600. தரை புகழ் தென்னன் செல்வத் தடாதகைப் பிராட்டி                                                       தானே
திரைசெய் நீர் ஞாலம் காத்த செயல் சிறிது உரைத்தேன்                                                       தெய்வ
விரைசெய் பூம் கோதை மாதை விடையவன் மணந்து                                                       பாராண்டு
அரசு செய்து இருந்த தோற்றம் அறிந்தவாறு இயம்பல்                                                       உற்றேன்.
1
உரை
   
601. காய் இரும் பரிதிப் புத்தேள் கலி இருள் உமிப்பச்                                                       சோதி
பாய் இரும் குடை வெண் திங்கள் படர் ஒளி நீழல்                                                       செய்ய
மாயிரும் புவனம் எல்லாம் மனுமுறை உலகம் ஈன்ற
தாய் இளம் குழவி ஆகித் தனி அரசு அளிக்கும்                                                       நாளில்.
2
உரை
   
602. மருங்கு தேய்ந்து ஒளிப்ப செம்பொன் வன முலை                                                இறுமாப்பு எய்தக்
கரும் குழல் கற்றை பானாள் கங்குலை வெளிறு செய்ய
இரங்கு நல் யாழ் மென் தீம் சொல் இன்னகை எம்                                                      பிராட்டிக்
கரும்கடி மன்றல் செய்யும் செவ்வி வந்து அடுத்தது                                                       ஆக.
3
உரை
   
603. பனிதரு மதிக் கொம்பு அன்ன பாவையைப் பயந்தாள்                                                       நோக்கிக்
குனிதர நிறையப் பூத்த கொம்பனாய்க்கு இன்னும்                                                       கன்னி
கனிதரு செவ்வித்து ஆயும் கடி மணப் பேறு இன்று                                                       என்னாத்
துனி தரு நீராள் ஆகிச் சொல்லினாள் சொல்லக்                                                     கேட்டாள்.
4
உரை
   
604. அன்னை நீ நினைந்த எண்ணம் ஆம் பொழுது ஆகும்                                                         வேறு
பின்னை நீ இரங்கல் யான் போய்த் திசைகளும்                                               பெருநீர் வைப்பும்
என்னது கொற்ற நாட்டி மீள் வள் இங்கு இருத்தி                                                      என்னாப்
பொன் அவிர் மலர்க் கொம்பு அன்னாள் பொருக்கு                                            என எழுந்து போனாள்.
5
உரை
   
605. தேம் பரி கோதை மாதின் திரு உளச் செய்தி நோக்கி
ஆம் பரிசு உணர்ந்த வேந்தர் அமைச்சரும் பிறரும்
                                                      போந்தார்
வாம் பரி கடாவித் திண் தேர் வலவனும் கொணர்ந்தான்
                                                      வையம்
தாம் பரி அகல வந்தாள் ஏறினாள் சங்கம் ஆர்ப்ப.
6
உரை
   
606. ஆர்த்தன தடாரி பேரி ஆர்த்தன முருடு மொந்தை
ஆர்த்தன உடுக்கை தக்கை ஆர்த்தன படகம் பம்பை
ஆர்த்தன முழவம் தட்டை ஆர்த்தன சின்னம் தாரை
ஆர்த்தன காளம் தாளம் ஆர்த்தன திசைகள் எங்கும்.
7
உரை
   
607. வீங்கிய கொங்கை யார்த்த கச்சினர் விழி போல்                                                       தைப்ப
வாங்கிய சிலை ஏறிட்ட கணையினர் வட்டத் தோல்                                                       வாள்
தாங்கிய கையர் வை வேல் தளிர்க்கையர் பிணாத்                                                 தெய்வம் போல்
ஒங்கிய வாயத் தாரும் ஏறினர் உடன் அத் திண்தேர்.
8
உரை
   
608. கிடைப்பன உருளால் பாரைக் ஈண்டு பாதலத்தின் எல்லை
அடைப்பன பரந்த தட்டால் அடையவான் திசைகள்
                                                        எட்டும்
உடைப்பன அண்டம் உட்டி ஒற்றிவான் கங்கை நீரைத்
துடைப்பன கொடியால் சாரி சுற்றுவ பொன் திண்தேர்கள்.
9
உரை
   
609. செருவின் மா தண்டம் தாங்கிச் செல்லும் வெம்                                                   கூற்றம் என்ன
அருவி மா மதநீர் கால வரத்த வெம் குருதி கோட்டால்
கருவி வான் வயிறுக் ஈண்டு கவிழு நீர் ஆயம் காந்து
பருகிமால் வரை போல் செல்வ பரூஉப் பெரும்                                                   தடக்கையானை.
10
உரை
   
610. ஒலிய வார் திரையின் அன்ன ஒழுங்கின யோக மாக்கள்
வலியகால் அடக்கிச் செல்லும் மனம் எனக் கதியில் செல்வ
கலிய நீர் ஞாலம் காப்பான் கடை உக முடிவில் தோற்றம்
பொலியும் வாம் புரவி ஒன்றே போல்வன புரவி வெள்ளம்.
11
உரை
   
611. காலினும் கடிது செல்லும் செலவினர் கடும் கண் கூற்றம்
மேலினும் இகை உண்டாயின் வெகுண்டு வெம் கண்டு                                                       மீளும்
பாலினர் பகுவாய் நாகப் பல்லினும் பில்கு ஆல
வேலினர் வீயா வென்றி வீக்கிய கழல்கால் வீரர்.
12
உரை
   
612. எண் புதைத்து எழுந்த வீரர் இவுளி தேர் யானை                                                       வெள்ளம்
மண் புதைத்தன பதாகை மாலை வெண் கவிகை பீலி
விண் புதைத்தன நுண் தூளி வெயில் விடு பரிதி                                                       புத்தேள்
கண் புதைத்தன பேர் ஓதை கடல் ஒலி புதைத்தது                                                       அன்றே.
13
உரை
   
613. தேர் ஒலி கலினப் பாய்மான் செல ஒலி கொலை                                                வெண் கோட்டுக்
கார் ஒலி வீரர் ஆர்க்கும் கனை ஒலி புனைதார்க்                                                       குஞ்சி
வார் ஒலி கழல் கால் செம் கண் மள்ளர் வன் திண்                                                தோள் கொட்டும்
பேர் ஒலி அண்டம் எல்லாம் பிளந்திடப் பெருத்த                                                       அன்றே.
14
உரை
   
614. பரந்து எழு பூழி போர்ப்பப் பகலவன் மறைந்து முந்நீர்
கரந்தவன் போன்றான் ஆகக் கங்குல் வந்து இறுத்தது                                                       ஏய்ப்பச்
ரந்திரு நிறைய முத்தின் சோதி வெண் குடையும்                                                       வேந்தர்
நிரந்த பூண் வயிர வாளும் நிறைநிலா எறிக்கும்                                                       மன்னோ.
15
உரை
   
615. தேர் நிரை கனலாய்ச் செல்லப் பரிநிரை திரையாய்த்                                                       துள்ள
வார் முரசு ஒலியாய்க் கல்ல வாள் கலன் மீனாய்                                                       கொட்பத்
தார் நிரை கவரிக் காடு நுரைகளாய் ததும்ப வேழம்
கார் நிரை ஆகத் தானை கடல் வழிக் கொண்டது                                                       அன்றே.
16
உரை
   
616. கள் அவிழ் கோதை மாதர் எடுத்து எறி கவரிக் காடு
துள்ள அந்தணர் வாயாசி ஒரு புறந்துவன்றி ஆர்ப்ப
தெள் விளி அமுத கீத ஒரு புறந்து இரண்டு விம்ம
வள்ளை வார் குழை எம் அன்னை மணித் திண் தேர்                                                 நடந்தது அன்றே.
17
உரை
   
617. மீனவன் கொடியும் கான வெம்புலிக் கொடியும்                                                     செம்பொன்
மான வில் கொடியும் வண்ண மயில் தழைக் காடும்                                                      தோட்டுப்
பால் நலம் கரும் கண் செவ்வாய் வெண்ணகை பசும்                                                  தோள் நிம்பத்
தேன் அலம் பலங்கல் வேய்ந்த செல்வி தேர்                                                 மருங்கில் செல்ல.
18
உரை
   
618. மறை பல முகம் கொண்டு ஏத்தி வாய் தடுமாறி எய்ப்ப
நிறை பரம்பரை நீ எங்கள் நிருபர் கோன் மகளாய்                                                       வையம்
முறை செய்து மாசு தீர்ப்பாய் அடியனேன் முகத்து                                                       மாசும்
குறை என நிழற்றும் திங்கள் கொள்கை போல் கவிகை                                                       காப்ப.
19
உரை
   
619. அம் கயல் நோக்கி மான்தேர் அணித்து ஒரு தடம்                                                   தேர் ஊர்ந்து
வெம்கதிர் வியாழச் சூழ்ச்சி மேம்படு சுமதி என்போன்
நங்கை தன் குறிப்பு நோக்கி நாற்பெரும் படையும்                                                       செல்லச்
செம் கையில் பிரம்பு நீட்டிச் சேவகம் செலுத்திச்                                                       செல்ல.
20
உரை
   
620. அலகினால் கருவிச் சேனை ஆழ்கடல் அனைத்தும்                                                     தன்போல்
மலர்தலை உலகம் அன்றி மகபதி உலகம் ஆதி
உலகமும் பிறவும் செல்ல உலப்பிலா வலியது ஆக்கித்
திலக வாண் நுதலாள் மன்னர் திருஎலாம் கவரச்                                                     செல்வாள்.
21
உரை
   
621. கயபதி ஆதி ஆய வடபுலக் காவல் வேந்தர்
புயவலி அடங்க வென்று புழைக்கைமான் புரவி                                                     மான்தேர்
பயன் மதி நுதல் வேல் உண்கண் பாவையர் ஆய                                                       ம்ஓடு
நயமலி திறையும் கொண்டு திசையின் மேல் நாட்டாம்                                                     வைத்தாள்.
22
உரை
   
622. வார் கழல் வலவன் தேரை வலிய கால் உதைப்ப                                                       முந்நீர்
ஊர் கலன் ஒப்பத் தூண்ட உம்பர் கோன் அனிகத்து                                                       எய்திப்
போர் விளையாடு முன்னர் புரந்தரன் இலைந்த                                                       தும்பைத்
தார் விழ ஆற்றல் சிந்தத் தருக்கு அழிந்து அகன்று                                                       போனான்.
23
உரை
   
623. இழை இடை நுழையா வண்ணம் இடை இற ஈங்கு                                                     கொங்கைக்
குழை இடை நடந்து மீளும் கொலைக்கணார் குழுவும்                                                       தான
மழை கவிழ் கடாத்து வெள்ளை வாரண மாவும் கோவும்
தழை கதிர் மணியும் தெய்வத் தருக்களும் கவர்ந்து                                                       மீண்டாள்.
24
உரை
   
624. இவ்வாறு மற்றைத் திசைக் காவலர் யாரையும் போய்த்
தெவ் ஆண்மை சிந்தச் செருச் செய்து திறையும் கைக்                                                       கொண்டு
அவ்வாறு வெல்வாள் என மூன்று அரண் அட்ட மேருக்
கைவார் சிலையான் கயிலைக் கிரி நோக்கிச் செல்வாள்.
25
உரை
   
625. சலிக்கும் புரவித் தம் தேர் உடைத் தம் பிராட்டி
கலிக்கும் பல தூரியம் கைவரை தெய்வத் திண்தேர்
வலிக்கும் பரி மள்ளர் வழங்கு ஒலி வாங்கி நேரே
ஒலிக்கும் படி கிட்டினள் ஊழிதோர் ஓங்கு ஓங்கல்.
26
உரை
   
626. வானார் கயிலை மலையான் மகள் தன்னை நீத்துப்
போனாள் வந்தாள் என்று அருவிக் கண் புனலுக்கு                                                       அந்நீர்
ஆனா ஒலியால் அனை வா என்று அழைத் தன் தேசு
தான நகையால் தழீஇ எதிர் ஏற்பச் சென்றாள்.
27
உரை
   
627. கிட்டிப் பொருப்பைக் கிரியோடு கிரிகள் தாக்கி
முட்டிப் பொருதால் என வேழ முழங்கிப் பாயப்
புட்டில் புறத்தார் மறத்தார் கணை பூட்டு இல்லார்
வட்டித்து உரு மேறு என ஆர்த்து வளைந்து                                                    கொண்டார்.
28
உரை
   
628. ஓடித் திருமா மலைக் காவலர் உம்பர் ஆர்க்கும்
நாதிப் பணிதற்கு அரிது ஆகிய நந்தி பாதம்
கூடிப் பணிந்து இத்திறம் கூறலும் கொற்ற ஏனம்
தேடிக் கிடையான் உளம் தேர்ந்தன நந்தி எந்தை.
29
உரை
   
629. வென்றிக் கணத்தை விடுத்தான் கனன் மீது பெய்த
குன்றிக் கணம் போல் சுழல் கண்ணழல் கொப்பளிப்பச்
சென்றிக் கனைய மொழியாள் பெரும் சேனை ஓடும்
ஒன்றிக் கடலும் கடலும் பொருது ஒத்தது அன்றெ.
30
உரை
   
630. சூலம் கண் மழுப் படை தோமரம் நேமி பிண்டி
பாலங்கள் கழுக் கடை வாள் படை தண்டம் நாஞ்சில்
ஆலம் கவிழ் கின்ற அயில் படை வீசி ஊழிக்
காலம் கலிக்கும் கடல் போன்ற களமர் ஆர்ப்பு.
31
உரை
   
631. எறிகின்றன ஓச்சுவ எய்வன ஆதி ஆகச்
செறிகின்றன பல் படை செந் நிறப் புண்ணீர் மூழ்கிப்
பறிகின்றனவும் பிழைக் கின்றனவும் பட்டுத் தாக்கி
முறி கின்றனவும் முயன்றார் வினைப் போகம் ஒத்த.
32
உரை
   
632. தெரிசிக்க வந்த சில தேவர் சிறைப் புள் ஊர்தி
வெருவிப் பறந்த ஒழிந்தோர் விலங்கு ஊர்தி மானம்
கருவிப் படையால் சிதைப் பட்டன கலன் ஊர்தி
குருதிப் புனலுக்கு அது கொற்றவை உண்டது என்ன.
33
உரை
   
633. பொரு கின்றது கண்டு இச் சாதரர் போகம் வீடு
தருகின்றவனைத் தொழ வான் நெறி சார்ந்து நேரே
வருகின்றவர் வேறு வழிக் கொடு போவர் அன்புக்கு
உருகின்ற தளிர் மெல் அடியா ரொடு மூற்ற அஞ்சா.
34
உரை
   
634. திங்கள் படை செம் கதிரோன் படை சீற்றம் ஏற்ற
அங்கிப் படை தீம் புனல் ஆன் படை நார சிங்க
துங்கப் படை சிம்புண் நெடும் படை சூறைச் செல்வன்
வெம் கண் படை பன்னக வெம்படை மாறி விட்டார்.
35
உரை
   
635. கொட்புற்று அமரா துமிக் கொள்கையர் தம்மின் நந்தி
நட்பு உற்றவர் கைப் படை தூள் பட ஞான மூர்த்தி
பெட்புற்று அருள வரும் எங்கள் பிராட்டி வெய்ய
கட்புற்று அரவில் கணை மாரிகள் ஊற்றி நின்றாள்.
36
உரை
   
636. கையில் படை அற்றனர் கல் படை தொட்டு வீரர்
மெய்யில் படுக என்று விடுக்கு முன் வீரக் கன்னி
பொய்யில் படு நெஞ்சுடையார் தவம் போல மாய
நெற்றியில் படு வச்சிர வேலை நிமிர்த்து வீசி.
37
உரை
   
637. துண்டம் படவே துணித்து அக்கண வீரர் தம்மைத்
தண்டம் கொடு தாக்கினள் சாய்ந்தவர் சாம்பிப்                                                     போனார்
அண்டங்கள் சரா சரம் யாவையும் தானே ஆக்கிக்
கொண்டு எங்கு நின்றாள் வலி கூற வரம்பிற்று ஆமோ.
38
உரை
   
638. படை அற்று விமானமும் பற்று அற அற்றுச் சுற்றும்
தொடை அற்று இகன் மூண்டு எழு தோள் வலி                                                அற்றுச் செற்றம்
இடை அற்று வீர நகை அற்ற அடல் ஏறு போலும்
நடை அற்று அடைவார் நிலை கண்டனன் நந்தி                                                    அண்ணல்.
39
உரை
   
639. உடையான் அடி தாழ்ந்து இவை ஓதலும் ஓத நீத்தச்
சடையான் இள வாண் நகை செய்து தருமச் செம்கண்
விடையான் சிலையான் இகல் வென்றி விளைக்கும்                                                     தெய்வப்
படையான் எழுந்தான் அமர் ஆடிய பாரில் சென்றான்.
40
உரை
   
640. மேவி ஆக அப் பார் இடைப் பாரிட வீரரை அமர்                                                    ஆடி
ஓவிலா வலி கவர்ந்தது மன்றினி உருத்து எவர்                                                    எதிர்ந்தாலும்
தாவிலா வலி கவரவும் மடங்கலின் தளிப் பிணா என                                                    நிற்கும்
தேவியார் திரு உருவமும் சேவகச் செய்கையும் எதிர்                                                    கண்டான்.
41
உரை
   
641. ஒற்றை வார் கழல் சரணமும் பாம்பசைத்து உடுத்த                                             வெம் புலித் தோலும்
கொற்ற வாள் மழுக் கரமும் வெண் நீறணி கோலமும்                                                   நூல் மார்பும்
கற்றை வேணியும் தன்னையே நோக்கிய கருணை                                                செய்திருநோக்கும்
பெற்ற தன் வலப் பாதியைத் தடாதகை பிராட்டியும்                                                 எதிர் கண்டாள்.
42
உரை
   
642. கண்ட எல்லையில் ஒரு முலை மறைந்தது கருத்தில்                                             நாண் மடம் அச்சம்
கொண்ட மைந்திடக் குனிதா மலர்ந்த பூம் கொம்பரின்                                                 ஒசிந்து ஒல்கிப்
பண்டை அன்பு வந்து இறை கொளக் கரும் குழல்                                             பாரமும் பிடர் தாழக்
கெண்டை உண் கண்ணும் புறவடி நோக்க மண்                                      கிளைத்து மின் என நின்றாள்.
43
உரை
   
643. நின்ற மென் கொடிக்கு அகல் விசும்பு இடை அரன்                                            நிகழ்த்திய திருமாற்றம்
அன்று அறிந்த மூதறிவான் ஆம் சுமதி சீறடி பணிந்து                                                 அன்னாய் இக்
கொன்றை அம் சடைய குழகனே நின்மணக் குழகன்                                                 என்றலும் அன்பு
துன்ற நின்றவள் பார்த்து அருள் சிவ பரம் சோதி                                                 மற்று இது கூறும்.
44
உரை
   
644. என்று தொட்டு நீ திசையின் மேல் சயம் குறித்து                                         எழுந்து போந்தனை யாமும்
அன்று தொட்டும் மதுரை விட்டு உனை விடாது                                        அடுத்து வந்தனம் உன்னைத்
தொன்று தொட்ட நான் மறை உரை வழிவரும் சோம                                                 வாரத் ஓரை
நன்று தொட்ட நாண் மணம் செய வருதும் நின்                                          நகர்க்கு நீ ஏகு என்றன்.
45
உரை
   
645. என்ற நாதன் மேல் அன்பையும் உயிரையும் இருத்தி                                                 ஆயம் சூழக்
குன்றம் அன்னது ஓர் மேல் கொடு தூரியும் குரைகடல்                                                 என ஆர்ப்ப
நின்ற தெய்வ மால் வரைகளும் புண்ணிய நீத்தமும்                                                 நீத்து ஏகி
மன்றல் மா மதுரா புரி அடைந்தனள் மதிக் குல                                               விளக்கு அன்னாள்.
46
உரை
   
646. மங்கை நாயகி மங்கலம் எதிர் கொள வந்து வான்                                                 இழிச் செல்வம்
பொங்கு மாளிகை புகுந்தனள் ஆக மேல் புது                                                மணத்திறம் தீட்டி
எங்கும் ஓலை உய்த்து அமைச்சர் மங்க வினை                                         இயைவன அமைக்கின்றார்
அங்கண் மா நகர் எங்கணும் கடி முரசு ஆனைமேல்                                                 அறைவித்தார்.
47
உரை
   
647. கன்னி தன் மண முரசு அறைதலும் கடிநகர் உறைபவர்                                                 கரை கெடத்
துன்னிய உவகையர் கடவுளைத் தொழுகையர் உடலம்                                                 முகிழ்பு எழப்
பன்னிய துதியினர் இயல் எழிலின் மகளிரை அழகு                                                 செய் பரிசு என
இன்னிய எழில் வள நகர் எலாம் செயல்வினை                                         அணிபெற எழில் செய்வார்.
48
உரை
   
648. கோதை ஒடும் பரி சந்தனக் குப்பை களைந்தனர்                                                     வீசுவார்
சீதள மென்பனி நீர்கள் தூய்ச் சிந்தின பூழி                                                   அடக்குவார்
மாதரும்மைந்தரும் இறைமகள் மன்றல் மகிழ்ச்சி                                                   மயக்கினால்
காதணி குழை தொடி கண்டிகை கழல்வன தெரிகிலர்                                               தொழில் செய்வார்.
49
உரை
   
649. மங்கலம் என்று என வினவுவார் வருமதி நாள் என                                                 உரை செய்வார்
தங்களை ஒல்லை தழீ இக் கொல்வார் தாங்கரு மோகை                                               தலைக் கொள்வார்
திங்களின் எல்லையும் ஆறு நாள் ஆறு உகம் என்று                                                 செலுத்துவார்
நங்கை அரும் கடி காண வோ துடித்தன தோள்கள்                                                 நமக்கு என்பார்.
50
உரை
   
650. பித்திகை வெள்ளை புதுக்குவார் பெட்பு உறுவார்களும்                                                 பெட்பு உறச்
சித்திர பந்தி நிறுத்துவார் தெற்றிகள் குங்குமம் நீவு                                                       வார்
வித்திய பாலிகை மென் தழை விரிதலை நீர் நிறை                                                 பொன் குடம்
பத்தியின் வேதி நிரப்புவார் தோரணம் வாயில்                                                 பரப்புவார்.
51
உரை
   
651. நீள் இடை மணி மறுகு எங்கணும் நெடு நடைக்                                             காவணம் நாட்டுவார்
பாளை கொள் கமுகு சுவைக் கழை பழுக் குலைவாழை                                                 ஒழுக்குவார்
கோள் நிறை கொண்டு என வாடிகள் கோத்து                                அணிவார் இசைக் கொடி நிரை
வாள் அரி எழுபரி அடிபட மத்திகை நிரை என                                                 வைப்பர் ஆல்.
52
உரை
   
652. பூவொடு தண்பனி சிந்துவார் பொரி ஒடு பொன்                                                 சுணம் வீசுவார்
பாவை விளக்கு நிறுத்துவார் பைந்தொடை பந்தரின்                                                 ஆற்றுவார்
ஆவணம் என்ன வயிர்ப்புற அணி மறுகு எங்கணும்                                                 அரதனக்
கோவையும் மரகத மாலையும் கோப்பு அமை ஆரமும்                                                 தூக்குவார்.
53
உரை
   
653. அடுகரி சிந்துரம் அப்புவார் அழல் மணி ஓடை                                                    மிலைச் சுவார்
கடு நடை இவுளி கழுத்து அணி கால் அணி கலனை                                                    திருத்துவார்
சுடர் விடு தேர் பரி பூட்டுவார் தொடை ஒடு கவரிகள்                                                    தூக்குவார்
வடுவறு பொன்கல நவமணி மங்கல தீபம் இயற்றுவார்.
54
உரை
   
654. பழையன கலனை வெறுப்பர் ஆல் புதியன பணிகள்                                                   பரிப்பர் ஆல்
குழை பனி நீர் அளை குங்குமம் குவிமுலை புதைபட                                                   மெழுகுவார்
மெழுகிய வீரம் புலர்த்துவார் விரைபடு கலைவைகள்                                                   அப்புவார்
அழகிய கண்ணடி நோக்குவார் மைந்தரை ஆகுலம்                                                   ஆக்குவார்.
55
உரை
   
655. அஞ்சனம் வேல் விழி தீட்டுவார் ஆடவர் மார்பு                                                 இடை நாட்டுவார்
பஞ்சுகள் பாதம் இருத்துவார் பரிபுர மீது இருத்துவார்
வஞ்சியர் தேறல் அருந்துவார் மருங்கு குறளாட                                                     வருந்துவார்
கொஞ்சிய கனிமொழி கழறுவார் குழுவொடு குரவைகள்                                                     குழறுவார்.
56
உரை
   
656. கின்னர மிதுனம் எனச் செல்வார் கிளை கெழு பாண்                                                 ஒடு விறலியர
கன்னியர் அரசை வணங்குவார் கடிமணம் எய்தும்                                                 களிப்பினால்
இன்னிசை யாழொடு பாடுவார் ஈந்தன துகில் விரித்து                                                 ஏந்துவார்
சென்னியின் மீது கொண்டாடுவார் தேறலை உண்டு                                                 செருக்குவார்.
57
உரை
   
657. மன்னவர் மகளிரும் மறையவர் மகளிரும் வந்து பொன்                                                 மாலையைத்
துன்னினர் சோபனம் வினவுவார் தோகை தன் மணி                                               அணி நோக்குவார்
கன்னிதன் ஏவலர் வீசிய காசறை கர்ப்புர வாசமென்
பொன்னறும் கலவையின் மெய் எல்லாம் புதைபட                                        வளன் ஒடும் போவர் ஆல்.
58
உரை
   
658. அம் கனகம் செய் தசும்பின வாடை பொதிந்தன தோடு                                                        அவிழ்
தொங்கல் வளைந்தன மங்கையர் துள்ளிய கவரியின்                                                        உள்ளன
கங்கையும் வாணியும் யமுனையும் காவிரியும் பல துறை                                                        தொறும்
மங்கல தூரிய மார்ப்பன மதமலை மேலன வருவன.
59
உரை
   
659. அங்கு அவர் மனை தொறும் மணவினை அணுகிய                                            துழனியர் என மறைப்
புங்கவரின் இதுண அறுசுவை போனக மடுவினை                                                புரிகுவார்
இங்கு அடுவனபலி அடிகளுக்கு என அதிகளை எதிர்                                                 பணிகுவார்
சங்கரன் அடியரை எதிர் கொள்வார் சபரியை விதி                                                 முறை புரிகுவார்.
60
உரை
   
660. இன்னண நகர் செயல் அணி செய இணை இலி                                            மணமகன் மணவினைக்
கன்னியும் அனையவள் என் இனிக் கடிநகர் செயும்                                               எழில் வளனையாம்
என்ன அரிய நகர் செயல் எழில் இணை என உரை                                            செய்வது எவன் இதன்
முன் இறை மகள் தமர் மண அணி மண்டப வினை                                          செயும் முறை சொல்வாம்.
61
உரை
   
661. கருவி வான் முகில் ஊர்தியைப் பொருத நாள் கலை                                                 மதி மருமாட்டி
செருவில் வாங்கிய விமான மாலைகள் எனத் தெய்வத                                                 வரை எல்லாம்
மருவி அந்நகர் வைகிய தம் இறை மடமகள் தமை                                                 காண்பான்
துருவி நின்று என நட்டனர் எட்டி வான் தொடு நிலை                                                 நெடும் தேர்கள்.
62
உரை
   
662. பளிக்கின் ஏழு உயர் களிறு செய்து அமைத்த பொன்                                               படியது பசும் சோதி
தெளிக்கும் நீலத்தின் ஆளிகள் நிரை மணித் தெற்றியது                                                 உற்றோர் சாய்
வெளிக்குள் ஆடிய ஓவியப் பாவை போல் மிளிர்                                                 பளிங்கால் சோதி
தளிர்க்கும் பித்தியத் இடை இடை மரகதச் சாளரத்                                                 அது மாதோ.
63
உரை
   
663. பல் உருச் செய்த பவளக் கால் ஆயிரம் படைத்து                                                 இந்திர நீலக்
கல் உருத்தலைப் போதிய தடாகக் கவின்                                                 கொளுத்தரமேல
தல் உருக்கிய செம் மணித் துலாத் அதால முதுடற்                                                 பசும் திங்கள்
வில் உருக்கு அகன் மாடம் ஆகிய வேள்வி மண்டபம்                                                 செய்தார்.
64
உரை
   
664. முத்தில் பாளை செய்து அவிர் மரகதத்தின் ஆன்                                         மொய்த்த பாசிலை துப்பின்
கொத்தில் தீம் பழம் வெண் பொனால் கோழரை                                         குயின்ற பூகம் உந்துப் பின்
தொத்தில் தூங்கு பூச் செம் பொன்னால் பழுக்குலை                                        தூக்கிப் பொன்னால் தண்டு
வைத்துப் பாசொளி மரகத நெட்டிலை வாழையும் நிரை                                                     வித்தார்.
65
உரை
   
665. பித்தி மாதவி சண்பகம் பாதிரி பிறவும் மண்டபம்                                                        சூழப்
பத்தியா வளர்த் தளிகள் வாய் திறந்து பண் பாட இன்                                                 மதுக் காலத்து
தத்தியாய் மணம் கவர்ந்து சாளரம் தொறும் தவழ்ந்து                                             ஒழுகு இளம் தென்றல்
தித்தியா நிற்கும் மதுத்துளி தெளித்திட செய்தனர்                                                     உய்யானம்.
66
உரை
   
666. வேள்விச் சாலையும் வேதியும் குண்டமும் மேகலை                                                 ஒடு தொல் நூல்
கேள்விச் சார் பினால் கண்டு கண்ணாடி விடை கிளர்                                                 சுடர் சீவற்சம்
நீள் வில் சாமரம் வலம்புரி சுவத்திக நிரைகுடம் என                                                         எட்டு
வாள் விட்டு ஓங்கும் மங்கலம் தொழில் செய் பொறி                                      வகையினால் நிருமித்தார்.
67
உரை
   
667. மணம் கொள் சாந்தொடு குங்குமப் போது அளாய்                                மான் மதம் பனி நீர் தோய்த்து
இணங்கு சேறு செய் திருநிலம் தடவி வான் இரவி                                                 மண்டலம் நாணப்
பணம் கொள் நாகமா மணிவிளக்கு இருகையும்                                           பாவைகள் எடுத்து ஏந்தக்
கணம் கொள் தாரகை என நவ மணி குயில் கம்பலம்                                                 விதானித்தார்.
68
உரை
   
668. செம் பொன் கோயில் முன் சேண் தொடு காவணம்                                      திசை எலாம் விழுங்கச் செய்
தம் பொன் பலிகை பாண்டில் வாய் முளைத்துத்                                   தெளித்து அம்புயத் அவன் ஆதி
உம்பர் ஏற்ற பொன் கம்பல மேல் விரித்து உள்ளுறத்                                                 தவிசில் இட்டுத்
தும்பை தாழ் சடை ஆன்று அமர்க்கு ஆடனம் சூழ                                            விட்டு அதன் நாப்பண்.
69
உரை
   
669. கற்பகத் தரு வயிரவாள் அரிப் பிடர் கதுவப்                                                 பொன்குறடு ஏற்றி
எற்படும் துகிரால் குடம் சதுரமா இயற்றிய எருத்தத்                                                 தூண்
வில் படும் பளிக்குத் தரம் துப்பினால் விடங்க மேல்                                                 நிலை மூன்றாப்
பொற்ப நூல் வழி விமானம் பல் மணிகளால் பொலியச்                                                 செய்து உள் ஆக.
70
உரை
   
670. அங்கம் ஆறுமே கால் களாய் முதல் எழுத்து அம்                                            பொன் பீடிகை ஆகித்
துங்க நான் மறை நூல்களே நித்திலம் தொடுத்து                                             அசைத் தாம்பு ஆகி
எங்கண் நாயகன் எம் பெருமாட்டி ஓடு இருப்பதற்கு                                                 உருக் கொண்டு
தங்கினால் என நவமணி குயின்ற பொன் தவிசது                                                 சமைத்திட்டார்.
71
உரை
   
671. புரந்தரன் தரு கற்பகம் பொலந்துகில் பூண் முதலிய                                                     நல்கச்
சுரந்தரும் பெறல் அமுத மை வகை அறு சுவை உணா                                                        முதலாகப்
பரந்த தெய்வவான் பயப்பச் சிந்தாமணி பற்பலவும்                                                        சிந்தித்து
இரந்து வேண்டுவ தரத்தர இட்டினார் இந்திர நகர்                                                        நாண.
72
உரை
   
672. தென்னர் சேகரன் திருமகள் திருமணத் திருமுகம்                                                      வரவேற்று
மன்னர் வந்து எதிர் தொழுது கைக் கொண்டு தம்                                            மணி முடி இசை ஏற்றி
அன்ன வாசகம் கேட்டனர் கொணர்ந்து அவர்க்கு                                         அரும் கலம் துகில் நல்கி
முன்னர் ஈர்த்து எழு களிப்பு உற மனத்தினும்                                       முந்தினர் வழிக் கொள்வார்.
73
உரை
   
673. கொங்கர் சிங்களர் பல்லவர் வில்லவர் கோசலர்                                                       பாஞ்சாலர்
வங்கர் சோனகர் சீனர்கள் சாளுவர் மாளவர்                                                       காம்போசர்
அங்கர் மாகதர் ஆரியர் நேரியர் அவந்தியர்                                                       வைதர்ப்பர்
கங்கர் கொங்கணர் விராடர் கண் மராடர்கள் கருநடர்                                                       குருநாடர்.
74
உரை
   
674. கலிங்கர் சாவகர் கூவிளர் ஒட்டியர் கடாரர்கள்                                                       காந்தாரர்
குலிங்கர் கேகயர் விதேகர்கள் பௌரவர் கொல்லர்கள்                                                       கல்யாணர்
தெலுங்கர் கூர்ச்சரர் மச்சர்கள் மிலேச்சர்கள்                                         செஞ்சையர் முதல் ஏனை
புலம் கொள் மன்னரும் துறை தொறும் இடைந்து பார்                                            புதை பட வருகின்றார்.
75
உரை
   
675. இத்தகைப் பல தேய மன்னவர்களும் எள் இடம்                                                பெறாது ஈண்டிப்
பைத்த ஆழிபோல் நிலமகள் முதுகு இறப் பரந்த                                                தானையர் ஆகித்
தத்த நாட்டு உள பலவகை வளன் ஒடும் தழீஇப் பல                                                   நெறி தோறும்
மொய்த்து வந்தனர் செழியர் கோன் திருமகள் முரசு                                                அதிர் மணமூதூர்.
76
உரை
   
676. வந்த காவலர் உழையர் சென்று உணர்த்தினர் வருக                                             என வருகு உய்ப்பச்
சந்த வாளரிப் பிடர் அணை மீது அறம் தழைத்து                                           அருள் பழுத்து ஓங்கும்
கந்த நாள் மலர்க் கொம்பினைக் கண்டு கண் களிப்பு                                                 உற முடித்தாமம்
சிந்த வீழ்ந்து அருள் சுரந்திடத் தொழுது போய்த்                                        திருந்து தம் இடம் புக்கார்.
77
உரை
   
677. வரை வளங்களும் புறவினில் வளங்களும் மருதத் தண்                                                  பணை வேலித்
தரை வளங்களும் சலதி வாய் நடைக்கலம் தரு                                              வளங்களும் ஈண்டி
உரை வரம்பு அற மங்கலம் பொலிந்தது இவ்வூரினில்                                                   நால் வேதக்
கரை கடந்தவன் திருமணம் செயவரு காட்சியைப் பகர்                                                       கின்றேன்.
78
உரை
   
678. ஏக நாயகி மீண்டபின் ஞாட்பிகந்து இரசத கிரி எய்தி
நாக நாயக மணி அணி சுந்தர நாயகன் உயிர்க்கு                                                       எல்லாம்
போக நாயகன் ஆகிப் போகம் புரி புணர்ப்பு அறிந்து                                                       அருணந்தி
மாக நாயகன் மால் அயன் உருத்திரர் வரவின் மேல்                                                மனம் வைத்தான்.
79
உரை
   
679. சங்கு கன்னனை ஆதிய கணாதிபர் தமை விடுத்து                                                தனன் அன்னார்
செம் கண் ஏற்றவர் மால் அயன் முதல் பெரும் தேவர்                                                வான் பதம் எய்தி
எங்கள் நாயகன் திருமணச் சோபனம் இயம்பினார்                                                   அது கேட்டுப்
பொங்கு கின்ற பேர் அன்பு பின் தள்ளுறப் பொள்                                                 என வருகின்றார்.
80
உரை
   
680. அஞ்சு கோடி யோசனை புகைந்து திரு மடம் கழன்றவர்                                                  தமைப் போலீர்
அஞ்சு தீ உருத்திரர் புடை அடுத்தவர் அழல் கணால்                                                         பூதங்கள்
அஞ்சு நூறுருத்திரர் அண்டத்து உச்சியர் அரி அயன்                                                     முதல் தேவர்
அஞ்சும் ஆணையும் ஆற்றலும் படைத்தவர் அடு குறள்                                                         படைவீரர்.
81
உரை
   
681. புத்தி அட்டகர் நாலிரு கோடி மேல் புகப் பெய்த                                                       நரகங்கள்
பத்து இரட்டியும் காப்பவர் பார் இடப் படை உடைக்                                                     கூர் மாண்டர்
சத்தி அச்சிவ பரஞ்சுடர் உதவிய சத உருத்திரர்                                                        அன்னார்
உய்த்து அளித்த ஈர் ஐம்பது கோடியர் உருத்திரர் கண                                                          நாதர்.
82
உரை
   
682. பட்ட காரிவாய் அரவு அணிபவர் பசுபதி உருத்திரர்                                                         ஆதி
அட்ட மூர்த்தி கண் மேருவின் அவிர்சுடர் ஆடகர்                                                 தோள் ஏந்தும்
மட்ட அறா மலர் மகன் செருக்கு அடங்கிட                                              மயங்கியவிதி தேற்ற
நிட்டையால் அவன் நெற்றியில் தோன்றிய நீலலோகித                                                        நாதர்.
83
உரை
   
683. பாலம் ஏற்ற செந்தழல் விழி உருத்திரர் பதினொரு                                                  பெயர் வாகைச்
சூலம் ஏற்ற கங்காள கபாலியர் துரகத நெடும் காரி
நீலம் ஏற்ற பைங்கஞ்சுகப் போர்வையின் நெடியவர்                                                     நிருவாணக்
கோலம் ஏற்றவர் எண்மர் ஞாளிப் புறம் கொண்ட                                                 கேத்திர பாலர்.
84
உரை
   
684. செய்ய தாமரைக் கண்ணுடைக் கரியவன் செம்மலர்                                                    மணிப்பீடத்து
ஐயன் வாசவன் ஆதி எண் திசைப்புலத்து அமரர் எண்                                                       வசு தேவர்
மையில் கேள்வி சால் ஏழ் எழு மருத்துக் கண்                                         மருத்துவர் இருவோர்வான்
வெய்ய வாள் வழங்கு ஆறு இரண்டு அருக்கர் ஓர்                                        வெண் சுடர் மதிச் செல்வன்.
85
உரை
   
685. கையும் கால்களும் கண்பெற்றுக் கதி பெற்ற கடும்புலி                                                  முனிச் செல்வன்
பை அராமுடிப் பதஞ்சலி பால் கடல் பருகி மாதவன்                                                        சென்னி
செய்ய தாள் வைத்த சிறு முனி குறு முனி சிவம் உணர்                                                       சனகாதி
மெய் உணர்ச்சி ஓர் வாமதேவன் சுகன் வியாதனார்                                                  அதன் மன்னோ.
86
உரை
   
686. எழுவர் அன்னையர் சித்தர் விச்சாதர் இயக்கர்                                                 கின்னரர் வேத
முழுவரம் புணர் முனிவர் யோகியர் மணி முடித்தலைப்                                                       பல நாகர்
வழு இல் வான் தவ வலி உடை நிருதர் வாள் வலி                                                  உடை அசுரேசர்
குழுவொடும் பயில் பூத வேதாளர் வெம் கூளிகள்                                                      அரமாதர்.
87
உரை
   
687. ஆண்டினோடு அயனம் பருவம் திங்கள் ஆறு இரண்டு                                                       இரு பக்கம்
ஈண்டு ஐம் பொழுது யோகங்கள் கரணங்கள்                                           இராப்பகல் இவற்றோடும்
பூண்ட நாழிகை கணம் முதல் காலங்கள் பொருகடல்                                                      அதிதிக்கு
நீண்ட மால் வரைதிக்கு மேகம் மின் நிமிர்ந்த ஐயம்                                                    பெரும் பூதம்.
88
உரை
   
688. மந்திரம் புவனங்கள் தத்துவம் கலை வன்னங்கள் பதம்                                                         வேதம்
தந்திரம் பல சமயநூல் புறம் தழீஇச் சார்ந்த நூல்தரும்                                                         ஆதி
முந்திரங்கிய சதுர்விதம் சரியையே முதலிய சதுட் பாதம்
இந்திரங்கு நீர் முடியவர் அடியவர் இச்சியா எண்                                                         சித்தி.
89
உரை
   
689. ஆயிரம் கடல் அனையவாய் பரந்து எழு ஆயிரம்                                                    அனிகத்துள்
ஆயிரம் கதிர் அனையராய் உருத்திரர் அந்தரத்தவர்                                                     அண்டம்
ஆயிரம் தகர் பட்டெனத் துந்துபி ஆயிரம் கலந்து                                                     ஆர்ப்ப
ஆயிரம் சதகோடி யோசனை வழி அரைக் கணத்து                                                இடைச் செல்வார்.
90
உரை
   
690. சித்தம் தேர் முனி வேந்தரும் தேவரும் சிவன் உருத்                                                      தரித்தோரும்
தத்தம் தேர் முதல் ஊர்தியர் வார் திகழ் சந்தன                                                மணிக் கொங்கைக்
கொத்தம் தேமலர் குழல் மனை ஆரோடும் குளிர் வீசும்                                                    பாறாச் சென்று
அத்தம் தேரிடை ஆள் பங்கன் அணிவரைக் அணியராய்                                                      வருகின்றார்.
91
உரை
   
691. இழிந்த ஊர்தியர் பணிந்து எழும் யாக்கையர் இறைபுகழ்                                                    திருநாமம்
மொழிந்த நாவினர் பொடிப்பு எழும் மெய்யினர்                                         முகிழ்த்த கை முடியேறக்
கழிந்த அன்பினர் கண் முதல் புலம் கட்கும் கருணை                                               வான் சுவை ஊறப்
பொழிந்த ஆனந்தத் தேன் உறை திருமலைப் புறத்து                                          வண்டு என மொய்த்தார்.
92
உரை
   
692. விரவு வானவர் நெருக்கு அற ஒதுக்குவான் வேத்திரப்                                                   படை ஓச்சி
அரவு வார் சடை நந்தி எம் பிரான் அவர் அணிமணி                                                 முடி தாக்கப்
பரவு தூளியில் புதைபடு கயிலை அம் பருப்பதம் பகல்                                                 காலும்
இரவி மண்டலத்து ஒடுங்கும் நாள் ஒடுங்கிய இந்து                                                 மண்டலம் மானும்.
93
உரை
   
693. வந்த வானவர் புறநிற்ப நந்தி எம் வள்ளல் அங்கு உள்                                                      எய்தி
எந்தை தாள் பணிந்து ஐய விண்ணவர் எலாம்                                           ஈண்டினர் என ஈண்டுத்
தந்தி என்ன வந்து அழைத்து வேத்திரத்தினால்                                         தராதரம் தெரிந்து உய்ப்ப
முந்தி முந்தி வந்து இறைஞ்சினர் சேவடி முண்டக முடி                                                          சூட.
94
உரை
   
694. தீர்த்தன் முன் பணிந்து ஏத்து கின்றார்களில் சிலர்க்குத்                                                 தன் திருவாயின்
வார்த்தை நல்கியும் சிலர்க்கு அருள் முகிழ் நகை                                         வழங்கியும் சிலர்க்குக் கண்
பார்த்து நீள் முடி துளக்கியும் சிலர்க் அருள் பரி                                           சிறந்து எழுந்து அண்டம்
காத்த கண்டன் ஓர் மண்டபத்து இடைப்புக்குக் கடி                                          மணக் கவின் கொள்வான்.
95
உரை
   
695. ஆண்ட நாயகன் திரு உளக் குறிப்பு உணர்ந்து அளகை                                                 நாயகன் உள்ளம்
பூண்ட காதல் மேல் கொண்டு எழு அன்பும் தன் புனித                                             மெய்த் தவப் பேறும்
ஈண்ட ஆங்கு அணைந்து எண் இலா மறைகளும்                                           இருவரும் முனி வோரும்
தீண்டரும் திரு மேனியைத் தன்கையால் தீண்டி                                              மங்கலம் செய்வான்.
96
உரை
   
696. பூந்துகில் படாம் கொய் சகத் தானைபின் போக்கு                                                கோவணம் சாத்தி
ஏந்தி இரட்டை ஞாண் பட்டிகை இறுக்கி வண்டு                                     இரைக்கும் நாள் மலர்க் குஞ்சி
வேய்ந்து கற்பகப் புது மலர்ச் சிகழிகை இலைந்து நீறு                                                 அணி மெய்யில்
சாந்த மான் மதம் தண் பனி நீரளாய்த் தடக்கையான்                                                 அட்டித்தான்.
97
உரை
   
697. இரண்டு செம் சுடர் நுழைந்து இருந்தால் என இணை                                             மணிக் குழைக் காதில்
சுருண்ட தோடு பொன் குண்டலம் திணி இருள் துரந்து                                               தோள் புறம் துள்ள
மருண்ட தேவரைப் பரம் என மதிப்பவர் மையல் வல்                                                 இருண் மான
இருண்ட கண்ட மேல் முழுமதி கோத்து என இணைத்த                                                 கண்டிகை சாத்தி.
96
உரை
   
698. வலம் கிடந்த முந்நூல் வரை அருவியின் வயங்கு                                            மார்பிடைச் சென்னித்
தலம் கிடந்த வெண் திங்கள் ஊற்று அமுது எனத்                                          தரளம் ஆல் இலை சாத்தி
இலங் கிடந்த மாலிகைப் பரப்பிடை இமைத்து இருண்                                             முகம் பிளந்து ஆரம்
கலம் கிடந்த பால் கடல் முளைத்து எழும் இளம் கதிர்                                              எனக் கவின் செய்து.
99
உரை
   
699. திசை கடந்த நாற் புயங்களில் பட்டிகை சேர்த்து                                           வாள் எறிக்கும் தோள்
நசை கடந்த நல்லார் மனம் கவர்ந்து உயிர் நக்க                                                அங்கதம் சாத்தி
அசை கடங் கலுழ் வாரண உரிவை நீத்து அணிகொள்                                                உத்தரியம் பெய்
திசை கடந்த மந்திர பவித்திர எடுத்து எழில் விரல்                                                 நுழைவித்து.
100
உரை
   
700. உடுத்த கோவண மிசை பொலம் துகில் அசைத்து                                             உரகம் ஐந்தலை நால
இடுத்த போல் வெயின் மணித்தலைக் கொடுக்கு மின்                                           விட இரும்புறம் தூக்கித்
தொடுத்த தார் புயம் தூக்கி நூபுரம் கழல் சொல் பதம்                                               கடந்து அன்பர்க்கு
அடுத்த தாள் இட்டு இருநிதிக் கோமகன் அரும் தவப்                                                 பயன் பெற்றான்.
101
உரை
   
701. செம் கண் மால் அயன் இந்திரன் முதல் பெரும்                                         தேவர்க்கும் யாவர்க்கும்
மங்கலம் தரு கடைக் கணா அகன் ஒரு மங்கலம்                                             புனைந்தான் போல்
சங்கை கொண்டு உகும் போதரன் முதுகின் மேல்                                     சரணம் வைத்து எதிர் போந்த
துங்க மால் விடை மேல் கொடு நடந்தனன் சுரர்கள்                                             பூ மழை தூர்த்தார்.
102
உரை
   
702. அந்தரத் தவர் அந்தர துந்துபி ஐந்தும் ஆர்த்தனர்                                                       சூழ
வந்த அரக்கரும் இயக்கரும் பூதரும் மங்கல இயம்                                                     கல்லக்
கொந்தலர்க் கரும் குழல் அர மடந்தையர் கொளைவல்                                              விஞ்சையர் தாளம்
தந்து அசைத்திட மலர்ந்த பூம் கொம்பர் போல்                                        சாய்ந்து அசைந்தனர் ஆட.
103
உரை
   
703. துங்கம் ஆயிரம் கருவி ஆயிரம் மலைத் தூங்கி                                            இருண் முழை தோறும்
சிங்கம் ஆயிரம் வாய் திறந்து ஆர்த்து எனச்சிரங்கள்                                            ஆயிரம் திண் தோள்
அங்கம் ஆயிரம் ஆயிரம் உடையவன் ஆயிரம் முகம்                                                 தோறும்
சங்கம் ஆயிரம் ஆயிரம் ஆயிரம் தடக்கையும்                                                 பிடித்து ஊத.
104
உரை
   
704. போக்கு மாயவன் புணர்ப்பையும் இருள் மலப்                                     புணர்ப்பையும் கடந்து எம்மைக்
காக்கும் நாயகன் அருச்சனை விடாது அருள் கதி                                               அடைந்துளவாணன்
தூக்கு நேர் பட ஆயிரம் கரங்களால் தொம் என                                                 முகம் தொறும்
தாக்க வேறு வேறு எழுகுட முழா ஒலி தடம் கடல்                                                 ஒலி சாய்ப்ப.
105
உரை
   
705. முனிவர் அஞ்சலி முகிழ்த்த செம் கையினர் மொழியும்                                               ஆசியர் உள்ளம்
கனி அரும்பிய அன்பினர் பரவ உட் கருத்து ஒரு                                             வழிக் கொண்டோர்
துனிவரும் கண நாதர் கொட்டதிர் கரத் துணையினர்                                                 மழைபோலப்
பனி வரும் கணர் ஆடிய தாளினர் பாடுநாவினர் ஏத்த.
106
உரை
   
706. இந்திரன் மணிக் களாஞ்சி கொண்டு ஒரு மருங்கு                                          எய்த மெல் இலை வாசம்
தந்தில் அங்கு பொன் அடைப்பை கொண்டு ஈசன்                                       ஒர் சார் வர மருத்துக் கோ
வந்திரம் ஒலி ஆலவட்டம் பணி மாறாவா அழல் தூபம்
தந்து நேர நீர்க் கடவுள் பொன் கோடிகம் தாமரைக்                                                 கரம் தூக்க.
107
உரை
   
707. நிருதி ஆடி கொண்டு எதிர்வர அடிக்கடி நிதி முகத்து                                                 அளகைகோன்
கருதி ஆயிரம் சிதறிடத் தண்டி நன்கு ஆம் சுகர்                                                 வினை செய்யப்
பரிதி ஆயிரம் பணாடவி உரகரும் பல்மணி விளக்கு                                                     ஏந்தச்
சுருதி நாயகன் திருவடி முடியின் மேல் சுமந்து பின்                                                 புறம் செல்ல.
108
உரை
   
708. கங்கை காவிரி ஆதிய நவநிதிக் கன்னியர் குளிர்                                                 தூங்கப்
பொங்குவார் திரைக் கொழுந்து எனக் கவரிகள் புரட்ட                                            வெண் பிறைக் கீற்றுத்
துங்க வாள் எயிற்று இருள் உடல் குழி விழிச்சுடர்                                              அழல் செம்பங்கிச்
சங்கவார் குழைக் குறிய குண்டோதரன் தண் மதி                                                 குடை தாங்க.
109
உரை
   
709. இடிக்கும் வான் உரு மேறுயர் நெடும் கொடி எகின                                            வெண் கொடி ஞாலம்
முடிக்கும் ஊழி நாள் உளர் கடும் கால் என மூச் செறி                                                 விடநாகம்
துடிக்க வாய் விடு முவண வண் கொடி முதல் சூழ்ந்து                                                 சேவகம் செய்யும்
கொடிக் குழாத்தின் உள் கொடி அரசாய் விடைக்                                      கொடி புடை பெயர்ந்து ஆட.
110
உரை
   
710. கண் நுதல் பிரான் மருங்கு இரு கடவுளர் கப்பு விட்டு                                                 என தோன்றும்
வண்ண முத்தலைப் படை எடுத்து ஒரு குட வயிறு                                             உடைப் பெரும் பூதம்
பண்ண அப்பதி நெண் படைக் கலமும் தன் பக்கமாச்                                                 சேவிப்ப
அண்ணன் முச்சுடர் முளைத்து ஒரு வரை நடந்து                                       அனையது ஓர் மருங்கு எய்த.
111
உரை
   
711. பந்த நான் மறைப் பொருள் திரட்டு என வட பாடல்                                             செய்து எதிர் புட்ப
தந்தன் ஏத்த வான் உயிர் உண உருத்து எழு அடல்                                          விடத்து எதிர் நோக்கும்
அந்தம் ஆதி இலான் நிழல் வடிவமா ஆடியின் நிழல்                                                          போல
வந்த சுந்தரன் சாத்து நீறொடு திரு மாலையும் எடுத்து                                                       ஏந்த.
112
உரை
   
712. அன்னத் தேரினன் அயன் வலப்பாங்கர் அராவலி                                                 கவர் சேன
அன்னத் தேரினன் மால் இடப் பாங்கரு மலர்க் கரம்                                                 குவித்து ஏத்தப்
பொன்னத் தேமலர் கொன்றையான் வெள்ளி அம்                                    பொருப்பொடு எழீஇப் போந்தால்
என்ன தேர் அணி மதுரை மா நகர்ப் புறத்து                                           எய்துவன் அவ்வேலை.
113
உரை
   
713. தேவர்கள் தேவன் வந்தான் செம் கண் மால்                                              விடையான் வந்தான்
மூவர்கண் முதல்வன் வந்தான் முக்கண் எம்பெருமான்                                                       வந்தான்
பூவலர் அயன் மால் காணாப் பூரண புராணன் வந்தான்
யாவையும் படைப்பான் வந்தான் என்று பொன் சின்னம்                                                   ஆர்ப்ப.
114
உரை
   
714. பெண்ணினுக்கு அரசி வாயில் பெருந்தகை அமைச்சர்                                                      ஏனை
மண்ணினுக்கு அரசர் சேனை மன்னவர் பிறரும்                                                      ஈண்டிக்
கண்ணினுக்கு இனியான் தன்னைக் கண்டு எதிர்                                                   கொண்டு தாழ
விண்ணினுக்கு அரசன் ஊரின் வியத்தகு நகரில்                                                   புக்கான்.
115
உரை
   
715. முகில் தவழ் புரிசை மூதூர் முதல் பெரு வாயில் நீந்தி
அகில் தவழ் மாட வீதி வலம் பட அணைவான் ஆக
நகில் தழை பொலம் கொம்பு அன்ன நன்னகர் மகளிர்                                                     அம் பொன்
துகில் தழை மருங்குல் ஆயத் தொகைபுறம் தழுவச்                                                     சூழ்ந்தார்.
116
உரை
   
716. தமிழ் முதல் பதினெண் தேத்து மகளிரும் தாரு                                                      நாட்டின்
அமிழ்த மன்னவரும் முல்லை அம்புயம் குமுதம் நீலம்
குமிழ் நறும் கோங்கு காந்தள் கோழ் இணர் அசோகம்                                                      வாசம்
உமிழ் தர மலர்ந்த நந்த வனம் என ஒருங்கு                                                   மொய்த்தார்.
117
உரை
   
717. எம்மை நீர் விடுதிர்ஏ யோ என்ப போல் கலையும்                                                 சங்கும்
விம்ம நாண் மடனும் உங்கள் நெஞ்சுடை வெளியாறாக
உம்மை நீத்து ஓடும் அந்தோ உரைத்தன முரைத்                                                 தோம் என்று
தம்மை நூபுரம் கால் பற்றித் தடுப்ப போல் ஆர்ப்பச்                                                 சென்றார்.
118
உரை
   
718. கடி அவிழ் கமலக் காடு பூத்தது ஓர் கருணைவாரி
அடிமுதல் முடி ஈறு ஆக அலர் விழிக் குவளை                                                      சாத்திக்
கொடிய செம் பதுமப் போது குழல் இசை சூடுவார்                                                      போல்
தொடி அணி கரங்கள் கூப்பித் துதி என இனைய                                                    சொல்வார்.
119
உரை
   
719. நங்கை என் நோற்றாள் கொல்லோ நம்பியைத்                                             திளைத்தற்கு என்பர்
மங்கையை மணப்பான் என்னோ வள்ளலும் நோற்றான்                                                      என்பர்
அங் கடி மதுரை என்னோ ஆற்றிய தவந்தான்                                                       என்பார்
இங்கு இவர் வதுவை காண்பான் என்ன நாம்                                             நோற்றோம் என்பார்.
120
உரை
   
720. தென்னவன் வருந்தி மேல் நாள் செய்தவப் பேறாப்                                                      பெற்ற
தன் மகள் வதுவை காணத்தவம் செய்தான் இலனே                                                       என்பார்
கன்னிதன் அழகுக் ஏற்ற அழகன் இக் காளை என்பார்
மன்னவன் இவனே அன்றி வேறு இலை மதுரைக்கு                                                      என்பார்.
121
உரை
   
721. நங்கை தன் நலனுக்கு ஏற்ப நம்பியைத் தந்தது இந்தத்
துங்கமா மதி நூல் வல்ல சுமதி தன் சூழ்ச்சி என்பார்
அங்கவள் தவப் பேறு என்பார் அன்னை தன்                                                 கன்னிக்கு அன்றி
இங்கு இவண் மருகன் ஆக எத்தவம் உடையாள்                                                     என்பார்.
122
உரை
   
722. பூந்துகில் நெகிழ்ப்பர் சூழ்வர் புணர் முலை அலைப்பர்                                                 பூசு
சாந்தினை உகுப்பர் நாணம் தலைக் கொண்டார்                                                 போலச் சாய்வார்
கூந்தலை அவிழ்ப்பர் வாரிக் கூட்டுவர் முடிப்பர்                                                      மேனி
மாந்தளிர் எங்கு மாரன் வாளிகள் புதையச் சோர்                                                       வார்.
123
உரை
   
723. தண்ணளி ஒழுக்கம் சார்ந்த குணத்தினைச் சார்ந்தும்                                                        இந்த
வண்ண மென் மலர்கள் என்னே வாளியாய்த் தைத்த                                                       என்பார்
கண் நறும் கூந்தல் வேய்ந்த கடி அவிழ் நீலத்தாரும்
வெண்நகை அரும்பு முல்லை தாமமும் வெறுத்து                                                      வீழ்ப்பார்.
124
உரை
   
724. விம்மிச் செம் மாந்த கொங்கை மின் அனார் சிலர்                                                 வில் காமன்
கை மிக்க கணைஏறுண்டு கலங்கிய மயக்கால் தங்கள்
மைம் மிக்க நெடும் கண் மூரல் வதனமும் அவன்                                                   அம்பு என்றே
தம்மில்தம் முகத்தை நோக்கார் தலை இறக்கிட்டுச்                                                    செல்வார்.
125
உரை
   
725. பற்றிய பைம் பொன் மேனிப் பசப்பது தேறார்                                                 அண்ணல்
ஒற்றை மால் விடையின் மேல் கொண்டு இருந்து நம்                                                 உளத்து மேவப்
பெற்றனம் இது என் கொல் மாயம் பேதை ஈர்                                               பெருமான் நீண்ட
கற்றைவார் சடைப் பூம் கொன்றை இது அன்றோ                                             காண்மின் என்பார்.
126
உரை
   
726. திங்கள் என்று எழுந்து நம்மைச் சுடுவது என் செம்                                                 தீ என்பார்
புங்கவன் சென்னி மீதும் கிடப்பதே போலும் என்பார்
அங்கு அவற்கு இந்த வெப்பம் இலை கொல் என்று                                              அயிற்பார் ஆற்றக்
கங்கை நீர் சுமந்தான் என்பார் அதனையும் காண்மின்                                                       என்பார்.
127
உரை
   
727. கலையொடு நாணம் போக்கிக் கருத்தொடு வண்ணம்                                                     வேறாய்
உலை யொடு மெழுக்கிட்டு என்ன உருகு கண்ணீரர்                                                    ஆகிக்
கொலையொடு பயில் வேல் கண்ணார் குரிசிறன்                                               பவனி நோக்கி
அலை யொடு மதியம் சூடும் ஐயன் மெய் அன்பர்                                                    ஒத்தார்.
128
உரை
   
728. நட்டவர்க்கு இடுக்கண் எய்த நன்றி கொன்றவர் போல்                                                       கையில்
வட்டவாய் தொடியும் சங்கும் மருங்கு சூழ் கலையும்                                                         நீங்க
இட்ட பொன் சிலம்பிட்டு ஆங்கே நன்றியின் இகவார்                                                     போல்கால்
ஒட்டியே கிடப்ப நின்றார் உகுத்த பூம் கொம்பர்                                                      அன்னார்.
129
உரை
   
729. மின்னகு வேல் கணாள் ஓர் விளங்கு இழை விடை                                                   மேல் ஐயன்
புன்னகை போது நோக்கப் போது முப் புரமும்                                                     வேனின்
மன்னவன் புரமும் சுட்ட அல்லவோ கெட்டேன் வாளா
இன்னவை சுடாது போமோ ஏழையேம் புரமும்                                                     என்றாள்.
130
உரை
   
730. உழை விழி ஒருத்தி தன் கண் உரு வெளி ஆகித்                                                      தோன்றும்
குழகனை இரண்டு செம் பொன் கொங்கையும் ஒன்றாய்                                                      வீங்கத்
தழுவுவாள் ஊற்றம் காணா தடமுலை இரண்டே ஆகி
இழை உடை கிடக்க நீங்கி இருக்கை கண்டு                                           இடைபோல் எய்த்தாள்.
131
உரை
   
731. வார் இரும் கொங்கையாள் ஒர் மாதரால் வானோர்                                                      உய்யக்
கார் இருள் விடம் உண்ட அன்று கறுத்ததே அன்று                                                     கொன்றைத்
தார் இரும் சடையார் கண்டம் ஐயன் மீர் தமது                                                     நெஞ்சம்
கார் இரும்பு என்றெ காட்டக் குறி இட்டக் கறுப்பே                                                     என்றாள்.
132
உரை
   
732. பொன்னவிர் சடையான் முன்னே போனது என் நெஞ்சு                                                   தூது ஆய்
அன்னது தாழ்த்தது என் என்று அழுங்குவாள் ஒருத்தி                                                   கெட்டேன்
என்னது நெஞ்சும் போனது என் என்றனள் ஒருத்தி                                                   கேட்ட
மின் அனாள் வேல் கண் சேந்தாள் விளைத்தனள்                                                 அவளும் பூசல்.
133
உரை
   
733. செப்பு இளம் கொங்கையாள் ஓர் தெரிவை நீர்                                            திருநோக்கு எம்பால்
வைப்பது என் மதன் போல் எம்மைச் சுடுவதே                                            அதனுக்கு ஆவி
அப்பொழுது அளித்தால் போல் எம் ஆவியும்                                            அளித்தாள் இன்று
மெய்ப் புகழ் உமக்கு உண்டு இன்றெல் பெண் பழி                                            விளையும் என்றாள்.
134
உரை
   
734. கவன மால் விடையான் தன்னைக் கடைக் கணித்திலன்                                                 என்று ஆங்குஓர்
சுவணவான் கொடியோர் ஓவத் தொழில் வல்லான்                                                 குறுக நோக்கி
இவனை நீ எழுதித் தந்தால் வேண்டுவ ஈவன் என்றாள்
அவனை யார் எழுத வல்லார் என்றனன் ஆவி                                                   சோர்ந்தாள்.
135
உரை
   
735. வலத்து அயன் வரவு காணான் மாலிடம் காணாள்                                                   விண்ணோர்
குலத்தையும் காணாள் மண்ணோர் குழாத்தையும்                                               காணாள் ஞானப்
புலத்தவர் போலக் கண்ட பொருள் எலாம் மழுமான்                                                   செம்கைத்
தலத்தவன் வடிவாக் கண்டாள் ஒருதனித்து ஐயன்                                                     மாது.
136
உரை
   
736. முன் பெற்றம் காலில் செல்ல வண்ணலை முன்போய்                                                     காண்பான்
பின் பற்றி ஆசைப் பாசம் பிணித்து எழ ஓடு வாள்                                                       ஓர்
பொன் பெற்ற முலையாள் கொம்பர் அகுமலர் போலத்                                                      தாளின்
மின் பெற்ற காஞ்சி தட்ப விலங்கொடு நடப்பாள்                                                      ஒத்தாள்.
137
உரை
   
737. விதுக்கலை இலைந்து செம் கண் விடையின் மெல்                                                வரும் ஆனந்த
மதுக் கடல்தனைக் கண் வாயான் முகந்து உண்டு                                                மகளிர் எல்லாம்
புதுக்கலை சரிவது ஓரார் புரிவளை கழல்வது ஓரார்
முதுக் குறை அகல்வது ஓரார் மூழ்கினார் காம                                                   வெள்ளம்.
138
உரை
   
738. பைத்தழகு எறிக்கு மாடப் பந்தி மேல் நின்று                                                  காண்பார்
கைத்தலம் கூப்பி ஆங்கே கண்களும் நோக்கி ஆங்கே
சித்தமும் குடிபோய்ச் சொல்லும் செயலும் மாண்டு                                                 அம்கண் மாண
வைத்த மண் பாவை ஓடு வடிவுவேறு அற்று நின்றார்.
139
உரை
   
739. அன்பட்ட புரமும் காமன் ஆகமும் சுட்டதீ இம்
மின் பட்ட சடிலத்து அண்ணல் மெய் என்பது அறியார்                                                     நோக்கிப்
பொன் பட்ட கலனும் மெய்யும் பொரிகின்றார்                                               அவனைப் புல்லின்
என் பட்டு விடுமோ ஐய ஏழையர் ஆவி அம்மா.
140
உரை
   
740. கொடிகள் பூத்து உதிர்ந்த போதில் கொம்பனார்                                               கலையும் சங்கும்
தொடிகளும் சுண்ணத்தூளும் சுரர் பொழி மலரும் நந்தி
அடிகள் கைப் பிரம்பு தாக்கச் சிந்திய வண்ட வாணர்
முடிகளின் மணியும் தாரும் குப்பையாய் மொய்த்தவீதி.
141
உரை
   
741. துன்னிய தருப்பை கூட அரசிலை துழாவித் தோய்த்துப்
பொன் இயல் கலச நன்னீர் பூசுரர் வீசும் அன்னார்
பன்னியர் வட்டமாக வானவில் பதித்தால் என்ன
மின்னிய மணி செய் நீரா சனக்கலம் விதியால் சுற்ற.
142
உரை
   
742. கொடி முரசு சாடி செம் பொன் குட மணி நெய்யில்                                                         பூத்த
கடி மலர் அனைய தீபம் அங்குசம் கவரி என்னும்
படிவ மங் கலங்கள் எட்டும் பரித்து நேர் பதுமக்                                                      கொம்பர்
வடிவினார் வந்து காட்ட மாளிகை மருங்கில்                                                   செல்வான்.
143
உரை
   
743. செப்புரம் கவர்ந்த கொங்கை அரம்பையர் தீபம்                                                   காட்டும்
துப்புர அன்பினார்க்கு தூய மெய் ஞானம் நல்கும்
முப்புரம் கடந்தான் தன்னை மும் முறை இயங்கள்                                                   ஏங்க
கப்புர விளக்கம் தாங்கி வலம் செயக் கருணை                                                   பூத்தான்.
144
உரை
   
744. கோயில் முன் குறுகலோடும் ஐம்புலக் குறும்பு தேய்த்த
தூய நால் வேதச் செல்வர் சுவத்திகள் ஓத நந்தி
சேஇரும் தடக்கைப் பற்றிச் செம்கண் ஏறு இழிந்து                                                      நேர்ந்து
மாயனும் அயனும் நீட்டும் மலர்க்கரம் இருபால் பற்றி.
145
உரை
   
745. எதிர்ந்தரு மறைகள் காணாது இளைத்து அடி சுமந்து                                                   காணும்
முதிர்ந்த அன்பு உருவம் ஆன பாதுகை முடிமேல்                                                   சாத்தி
பதிந்தவர் தலை மேல் கொண்டு பாசவல் வினை                                                  தீர்த்து உள்ளம்
பொதிர்ந்து பேர் இன்பம் நல்கும் பொன்னடிப் போது                                                   சாத்தி.
146
உரை
   
746. பையா உரியின் அன்ன நடைப் படாம் பரப்பிப் பெய்த
கொய் அவிழ் போது நீத்தம் குரைகழல் அடி                                                      நனைப்பத்
தெய்வ மந்தார மாரி திரு முடி நனைப்பத் தென்னர்
உய்ய வந்து அருளும் ஐயன் உள் எழுந்து அருளும்                                                      எல்லை.
147
உரை
   
747. மங்கல மகளி ரோடும் காஞ்சன மாலை வந்து
கங்கையின் முகந்த செம்பொன் கரக நீர் அனையார்                                                   ஆக்கத்
திங்கள் அம் கண்ணி வேய்ந்த சிவபரம் சோதி பாத
பங்கயம் விளக்கி அந்நீர் தலைப் பெய்து பருகி                                                   நின்றாள்.
148
உரை
   
748. பாத நாள் மலர் மேல் ஈரம் புலர வெண் பட்டான்                                                        நீவிச்
சீத மென் பனி நீராட்டி மான் மத சேறு பூசித்
தாது அவிழ் புது மந்தாரப் பொன் மலர் சாத்திச்                                                        சென்னி
மீது இரு கரங்கள் கூப்பி வேறு நின்று இதனைச்                                                     சொன்னாள்.
149
உரை
   
749. அருமையால் அடியேன் பெற்ற அணங்கினை வதுவை                                                      செய்தித்
திருநகர் திருவும் கன்னித் தேயமும் கைக் கொண்டாள்                                                      என்று
உரை செய்தாள் அதற்கு நேர்வார் உள் நகை உடையர்                                                      ஆகி
மருகன் ஆரியங்கள் ஆர்ப்ப வதுவை மண்டபத்தைச்                                                      சேர்ந்தார்.
150
உரை
   
750. அருத்த நான் மறைகள் ஆர்ப்ப அரி மணித் தவிசில்                                                         ஏறி
நிருத்தன் ஆங்கு இருந்து சூழ நின்ற மால் அயனை                                                         ஏனை
உருத்திராதி யரை பின்னும் ஒழிந்த வானவரைத் தத்தம்
திருத்தகு தவிசின் மேவத் திருக் கடை நாட்டம்                                                      வைத்தான்.
151
உரை
   
751. விண்டல வானோர் ஏனோர் இடைதலான் ஞாலச்                                                      செல்வி
பண்டையள் அன்றி இன்று பரித்தனள் பௌவம் ஏழும்
உண்டவன் தன்னைத் தான் இன்று உத்தரத்து                                                   இருத்தினானோ
அண்டர் நாயகன் தன் ஆனை வலியினோ அறியேம்                                                   அம்மா.
152
உரை
   
752. மாமணித் தவிசில் வைகி மணவினைக்கு அடுத்த ஓரை
தாம் வரும் அளவும் வானத் தபனிய மலர்க் கொம்பு                                                   அன்னார்
காமரு நடன நோக்கிக் கருணை செய்து இருந்தான்                                                   இப்பால்
கோமகள் வதுவைக் கோலம் புனைதிறம் கூறல்                                                   உற்றேன்.
153
உரை
   
753. மாசு அறுத்து எமை ஆனந்த வாரி நீராட்டிப்                                                   பண்டைத்
தேசு உரு விளக்கவல்ல சிவபரம் பரையைச்                                                   செம்பொன்
ஆசனத்து இருத்தி நானம் அணிந்து குங்குமச் சேறு                                                   அப்பி
வாச நீராட்டினார் கண் மதிமுகக் கொம்பர் அன்னார்.
154
உரை
   
754. முரசொடு சங்கம் ஏங்க மூழ்கிநுண் தூசு சாத்தி
அரசியல் அறத்திற்கு ஏற்ப அந்தணர்க்கு உரிய தானம்
விரை செறி தளிர்க்கை ஆர வேண்டுவ வெறுப்பத்                                                   தந்து
திரை செய் நீர் அமுதம் அன்னாடு திருமணக் கோலம்                                                   கொள்வாள்.
155
உரை
   
755. செம் மலர்த் திருவும் வெள்ளைச் செழுமலர்த் திருவும்                                                   தங்கள்
கைமலர்த் தவப் பேறு இன்று காட்டுவார் போல                                                   நங்கை
அம்மலர் அனிச்ச மஞ்சு மடியில் செம் பஞ்சு தீட்டி
மைம் மலர்க் குழல் மேல் வாசக் காசறை வழியப்                                                   பெய்து.
156
உரை
   
756. கொங்கையின் முகட்டில் சாந்தம் குளிர் பனிநீர்                                               தோய்த்து அட்டிப்
பங்கய மலர் மேல் அன்னம் பவளச் செவ்வாய் விட்டு                                                   ஆர்ப்பத்
தங்கிய என்ன வார நூபுரம் ததும்பச் செங்கேழ்
அங்கதிர்ப் பாதசாலம் கிண் கிணி அலம்பப் பெய்து.
157
உரை
   
757. எண் இரண்டு இரட்டி கோத்த விரிசிகை இருபத்து                                                   ஒன்றில்
பண்ணிய கலாபம் ஈர் ஏழ் பருமநால் இரண்டில் செய்த
வண்ணமே கலை இரண்டில் காஞ்சி இவ் வகை ஓர்                                                   ஐந்தும்
புண்ணியக் கொடி வண்டு ஆர்ப்ப பூத்த போல்                                                   புலம்பப் பூட்டி.
158
உரை
   
758. பொன் மணி வண்டு வீழ்ந்த காந்தளம் போது போல
மின் மணி ஆழி கோத்து மெல் விரல் செங்கைக் ஏற்ப
வன் மணி வைர யாப்புக் கடகமும் தொடியும் வானத்
தென் மணிக் கரங்கள் கூப்ப இருதடம் தோளில் ஏற்றி.
159
உரை
   
759. மரகத மாலை அம் பொன் மாலை வித்துரும மாலை
நிரைபடுவான வில்லின் இழல் பட வாரத் தாமம்
விரைபடு களபச் சேறு மெழுகிய புளகக் கொங்கை
வரைபடு அருவி அன்றி வனப்பு நீர் நுரையும் மான்.
160
உரை
   
760. உருவ முத்து உருவாய் அம் முத்து உடுத்த பல் காசு                                               கோளாய்
மருவக் காசு சூழ்ந்த மாமணி கதிராய்க் கங்குல்
வெருவ விட்டு இமைக்கும் ஆர மேருவின் புறம்                                                    சூழ்ந்து ஆடும்
துருவச் சக்கரம் போல் கொங்கை துயல் வர விளங்கச்                                                       சூட்டி.
161
உரை
   
761. கொடிக் கயல் இனமாய் நின்ற கோட்சுறா வேறும் வீறு
தொடிக் கலை மதியும் தம் கோன் தொல் குல                                           விளக்காய்த் தோன்றும்
பிடிக் இரு காதின் ஊடு மந்தணம் பேசு மாப் போல்
வடிக்குழை மகரத் தோடு பரிதி வாண் மழுங்கச்                                                       சேர்த்து.
162
உரை
   
762. மழைக்கும் மதிக்கும் நாப்பண் வானவில் கிடந்தால்                                                       ஒப்ப
இழைக்கும் மா மணி சூழ் பட்டம் இலம்பக இலங்கப்                                                       பெய்து
தழைக்குமா முகிலை மைந்தன் தளை இடல் காட்டு மா                                                       போல்
குழைக்கு நீர்த் தகர ஞாழல் கோதை மேல் கோதை                                                       ஆர்த்து.
163
உரை
   
763. கற்பகம் கொடுத்த விந்தக் காமரு கலன்கள் எல்லாம்
பொற்ப மெய்ப் படுத்து முக்கண் புனிதனுக்கு ஈறு                                                       இலாத
அற்புத மகிழ்ச்சி தோன்ற அழகு செய்து அமையம்                                                       தோன்றச்
சொல் கலையாளும் பூவின் கிழத்தியும் தொழுது                                                       நோக்கி.
164
உரை
   
764. சுந்தர வல்லி தன்னைச் சோபனம் என்று வாழ்த்தி
வந்து இருகையும் தங்கள் மாந்தளிர் கைகள் நீட்டக்
கொந்தவிழ் கோதை மாது மறம் எலாம் குடிகொண்டு                                                       ஏறும்
அந்தளிர் செங்கை பற்றா எழுந்தனண் மறைகள்                                                       ஆர்ப்ப.
165
உரை
   
765. அறைந்தன தூரியம் ஆர்த்தன சங்கம்
நிறைந்தன வானவர் நீள் மலர் மாரி
எறிந்தன சாமரை ஏந்திழையார் வாய்ச்
சிறந்தன மங்கல வாழ்த்து எழு செல்வம்.
166
உரை
   
766. அடுத்தனல் சுந்தரி அம் பொன் அடைப்பை
எடுத்தனள் ஆதி திலோத்தமை ஏந்திப்
பிடித்தனள் விந்தை பிடித்தனள் பொன்கோல்
உடுத்த நெருக்கை ஒதுக்கி நடந்தாள்.
167
உரை
   
767. கட்டவிழ் கோதை அரம்பை களாஞ்சி
தொட்டனள் ஊர்பசி தூமணி ஆல
வட்டம் அசைத்தனள் வன்ன மணிக்கா
சிட்டிழை கோடிக மேனகை கொண்டாள்.
168
உரை
   
768. கொடிகள் எனக் குளிர் போதொடு சிந்தும்
வடி பனி நீரினர் விசு பொன் வண்ணப்
பொடியினர் ஏந்திய பூம்புகை தீபத்
தொடி அணி கையினர் தோகையர் சூழ்ந்தார்.
169
உரை
   
769. தோடு அவிழ் ஓதியர் சோபன கீதம்
பாட விரைப் பனி நீரொடு சாந்தம்
ஏடு அவிழ் மென் மலர் இட்டப் படத்தில்
பாடக மெல்லடி பைப்பய வையா.
170
உரை
   
770. செம் மலராளொடு நாமகள் தேவி
கைம்மலர் பற்றின கல்வி ஒடு ஆக்கம்
இம்மையிலே பெறுவார்க்கு இது போது என்று
அம்மணி நூபும் ஆர்ப்ப நடந்தாள்.
171
உரை
   
771. ஒல்கினண் மெல்ல ஒதுங்கினள் அன்பு
பில்கி இருந்த பிரான் அருகு எய்தி
மெல்கி எருத்தம் இசைத்த தலை தூக்கிப்
புல்கிய காஞ்சி புலம்ப இருந்தாள்.
172
உரை
   
772. அற்பக இமைக்கும் செம்பொன் அரதன பீடத்து                                                       உம்பர்ப்
பொற்பு அகலாத காட்சிப் புனிதன் ஓடு இருந்த நங்கை
எற்பகல் வலம் கொண்டு ஏகு எரிகதிர் வரையின்                                                       உச்சிக்
கற்பக மருங்கில் பூத்த காமரு வல்லி ஒத்தாள்.
173
உரை
   
773. பண்ணுமின் இசையும் நீரும் தண்மையும் பாலும் பாலில்
நண்ணும் இன் சுவையும் பூவும் நாற்றமும் மணியும்                                                       அம் கேழ்
வண்ணமும் வேறு வேறு வடிவு கொண்டு இருந்தால்                                                       ஒத்த
அண்ணலும் உலகம் ஈன்ற அம்மையும் இருந்தது                                                       அம்மா.
174
உரை
   
774. விண் உளார் திசையின் உள்ளார் வேறு உளார்                                              பிலத்தின் உள்ளார்
மண் உளார் பிறரும் வேள்வி மண்டபத்து அடங்கி                                                       என்றும்
பண் உளார் ஓசை போலப் பரந்து எங்கும் நிறைந்த                                                       மூன்று
கண் உளார் அடியின் நீழல் கலந்து உளார் தம்மை                                                       ஒத்தார்.
175
உரை
   
775. ஆய போது ஆழி அங்கை அண்ணல் பொன் கரக                                                       நீரால்
சேயவான் சோதி ஆடல் சேவடி விளக்கிச் சாந்தம்
தூய போது அவிழ்ச் சாத்தித் தூபமும் சுடரும் கோட்டி
நேயமோடு அருச்சித்து ஐய நிறை அருள் பெற்று                                                       நின்றான்.
176
உரை
   
776. விண் தலத்து அவருள் ஆதி வேதியன் பாத தீர்த்தம்
முண்டகத் அவனும் மாலும் முனிவரும் புரந்தர் ஆதி
அண்டரும் நந்திதேவு அடுகணத்தவரும் ஏனைத்
தொண்டரும் புறம்பும் உள்ளும் நனைத்தனர் சுத்தி                                                       செய்தார்.
177
உரை
   
777. அத்தலை நின்ற மாயோன் ஆதி செம்கரத்து நங்கை
கைத்தலம் கமலப் போது பூத்தது ஓர் காந்தள் ஒப்ப
வைத்தரு மனுவாய் ஓதக் கரகநீர் மாரி பெய்தான்
தொத்தலர் கண்ணி விண்ணோர் தொழுது பூ மாரி                                                       பெய்தார்.
178
உரை
   
778. ஆடினார் அரம்பை மாதர் விஞ்சையர் அமுத கீதம்
பாடினார் அர என்று ஆர்த்துப் பரவினார் முனிவர்                                                      வானோர்
மூடினார் புளகப் போர்வை கணத்தவர் முடிமேல்                                                      செம்கை
சூடினார் பலரும் மன்றல் தொடு கடல் இன்பத்து                                                     ஆழ்ந்தார்.
179
உரை
   
779. புத்தனார் எறிந்த கல்லும் போது என இலைந்த வேத
வித்தனார் அடிக் கீழ் வீழ விண்ணவர் முனிவர்                                                       ஆனோர்
சுத்த நா ஆசி கூறக் குங்குமத் தோயம் தோய்ந்த
முத்த வால் அரிசிவீசி மூழ்கினார் போக வெள்ளம்.
180
உரை
   
780. அம்மையோடு அப்பன் என்ன அலர் மணம் போல                                                       நீங்கார்
தம் அருள் விளை யாட்டாலே ஆற்ற நாள் தமியர்                                                       போல
நம்மனோர் காணத் தோன்றி நன் மணம் புணர ஞாலம்
மும்மையும் உய்ந்த என்னாத் தத்தமின் மொழியல்                                                       உற்றார்.
181
உரை
   
781. காமரு சுரபித் தீம்பால் கற்பகக் கனி நெய் கன்னல்
நமரு சுவைய இன்ன நறு மது வருக்கம் செம் பொன்
ஆம் அணி வட்டத் திண்கால் பாசனத்து அமையப்                                                       பெய்து
தேமரு கொன்றை யானைத் திருக்கை தொட்டு அருள்க                                                       என்றார்.
182
உரை
   
782. அம்கை வைத்து அமுது செய்தாங்கு அக மகிழ்ந்து                                                  அட்ட மூர்த்தி
கொங்கு அவிழ் குமுதச் செவ்வாய் கோட்டிவாண்                                               முறுவல் பூத்தான்
புங்கவர் முனிவர் கற்பின் மகளிரும் போதின் மேய
மங்கையர் இருவரோடும் மங்கலம் பாடல் உற்றார்.
183
உரை
   
783. மாக்கடி முளரி வாணன் மைந்தரோடு ஒருங்கு வைகி
நாக்களின் நடுவாரத் உடுவையான் அறுக நெய்                                                       ஆர்த்தி
ஆக்கிட ஆர மாந்தி வலம் சுழித்து அகடு வீங்கித்
தேக்கிடும் ஒலியின் ஆர்த்து நிமிர்ந்தது தெய்வச்                                                       செம்தீ.
184
உரை
   
784. சுற்று நான் மறைகள் ஆர்ப்ப தூரியம் சங்கம் ஏங்கக்
கற்ற நான் முகத்தோன் வேள்விச் சடங்கு நூல்                                               கரைந்த ஆற்றால்
உற்ற மங்கல நாண் சாத்தி முழுது உலகு ஈன்றான்                                                       செம்கை
பற்றினன் பற்று இலார்க்கே வீடு அருள் பரம யோகி.
185
உரை
   
785. இணர் எரித் தேவும் தானே எரிவளர்ப்ப அவனும்                                                       தானே
உணவு கொள்பவனும் தானே ஆகிய ஒருவன் வையம்
புணர் உறு போகம் மூழ்கப் புருடனும் பெண்ணும் ஆகி
மணவினை முடித்தான் அன்னான் புணர்ப்பை யார்                                                 மதிக்க வல்லார்.
186
உரை
   
786. பின்பு தன் பன்னி ஓடு பிறைமுடிப் பெருமான் கையில்
நன் பொரி வாங்கி செந்தீ நாம் அடுத்து எனைத்தும்                                                       ஆன
தன் படி உணர்ந்த வேத முனிவர்க்குத் தக்க தானம்
இன்பகம் ததும்ப நல்கி எரிவல முறையால் வந்து.
187
உரை
   
787. மங்கலம் புனைந்த செம்பொன் அம்மிமேல் மாணாட்டி                                                       பாத
பங்கய மலரைக் கையால் பரிபுரம் சிலம்பப் பற்றிப்
புங்கவன் மனுவல் ஏற்றிப் புண்ணிய வசிட்டன் தேவி
எங்கு எனச் செம்கை கூப்பி எதிர்வர அருள் கண்                                                       சாத்தி.
188
உரை
   
788. விதிவழி வழாது வேள்வி வினை எலாம் நிரம்ப                                                       இங்ஙன்
அதிர் கடல் உலகம் தேற ஆற்றி நான் மறைகள்                                                       ஆர்ப்பக்
கதிர் மணி நகையார் வாழ்த்தக் காமனைக் காய்ந்த                                                       நம்பி
மதி நுதன் மங்கை ஓடு மணவறை தன்னில் புக்கான்.
189
உரை
   
789. மனிதரும் இமையாது ஐயன் மங்கல வனப்பு நோக்கிப்
புனித வானவரை ஒத்தர் அவர்க்கு அது புகழோ                                                       எந்தை
கனிதரு கருணை நாட்டம் பெற்றவர் கடவுள் ஓரால்
பனி தரு மலர் இட்டு ஏத்தி வழிபடல் பாலர் அன்றோ.
190
உரை
   
790. மானிடர் இமையோர் என்னும் வரம்பு இலர் ஆகி                                                       வேள்வி
தான் இடர் அகல நோக்கித் தலைத் தலை மயங்கி                                                       நின்றார்
கான் இடம் நடனம் செய்யும் கண்நுதல் அருள் கண்                                                       நோக்கால்
ஊன் இடர் அகலும் நாளில் உயர்ந்தவர் இழிந்தோர்                                                       உண்டோ.
191
உரை
   
791. மணவறைத் தவிசின் நீங்கி மன்றல் மண்டபத்தில்                                                      போந்து
கண மணிச் சேக்கை மேவிக் கரு நெடும் கண்ணன்                                                      வாணி
துணை வனே முதல் வானோர்க்கும் சூழ் கணத்                                            தொகைக்கும் என்றும்
தணவறு செல்வம் தந்தோன் சாறு சால் சிறப்பு நல்கி.
192
உரை
   
792. ஏட்டுவாய் முளரியான் மால் ஏனை வானவரும் தத்தம்
நாட்டு வாழ் பதியில் செல்ல நல்விடை கொடுத்து                                                      வேந்தர்க்
காட்டுவான் ஆடிக் காட்டும் தன்மை போல் அரசு                                                      செய்து
காட்டுவான் ஆகி ஐயன் திருவுளக் கருணை பூத்தான்.
193
உரை
   
793. அதிர் விடைக் கொடி அம் கயல் கொடியாக வராக்                                          கலன் பொன் கலனாகப்
பொதி அவிழ் கடுக்கை வேம்பு அலர் ஆக புலி                                           அதள் பொலம் துகிலாக
மதிமுடி வைர மணிமுடியாக மறை கிடந்து அலந்து மா                                                      மதுரைப்
பதி உறை சோம சுந்தரக் கடவுள் பாண்டியன் ஆகி                                                    வீற்றிருந்தான்.
194
உரை
   
794. விண் தவழ் மதியம் சூடும் சுந்தர விடங்கப் புத்தேள்
கொண்டதோர் வடிவுக்கு ஏற்பக் குருதி கொப்புளிக்கும்                                                      சூலத்
திண் திறல் சங்கு கன்னன் முதல் கணத் தேவர்                                                      தாமும்
பண்டைய வடிவ மாறி பார்த்திபன் பணியின் நின்றார்.
195
உரை
   
795. தென்னவன் வடிவம் கொண்ட சிவபரன் உலகம்                                                      காக்கும்
மன்னவர் சிவனைப் பூசை செய்வது மறை ஆறு என்று
சொன்னது மன்னர் எல்லாம் துணிவது                                             பொருட்டுத்தானும்
அந்நகர் நடுவூர் என்று ஒர் அணிநகர் சிறப்பக்                                                      கண்டான்.
196
உரை
   
796. மெய்ம்மை நூல் வழியே கோயில் விதித்து அருள் குறி                                                   நிறீ இப்பேர்
இம்மையே நன்மை நல்கும் இறை என நிறுவிப் பூசை
செம்மையால் செய்து நீப வனத்து உறை சிவனைக் கால
மும்மையும் தொழுது வையம் முழுவதும் கோல்                                                      நடாத்தும்.
197
உரை
   
797. பூவரு மயன் மால் ஆதிப் புனிதரும் முனிவர் ஏனோர்
யாவரும் தனையே பூசித்து இக பரம் அடைய நின்ற
மூவருள் மேலா முக்கண் மூர்த்தியே பூசை செய்த
தாவர இலிங்க மேன்மைத்தகுதி யார் அளக்க வல்லார்.
198
உரை
   
798. மனித்தருக்கு அரசாகித் எவ் வேந்தர்க்கு மடங்கலாய்                                                   மட நல்லார்க்
இனித்த ஐங்கணைக்கு ஆளைஆய் நிலமகள்                                     இணர்த்துழாய் அணிமாலாய்
அனித்த நித்தம் ஓர்ந்து இக பரத்து ஆசை நீத்து
            அகம் தெளிந்து அவர்க்கு ஒன்றாய்த்
தனித்த மெய்யறிவு ஆனந்தம் ஆம் பரதத்துவமாய்                                                      நின்றான்.
199
உரை