தொடக்கம் |
|
|
344. |
மின் பயில் குலிசப் புத்தேள் விருத்திரா சுரனைக் கொன்ற வன் பழி விடாது பற்றக் கடம்பமா வனத்தில் எய்தி என்பு அரவு ஆரம் பூண்ட இறைவனை அருச்சித்து ஏத்திப் பின்பு அது கழிந்து பெற்ற பேற்றினை எடுத்துச் சொல்வாம். |
1 |
|
|
உரை
|
|
|
|
|
345. |
முன்னதா முகத்தில் வண்டு மூசு மந்தார் நீழல் பொன்னவிர் சுணங்கு உண் கொங்கைப் புலோமசை மணாளன் பொற்பூண் மின்னவிர்ந்து இமைப்பச் சிங்கம் சுமந்த மெல் அணைமேல் மேவி அன்ன மென் நடையா ராடு ஆடல் மேல் ஆர்வம் வைத்தான். |
2 |
|
|
உரை
|
|
|
|
|
346. |
மூவகை மலரும் பூத்து வண்டுளே முழங்கத் தெய்வப் பூவலர் கொடி பேர்ந்தன்ன பொன் அனார் கூத்தும் அன்னார் நாவலர் அமுதம் அன்ன பாடலும் நாக நாட்டுக் காவலன் கண்டு கேட்டு களிமதுக் கடலுள் ஆழ்ந்தான். |
3 |
|
|
உரை
|
|
|
|
|
347. |
பை அரா அணிந்த வேணிப் பகவனே அனைய தங்கள் ஐயன் ஆம் வியாழப் புத்தேள் ஆயிடை அடைந்தான் ஆக செய்ய தாள் வழிபாடு இன்றித் தேவர் கோன் இருந்தான் அந்தோ தையலார் மயலில் பட்டோர் தமக்கு ஒரு மதி உண்டாமோ. |
4 |
|
|
உரை
|
|
|
|
|
348. |
ஒல் எனக் குரவன் ஏக உம்பர் கோன் திருவின் ஆக்கம் புல் எனச் சிறிது குன்றப் புரந்தரன் அறிந்து இக்கேடு நல்ல தொல் குரவர் பேணா நவையினால் விளைந்தது என்னா அல்லல் உற்று அறிவன் தன்னைத் தேடுவான் ஆயினானே. |
5 |
|
|
உரை
|
|
|
|
|
349. |
அங்கு அவன் இருக்கை புக்கான் கண்டிலன் அவித்த பாசப் புங்கவர் உலகு மேனோர் பதவியும் புவன மூன்றில் எங்கணும் துருவிக் காணா எங்கு உற்றான் குரவன் என்னும் சங்கை கொள் மனத்தன் ஆகிச் சதுர் முகன் இருக்கை சார்ந்தான். |
6 |
|
|
உரை
|
|
|
|
|
350. |
துருவினன் அங்கும் காணான் திசை முகற் றொழுது தாழ்ந்து பரவி முன் பட்ட எல்லாம் பகர்ந்தனன் பகரக் கேட்டுக் குரவனை இகழ்ந்த பாவம் கொழுந்து பட்டு அருந்தும் செவ்வி வருவது நோக்கிச் சூழ்ந்து மலர் மகன் இதனைச் சொன்னான். |
7 |
|
|
உரை
|
|
|
|
|
351. |
அனைய தொல் குரவற் காணும் அளவு நீ துவட்டான் ஈன்ற தனையன் முச் சென்னி உள்ளான் தானவர் குலத்தில் வந்தும் வினையினால் அறிவான் மேலான் விச்சுவ உருவன் என்னும் இனையனைக் குருவாக் கோடி என்னலும் அதற்கு நேர்ந்தான். |
8 |
|
|
உரை
|
|
|
|
|
352. |
அழல் அவிர்ந்து அனைய செம் கேழ் அடுக்கிதழ் முளரிவாழ்க்கைத் தொழுதகு செம்மல் தன்னைத் தொழுது மீண்டு அகன்று நீங்கா விழை தகு காதல் கூர விச்சுவ உருவன் தன்னை வழிபடு குருவாக் கொண்டான் மலர் மகன் சூழ்ச்சி தேறான். |
9 |
|
|
உரை
|
|
|
|
|
353. |
கைதவக் குரவன் மாயம் கருதிலன் வேள்வி ஒன்று செய்திட அடிகள் என்னத் தேவர் கட்கு ஆக்கம் கூறி வெய் தழல் வளர்ப்பான் உள்ளம் வேறு பட்ட அவுணர்க்கு எல்லாம் உய்திற நினைந்து வேட்டான் தனக்கு மேல் உறுவது ஓரான். |
10 |
|
|
உரை
|
|
|
|
|
354. |
வாக்கினான் மனத்தால் வேறாய் மகம் செய்வான் செயலை யாக்கை நோக்கினான் ஓதி தன்னான் நோக்கினான் குலிச வேலால் தாக்கினான் தலைகள் மூன்றும் தனித்தனி பறவை ஆகப் போக்கினான் அலகை வாயில் புகட்டினான் புலவுச் சோரி. |
11 |
|
|
உரை
|
|
|
|
|
355. |
தெற்றெனப் பிரம பாவம் சீறி வந்து அமரர் வேந்தைப் பற்றலும் அதனைத் தீர்ப்பான் பண்ணவர் மரம் மேல் மண் மேல் பொற்றொடியார் மேனீர் மேல் வேண்டினர் புகுத்த லோடும் மற்றவர் இஃது யாம் தீர்க்கும் வண்ணம் யாது என்ன விண்ணோர். |
12 |
|
|
உரை
|
|
|
|
|
356. |
அப்பு இடை நுரையாய் மண்ணில் அருவருப்புவராய் அம்பொன் செப்புஇளம் கொங்கையார் பால் தீண்டுதற்கு அரிய பூப்பாய்க் கப்பு இணர் மரத்தில் காலும் பயின் அதாய் கழிக வென்றார் இப்பழி சுமந்த எங்கட்கு என் நலம் என்றார் பின்னும். |
13 |
|
|
உரை
|
|
|
|
|
357. |
கருவின் மாதர் கரு உயிர்க்கும் அளவு முறையால் கணவர் தோள் மருவி வாழ்க மண் அகழ்ந்த குழியும் அதனால் வடு ஒழிக பொருவின்ஈ இறை தோறும் மூறிப் பொலிக அரங்குறை பட்டு ஒருவினாலும் தழைக என ஒழியா நலனும் உதவினார். |
14 |
|
|
உரை
|
|
|
|
|
358. |
மாசில் கழிந்த மணியே போல் வந்த பழிதீர்ந்து இந்திரனும் தேசில் திகழத் துவட்டாத்தன் செல்வன் தன்னைத் தேவர் பிரான் வீசிக் குலிசத்து உயிர் உண்ட விழுமம் கேட்டு வெகுண்டு உயிர்த்துக் கூசிப் பழிகோள் கருதி ஒரு கொடிய வேள்வி கடிது அமைத்தான். |
15 |
|
|
உரை
|
|
|
|
|
359. |
அந்தக் குண்டத்து எரிசிகை போல் அழலும் குஞ்சி அண்ட முகடு உந்த கொடிய தூமம் போல் உயிர்த்துச் செம் கண் சினச் செந்தீச் சிந்தப் பிறை வாள் எயிறு அக்கித் திசை வான் செவிடு படநகைத்து வந்தக் கொடிய விடம் போல எழுந்தான் ஒருவாள் மறவீரன். |
16 |
|
|
உரை
|
|
|
|
|
360. |
ஈங்குவன் விருத்திரன் என்ப வார் அழல் தூங்குவன் கணைவிடு தூர நீண்டு நீண்டு ஓங்குவ ஓங்குதற்கு ஒப்ப வைகலும் வீங்குவன் அறன் இலார் வினையின் என்பவே. |
17 |
|
|
உரை
|
|
|
|
|
361. |
வீங்கு உடல் விருத்திரன் தன்னை விண்ணவர் எங்கு உற வருதுவட்டா எனும் பெயர்த் தீங்கு உறு மனத்தினோன் தேவர் கோன் உயிர் வாங்குதி பொருது என் வரவிட்டான் அரோ. |
18 |
|
|
உரை
|
|
|
|
|
362. |
மதித்துணி எயிற்றினோன் வடவை போல் சினைஇக் கொதித்து எதிர் குறுகினான் கொண்டல் ஊர்தியும் எதிர்த்தனன் களிற்றின் மேல் இமையத்து உச்சிமேல் உதித்தது ஓர் கரும் கதிர் ஒக்கும் என்னவே. |
19 |
|
|
உரை
|
|
|
|
|
363. |
அறத்தொடு பாவம் நேர்ந்து என்ன வார்த்திரு திறத்தரு மூண்டு அமர் செய்யக் கல்சிறை குறைத்தவன் தகுவன் மேல் குலிச வேலெடுத்து உறைத்திட வீசினான் உடன்று கள்வனும். |
20 |
|
|
உரை
|
|
|
|
|
364. |
இடித்தனன் கையில் ஓர் இருப்பு உலக்கையைப் பிடித்தனன் வரை எனப் பெயர்ந்து தீஎனத் துடித்தனன் சசி முலைச் சுவடு தோய் புயத் தடித்தன இந்திரன் அவசம் ஆயினான். |
21 |
|
|
உரை
|
|
|
|
|
365. |
அண்டர் ஏறு அனைய வனவச மாறிப்பின் கண்டகன் கைதவ நினைந்து இக்கள்வன் நேர் மண்டு அமர் ஆற்றுவான் வலியிலோம் எனப் புண்டர் ஈகத் தவன் உலகினில் போயினான். |
22 |
|
|
உரை
|
|
|
|
|
366. |
தாழ்ந்து தான் படுதுயர் விளம்பத் தாமரை வாழ்ந்தவன் வலாரியோடு அணைந்து மாமகள் வீழ்ந்த மார் பின்னடி வீழ்ந்து செப்பம் ஆல் சூழ்ந்து வாள் நாடானை நோக்கிச் சொல்லுவான். |
23 |
|
|
உரை
|
|
|
|
|
367. |
ஆற்றவும் பழைய உன் அங்கை வச்சிரம் மாற்றவர் உயிர் உண வலியின்று ஆதலால் வேற்று ஒரு புதியது வேண்டும் ஆல் இனிச் சாற்றுதும் அது பெறும் தகைமை கேட்டியால். |
24 |
|
|
உரை
|
|
|
|
|
368. |
தொடை அகள் மார்பனாம் தூய பாற்கடல் கடையும் நாள் அசுரரும் சுரரும் கையில் எம் படையொடு மடையன் மின் பழுது என்று அப்படை அடையவும் ததீசி பால் அடைவித்தாம் அரோ. |
25 |
|
|
உரை
|
|
|
|
|
369. |
சேட்படு நாண் அணி செல்லத் தேவரா வாள் படை அவுணரா வந்து கேட்டிலர் ஞாட் படை படை எலா ஞான நோக்கினால் வேட் படை வென்றவன் விழுங்கினான் அரோ. |
26 |
|
|
உரை
|
|
|
|
|
370. |
விழுங்கிய படை எலாம் வேறறத் திரண்டு ஒழுங்கிய தான் முதுகம் தண்டு ஒன்றியே எழும் கதிர்க் குலிசம் ஆம் அதனை எய்து முன் வழங்குவன் கருணை ஒர் வடிவம் ஆயினான். |
27 |
|
|
உரை
|
|
|
|
|
371. |
என்று மாதவன் இயம்ப உம்பர் கோன் ஒன்றும் வானவர் தம்மொடு ஒல் எனச் சென்று மாயையின் செயலை நோன்பினால் வென்ற மாதவன் இருக்கை மேவினான். |
28 |
|
|
உரை
|
|
|
|
|
372. |
அகம் மலர்ந்து அரும் தவன் அமரர்க்கு அன்பு கூர் முகம் மலர்ந்து இன்னுரை முகமன் கூறி நீர் மிக மெலிந்து எய்தினீர் விளைந்தது யாது அகம் மொழிந்திடல் என வலாரி சாற்றுவான். |
29 |
|
|
உரை
|
|
|
|
|
373. |
அடிகள் நீர் மறாத ஒன்று அதனை வேண்டி இம் முடி கொள்வான் அவரொடு முந்தினேன் அது செடி கொள் கார் இருள் உடல் அவுணர் தேய்த்து எமர் குடி எலாம் புரப்பது ஓர் கொள்கைத்து ஆயது. |
30 |
|
|
உரை
|
|
|
|
|
374. |
யாது எனின் இனைய உன் யாக்கை உள்ளது என்று ஒதலும் யாவையும் உணர்ந்த மாதவன் ஆதவன் கண்ட தாமரையின் ஆனன் அப் போது அலர்ந்து இன்னன புகல்வது ஆயினான். |
31 |
|
|
உரை
|
|
|
|
|
375. |
நாய் நமது என நரிநமது என அப் பிதாத் தாய் நமது என நமன் தனது எனப் பிணி பேய் நமது என மதிக்கும் பெற்றி போல் ஆய் நமது எனப் படும் யாக்கை யாரதே. |
32 |
|
|
உரை
|
|
|
|
|
376. |
விடம் பயில் எயிற்று அர உரியும் வீநுழை குடம் பையும் தான் எனும் கொள்கைத்தே கொலாம் நடம் பயில் கூத்தரின் நடிக்கும் ஐவர் வாழ் உடம்பையும் யான் என உரைக்கல் பாலதோ. |
33 |
|
|
உரை
|
|
|
|
|
377. |
நடுத்தயவிலார் தமை நலியத் துன்ப நோய் அடுத்த யாவரும் திரு அடைய யாக்கையைக் கொடுத்தயா அறம் புகழ் கொள்வனே எனின் எடுத்த யாக்கையின் பயன் இதனின் யாவதே. |
34 |
|
|
உரை
|
|
|
|
|
378. |
என்றனன் கரணம் ஒன்றி எழு கருத்தறிவை ஈர்ப்ப நின்றனன் பிரம நாடி நெறி கொடு கபாலம் கீண்டு சென்றனன் விமானம் ஏறிச் சேர்ந்தனன் உலகை நோன்பால் வென்றனன் துறக்கம் புக்கு விற்று இனிது இருந்தான் அம்மா. |
35 |
|
|
உரை
|
|
|
|
|
379. |
அம்முனி வள்ளல் ஈந்த அடுபடை முதுகந் தண்டைத் தெம் முனை அடுபோர் சாய்க்கும் திறல் கெழு குலிசம் செய்து கம்மிய புலவன் ஆக்கம் கரைந்து கைகொடுப்ப வாங்கி மைம் முகில் ஊர்தி ஏந்தி மின் விடு மழைபோல் நின்றான். |
36 |
|
|
உரை
|
|
|
|
|
380. |
மறுத்தவா வஞ்சப் போரால் வஞ்சித்து வென்று போன கறுத்தவாள் அவுணற் கொல்வான் கடும்பரி நெடும் தேர் நீழல் வெறுத்த மால் யானை மள்ளர் வேலை புக்கு எழுந்து குன்றம் அறுத்த வானவர் கோன் அந்த அவுணர் கோ மகனைச் சூழ்ந்தான். |
37 |
|
|
உரை
|
|
|
|
|
381. |
வானவர் சேனை மூண்டு வளைத்தலும் வடவைச் செம்தீ ஆனது வரையின் ஓங்கி அழன்று உருத்து எழுந்தால் என்னத் தானவர் கோனும் மானம் தலைக் கொள எழுந்து பொங்கிச் சேனையும் தானும் மூண்டு சீறி நின்று அடுபோர் செய்வான். |
38 |
|
|
உரை
|
|
|
|
|
382. |
அடுத்தனர் இடி யேறு என்ன ஆர்த்தனர் ஆக்கம் கூறி எடுத்தனர் கையில் சாபம் எறிந்தனர் சிறு நாண் ஓசை தொடுத்தனர் மீளி வாளி தூர்த்தனர் குந்த நேமி விடுத்தனர் வானோர் சேனை வீரர் மேல் அவுணவீரர். |
39 |
|
|
உரை
|
|
|
|
|
383. |
கிட்டினர் கடகக் கையால் கிளர் வரை அனைய திண்தோள் கொட்டினர் சாரி மாறிக் குதித்தனர் பலகை நீட்டி முட்டினர் அண்டம் விள்ள முழங்கினர் வடிவாள் ஓச்சி வெட்டினர் அவுணச் சேனை வீரரை வான வீரர். |
40 |
|
|
உரை
|
|
|
|
|
384. |
வீழ்ந்தனர் தோளும் தாளும் விண்டனர் சோரி வெள்ளத் தாழ்ந்தனர் போரும் தாரும் அகன்றன அகன்ற மார்பம் போழ்ந்தனர் சிரங்கள் எங்கும் புரண்டனர் கூற்றூர் புக்கு வாழ்ந்தனர் அடுபோர் ஆற்றி வஞ்சகன் சேனைமள்ளர். |
41 |
|
|
உரை
|
|
|
|
|
385. |
தாளொடு சுழலும் மற்றார் தலையொடு முடியும் அற்றார் தோளோடு வீர அற்றார் தும்பை யொடு அமரு மற்றார் வாளொடு கரமும் அற்றார் மார்பொடு கவசம் அற்றார் கோளோடும் ஆண்மை அற்றார் குறை படக் குறையா மெய்யர். |
42 |
|
|
உரை
|
|
|
|
|
386. |
தொக்கன கழுகு சேனம் சொரி குடர் பிடுங்கி ஈர்ப்ப உக்கன குருதி மாந்தி ஒட்டல் வாய் நெட்டைப் பேய்கள் நக்கன பாடல் செய்ய ஞாட்பினுட் கவந்தம் ஆடப் புக்கன பிணத்தின் குற்றம் புதைத்த பார் சிதைத்த தண்டம். |
43 |
|
|
உரை
|
|
|
|
|
387. |
இவ்வகை மயங்கிப் போர் செய்து இறந்தவர் ஒழிய பின்னும் கைவ்வகை அடுபோர் ஆற்றிக் கரை இறந்தார் கண் மாண்டார் அவ்வகை அறிந்து வானத்து அரசனும் அவுணர் வேந்தும் தெய்வதப் படைகள் வீசிச் சீறி நின்று அடுபோர் செய்வார். |
44 |
|
|
உரை
|
|
|
|
|
388. |
அனல் படை விடுத்தான் விண்ணோர் ஆண்டகை அதனைக் கள்வன் புனல் படை விடுத்துச் சீற்றம் தனித்தனன் புனிதன் காற்றின் முனைப் படை விடுத்தான் வெய்யோன் முழங்குகால் விழுங்குநாகச் சினப்படை தொடுத்து வீசி விலக்கினான் தேவர் அஞ்ச. |
45 |
|
|
உரை
|
|
|
|
|
389. |
நாகமாப் படை விட்டு ஆர்த்தான் நாகர்கோன் உவணச் செல்வன் வேகமாப் படையை வீசி விலக்கினான் தகுவார் வேந்தன் மோகமாப் படையைத் தொட்டு முடுக்கினான் முனைவன் அன்ன தேகமாப் படிறன் ஞானப் படை விடுத்து இருள்போல் நின்றான். |
46 |
|
|
உரை
|
|
|
|
|
390. |
மட்டிடு தாரான் விட்ட வானவப் படைக்கு மாறு விட்டு உடன் விலக்கி வேறும் விடுத்திடக் கனன்று வஞ்சன் முட்டிட மான வெம் கான் மூட்டிட கோபச் செந்தீச் சுட்டிடப் பொறாது பொங்கிச் சுராதிபன் இதனைச் செய்தான். |
47 |
|
|
உரை
|
|
|
|
|
391. |
வீங்கிருள் ஒதுங்க மேக மின் விதிர்த்து என்னக் கையில் ஓங்கிரும் குலிச வேலை ஒல் என விதிர்த்த லோடும் தீங்குளம் போன்று இருண்ட திணி உடல் கள்வன் அஞ்சி வாங்கிரும் கடலில் வீழ்ந்தான் மறைந்தமை நாகம் ஒத்தான். |
48 |
|
|
உரை
|
|
|
|
|
392. |
ஒக்க இந்திரனும் வீழ்ந்தான் உடல் சின உருமேல் அன்றான் புக்கு இடம் தேடிக் காணான் புண்ணிய முளரி அண்ணல் பக்கம் வந்து அனைய செய்தி பகர்ந்தனன் பதகன் மாளத் தக்கது ஓர் சூழ்ச்சி முன்னிச் சராசரம் ஈன்ற தாதை. |
49 |
|
|
உரை
|
|
|
|
|
393. |
விந்த வெற்பு அடக்கினாற்கு ஈது உரை என விடுப்ப மீண்டு சந்த வெற்பு அடைந்தான் வானோர் தலைவனை முகமன் கூறிப் பந்த வெற்பு அறுத்தான் வந்தது எவன் எனப் பறைகள் எல்லாம் சிந்த வெற்பு அறுத்தான் வந்த செயல் எலாம் முறையால் செப்பி. |
50 |
|
|
உரை
|
|
|
|
|
394. |
யாவையும் உணர்ந்த எந்தைக்குயான் எடுத்து உணர்த்து கின்ற தாவா என் அமருக்கு ஆற்றாது ஆழி புக்கு ஒளித்தான் ஆவி வீவதும் அவனால் வந்த விழும் நோய் எல்லாம் இன்று போவதும் கருதி நும்பால் புகுந்தனம் அடிகள் என்றான். |
51 |
|
|
உரை
|
|
|
|
|
395. |
என்றவன் இடுக்கண் தீர்ப்பான் இகல் புரி புலன்கள் ஐந்தும் வென்றவன் நெடியோன் தன்னை விடையவன் வடிவம் ஆக்கி நின்றவன் அறிவானந்த மெய்ம்மையாய் நிறைந்த வெள்ளி மன்றவள் ஊழிச் செந்தீ வடிவினை மனத்துள் கொண்டான். |
52 |
|
|
உரை
|
|
|
|
|
396. |
கைதவன் கரந்து வைகும் கடலை வெற்பு அடக்கும் கையில் பெய் உழுந் எல்லைத் தாக்கிப் பருகினான் பிறைசேர் சென்னி ஐயனது அருளைப் பெற்றார்க்கு அதிசயம் இது என் கொல் மூன்று வையமும் முத்தொழிலும் செய்ய வல்லவர் அவரே அன்றோ. |
53 |
|
|
உரை
|
|
|
|
|
397. |
அறம் துறந்து ஈட்டுவார் அரும் பெறல் செல்வம் போல வறந்தன படுநீர்ப் பௌவம் வடவை கட்புலப் பட்டாங்கு நிறைந்த செம் மணியும் அத்தீ நீண்டு எரி சிகைபோல் நீண்டு சிறந்து எழு பவளக் காடும் திணி இருள் விழுங்கிற்று அம்மா. |
54 |
|
|
உரை
|
|
|
|
|
398. |
பணிகளின் மகுட கோடிப் பரப்பு என விளங்கிப் பல் காசு அணிகலப் பேழை பேழ்வாய் திறந்தனைத்து ஆகி ஒன்பான் மணி கிடந்து இமைக்கும் நீரான் மகபதி வேள்விக் காவாய்த் திணி உடல் அவுணன் பட்ட செங்களம் அனையது அன்றே. |
55 |
|
|
உரை
|
|
|
|
|
399. |
வறந்த நீர் தன்னின் மின்னு வாள் விதிர்த்து என்னப் பன்மீன் எறிந்தன நெளிந்த நாகம் இமைத்தன வளையு முத்தும் செறிந்தன கரந்த யாமை சேர்ந்த பல் பண்டம் சிந்தி முறிந்தன வங்கம் கங்க முக்கின சிறு மீன் எல்லாம். |
56 |
|
|
உரை
|
|
|
|
|
400. |
செருவினில் உடைந்து போன செம்கண் வாள் அவுணன் அங்கோர் அருவரை முதுகில் கார் போல் அடைந்து வான் நாடர் செய்த உருகெழு பாவம் தானோர் உரு எடுத்து இருந்து நோற்கும் பரிசு என நோற்றான் இன்னும் பரிபவ விளைவு பாரான். |
57 |
|
|
உரை
|
|
|
|
|
401. |
கைதவ நோன்பு நோற்கும் கள்வனைக் கண்டு வானோர் செய்தவ மனையான் யாணர் வச்சிரஞ் சீரிப் பான் போல் பொய்தவன் தலையைக் கொய்தான் புணரிவாய் நிறையச் சோரி பெய்தது வலாரி தன்னைப் பிடித்தது பிரமச் சாயை. |
58 |
|
|
உரை
|
|
|
|
|
402. |
உம் எனும் மார்பைத் தட்டு உருத்தெழு அதிர்க்கும் போர்க்கு வம் எனும் வாய் மடிக்கும் வாள் எயிறு அதுக்கும் வீழும் கொம் என ஓடும் மீளும் கொதித்து அழும் சிரிக்கும் சீறும் இம் எனும் அளவு நீங்காது என் செய்வான் அஞ்சினானே. |
59 |
|
|
உரை
|
|
|
|
|
403. |
விரைந்து அரன் திசை ஓர் வாவி வீழ்ந்து ஒரு கமல நூலுள் கரந்தனன் மகவான் இப்பால் கற்பக நாடு புல்லென்று இருந்ததால் இருக்கும் எல்லை இம்பரின் நகுடன் என்போன் அரும் பரி மேத வேள்வி ஆற்றினான் ஆற்றும் எல்லை. |
60 |
|
|
உரை
|
|
|
|
|
404. |
அரசு இலா வறுமை நோக்கி அவனை வான் நாடர் யாரும் விரை செய்தார் மகுடம் சூட்டி வேந்தனாக் கொண்டார் வேந்தாய் வருபவன் சசியை ஈண்டுத் தருகென மருங்கு உளார் போய்த் திரை செய் நீர் அமுத னாட்குச் செப்ப அக் கற்பின் மிக்காள். |
61 |
|
|
உரை
|
|
|
|
|
405. |
பொன் உயிர்த்து அனைய காட்சிப் புண்ணிய குரவன் முன்போய் மின் உயிர்த்து அனையாள் நின்று விளம்புவாள் இது என் கொல் கெட்டேன் என்னுயிர்த் துணைவன் ஆங்கே இருக்க மற்று ஒருவன் என்னைத் தன் உயிர்த் துணையாக் கொள்கை தருமமோ அடிகள் என்றாள். |
62 |
|
|
உரை
|
|
|
|
|
406. |
மாதவர் எழுவர் தாங்க மா மணிச் சிவிகை மீது போதரின் அவனே வானோர் புரந்தரன் அவனே உன்றன் காதலன் ஆகும் என்றான் கை தொழுது அதற்கு நேர்ந்தம் மேதகு சிறப்பால் இங்கு வருக என விடுத்தாள் தூது. |
63 |
|
|
உரை
|
|
|
|
|
407. |
மனிதரின் மகவான் ஆகி வருபவன் சிவிகை தாங்கும் புனித மாதவரை எண்ணான் புன் கண் நோய் விளைவும் பாரான் கனிதரு காமம் தூய்க்கும் காதலால் விரையச் செல்வான் இனிது அயிராணி பால் கொண்டு ஏகுமின் சர்ப்ப என்றான். |
64 |
|
|
உரை
|
|
|
|
|
408. |
சர்ப்பம் ஆகென முன்கொம்பு தாங்கி முன் நடக்கும் தென்றல் வெற்பனாம் முனிவன் சாபம் விளைத்தனன் விளைத்த லோடும் பொற்ப மாசுணமே ஆகிப் போயினான் அறிவிலாத அற்பர் ஆனவற்குச் செல்வம் அல்லது பகை வேறு உண்டோ. |
65 |
|
|
உரை
|
|
|
|
|
409. |
பின்னர்த் தம் குரவன் ஆன பிரானடி பணிந்து வானோர் பொன்னகர் வேந்தன் இன்றிப் புலம் படை கின்ற தைய என்னுலங் குரவன் போய் அவ் இலஞ்சியுள் ஒளித்தாற் கூவித் தன் உரை அறிந்து போந்த சதமகற் கொண்டு மீண்டான். |
66 |
|
|
உரை
|
|
|
|
|
410. |
கொடும் பழி கோட் பட்டான் தன் குரவனை வணங்கி என்னைச் சுடும் பழி கழிவது எங்கென் சொல் எனத் தொலைவது ஓர்ந்தான் அடும் பழி மண் மேல் அன்றி அறாது நீ வேட்டைக் கென்னப் படும் பழி இதனைத் தீர்ப்பான் பார் மிசை வருதி என்றான். |
67 |
|
|
உரை
|
|
|
|
|
411. |
ஈசனுக்கு இழைத்த குற்றம் தேசிகன் எண்ணித் தீர்க்கும் தேசிகற்கு இழைத்த குற்றம் குரவனே தீர்ப்பது அன்றிப் பேசுவது எவனோ தன்பால் பிழைத்த காரணத்தால் வந்த வாசவன் பழியைத் தீர்ப்பான் குரவனே வழியும் கூற. |
68 |
|
|
உரை
|
|
|
|
|
412. |
வாம்பரி உகைத்துத் தன்னால் வழிபடு குரவன் வானோர் தாம் பரிவோடும் சூழத் தராதலத்து இழிந்து செம்பொன் காம்பரி தோளி பங்கன் கயிலை மால் வரையைத் தாழ்ந்து தேம் பரி அலங்கல் மார்பன் தென்திசை நோக்கிச் செல்வான். |
69 |
|
|
உரை
|
|
|
|
|
413. |
கங்கைமுதல் அளவு இறந்த தீர்த்தம் எலாம் போய் படிந்து காசி காஞ்சி அம் கனக கேதார முதல் பதிகள் பலபணிந்து அவுணன் கொன்ற பொங்கு பழி விடாது அழுங்கி அரா உண்ண மாசுண்டு பொலிவு மாழ்கும் திங்களனை யான் கடம்ப வனத்து எல்லை அணித்தாகச் செல்லு மேல்வை. |
70 |
|
|
உரை
|
|
|
|
|
414. |
தொடுத்த பழி வேறாகி விடுத்து அகன்ற இந்திரன் தான் சுமந்தபாரம் விடுத்தவன் ஓத்து அளவு இறந்த மகிழ்வு எய்தி தேசிகன் பால் விளம்பப் பாசம் கெடுத்தவன் மா தலம் புனித தீர்த்தம் உள இவண் நமக்குக் கிடைத்தல் வேண்டும் அடுத்து அறிக எனச் சிலரை விடுத்து வேறா நிலை நின்று அப்பால் செல்வான். |
71 |
|
|
உரை
|
|
|
|
|
415. |
அருவி படிந்து அருவி எறி மணி எடுத்துப் பாறையில் இட்டு அருவி நீர் தூய்க் கருவிரல் கொய்து அலர் சூட்டிக் கனியூட்டி வழிபடுவ கல்லா மந்தி ஒரு துறையில் யாளிகரி புழைக்கை முகந்து ஒன்றற்கு ஒன்று ஊட்டி ஊட்டிப் பருகுவன புலிமுலைப் பால் புல்வாய்க்கு அன்று அருத்தியிடும் பசிநோய்தீர. |
72 |
|
|
உரை
|
|
|
|
|
416. |
நெளி அராக் குருளை வெயில் வெள்ளிடையில் கிடந்து உயங்கி நெளியப் புள்ளேறு ஒளி அறாச் சிறை விரித்து நிழல் பரப்பிப் பறவை நோய் உற்றதே கொல் அளியவாய் அச்சோ என்று ஓதி அயன் மடமந்தி அருவி ஊற்றும் துளிய நீர் வளைத்தசும்பின் முகந்து எடுத்து கருங்கையினால் சொரிவ மாதோ. |
73 |
|
|
உரை
|
|
|
|
|
417. |
பட அரவ மணிஈன்று நொச்சிப் பாசிலை அன்ன பைந்தாள் மஞ்ஞை பெடை தழுவி மணம் செய்ய மணவறையில் விளக்கு இடுவ பெரும் தண் கானத் அடர் சிறை மென் குயில் ஓ வென்று ஆர்ப்ப மடக் கிள்ளை எழுத்து ஐந்தும் ஓசை தொடர்பு பெற உச்சரிப்ப குருமொழி கேட்டாங்கு உவப்ப தொடிக் கண் பூவை. |
74 |
|
|
உரை
|
|
|
|
|
418. |
இன்ன விலங்கொடு புள்ளின் செயற்கு அரிய செயல் நோக்கி இறும்பூது எய்திப் பொன் நகரான் புளகம் உடல் புதைப்ப நிறை மகிழ்ச்சி உளம் புதைப்பப் போவான் அன்ன பொழுது ஒற்றுவர் மீண்டு அடி வணங்கி இன் சுவைப் பால் அருந்துவான் முன் பின் அரிய தேன் சொரிந்து ஆங்கு உவகை மேல் பேரு வகை பெருகச் சொல்வர். |
75 |
|
|
உரை
|
|
|
|
|
419. |
எப்புவனத்திலும் என்றும் கண்டு அறியா அதிசயமும் எண்ணுக்கு எய்தாத் திப்பியமும் இக்கடம்ப வனத்து இன்று கண்டு உவகை திளைத்தேம் அம்கண் வைப்பு அனைய ஒருபுனித வாவி மருங்கு ஒரு கடம்ப வனத்தின் நீழல் ஒப்பு இல் ஒளியாய் முளைத்த சிவலிங்கம் ஒன்று உளது என்று உரைப்பக் கேட்டான். |
76 |
|
|
உரை
|
|
|
|
|
420. |
செவித் துளையில் அமுது ஒழுக்கும் உழையரொடும் வழிக்கொண்டு சென்னிமேல் கை குவித்து உள மெய் மொழி கரணம் குணம் மூன்றும் ஒன்றித் தன் கொடிய பாவம் அவித்து உள் அயர் ஒழிக்க முளைத்து அருள் குறிமேல் அன்பு ஈர்ப்ப அடைவான் கானம் கவித்துள பூம் தடம் படிந்து கடம்பவனத்து உழை நுழைந்தான் கவலை தீர்வான். |
77 |
|
|
உரை
|
|
|
|
|
421. |
அருவாகி உருவாகி அருருவம் கடந்து உண்மை அறிவானந்த உருவாகி அளவு இறந்த உயிராகி அவ் உயிர்க்கு ஓர் உணர்வாய் பூவின் மருவாகிச் சராசரங்கள் அகிலமும் தன் இடை உதித்து மடங்க நின்ற கருவாகி முளைத்த சிவக் கொழுந்தை ஆயிரம் கண்ணும் களிப்பக் கண்டான். |
78 |
|
|
உரை
|
|
|
|
|
422. |
கண்டு விழுந்து எழுந்து விழி துளிப்ப எழு களிப்பு எனும் கடலில் ஆழ்ந்து விண்டு மொழி தழுதழுப்ப உடல் பனிப்ப அன்பு உருவாய் விண்ணோர் வேந்தன் அண்டர் பிரான் அருச்சனைக்கு வேண்டும் உபகரணம் எலாம் அகல்வான் எய்திக் கொண்டு வரச் சிலரை விடுத்து அவர் ஏகப் பின்னும் ஒரு குறைவு தீர்ப்பான். |
79 |
|
|
உரை
|
|
|
|
|
423. |
தம் குடிமைத் தச்சனை ஓர் விமானம் அமைத்திட விடுத்தத் அத் தடத்தின் பால் போய் அம் கணனைக் கடிது அருச்சித்திட நறிய மலர் கிடையாது அயர்வான் அந்தச் சங்கு எறி தண் திரைத் தடத்தில் அரன் அருளால் பல பரிதி சலதி ஒன்றில் பொங்கு கதிர் பரப்பி முளைத்தால் என்னப் பொன் கமலம் பூப்பக் கண்டான். |
80 |
|
|
உரை
|
|
|
|
|
424. |
அன்பு தலை சிறப்ப மகிழ்ந்து ஆடினான் காரணத்தால் அதற்கு நாமம் என்பது பொன் தாமரை என்று ஏழ் உலகும் பொலிக என இசைத்துப் பின்னும் மின் பதுமத் தடம் குடைந்து பொன் கமலம் கொய்து எடுத்து மீண்டு நீங்காத் தன் பிணி நோய் தணிய முளைத்து எழுந்த முழு முதல் மருந்தின் தன் பால் வந்து. |
81 |
|
|
உரை
|
|
|
|
|
425. |
மொய்த்த புனக் காடு எறிந்து நிலம் திருத்தி வரும் அளவின் முளைத்த ஞான வித்து அனைய சிவக் கொழுந்தின் திரு முடி மேல் பரிதிகர மெல்லத் தீண்டச் சித்தம் நெகிழ்ந்து இந்திரன் தன் வெண் கவிகைத் திங்கள் நிழல் செய்வான் உள்ளம் வைத்தனன் அப் போது இரவி மண்டலம் போல் இழிந்தது ஒரு மணி விமானம். |
82 |
|
|
உரை
|
|
|
|
|
426. |
கிரி எட்டும் என மழையைக் கிழித்து எட்டும் புழைக்கை மதிக் கீற்றுக் கோட்டுக் கரி எட்டும் சினம் அடங்க நால் எட்டு எட்டு எட்டுக் கணமும் தாங்க விரி எட்டுத் திசை பரப்ப மயன் நிருமித்து உதவிய அவ் விமானம் சாத்தி அரி எட்டுத் திரு உருவப் பரஞ்சுடரை அருச்சிப்பான் ஆயினானே. |
83 |
|
|
உரை
|
|
|
|
|
427. |
முந்த அமர் உலகு அடைந்து பூசனைக்கு வேண்டுவன முழுதும் தேர்வார் வந்து தரு ஐந்து ஈன்ற பொன் ஆடை மின் உமிழ் மணிப் பூண் வாசச் சந்தன மந்தாகினி மஞ்சனம் தூபம் திருப் பள்ளித் தாமம் தீபம் அந்தம் இலா ஐந்து நறும் கனி தீம் தேன் திரு அமுதம் அனைத்தும் தந்தார். |
84 |
|
|
உரை
|
|
|
|
|
428. |
தெய்வத் தாமரை முளைத்த தடம் படிந்து பவம் தொலைக்கும் திரு நீறு ஆடித் சைவத் தாழ் வடம் தாங்கி அன்பு உருவாய் அருளுரு வந்தான் ஆய்த் தோன்றும் பைவைத்த ஆடு அரவு ஆர்த்த பசுபதியை அவன் உரைத்த பனுவல் ஆற்றின் மெய் வைத்து ஆதரம் பெருக அருச்சனை செய்து ஆனந்த வெள்ளத்து ஆழ்ந்தான். |
85 |
|
|
உரை
|
|
|
|
|
429. |
பாரார அட்டாங்க பஞ்சாங்க விதிமுறையால் பணிந்து உள் வாய் மெய் நேராகச் சூழ்ந்து உடலம் கம்பித்துக் கும்பிட்டு நிருத்தம் செய்து தார் ஆரும் தொடை மிதப்ப ஆனந்த கண்ணருவி ததும்ப நின்றன் பாராமை மீக் கொள்ள அஞ்சலித்துத் துதிக்கின்றான் அமரர் கோமான். |
86 |
|
|
உரை
|
|
|
|
|
430. |
அம் கணா போற்றி வாய்மை ஆரணா போற்றி நாக கங்கணா போற்றி மூல காரணா போற்றி நெற்றிச் செங்கணா போற்றி ஆதி சிவ பரஞ் சுடரே போற்றி எங்கள் நாயகனே போற்றி ஈறு இலா முதலே போற்றி. |
87 |
|
|
உரை
|
|
|
|
|
431. |
யாவையும் படைப்பாய் போற்றி யாவையும் துடைப்பாய் போற்றி யாவையும் ஆனாய் போற்றி யாவையும் அல்லாய் போற்றி யாவையும் அறிந்தாய் போற்றி யாவையும் மறந்தாய் போற்றி யாவையும் புணர்ந்தாய் போற்றி யாவையும் பிரிந்தாய் போற்றி. |
88 |
|
|
உரை
|
|
|
|
|
432. |
இடர் உறப் பிணித்த வந்தப் பழியினின்று என்னை ஈர்த்து உன் அடி இணைக்கு அன்பன் ஆக்கும் அருள் கடல் போற்றி சேல்கண் மடவரல் மணாள போற்றி கடம்பமா வனத்தாய் போற்றி சுடர் விடு விமான மேய சுந்தர விடங்க போற்றி. |
89 |
|
|
உரை
|
|
|
|
|
433. |
பூசையும் பூசைக்கு ஏற்ற பொருள்களும் பூசை செய்யும் நேசனும் பூசை கொண்டு நியதியின் பேறு நல்கும் ஈசனும் ஆகிப் பூசை யான் செய்தேன் என்னும் என் போத வாசனை அதுவும் ஆன மறைமுதல் அடிகள் போற்றி. |
90 |
|
|
உரை
|
|
|
|
|
434. |
என்ன நின்று ஏத்தினானை இன்னகை சிறிது தோன்ற முன்னவன் அடியார் எண்ணம் முடிப்பவன் அருட்கண் நோக்கால் உன்னது வேட்கை ஆதி இங்கு உரை என விரையத் தாழ்ந்து சென்னி மேல் செம் கை கூப்பித் தேவர் கோன் இதனை வேண்டும். |
91 |
|
|
உரை
|
|
|
|
|
435. |
ஐய நின் இருக்கை எல்லைக்கு அணியன் ஆம் அளவின் நீங்கா வெய்ய என் பழியினோடு மேலை நாள் அடியேன் செய்த மையல் வல் வினையும் மாய்ந்து உன் மலரடி வழுத்திப் பூசை செய்யவும் உரியன் ஆனேன் சிறந்த பேறு இதன் மேல் யாதோ. |
92 |
|
|
உரை
|
|
|
|
|
436. |
இன்ன நின் பாதப் போதே இவ்வாறே என்றும் பூசித்து உன் அடியாருள் யானும் ஓர் அடித் தொண்டன் ஆவேன் அன்னதே அடியேன் வேண்டத் தக்கது என்று அடியில் வீழ்ந்த மன்னவன் தனக்கு முக்கண் வரதனும் கருணை பூத்து. |
93 |
|
|
உரை
|
|
|
|
|
437. |
இருதுவில் சிறந்த வேனிலும் மதி ஆறு இரண்டில் சிறந்த வான் தகரும் பொருவிறார் அகையில் சிறந்த சித்திரையும் திதியினில் சிறந்த பூரணையும் மருவு சித்திரையில் சித்திரை தோறும் வந்து வந்து அருச்சித்தோர் வருடம் தெரியும் நாள் முந்நூற்று அறுபதும் ஐந்தும் செய்த அர்ச்சனைப் பயன் எய்தும். |
94 |
|
|
உரை
|
|
|
|
|
438. |
துறக்க நாடு அணைந்து சுத்த பல் போகம் துய்த்து மேல் மல பரி பாகம் பிறக்க நான் முகன் மால் முதல் பெரும் தேவர் பெரும் பதத்து ஆசையும் பிறவும் மறக்க நாம் வீடு வழங்குதும் என்ன வாய் மலர்ந்து அருளி வான் கருணை சிறக்க நால் வேதச் சிகை எழு அநாதி சிவபரம் சுடர் விடை கொடுத்தான். |
95 |
|
|
உரை
|
|
|
|
|
439. |
மூடினான் புளகப் போர்வையால் யாக்கை முடிமிசை அஞ்சலிக் கமலம் சூடினான் வீழ்ந்தான் எழுந்து கண் அருவி
துளும்பினான் பன் முறை துதி செய்து
ஆடினான் ஐயன் அடி பிரிவு ஆற்றாது அஞ்சினான் அவன் அருள் ஆணை நாடினான் பிரியா விடை கொடு துறக்கம் நண்ணினான் விண்ணவர் நாதன். |
96 |
|
|
உரை
|
|
|
|
|
440. |
வந்த அர மங்கையர் கவரி மருங்கு வீச மந்தார் கற்பகப் பூமாரி தூற்ற அந்தர நாட்டவர் முடிகள் அடிகள் சூட அயிராணி முலைத் தடம் தோய்ந்து அகலம்திண்தோள் விந்தம் எனச் செம்மாந்து விம்முகாம் வெள்ளத்துள் உடல் அழுந்த உள்ளம் சென்று சுந்தர நாயகன் கருணை வெள்ளத்து ஆழ்ந்து தொன் முறையின் முறை செய்தான் துறக்க நாடன். |
97 |
|
|
உரை
|
|
|
|