தொடக்கம் |
|
|
201. |
வரங்கள் தந்து அருள் என முது வானவர் முனிவோர் கரங்கள் தந்தலை முகிழ்த்திடக் கருணை செய்து அவிச்சை உரம் கடந்து உரை உணர்வு எலாம் கடந்து அரு மறையின் சிரம் கடந்தவன் இருப்பது திருக் கயிலாயம். |
1 |
|
|
உரை
|
|
|
|
|
202. |
புரந்தர் ஆதி வானவர் பதம் போதுறை புத்தேள் பரந்த வான் பதம் சக்கரப் படை உடைப் பகவன் வரந்த வாதுவாழ் பதம் எலாம் நிலை கெட வரு நாள் உரம் தவாது நின்று ஊழி தோறும் ஓங்கு அவ் ஓங்கல். |
2 |
|
|
உரை
|
|
|
|
|
203. |
அரம்பை மாதரார் ஆடலின் அரவமும் பாடல் நரம்பின் ஓசையும் முழவு அதிர் சும்மையும் நால்வாய் வரம்பு இல் ஓதையும் மருவி வீழ் ஒலியும் மாறாது நிரம்பி வானமும் திசைகளும் நிமிர்வன மாதோ. |
3 |
|
|
உரை
|
|
|
|
|
204. |
வெந்த நீற்று ஒளி வெண்மையும் விமலனை அகம் கொண்டு அந்தம் இன்றியே அசைவற இருக்கையும் அருவி வந்த கண்களும் கொண்டு அவண் இருக்கும் மாதவர்க்குத் தந்தால் அரன் கயிலையின் தனது சாரூபம். |
4 |
|
|
உரை
|
|
|
|
|
205. |
ஆங்கு வெண் துகில் விரித்து எனக் கல் என வார்த்து வீங்கு கால் அருவித் திரள் வெள்ளமே அன்றி ஓங்கு நான் மறைக் குடுமியின் உள் ஒளி நோக்கித் தூங்கு மாதவர் கண்களும் சொரிவன வெள்ளம். |
5 |
|
|
உரை
|
|
|
|
|
206. |
கோட்டு மா மலர் நிலமலர் குண்டு நீர் எடுத்துக் காட்டு மா மலர் கொடி மலர் கொண்டு முள் கரைந்த பாட்டு மா மலர் கொண்டு நம் பரஞ்சுடர் அடியில் சூட்டு மாதவர் தொகுதியும் சூழ்வன ஒருபால். |
6 |
|
|
உரை
|
|
|
|
|
207. |
கைய நாகமும் காய் சின உழுவையும் கடுவாய்ப் பைய நாகமும் தம் கிளைபரவிய முக்கண் ஐயன் ஆக மெய் அரும்தவர் தமை அடைந்து அன்பு செய்ய நாகமும் வையமும் புகழ்வது அச் சிலம்பு. |
7 |
|
|
உரை
|
|
|
|