849. வேத நாயகன் பாரிட வேந்தனுக்கு அமையா
ஓதன் ஆதிகன் அருத்திய தன்மை ஈது வையும்
போத ராமையால் அமைவுறப் போனகக் குழிதந்து
ஓத மாநதி அருத்திய செய்தியும் உரைப்பாம்.
1
உரை
   
850. கவன மால் விடை ஆளியின் கடிகமழ் தென்றல்
பவன மா மலை யாட்டியைப் பார்த்து உளே நகைத்துத்
தவன மாப் பசி உடையவன் தன் பொருட்டு அன்ன
புவன மாதினை நினைத்தனன் நினைக்கும் முன்                                                      போந்தாள்.
2
உரை
   
851. நால் தடம் திசைத் தயிர்க்கடல் அனந்தன் தலை நிலம்                                                         ஈண்டு
உற்று எழுந்து நால் கிடங்கராய் உதித்து எழுந்தாங்கு
மாற்றரும் சுவைத் தீம் தயிர் வால் அரிப் பதத்தோடு
ஏற்று எழுந்தது நால் குழி இடத்திலும் பொங்கி.
3
உரை
   
852. குரு மதிக்குல மன்னவன் மருகனக்கு உண்டப்
பெருவயிற்றில் இரு பிறை எயிற்று எரி சிகைப் பேழ்                                                           வாய்
ஒரு குறள் குடை வீரனை உன் பசி தணியப்
பருக எனப் பணித்து அருளும் பாரிடத் தலைவன்.
4
உரை
   
853. அத் தயிர்ப் பதக் கிடங்கரில் அலை கடல் கலக்கும்
மத்து எனக் கரம் புதைத்து எடுத்து வாய் மடுத்துச்
துய்த்திடப் பசி விடுத்தது சுருதி நாயகன் தாள்
பத்தி வைத்து வீடு உணர்ந்தவர் பழவினைத் தொடர்                                                            போல்.
5
உரை
   
854. வாங்கி வாங்கி வாய் மடுத்தலும் உடம்பு எலாம்                                                         வயிறாய்
வீங்கினான் தரை கிழிபடப் பொருப்பு என வீழ்ந்தான்
நீங்கு நீள் உயிர்ப்பு இலன் உடல் புரண்டனன் நீர்                                                         வேட்டு
ஆங்கு நீர் நிலை தேடுவான் ஆயினான் எழுந்தான்.
6
உரை
   
855. ஆவி அன்னவர்ப் பிரிந்து உறை அணங்கு அனார்                                                      போலக்
காவி நாள் மலர் தாமரைக் கடிமலர் வாட
வாவி ஓடையும் குளங்களும் வறப்ப வாய் வைத்துக்
கூவ நீள் நிலை நீர்களும் பசை அறக் குடித்தான்.
7
உரை
   
856. அனையன் ஆகியும் நீர் நசை ஆற்றலன் வருந்தும்
வினையன் ஆகி வானதிச் சடை வேதியன் பாதத்து
இனைய நாதனும் தன் திரு முடியின் மீது இருக்கும்
நனைய நாள் மலர் ஓதியைப் பார்த்து ஒன்று நவில்                                                            வான்.
8
உரை
   
857. தேங்கு நீர்த்திரை மாலிகைச் செல்வி நீ இந்த
வாங்கு நீர்த்தடம் புரிசை சூழ் மதுரையின் மாடு ஒர்
ஓங்கு நீத்தம் ஆய் ஒல் என வருதி என்று உரைத்தான்
நீங்கு நீர்த்திரு மாது அவண் ஒரு மொழி நிகழ்த்தும்.
9
உரை
   
858. அன்று எம் பிரான் ஆணையால் பகீரதன் பொருட்டுச்
சென்று நீ ஒரு தீர்த்தம் ஆய்த் திளைப்பவர் களங்கம்
ஒன்று தீவினைத் தொடக்கு அறுத்து எழுக எனப்                                                      பணித்தாய்
இன்று ஓர் நதி ஆகெனப் பணித்தியேல் என்னை.
10
உரை
   
859. தெரிசித் தோர் படிந்து ஆடினோர் செம்கையால் ஏனும்
பரிசித்தோர் பவத் தொடர்ச்சியின் பற்று விட்டு உள்ளத்து
உருசித்தோர் உறு பத்தியும் விச்சையும் உணர்வாய்
விரிசித்தோர் உறு மெய் உணர்வால் வரும் வீடும்.
11
உரை
   
860. தந்திடப் பணித்து அருள் எனா தடம் புனல் செல்வி
சுந்தரப் பெரும் கடவுளை வரம் கொண்டு தொழுது
வந்த அளப்பு இலா வேகம் ஓடு எழுந்து மா நதியாய்
அந்தரத்து நின்று இழிபவளாம் எனவரும் ஆல்.
12
உரை
   
861. திரை வளை அணிகரம் உடையவள் செழு மணி நகை                                                       உடையாள்
நுரை வளை துகில் உடையவள் கொடி நுணு இடையவள்                                                        அற நீள்
விரை வளை குழல் உடையவள் கயல் விழி உடையவள்                                                        வருவாள்
வரை வளை சிலையவன் முடி மட வரல்நதி வடிவினுமே.
13
உரை
   
862. விரை படும் அகிலரை பொரிதிமில் வெயில் விடு மணி                                                      வரை யோடு
அரை பட முது சினை அலறிட வடியொடு கடிது                                                       அகழாக்
குரைபடு கழல் இற உளர் சிறு குடி அடியொடு பறியாக்
கரைபட எறிவது வருவது கடுவிசை வளி எனவே.
14
உரை
   
863. பிணையொடு கலை பிடியொடு கரி பிரிவில வொடு                                                         பழுவப்
பணையொடு கருமுசு வயிறு அணை பறழொடு தழுவி                                                         அதன்
துணையொடு கவிபயில் மர நிரை தொகை யொடும்                                                   இற உளர் வெம்
கணையொடு சிலை இதண் நெடும் எறி கவணொடு                                                கொடு வரும் ஆல்.
15
உரை
   
864. அடியிற நெடுவரை உதைவன அகழ்வன அகழ் மடுவைத்
திடர் இடுவன மழை செருகிய சினை மர நிரை தலைகீழ்
பட இடிகரை தொறும் நடுவன படுகடல் உடை முது                                                         பார்
நெடு முதுகு இருபிளவு உற வரு நெடு நதி இன                                                       அலையே.
16
உரை
   
865. பிளிறொலி இனம் முது மரம் அகழ் பெருவலி இன                                                        வசையா
வெளிறடி வனவெறி மணி இன விரை செலவின                                                        மதமோடு
ஒளிறளி இனநுரை முக படம் உடையன என வரலால்
களிறு அனையது மது இதழிகள் கவிழ் சடை அணி                                                        குடிஞை.
17
உரை
   
866. நீடிய பிலம் உறு நிலையின நிருமலன் மதி முடி மீது
ஆடிய செயல் இன வெயில் உமிழ் உருமணி தலை இள                                                           நீள்
கோடிய கதியின நிரை நிரை குறுகிய பல காலின்
ஓடிய வலியின வளை உடல் உரகமும் என வரும் ஆல்.
18
உரை
   
867. மண் அகழ்தலின் வளை அணி கரு மாவனையது மிசை                                                         போய்
விண் உள வலின் அவுணர்கள் இறை விடு புனலொடு                                                         நெடுகும்
அண்ணலை அனையது சுவை இழு தலை அளை உறு                                                         செயலால்
கண்ணனை அனையது நெடுகிய கடுகிய கதி நதியே.
19
உரை
   
868. திகழ் தரு கரி பரி கவரிகள் செழு மணியொடு வருமாறு
திகழ் தரு குடபுல அரசர்கள் நெறி செய்து கவர்
                                                      திருவோடு
அகழ் தரு பதிபுகு மதிகுல அரசனை அதை அலதேல்
புகழ் தரு திறை இட வரு குடபுல அரசனும் நிகரும்.
20
உரை
   
869. ஆரொடு மடல் அவிழ் பனை யொடும் அர நிகர்                                                     இலை நிம்பத்
தாரொடு புலியொடு சிலையொடு தகு கயலொடு தழுவாப்
பாரொடு திசை பரவிய தமிழ் பயில் அரசர்கள் குழுமிச்
சீரொடு பல திரு வொடு வரு செயல் அனையது நதியே.
21
உரை
   
870. கல்லார் கவி போல் கலங்கிக் கலை மாண்ட கேள்வி
வல்லார் கவி போல் பலவான் துறை தோன்ற வாய்த்துச்
செல்லாறு தோறும் பொருள் ஆழ்ந்து தெளிந்து தேயத்து
எல்லாறும் வீழ்ந்து பயன் கொள்ள இறுத்தது அன்றெ.
22
உரை
   
871. வண்டு ஓதை மாறா மலர் வேணியின் வந்த நீத்தம்
கண்டு ஓத நஞ்சு உண்டு அருள் கண் நுதன் மூர்த்தி                                                      பேழ்வாய்
விண்டு ஓதம் அணியாது என் விடாய் என வெம்பி                                                      வீழ்ந்த
குண்டு ஓதரனை விடுத்தான் அக் குடிஞை ஞாங்கர்.
23
உரை
   
872. அடுத்தான் நதியின் இடை புக்கு இருந்து ஆற்றல் ஓடும்
எடுத்தான் குறும்கை இரண்டும் கரை ஏற நீட்டித்
தடுத்தான் மலைபோல் நிமிர் தண்புனல் வாய்                                                      அங்காந்து
மடுத்தான் விடாயும் கடல் உண்ணும் மழையு நாண.
24
உரை
   
873. தீர்த்தன் சடை நின்று இழி தீர்த்தம் அருந்தி வாக்குக்
கூர்த்து இன்பு கொண்டு குழகன் திரு முன்னர் எய்திப்
பார்த்தன் பணிந்த பதம் முன் பணிந்து ஆடிப் பாடி
ஆர்த்த அன்பு உருவாய்த் துதித்தான் அளவாத கீதம்.
25
உரை
   
874. பாட்டின் பொருளான் அவன் பாரிட வீரன் பாடல்
கேட்டு இன்பம் எய்திக் கணங்கட்குக் கிழமை நல்கி
மோட்டு இன்புனன் மண் முறை செய்து இருந்தான்                                                      அளகக்
காட்டின் புறம் போய் மடங்கும் கயல் கண்ணியோடும்.
26
உரை
   
875. தீர்த்தன் இதழிச் சடை நின்றும் இழிந்து வரலால்                                                      சிவகங்கை
தீர்த்தன் உருவம் தெளி வோர்க்கு ஞானம் தரலால்                                                      சிவஞான
தீர்த்தம் காலில் கடுகி வரும் செய்தியாலே வேகவதி
தீர்த்தம் கிருத மாலை என வைகை நாமம் செப்புவர்                                                      ஆல்.
27
உரை