891. எழு கடல் அழைத்த வாறு இயம்பினாம் இனிச்
செழு மதி மரபினோன் சேண் இழிந்து தன்
பழுது இல் கற்பில் லொடும் பரவை தோய்ந்து அரன்
அழகிய திரு உரு அடைந்தது ஓதுவாம்.
1
உரை
   
892. புரவலன் தடாதகைப் பூவையோடும் வந்து
உரவு நீர்க் கடல் மருங்கு உடுத்த சந்தனம்
மரவ மந்தார மா வகுளம் பாடலம்
விரவு நந்தனத்து அரி அணையின் மேவினான்.
2
உரை
   
893. தாது அவிழ் மல்லிகை முல்லை சண்பகப்
போது கொய்து இளையரும் சேடிப் பொன் தொடி
மாதரும் கொடுத்திட வாங்கி மோந்து உயிர்த்து
ஆதரம் இரண்டாற அமரும் எல்லையில்.
3
உரை
   
894. தன்னமர் காதலி தன்னை நோக்கியே
மன்னவன் உன் பொருட்டு ஏழு வாரியும்
இந் நகர் அழைத்தனம் ஈண்டுப் போந்து நின்
அன்னையை ஆடுவான் அழைத்தி ஆல் என.
4
உரை
   
895. மடந்தையும் அன்னையைக் கொணர்ந்து வாவி மாடு
அடைந்தனள் ஆக மற்று அவள் புராண நூல்
படர்ந்த கேள்வியர் தமை நோக்கிப் பௌவநீர்
குடைந்திடும் விதி எவன் கூறும் என்னவே.
5
உரை
   
896. கோது அறு கற்பினாய் கொழுநன் கைத்தலம்
காதலன் கைத்தலம் அன்றிக் கன்றின் வால்
ஆதல் இம் மூன்றில் ஒன்று அம் கை பற்றியே
ஓத நீர் ஆடுதல் மரபு என்று ஓதினார்.
6
உரை
   
897. மறையவர் வாய்மை பொன் மாலை கேட்டு மேல்
குறைவு அறத் தவம் செயாக் கொடிய பாவியேற்கு
இறைவனும் சிறுவனும் இல்லையே இனிப்
பெறுவது கன்று அலால் பிறிது உண்டாகுமோ.
7
உரை
   
898. ஆதலால் கன்றின் வால் பற்றி ஆடுகோ
மாதராய் என்று தன் மகட்குக் கூறலும்
வேதன் மால் பதவியும் வேண்டினார்க்கு அருள்
நாதன் ஆருயிர்த் துணை ஆய நாயகி.
8
உரை
   
899. தன் உயிர்க் கிழவனை அடைந்து தாழ்ந்து தன்
அன்னை தன் குறை உரை ஆட ஆண் தகை
மன்னவன் வலாரியோடு ஒருங்கு வைகிய
தென்னவன் மேல் மனம் செலுத்தினான் அரோ.
9
உரை
   
900. சிலையத் திரியார் திரு உள்ளம் உணர்ந்து
தலையத் திரி அட்டவன் ஆதனம் நீத்து
உலையத் திரி ஒத்த விமான மொடு
மலையத் துவசச் செழியன் வரும் ஆல்.
10
உரை
   
901. மண் பேறு அடைவான் வரும் ஏழ் கடல் வாய்
எண் பேறு அடையா அருளின் அமுதைப்
பெண் பேறு அதனால் பெறும் பேறு இது எனாக்
கண் பேறு அடைவான் எதிர் கண்டனனே.
11
உரை
   
902. வந்தான் மருகன் சரணம் பணிவான்
முந்தாமுனம் மாமன் எனும் முறையால்
அந்தா மரை அம் கையமைத்து மகள்
தந்தானை எதிர்ந்து தழீஇ யினன் ஆல்.
12
உரை
   
903. ஆத்தன் திரு உள்ளம் மகிழ்ந்து அருளால்
பார்த்து அன்பு நிரம்பிய பன்னியொடும்
தீர்த்தம் புகுந்து ஆடிய செல்க எனப்
பூத்தண் பொருநைப் புனல் நாடவனும்.
13
உரை
   
904. முன்னைத் தவம் எய்தி முயன்று பெறும்
அன்னப் பெடை அன்னவள் வந்து எதிரே
தன்னைத் தழுவத் தழுவிக் கிரிவேந்து
என்னக் குறையா மகிழ் எய்தினனே.
14
உரை
   
905. தண்டே மொழிவேள் விதவக் குறையால்
கண்டேன் இலன் என்று கருத்து அவலம்
உண்டே அஃது இவ் உவகைக் களிதேன்
வண்டே என உண்டு மறந்தனன் ஆல்.
15
உரை
   
906. சேண் உற்றவனைச் சிலநாள் கழியக்
காண் உற்றவள் போல் நிறை கற்பு உடையாள்
பூண் உற்று மலர்ந்த ஒர் பொன் கொடிபோல்
நாண் உற்று எதிர் நண்ணி இறைஞ்சினள் ஆல்.
16
உரை
   
907. மஞ்சு ஓதிய காஞ்சன மாலை கையில்
பைஞ் சோதி விளங்குப இத் திரையாய்ச்
செஞ் சோதி முடிச் சிவ நாம எழுத்து
அஞ்சு ஓதி நெடும் கடல் ஆதும் அரோ.
17
உரை
   
908. துங்கக் கலை வேதியர் தொல் மறை நூல்
சங்கற்ப விதிப்படி தன் துணைக்கை
அம் கைத் தளிர் பற்றி அகத்து உவகை
பொங்கப் புணரிப் புனல் ஆடினளே.
18
உரை
   
909. குடைந்தார் கரை ஏறினர் கொன்றை முடி
மிடைந்தார் கருணைக் கண் விழிக் கமலம்
உடைந்தார் அனைமாரும் உதரம் குருகாது
அடைந்தார் உமை பாகர் அருள் படிவம்.
19
உரை
   
910. ஒண் கொண்டல் மிடற்று ஒளியும் ஒருநால்
எண் கொண்ட புயத்து எழிலும் அழல் சேர்
கண் கொண்ட நுதல் கவினும் பொலியா
மண் கண்டு வியப்ப வயங்கினர் ஆல்.
20
உரை
   
911. விண்ணின்று வழுக்கி விழும் கதிர் போல்
கண் நின்ற நுதல் கருணா கரன் வாழ்
எண் நின்ற புரத்தின் இழிந்து இமையா
மண் நின்றது ஓர் தெய்வ விமானம் அரோ.
21
உரை
   
912. அத் தெய்வ விமானம் அடுத்திடலும்
முத் தெய்வதம் முக்கணவன் பணியால்
நத் தெய்வ தருக் கரன் அம் கையொடும்
எத் தெய்வதமும் தொழ ஏறினன் ஆல்.
22
உரை
   
913. தேமாரி எனும் படி சிந்த நறும்
பூ மாரி பொழிந்தது பொன் உலகம்
தூமா மறை அந்தர துந்துபி கார்
ஆம் ஆம் என எங்கும் அதிர்ந்தன ஆல்.
23
உரை
   
914. எழுந்தது விமனம் வானம் எழுந்த துந்துபியும் நாணி
விழுந்தது போலும் என்ன அர ஒலி எங்கும் விம்மத்
தொழும் தகை முனிவர் ஏத்தச் சுராதிகள் பரவத்                                                         திங்கள்
கொழுந்து அணி வேணிக் கூத்தர் கோ நகர் குறித்துச்                                                         செல்வார்.
24
உரை
   
915. முன்பு தம் உருவாய் வைய முறைபுரி கோல் கைக்                                                       கொண்டு
பின்பு தம் உருவம் தந்த மருகனும் பெருகு கேண்மை
அன்பு தந்து அருகு நின்ற தடா தகை அணங்கு மீண்டு
பொன் புனை குடுமிக் கோயில் புகுந்து நன்கு இருப்பக்                                                       கண்டார்.
25
உரை
   
916. முன்னை வல் வினையால் யாக்கை முறை தடுமாறித்                                                         தோற்றம்
மன்னிய மனிதர் போலப் பண்டைய வடிவம் மாறி
அன்னையே மகளா ஈன்ற அப்பனே மருகன் ஆக
என்னயா நோற்றேம் யார்க்கும் இயற்ற அரும்                                                   தவம்தான் என்ன.
26
உரை
   
917. கன்று அகலா ஆன் போல ஐயன் கனை கடல் விடாது                                                              பற்றி
ஒன்றிய அன்பு பின்நின்று ஈர்த்து எழ உள்ளத்தோடும்
சென்று இரு கண்ணும் முட்டி அடிக்கடி திரும்பி                                                         நோக்கக்
குன்று உறழ் விமானத்து அன்னை அஞ்சலி கூப்பிச்                                                         செல்வார்.
27
உரை
   
918. புவ லோகம் கடந்து போய்ப் புண்ணியருக்கு எண்                                            இறந்த போகம் ஊட்டும்
சுவலோகம் கடந்து போய் மகலோகம் சனலோகம்                                                 துறந்து மேலைத்
தவலோகம் கடந்து போய்ச் சத்திய லோகம் கடந்து                                                 தண் துழாயோன்
நவலோகம் கடந்து உலக நாயகம் ஆம் சிவலோகம்                                                 நண்ணினாரே.
28
உரை
   
919. அறக் கொடி பின் இறை மகனை அடி பணிந்து தனை                                             ஈன்றார்க்கு ஆதி வேத
மறைப் பொருள் தன் வடிவு அளித்த அருளின் மன                          நிறை மகிழ்ச்சி வாய் கொள்ளாமல்
புறப்படுவது என இரண்டு திருச் செவிக்கும் செம்குமுதம்                                                 பொதிந்த தீம்தேன்
நிறைப்பது எனப் பல் முறையால் துதி செய்து தொழுது                                           ஒன்று நிகழ்த்தா நின்றாள்.
29
உரை
   
920. எண் இறந்த தேவர்க்கும் யாவர்க்கும் பயன் சுரக்கும்                                         இமையோர் நாட்டுப்
புண்ணியவான் தன் புனிற்றுக் கன்றுக்குக் குறைவு ஏது                                     என் பொருட்டு என் ஈன்றாள்
எண்ணியது கடல் ஒன்றெ எழு கடலும் ஈண்டு                                      அழைத்தாய் ஈன்றாள் ஆட
விண் இருந்த கண வனையும் விளித்து உன் அருள்                          வடிவு அளித்து உன் மேனாடு ஈந்தாய்.
30
உரை
   
921. தென்னர் மரபு இறந்தது எனப் படு பழியில் ஆழவரும்                                            செவ்வி நோக்கிப்
பொன் அவிர் தார் முடி புனைந்து கோல் ஒச்சி                                 வருகின்றாய் போலும் மேலும்
இந் நிலைமைக்கு இடையூறும் இனி இன்றே எனத்                                   தலைவி இயம்ப லோடும்
தன் இறைவி உட் கோளை அகம் கொண்டு மகிழ்ந்து                                    இருந்தான் தமிழர் கோமான்.
31
உரை