256.

கண்ணகன் குடுமி மாடக் கடி பொழில் ஆலவாயின்
அண்ணல் அம்பெருமையாரே அளப்பவர் அவிர்                                                 தண் முத்த
வெண் நகை உமையாள் அன்பு விளை முகச்                                               செவ்விபோலத்
தண்ணறும் கமலம் பூத்த தடப் பெரும் தகைமை                                               சொல்வாம்.
1
உரை
   
257. ஆற்றினுக்கு அரசு ஆம் கங்கை காவிரி ஆதி                                                 ஆறும்
வேற்று உருவாய் முந்நீர் வேலையும் பிறவும் காரும்
தோற்றுமுன் தன்னை ஆட்டச் சுந்தர மூர்த்தி                                                 செம்கண்
ஏற்றினன் கண்ட தீர்த்தம் ஆகும் ஈது எவ்வாறு                                                 என்னின்.
2
உரை
   
258. அகளமா உலகம் எல்லாம் ஒடுக்கி அந் நெறியே                                                 யார்க்கும்
நிகளம் ஆம் விருத்தி தோன்ற நினைவு அற                                           நினைந்து நிற்கும்
துகள் இலா அறிவானந்த சுந்தரச் சோதி மேனாட்
சகள மா உருவம் கொண்டு தான் ஒரு                                      விளையாட்டாலே.
3
உரை
   
259. முக்கணன் அரவப் பூண நூலினன் முகிழ் வெண்                                                     திங்கள்
செக்கரம் சடையன் சூல கபாலத்தன் செம்கண்                                                     ஏற்றன்
மைக்கரும் கயல் உண் கண்ணி வாமத்தன் முன்னும்                                                     பின்னும்
பக்கமும் நந்தி ஆதி கணாதிபர் பாரவிச் சூழ.
4
உரை
   
260. சென்று தன் தேனித் தேசால் திசை எலாம் விளங்கச்                                                        செங்கண்
வென்றி கொள் உரக வேந்தன் நகரமும் விபுதர்                                                        வேந்தன்
பொன் திகழ் நகரும் வேதன் புரமும் மால் புரமும்                                                        மேலைத்
தன் திரு நகரும் சென்று சஞ்சரித்து ஆடி மீள்வான்.
5
உரை
   
261. அன்ன போது அயனும் தேவர்க்கு அரசனும் ஆழி                                                 வேந்தும்
முன்னர் வந்து இறைஞ்சி ஏத்த முனிவரும் பேறு                                                 நல்கித்
தன்னகர் அடைந்து நீங்காத் தனிப்பெரும்                                               கணத்தினோரை
இன்னருள் சுரந்து நோக்கி இலிங்கத்தில் புகுதும்                                                 எல்லை.
6
உரை
   
262. வேத்திரப் படையோன் ஆதி கணாதிபர் வீழ்ந்து                                                 பால
நேத்திர அன்பர்க்கு அன்ப நிரஞ்சன நிருத்தானந்த
சாத்திர முடிவும் தேறாத் தனி முதல் ஒருவ                                                 என்னாத்
தோத்திர வகையால் ஏத்தி தொழுது ஒன்று                                           வினாவல் செய்வார்.
7
உரை
   
263. ஐய இங்கிலிங்க மூர்த்திக்கு ஆட்டவும் அடியே                                                 மூழ்கி
உய்யவும் கங்கை ஆதி நதிகளும் உலகத்து                                                 உள்ளோர்
மைஅறு தடாக நீரும் மற்று இலை இருமைப் பேறும்
செய்ய ஓர் திர்த்தம் இங்கு உண்டாக்கு என செப்ப                                                   லோடும்.
8
உரை
   
264. அத்தகை இலிங்க மூர்த்திக் கடுத்தது என் கீழ்                                                 சாராக
முத்தலை வேலை வாங்கி நாட்டினான் முது பார்                                                 கீண்டு
பைத்தலை பாந்தள் வேந்தன் பாதலம் கீண்டு                                                 போய் எண்
கைத் தலப் பிரமன் அண்டகடாகமும் கீண்டது                                                 அவ்வேல்.
9
உரை
   
265. அவ்வழிப் புறம்பு சூழ்ந்து கிடந்த ஆழி ஊழிப்
பௌவ நீர் என்ன ஓங்கப் பாணியால் அமைத்து                                                 வேணித்
தெய்வ நல் நீரைத் தூவிக் கலந்து மா தீர்த்தம்                                                 ஆக்கிக்
கை வரை கபாலி நந்தி கணத்தினை நோக்கிக்                                                 கூறும்.
10
உரை
   
266. இன்னமா தீர்த்தம் தன்னை எனைப் பல திர்த்தம்                                                 கட்கு
முன்னம் யாம் இங்குக் கண்ட முதன்மையால் ஆதி                                                 தீர்த்தம்
என்னலாம் இனி உண்டாக்கும் தீர்த்தங்கள்                                          எவைக்கும் மேலாய்
அன்னலால் பரம தீர்த்தம் எனப் பெயர் வழங்கல்                                                 ஆகும்.
11
உரை
   
267. மருள் கெட மூழ்கினோர் நல் மங்கலம் பெறலான்                                                     நாமம்
அருள் சிவ தீர்த்தம் ஆகும் புன்னெறி அகற்றி                                                 உள்ளத்து
இருள் கெட ஞானம் தன்னை ஈதலான் ஞான                                                 தீர்த்தம்
தெருள் கதி தரலான் முத்தி தீர்த்தம் என்று                                               இதற்கு நாமம்.
12
உரை
   
268. குடைந்து தர்ப்பணமும் செய்து தானமும் கொடுத்து                                                 அம்மாடே
அடைந்து எழுத்து ஐந்தும் எண்ணி உச்சரித்து                                           அன்பால் எம்மைத்
தொடர்ந்து வந்து இறைஞ்சிச் சூழ்ந்து துதித்து                                      எமை உவப்பச் செய்தோர்
உடம்பு எடுத்ததனால் எந்த உறுதி உண்டு அதனைச்                                                 சேர்வார்.
13
உரை
   
269. இந்த நீர் எம்மை ஆட்டின் ஏழ் இரண்டு உலகின்                                                        மிக்க
அந்தம் இல் தீர்த்தம் எல்லாம் ஆட்டிய பயன்                                                     வந்து எய்தும்
வந்து இதின் மூழ்கி இங்கு வைகும் நம் குறியை                                                        உங்கள்
சிந்தையில் ஆர்வம் பொங்கப் பூசனை செய்மின்                                                        என்னா.
14
உரை
   
270. விண்ணவர் தம்மின் மேலாம் வேதியன் ஆகி நின்ற
பண்ணவன் தான் அந்நீரில் படிந்து தன்ன                                                 உச்சையாலே
அண்ணல் அம் கணத்தி நோரை மூழ்கு வித்து                                                அனாதி ஆய
புண்ணிய விலிங்கம் தன்னுள் புகுந்து இனிது                                           இருந்தான் மன்னோ.
15
உரை
   
271. அந்தமா நீர் நந்தி ஆதியோர் விதியால் சோம
சுந்தரன் முடிமேல் ஆட்டித் துகள் அறப்பூசை                                                 ஆற்றிச்
சிந்தையில் விழைந்த எல்லாம் அடைந்தனர்                                          செம்பொன் கஞ்சம்
வந்தவாறு இது அத்திர்த்த மகிமையும் உரைப்பக்                                              கேண்மின்.
16
உரை
   
272. வளை எறி தரங்க ஞான வாவியை நோக்கில் பாவத்
தளையறு மூழ்கின் வேண்டும் காமியம் எல்லாம்                                                 சாரும்
உளம் உற மூழ்கும் எல்லை முழுக்கு ஒன்றற்கு                                              உலகத்து உள்ள
அளவறு தீர்த்தம் எல்லாம் ஆடிய பயன் வந்து                                                 எய்தும்.
17
உரை
   
273. மெய்யை மண்ணாதி கொண்டு விதிவழி சுத்தி செய்து
மையறு வருண சூத்த மந்திரம் நவின்று மூழ்கிற்று
உய்யமா தீர்த்தம் எல்லாம் தோய்ந்து நான்                                மறையும் மாய்ந்தோர்
கையில் எப் பொருளும் ஈந்த காசறு பேறு நல்கும்.
18
உரை
   
274. தெய்வ இத் தீர்த்தம் தன்னை நினைவு இன்றித்                                                 தீண்டினாலும்
அவ்விய வினையும் நீந்தி அரும் பெறல் வீடுசேர்வர்
இவ்வுரை மெய்யே ஆகும் என் எனின் மனத்தாறு                                                 அன்றி
வெவ் அழல் தீண்டினாலும் சுடும் அன்றி விடுமோ                                                 அம்மா.
19
உரை
   
275. ஆரும் அந்நீரில் என்றும் ஆடினர் சீவன் முத்தி
சேருவரம் நீராடும் சிறப்புறு பயனுக்கு ஒவ்வா
வாருணம் ஆக்கின் நேய மந்திரம் இவை முன் ஆன
பேர் உணர்வு அளிக்கும் நானம் செய்தவர் பெறும்                                                 பேறு எல்லாம்.
20
உரை
   
276. அன்ன நீர் அதனையும் ஆடி ஆலவாய் உடைய                                                 நாதன்
தன்னையும் பணிவோன் மேலைப் பரகதி தன்னைச்                                                 சாரும்
என்ன நன் நூலில் சொன்ன பவித்திரம் எவைக்கும்                                                 மேலாய்ப்
பன்னரும் புனிதம் ஆன பவித்திரம் ஆகி நிற்கும்.
21
உரை
   
277. ஆதரவு இலனாய் அந்நீர் ஆடினோன் சுவர்க்கம்                                                 சேரும்
ஆதரவு உளனாய் மூழ்கி வானவர் ஆதி                                                 ஆனோர்க்கு
ஆதர அரிசி எள்ளுத் தருப்பணம் அமையச்                                                 செய்தோன்
ஆதர வேள்வி முற்றும் ஆற்றிய பயனைச் சேரும்.
22
உரை
   
278. ஏனை மா தலங்கள் தம்மிலிருந்து செய் விரதம்                                                 பூசை
தான மா தரும் ஓமம் தவம் செபம் தியானம்                                                 தம்மால்
ஆன மா பயனில் கோடி அதிகம் ஆம் அடைந்து                                                 மூழ்கி
ஞானம் மாதீர்த்த ஞாங்கர் இருந்து அவை நயந்து                                                 செய்யின்.
23
உரை
   
279. பிறந்த நாள் அந்நீர் மூழ்கின் மேலை வெம்                                            பிறவிப் பௌவம்
மறிந்திடும் மறி தேள் கும்ப மதிகளின் மூழ்கித்                                                 தென்பால்
உறைந்தவர் பொருட்டு பிண்டம் உதவினால்                                           அவர்தம் ஆழ்ந்து
நிறைந்திடு பிறவிப் பௌவ நின்று மேல் எழுவர்                                                 அன்றே.
24
உரை
   
280. அத்தட மருங்கின் யாவர் தென் புலம் அடைந்தோர்                                                 தங்கள்
சித்த மாசு அகற்ற வேண்டிச் செய் கடன் முடிக்கின்                                                 அன்னோர்
எத்தனை எண் நேர்ந்தாலும் எள்ளுக்கா ஆயிரம்                                                 ஆண்டாக
அத்தனை ஆண்டு மட்டும் அவரை விண் ஆள                                                 வைப்பார்.
25
உரை
   
281. மூவகை உலகில் உள்ள தீர்த்தமு முறையால் என்றும்
சேவகம் செய்யும் இந்தத் தீர்த்தம் எந் நாளும்                                                 மூழ்கி
ஏவா அந் நீரால் என்றும் ஈசனை பூசை செய் வோர்
ஆவர் இப்பிறவி தன்னில் அவர் கதிக் கரையைச்                                                 சார்வார்.
26
உரை
   
282. விடுத்திடல் அரிய நித்த வேள்வி மா விரதம் வேதம்
தடுத்திடல் அரிய தானம் தவம் இவை தரும் பேறு                                                 எல்லாம்
அடுத்ததன் கரையில் வைகி ஈசனை அருச்சிப்                                                 போர்க்குக்
கொடுத்திடு புண்ணியத்தில் கோடியில் ஒன்றுக்கு                                                 ஒவ்வா.
27
உரை
   
283. உம்மையில் பிறவி தோறும் நியம நல் ஒழுக்கம்                                                 பூண்டு
பொய்மையில் விரதம் தானம் தவம் செய்து புனிதர்                                                 ஆகிச்
செம்மை நல் நெறியின் நின்ற சித்தர் அலது இத்                                                 தீர்த்தம்
இம்மையில் அடைந்து நித்தம் ஆடுதற்கு எய்தாது                                                 அன்றெ.
28
உரை
   
284. மதி கதிரோன் இடத்து ஒடுங்கு தினம் திங்கள்  
                      பிறப்பு அரவம் வாய் அங்காந்து
கதிர்கள் தமை விழுங்கு தினம் விதிபாதம் இந்   
                     நாளில் கருதி மூழ்கித்
துதிகள் தருப்பணம் தானம் புரிதன் மனு ஓது தலத்
                       தொகை ஒன்றற்கு ஒன்று
அதிக பலனம் முறை நூறு ஆயிரம் நூறு ஆயிரம்
                       ஓர் அனந்தம் ஆகும்.
29
உரை
   
285. பொரு அரிய தகர்த் திங்கள் துலாத் திங்கள் இவை
                                   உதிக்கும் போது மூழ்கின்
ஒரு பதினாயிர மடங்காம் சுறவு கவைத் தாள் அலவ
                                   உதிப்பின் மூழ்கின்
இருபதினாயிர மடங்காம் இந்து ரவியிடத்து ஒடுங்கு
                                   இந்து வாரம்
வருவது அறிந்து ஆடி மனு ஓதல் செயின் அனந்த
                                   மடங்கு உண்டாகும்.
30
உரை
   
286. பிரயாகை தனின் மகரமதி நாள் முப்பதும் குடைந்து                               பெறும் பேறு இந்தத்
திரை ஆர் பைந் தடத்து ஒரு நாள் மூழ்குவோன்                            பெறும் விரத சீலம் பூண்டு
வரையாமல் ஒரு வருடம் படிந்து உமை ஐ அமரர்                               சிகாமணியாம் வேத
உரையானை வழிபடுமேல் மலடிக்கு நன் மகப் பேறு                               உண்டாம் மன்னோ.
31
உரை
   
287. எண் திசை நதி வாவி வடிவான மாதீர்த்தம்                               எல்லாம் இப்பொன்
புண்டரிக தடத்தில் ஒரு கோடியில் ஓர் கூறு நிகர்                                               போதா ஈது
கண்ட அதனால் அறம் தீண்டப் பெற்றதனால் நல்                         பொருள் அம் கையால் அள்ளிக்
கொண்டதனால் இன்ப நலம் குடைந்து அதனால்                        பேரின்பம் கொடுக்கும் அன்றோ.
32
உரை
   
288. முன்னவன் அருளிச் செய்த காரண முறையால்                                                   அன்றி
இன்னம் இப் புனித வாவிக்கு ஏதுவால் எய்து                                                    நாமம்
மின் அவிர் சடையான் சென்னி மேவிய கங்கை                                                    நீரில்
பின்னது கலந்த நீரால் பெறும் சிவகங்கை என்றும்.
33
உரை
   
289. அலகிலாத் தீர்த்தம் தம்முள் அதிக உத்தமம்                                     ஆய்த் தோன்றி
இலகலால் இதனைத் தீர்த்த உத்தமம் என்பர்                                       ஆராய்ந்தோர்
பல இதழ் விரித்துச் செம் பொன் பங்கயம் மலர்ந்த                                         நீரால்
உலகு அவர் யாரும் பொற்றா மரை என உரைப்பல்                                        அன்றே.
34
உரை
   
290. தரும முன்னாகு நான்கும் தருதலால் தரும தீர்த்தம்
அருமை சால் அருத்த தீர்த்தம் அரும் பெறல்                                                  காமதீர்த்தம்
இருமை சேர் முத்தி தீர்த்தம் என்பதாம் இனைய                                                  தீர்த்தம்
வெருவரு பாவம் என்னும் விறகினுக்கு எரியாம்                                                  அன்றே.
35
உரை
   
291. இவ் அரும் தலத்தின் ஆன்ற பெருமையும் எரிகால்                                                  செம்பொன்
தெய்வத் பதும தீர்த்தப் பெருமையும் செப்பக்                                                  கேட்டோர்
எவ்வம் இல் போகம் வீடு பெறுவர் என்று                                           இசைத்தான் முந்நீர்
பௌவம் உண்டு அமரர் வேந்தன் பரிபவ விழுமம்                                                  தீர்த்தோன்.
36
உரை