922. மன்னவன் குல சேகரன் திரு மகன் மனைவி
தன்னொடும் கடல் ஆடிய தகுதி ஈது அந்தத்
தென்னவன் தனித் திருமகள் திருஉளம் களிப்ப
உன்னரும் திறல் உக்கிறன் உதித்தவாறு உரைப்பாம்.
1
உரை
   
923. தண் நிலா மௌலி வேய்ந்த சுந்தர சாமி ஞாலத்து
எண் இலா வைகல் அன்னது இணையடி நிழல் போல்                                                         யார்க்கும்
தெண் நிலாக் கவிகை நீழல் செய்து அருள் செம்கோல்                                                         ஓச்சி
உண்ணிலா உயிர் தானாகி முறை புரிந்து ஒழுகும்                                                         நாளில்.
2
உரை
   
924. கரியவன் கமலச் செம்மன் மறை முதல் கலைகள்                                                        காண்டற்கு
அரியவன் அன்பர்க்கு என்றும் எளியவன் ஆகும்                                                        மேன்மை
தெரியவன் பகன்ற சிந்தைத் தென்னவன் தனக்கும்                                                        கற்பிற்கு
உரியவள் தனக்கும் காதல் மகளென உமையைத்                                                        தந்தான்.
3
உரை
   
925. மற்று அதற்கு இசையத் தானும் மருமகன் ஆகி வையம்
முற்றும் வெண் குடைக் கீழ் வைக முறை செய்தான்                                                     ஆக மூன்று
கொற்றவர் தம்மில் திங்கள் கோக்குடி விழுப்பம்                                                      எய்தப்
பெற்றது போலும் இன்னும் பெறுவதோர் குறைவு                                                       தீர்ப்பான்.
4
உரை
   
926. ஒன்றினைச் செய்கை செய்யாது ஒழிகை வேறு ஒன்று                                                         செய்கை
என்று இவை உடையோன் ஆதி ஈறு இலாப் பரம                                                         யோகி
நன்று தீது இகழ்ச்சி வேட்கை நட்பு இகல் விளைக்கும்                                                         மாயை
வென்றவன் செய்யும் மாயை விருத்தி யார் அளக்க                                                         வல்லார்.
5
உரை
   
927. இந்திர சால விச்சை காட்டுவான் என்னத் தன்பால்
செம் தழல் நாட்டம் ஈன்ற செல்வனைக் கருப்பம்                                                         எய்தா
தம் தமில் உயிரும் ஞாலம் அனைத்தையும் ஈன்ற                                                         தாயாம்
சுந்தரவல்லி தன்பால் தோன்று மாறு உள்ளம்                                                         செய்தான்.
6
உரை
   
928. அங்கு அவன் வரவுக்கு ஏற்ப ஆயமும் பிறரும் தாழ்ந்து
மங்கை நின் வடிவுக்கு ஏற்பக் கருவுரு வனப்பும் சீரும்
திங்கதோற் ஆற்று மன்றல் செவ்வியும் காண ஆசை
பொங்கியது எங்கட்கு என்றார் புனிதை அப்படி போல்                                                         ஆனாள்.
7
உரை
   
929. கரு மணிச் சிகரச் செம் பொன் கனவரை அனைய                                                         காட்சித்
திரு முலை அமுதம் பெய்த செப்பு இரண்டு அனைய                                                         வாக
வரு முலை சுமந்து மாய்ந்த மருங்குலும் வந்து தோன்ற
அருள் கனிந்த அனையாள் நாவிற்கு இன் சுவை                                                  ஆர்வம் பொங்க.
8
உரை
   
930. என்னவும் எளிய வேனும் அரியன என்ன வேட்டாள்
அன்னவும் போக பூமி அரும் பெறல் உணவு நல்கிப்
பன்னகர் அமுதும் திங்கள் படுசுவை அமுதும் தெய்வப்
பொன்னகர் அமுதும் ஆசை புதைபடக் கணங்கள் நல்க.
9
உரை
   
931. புண்ணிய முனிவர் வேத பண்டிதர் போந்து வேந்தர்க்கு
கண்ணிய சடங்கு மூதூர் அரும் கடி வெள்ளத்து ஆழ
எண்ணிய திங்கள் தோறும் இயற்ற இக் கன்னித் தேயம்
பண்ணிய தருமச் சார்பால் படுபயன் தலைப்பாடு எய்த.
1
உரை
   
932. மாசு அறத் துறந்தோர் உள்ளம் ஆன வான் களங்கம்                                                       நீங்க
ஈசர் தம் கிழமை என்னும் இந்து ஆதிரை நாள் செய்த
பூசையின் பயன் தான் எய்த எரி பசும் பொன்                                                       கோள்வந்து
தேசு ஒடு கேந்திரத்தில் சிறந்த நல் ஓரை வாய்ப்ப.
11
உரை
   
933. முந்தை நான் மறைகள் தாமே முழங்க மந்தார மாரி
சிந்த நாள் மலர் பூத்து ஆடும் மின் எனத் திசைகள்                                                       தோறும்
அந்தர மகளிர் ஆடத் துந்துபி ஐந்தும் ஆர்ப்ப
விந்தையும் திருவும் வெள்ளைக் கிழத்தியும் வீறு                                                       வாய்ப்ப.
12
உரை
   
934. அந்தணர் மகிழ்ச்சி தூங்க அடுத்து அவர் வளர்க்கும்                                                      முன்னர்
மந்திர வேள்விச் செந்தீ வலம் சுழித்து எழுந்து                                                    ஆர்த்து ஆடச்
சிந்துர நுதல் மா எட்டும் சேடனும் பொறை எய்ப்பு                                                       ஆற
இந்திரன் மேருப் புத்தேள் புனல் இறைக்கு இடம்                                                     தோள் ஆட.
13
உரை
   
935. ஆலத்தை அமுதம் ஆக்கும் அண்ணலும் அணங்கும்                                                       கொண்ட
கோலத்துக்கு ஏற்பக் காலைக் குழந்தை வெம் கதிர்                                                   போல் அற்றைக்
காலத்தில் உதித்த சேய்போல் கண் மழை பிலிற்று                                                       நிம்ப
மாலை தோள் செழியன் செல்வ மகள் வயின்                                                 தோன்றினானே.
14
உரை
   
936. எடுத்தனள் மோந்து புல்லி ஏந்தினள் காந்தன் கையில்
கொடுத்தனள் வாங்கி வீங்கு கொங்கை நின்று இழிபால்                                                       வெள்ளம்
விடுத்தனள் குமுதப் போதில் வெண் நிலா வெள்ளம்                                                       போல்வாய்
மடுத்தனள் அருத்தி னாள்தன் மைந்தனை எம் பிராட்டி.
15
உரை
   
937. சலத்தலைக் கிடக்கைப் புத்தேள் அருநிழல் வாழ்க்கைப்                                                       புத்தேள்
அலர்த்தலை இருக்கைப் புத்தேள் ஆதி இப் புத்தேளிர்                                                       வேதப்
புலத்தலைக் கேள்வி சான்ற புண்ணிய முனிவர் ஏனோர்
குலத்தலை மகளி ரோடும் கோமகன் கோயில் புக்கார்.
16
உரை
   
938. குட புலத்து அரசும் பொன்னிக் குளிர் புனல் கோழி                                                       வேந்தும்
வடபுலத்து அரசர் யாரும் குறுநில வாழ்க்கைச்                                                       செல்வத்து
அடல்கெழு தொண்டைத் தண்தார் அரசொடு மணிகம்                                                       சூழக்
கடல்கள் நால் திசையும் பொங்கி வருவ போல் கலிப்ப                                                       வந்தார்.
17
உரை
   
939. மன்னனைத் தேவிதன்னை முறையினால் வழுத்தி                                                       வாழ்த்தி
நன்னர் கோளாகி ஓகை நவின்று வெண் மழு மான்                                                       நீத்த
தென்னவர் பெருமான் தேவி திருமுகக் கருணை                                                       பெற்றுப்
பொன்னடி பணிந்து தம் ஊர் போகுவார் இனைய                                                       சொல்வார்.
18
உரை
   
940. வழுதியர் பெருமான் தன் பால் கந்தனே வந்தான்                                                         என்பார்
பழுதறு கற்பினாள் தன் பாக்கியம் இதுவே என்பார்
அழகினான் மதனும் பெண்மை அவா உறும் இவன்                                                     கோல் ஆணை
எழுகடல் உலகோடு வையம் ஏழையும் காக்கும்                                                        என்பார்.
19
உரை
   
941. மனிதர் வான் தவமோ தென்பார் வைகு வோர் தவமோ                                                         வானப்
புனிதர் வான் தவமோ வேள்விப் பூசுரர் தவமோ                                                         கேள்வி
முனிவர் வான் தவமோ ஈறு முதல் இலா முதல்வன்                                                         உள்ளக்
கனிதரு கருணை போலிக் காதலன் தோற்றம் என்பார்.
2
உரை
   
942. தரும மா தவத்தின் பேறோ வருத்த மாதவத்தின்                                                         பேறோ
பெருமை சால் காமன் நோற்ற பெருந்தவப் பேறோ                                                         எய்தற்கு
அருமை ஆம் வீடுநோற்ற அரும்தவப் பேறோ இந்தத்
திருமகன் என்று தம்மில் வினாய் மகிழ் சிறப்பச்                                                         சென்றார்.
21
உரை
   
943. அவ் அவர் மனைகள் தோறும் மங்கல அணிகளாகக்
கௌவை மங்கலங்கள் ஆர்ப்பக் கடிநகர் எங்கும்                                                         பொங்க
நெய் விழா எடுப்பக் கேள்வி நிரம்பிய மறையோர்க்கு                                                         ஈந்த
தெய்வ மா தான நீத்து அந் திரைக் கடன் மடுத்தது                                                         அம்மா.
22
உரை
   
944. சுண்ணமும் பொரியும் தூ வெள் அரிசியும் தூர்வைக்                                                         காடும்
தண் அறும் சிவிறி வீசு தண் பனி நீரும் சாந்தும்
எண்ணெயும் நானச் சேறும் பசை அற எடுத்து வாரிக்
கண்ணகன் நகரம் எங்கும் கழுவின தான வெள்ளம்.
23
உரை
   
945. செம் பொன் செய் துருத்தி தூம்பு செய் குழல் வட்டம்                                                         ஆக
அம் பொன் செய் சிவிறி வெண் பொன் அண்டை                                                கொண்டாரம் தூங்கும்
வம் பஞ்சு முலை யினாரும் மைந்தரும் மாறி ஆட
அம் பஞ்சு மாறி மாறி அனங்கனும் ஆடல் செய்தான்.
24
உரை
   
946. இன்னணம் களிப்ப மூதூர் இந்து ஆதிரை நல் நாளில்
பொன்னவன் கேந்திரித்த புனித லக்கினத்தில் போந்த
தென்னவர் பெருமான் சேய்க்குச் சாதகச் செய்தி ஆதி
மன்னவர்க்கு இயன்ற வேத மரபினால் வயங்க ஆற்றி.
25
உரை
   
947. கரிய வெண் திரை நீர்ச் செல்வன் கல் இறகு அரிந்த                                                         வென்றித்
தெரியலன் உலகம் தாங்கும் தெய்வதக் வரைக்கோன்                                                         ஆதித்
தரியலர் வீரம் சிந்தத் தருக்கு அழிந்து அச்சம்                                                         தோற்றற்கு
உரிய காரணத்து ஆனா உக்கிர வருமன் என்பார்.
26
உரை
   
948. நால் ஆகும் மதியில் சந்தி மிதிப்பது நடாத்தி ஆறு                                                         ஆம்
பாலாகும் மதியில் அன்ன மங்கலம் பயிற்றி ஆண்டின்
மேல் ஆகும் மதியில் கேச வினை முடித்து ஐந்தாம்                                                         ஆண்டின்
நூல் ஆறு தெரிந்து பூண நூல் கடி முடித்துப் பின்னர்.
27
உரை
   
949. பத நிரை பாழி சாகை ஆரணம் பணைத்த வேத
முதல் நிரை கலையும் வென்றி மூரி வில் கலையும்                                                         வாளும்
மத நிரை ஒழுகும் ஐயன் மா நிரை வையம் பாய்மா
வித நிரை ஏற்றம் மற்றும் உணர்த்தினான் வியாழப்                                                         புத்தேள்.
28
உரை
   
950. குரு முகத்து அறிய வேண்டும் என்பது ஓர் கொள்கை                                                         ஆலே
ஒரு முறை கேட்டு ஆங்கு எண் நான்கு கலைகளும்                                                     ஒருங்கு தேறி
அரன் அல ஒருவராலும் தேற்றுவது அருமை ஆல் அப்
பரன் இடைத் தெளிந்தான் பாசு பதாத்திரப் படையும்                                                         மன்னோ.
29
உரை
   
951. எல்லை இல் கலைகள் எல்லாம் அகவை நால்                                                 இரண்டின் முற்றத்
தொல் அறிவு உடையன் ஆகித் குரவரைத் தொழுது                                                        போற்ற
வல்லவன் ஆகி அன்னார் மகிழ்ச்சி கொள் கனலாய்                                                        வென்றிச்
செல்வ ஏற்று இளைய ரோடும் திரு விளையாடல்                                                        செய்வான்.
30
உரை
   
952. புகர் மத வேழம் முட்டிப் போர் விளையாடி என்றும்
தகரொடு தகரைத் தாக்கித் தருக்கு அமர் ஆடி                                                        வென்றும்
வகிர் படு குருதிச் சூட்டு வாரணம் ஆடி வென்றும்
நகை மணிப் பலகை செம் பொன்னால் குறுப் பாடி                                                        வென்றும்.
31
உரை
   
953. காற்றினும் கடிய மாவில் காவதம் பல போய் மீண்டும்
கூற்றினும் கொடிய சீற்றக் குஞ்சரம் உகைத்தும் வைகை
ஆற்றின் உய்யானத்து ஆவி அகத்தின் உள் இன்பம்                                                        துய்த்தும்
வேல் திறன் மைந்தரோடு மல் அமர் விளைத்து                                                        வென்றும்.
32
உரை
   
954. சந்த வெற்பு அடைந்து வேட்டம் செய்து சைல                                                        வாழ்க்கை
அந்தணர் ஆசி கூற அவர் தொழில் வினாயும்                                                        அன்னார்
கந்த மென் கனி விருத்து ஊண் கை தழீக் களித்து                                                        மீண்டும்
இந்தவாறு ஐம் மூ ஆண்டு கழிய மேல் எய்தும்                                                        ஆண்டில்.
33
உரை
   
955. சூர் முதல் தடிந்த தங்கள் தோன்றலே இவன் என்று                                                        எண்ணிக்
கார் முக மயிலும் வேலும் கை விடாக் காக்கு மா                                                        போல்
வார் முக முலையினாரும் வடிக் கணும் மருங்கு                                                        மொய்ப்பக்
கூர் முக வேலான் இன்ன கொள்கையன் ஆகத் தாதை.
34
உரை
   
956. பங்கயச் செவ்வித்து ஆகித் கண் மனம் பருகு காந்தி
அங்கு அழல் காலும் சொன்ன அடைவினில் திரண்டு                                                        நீண்ட
சங்கமும் வட்டம் தோன்றச் செழு முழந்தாளும் நால்                                                        வாய்த்
துங்க ஈர்ங் கவுண் மால் யானைத் துதிக்கை போல்                                                    திரள் கவானும்.
35
உரை
   
957. சிறுகிய வயிறும் தாழ்ந்த நாபியும் செவ்வி நோக்கும்
மறு இல் கண்ணடியின் அன்ன கடிய கல் வரை கொள்                                                        மார்பும்
எறி இசை வீணைக் தண்டின் இணைந்து நீண்டு இழிந்த                                                        கையும்
வெறிய தார் கிடந்த மேரு வெற்பு இரண்டு அனைய                                                        தோளும்.
36
உரை
   
958. வலம்புரி என்ன வாய்ந்த கண்டமும் மலராள் மன்னும்
பொலம் புரி கமலம் அன்ன வதனமும் பொதுவான்                                                        நோக்கி
நிலம் புரி தவப் பேறு அன்னான் வடிவு எலாம் நின்று                                                        நின்று
நலம் புரி நூலோன் நோக்கிச் சோதிப்பான் அடிக்க                                                        வல்லான்.
37
உரை
   
959. உன்னத ஆறு நீண்ட உறுப்பும் ஐந்து சூக்கம் தானும்
அன்னது குறுக்க நான்காம் அகல் உறுப்பு இரண்டு ஏழ்                                                        ஆகச்
சொன்னது சிவப்பு மூன்று கம்பிரம் தொகுத்த வாறே
இன்னவை விரிக்கின் எண் நான்கின் இலக்கண                                                  உறுப்பாம் என்ப.
38
உரை
   
960. வயிறு தோள் நெற்றி நாசி மார்பு கை அடி இவ் ஆறும்
உயிரில் வான் செல்வன் ஆகும் ஒளி கவர் கண்                                                        கபோலம்
புயல் புரை வள்ளல் செம்கை புது மணம் கவரும்                                                        துண்டம்
வியன் முலை நகுமார்பு ஐந்து நீண்ட வேல் விளைக்கும்                                                        நன்மை.
39
உரை
   
961. நறிய பூம் குஞ்சி தொக்கு விரல் கணு நகம் பல் ஐந்தும்
சிறியவேல் ஆயுள் கோசம் சங்க நா முதுகு இந்                                                         நான்கும்
குறியவேல் பாக்கியப் பேறாம் சிரம் குளம் என்று                                                       ஆய்ந்தோர்
அறியும் இவ் உறுப்பு இரண்டும் அகன்றவேல் அதுவும்                                                        நன்றாம்.
40
உரை
   
962. அகவடி அங்கை நாட்டக் கடை இதழ் அண்ணம் நாக்கு
நகம் இவை ஏழும் சேந்த நன்மை நாற் பெறுமா இன்பம்
இகல் வலி ஓசை நாபி என்று இவை மூன்றும் ஆழ்ந்த
தகைமையால் எவர்க்கும் மேலாம் நன்மை சால்                                                    தக்கோன் என்ன.
41
உரை
   
963. எல்லை இன் மூர்த்தி மைந்தன் இலக்கண நிறைவினோடு
நல்ல ஆம் குணனும் நோக்கிப் பொது அற ஞாலம்
                                                         காக்க
வல்லவன் ஆகி வாழ் நாள் இனி பெற வல்லன் என்னா
அல் அணி மிடற்றான் பின்னும் மனத்தினால் அளந்து
                                                        சூழும்.
42
உரை
   
964. இத் தகு பண்பு சான்ற நீர்மையால் இசைமை நீதி
வித்தக நல்ல உள்ளம் உடைமை மெய் வீறு தெய்வ
பத்திமை உலகுக்கு எல்லாம் மகிழ்ச்சி செய் பண்பு                                                        சாந்த
சித்தம் எவ் உயிர்க்கும் அன்பு செய்கை நல் ஈகை                                                        கல்வி.
43
உரை
   
965. வெல்லுதற்கு அரியார் தம்மை வெல்லுதல் தேவராலும்
செல்லுதற்கு அரிய ஏத்தும் சென்றிடும் திறையும்                                                        கோடல்
புல்லுதற்கு அரிய ஞாலம் மாலை போல் புயத்தில்                                                        ஏந்திச்
சொல்லுதற்கு அரிய வீரம் உலகு எலாம் சுமப்ப                                                        வைத்தல்.
44
உரை
   
966. என்று இவை ஆதி ஆய இயல் குணம் உடையன் ஆகி
நன்றி செய்து உலகுக்கு எல்லாம் நாயகன் ஒருவன் ஆகி
நின்றிடும் இவற்குப் பின்னர் நீள் முடி கவித்து முன்னர்
மன்றல் செய்க என்று சூழ்ந்து மதிஞரோடு உசாவினானே.
45
உரை