தொடக்கம் |
|
|
876. |
முடங்கன் மதி முடி மறைத்த முடித் தென்னன் குறட்கு அன்னக் கிடங்கரொடு நதி அழைத்த கிளர் கருணைத் திறன் இது மேல் மடங்கல் வலி கவர்ந்தான் பொன் மாலை படிந்து ஆட ஏழு தடம் கடலும் ஒருங்கு அழைத்த தன்மை தனைச் சாற்றுவாம். |
1 |
|
|
உரை
|
|
|
|
|
877. |
ஓத அரும் பொருள் வழுதி உருவாகி உலகம் எலாம் சீதள வெண் குடை நிழற்றி அறச் செம் கோல் செலுத்தும் நாள் போத அரும் பொருள் உணர்ந்த இருடிகளும் புனித முனி மாதவரும் வரன் முறையால் சந்தித்து வருகின்றார். |
2 |
|
|
உரை
|
|
|
|
|
878. |
வேதமுனி கோத மனும் தலைப்பட்டு மீள்வான் ஓர் போது அளவில் கற்புடைய பொன் மாலை மனை புகுந்தான் மாது அவளும் வரவேற்று முகமன் உரை வழங்கிப் பொன் ஆதனம் இட்டு அஞ்சலி செய்து அரியதவத் திறம் கேட்பாள். |
3 |
|
|
உரை
|
|
|
|
|
879. |
கள்ள வினைப் பொறி கடந்து கரை கடந்த மறைச் சென்னி உள்ள பொருள் பரசிவம் என்று உணர்ந்த பெருந்தகை அடிகேள் தள்ளரிய பவம் அகற்றும் தவம் அருள் செய்க எனக் கருணை வெள்ளம் என முகம் மலர்ந்து முனிவேந்தன் விளம்பும் ஆல். |
4 |
|
|
உரை
|
|
|
|
|
880. |
தவ
வலியான் உலகு ஈன்ற தடா தகைக்குத் தாய் ஆனாய்
சிவ பெருமான் மருகன் எனும் சீர் பெற்றய் திறல் மலயத்
துவசன் அரும் கற்பு உடையாய் நீ அறியாத் தொல் விரதம்
அவனி இடத்து எவர் அறிவார் ஆனாலும் இயம் பக்கேள். |
5 |
|
|
உரை
|
|
|
|
|
881. |
மானதமே வாசிகமே காயிகமே என வகுத்த ஈனம் இல் தவம் மூன்றம் இவற்றின் ஆனந்தம் தருமது தான மிசை மதி வைத்தறயவு பொறை மெய் சிவனை மோனம் உறத் தியானித்தல் ஐந்து அடக்கல் முதல் அனந்தம். |
6 |
|
|
உரை
|
|
|
|
|
882. | வாசிக ஐந்து எழுத்து ஓதன் மனுப் பஞ்ச சாந்தி மறை பேசுசத உருத்திரம் தோத்திரம் உரைத்தல் பெரும் தருமம் காசு அகல எடுத்து ஓதன் முதல் அனந்தம் ஆயிகங்கள் ஈசன் அருச்சனை கோயில் வலம் செய்கை எதிர்வணங்கல். | 7 |
|
|
உரை
|
|
|
|
|
883. | நிருத்தன் உறை பதிபலப் போய்ப் பணிதல் பணி நிறை வேற்றல் திருத்தன் முடி நதி ஆதி தீர்த்த யாத்திரை போய் மெய் வருத்தமுற ஆடல் இவை முதல் பல அவ் வகை மூன்றில் பொருத்த முறு காயிகங்கள் சிறந்தன இப் புண்ணியத்துள். | 8 |
|
|
உரை
|
|
|
|
|
884. |
திருத்த யாத்திரை அதிகம் அவற்ற அதிகம் சிவன் உருவாம் திருத்த ஆம் கங்கை முதல் திரு நதிகள் தனித் தனி போய்த் திருத்த மாடு அவதரித்த திரு நதிகள் தனித் தனி போய்த் திருத்தமாய் நிறைதலினால் அவற்று இகந்து திரை முந்நீர். |
9 |
|
|
உரை
|
|
|
|
|
885. |
என்று முனி விளம்பக் கேட்டு இருந்த காஞ்சன மாலை துன்று திரைக் கடல் ஆடத் துணிவுடைய விருப்பினள் ஆய்த் தன் திருமா மகட்கு உரைத்தாள் சிறிது உள்ளம் தளர்வு எய்திச் சென்று இறைவற்கு உரைப்பல் எனச் செழியர் தவக் கொழுந்து அனையாள். |
10 |
|
|
உரை
|
|
|
|
|
886. |
தன் தன்னை உடைய பெரும் தகை வேந்தர் பெருமான் முன் சென்று அன்னம் என நின்று செப்புவாள் குறள் வீரர்க்கு அன்று அன்னக் குழியு னொடு ஆறு அழைத்த அருட்கடலே இன்று அன்னை கடல் ஆட வேண்டினாள் என்று இரந்தாள். |
11 |
|
|
உரை
|
|
|
|
|
887. |
தேவி திரு மொழி கேட்டுத் தென்னவராய் நிலம் புரக்கும் காவி திகழ் மணி கண்டர் கடல் ஒன்றோ எழு கடலும் கூவி வர அழைத்தும் என உன்னினார் குணபால் ஓர் வாவி இடை எழுவேறு வண்ணமொடும் வருவன ஆல். |
12 |
|
|
உரை
|
|
|
|
|
888. |
துண்ட மதித் திரள் அனைய சுரிவளை வாய் விட உதைத்து வெண் தவள நுரை ததும்பச் சுறா ஏறு மிசைக் கொட்பத் தண் தரள மணித் தொகுதி எடுத்து எறியும் தரங்க நிரை அண்ட நெடு முகடு உரிஞ்ச ஆர்த்து எழுந்த கடல் ஏழும். |
13 |
|
|
உரை
|
|
|
|
|
889. |
காணும் மாநகர் பனிப்பக் கலி முடிவில் அயன் படைப்புக் கோணுமாறு எழுந்தது எனக் கொதித்து எழுந்த கடல் அரவம் பூணு நாயகன் அகில புவனம் எலாம் கடந்த திரு ஆணையால் அவன் அடி சென்று அடைந்தார் போல் அடங்கியது ஆல். |
14 |
|
|
உரை
|
|
|
|
|
890. |
தன் வண்ணம் எழு கடலின் தனி வண்ணமொடு கலந்து பொன் வண்ண நறும் பொகுட்டுப் பூம் பொய்கை பொலிவு எய்தி மின் வண்ணச் சடைதாழ வெள்ளி மணி மன்று ஆடும் மன் வண்ணம் என எட்டு வண்ண மொடும் வயங்கியது ஆல். |
15 |
|
|
உரை
|
|
|
|