தொடக்கம் |
|
|
799. |
உலகியன் நிறுத்து வான் வந்து ஒரு பரம் சுடர்வான் திங்கள் குலமணி விளக்கை வேட்டுக் கோமுடி கவித்துப் பாராண்டு இலகுறு தோற்றம் ஈதான் முனிவர் இருவர் தேற அலகிலா ஆனந்த கூத்துச் செய்தவாறு அறையல் உற்றாம். |
1 |
|
|
உரை
|
|
|
|
|
800. |
புண்ணிய மலர் மென் கொம்பை வேட்ட பின் புவனம் தாங்கும் கண்ணுதன் மூர்த்தி ஆய கவுரியன் மணத்தில் வந்த மண்ணியல் வேந்தர் வானோர் மாதவர் பிறரும் உண்ண நண்ணுதிர் என்னலோடும் நண்ணுவார் விரைவின் எய்த. |
2 |
|
|
உரை
|
|
|
|
|
801. |
பொன் அவிர் கமலம் பூத்த புனித நீராடித் தத்தம் நன்னெறி நியமம் முற்றி நண்ணினார் புலிக்காலோனும் பன்னக முனியும் தாழ்ந்து பரவி அம் பலத்துள் ஆடும் நின்னருள் நடம்கண்டு உண்பது அடியேங்கள் நியமம் என்ாறர். |
3 |
|
|
உரை
|
|
|
|
|
802. |
என்னலும் அந்தக் கூத்தை இங்குநாம் செய்தும் தில்லைப் பொன்னகர் உலகம் எல்லாம் உருவம் ஆம் புருடன் உள்ளம் இன்னது துவாத சாந்தம் என்று இறை அருளிச் செய்ய மன்னவ ஏனை அங்கம் ஆவென மன்னன் சொல்வான். |
4 |
|
|
உரை
|
|
|
|
|
803. |
அரைக்கும் மேல் உலகு ஏழ் என்று அரைக்குக் கீழ் உலகு ஏழ் என்றும் உரைக்கலால் உலகம் எல்லா உருவம் ஆம் புருடற்கு இந்தத் தரைக்கு மேல் அனந்தம் தெய்வத் தானம் உண்டு அனைத்தும் கூறின் வரைக்கு உறா சில தானங்கள் வகுத்து உரை செய்யக் கேண்மின். |
5 |
|
|
உரை
|
|
|
|
|
804. |
திருவளர் ஆரூர் மூலம் திருவானைக் காவே குய்யம் மருவளர் பொழில் சூழ் அண்ணாமலை மணி பூரம் நீவிர் இருவரும் கண்ட மன்றம் இதயம் ஆம் திருக்காளத்தி பொருவரும் கண்டம் ஆகும் புருவ மத்தியம் ஆம் காசி. |
6 |
|
|
உரை
|
|
|
|
|
805. |
பிறை தவழ் கயிலைக் குன்றம் பிரமரந் திரமாம் வேதம் அறைதரு துவாத சாந்த மதுரை ஈது அதிகம் எந்த முறையினால் என்னின் முன்னர் தோன்றிய முறையால் என்றக் கறை அறு தவத்த ரோடு கவுரியன் கோயில் புக்கான். |
7 |
|
|
உரை
|
|
|
|
|
806. |
தன் அருள் அதனால் நீத்த தன்னையே தேடிப் போந்த மின்னவிர் கயிலைதானோ விடை உரு மாறி மன்றாய் மன்னியது ஏயோ திங்கள் மண்டல மேயோ என்னப் பொன் அவிர் விமானக் கீழ்பால் வெள்ளி அம் பொது உண்டாக. |
8 |
|
|
உரை
|
|
|
|
|
807. | மின் பயில் பரிதிப் புத்தேள் பால் கடல் விளங்கி ஆங்குப் பின் பதன் இசை மாணிக்கப் பீடிகை தோன்றிற்று அன்னது அன்பர் தம் உளமே ஆகும் அல்லது வேதச் சென்னி என்பது ஆம் அஃதே அன்றி யாது என இசைகற் பாற்றே. | 9 |
|
|
உரை
|
|
|
|
|
808. |
அன்னது ஓர் தவிசின் உம்பர் ஆயிரம் கரத்தால் அள்ளித் துன் இருள் விழுங்கும் கோடி சூரியர் ஒரு காலத்து மன்னினர் உதித்தால் ஒப்ப மன மொழி பக்கம் கீழ்மேல் பின் முதல் கடந்த ஞானப் பேர் ஒளி வடிவாய்த் தோன்றி. |
10 |
|
|
உரை
|
|
|
|
|
809. |
முந்துறு கணங்கள் மொந்தை தண்ணுமை முழக்கம் செய்ய நந்தி மா முழவம் தாக்க நாரணன் இடக்கை ஆர்ப்ப வந்துகம் தருவ நூலின் மரபுளி இருவர் பாட ஐந்து துந்துபியும் கல்லென்று ஆர் கலி முழக்கம் காட்ட. |
11 |
|
|
உரை
|
|
|
|
|
810. |
மது முகத்து அலர்ந்த வெண் தாமரைகள் சுருதிக் கூட்டச் சது முகத்து ஒருவன் சாமகீத யாழ் தடவிப் பாட விது முகத்து அருகு மொய்க்கும் மீன் என ஞான வெள்ளிப் பொது முகத்து அமரர் தூற்றும் பூமழை எங்கும் போர்ப்ப. |
12 |
|
|
உரை
|
|
|
|
|
811. |
பொரும் கடல் நிறத்த செம் தீ பொங்குளை குறளன் மீது பெரும் கடல் வடவைச் செம்கண் பிதுங்க மேல் திரிந்து நோக்கி முரும் கடல் எரியில் சீற முதுகிற வலத்தாள் ஊன்றிக் கரும் கடல் முளைத்த வெய் யோன் காட்சியில் பொலிந்து நின்று. |
13 |
|
|
உரை
|
|
|
|
|
812. |
கொய்யும் செம் கமலப் போது குவிந்து என எடுத்துக் கூத்துச் செய்யும் புண்டரிகத் தாளும் திசை கடந்து உள ஈர் ஐந்து கையும் திண் படையும் தெய்வ மகளிர் மங்கல நாண் காத்த மை உண்ட மிடரும் சங்க வார் குழை நுழைந்த காதும். |
14 |
|
|
உரை
|
|
|
|
|
813. |
செக்கரம் சடையும் தேசு ஆர் வெண் திரு நீறும் தெய்வ முக்கணும் உரகக் கச்சும் முள் எயிறு இமைக்கும் மார்பும் மைக்கரும் கயல் கண் நங்கை வல்லியின் ஒதுங்கி நிற்கும் பக்கமும் அவள் மேல் வைத்த பார்வையும் நகையும் தோன்ற. |
15 |
|
|
உரை
|
|
|
|
|
814. |
கங்கை ஆறு அலம்பும் ஓசை கடுக்கை வண்டு இரங்கும் ஓசை மங்கல முழவின் ஓசை மந்திர வேத ஓசை செம்கை ஆடு எரியின் ஓசை திருவடிச் சிலம்பின் ஓசை எங்கணும் நிரம்பி அன்பர் இரு செவிக்கு அமுதம் ஊற்ற. |
16 |
|
|
உரை
|
|
|
|
|
815. |
ஆடினான் அமல மூர்த்தி அஞ்சலி முகிழ்த்துச் சென்னி சூடினார் அடியில் வீழ்ந்தார் சுருதி ஆயிரம் நாவாரப் பாடினார் பரமானந்தப் பரவையில் படிந்தார் அன்பு நீடினார் நிருத்த ஆனந்தம் காண்பது நியமம் பூண்டார். |
17 |
|
|
உரை
|
|
|
|
|
816. |
முனிவர் கந்தருவர் வானோர் தானவர் மோன யோகர் புனித கிம்புருடர் ஆதிப் புலவரும் இறைஞ்சி அன்பில் கனிதரு இன்பத்து ஆழ்ந்தார் திருமணம் காணவந்த மனிதரும் காணப் பெற்றார் மாதவர் பொருட்டான் மன்னோ. |
18 |
|
|
உரை
|
|
|
|
|
817. |
அனந்தனா முனிவர் வேந்தன் அளவு இல் ஆனந்தம் மூறி மனம் தனி நிரம்பி மேலும் வழிவது போல மார்பம் புனைந்த புண்ணிய வெண்ணீறு கரைந்திடப் பொழி கண் நீருள் நனைந்து இரு கரம் கூப்பி நாதனைப் பாடுகின்றான். |
19 |
|
|
உரை
|
|
|
|
|
818. |
பராபர முதலே போற்றி பத்தியில் விளைவாய் போற்றி சராசரம் ஆகி வேறாய் நின்ற தற் பரனே போற்றி கராசல உரியாய் போற்றி கனக அம்பலத்துள் ஆடும் நிராமய பரமானந்த நிருத்தனே போற்றி போற்றி. |
20 |
|
|
உரை
|
|
|
|
|
819. |
ஒன்று ஆகி ஐந்தாயை ஐந்து உருவாகி வருவாய் போற்றி இன்றாகிச் சென்ற நாளாய் எதிர் நாளாய் எழுவாய் போற்றி நன்றாகித் தீயது ஆகி நடுவாகி முடிவாய் மன்றுள் நின்றாடும் பரமானந்த நிருத்தனே போற்றி போற்றி. |
21 |
|
|
உரை
|
|
|
|
|
820. |
அடியரேம் பொருட்டு வெள்ளி அம்பலத்து ஆடல் போற்றி பொடி அணி தடம் தோள் போற்றி புரி சடை மகுடம் போற்றி கடி அவிழ் மலர் மென் கூந்தல் கயல் விழி பாகம் போற்றி நெடிய நல் பரமானந்த நிருத்தனே போற்றி போற்றி. |
22 |
|
|
உரை
|
|
|
|
|
821. |
என்று நின்று ஏத்தினான் பின் இருவரை நோக்கி வெள்ளி மன்றுள் நின்று ஆடா நின்ற மறை முதல் கருணை கூர்ந்து நன்று நீர் வேட்டது என் என்று அருள் செய்ய நாதன் பாதம் துன்று மெய் அன்பில் தாழ்ந்து தொழுது நின்று இதனைச் சொல்வார். |
23 |
|
|
உரை
|
|
|
|
|
822. | எந்தையிருத் திருக்கூத்தென் றுமிந்நிலைநின் றியார்க்கும் பந்தவெம் பாசநீங்கப் பரித்தருள் செய்தி யென்னச் செந்தமிழ்க் கன்னி நாடுசெய்தமா தவப்பே றெய்தத் தந்தன மென்றான் வேந்தலை தடுமாறநின்றான். | 24 |
|
|
உரை
|
|
|
|
|
823. |
அராமுனி ஈது வேண்டும் ஆதி எம் பெரும் இந்த நிராமய பரமானந்த நிருத்த நேர் கண்டோர் எல்லாம் தராதலம் மிசை வந்து எய்தாத் தனிக்கதி பெறுதல் வேண்டும் பராபர என்று தாழ்ந்தான் பகவனும் அதற்கு நேர்ந்தான். |
25 |
|
|
உரை
|
|
|
|
|
824. |
ஆர்த்தனர் கணத்தோர் கை கோத்து ஆடினார் அலர் பூ மாரி தூர்த்தனர் விண்ணோர் கண்ணீர் துளும்பினர் முனிவர் ஆகம் போர்த்தனர் புளக அன்பில் புதைந்தனர் விழுங்குவார் போல் பார்த்தனர் புல்லிக் கொண்டார் பரவிய அவ் இருவர் தம்மை. |
26 |
|
|
உரை
|
|
|
|
|
825. |
அனித்தம் ஆகிய பூத ஐம் பொறி புலன் ஆதி ஆறு ஆகி இனித்த மாயையோடு இருவினைத் தொடக்கினும் இருளினும் வேறு ஆகித் தனித்த யோகிகள் அகம் நிறைந்து ஆடிய தனிப்பெரும் திருக்கூத்தைக் குனித்த வண்ண மாக் கண்டவர்க்கு இகபரம் கொடுத்து அவண் உறை கின்றான். |
27 |
|
|
உரை
|
|
|
|
|
826. |
குனிவில் ஆதிரைத் தினம் தொடுத்து எதிர் வரு கொடுவில் ஆதிரை எல்லை புனித ஆடக முளரி தோய்ந்து தனித்தனிப் பொது நடம் தரிசித்து அங்கு இனிது அமர்ந்து நூற்று எண் மடம் ஐந்து எழுத்து எண்ணி இந்நிலை நிற்கும் கனியும் அன்பினார் எண்ணியாங்கு எய்துவர் கருதிய வரம் எல்லாம். |
28 |
|
|
உரை
|
|
|
|