208.

அளந்திடற்கு அரிதாய அக் குன்றின் மேல்
களம் கறுத்து விண் காத்தவன் கோயின் முன்
விளம்ப அரும் சிவ தீர்த்தத்தின் மிக்கதாய்
வளம் பெறும் சிவ தீர்த்தத்தின் மாடது.

1
உரை
   
209.

தண் தரும் கதிர்ச் சந்திர காந்தத்தில்
பண் தயங்க நவமணி பத்தி செய்து
அண்டர் தச்சன் அநேக தவம் செய்து
கண்டது ஆயிரக் கால் மண்டபம் அரோ.

2
உரை
   
210.

ஆன பான்மையினால் அந்த மண்டபம்
ஞான நாயகன் நாள் மலர் தாள் தொழ
வான் மீனொடு வந்து பதம் குறித்து
ஊனம் இல் மதி வைகுவது ஒத்ததே.

3
உரை
   
211.

அன்ன மண்டபம் தன்னுள் அரும் தவம்
என்ன வேங்கை அதண்மேல் இருந்தனன்
பன்னு கேள்விப் பதினெண் புராணமும்
சொன்ன மாதவச் சூதமுனிவனே.

4
உரை
   
212.

அந்த வேலையில் அச்சிவ தீர்த்தத்தில்
வந்து மூழ்கி அம் மண்டபத்து ஏறியே
சந்தி ஆதி தவம் முடித்து ஈறு இலா
இந்து சேகரன் தாள் நினைந்து ஏத்தியே.

5
உரை
   
213.

சம்பு பத்தன் சதானந்தன் உத்தமன்
அம்புயத் தனன் அனைய மகோதரன்
உம்பர் அஞ்சிய உக்கிர வீரியன்
நம்பு கேள்விப் பிரசண்ட நல் தவன்.

6
உரை
   
214.

ஆதி மாதவர் யாவரும் அன்பு உமை
பாதியாய் முற்றும் ஆகும் பராபரச்
சோதிபால் வைத்த சூதனைத் தோத்திரம்
ஓதி அஞ்சலித்து ஒன்று வினா வினார்.

7
உரை
   
215.

வேத ஆகம புராணமே மிருதியே முதலா
ஓது நூல்களின் துணி பொருள் உலகு எலாம் பயந்த
பேதை பாகனே பரம் எனத் தேர்ந்து உணர் பெரிய
போத மாதவ உனக்கு யாம் புகல்வது ஒன்று உளதால்.

8
உரை
   
216.

மேரு மந்தரம் கயிலைப் பர்ப்பதம் முதல் விடைமேல்
ஊரும் அந்தர நாடவன் உறைபதி அனந்தம்
ஆரும் அந்தம் இல் போகம் வீடு அடைவது என்று                                                    அவற்றின்
காரணங் களோடு உரைத்தனை கருத்தினுக்கு இசைய.

9
உரை
   
217.

ஐயம் ஆதி முக் குற்றமும் அகல நீ அருளிச்
செய்யவும் தெளிந்திலேங்கள் யாம் சிற்றறிவு உடையேம்
மைய நெஞ்சினேம் ஆகையான் மயக்கற இன்னும்
உய்யு மாறு அருள் செய்தி என்று உரைத்தனர்                                                    மன்னோ.

10
உரை
   
218.

தலங்கள் தம்மின் மிக்கு உள்ளதாய்த் தகுதிசால்                                                    தீர்த்தக்
குலங்கள் தம்மின் மிக்கு உள்ளதாய் குறை                                                  இரந்தோர்க்கு
நலங்கள் அருண் மூர்த்தியாய் நாத வேதாந்தப்
புலம் கடந்த பேர் ஒளி உறை தலன் ஒன்று புகலாய்.

11
உரை
   
219.

என்ற போது எதிர் முகம் மலர்ந்து இருள் மல வலியை
வென்ற சூதனும் தலங்களின் விசேடமாய்ந்து தம்பொன்
குன்ற வார் சிலை யானிடம் கொண்டு உறை பதியுள்
ஒன்று கேட்க வீடு அளிப்பதாய் உளது மற்று அதுதான்.

12
உரை
   
220.

முற்ற ஓதிய புராணம் மூ ஆறினுன் காந்தம்
பெற்ற ஆறு சங்கிதை அவை ஆறும் தம் பெயரால்
சொற்ற பேர் சனற் குமர மா முனிவன் சூதன்
கற்றை வார் சடைச் சங்கரன் மால் அயன் கதிரோன்.

13
உரை
   
221.

இன்ன ஆறனுள் சங்கர சங்கிதை என்று
சொன்ன நூலினை உணர்த்தினான் சங்கரன்                                                    துணைவிக்கு
அன்ன போது அவள் மடியினில் இருந்து கேட்டு                                                    அதனை
மின்னு வேல் பணி கொண்ட வேள் வெளிப்பட                                                    உணந்தான்.

14
உரை
   
222.

குன்று எறிந்த வேள் வழிபடு குறு முனிக்கு உரைத்தான்
அன்று தொட்டு அஃது அகத்திய சங்கிதை ஆகி
நின்ற தன்னது கேட்பவர்க்கு அரன் அடி நீழல்
ஒன்றும் இன்ப வீடு அளிப்பதா ஒரு தலன் உரைக்கும்.

15
உரை
   
223.

அதிக அப்பதியாது எனில் ஆலவாய் கேட்கக்
கதி அளிப்பது என்று ஓதிய சூதனைக் கதியின்
மதியை வைத்தவர் அன்னதைப் பகர் என வந்த
விதியினில் புகல் கின்றனன் வியாதன் மாணாக்கன்.

16
உரை
   
224.

புதிய தாமரை மேவிய பழமறைப் புத்தேள்
விதியினால் கடுநடைப் பரி மகம் செய்வான் வேண்டிக்
கதியை மாய்ந்தவர்க்கு உதவு தண்துறை கெழுகாசிப்
பதியின் மைந்தரோடு எய்தினான் பண்டு ஒரு வைகல்.

17
உரை
   
225.

அகத்தியன் வியாதன் நாரதன் சனகன் ஆதி நான்                                 முனிவர் கோதமன்நூல்
சிகைத் தெளி உணர்ந்த பராசரன் வாமதேவன்                                 வான்மீகியே வசிட்டன்
சகத்து இயல் கடந்த சுகன் முதன் முனிவர் தம்                               மொடும் பத்து வெம்பரிமா
மகத் தொழில் முடித்து மற்று அவர்க்கு உள்ள                               மகிழுற வழங்கும் வழங்கா.

18
உரை
   
226.

சத்திய உலகில் சரோருகக் கிழவன் சார்ந்த பின்                                          புலப் பகை சாய்த்த
அத்திரு முனிவர் அனைவரும் காசி அடிகளை                                        அடைந்தனர் பணிந்து
முத்தி மண்டபத்தின் அற முதல் நான்கு மொழிந்த                                   அருள் மூர்த்தி சந்நிதியில்
பத்தியாய் இருந்து நாரத முனியைப் பார்த்து ஒரு                                         வினா வுரைபகர்வார்.

19
உரை
   
227.

தலம் முதல் மூன்றும் சிறந்த தோர் சைவத் தல                               முரை என்ன நாரதன் தான்
கலை முழுது உணர்ந்த சனற்குமாரன் பால் கற்றவன்                                  வியாதனாம் அவன்பால்
நலம் உறக் கேண்மின் என அவன் கதிர் வேல்                         நம்பிபால் மறைமுதல் அனைத்தும்
அலைவற உணர்ந்தோன் குறுமுனியாகும் அவன் இடை                                கேண்ம் என விடுத்தான்.

20
உரை
   
228.

மால் அய மாதவனை அடைந்து கைதொழுது வாழ்த்தி                                   வாதாவி வில்வலனைக்
கொலை புரி தரும மூர்த்தியே விந்தக் குன்று                                அடக்கிய தவக் குன்றெ
அலைகடல் குடித்த அருள் பெரும் கடலே அரும்                            தமிழ்க் கொண்டலே தென்பார்
துலை பெற நிறுத்த களைகணே என்று சுருதி ஆயிரம்                                       எனத் துதித்தார்.

21
உரை
   
229.

மூவகைச் சிறப்பும் உள்ளது ஓர் தான மொழிக என                           முகம் மலர்ந்து அருள் கூர்ந்து
யாவையும் உணர்ந்தோன் முத்தி மண்டபத்தில் ஈர்                         இரு தொகையின் வந்து இறக்கும்
சேவல் கடமையும் ஐம் கரன் தனையும் சேவலம்                                கொடி உடை வடிவேல்
காவலன் தனையும் வட நிழல் அமர்ந்த கண் நுதல்                                  பரனையும் பணியா.

22
உரை
   
230.

அம் கயல் கண்ணி தன்னையும் எந்தை ஆல                                        வாயானையும் இதய
பங்கயத்து இருத்திச் சமாதியில் இருந்து பரவசம்                                    அடைந்து பார்ப் பதிக்குச்
சங்கரன் அருளிச் செய்த சங்கிதையை தாரகன் உடல்
                                               இரண்டாகச்
செம்கை வேல் விடுத்த சேவகன் எனக்குத்
                    தெருட்டினான் அனைய சங்கிதையில்.

23
உரை
   
231.

பெறற்கு அரும் தவம் செய்து அகம் தெளிந்து அரிதில்                        பெறும் கதி கேட்பவர்க்கு எளிதாய்
உறப்படும் தல நீர் வினாய முச் சிறப்பு உள்ளது                                   எத்தலத்தினும் கழிந்த
சிறப்பின் ஆம் எண் எண் திருவிளையாடல் செய்து                         அருள் வடிவு எடுத்து என்றும்
மறைப் பொருள் விளங்கும் ஆலவாய் அதனை
                    மண்ணின் மேல் சிவன் உலகு என்னும்.

24
உரை
   
232.

அத்தலத்து அனைய மூவகை சிறப்பும் அளவு இலா                                    உயிர்க்கு எலாம் கருணை
வைத்தவன் செய்த திருவிளையாட்டும் வரையும் கிழிய                                              வேல் எடுத்த
வித்தகன் எனக்கு விளம்பிய வாறே விளம்புவன்                                       உமக்கு என வந்த
உத்தம முனிவர் யாவரும் கேட்க உணர்த்துவான்                                கடல் எலாம் உண்டான்.

25
உரை