தொடக்கம் |
|
|
441. |
மட்டு அவிழும் கொன்றைச் சடையான் மகவானைத் தொட்ட பழியின் தொடக்கு அறுத்த வாறு ஈது பட்ட மத வேழம் பரனை பராய் முனிவன் இட்ட கொடும் சாபம் நீத்து ஏகியவாறு ஓதுவாம். |
1 |
|
|
உரை
|
|
|
|
|
442. |
கரு வாசனை கழிக்கும் காசி நகர் தன்னில் துருவாச வேத முனி தொல் ஆகமத்தின் பெரு வாய்மை ஆற்றன் பெயர் விளங்க ஈசன் ஒருவா இலிங்க ஒளி உருவம் கண்டான். |
2 |
|
|
உரை
|
|
|
|
|
443. |
இன்புற்று அருச்சனை செய்து ஏத்துவான் அவ் வேலை அன்புக்கு எளியன் அருளால் திருமுடி மேல் மின் பொன் கடிக் கமலப் போது ஒன்று வீழ்த்திடலும் தன் பொன் கரகமலப் போது அலர்த்தித் தாங்கினான். |
3 |
|
|
உரை
|
|
|
|
|
444. |
தாங்கிக் கண் சென்னி தடமார் பணைத்து உடலம் வீங்கித் தலை சிறந்த மெய் உவகை மேற்கொள்ள நீங்கிக் கழிந்த கருணை நிதி அனையான் பூம் கற்பக நாட்டில் போகின்றான் அவ்வேலை. |
4 |
|
|
உரை
|
|
|
|
|
445. |
சங்கு அலறச் செம் களத்துத் தான வரைத் தேய்த்து விறல் கொங்கு அலர் தார் வேய்ந்து அமரர் கோமான் தன் கோ நகரில் செம் கண் அமரர் பெரும் சேனைக் கடல் கலிப்ப மங்கலப் பல்லாண்டு மறை முழங்க வந்து அணை வான். |
5 |
|
|
உரை
|
|
|
|
|
446. |
எத்திக்கும் கல் என்று இயம் கலிப்ப ஏந்திழையார் தித்தித்து அமுது ஒழுக்கும் கீதம் செவி மடுப்பப் பத்திக் கவரிநிரை தானைப் படு கடலில் தத்திப் புரளும் திரை போல் தலை பனிப்ப. |
6 |
|
|
உரை
|
|
|
|
|
447. |
அங்கு அக் கடலின் நெடும் கூம்பக நிமிர்ந்த வங்கத் தலை உய்க்கும் மீகான் தனை மானத் திங்கள் குடை நிழற்ற தீம்தே மதங் கவிழ்க்கும் வெங்கற் களிற்றின் மிசைப் பவனி போந்து அணைந்தான். |
7 |
|
|
உரை
|
|
|
|
|
448. |
அத்தலை விண் நாடர் அருகு அணைந்து வேறு வேறு தத்தம் மனக்கிசைந்த கையுறைகள் தாம் கொடுத்துக் கைத் தலங்கள் கூப்பினார் கண்டார் கடவுளரில் உத்தமனை அர்ச்சித்துப் போந்த முனி உத்தமனும். |
8 |
|
|
உரை
|
|
|
|
|
449. |
தீங்கு அரிய ஆசி மொழி செப்பித் தன் செம் கரத்தின் நீங்கு அரிய தாமரையை நீட்டினான் மற்று அதனைத் தாங்கு அரிய செல்வத் தருக்கால் ஓர் கை ஓச்சி வாங்கி மத யானையின் மேல் வைத்தான் மதி இல்லான். |
9 |
|
|
உரை
|
|
|
|
|
450. |
கீறிக் கிடந்த மதி அனைய கிம்புரி கோட்டு ஊறிக் கடங் கவிழ்க்கும் மால் யானை உச்சியின் மேல் நாறிக் கிடந்த நறு மலரை வீழ்த்தி உரல் சீறிக் கிடந்த நெடும் தாளால் சிதைத்தது அன்றே. |
10 |
|
|
உரை
|
|
|
|
|
451. |
கண்டான் முனி காமன் காய்ந்தான் நுதல் கண் போல் விண்டார் அழல் சிதற நோக்கினான் வெம் கோபம் கொண்டான் அமரர் ஒதுங்கக் கொதித்து ஆலம் உண்டான் என நின்று உருத்தான் உரைக்கிறான். |
11 |
|
|
உரை
|
|
|
|
|
452. |
புள்ளிய தோல் ஆடை புனைந்து அரவம் பூண் அணிந்த வெள்ளிய செம் கண் விடையான் அடிக் கமலம் உள்ளிய மெய்யன் புடையார் உரு வருத்துத் தள்ளிய செல்வத் தருக்கினா என் செய்தாய். |
12 |
|
|
உரை
|
|
|
|
|
453. |
கதிர்த்தார் முடி அமரர் கையுறையே நன்கு மதித்தாய் எம் ஈசன் மதி முடி மேல் சாத்தும் பொதித் தாது அவிழ் மலரைப் போற்றாது வாங்கி மிதித்து ஆனை சிந்த அதன் மேல் வைத்தாய் பேதாய். |
13 |
|
|
உரை
|
|
|
|
|
454. |
வண்டு ஊரும் தண் துழாய் மாயோன் இறுமாப்பும் புண்டரிகப் போது உறையும் புத்தேள் இறு மாப்பும் அண்டர் தொழ வாழும் உன் இறுமாப்பும் ஆலாலம் உண்டவனைப் பூசித்த பேறு என்று உணர்ந்திலை ஆல். |
14 |
|
|
உரை
|
|
|
|
|
455. |
சேட்டானை வானவ நின் சென்னி செழியரில் ஓர் வாள் தானை வீரன் வளையால் சிதறுக நின் கோட்டான நால் கோட்டு வெண் நிறத்த குஞ்சரமும் காட்டு யானை ஆக என விட்டான் கடும் சாபம். |
15 |
|
|
உரை
|
|
|
|
|
456. |
சவித்த முனி பாதம் தலைக் கொண்டு செம்கை குவித்து அமரர் தம்கோன் குறை இரப்பார் அரைய அவித்த பொறியாய் எம் அரசும் கால் தள்ளும் செவித் தறுகண் வேழமும் தீங்கு உடையர் அன்றோ. |
16 |
|
|
உரை
|
|
|
|
|
457. |
அத்தகைய நீரால் சபித்தீர் அடி கேள் மற்று இத் தகைய சாபம் இனி விடுமின் என்று இரந்து கைத்தலங்கள் கூப்பிக் கரைந்தார்க்கு இரங்கி அருள் வைத்த முனி பிறிது சாபம் வகுக்கின்றான். |
17 |
|
|
உரை
|
|
|
|
|
458. |
சிந்தனை வாக்கிற்கு எட்டாச் சிவன் அருள் அளித்த சேட நிந்தனை பரிகாரத்தால் நீங்காது தலை மட்டாக வந்தது முடி மட்டாக மத்தமா வனமா ஆகி ஐந்து இரு பஃது ஆண்டு எல்லை அகன்ற பின் பண்டைத்தாக. |
18 |
|
|
உரை
|
|
|
|
|
459. |
என்றனன் பிறிது சாபம் இந்திரன் மகுட பங்கம் ஒன்றிய செய்கை பின்னர் உரைத்து மற்று அஃது நிற்க நின்ற வெள்ளானை வான நீத்தறி விழுந்து நீலக் குன்று என வனத்து வேழக் குழாத்தொடு குழீஇயது அன்றே. |
19 |
|
|
உரை
|
|
|
|
|
460. |
மா வொடு மயங்கிச் செம் கண் மறம் பயில் காடு முல்லைப் பூ வொடு வழங்கு நீத்தப் புறவமும் குறவர் தங்கள் தே வொடு பயிலும் கல்லும் திரிந்து நூறு யாண்டும் செல்லக் சாவொடு பயிலும் தெய்வக் கடம்ப மா வனம் புக்க அன்றே. |
20 |
|
|
உரை
|
|
|
|
|
461. |
புக் குரல் வட்டத் திண் கால் பொருவிறே இயலில் தீர்ந்த மைக் கரும் களிறு முக்கண் மாதவன் அருள் வந்து எய்தக் தக்கதோர் அமையம் சார மரகதம் தழைத்து மின்னு நக்க பொன் முளரி பூத்த நளிர் கயம் தலைக் கண்டு அன்றே. |
21 |
|
|
உரை
|
|
|
|
|
462. |
கண்டபோது அறிவு தோன்றக் கயம் தலைக் குடைந்த போது பண்டைய வடிவம் தோன்றப் பரஞ்சுடர் அருள் கண் தோன்றக் கொண்டது ஓர் பரமானந்தக் குறி எதிர் தோன்றக் கும்பிட்டு அண்டர் நாயகனைப் பூசை செய்வதற்கு அன்பு தோன்ற. |
22 |
|
|
உரை
|
|
|
|
|
463. |
தூம்பு உடை கையான் மொண்டு மஞ்சனம் தூ நீர் ஆட்டித் தேம் புடை ஒழுகப் பள்ளித் தாமமும் தெரிந்து சாத்திப் பாம்பு உடைத்து ஆய வேணிப் பரனை அர்ச்சிக்க உள்ளத்து ஆம் புடை அறிந்த எந்தை யானையை நோக்கிக் கூறும். |
23 |
|
|
உரை
|
|
|
|
|
464. |
வந்ததை எவன் நீ வேண்டும் வரம் எவன் உரைத்தி என்னச் சிந்தையில் அன்பு கூர்ந்த தெய்வத வேழம் தாழ்ந்து முந்தையில் விளைவும் வந்த முறைமையும் முறையால் கூறி எந்தையை அடையப் பெற்றேற்கு இனி ஒரு குறை உண்டாமோ. |
24 |
|
|
உரை
|
|
|
|
|
465. |
என்பு தாம் ஆரம் பூண்ட எந்தை இக் கரிகள் எட்டோடு ஒன்பது ஆடியன் ஏனும் உன்னடி பிரியாது உன்றன் முன்பதாய் இவ் விமானம் முதுகுறச் சுமப்பல் என்றோர் அன்பதாய் ஒன்று என் உள்ளத்து அடுத்தால் அஃதே வேண்டும். |
25 |
|
|
உரை
|
|
|
|
|
466. |
இடை அறா அன்பின் வேழம் இங்ஙனம் கூற விண்ணாடு உடையவன் அம்பான் மெய்யன்பு உடையவன் அவனைத் தாங்கி அடைவதே நமக்கு வேண்டும் அக மகிழ் என்னாப் பின்னும் விடையவள் வரங்கள் நல்கி விடை கொடுத்து அருளினானே. |
26 |
|
|
உரை
|
|
|
|
|
467. |
விடைகொடு வணங்கி ஏகும் வெள்ளாணை மேல் திசை அடைந்து தன் பெயரால் தடமும் மற்று அதன் பால் ஆனையும் கணேசன் தன்னையும் கண்டு அருச்சனை செய்து இடையறா அன்பும் தானும் அங்கு இருக்கும் எல்லை இச் செய்தி கேட்டு அருள் கூர் கடவுளர் பெருமான் உழையரை விளித்து எம் களிற்றினைக் கொணர்க என விடுத்தான். |
27 |
|
|
உரை
|
|
|
|
|
468. |
வல்லை வந்து அழைத்தார் தம்மை முன் போக்கி வருவல் என்று எழுந்து கீழ்த் திசை ஓர் எல்லை வந்து ஓர் ஊர் தன் பெயரால் கண்டு இந்திரரேச் சுரன் என இறைவன் தொல்லை வண் பெயரால் ஒன்று கண்டு அரனைத் தூயபூசனை செய்து அங்கு இருப்பக் கல்லை வன் சிறகு தடிந்தவன் இன்னும் களிறு வந்திலது எனப் பின்னும். |
28 |
|
|
உரை
|
|
|
|
|
469. |
மனத்தினும் கடிய தூதரை விடுப்ப வான் அடைந்து இறைவனை வணங்கிப் புனத்தினும் கடிய கல்லினும் பன்னாள் புன்கணோ உற வரு சாபம் கனத்தினும் கரிய கண்டனைக் கண்டு களைந்ததும் கிளந்து இக் கயத்தின் இனத்தினும் கழிந்த தெய்வத வேழம் இனிது வீற்று இருந்தது மாதோ. |
29 |
|
|
உரை
|
|
|
|
|
470. |
குடவயின் அயிரா வதப் பெரும் தீர்த்தம் குடைந்து அயிராவத கணேசக் கடவுளைத் தொழுது ஐராவதேச் சுரத்துக் கடவுளைப் பணிந்தவர் சாபத் தொடர்பினும் பாவத் தொடர்பினும் கழிவர் சுராதிபன் களிறு செல் ஏறிபோய் இடர் கெட வைகை படிந்து தென் கரையில் இந்திரேச் சுரன் அடி பணிவோர். |
30 |
|
|
உரை
|
|
|
|
|
471. |
இம்மையில் அறமுன் மூன்றால் எய்திய பயனை எய்தி அம்மையின் மகவான் நீர் ஏழ் அரும் பதம் அளவும் வானில் வெம்மை இல் போகம் மூழ்கி வெறுப்பு வந்து அடைய உள்ளச் செம்மையில் விளை பேரின்ப சிவகதி செல்வார் ஆவார். |
31 |
|
|
உரை
|
|
|
|