தொடக்கம் |
|
|
519. |
கன்னி ஒரு பங்கினர் கடம்ப வனம் எல்லாம் நன்னகரம் ஆனது நவின்று உலகு ஈன்ற அன்னை மகளாகி மலயத் துவசன் ஆகும் தென்னன் இடை வந்து முறை செய்தது உரை செய்வாம். |
1 |
|
|
உரை
|
|
|
|
|
520. |
மனு அறம் உவந்து தன் வழிச் செல நடத்தும் புனிதன் மலயத் துவசன் வென்றி புனை பூணான் கனி அமுதம் அன்ன கருணைக்கு உறையும் காட்சிக்கு இனியன் வட சொல் கடல் தமிழ்க் கடல் இகந்தோன். |
2 |
|
|
உரை
|
|
|
|
|
521. |
வேனில் விறல் வேள் வடிவன் வேட்கை விளை பூமி ஆடல் மடவார்கள் பதினாயிரவர் உள்ளான் வான் ஒழுகு பானுவழி வந்து ஒழுகு சூர சேனன் மகள் காஞ்சனையை மன்றல் வினை செய்தான். |
3 |
|
|
உரை
|
|
|
|
|
522. |
கண்ணுதலை முப் பொழுதும் வந்து பணி கற்றோன் எண் இல் பல நாள் மகவு இலா வறுமை எய்திப் பண்ணரிய தான தருமம் பலவும் ஆற்றிப் புண்ணியம் நிரம்பு பரி வேள்வி புரி குற்றான். |
4 |
|
|
உரை
|
|
|
|
|
523. |
ஈறு இல் மறை கூறு முறை எண்ணி ஒரு தொண்ணூற்று ஆறினொடு மூன்று மகம் ஆற்ற அமரேசன் நூறு மகமும் புரியின் என்பது நொடிப்பின் மாறும் என மற்று அதனை மாற்றி இது சாற்றும். |
5 |
|
|
உரை
|
|
|
|
|
524. |
நன் பொருள் விரும்பினை அதற்கு இசைய ஞாலம் இன்புறு மகப்பேறு மகத்தினை இயற்றின் அன்பு உறு மகப் பெறுதி என்று அமரர் நாடன் தன் புலம் அடைந்திடலும் நிம்ப நகுதாரான். |
6 |
|
|
உரை
|
|
|
|
|
525. |
மிக்க மக வேள்வி செய் விருப்பு உடையன் ஆகி அக் கணம் அதற்கு உரிய யாவையும் அமைத்துத் தக்க நியமத்து உரிய தேவியொடு சாலை புக்கனனன் இருந்து மகவேள்வி புரிகிற்பான். |
7 |
|
|
உரை
|
|
|
|
|
526. |
ஆசற மறைப் புலவர் ஆசிரியர் காட்டும் மாசு அறு சடங்கின் வழி மந்திரம் முத்தாத்த ஓசை அனுத்தாத்த சொரிதந்து அழுவ ஓதி வாசவன் இருக்கையில் இருந்து எரி வளர்ப்பான். |
8 |
|
|
உரை
|
|
|
|
|
527. |
விசும்பும் நிலனும் திசையும் வேள்வி அடு சாலைப் பசும் புகை படர்ந்து ஒரு படம் என மறைப்பத் தசும்பு படு நெய் பொரி சமித்தினொடு வானோர்க்கு அசும்பு படு மின் அமுதின் ஆகுதி மடுத்தான். |
9 |
|
|
உரை
|
|
|
|
|
528. |
ஐம்முகன் அநாதி பரமாத்தன் உரை ஆற்றால் நெய் முக நிறைந்து தழல் நிமிர்த்து வரும் எல்லை பைம் முக அரா அணி பரஞ்சுடர் தனிப்ப மைம் முக நெடும் கணி மவான் மனைவிநாண. |
10 |
|
|
உரை
|
|
|
|
|
529. |
வள்ளல் மலையத் துவசன் மீனவன் வலத்தோள் துள்ள மனை காஞ்சனை சுருங்கிய மருங்குல் தள்ள எழு கொங்கைகள் ததும்ப நிமிர் தீம்பால் வெள்ள மொழுகக்கு அரிய வேல் கணிட ஆட. |
11 |
|
|
உரை
|
|
|
|
|
530. |
இவ்வுலகம் அன்றியும் உலகு ஏழும் மகிழ்வு எய்தச் சைவ முதல் ஆயின தவத் துறை நிவப்ப ஓளவிய மறம் கெட அறம் குது கலிப்பத் தெய்வமறை துந்துபி திசைப் புலன் இசைப்ப. |
12 |
|
|
உரை
|
|
|
|
|
531. |
மைம் மலர் நெடும் கண் அர மங்கையர் நடிப்ப மெய்ம் மன மொழிச் செயலின் வேறு படல் இன்றி அம்மதுரை மா நகர் உளர் ஆக மகிழ்ச்சி தம்மை அறியாதன தலைத்தலை சிறப்ப. |
13 |
|
|
உரை
|
|
|
|
|
532. |
மாந்தர் பயின் மூவறு சொல் மாநில வரைப்பில் தீம் தமிழ் வழங்கு திரு நாடது சிறப்ப ஆய்ந்த தமிழ் நாட அரசளித்து முறை செய்யும் வேந்தர்களின் மீனவர் விழுத்தகைமை எய்த. |
14 |
|
|
உரை
|
|
|
|
|
533. |
நொய் தழல் எரிக் கடவுள் நோற்ற பயன் எய்தக் கொய் தளிர் எனத் தழல் கொழுந்து படு குண்டத் தைதவிழ் இதழ்க் கமலம் அப்பொழுது அலர்ந்து ஓர் மொய் தளிர் விரைக் கொடி முளைத்து எழுவது என்ன. |
15 |
|
|
உரை
|
|
|
|
|
534. |
விட்டு இலகு சூழியம் விழுங்கு சிறு கொண்டை வட்ட மதி வாய்க்குறு முயல் கறையை மானக் கட்டி அதி நாற்றிய கதிர்த் தரள மாலை சுட்டி அதில் விட்டு ஒழுகு சூழ் கிரணம் ஒப்ப. |
16 |
|
|
உரை
|
|
|
|
|
535. |
தீங்கு தலை இன் அமுதம் மார்பின் வழி சிந்தி ஆங்கு இள நிலா ஒழுகும் ஆர வடம் மின்ன வீங்கு உடல் இளம் பரிதி வெம் சுடர் விழுங்கி வாங்கு கடல் வித்து உரும மாலை ஒளி கால. |
17 |
|
|
உரை
|
|
|
|
|
536. |
சிற்றிடை வளைந்த சிறு மென் துகில் புறம் சூழ் பொன் திரு மணிச் சிறிய மேகலை புலம்ப வில் திரு மணிக் குழை விழுங்கிய குதம்பை சுற்று இருள் கடிந்து சிறு தோள் வருடி ஆட. |
18 |
|
|
உரை
|
|
|
|
|
537. |
தெள் அமுத மென் மழலை சிந்து இள மூரல் முள் எயிறு அரும்ப முலை மூன்று உடையது ஓர் பெண் பிள்ளை என மூ ஒரு பிராய மொடு நின்றள் எள் அரிய பல் உயிரும் எவ் உலகும் ஈன்றாள். |
19 |
|
|
உரை
|
|
|
|
|
538. |
குறும் தளிர் மெல் அடிக்கிடந்த சிறு மணி நூபுர சதங்கை குழறி ஏங்க நறும் தளிர் போல் அசைந்து தளர் நடை ஒதுங்கி மழலை இள நகையும் தோன்றப் பிறந்த பெரும் பயன் பெறு பொன் மாலை மடி இருந்து ஒரு பெண்பிள்ளை ஆனாள் அறம் தழுவு நெறி நின் றோர்க்கு இகம் போகம் வீடு அளிக்கும் அம்மை அம்மா. |
20 |
|
|
உரை
|
|
|
|
|
539. |
செய்யவாய் வெளிறாது துணை முலைக்கண் கருகாது சேல் போல் நீண்ட மையவாய் மதர்த்த கரும்கண் பசவா ஐ இரண்டு மதியம் தாங்கா தைய ஆல் இலை வருந்தப் பெறாது பெறு மகவை எடுத்து அணைத்தாள் மோந்தாள் துய்யவாய் முத்தம் கொண்டு இன்புற்றாள் முன் பெற்ற தோகை அன்னாள். |
21 |
|
|
உரை
|
|
|
|
|
540. |
பரை ஆதி இருப்ப அறிவு தொழிலாகி உலகம் எல்லாம் படைத்துக் காத்து வரையாது துடைத்து மறைத்து அருளியவை நின்றும் தன் வடிவு வேறாய் உரை ஆதி மறை கடந்த ஒரு முதல்வி திருமகளாய் உதித்ததற்கு இந்தத் தரை ஆளு மன்னவன் செய் தவம் இதுவோ அதற்கு உரிய தவம் தான் மன்னோ. |
22 |
|
|
உரை
|
|
|
|
|
541. |
கள்ளமா நெறி ஒழுகும் பொறி கடந்து கரணம் எலாம் கடந்து ஆனந்த வெள்ளம் ஆம் பரஞான வடி உடையாள் தன் அன்பின் வெளிவந்தது இன்று ஓர் பிள்ளையாய் அவதரித்த கருணையும் தான் மாணாட்டி தவப் பேறும் தேறான் பள்ளமா கடல் தானைப் பஞ்சவர் கோன் நெஞ்சகத்துப் பரிவு கூர்ந்தான். |
23
|
|
|
உரை
|
|
|
|
|
542. |
மகவு இன்றிப் பல பகல்யான் வருந்தி அரும் தவம் புரிந்தேன் மைந்தன் பேறு தக இந்த மகம் செய்தேன் அதுவும் ஒரு பெண் மகவைத் தந்தது அந்தோ முக இந்து நிலவு ஒழுக வரு பெண்ணு முலை மூன்றாய் முகிழ்த்து மாற்றார் நக வந்தது என்னேயோ என்று வகை இலனாகி நலியும் எல்லை. |
24 |
|
|
உரை
|
|
|
|
|
543. |
மன்னவ நின் திருமகட்கு மைந்தர் போல் சடங்கு அவைத்தும் வழாது வேதம் சொன்ன முறை செய்து பெயர் தடா தகை என்று இட்டு முடி சூட்டுவாய் இப் பொன் அனையாள் தனக்கு இறைவன் வரும் பொழுது ஓர் முலை மறையும் புந்தி மாழ் கேல் என்ன அரன் அருளால் ஓர் திருவாக்கு விசும்பு இடை நின்று எழுந்த தன்றே. |
25 |
|
|
உரை
|
|
|
|
|
544. |
அவ்வாக்குச் செவி நிரம்ப வன்பு வகை அகநிரம்ப அகலம் எல்லாம் மெய்வாக்கு மனம் ஒன்ற விழி வாக்கும் புனல் நிரம்ப விமலர் போற்றி நெய் வாக்கு மக நிரப்பி எழுந்து மனை ஒடும் சாலை நீத்து இரண்டு கை வாக்கும் இயம் கலிப்பக் கடி மாடா மனை புகுந்தான் கழல்கால் வேந்தன். |
26 |
|
|
உரை
|
|
|
|
|
545. |
முரசு அதிர்ப்ப மங்கலம் கொண்டு எதிர் வருவார் முகத்து உவகை முறுவல் பூப்ப அரசிருக்கும் மண்டபம் புக்கு இனிது அமர்ந்து கனக மழை ஆன்ற கேள்வி விரசிருக்கும் மறையவர் கைப் பெய்து எவர்க்கும் மும்முறையால் வெறுப்ப நல்கிப் பரசிருக்கும் கரதலத்து எம் பரன் கோயில் நனி சிறப்புப் பல்க நல்கா. |
27 |
|
|
உரை
|
|
|
|
|
546. |
சிறைவிடுமின் சிறைக் களமும் சீத்திடுமின் ஏழாண்டு தேயத்து ஈட்டும் இறைவிடுமின் அயல் வேந்தர் திறை விடுமின் இறை நிதியம் ஈட்டும் ஆயத் துறைவிடுமின் அறப்புறமும் ஆலயமும் பெருக்கும் எனத் தொழாரைக் காய்ந்த கறை விடுமின் அயில் வேலான் வள்ளு வனைக் கூய் முரசம் கறங்கச் சாற்றி. |
28 |
|
|
உரை
|
|
|
|
|
547. |
கல்யாண மணி மௌலி வேந்தரையும் கால் யாப்புக் கழல நீத்துக் கொல்யானை பரி நெடும் தேர் அரசுரிமை தொன் முறையால் கொடுத்துப் போக்கிப் பல்லாரும் கொள்க எனப் பண்டாரம் தலை திறந்து பசும் பொன்னாடை வில்லாரும் மணிக் கொடும் பூண் வெறுக்கை முதல் எனைப் பலவும் வெறுப்ப வீசி. |
29 |
|
|
உரை
|
|
|
|
|
548. |
தூமரபின் வரு பெரு மங்கல கவிகட்கு இரு நிதியம் துகில் பூண்பாய்மா காமர் கரி பரித் தடம் தேர் முதலாய பல் பொருளும் களிப்ப நல்கிக் கோமறுகு களிதூங்கச் சுண்ணமொடும் எண்ணெய் விழாக் குளிப்ப நல்கி மாமதுரா நகர் அன்றி மற்றும் உள நகர் எங்கும் மகிழ்ச்சி தூங்க. |
30 |
|
|
உரை
|
|
|
|
|
549. |
இவ்வண்ணம் நகர் களிப்ப இறை மகனும் களிப்பு எய்தி இறைவர் சொன்ன அவ்வண்ணம் சாத முதல் வினை நிரப்பித் தடாதகை என்று அழைத்துத் தேவி மெய்வண்ண மறை உணரா விறை இதனை மேனை போல் மேல் நாள் நோற்ற கைவண்ணத் தளிர் தீண்டி வளர்ப்ப இமவான் போல களிக்கும் நானில். |
31 |
|
|
உரை
|
|
|
|
|
550. |
திருந்தாத விளங்குதலை ஆயமொடு புறம் போந்து சிறார்க்குச் சிற்றில் விருந்தாக மணல் சிறு சோறு அட்டும் உரங்கிழித்த வேளும் வாய் வைத்து அருந்தாத இள முலைவாய் வைத்து அருந்தப் பாவை தனக்கு அளித்தும் போதில் வரும் தாதை அண்டம் எலாம் சிற்றில் இழைப் பாளாய்க்கு மகிழ்ச்சி செய்தான். |
32 |
|
|
உரை
|
|
|
|
|
551. |
தீட்டுவாள் இரண்டு அனையக் கண் களிப்பத் தோழியர்க்குத் தெரிய ஆடிக் காட்டுவாள் எனக் கழங்கு பந்து பயின்று அம் மனையும் கற்றுப் பாசம் வீட்டு வாண் மேல் ஒடு கீழ் தள்ள எமை வினைக் கயிறு வீக்கி ஊசல் ஆட்டுவாள் காட்டுதல் போல் ஆடினாள் நித்தில தாம்பு அசைத்த ஊசல். |
33 |
|
|
உரை
|
|
|
|
|
552. |
இம் முறையால் தாயர்க்கும் தோழியர்க்கும் மகத்து உவகை ஈந்தாள் ஆகி அம் முறையால் தாதைக்கு மகத்து வகை யீவாளாய் ஆத்த வாய்மைச் செம் மறையா அரண் முதனால் ஈர் எட்டுக் கலை முழுதும் தெளிந்தாள் அந்த மெய்ம் மறையார் கலை அனைத்தும் மேகலையா மருங்கு அசைத்த விமலை அம்மா. |
34 |
|
|
உரை
|
|
|
|
|
553. |
சொல் வாய்மைக் கலைத் தெளிவு முழுமதியைப் பிளந்து இருபால் சொருகி அன்ன பல் வாய்மைக் கடகரி தேர் பரி உகைக்கும் திறனும் அழல் பகழி தூர்க்கும் வில் வாள் வச்சிரம் முதல் பல் படைத் தொழிலும் கண்டு இளமை விழுங்கு மூப்பில் செல்வாய்மைத் திறல் அரசன் திருமகட்கு முடி சூட்டும் செய்கை பூண்டான். |
35 |
|
|
உரை
|
|
|
|
|
554. |
முடிகவிக்கும் மங்கல நாள் வரையறுத்துத் திசைதோறும் முடங்கல் போக்கி கடி கெழு தார் மணி மௌலிக் காவலரை வருவித்துக் காவல் சூழ்ந்த கொடி அணி மா நகர் எங்கும் விழா எடுப்ப அழகு அமைத்துக் குன்றம் அன்ன தொடி கெழு தோள் சுமதி திரு மணத்தினுக்கு வேண்டுவன சூழ்ந்து செய்தான். |
36 |
|
|
உரை
|
|
|
|
|
555. |
மங்கல தூரியம் முழங்க மால் யானை உச்சி மிசை வந்த பூத கங்கை முதல் ஒன்பது தீர்த்தமும் நிரப்பிக் கதிர் விடு பொன் கடம் பூசித்துப் புங்கவரை மந்திரத்தீ வளர்த்து அமுதம் அருத்தி எரி பொன்னால் செய்த சிங்க மணி ஆதனத்தை நேசித்துப் பூசித்துத் தெய்வம் ஏற்றி. |
37 |
|
|
உரை
|
|
|
|
|
556. |
திரு முடியை மதயானை மிசை வைத்து நகரை வலம் செய்து பூசித்து அரு மணியால் சுடிகை இழைத் தடாகத்தால் குயிற்றியது ஓர் ஐவாய் நாகம் பெரு மணி நீள் படம் பரப்பி மிசை கவிப்ப அச் சிங்க பீடத்து ஏற்றிக் குரு மணி வாள் நகை மயிலைக் கும்பத்துப் புண்ணிய நீர் குளிர ஆட்டி. |
38 |
|
|
உரை
|
|
|
|
|
557. |
புங்கவர் மந்தார மழை பொழிய அரும் தவர் ஆக்கம் புகலத் தெய்வப் பங்கய மென் கொம்பனையார் ஆட முனி பன்னியர் பல்லாண்டு பாட மங்கல தூரியம் முழங்க மறை தழங்க மாணிக்க மகுடம் சூட்டி எம் கருணைப் பெருமாட்டிக்கு அரச அமைச்சர் பணியும் தன் இறைமை நல்கா. |
39 |
|
|
உரை
|
|
|
|
|
558. |
பால் அனைய மதிக் கவிகை மிசை நிழற்ற மதி கிரணம் பரப்பி அன்ன கோல மணி கவரி புடை இரட்ட மலர் மழை தேவர் குழாம் உடூற்றக் காலை இளம் கதிர் கயிலை உதித்து என வெண் கடா யானைக் கழுத்தில் வேப்ப மாலை முடிப் பெண் அரசை மங்கல துரியம் முழங்க வலம் செய்வித்தான். |
40 |
|
|
உரை
|
|
|
|
|
559. |
விண்ணாடு மொழி கெட்ட மகிழ்ச்சியுனும் திருமகள் தன் விளக்க நோக்கி உள் நாது பெரும் களிப்புத் தலை சிறப்பச் சிலபகல் சென்று ஒழிய மேல் நாள் புண் ஆது வேல் மங்கை குதுகலித்து நடிப்பத் தன் புயமேல் வைத்த மண் ஆடு மகள் களித்து வான் நாடு பெற்றான் அம் மகவு பெற்றான். |
41 |
|
|
உரை
|
|
|
|
|
560. |
விரத நெறி அடைந்து ஈற்றுக் கடன் பிறவும் தாதைக்கு விதியால் ஆற்றி அரதன மேல் அணை மேல் கொண்டு உலகம் எலாம் ஒருகுடைக் கீழ் ஆள் வாள் ஆனாள் சரத மறையாய் மறையின் பொருளாய்ப் பொருள் முடிவு தானாய்த் தேனின் இரதம் எனப் பூவின் மணம் எனப் பரமனிடம் பிரியா எம் பிராட்டி. |
42 |
|
|
உரை
|
|
|
|
|
561. |
மண் அரசு இறைஞ்ச ஞாலம் மநு வழி புரந்து மாறன் விண் அரசு இருக்கை எய்தப் பெற்றபின் விடையோன் உள்ளத்து எண் அரசு என்ன அன்னம் என்ன தென்னவன் ஈன்ற கன்னிப் பெண் அரசு இருந்து நேமி உருட்டிய பெருமை சொல்வாம். |
43 |
|
|
உரை
|
|
|
|
|
562. |
இன்னியம் இயம்பு மாக்கள் எழுப்ப வான் இரவி தோன்றக் கன்னலைந்து என்னப் பள்ளித் துயில் எழீஇக் கடி நீ ஆதிக் தன்னிறை மரபுக்கு ஏற்ற நியதி மாதானம் அன்பு துன்னிய கடவுள் பூசைத் தொழில் முதல் அனைத்தும் முற்றா. |
44 |
|
|
உரை
|
|
|
|
|
563. |
திடம்படு அறிஞர் சூழச் சிவபரன் கோயில் முன்னிக் கடம்பு அடி முளைத்த முக்கண் கரும்பினை மறைவண்டு ஆர்க்கும் விடம் பொதி கண்டத் தேனை விதிமுறை வணங்கி மீண்டு குடல் பயில் குடுமிச் செம்பொன் குரு மணிக் கோயில் நண்ணி. |
45 |
|
|
உரை
|
|
|
|
|
564. |
அரசு இறை கொள்ளும் செம்பொன் அத்தாணி இருக்கை எய்தி நிறை செறி மடங்கல் ஆறு முடங்கின் நிமிர்ந்து தாங்க விரை செறி மலர் மீப் பெய்த இயன் மணித் தவிசின் மேவித் திரை செறி அமுதில் செய்த பாவை போல் சிறந்து மாதோ. |
46 |
|
|
உரை
|
|
|
|
|
565. |
அனிந்திதை அமுதின் சாயல் கமலின் அணங்கும் காதல் கனிந்த பார் மகளிராய் வந்து அடைப்பை பொன் களாஞ்சி ஏந்த இனம் திரி பதுமக் கோயில் இருவரும் அனைவர் ஆகிப் புனைந்த வெண் கவறிக் கற்றை இரு புடை புரட்டி வீச. |
47 |
|
|
உரை
|
|
|
|
|
566. |
செடி உடல் எயினச் செல்வன் சென்னி மேல் சுமந்து சாத்தும் கடி அவிழ் மலரில் பொன்னிக் காவலன் குடக்கோன் ஏனை முடி கெழு வேந்தர் உள்ளார் முடிமிசை இலைந்த தாமம் அடி மிசை சாத்தி நங்கை அணையால் ஏவல் செய்ய. |
48 |
|
|
உரை
|
|
|
|
|
567. |
வை உடை வாளர் ஆகி மார்புற பின்னிஆர்த்த கையினர் ஆகி அன்னை என்று தன் கருணை நோக்கம் செய்யும் என்று இமையார் நோக்கி நோக்குமேல் செம்கை கூப்பி உய்குநம் என வாய் பொத்தி உழையர் தம் பணி கேட்டு உய்ய. |
49 |
|
|
உரை
|
|
|
|
|
568. |
ஆங்கு அவன் மராடர் வேந்தன் அவன் கரு நாடர் வேந்தன் ஈங்கு இவன் விராடர் வேந்தன் இவன் குருநாடர் வேந்தன் ஊங்கு உவன் சேரன் சென்னி உவன் எனக் கோலால் சுட்டிப் பாங்கு இரு மருங்கும் காட்டக் கஞ்சுக படிவ மாக்கள். |
50 |
|
|
உரை
|
|
|
|
|
569. |
செந்தமிழ் வடநூல் எல்லை தெரிந்தவர் மறைநூல் ஆதி அந்தம் இல் எண் எண் கேள்வி அளந்தவர் சமயம் ஆறும் வந்தவர் துறந்தோர் சைவ மாதவர் போதம் ஆண்ட சிந்தனை உணர்வான் மாயை வலி கெடச் செற்ற வீரர். |
51 |
|
|
உரை
|
|
|
|
|
570. |
முன் இருந்து இனிய தேற்று மூத்தவர் எண்ணி எண்ணிப் பன்னு ஐந்து உறுப்பில் காலம் அறிந்து பனுவல் மாந்தர் பின்னும் முன் நோக்கும் சூழ்ச்சிப் பெருந்தகைச் சுமதியோடும் இன் அமுது அனைய கேள்வி மந்திரர் யாரும் சூழ. |
52 |
|
|
உரை
|
|
|
|
|
571. |
கற்று அறி அந்தணாளர் விருத்திகள் கடவுள் தானத்து அற்றம் இல் பூசைச் செல்வம் அறப்புற நடக்கை ஏனைச் செற்றம் இல் குடிகள் மற்றும் அமைச்சரால் தெளித்தும் வெவ்வேறு ஒற்று விட்டு உணர்த்தும் வேறு குறை உண்டேல் ஒறுத்துத் தீர்த்தும். |
53 |
|
|
உரை
|
|
|
|
|
572. |
ஆதி உத்தேசத் தானும் இலக்கண அமைதியானும் சோதனை வகைமையானும் சொன்னநூல் அனுவாதித்து நீதியின் அவற்றால் கண்டித்து அவ்வழி நிறுத்தித் தம்மில் வாதிகள் வாதம் செய்யும் கோட்டிமேல் மகிழ்ச்சி கூர்ந்தும். |
54 |
|
|
உரை
|
|
|
|
|
573. |
பைஉள பகுவால் நாகப் பள்ளியோன் ஆதி வானோர் கைஉள வலியால் அட்ட கடல் அமுது அணைத்தும் வாரிப் பொய் உளம் அகலக் கற்ற புனிதநூல் புலவர் நாவில் செய்உள விளைவித்து ஊட்டத் திருச் செவி தெவிட்ட உண்டும். |
55 |
|
|
உரை
|
|
|
|
|
574. |
தொல்லை நான் மறையோர் சைவர் துறந்தவர் யார்க்கும் இன்பம் புல்ல வான் அமுதம் கைப்பப் பாகநூல் புலவர் அட்ட முல்லை வான் முகையின் அன்ன அறு சுவை முரியா மூரல் நல்ல ஊண் அருத்தி அன்னார் நா விருந்து அமுது செய்தும். |
56 |
|
|
உரை
|
|
|
|
|
575. |
எல்லவன் உச்சி நீத்து எல்லையின் நான்கும் ஆறும் வல்லவர் சூதன் ஓதி வகுத்த மூவாறு கேள்வி சொல்ல உண் மலர்ந்து மேனை மநு முதல் துறை மாண் கேள்வி நல்லன நயந்து கேட்டு நன் பகல் போது நீத்தும். |
57 |
|
|
உரை
|
|
|
|
|
576. |
கலைக் குரை விரிப்பார் என்ன வறுமையில் கல்வி போலப் புலப்படா மருங்கு நல்லார் எந்திரப் புலவன் பூட்டி அலைத்திடு பாவைபோல் நின்று ஆடல் செய் ஆடல் கண்ணும் நலத்தகு பாடல் கண்ணும் நல் அருள் நாட்டம் செய்தும். |
58 |
|
|
உரை
|
|
|
|
|
577. |
இன்னிலை ஒழுகும் தொல்லோர் இயற்றிய தருமம் வேறும் அந் நிலை நிறுத்தும் வேள்வி அறம் பல ஆக்கம் செய்ய நன்னிதி அளித்தும் வேள்வி நடாத்தியும் செல்வம் கல்வி தன் இரு கண்களாகத் தழைத்திட வளர்க்கும் நாளும். |
59 |
|
|
உரை
|
|
|
|
|
578. |
ஒப்புரு முதல் ஈறு இல்லா ஒருத்திதன் சத்தி பெற்ற முப் பெரும் தேவராலே முத் தொழில் நடாத்தும் என்று செப்பலும் புகழ் அன்று என்னில் தென்னவன் கன்னி ஆகி இப்புவி மனுவில் காக்கும் என்பது என் பேதைமைத்தே. |
60 |
|
|
உரை
|
|
|
|
|
579. |
வரை செய் பூண் முலைத் தடாதகை மடவரல் பிராட்டி விரை செய் தார் முடி வேய்ந்து தண் குடை மனு வேந்தன் கரை செய் நூல் வழி கோல் செலக் கன்னி ஆம் பருவத்து அரசு செய்தலால் கன்னி நாடு ஆயது அந் நாடு. |
61 |
|
|
உரை
|
|
|
|
|
580. |
இன்னவாறு உமை அவதரித்து இருந்தனள் என்னாப் பொன் அவாவினர் பெற வெறி பொருனை கால் பொருப்பன் சொன்ன வாய்மை கேட்டு அகம் களி தூங்கினார் தொழுது மின்னுவார் சடை முனிவர் ஓர் வினா உரை செய்வார். |
62 |
|
|
உரை
|
|
|
|
|
581. |
திருந்து நான் மறைச் சென்னியும் தீண்டுதற்கு அரிதாய் இருந்த நாயகி யாவையும் ஈன்ற எம் பிராட்டி விரிந்த அன்பு கூர் தக்கனும் வெற் பனும் பன்னாள் வருந்தி நோற்றலால் அவர்க்கு ஒரு மதலையாய் வந்தாள். |
63 |
|
|
உரை
|
|
|
|
|
582. |
மனித்தன் ஆகிய பூழியன் மகள் என வீங்குத் தனித்த காரணம் யாது எனத் தபனியப் பொதுவில் குனித்த சேவடிக்கு அன்பு உடைக் குடமுனி அருள் கூர்ந்து இனித்தது ஓர் கதை கேண்மின் என்று எடுத்து உரை செய்வான். |
64 |
|
|
உரை
|
|
|
|
|
583. |
விச்சுவாவசு எனும் ஒரு விச்சையன் பயந்த நச்சு வாள் விழி மடந்தை விச்சாவதி நாமம் அச்சு வாகத மொழியினாள் அம்பிகைக்கு அன்பு வைச்சு வாழ் உறு மனத்தினாள் தாதையை வணங்கா. |
65 |
|
|
உரை
|
|
|
|
|
584. |
ஐய அம்பிகை தன்னை யான் அன்பினால் வழிபட்டு உய்ய வேண்டும் என்று ஆளவன் உலகு எலாம் பயந்த ஐயன் மந்திரம் தனை மகள் தனக்கு உபதேசம் செய்ய அந் நெறி ஒழுகுவாள் செப்புவாள் பின்னும். |
66 |
|
|
உரை
|
|
|
|
|
585. |
இறைவி தன்னை ஆதரிப்பதற்கு இம்பரிற் சிறந்த குறைவு இல் நன்னகர் யாது எனக் கூறுவான் கேள்வித் துறை விளங்கினோர் பயில் வது துவாதச முடி வென்று அறைவள் அம்பதி அவனிமேல் சிவபுரம் ஆம் ஆல். |
67 |
|
|
உரை
|
|
|
|
|
586. |
சேடு தாங்கு மூவுலகினுள் சிறந்தன சத்தி பீட மூவிரு பத்து நான்கு அவற்றின் முன் பீடம் மாடம் ஓங்கிய மதுரையாம் மற்றது போகம் வீடும் வேண்டிய சித்தியும் விளைப்பது என்று எண்ணா. |
68 |
|
|
உரை
|
|
|
|
|
587. |
அல்லும் எல்லும் வான் நகர் கதவு அடைப்பு இன்றிச் சுவர்க்கச் செல்வர் அங்கு அடைந்து உமை அருள் சித்தியால் வினையை வெல்லுவார் அதான் எந்தை ஓடு அடைவர்கள் வேண்டி நம் வரம் பல அடைந்தனர் நமர்கள் அந் நகரில். |
69 |
|
|
உரை
|
|
|
|
|
588. |
எம்மை யாரையும் யாவையும் ஈன்ற அம் கயல் கண் அம்மை யாவரே ஆயினும் அன்பின் ஆதரிப்போர் இம்மை ஆகிய போகம் வீடு எண்ணியாங்கு எய்தச் செம்மை ஆகிய இன்னருள் செய்து வீற்று இருக்கும். |
70 |
|
|
உரை
|
|
|
|
|
589. |
என்ற தாதையை இறைஞ்சினாள் அனுச்சை கொண்டு எழுந்தாள் மன்றல் மா மலர் வல்லி போல் வழிக் கொடு கானம் குன்ற மாறு பின் கிடப்ப முன் குறுகினால் அன்பின் நின்ற ஆதி எம் பரையருள் நிறைந்த அந் நகரில். |
71 |
|
|
உரை
|
|
|
|
|
590. |
அடைந்து இளம் பிடி ஆடல் போல் ஆடக கமலம் குடைந்து நான் மறைக் கொழுந்து இடம் கொண்டு உறை குறிப்பால் படர்ந்த பொன் மலை வல்லியைப் பணிந்து வெம் கதிரோன் தொடர்ந்த வான் சுறா மதியமே ஆதியாத் தொடங்கா. |
72 |
|
|
உரை
|
|
|
|
|
591. |
பெரும் பகல் நல் ஊண் கங்குல் ஊண் உதவப் பெற்ற ஊண் நிலை முதல் பல் ஊண் அரும் பொடி எள் ஊண் சாந்திராயணம் ஆனைந்து பால் அறிய நீர் தருப்பை இரும்புதன் நுனிநீர் காலிவை நுகர்ந்து இயல்தரும் பட்டினி உற்றும் வரம்பு உற இராறு திங்களும் நோற்று வாடிமேல் வரும் சுறா மதியில். |
73 |
|
|
உரை
|
|
|
|
|
592. |
சந்நிதி அடைந்து தாழ்ந்து நின்று இள மாந்தளிர் அடிக் காஞ்சி சூழ் கிடந்த மின்னிகர் மருங்குல் இழஇடை நுழையா வெம் முலைச் செம்மலர்க் காந்தள் பொன்னிரை வளைக்கை மங்கலக் கழுத்தில் பூரண மதிக் கலை முகத்தின் இன்னிசை அளி சூழ் இருள் குழல் கற்றை இறைவியை இம் முறை நினையா. |
74 |
|
|
உரை
|
|
|
|
|
593. |
கோலயாழ்த் தெய்வம் பராய்க் கரம் குவித்துக் கொழும் சுடர்ப் பசும் கதிர் விளக்கம் போல நூல் பொல்லம் பொத்து பொன் நிறத்த போர்வை நீத்து அவிழ் கடி முல்லை மாலை மேல் வீக்கிப் பத்தர் பின் கிடப்ப மலர்க்குழல் தோய் சுவர் கிடத்திச் சேலை நேர் விழியாள் ஆடகம் திரித்துத் தெறித்தனள் பண் அறிந்து இசைப்பாள். |
75 |
|
|
உரை
|
|
|
|
|
594. |
ஒளியால் உலகு ஈன்று உயிர் அனைத்தும் மீன் போல் செவ்வி உற நோக்கி அளியால் வளர்க்கும் அம் கயல் கண் அன்னே கன்னி அன்னமே அளியால் இமவான் திருமகளாய் ஆவி அன்ன மயில் பூவை தெளியா மழலைக் கிளி வளர்த்து விளையாட்டு அயரும் செயல் என்னே. |
76 |
|
|
உரை
|
|
|
|
|
595. |
அண்டக் குவை வெண் மணல் சிறு சோறு ஆக்கி தனியே விளையாடும் கொண்டல் கோதாய் படி எழுதல் ஆகா உருவக் கோகிலமே கொண்டல் குடுமி இமயவரை அருவி கொழிக்கும் குளிர் முத்தால் வண்டல் குதலை மகளிரொடும் விளையாட்டு அயரும் வனப்பு என்னே. |
77 |
|
|
உரை
|
|
|
|
|
596. |
வேத முடிமேல் ஆனந்த உருவாய் நிறைந்து விளையாடும் மாதர் அரசே முத்த நகை மானே இமய மட மயிலே மாதர் இமவான் தேவி மணி வடம் தோய் மார்பும் தடம் தோளும் பாத மலர் சேப் புற மிதித்து விளையாட்டு அயரும் பரிசு என்னே. |
78 |
|
|
உரை
|
|
|
|
|
597. |
யாழ் இயன் மொழியால் இவ்வழி பாடி ஏத்தினள் ஆக மெய் உள்ளத்து ஆழிய அன்பின் வலைப்படு கருணை அம் கயல் கண் மட மான் ஓர் சூழிய நுழை மெல் இளம் குழல் குதலைத் தொண்டைவாய் அகவை மூன்று எய்தி வாழ் இளம் குழவி ஆகி ஆலயத்து வந்து நின்றாள் வரம் கொடுப்பாள். |
79 |
|
|
உரை
|
|
|
|
|
598. |
இறைஞ்சி அஞ்சலித்தாள் தன்னை எம் அன்னை யாது வேண்டினை என என்றும் நிறைந்த பேரன்பு நின்னடிப் போதி நீங்கலா நிலைமைத் தந்து அருள் என்று அறைந்தனள் இன்னும் வேண்டுவது ஏது என்று அருள இம் மக உரு ஆகிச் சிறந்து வந்து என்பால் அருள் சுரந்து இருக்கத் திரு உளம் செய் எனப் பணிந்தாள். |
80 |
|
|
உரை
|
|
|
|
|
599. |
சிவ பரம் பரையும் அதற்கு நேர்ந்து அருள்வாள் தென்னவர் மன்னனாய் மலயத் துவசன் என்று ஒருவன் வரும் அவன் கற்பின் துணைவியாய் வருதி அப்போது உன் தவ மகவாக வருவல் என்று அன்பு தந்தனள் வந்த வாறு இது என்று உவமையில் பொதியத் தமிழ் முனி முனிவர்க்கு ஓதினான் உள்ளவாறு உணர்ந்தார். |
81 |
|
|
உரை
|
|
|
|