தொடக்கம் |
|
|
472. |
தான ஆறு இழி புகர் முகத்து அடு கரி சாபம் போன ஆறு உரை செய்து மேல் புது மதி முடிமேல் வான ஆறினன் கடம்பமா வன முது நகரம் ஆன ஆறு அது தனைச் சிறிது அறிந்தவாறு அறைவாம். |
1 |
|
|
உரை
|
|
|
|
|
473. |
இன் நரம்பு உளர் ஏழிசை எழான் மிடற்று அளிகள் கின்னரம் பயில் கடம்பமா வனத்தினின் கீழ் சார்த் தென்னகர் சேகரன் எனும் குலசேகரன் உலக மன்னர் சேகரன் அரசு செய்து இருப்பது மணவூர். |
2 |
|
|
உரை
|
|
|
|
|
474. |
குலவு அப் பெரும் பதி இளம் கோக்களில் ஒருவன் நிலவு மா நிதி போல அருச்சனை முதன் நியதி பலவு ஆம் சிவ தருமமும் தேடுவான் பரன் பால் தலைமை சான்ற மெய் அன்பினான் தனஞ்சயன் என்பான். |
3 |
|
|
உரை
|
|
|
|
|
475. |
செல்வ மா நகர் இருந்து மேல் திசைப் புலம் சென்று மல்லல் வாணிகம் செய்து தன் வளம்பதி மீள்வான் தொல்லை ஏழ் பவக் கடற்கரை தோற்று வித்து அடியார் அல்லல் தீர்ப்பவன் கடம்பமா வனம் புகும் அளவில். |
4 |
|
|
உரை
|
|
|
|
|
476. |
இரவி கண் மறைந்து ஏழ் பரி இரதமும் தானும் உரவு நீர்க் கரும் கடலில் வீழ்ந்து ஒளித்தனன் ஆக இரவு நீள் மயங்கு இருள் வயின் தமியனாய் மெலியும் அரவு நீர்ச் சடை அண்ணலுக்கு அன்பினோன் அம்கண். |
5 |
|
|
உரை
|
|
|
|
|
477. |
வாங்கு நான் மருப்பு ஏந்திய மத மலை எருத்தம் தாங்கி ஆயிரம் கரங்களால் தடவி எண் திசையும் தூங்கு கார் இருள் துரத்து செம் சுடர் எனச் சூழ் போய் வீங்கு கார் இருள் ஒதுக்கிய விமான நேர் கண்டான். |
6 |
|
|
உரை
|
|
|
|
|
478. |
அடுத்து அணைந்தனன் அவிர் சுடர் விமானம் மீது அமர்ந்த கடுத்த தும்பிய கண்டனைக் கண்டு தாழ்ந்து உவகை மடுத்த நெஞ்சினான் அங்ஙனம் வைகி இருள் கழிப்பான் எடுத்த சிந்தையின் இருந்தனன் இருக்கும் அவ் இருள் வாய். |
7 |
|
|
உரை
|
|
|
|
|
479. |
சோம வாரம் அன்று ஆதலால் சுரர்கள் அங்கு எய்தி வாம மேகலை மலை மகள் தலைமகன் மலர்ந்த காமர் சேவடி பணிந்து அவன் கங்குல் போல் கருதி யாமம் நன்கினும் அருச்சனை இன்புறப் புரிவார். |
8 |
|
|
உரை
|
|
|
|
|
480. |
அண்டர் வந்தது அருச்சனை புரிவது அனைத்தும் தொண்டர் அன்பினுக்கு எளியவன் சுரர் தொழக் கறுத்த கண்ட இன் அருள் கண்ணினால் கண்டனன் நுதலில் புண்டரம் பயில் அன்புடைப் புண்ணிய வணிகன். |
9 |
|
|
உரை
|
|
|
|
|
481. |
நான மென் பனி நறும் புனல் நாயகன் பூசைக்கு ஆன நல்விரை வருக்கமும் அமரர் கைக் கொடுத்து ஞான வெண் மதிச் சடையவன் கோயிலின் ஞாங்கர்த் தான் அமர்ந்து அருச்சனை செய்வான் அங்கண் நாயகனை. |
10 |
|
|
உரை
|
|
|
|
|
482. |
வள்ளல் தன்னை மெய் அன்பினால் அருச்சி செய் வானோர் உள்ள வல் வினை ஈட்டமும் கங்குலும் ஒதுங்கக் கள்ளம் இல்லவன் யாரையும் கண்டிலன் கண்டான் தள்ளரும் சுடர் விமானம் மேல் தனித்து உறை தனியை . |
11 |
|
|
உரை
|
|
|
|
|
483. |
ஆழ்ந்த சிந்தையன் அதிசயம் அடைந்து சேவடிக் கீழ்த் தாழ்ந்து எழுந்து இருகைகளும் தலை மிசை கூப்பிச் சூழ்ந்து தன்பதிக்கு ஏகுவான் ஒருதலை துணிந்து வாழ்ந்த அன்பினான் விடை கொடு வழிகொடு வந்தான். |
12 |
|
|
உரை
|
|
|
|
|
484. |
முக்கடம் படு களிற்றினான் முகில் தவழ் கோயில் புக்க அடங்கலர் சிங்கம் அன்னான் எதிர் புகல்வான் திக்கு அடங்கலும் கடந்த வெம் திகிரியாய் நெருநல் அக் கடம்பமா வனத்தில் ஓர் அதிசயம் கண்டேன். |
13 |
|
|
உரை
|
|
|
|
|
485. |
வல்லை வாணிகம் செய்து நான் வருவழி மேலைக் கல் அடைந்தது வெம் கதிர் கங்குலும் பிறப்பும் எல்லை காணிய கண்டனன் இரவி மண்டலம் போல் அல் அடும் சுடர் விமானமும் அதில் சிவக் குறியும். |
14 |
|
|
உரை
|
|
|
|
|
486. |
மா வலம்பு தார் மணிமுடிக் கடவுளர் வந்து அத் தேவ தேவனை இரவு எலாம் அருச்சனை செய்து போவது ஆயினார் யானும் அப் பொன் நெடும் கோயின்
மேவும் ஈசனை விடை கொடு மீண்டனன் என்றான். |
15 |
|
|
உரை
|
|
|
|
|
487. |
மூளும் அன்பினான் மொழிந்திட முக் கண் எம் பெருமான் தாளும் அஞ்சலி கரங்களும் தலையில் வைத்து உள்ளம் நீளும் அன்பு அற்புதமுமே நிரம்ப நீர் ஞாலம் ஆளும் மன்னவன் இருந்தனன் போயினான் அருக்கன். |
16 |
|
|
உரை
|
|
|
|
|
488. |
ஈட்டுவார் வினை ஒத்த போது இருள் மலம் கருக வாட்டுவார் அவர் சென்னி மேல் மலரடிக் கமலம் சூட்டுவார் மறை கடந்த தம் தொல் உரு விளங்கக் காட்டுவார் ஒரு சித்தராய்த் தோன்றினார் கனவில். |
17 |
|
|
உரை
|
|
|
|
|
489. |
வடிகொள் வேலினாய் கடம்பமா வனத்தினைத் திருந்தக் கடி கொள் காது அழந்து அணி நகர் காண்க என உணர்த்தி அடிகள் ஏகினார் கவுரியர் ஆண் தகை கங்குல் விடியும் வேலை கண் விழித்தனன் பரிதியும் விழித்தான். |
18 |
|
|
உரை
|
|
|
|
|
490. |
கனவில் தீர்ந்தவன் நியதியின் கடன் முடித்து அமைச்சர் சினவில் தீர்ந்த மாதவர்க்குத் தன் கனாத்திறம் செப்பி நனவில் கேட்டதும் கனவில் கண்டது நயப்ப வினவித் தேர்ந்து கொண்டு எழுந்தனன் மேல்திசைச் செல்வான். |
19 |
|
|
உரை
|
|
|
|
|
491. |
அமைச்ச ரோடும் அந் நீபமா வனம் புகுந்து அம் பொன் சமைச் சவிழ்ந்த பொன் தாமரைத் தடம் படிந்து ஒளிவிட்டு இமைச்ச அலர்ந்த பொன் விமானம் மீது இனிது வீற்று இருந்தோர் தமைச் சரண் பணிந்து அஞ்சலி தலையின் மேல் முகிழ்த்தான். |
20 |
|
|
உரை
|
|
|
|
|
492. |
அன்பு பின் தள்ள முன்பு வந்து அருட் கணீர்த் தேக என்பு நெக்கிட ஏகி வீழ்ந்து இணை அடிக்கமலம் பொன்புனைந்த தார் மௌலியில் புனைந்து எழுந்து இறைவன் முன்பு நின்று சொல் பதங்களால் தோத்திரம் மொழிவான். |
21 |
|
|
உரை
|
|
|
|
|
493. |
சரண மங்கையோர் பங்குறை சங்கர சரணம் சரண மங்கலம் ஆகிய தனிமுதல் சரணம் சரண மந்திர வடிவம் ஆம் சதாசிவ சரணம் சரண மும்பர்கள் நாயக பசுபதி சரணம். |
22 |
|
|
உரை
|
|
|
|
|
494. |
ஆழி ஞாலமேல் ஆசையும் அமரர் வான் பதமெல் வீழும் ஆசையும் வெறுத்தவர்க்கு அன்றிமண் ஆண்டு பீழை மூழ்கி வான் நரகொடு பிணிபடச் சுழலும் ஏழை ஏங்களுக்கு ஆவதோ எந்தை நின் கருணை. |
23 |
|
|
உரை
|
|
|
|
|
495. |
சூள தாமறைச் சென்னியும் தொடத் தொட நீண்ட நீள நீ உனக்கு அன்பு இலம் ஆயினும் தீயே மூள வன்பு தந்து எம்குடி முழுவதும் பணிகொண்டு ஆளவே கொலிக் கானகத் அமர்ந்தனை என்னா. |
24 |
|
|
உரை
|
|
|
|
|
496. |
சுரந்த அன்பு இரு கண்வழிச் சொரிவபோல் சொரிந்து பரந்த ஆறோடு சிவானந்த பரவையுள் படிந்து வரம் தவாத மெய் அன்பினால் வலம் கொடு புறம் போந்து அரந்தை தீர்ந்தவன் ஒருசிறை அமைச்சரோடு இருந்தான். |
25 |
|
|
உரை
|
|
|
|
|
497. |
ஆய வேலையின் மன்னவன் ஆணையால் அமைச்சர் மேய வேவலர் துறை துறை மேவினர் விடுப்ப பாய வேலையில் ஆர்த்தனர் வழித்கொடு படர்ந்தார் சேய காது எறிந்து அணி நகர் செய் தொழில் மாக்கள். |
26 |
|
|
உரை
|
|
|
|
|
498. |
வட்டவாய் மதிப் பிளவின் வெள்வாய்க் குய நவியம் இட்ட தோளினர் யாப்பு உடைக் கச்சினர் இரும்பின் விட்ட காரொளி மெய்யினர் விசிகொள்வார் வன் தோல் தொட்ட காலினர் வனம் எறி தொழிலினர் ஆனார். |
27 |
|
|
உரை
|
|
|
|
|
499. |
மறியும் ஓதை வண்டு அரற்றிட மரந்தலை பனிப்ப எறியும் ஓதையும் எறிபவர் ஒதையும் இரங்கி முறியும் ஓதையும் முறிந்து வீழ் ஓதையும் முகில் வாய்ச் செறியும் ஓதையும் கீழ்ப் பட மேல் படச் செறியும். |
28 |
|
|
உரை
|
|
|
|
|
500. |
ஒளிறு தா தொடு போது செம் தேன் உக ஒலித்து வெளிறில் வன் மரம் சினை இற வீழ்வ செம் களத்துப் பிளிறு வாய வாய் நிணத்தொடு குருதி நீர் பெருகக் களிறு கோடு இற மாய்ந்து வீழ் காட்சிய அனைய. |
29 |
|
|
உரை
|
|
|
|
|
501. |
பூ அடைந்த வண்டினம் அயல் புறவொடும் பழனக் கா அடைந்தன பறவை வான் கற்பகம் அடைந்த கோ அடைந்திட ஒதுங் குறும் குறும்பு போல் செறிந்து மா அடிந்தன மாடு உள வரைகளும் காடும். |
30 |
|
|
உரை
|
|
|
|
|
502. |
இருள் நிரம்பிய வனம் எலாம் எறிந்து மெய் உணர்ந்தோர் தெருள் நிறைந்த சிந்தையின் வெளி செய்து பல் உயிர்க்கும் அருள் நிறைந்து ப்று அறுத்து அரன் அடி நிழல் அடைந்த கருணை அன்பர் தம் பிறப்பு என வேரோடும் களைந்தார். |
31 |
|
|
உரை
|
|
|
|
|
503. |
களைந்து நீள் நிலம் திருத்திச் செம் நெறி படக் கண்டு வளைந்து நல் நகர் எடுப்பது எவ்வாறு எனத் தேறல் விளைந்து தாது உகு தார் முடி வேந்தன் மந்திர ரோ அளைந்து அளாவிய சிந்தையோடு இருந்தனன் அம்கண். |
32 |
|
|
உரை
|
|
|
|
|
504. |
மெய்யர் அன்பு தோய் சேவடி வியன் நிலம் தீண்டப் பொய் அகன்ற வெண் நீறு அணி மேனியர் பூதிப் பையர் நள் இருள் கனவில் வந்து அருளிய படியே ஐயர் வல்லை வந்து அருளினார் அரசு உளம் களிப்ப. |
33 |
|
|
உரை
|
|
|
|
|
505. |
கனவிலும் பெரும் கடவுளர் காண்பதற்கு அரியார் நனவிலும் வெளிவந்தவர் தமை எதிர் நண்ணி நினைவில் நின்ற தான் இறைஞ்சி நேர் நின்று நல்வரவு வினவி ஆதனம் கொடுத்தனன் மெய் உணர் வேந்தன். |
34 |
|
|
உரை
|
|
|
|
|
506. |
தென்னர் அன்பினில் அகப்படு சித்தர் தாம் முன்னர்ச் சென்ன ஆதி நூல் வழி வரு சார்பு நூல் தொடர்பால் நன்னர் ஆலய மண்டபம் கோபுர நகரம் இன்ன வாறு செய் என வகுத்து இம் என மறைந்தார். |
35 |
|
|
உரை
|
|
|
|
|
507. |
மறைந்து எவற்றினும் நிறைந்தவர் மலர் அடிக்கு அன்பு நிறைந்த நெஞ்சு உடைப் பஞ்சவன் நிலத்து மேம் பட்டுச் சிறந்த சிற்ப நூல் புலவரால் சிவ பரம் சுடர் வந்து அறைந்து வைத்தவாறு ஆலய மணிநகர் காண்பான். |
36 |
|
|
உரை
|
|
|
|
|
508. |
மறை பயில் பதும மண்டபம் அருத்த மண்டபம் மழை நுழை வளைவாய்ப் பிறைபயில் சிகை மா மண்டபம் அருகால் பீடிகை திசை எலாம் பிளக்கும் பறைபயில் நிருத்த மண்டபம் விழாக் கொள் பன் மணி மண்டபம் வேள்வித் துறைபயில் சாலை திரு மடைப் பள்ளி சூழ் உறை தேவர் தம் கோயில். |
37 |
|
|
உரை
|
|
|
|
|
509. |
வலம் வயின் இமய வல்லி பொன் கோயில் மாளிகை அடுக்கிய மதில் வான் நிலவிய கொடிய நெடிய சூளிகை வான் நிலா விரி தவள மாளிகை மீன் குலவிய குடுமிக் குன்று இவர் செம் பொன் கோபுரம் கொண்டல் கண் படுக்கும் சுல வெயில் அகழிக் கிடங்கு கம்மி நூல் தொல் வரம்பு எல்லை கண்டு அமைத்தான். |
38 |
|
|
உரை
|
|
|
|
|
510. |
சித்திரம் நிரைத்த பீடிகை மறுகு தெற்றிகள் வாண் நிலாத் தெளிக்கும் நித்தில நிரைத்த விழா வரு வீதி நிழல் மணிச் சாளர ஒழுக்கப் பித்திகை மாடப் பெரும் தெருக் கவலை பீடு சால் சதுக்க நல் பொதியில் பத்தியில் குயின்ற மன்று செய் குன்று பருமணி மேடை ஆடு அரங்கு. |
39 |
|
|
உரை
|
|
|
|
|
511. |
அரும் தவர் இருக்கை அந்தணர் உறையுள் அரசரா வணங்குல வணிகப் பெரும் தெரு நல் வேளாளர் பேர் அறம் சால் பெருங்குடி ஏனைய கரிதேர் திருந்திய பரிமா நிலைக்களம் கழகம் தீம் சுவை ஆறு நான்கு உண்டி இரந்தவர்க்கு அருத்து நல் அறச் சாலை இனையன பிறவும் நன்கு அமைத்தான். |
40 |
|
|
உரை
|
|
|
|
|
512. |
துணி கயம் கீழ் நீர்க் கூவல் பூ ஓடை தொடு குளம் பொய்கை நந்தவனம் திணிமலர்ச் சோலை துடவை உய்யானம் திருநகர் அணி பெறச் செய்து மணி மலர்த் தாரோன் மாளிகை தனக்கு அம் மாநகர் வட குண பால் கண் அணி நகர் சாந்தி செய்வது குறித்தான் அண்ணலார் அறிந்து இது செய்வார். |
41 |
|
|
உரை
|
|
|
|
|
513. |
பொன் மயமான சடை மதிக் கலையின் புத்தமுது உகுத்தனர் அது போய்ச் சின் மயமான தம் அடி அடைந்தார்ச் சிவமயம் ஆக்கிய செயல் போல் தன் மயம் ஆக்கி அந்நகர் முழுதும் சாந்தி செய்து அதுவது மதுர நன் மயம் ஆன தன்மையான் மதுரா நகர் என உரைத்தனர் நாமம். |
42 |
|
|
உரை
|
|
|
|
|
514. |
கீட்டிசைக் கரிய சாத்தனும் தென்சார் கீற்று வெண்பிறை நுதல் களிற்றுக் கோட்டு இளம் களபக் கொள்கை அன்னை அரும் குடவயின் மதுமடை உடைக்கும் தோட்டு இளம் தண்ணம் துழாய் அணி மௌலித் தோன்றலும் வட வயிற்றோடு நீட்டிரும் போந்தின் நிமிர் குழல் எண் தோள் நீலியும் காவலா நிறுவி. |
43 |
|
|
உரை
|
|
|
|
|
515. |
கை வரை எருத்தில் கனவரை கிடந்த காட்சியில் பொலிந்து ஒளிர் கோயின் மைவரை மிடற்று மதுரை நாயகரை மரபுளி அருச்சனை புரிவான் பொய் வரை மறை ஆகம நெறி ஒழுகும் புண்ணிய முனிவரை ஆதி சைவரைக் காசிப்பதி யினில் கொணர்ந்து தலத்தினில் தாபனம் செய்தான். |
44 |
|
|
உரை
|
|
|
|
|
516. |
உத்தம குலத்து நாற்பெரும் குடியும் உயர்ந்தவும் இழிந்தவும் மயங்க வைத்தவும் ஆன புறக்குடி மூன்று மறை வழுக்கா மனு வகுத்த தத்தம நெறினின்று ஒழுக வைதிகமும் சைவமும் தருமமும் தழைப்பப் பைத்தெழு திரைநீர் ஞால மேல் திலகம் பதித்து என நகர்வளம் படுத்தான். |
45 |
|
|
உரை
|
|
|
|
|
517. |
அன்று தொட்டு அரசன் அந்நகர் எய்தி அணி கெழு மங்கலம் இயம்ப என்று தொட்டு இமைக்கும் மனையின் மங்கல நாள் எய்தினான் இருந்து முப்புரமும் குன்று தொட்டு எய்தான் கோயில் மூன்று உறுப்பும் குறைவு இல் பூசனை வழாது ஓங்கக் கன்று தொட்டு எறிந்து கனி உகுத்தான் போல் கலிதுரந்து அரசு செய் நாளில். |
46 |
|
|
உரை
|
|
|
|
|
518. |
பவநெறி கடக்கும் பார்த்திவன் கிரணம் பரப்பி இளம் பரிதி போல் மலயத் துவசனைப் பயந்து மைந்தன் மேல் ஞாலம் சுமத்தி நாள் பல கழித்து ஒருநாள் நவவடிவு இறந்தோன் ஆலயத்து எய்தி நாதனைப் பணிந்து மூவலம் செய்து உவமை இல் இன்ப அருள் நிழல் எய்தி ஒன்றி ஒன்றா நிலை நின்றான். |
47 |
|
|
உரை
|
|
|
|