தொடக்கம் |
|
|
233. |
நாட்டம் ஒரு மூன்று உடைய நாயகனுக்கு அன்பு உடையீர் நயந்து நீவிர் கேட்ட தலம் ஈண்டு உரைத்த திருவால வாய் அதனுள் கிளைத்துப் பொன்னம் தோட்டலர் தாமரை முளைத்த தொரு தடமும் சுந்தரச் செம் சோதி ஞான ஈட்டம் என முளைத்த சிவலிங்கம் ஒன்று உள இன்னும் இசைப்பக் கேண்மின். |
1 |
|
|
உரை
|
|
|
|
|
234. |
திருவால வாய்க்கு இணையா ஒருதலமும் தெய்வ மணம் செய்ய பூத்த மருவார் பொன் கமல நிகர் தீர்த்தமும் அத் தீர்த்தத்தின் மருங்கின் ஞான உருவாகி உறை சோம சுந்தரன் போல் இகபரம் தந்து உலவா வீடு தருவானும் முப்புவனத் தினும் இல்லை உண்மை இது சாற்றின் மன்னோ. |
2 |
|
|
உரை
|
|
|
|
|
235. |
அவ்வகைய மூன்றின் முதல் தலப் பெருமை தனைச் சுருக்கி அறையக் கேண்மின் எவ்வகைய உலகத்தும் தருமதலம் அதிகம் அவற்று ஈறு இலாத சைவ தலம் அதிகம் அவற்று அறுபத்து எட்டு அதிகம் அவை தமில் ஈர் எட்டு தெய்வ தலம் அதிகம் அவற்று அதிக தல நான்கு அவற்றைச் செப்பக் கேண்மின். |
3 |
|
|
உரை
|
|
|
|
|
236. |
அன்னமலி வயல் புலியூர் காசி நகர் காளத்தி ஆல வாயாம் இன்ன வளம் பதினான்கில் திரு வால வாய் அதிகம் எவ்வாறு என்னின் மின்னவிர் அம்பலம் காணக் காசிநகர் வதிந்து இறக்க வியன் காளத்திப் பொன் நகரம் பத்தியினால் வழிபாடு செய அளிக்கும் போகம் வீடு. |
4 |
|
|
உரை
|
|
|
|
|
237. |
அறம் தழையும் திருவால வாய் கேட்டவுடன் போகம் அளிக்கும் ஈண்டு பிறந்து இறவாப் பேர் இன்பக் கதியளிக்கும் இது அன்றிப் பிறழாதெங்கும் நிறைந்தபரன் எத்தலமும் படைப்பான் இத்தலத்தை முதன் நிருமித்து இங்ஙன் உறைந்த தருளினான் அன்றி இன்னம் உளது இதன் பெருமை உரைப்பக் கேண்மின். |
5 |
|
|
உரை
|
|
|
|
|
238. |
திருவால வாய் என்று கேட்டவரே அறம் பெறுவர் செல்வம் ஓங்கும் திருவால வாய் என்று நினைத்தவரே பொருள் அடைவர் தேவ தேவைத் திருவால வாயிடத்துக் கண்டவரே இன்ப நலம் சேர்வர் என்றும் திருவால வாயிடத்து வதிந்தவரே வீட்டு நெறி சேர்வர் அன்றே. |
6 |
|
|
உரை
|
|
|
|
|
239. |
சுர நதி சூழ் காசிமுதல் பதிமறுமைக்கு கதி அளிக்கும் தூநீர் வைகை வரநதி சூழ் திருவால வாய் சீவன் முத்தி தரும் வதிவோர்க்கு ஈது திரன் அதிகம் பரகதியும் பின்கொடுக்கும் ஆதலின் இச் சீவன் முத்தி புரன் அதிகம் என்பது எவன் அதற்கு அதுவே ஒப்பாம் எப் புவனத்து உள்ளும். |
7 |
|
|
உரை
|
|
|
|
|
240. |
ஆதலின் இப் பதி விட்டு பிற பதியில் போய் நோற்போர் அங்கை கொண்ட சீதள வானமும் தேய்ப்பத் தித்திக்கத் தேம் பெய்து செய்த தீம் பால் ஓதனத்தைக் கைவிட்டுப் புறம் கையை நக்குவார் ஒப்பார் இந்த மாதலத்தின் பெருமைதனை யாவரே அளவிட்டு வழுத்தற் பாலார். |
8 |
|
|
உரை
|
|
|
|
|
241. |
மற்றைய தலங்கள் தம்மில் பரிமகம் வாச பேயம் அற்றம் இல் சோடசாக அக்கினி இட்டு ஓமம் யார்க்கும் முற்றரும் இராச சூய முதன் மக முடித்த பேறும் செற்றம் இற ரிச பூர்ண முதல் இட்டி செய்த பேறும். |
9 |
|
|
உரை
|
|
|
|
|
242. |
எள் இழுது அன்னம் கன்னி இவுளி தேர் யானை இல்லம் வெள்ளியான் பொன் பூண் ஆடை விளைவொடு பழனம் உன்னாத் தள்ளரும் அடிமை ஆதி தானங்கள் செய்த பேறும் வள்ளறன் காசி ஆதிப் பதிகளில் வதிந்த பேறும். |
10 |
|
|
உரை
|
|
|
|
|
243. |
கங்கை காளிந்தி வாணி காவிரி கண்ண வேணி துங்க பத்திரை தீம் பாலி தூய தன் பொருநை முன்னாச் சங்கையில் நதிகள் முற்றும் ஆடிய தவத்தின் பேறும் மங்கல மதுரை தன்னில் வைகலும் வதிவோர்க்கு எய்தும். |
11 |
|
|
உரை
|
|
|
|
|
244. |
அன்னிய தலங்கள் தம்மில் ஆற்றிய பிரமகத்தி பொன்னினைக் களவு செய்தல் கள் உண்டல் புனித ஆசான் பன்னியைப் புணர்தல் இன்ன பாதகம் அனைத்தும் என்றும் தன்னிகர் ஆல வாயில் வதிபவர் தமை விட்டு ஏகும். |
12 |
|
|
உரை
|
|
|
|
|
245. |
மற்றைய தலத்தின் சாந்திராயண மதியம் தோறும் உற்றபேறு இங்குக் கங்குலும் உண்டியால் அடைபேறு ஆகும் மற்றைய தலத்தின் மாதப் பட்டினிப் பலத்தின் பேறு இங்கு உற்று ஒரு வைகல் உண்டி ஒழிந்தவர் பெறும் பேறாகும். |
13 |
|
|
உரை
|
|
|
|
|
246. |
அயல் நகர் அடைந்து நான்கு திங்கள் நோன்பு ஆற்றும் பேறு இவ் வியன் நகர் அடைந்து நோற்கும் அட்டமி விரதம் நல்கும் அயன் நகர் எய்தி ஆறு திங்கள் நோன்பு ஆற்றும் பேறு இவ் வியன் நகர்ச் சோம வார விரதமே அளிக்கும் அன்றே. |
14 |
|
|
உரை
|
|
|
|
|
247. |
ஏனைய தலத்தில் ஓர் ஆண்டு உணவு ஒழிந்து இயற்றும் நோன்பால் ஆன பேறு இங்கு நோற்கும் சிவன் இரா அளிக்கும் இங்கே ஊன ஐம் பொறியும் வென்றோன் முப்பொழுது உண்டு வைகித் தான் அமர்ந்தாலும் கால் உண்டி இயற்றும் மாதவத்தோன் ஆகும். |
15 |
|
|
உரை
|
|
|
|
|
248. |
இந்த நான் மாடம் ஓங்கும் ஆலவா இடத்தில் யாரேனும் அந்தணர் தமக்கு ஓர் முட்டி அரும் தவர் தமக்கு ஓர் பிச்சை தந்தவர் புறம்பு செய்த சோடச தானம் தம்மால் வந்த பேறு அடைவர் பல் வேறு உரைப்பது என் மதியான் மிக்கீர். |
16 |
|
|
உரை
|
|
|
|
|
249. |
பல் வகைத் தலங்கள் எல்லாம் வைகிய பயனும் என்றும் பல் வகைத் தீர்த்தம் எல்லாம் ஆடிய பயனும் என்றும் பல் வகைத் தானம் எல்லாம் நல்கிய பயனும் என்றும் பல் வகைத்து ஆன பூசை பண்ணிய தவத்தின் பேறும். |
17 |
|
|
உரை
|
|
|
|
|
250. |
பல் வகைத் தவங்கள் எல்லாம் முற்றிய பயனும் தூய பல் வகை மந்திரத்தில் எய்திய பயனு நூலின் பல் வகை கேள்வி எல்லாம் ஆய்ந்து உணர்பயனும் யோகம் பல் வகை ஞானம் எல்லாம் பயின்று உணர்ந்து அடங்கும் பேறும். |
18 |
|
|
உரை
|
|
|
|
|
251. |
அனைய தொல் பதியில் என்றும் வைகுவோர் அடைவர் என்றால் இனைய தொல் பதிக்கு நேர் வேறு இல்லை இப் பதியின் மேன்மை தனை அறிபவர் ஆர் ஈசன் தான் அறி யாதலாலே வினையை வெல்பவர் அங்கு எய்தி வதிவதே வேண்டும் மாதோ. |
19 |
|
|
உரை
|
|
|
|
|
252. |
கைத்தலம் நான்கு இரண்டு உடைய மலர்க்கடவுள் மேல் ஒருநாள் கயிலை ஆதி எத்தலமும் ஒரு துலை இட்டு இத்தலமும் ஒரு துலை இட்டு இரண்டும் தூக்க உத்தமம் ஆம் திருவாலவாய் மிகவும் கனத்தது கண்டு உலகின்மேலா வைத்த தலம் இது என்றால் இதன் பெருமை யாவரே வழுத்தர் பாலார். |
20 |
|
|
உரை
|
|
|
|
|
253. |
அத்திருமா நகரின் பேர் சிவ நகரம் கடம்ப வனம் அமர்ந்தோர் சீவன் முத்தி புரம் கன்னிபுரம் திருவால வாய் மதுரை முடியா ஞானம் புத்தி தரும் பூவுலகில் சிவலோகம் சமட்டி விச்சாபுரம் தென் கூடல் பத்திதரு துவாத சாந்தத் தலம் என்று ஏது வினால் பகர்வர் நல்லோர். |
21 |
|
|
உரை
|
|
|
|
|
254. |
என்று தலச் சிறப்பு உரைத்த குறு முனிவன் எதிர் அறவோர் இறும்பூது எய்தி நன்று தலப் பெருமை அருள் செய்தனை கேட்டு உடல் எடுத்த நயப் பாடு எல்லாம் இன்று அடைந்தேம் இனிச் சுவண புண்டரிகச் சிறப்பு அதனை இசைத்தி என்னக் குன்றம் அடக்கிய கருணைக்குன்றனையான் வரன் முறையால் கூறுகின்றான். |
22 |
|
|
உரை
|
|
|
|
|
255. |
விரத மாதவத்தீர் காணின் வெவ்வினை எல்லாம் வீட்டிச் சரதமா போக நல்கும் தபனிய முளரிவந்த வரவும் அக்கனக கஞ்சப் பெருமையும் வளனு நன்கா உரை செய்தும் கேண்மின் என்னா முனிவரன் உரைக்கும் மன்னோ. |
23 |
|
|
உரை
|
|
|
|