329.

வானவர் கோன் பழி தொலைத்த விளையாட்டும்                                 கரிசாபம் ஆய்த்த வாறும்
மீனவர் கோன் காடு எறிந்து புரம் கண்ட பெரும்                                 சிறப்பு மீன நோக்கி
ஆன தடா தகை அழல் வாய் அவதரித்து பாராண்ட                                             அருளும் ஈசன்
தானவளை மணம் செய்து முடி தரித்து மண் காத்த                                           தகைமைப் பாடும்.
1
உரை
   
330. புலி முனியும் பணி முனியும் தொழ வெள்ளி மன்றுள்                                         நடம் புரிந்த வாறும்
வலி கெழு தோள் குண்டு அகட்டுக் குறட்கு அன்னக்                         குன்று அளித்த வகையும் பின்னும்
நலி பசி நோய் கெட அன்னக் குழி அசைத்துக்                           கொடுத்து நீர் நசைக்கு வைகை
அலைபுனல் கூய் அருத்தியதும் பொன்மாலைக் எழு                                 கடலும் அழைத்த வாறும்.
2
உரை
   
331. அந்தரர் கோன் ஆதனத்தில் உறை மலயத் துவசனை                                மீண்டும் அழைத்த வாறும்
சுந்தர உக்கிர குமரன் அவதரித்த வாறும் வளை சுடர்                                        வேல் செண்டு
தந்தை இடத்து அவன் பெற்ற வாறும் அவன்                                    அவ்வடிமேல் சலதி வீறு
சிந்த விடுத்தது மகவான் முடியை வளை யெறிந்து                               இறைவன் சிதைத்த வாறும்.
3
உரை
   
332. பொன் அசலம் தனைச் செண்டால் புடைத்து நிதி                             எடுத்ததுவும் புனிதர்க்கு ஈசன்
பன்னரிய மறைப் பொருளைப் பகர்ந்ததுவும் மாணிக்கம்                                            பகர்ந்த வாறும்
தொல் நகர் மேல் நீர்க் கிழவன் வர விடுத்த கடல்                                 சுவறத் தொலைத்த வாறும்
அன்ன தனித் தொன் மதுரை நான் மாடக் கூடல்                                            நகரான வாறும்.
4
உரை
   
333. வட்டம் கொள் சடை உடைய சித்தர் விளையாடியது                                             ஓர் வனப்பும் கையில்
கட்டங்கம் தரித்த பிரான் கல்லானை கரும்பு அருந்தக்                                                  காட்டு மாறும்
உட்டங்கு வஞ்சனையால் அமணர் விடு வாரணத்தை                                                  ஒழித்த வாறும்
இட்டம் கொள் கௌரி முனம் விருத்தன் இளை யோன்                                               குழவி ஆன வாறும்.
5
உரை
   
334. செய்ய தாள் மாறி நடம் ஆடியதும் பழி அஞ்சு திறனும்                                                  தாயை
மையலால் புணர்ந்த மகன் பாதகத்தை மாற்றியது                                              மதியாது ஆசான்
தையலாள் தனை விரும்பு மாணவனை வாள் அமரில்                                                  தடிந்தவாறும்
பையரா எய்ததுவும் படிற்றமணர் விடுத்த பசுப் படுத்த                                                  வாறும்.
6
உரை
   
335. அற வேற்றுப் பரி உகைத்து மெய்க்காட்டுக் கொடுத்த                                       விளையாட்டும் காட்டுக்
சுற ஏற்றுக் கொடியரசன் தனக்கு உலவாக் கிழி                                  கொடுத்த தொடர்பும் நாய்கர்
நறவேற்ற மலர்க்குழலார் மனம் கவர்ந்து வளை பகர்ந்த                                             நலனும் மாறு
மற வேல்கண் மாதரார்க்கு அட்டமா சித்தி பெற                                             வகுத்த வாறும்.
7
உரை
   
336. சென்னி பொருட்டு எயில் வாயில் திறந்து அடைத்து                                   விடை பொறித்த செயலும் சென்னி
மன் இகல் இட்டு அமர் விளைப்ப மீனவற்கு நீர்ப்                                           பந்தர் வைத்த வாறும்
பொன் அனையாள் பொருட்டுஇ ரதவாத வினை                                    முடித்ததுவும் புகார்க்கு வேந்தன்
தன்னை அகன் குழி வீட்டித் தென்னவற்கு மற வாகை                                                  தந்த வாறும்.
8
உரை
   
337. மனக் கவலை கெட உலவா கோட்டை அடியாற்கு                                          அளித்த வகையும் மாமன்
எனக் கருணை வடிவாகி வழக்கு உரைத்து பொருள்                                          வணிகற்கு ஈந்த வாறும்
சினக்கதிர் வேல் வரகுணற்குச் சிவலோகம் காட்டியதும்                                                 திவவுக் கோலான்
தனக்கு அடிமை என விறகு திரு முடி மேல் சுமந்து                                            பகை தணித்த வாறும்.
9
உரை
   
338. அப்பாணற்கு இரு நிதியம் சேரனிடைத் திருமுகம்                                            ஈந்து அளித்த வாறும்
அப்பாணன் பாட மழை அரை இறவில் பொற்பலகை                                                 அளித்த வாறும்
அப்பாணன் மனைவி இசைப் பகை வெல்ல அண்ணல்                                          அவை அடைந்த வாறும்
அப்பாணன் ஆன் என்றோன் முலை அருத்திப் பன்றி                                           உயிர் அளித்த வாறும்.
10
உரை
   
339. வய ஏனக் குருளை களை மந்திரிகள் ஆக்கியதும் வலி                                                  உண்டாகக்
கயவாய்க்குக் குருமொழி வைத் அருளியது நாரைக்குக்                                                 கருணை நாட்டம்
தயவால் வைத்து அருண் முத்தி நல்கியதும் கூடல் நகர்                                                 தன்னைச் சித்தர்
புய நாகம் போய் வளைந்து திரு வால வாயாக்கிப்                                                 போந்த வாறும்.
11
உரை
   
340. சுந்தரன் என்று எழுதிய கூர் அம்பு எய்து செம்பியன்                                           போர் தொலைத்தவாறும்
செந்தமிழோர்க் இயற்பலகை அருளியதும் தருமிக்குச்                                              செம் பொன் பாடித்
தந்ததுவும் மாறுபடு கீரற்குக் கரை ஏற்றம் தந்தவாறும்
விந்தம் அடக்கிய முனியால் கீரன் இயல் தமிழ்                                           தெளிய விடுத்த வாறும்.
12
உரை
   
341. ஊமனால் புலவர் இகல் அகற்றியதும் இடைக்                                     காடனுடன் போய்க் கொன்றைத்
தாமனார் வட வால வாய் அமர்ந்த பரிசும் வலை                                                 சலதி வீசிப்
பூமனாய் குழலியை வேட்டு அருளியதும் வாதவூர்ப்                                                புனிதர்க்கு ஏறத்
தேம நாண் மலரடிகண் முடி சூட்டி உபதேசம் செய்த                                                  வாறும்.
13
உரை
   
342. நரிகள் பரி ஆக்கியதும் பரிகள் நரி ஆக்கியது நாகம்                                                  பூண்டோன்
அரிய திரு மேனியின் மேல் அடி சுமந்து மண் சுமந்த                                               அருளும் தென்னன்
எரி அடு வெம் சுரம் தணித்த வாறும் அமணரைக்                                             கழுவில் இட்டவாறும்
கரியது என வன்னிகிணறு லிங்கம் கூய் வணிக மகள்                                                  காத்த வாறும்.
14
உரை
   
343. எனத் தொகையால் அறுபத்து நான்கு இவற்றை நிறுத்த                                                முறை ஈறு இலாத
வினைத் தொகை ஆறு அகன்றீர் எனக் காலம் எவர்                                பொருட்டு என நீர் வினாய ஆற்றான்
மனத்து அளவில் அன்பு மடை உடைந்து ஒழுக                                           திருவாலவாயான் தாளை
நினைத்த அளவில் ஆனந்தம் பெருக விரித்து                                    உரைப்பல் என நெறியால் கூறும்.
15
உரை