தொடக்கம் |
|
|
292. |
ஆலவாய் அலர்ந்த செம் பொன் அம்புயப் பெரும் தீர்த்தத்தின் மேலவாம் பெருமை தன்னை விளம்பு வார் எவரே அம் கண் நீலமா மிடற்று முக்கணிர் ஆமயன் அறிவானந்த மூலம் ஆம் லிங்க மேன்மை முறையினால் அறையல் உற்றாம். |
1 |
|
|
உரை
|
|
|
|
|
293. |
பொன் நெடு மேரு வெள்ளிப் பொருப்பு மந்தரம் கேதாரம் வன்னெடும் புரிசை சூழ்ந்த வாரண வாசி ஆதிப் பன்னரும் தலங்கள் தம்மில் பராபர இலிங்கம் தோன்றும் முன்னரிக் கடம்பின் மாடே முளைத்தது இச் சைவ லிங்கம். |
2 |
|
|
உரை
|
|
|
|
|
294. |
அப்பதி லிங்கம் எல்லாம் அருட்குறி இதனில் பின்பு கப்பு விட்டு எழுந்த இந்த காரணம் இரண்டினாலும் ஒப்பரிது, ஆன ஞான ஒளி திரண்டன்ன இந்தத் திப்பிய லிங்க மூல இலிங்கமாய்ச் சிறக்கும் அன்னோ. |
3 |
|
|
உரை
|
|
|
|
|
295. |
இந்த மா இலிங்கத்து எண் நான்கு இலக்கண விச்சை மேனி அந்தம் இல் அழகன் பாகத்து உமையொடு அழகு செய்து சந்ததம் விளக்கம் செய்யும் தகைமையை நோக்கிச் சோம சுந்தரன் என்று நாமம் சாத்தினர் துறக்க வாணர். |
4 |
|
|
உரை
|
|
|
|
|
296. |
திறப்படு உலகம் எங்கும் வியாபியாய்ச் சிறந்து நிற்கும் அறப் பெரும் கடவுள் சோம சுந்தரன் அதனால் அன்றெ கறைக் கதிர் வடிவேல் தென்னன் கையில் பொன் பிரம்பு பட்ட புறத் தடித் தழும்பு மூன்று புவனமும் பட்டது அன்றெ. |
5 |
|
|
உரை
|
|
|
|
|
297. |
சொற்ற இச் சமட்டி ஆன சோம சுந்தரனைக் காணப் பெற்றவர் வியட்டி ஆன பிறபதி இலிங்கம் காணல் உற்றவர் ஆவர் என்று உரைக்கின் வேர் ஊட்டு நீர் போய் மற்றைய சினைகள் எல்லாம் தழைவிக்கு மரத்தின் மாதோ. |
6 |
|
|
உரை
|
|
|
|
|
298. |
எத்தலத்து யாவன் எண் எண் திருவிளையாடல் செய்தான் அத்தலத்து அவனுக்கு ஒப்பு அதிகம் ஆம் சிறப்பும் பெற்ற உத்தமன் என்று எந்த உலகிலும் இல்லை அந்த வித்தகன் அதிகத் தன்மை எனைத்தும் எனின் விளம்பக் கேண்மின். |
7 |
|
|
உரை
|
|
|
|
|
299. |
பொருப்பினுள் தலைமை எய்தும் பொன் நெடும் குடுமிமேரு தருக்களில் தலைமை சாரும் தண் நறும் தெய்வதாரு விருப்புறு வேள்வி தம்முள் மேம் படும் புரவி மேதம் அருள் படு தானம் தம்முள் விழுமிதாம் அன்ன தானம். |
8 |
|
|
உரை
|
|
|
|
|
300. |
மனிதரில் உயர்ந்தோர் ஆதி மறையவர் தேவர் தம்மில் பனிதரு திங்கள் வேணிப் பகவனே உயர்ந்தோள் வேட்டோர்க்கு இனிது அருள் விரதம் தம்முள் அதிகம் ஆம் இந்து வாரம் புனித மந்திரங்கள் தம்முள் போத ஐந்து எழுத்து மேலாம். |
9 |
|
|
உரை
|
|
|
|
|
301. |
மின்மை சால் மணியில் சிந்தாமணி வரம் விழுப்ப நல்கும் தன்மை சால் அறங்கள் தம்மில் மிகும் சிவ தருமம் என்ப இன்மை சால் நெறிநின் றோருக்கு ஏற்கு நற்கலங்கள் தம்மின் நன்மை சான்றவரே முக்கணா தனுக்கு அன்பு பூண்டோர். |
10 |
|
|
உரை
|
|
|
|
|
302. |
தீயவான் சுவைப் பால் ஆவில் தேவர் ஆ அதிகம் பல்வேறு ஆய மா தீர்த்தம் தம்முள் அதிகம் ஆம் சுவணகஞ்சம் மாய மாசு அறுக்க எல்லாத் தலத்திலும் வதிந்து மன்னும் தூய வானவரில் சோம சுந்தரன் சிறந்தோன் ஆகும். |
11 |
|
|
உரை
|
|
|
|
|
303. |
அந்தமும் முதலும் இல்லா அகண்ட பூரணமாய் யார்க்கும் பந்தமும் வீடும் நல்கும் பராபரச் சோதி தானே வந்தனை புரிவோர்க்கு இம்மை மறுமை வீடு அளிப்பான் இந்தச் சுந்தர லிங்கத்து என்றும் விளங்குவான் சுருதி ஏத்த. |
12 |
|
|
உரை
|
|
|
|
|
304. |
இத்தகு சயம்பு தன்னை ஏனைய சயம்பு எல்லாம் நித்தமும் தரிசித்து ஏகும் நிருமல ஒளியாம் இந்த உத்தம இலிங்கம் கண்டோர் உரை உணர்வு ஒடுங்க உள்ளே சித்தம் மாசு ஒழியத் தோன்றும் சிவபரம் சுடரைக் கண்டோர். |
13 |
|
|
உரை
|
|
|
|
|
305. |
இத்தனிச் சுடரை நேர் கண்டு இறைஞ்சினோர் பாவம் எல்லாம் கொத்து அழல் பொறிவாய்ப் பட்ட பஞ்சுபோல கோபம் மூள மெய்த்தவம் சிதையும் மாபோல் மருந்தினாள் வீயும் நோய் போல் உத்தம குணங்கள் எல்லாம் உலோபத்தால் அழியும் மா போல். |
14 |
|
|
உரை
|
|
|
|
|
306. |
கலி கடல் இரவி தோன்ற கருகு இருள் உடையு மாபோல் ஒலி கெழு பெருங்காற் அள்ள உடைபடு மேகம் போல வலி கெழு மடங்கல் சீற மாயும் மால் யானை போலக் குலிசவல் ஏறு தாக்கப் பொடிபடும் குன்றம் போல.
|
15 |
|
|
உரை
|
|
|
|
|
307. |
மருட்சி செய் காம நோயான் மதி கெடு மாறு போல அருள் சிவ ஞான நோக்கால் வலி கெடும் அவிச்சை போலத் தருக்கு உறும் உவணம் சீறத் தழல் அராவிளியும் மா போல செருக்கு உற அழியும் கற்ற கல்வி போல் சிதையும் அன்றே. |
16 |
|
|
உரை
|
|
|
|
|
308. |
புலரியில் சீவன் முத்தி புரேசனைக் காணப் பெற்றால் அலை கடல் தான் உட் பட்ட அவனி மா தானம் செய்த பலன் உறும் கதிர் கால் உச்சி வைகலில் பணியப் பெற்றால் கலைஞர் பால் நூற்றுப் பத்துக் கபிலை மா தானப் பேறாம். |
17 |
|
|
உரை
|
|
|
|
|
309. |
விண் இடைப் பரிதிப் புத்தேள் மேலை நீர் குளிக்கும் எல்லை அண்ணலை வணங்கில் கோடி ஆன் இனத் தானப் பேறோம் பண்ணவர் பரவும் பாதி இருள் வயில் பணியப் பெற்றால் வண்ண வெம் புரவி மேத மகம் புரி பெரும் பேறு எய்தும். |
18 |
|
|
உரை
|
|
|
|
|
310. |
இன்னன வதிகமாம் பேறறிந்து போய் எத் தேவர்க்கும் முன்னவன் சமட்டி விச்சாபுரம் உறை முதல்வன் தன்னைச் சொன்ன இக் காலம் தோறும் இறைஞ்சியும் தொழுதும் சூழ்ந்தும் பொன் அடிக்கு அன்பர் ஆகி வழிபடும் புனித சீலர். |
19 |
|
|
உரை
|
|
|
|
|
311. |
உம்மையில் வினைகள் என்னும் பிணி அவிழ்ந்து ஒருவித்தூய செம்மையர் ஆகி ஆனாத் திரு வொரு செல்வம் ஓங்க வெம்மை இல் போக மூழ்கி மல இருன் வீக்க நீந்தி மைம் மலி கண்டத்து எம்கோன் மலர் அடி நீழல் வாழ்வார். |
20 |
|
|
உரை
|
|
|
|
|
312. |
அற உருவன் ஆலவாயான் ஆமஞ் செவி மடுத்தால் அடைந்த பத்துப் பிறவி வினை அறு நினைந்தான் ஊறு பெரும் பவப் பாவப் பிணி போம் கூடல் இறைவனை இன்று இறைஞ்சுதும் என்று எழுந்து மனைப்புறம் போந்தால் ஈரைஞ்நூறு மறமுறு வெம் பவத்து இழைத்த பாதக வல் வினை அனைத்தும் மாயும் மன்னோ. |
21 |
|
|
உரை
|
|
|
|
|
313. |
புழைக்கை வரை தொலைத்தானை தரிசித் தோர் ஆயிரம் ஆம் புரவி வேள்வி தழைத்த பெரும் பயன் பெறுவர் உருத்திர சூத்தம் அதனால் தவ வானோர்கள் தொழற்கு அரியான் தனைத் துதித்தோர் கணத்துக்கு ஆயிரம் ராசசூய யாகம் இழைத்த பெரும் பயன் பெறுவர் சமட்டி வடிவாகிய அவ் இலிங்கம் தன்னை. |
22 |
|
|
உரை
|
|
|
|
|
314. |
அம் கை அளவு ஆகிய நல் நீர் ஆட்டிப் பூசித்தோர் அளவிலேனைத் துங்க தலத்து உறை இலிங்க மூர்த்திகளைச் சிவ ஆகம நூல் சொன்ன ஆற்றான் மங்கலம் ஆகிய முகமன் ஈரெட்டும் வழுவாது வாசம் தோய்ந்த செங் கனக மணிக் கலசப் புனல் ஆட்டி மாபூசை செய்தோர் ஆவார். |
23 |
|
|
உரை
|
|
|
|
|
315. |
அவ் வண்ணம் சுந்தரனை ஐந்து அமுதம் ஆன் உதவும் ஐந்தும் தீம் தேன் செவ்வண்ணக் கனி சாந்தச் சேறு முதல் அட்டித்துத் தேவர் தேறா மெய் வண்ணம் குளிர விரைப் புனல் ஆட்டி மா பூசை விதியால் செய்தோர் மை வண்ண வினை நீந்தி அறம் அதனால் பொருள் அடைந்து மன்னி வாழ்வார். |
24 |
|
|
உரை
|
|
|
|
|
316. |
நல்ல வகை முகமன் ஈரெட்டுள்ளும் வடித்த விரை நன்னீர் ஆட்ட வல்லவர் நூறு ஆயிரமா மேதமகப் பயன் பெறுவர் வாச நானம் எல்லவிர் குங்குமஞ் சாந்தம் இவை பலவும் அட்டித்து ஒர் எழிலார் தெய்வ முல்லை நகையா ரோடும் விரைக் கலைவை குளித்து இன்பம் மூழ்கி வாழ்வார். |
25 |
|
|
உரை
|
|
|
|
|
317. |
நன் மலர் ஒன்று ஆலவாயான் முடிமேல் சாத்தினான் நயந்து நூறு பொன் மலர் கொண்டு அயல் பதியில் பூசித்த பயன் எய்தும் புனித போகத் தன்மை தரு சுந்தரர்க்கு தூபம் ஒரு கால் கொடுப்போர் தமக்குத் தாங்கள் சொல் மனம் மெய் உறச் செய்த குற்றம் ஆயிரம் பொறுப்பன் சுருதி நாதன். |
26 |
|
|
உரை
|
|
|
|
|
318. |
திருவமுது நிவேதிப் போர் அவிழ் ஒன்றன் உகம் ஒன்றாச் சிவ லோகத்தின் மருவி நிறை போகமுடன் வைகுவர் தாம் பூலம் முக வாசம் ஈந்தோர் பொருவரிய கடவுள் ஆண்டு ஒரு நூறு கோடி சிவ புரத்து வாழ்வார் ஒரு பளித விளக்கு இடுவார் வெண்ணிறமுங் கண்ணுதலம் உடையவர் ஆவார். |
27 |
|
|
உரை
|
|
|
|
|
319. |
நறும் திரு மஞ்சனம் எடுக்க குடம் ஆட்டா மணிக் கலச நல்ல வாசம் பெறுந்தகைய தூபக்கால் தீபக்கால் மணி இன்ன பிறவும் கங்குல் தெறும் கதிர் கான் மணிமாட மதுரை நாயகர்க்கு ஈந்தோர் செய்த பாவம் வெறும் துகள் செய்து ஐம் பொறிக்கும் விருந்தூட்டும் பெரும்காம வெள்ளத்து ஆழ்வார். |
28 |
|
|
உரை
|
|
|
|
|
320. |
கயல் இசைய கண்ணுமை கோன் திருமுன்னர்ப் பல்லியமும் கல்லென்று ஆர்ப்ப இயல் இசைய பாடலினோடு ஆடல் இவை செய்விப் போர் இறுமாப்பு எய்தி புயல் இசைய வியம் கலிப்ப மூவுலகும் தொழ அரசாய் பொலம் கொம்பு ஆடும் செயல் இசைய அணங்கனையார் ஆடரங்கு கண்டு இன்பச் செல்வத்து ஆழ்வார். |
29 |
|
|
உரை
|
|
|
|
|
321. |
ஒருகால் அட்டாங்கமுடன் பஞ்சாங்கமுடன் நாத ஒண் செம் கால் வெண் குரு காலு மலர்த் தடம் சூழ் கூடல் நாயகற் பணிவோர் கோல் ஒன்று ஓச்சி பொருகாலின் வரு பரித்தேர் மன்னவராய் வரும் தம் புடைவந்து எய்தி இருகாலும் தலைவருட எக்காலும் தமை வணங்க இருப்பர் அன்றே. |
30 |
|
|
உரை
|
|
|
|
|
322. |
இத்தகைய திருவால வாயுடையான் திரு முன்னர் இயற்றும் ஓமம் மெய்த் தவ மந்திரம் தானம் இன்ன அணு அளவு எனினும் மேரு ஆகும் உத்தமமாம் இவ் இலிங்கப் பெருமை எலாம் யாவர் அளந்து உரைப்பர் வேத வித்தகரே சிறிது அறிந்தவாறு உரைத்தேம் இனிப் பலகால் விளம்பு மாறு என். |
31 |
|
|
உரை
|
|
|
|
|
323. |
இத்தலத்துக்கு ஒப்பாக ஒரு தலமும் பொன் கமலம் என்னும் இந்த உத்தம மா தீர்த்தத்துக் கொப்பது ஒரு தீர்த்தமும் மெய் உணர் ஆனந்த வித்தனைய இலங்கம் இடற்கு ஓப்பா வோர் இலிங்கமும் பார் விண்மேல் என்னும் முத்தலத்தும் இலை அந்த மூர்த்தி நாமம்கள் மொழியக் கேண்மின். |
32 |
|
|
உரை
|
|
|
|
|
324. |
கருப்பூர் சுந்தரன் பூம் கடம்பன் சுந்தரன் உட்கரவாத் தொண்டர் விருப்பூரும் கலியாண சுந்தரன் அல் அறவடிவாய் விளங்கு மேற்றுப் பொருப்பூரும் அபிராம சுந்தரன் தேன் புடைகவிழ்ப் பொன்னில் பூத்த மருப்பூசு சண்பக சுந்தரன் மகுட சுந்தரன் தான் வாழி மன்னோ. |
33 |
|
|
உரை
|
|
|
|
|
325. |
மான் மதச் சுந்தரன் கொடிய பழி அஞ்சு சுந்தரன் ஓர் மருங்கின் ஞானத் தேன் மருவி உறை சோம சுந்தரன் தேன் செவ்வழியாழ் செய்யப் பூத்த கான் மருவு தடம் பொழில் சூழ் ஆலவாய்ச் சுந்தரன் மீன் கணங்கள் சூழப் பால் மதி சூழ் நான் மாடக் கூடல் நாயகன் மதுரா பதிக்கு வேந்தன். |
34 |
|
|
உரை
|
|
|
|
|
326. |
சிர நாலோன் பரவரிய சமட்டி விச்சா புர நாதன் சீவன் முத்தி புர நாதன் பூஉலக சிவ லோ காதிபன் கன்னி புரேசன் யார்க்கும் வரம் நாளும் தரு மூல லிங்கம் என இவை முதலா மாடக் கூடல் அரன் நாமம் இன்னம் அளப்பு இலவாகும் உலகு உய்ய வவ்வி லிங்கம். |
35 |
|
|
உரை
|
|
|
|
|
327. |
பாதாள ஏழு உருவ முளைத்து எழுந்தது அவ்விலிங்கப் படிவம் தன்னுள் ஆதாரம் ஆக அமர்ந்து அறுபத்து நாலு விளையாடல் செய்த போதானந்தன் பெருமை நம் குரவன் மொழிப்படியே புகன்றோ என்றான் வேதாதி கலை தெரிந்த மலய முனி கோட்டு அறவோர் வினாதல் செய்வார். |
36 |
|
|
உரை
|
|
|
|
|
328. |
அருட் கடலே இறை விளையாட்டு அறுபத்து நான்கு என்றாய் அவை ஆனந்தப் பொருள் கடவுள் எக்காலத்து யாவர் பொருட்டு ஆடினன் எம் போதம் தேறித் தெருள் படர வரன் முறையால் செப்பு கெனக் கரம் குவித்தார் தென் பால் வெற்பில் இருப்பவனும் வினாயபடிக்கு இறை நிரம்பத் தொகுத்து விரித்து இயம்பு கின்றான். |
37 |
|
|
உரை
|
|
|
|