்க்கொழுந்தையும் எட்டி நா வளைத்துப் பறித்து மென்று வாய் அசைப்பன பசலை ஆள் கன்று. |
33 |
|
|
உரை
|
|
|
|
|
125. |
சிறுகு கண்ணவாய்க் காற்று எறி செவிய வாய்ப் பாசம் இறுகு காலவாய்க் கோட்டு மான் இனம் வழங்கு ஆறும் குறுகு நுண் மருங்கு இறுத்து எழு கோட்டு மான் இனம் போம் மறுகும் வண்டு சூழ்ந்து இறை கொள மான் மதம் நாறும். |
34 |
|
|
உரை
|
|
|
|
|
126. |
மாட மாலையும் மேடையும் மாளிகை நிரையும் ஆடு அரங்கமும் அன்றி வேள் அன்னவர் முடியும் ஏடு அவிழ்ந்தார் அகலமும் இணைத் தடம் தோளும் சூடு மாதர் ஆர் சீற் அடிப் பஞ்சு தோய் சுவடு. |
35 |
|
|
உரை
|
|
|
|
|
127. |
மருமச் செம்புனல் ஆறிட அடு கோட்டுப் பருமச் செம் கண் மால் யானையின் பனைக்கையும் மறைநூல் அருமைச் செம் பொருள் ஆய்ந்தவர்க்கு அரும் பொருள் ஈவோர் தருமச் செம் கையும் ஒழுகுவது ஆன நீர் ஆறு. |
36 |
|
|
உரை
|
|
|
|
|
128. |
பரிய மா மணி பத்தியில் பதித்து இருட் படலம் பொரிய வில்லிடக் குயிற்ரிய பொன்னர இயமும் தெரிய மா முரசு ஒலி கெழு செம் பொன் ஆடு அரங்கும் அரிய மின் பயோதரம் சுமந்து ஆடுவ கொடிகள். |
37 |
|
|
உரை
|
|
|
|
|
129. |
வலம் படும் புயத்து ஆடவர் மார்ப மேல் புலவிக் கலம் படர்ந்த பூண் முலையினார் கால் எடுத்து ஒச்சச் சிலம் பலம்பு இசை மழுங்க முன் எழும் அவர் தேந்தார்ப் புலம்பு வண்டு நொந்து அரற்றிய பொங்கு பேர் ஒலியே. |
38 |
|
|
உரை
|
|
|
|
|
130. |
தையலார் மதி முகங்களும் தடங்களும் குழைய மை அளாவிய விழிகளும் மாடமும் கொடிய கையும் நாள் மலர்ப் பொதும் பரும் கறங்கு இசை வண்ட நெய்ய ஓதியும் வீதியும் நீள் அற நெறியே. |
39 |
|
|
உரை
|
|
|
|
|
131. |
மலரும் திங்கள் தோய் மாடமும் செய்வன மணங்கள் அலரும் தண் துறையும் குடைந்து ஆடுவ தும்பி சுலவும் சோலையும் மாதரும் தூற்றுவ அலர்கள் குலவும் பொய்கையும் மனைகளும் குறை படா வன்னம். |
40. |
|
|
உரை
|
|
|
|
|
132. |
ஊடினார் எறி கலன்களும் அம்மனையுடன் பந்து ஆடினார் பரி ஆரமும் மடியினால் சிற்றில் சாடினாரோடு வெகுண்டு கண்டதும் முத்து இறைப்ப வாடினார் பரி நித்தில மாலையும் குப்பை. |
41. |
|
|
உரை
|
|
|
|
|
133. |
ஐய என் உரை வரம்பின் ஆகுமோ அடியர் உய்ய மாமணி வரி வளை விறகு விற்று உழன்றோன் பொய் இல் வேதமும் சுமந்திடப் பொறாது அகன்று அரற்றும் செய்ய தாள் மலர் சுமந்திடத் தவம் செய்த தெருக்கள். |
42. |
|
|
உரை
|
|
|
|
|
134. |
தோரண நிரை மென் காஞ்சி சூழ் நிலை நெடும் தேர் அல்குல் பூரண கும்பக் கொங்கைப் பொருவின் மங்கலமா மங்கை தார் அணிந்து ஆரம் தூக்கிச் சந்தகி திமிர்ந்து பாலிச் சீர் அணி முளை வெண் மூரல் செய்து விற்றிருக்கும் மன்னோ. |
43 |
|
|
உரை
|
|
|
|
|
135. |
திங்களைச் சுண்ணம் செய்து சேறு செய்து ஊட்டி அன்ன பொங்கு வெண் மாடப்பந்தி புண்ணியம் பூசும் தொண்டர் தம் கண் மெய் வேடம் தன்னைத் தரித்தன சாலக் கண் கொண்டு அங்கணன் விழவு காண்பான் அடைந்து என மிடைந்த அன்றெ. |
44 |
|
|
உரை
|
|
|
|
|
136. |
தேர் ஒலி கலினப் பாய் மான் சிரிப்பு ஒலி புரவி பூண்ட தார் ஒலி கருவி ஐந்தும் தழங்கு ஒலி முழங்கு கைம்மான் பேர் ஒலி எல்லாம் ஒன்றிப் பெருகு ஒலி அன்றி என்றும் கார் ஒலி செவி மடாது கடி மணி மாடக் கூடல். |
45 |
|
|
உரை
|
|
|
|
|
137. |
இழிபவர் உயர்ந்தோர் மூத்தோர் இளையவர் கழியர் நோயால் கழிபவர் யாவரேனும் கண் வலைப் பட்டு நெஞ்சம் அழிபவர் பொருள்கொண்டு எள்ளுக்கு எண்ணெய் போல் அளந்து காட்டிப் பழிபடு போகம் விற்பார் ஆவணப் பண்பு சொல்வாம். |
46 |
|
|
உரை
|
|
|
|
|
138. |
மெய் படும் அன்பினார் போல் விரும்பினார்க் கருத்தும் தங்கள் பொய் படும் இன்பம் யார்க்கும் புலப்படத் தேற்றுவார் போல் மைபடு கண்ணார் காமன் மறைப் பொருள் விளங்கத் தீட்டிக் கைபடச் சுவராய் தோன்றச் சித்திரம் காணச் செய்வார். |
47 |
|
|
உரை
|
|
|
|
|
139. |
திருவிற்கான் மணிப் பூண் ஆகம் பலகையாத்து தெண் முத்தார அருவிக்கால் வரை மென் கொங்கைச் சூது ஒட்டி ஆடி என்றும் மருவிக் காமுகரை தங்கள் வடிக்கண் வேல் மார்பம் தைப்பக் கருவிச் சூது ஆடி வென்றும் கைப்பொருள் கவர்தல் செய்வார். |
48 |
|
|
உரை
|
|
|
|
|
140. |
தண் பனி நீரில் தோய்த்த மல்லிகைத் தாம நாற்றி விண் படு மதியம் தீண்டும் வெண்நிலா முற்றத்து இட்ட கண் படை அணை மேற்கொண்டு காமனும் காமுற்று எய்தப் பண் பல பாடி மைந்தர் ஆவியைப் பரிசில் கொள்வார். |
49. |
|
|
உரை
|
|
|
|
|
141. |
குரும்பை வெம் முலையில் சிந்து சாந்தமும் குழலில் சிந்தும் அரும்பு அவிழ் மாலைத் தாது அளி நுகர்ந்து எச்சில் ஆகிப் பொரும் பரிக் காலில் தூளாய் போயர மாதர் மெய்யும் இரும் குழல் காதும் சூழ்போய் இயன் மணம் விழுங்கும் அன்னோ. |
50 |
|
|
உரை
|
|
|
|
|
142. |
ஆலவாய் உடையான் என்றும் அம் கயல் கண்ணி என்றும் சோலை வாழ் குயிலின் நல்லார் சொல்லி ஆங்கு ஒருங்கு சொல்லும் பாலவாம் கிளிகள் பூவை பன் முறை குரவன் ஓதும் நூலவாய்ச் சந்தை கூட்டி நுவல் மறைச் சிறாரை ஒத்த. |
51 |
|
|
உரை
|
|
|
|
|
143. |
ஓளவிய மதன் வேல் கண்ணார் அம் தளிர் விரல் நடத்தும் திவ்விய நரம்பும் செவ்வாய்த் தித்திக்கும் எழாலும் தம்மில் கௌவிய நீர ஆகிக் காளையர் செவிக்கால் ஓடி வெவ்விய காமப் பைங்குழ் விளைதர வளர்க்கும் அன்றெ. |
52 |
|
|
உரை
|
|
|
|
|
144. |
கட்புலன் ஆதி ஐந்தும் உவப்பு உறக் கனிந்த காமம் விண் புலத்தவரே அன்றி வீடு பெற்றவரும் வீழ்ந்து பெட்பமுற்ற முதும் கைப்பப் பெரும் குலக் கற்பினார் போல் நட்பு இடைப் படுத்தி விற்கும் நல்லவர் இருக்கை ஈது ஆல். |
53. |
|
|
உரை
|
|
|
|
|
145. |
வழுக்கு அறு வாய்மை மாண்பும் கங்கை தன் மரபின் வந்த விழுக்குடி பிறப்பு மூவர் ஏவிய வினை கேட்டு ஆற்றும் ஒழுக்கமும் அமைச்சாய் வேந்தர்க்கு உறுதி சூழ் வினையும் குன்றா இழுக்கு அறு மேழிச் செல்வர் வள மறுகு இயம்பல் உற்றாம். |
54 |
|
|
உரை
|
|
|
|
|
146. |
வரு விருந்து எதிர் கொண்டு ஏற்று நயன் உரை வழங்கும் ஓசை அருகிருந்து அடிசில் ஊட்டி முகமனன் அறையும் ஓசை உரை பெறு தமிழ் பாராட்டு ஓசை கேட்டு உவகை துள்ள இருநிதி அளிக்கும் ஓசை எழுகடல் அடைக்கும் ஓசை. |
55 |
|
|
உரை
|
|
|
|
|
147. |
அருந்தினர் அருந்திச் செல்ல வருந்து கின்றாரும் ஆங்கே இருந்து இனிது அருந்தா நிற்க இன் அமுது அட்டுப் பின்னும் விருந்தினர் வரவு நோக்கி வித்து எல்லாம் வயலில் வீசி வருந்தி விண்ணோக்கு ஒர் ஏர் உழவர் போல் வாடி நிற்பார். |
56 |
|
|
உரை
|
|
|
|
|
148. |
வானமும் திசையும் பொங்கும் புகழ்மையும் வானம் பேணும் ஞானமும் பொறையும் குன்றா நன்றியும் ஊக்கப் பாடும் தானமும் கொடையும் அன்பும் வரிசையும் தகைசால் நண்பும் மானமும் தவம் செய்து ஈன்ற மகவு போல் வளர்க்க வல்லார். |
57 |
|
|
உரை
|
|
|
|
|
149. |
புல்லியோர் பண்டம் கொள்வார் வினவின பொருள் தம் பக்கல் இல் எனின் இனினமாய் உள்ள பொருள் உரைத்து எதிர் மறுத்தும் அல்லது அப் பொருள் உண்டு எனின் விலை சுட்டி அறுத்து நேர்ந்தும் சொல்லினும் இலாபம் கொள்வார் தொல் மரபு இருக்கை சொல்வாம். |
58 |
|
|
உரை
|
|
|
|
|
150. |
நீல வேதிமேல் பளிங்கினால் நிழல் சுவர் நிறீஇ மின் கால வாலிய வைர வாள் கானிரைத்து உம்பர்க் கோல வாணிலாச் சொரி மணி குயிற்றி வெண் மாடம் மாலை போல் வகுத்தியற்றின பீடிகை மறுகு. |
59 |
|
|
உரை
|
|
|
|
|
151. |
திரை அளிப்பவும் திரை படு தீம்புனல் வேலிக் கரை அளிப்பவும் கரை இலா நிரைபடு கானத்து தரை அளிப்பவும் தரை கிழித்து ஊன்றி விண்தாங்கும் வரை அளிப்பவும் வாங்கிவாய் மடுப்பன மாடம். |
60 |
|
|
உரை
|
|
|
|
|
152. |
கரிய கம்பலக் கிடுகின் மேல் கதிர்விடு பவளத் தெரியல் பொன்னரி மாலிகை தெண் நிலாச் சொரியும் பரிய நித்தில மணி வட மரகதப் பசும் தார் விரிய விட்டன இந்திர வில் இரை அனைய. |
61 |
|
|
உரை
|
|
|
|
|
153. |
நாள் களும் குளிர் திங்களும் ஞாயிறும் ஏனைக் கோள்களும் குளிர் வீசும் பொரீஇக் குடி புகுந்து ஆங்கு வாள் கிடந்து இராப் பகல் ஒளி மழுங்கலால் வணிகர் ஆள் கலம்பு அகர் பீடிகை துறக்க நாடு அனைய. |
62 |
|
|
உரை
|
|
|
|
|
154. |
பன்னிறத்த பல் பெருவிலைப் பட்டு எலாம் அவண அன்ன பட்டின் மேல் படுவிலைப் பருத்தியும் அவண எந்நிலத்தரும் பொருள் பதின் எழு புல வணிகர் மன் இருக்கையும் அரும் பெறல் வளன் எலாம் அவண. |
63 |
|
|
உரை
|
|
|
|
|
155. |
மரகதத்தினால் அம்மிகள் வைர வாளு உலக்கை உரல்கள் வெள்ளியால் அடுப்பு அகில் விறகு உலை பனிநீர் அரிசி முத்தழல் செம்மணி அடுகலன் பிறவும் எரி பொனா இழைத்து ஆடுப இவர் சிறு மகளிர். |
64 |
|
|
உரை
|
|
|
|
|
156. |
செயிரில் தீர்ந்த செம் பொன்னினால் திண் நிலைக் கதவம் வயிரத் தாழ் உடைத்து அவர் கடை வாயிலும் என்றல் அயிரில் தீர்ந்த பேர் அறிஞரும் அனையர் தம் செல்வத்து இயலிற்று ஆம் என வரை அறுத்த இசைப் பதை எவனோ. |
65 |
|
|
உரை
|
|
|
|
|
157. |
எரிக்கு உறும் பொறி அனைய செம் மணி சுடர் எறி பொன் வரிச் சுரும்பு நேர் மரகத முத்துவாள் வைரம் தெரிப்ப அரும் துகிர் சிந்தின செல்லு நாள் ஒன்றும் கரிப்பர் கை அகப் படுவன ஆயிரத்து இரட்டி. |
66 |
|
|
உரை
|
|
|
|
|
158. |
பாய தொல் மரப் பறவை போல் பயன் கொள்வான் பதினெண் தேய மாந்தரும் கிளந்த சொல் திரட்சி தான் தூய மாயை காரிய வொலி அன்றி வான் முதல் கருவின் ஆய காரிய ஓசையே ஆய்க் கிடந்த அன்றெ. |
67 |
|
|
உரை
|
|
|
|
|
159. |
ஒழிவு இல் வேறு பல் பொருளும் எழு லோகமும் பிறவும் வழு இல் வேறு பல் கலைகளும் மரபுளி வகுத்துத் தழுவி வேண்டினர் தாம் கொளத் தக்கவா பகரா அழிவு இலா மறை போன்றன ஆவண வீதி. |
68 |
|
|
உரை
|
|
|
|
|
160. |
திக்கு எலாம் புகழ் மதுரையைச் சிவபுரம் ஆக்கி முக்கண் நாயகன் அரசு செய் முறையினுக்கு ஏற்பத் தக்க தோழனோடு அளகை மா நகர் உறை தயக்கம் ஒக்கு மாநகர் வாணிகர் உறையுள் சூழ் நிகமம். |
69. |
|
|
உரை
|
|
|
|
|
161. |
ஒற்றை ஆழியான் உலகு இருள் ஒதுக்குமா போலச் செற்ற நேமியால் கலி இருள் இன்று கோல் ஓச்சி மல் தடம்புய வலியினான் மாறடு சீற்றக் கொற்ற மன்னவர் விழுக்குடிக் கோ மறுகு உரைப்பாம். |
70 |
|
|
உரை
|
|
|
|
|
162. |
தரங்க வேலைகள் தம்மையே தாள் உறப் பிணித்துத் துரங்க மா எனத் தொகுத்து அமந்து உறை பல வருவி இரங்கு ஓர் அறி உயிர் வரை யாவையும் பெயர்த்து மரம்கொல் யானை போல் பிணித்த கூடம் பல மன்னோ. |
71 |
|
|
உரை
|
|
|
|
|
163. |
மழுக்கள் வச்சிரம் கார் முகம் வாளி முக் குடுமிக் கழுக்கள் சக்கரம் உடம் பிடிகப் பண நாஞ்சில் எழுக்கள் நாந்தகம் பலகை தண்டி இவை முதல் படையின் குழுக்கள் ஒடி இகல் விந்தை வாழ் கூடமும் பல ஆல். |
72 |
|
|
உரை
|
|
|
|
|
164. |
தொளைய கல்லை மால் எனக் கொண்டு சுழற்றியும் செம் தூள் அளையும் யானை போல் பாய்ந்து மல் ஆற்றியும் ஆற்றல் விளைய வாளொடு கேடகம் வீசியும் வென்றி இளையர் ஆடு அமர் பயில்வன எண் நிலாக் கூடம். |
73 |
|
|
உரை
|
|
|
|
|
165. |
தேசு அவிர் நீல மாடம் செம் மணிச் சென்னி மாடம் காசறு கனக மாடம் சந்திர காந்த மாடம் மாசு அற விளங்கு மின்ன மாட நீண் மாலைக் கூடல் பாசிழை மடந்தை பூண்ட பன் மணிக் கோவை அன்ன. |
74 |
|
|
உரை
|
|
|
|
|
166. |
விரை அகல் கதும்பி நல்லார் வீங்கு இளம் கொங்கை போழ்ந்த வரை அகன் மார்பம் அன்றி வடுப் படார் தமக்கு அன்பு இல்லார் உரை அகன் மான ஆற்றால் ஒழுகுவார் பலகை ஒள்வாள் கரை அகல் விஞ்சை வீரர் கணம் பயில் காட்சித்து எங்கும். |
75 |
|
|
உரை
|
|
|
|
|
167. |
மின்னை வாள் என்ன வீசி வீங்கு கார் தம்மில் போர் மூண்டு என்ன வான் மருப்பு நீட்டி எதிர் எதிர் புதையக் குத்தி அன்னவான் என்ன வாய் விட்டது எனச் செந்நீர் சோரப் பொன்னவா அகன்ற மார்பர் பொருகளிறு ஆட்டுவார்கள். |
76 |
|
|
உரை
|
|
|
|
|
168. |
தூண்டுவார் உளமும் தங்கள் பின்னிடத் துவக்கு உண்டு ஈர்த்துத் தாண்டு மான் ஒற்றை ஆழித் தேரினும் தள்ளித் துள்ளப் பாண்டில் வாய்ப் பசும் பொன் தேய பார் மகள் முதுகு ஈண்டு சேண் திசை போய் மடங்கச் செல்வத் தேர் நடாத்து வார்கள். |
77 |
|
|
உரை
|
|
|
|
|
169. |
மைந்தர்தம் நெருக்கில் சிந்து கலவையும் மகளிர் கொங்கைச் சந்தமும் கூந்தல் சோர்ந்த தாமமும் சிவிறி வீச சிந்துரப் பொடியும் நாறத் தேன் ஓடு எழுந்து செந்தூள் அந்தர வயிறு தூர்ப்ப அடுபரி நடாத்து வார்கள். |
78 |
|
|
உரை
|
|
|
|
|
170. |
தம் உயிர்க்கு இரங்கார் ஆகித் தருக்கொடு மானம் ஈர்ப்ப தெம் முனை எதிர்ந்தார் ஆற்றும் செரு எனக் குருதிச் செம்கேழ்க் கொய்ம் மலர்க் குடுமிச் சேவல் கோழிளம் தகர் யோர் முட்டி வெம் முனை நோக்கி நிற்பார் வேறு அவற்று ஊறு நோக்கார். |
79 |
|
|
உரை
|
|
|
|
|
171. |
பெண் முத்தம் அனைய பேதைச் சிறுமியர் பெருநீர் வைகை வெண் முத்தம் இழைத்த சிற்றில் சிதை பட வெகுண்டு நோக்கிச் கண் முத்தம் சிதறச் சிந்தும் கதிர் முத்த மாலைத் தட்பத் எண் முத்தின் நகைத்துச் செல்வச் சிறார்கள் தேர் உருட்டுவார்கள். |
80 |
|
|
உரை
|
|
|
|
|
172. |
கொடி முகில் துழாவு மிஞ்சிக் கோ நகர் வடகீழ் ஞாங்கர் முடி மிசை வேம்பு நாற முருகு அவிழ் ஆரும் போந்தும் அடி மிசை நாறத் தென்னர் வழி வழி அரசு செய்யும் இடி முரசு உறங்கா வாயில் எழுநிலை மாடக் கோயில். |
81 |
|
|
உரை
|
|
|
|
|
173. |
ஆத்திகர் உண்டு என்று ஓதும் அறம் முதல் பொருள்கள் நான்கும் நாத்திக்கம் பேசும் வஞ்சர் நா அரி கருவி ஆக ஆத்தன் நால் உரைத்த வேத வளவு கண்டு உள்ளம் தேறித் தீர்த்தர் ஆய் முத்தீ வேட்கும் செல்வர் தம் இருக்கை சொல்வாம். |
82 |
|
|
உரை
|
|
|
|
|
174. |
முஞ்சி நாண் மருங்கின் மின்னப் பொன் செய்த முளரி வேய்ந்த குஞ்சி நான்று அசையத் தானைச் சொருக்குமுன் கொய்து தூங்கப் பஞ்சி நாண் கலைத் தோல் மார்பும் பலாசக் கோல்கையும் தாங்கி எஞ்சி நான் மறை நூல் கற்போர் கிடைகளே இல்லம் எல்லாம். |
83 |
|
|
உரை
|
|
|
|
|
175. |
தீ வினை அந்தணாளர் சிறார் பயில் தெய்வ வேதம் நா உரு ஏற்றக் கேட்டுக் கிளிகளோ நவிலும் வேற்றுப் பூவையும் பயின்று புத்தேள் உலகு உறை புது மந்தாரக் கா உறை கிளிகட்கு எல்லாம் கசடறப் பயிற்று மன்னோ. |
84 |
|
|
உரை
|
|
|
|
|
176. |
வேதமும் அங்கம் ஆறும் மிருதியும் புராணநூலின் பேதமும் தெரிந்தோராலும் பிறர் மதம் களைய வல்ல வாதமும் மதமேற் கொண்டு மறுத்தலும் நிறுத்த வல்ல போதமும் உடையோராலும் பொலிந்தன கழகம் எல்லாம். |
85 |
|
|
உரை
|
|
|
|
|
177. |
உறி பொதி கரகக் கையர் ஒளிவிடு செம்கல் தோய்த்த அறுவையர் உயிர்க்கு ஊறு அஞ்சு நடையினர் அவிச்சை மாள எறி சுடர் மழுவாள் என்னக் கோவணம் யாத்த கோலர் மறை முடிவு அன்றி தேறா மாதவர் மடங்கள் எங்கும். |
86 |
|
|
உரை
|
|
|
|
|
178. |
அட்டில் வாய்ப் புகையும் மாடத்து அகில் படு புகையும் வேள்வி விட்டு எழு புகையும் ஒன்றி விரிசுடர் விழுங்கக் கங்குல் பட்டது பலரும் தத் தம் பயில்விளை இழக்க நங்கை மட்டு அவிழ் கடுக்கையான் கண் புதைத்த நாள் மானு மன்னோ. |
87 |
|
|
உரை
|
|
|
|
|
179. |
தெய்வ நீறும் ஐந்து எழுத்துமே சிதைக் கலன் ஆக எவ்வ மாசு இரு வினையும் உடம்பு எடுத்து உழல் பிறவிப் பௌவம் ஏழையும் கடந்து அரன் பத மலர்க் கரைசேர் சைவ மாதவர் உறை மடத் தனி மறுகு உரைப்பாம். |
88 |
|
|
உரை
|
|
|
|
|
180. |
எங்கும் ஈசனைப் பூசை செய்து இக பரம் அடைவார் எங்கும் அன்பரைப் பூசை செய்து எழு பிறப்பு அறுப்பார் எங்கும் ஆகமம் செவி மடுத்து எதிர் வினைத் தடுப்பார் எங்கும் நாயகன் வடிவு உணர்ந்து இருள் மலம் களைவார். |
89 |
|
|
உரை
|
|
|
|
|
181. |
அழிவு இலான் உரை ஆகமம் இலக்கம் ஆய்ந்து அவற்றுள் விழுமி ஆகிய விதியினும் விலக்கினும் அடியைத் தழுவு தொண்டர்கண் மைந்தர்கள் சாதகர் பாசம் கழுவி வீடு அருள் போதகக் காட்சியர் பலர் ஆல். |
90 |
|
|
உரை
|
|
|
|
|
182. |
மறைகள் ஆகமம் பொது சிறப்பு எனச் சிவன் வகுத்து முறையின் ஓதிய விதி விலக்கு உரைகளும் முடிவு இல் அறையும் வீடு ஒன்று இரண்டு எனும் பிணக்கு அற அமைந்த குறைவு இலாச் சிவ யோகியர் குழாங்களும் பலவால். |
91. |
|
|
உரை
|
|
|
|
|
183. |
குழலும் தும்புரு நாரதர் பாடலும் குனித்துச் சுழலும் கொம்பனார் ஆடலும் மூவர் வாய் துதியும் விழவின் செல்வமும் சுருதியும் திசை எலாம் விழுங்கும் முழவும் கண் துயிலாதது முன்னவன் கோயில். |
92 |
|
|
உரை
|
|
|
|
|
184. |
மடங்கல் இன்றி விண் பிளந்து மேல் வளர்ந்து வெள் ஏற்று விடங்கர் வெள்ளி மன்று இமைத்து எழு வெண்சுடர் நீட்டம் முடங்கல் வெண் பிறைக் கண்ணியான் கயிலை மூ உலகும் ஒடுங்கு கின்ற நாள் ஓங்கிய ஓக்கமே ஒக்கும். |
93 |
|
|
உரை
|
|
|
|
|
185. |
சுரந்து தேன் துளித்து அலர்களும் சொரிந்து வண்டு அரற்ற நிரந்து சுந்தரற்கு ஒரு சிறை நின்ற பூம் கடம் பு பரந்து கண் புனல் உகப் பல மலர்கள் தூய்ப் பழிச்சி இரந்து நின்று அருச்சனை செயும் இந்திரன் நிகரும். |
94 |
|
|
உரை
|
|
|
|
|
186. |
உழல் செய் தீவினை உருப்பற உயிர்க்கு எலாம் அடியின் நிழல் செய்வார்க்கு நீள்நிழல் செயா நின்ற பூம் கடம்பின் குழல் செய் வண்டுகற்பக மதுக் கொணர்ந்து வந்து ஊட்டித் தழல் செய் காமமென் பேடையின் ஊடல் நோய் தணிக்கும். |
95 |
|
|
உரை
|
|
|
|
|
187. |
ஆறு நீர்க் கடல் அன்று அது என நிறை அகழ் கார் ஊரு ஆழி அன்று அது என ஓங்கு எயில் எட்டாய்ச் சாரு நேமியன்று அது எனச் சமைந்த கோபுரம் பொன் மேரு அன்று அது எனச் சுடர் விசும்பு இழி விமானம். |
96 |
|
|
உரை
|
|
|
|
|
188. |
வேத அந்தமும் துளக்கற மெய்ப் பொருள் விளங்கும் நாத அந்தமும் கடந்தது ஓர் நடு நிலைப் பொருளின் பாத வந்தனைப் பத்தியின் பாலர் ஆய்ப் பயில் வோர் மா தவந் தரு பயன் எனத் தழைத்த பல் வளனும். |
97 |
|
|
உரை
|
|
|
|
|
189. |
பொறிகள் ஐந்தினுக்கு கூட்டு பல் போகமும் மிதப்பச் செறி கொள் நிரவால் உவர்ப்பவத் திரு நகர் மாக்கள் நெறி கொள் செம் சடைப் பிறைமுடி நிரு மலக் கொழுந்தின் வெறி கொள் நாள் மலர் அடி தழீஇ வீடு பெற்றார் போல். |
98 |
|
|
உரை
|
|
|
|
|
190. |
முன்னவன் அரசு இருக்கையால் அந் நகர் முளரிப் பொன்னை ஈன்ற தால் அது பல பொருள் நிறை செல்வம் தன்னை ஈன்றதால் அது பலதருமம் என்று உரைக்கும் மின்னை ஈன்ற அஃது ஈன்றதால் விழுத் தகு புகழே. |
99 |
|
|
உரை
|
|
|
|
|
191. |
எழுக் கடந்த தோள் உருத்திர உலகம் என்று யாரும் வழுத்த நின்ற இந் நகர் வயின் உம்பரின் மாண்ட விழுத்தகும் பல செல்வமும் வியந்து பார்த்து உள்ளத்து அழுக்காறு அமையால் இன்னமும் அமரர் கண் உறங்கார். |
100 |
|
|
உரை
|
|
|
|
|
192. |
விரைய விழ்ந்த தார் மீனவர் வாகை வேல் விடுத்துத் திரையை வென்றது முடி தகர்த்து இந்திரன் செருக்குக் கரைய வென்றதும் கார் தளை இட்டதும் கனக வரையை வென்றதும் இந்நகர் வலியினால் அன்றோ. |
101 |
|
|
உரை
|
|
|
|
|
193. |
எங்கும் நாவுமாய் எங்கணு கண்ணுமாய் எங்கும் தங்கு பேர் ஒளி அல்லது இத்தனி நகர்ச் செல்வம் செம் கண் ஆயிர நாவினான் செப்பவும் எதிர்க் கண்டு அம் கண் ஆயிரம் உடையவன் அளக்கவும் படுமோ. |
102 |
|
|
உரை
|
|
|
|
|
194. |
புண்ணியம் புரி பூமி பார் அதில் வருபோகம் நண்ணி இன்புறு பூமி வான் நாடு என்ப நாளும் புண்ணியம் புரி பூமியும் அதில் வருபோகம் நண்ணி இன்புறு பூமியும் மதுரை மா நகரம். |
103 |
|
|
உரை
|
|
|
|
|
195. |
பண் கனிந்து அனைய சொல்லார் நரப்பிசை பாணி தேவர் உண் கனி அமுதும் கைப்பச் செவிதொளைத்து ஊட்ட உண்டும் பெண்களின் அமுதம் அன்னார் பெருமித நடனம் உண்ணக் கண்களை விடுத்தும் காலம் கழிப்பவர் அளவு இலாதார். |
104 |
|
|
உரை
|
|
|
|
|
196. |
கலவி வித்தாக ஊடிக் கட்புனல் குளிக்கும் நல்லார் புலவி தீர் செவ்வி நோக்கிப் புனர் முலைப் போகம் துய்த்தும் நிலை நிலையாமை நோக்கி நெறிப்படு தரும தானம் கலைஞர் கைப்பு எய்தும் காலம் கழிப்பவர் எண் இலாதார். |
105 |
|
|
உரை
|
|
|
|
|
197. |
சந்தித்து மீன நோக்கி தலைவனை மூன்று போதும் வந்தித்தும் ஈசன் பூசை மரபுளி முடித்தும் வேதம் அந்தித்தும் அறியான் செய்த திருவிளையாடல் கேட்டும் சிந்தித்தும் அன்பர் பூசை செய்து நாள் கழிப்பர் பல்லோர். |
106 |
|
|
உரை
|
|
|
|
|
198. |
கற்பவை கற்றும் கேட்டும் கேட்டவை கருத்துள் ஊறச் சொல் பொருள் நினைந்தும் கேட்போர்க்கு உணர்த்தி உள்துளக்கம் தீர்ந்தும் எல் பகல் இரவு நீங்கும் இடத்து மெய் அறிவு ஆனந்த அற்புத வெள்ளத்து ஆழா தாழ்ந்து நாள் கழிப்பர் சில்லோர். |
107 |
|
|
உரை
|
|
|
|
|
199. |
தன் நிகர் உயர்ச்சி இல்லான் காப்பியத் தலைவன் ஆக முன்னவர் மொழிந்த தேனோர் தமக்கு எலாம் முகமன் அன்றோ அன்னது தனதே ஆகும் மண்ணிலே பாண்டி வேந்தாய் இந்நகர் அரசன் ஆவான் இக்கவிக்கு இறைவன் ஆவான். |
108 |
|
|
உரை
|
|
|
|
|
200. |
என் என உரைப்பேன் இந்த இறை மகன் பண்மை ஏனை மன்னவர் வானோர் போல மதித்து உரை விரிக்கற் பாற்றோ அன்னவன் ஆணை ஆற்றா அடைப்பது இவ் அகிலம் என்றால் முன்னவன் செய்த ஆடல் வரவினை முறையில் சொல்வேன். |
109 |
|
|
உரை
|
|
|
|