1112. அண்டர் அஞ்ச அமர் உழந்த அமரர் கோனை அரசர்                                                          கோன்
வண்டு அலம்பு மவுலி சிந்த வளை எறிந்து வெந் புறம்
கண்ட வண்ணம் இன்ன தன்ன கன்னி நாடன் மேருவில்
செண்டு எறிந்து வைப்பு எடுத்த செயலு நன்கு                                                       செப்புவாம்.
1
உரை
   
1113. மன்னவன் தனக்கு முன்னர் மலய வெற்பின் முனிவர்                                                        கோன்
சொன்ன திங்கள் விரதம் அன்று தொட்டு நோற்று                                                       வரலும் அந்
நன்னலம் செய் பேறு போல நங்கை காந்தி மதி                                                        வயிற்று
உன்னரும் சயம் கொள் மைந்தன் ஒருவன் வந்து                                                     தோன்றினான்.
2
உரை
   
1114. வயந்தனை பயந்தது என்ன மைந்தனைப் பயந்த போது
இயந்து வைத்து நகர் களிப்ப இனிது இருந்த புரவலன்
சயம் தழைக்க இந்திரன் சயந்தனைப் பயந்த நாள்
வியந்து அகத்து அடைந்த இன்பம் விளை மகிழ்ச்சி                                                      எய்தினான்.
3
உரை
   
1115. தென்னர் ஏறு சாதகாதி செய்து வீர பாண்டியன்
என்ன நாம வினை நிரப்பி எழுத ஓணாத கலை முதல்
பன்னு கேள்வி கரிகள் தேர்கள் பரி படை கலம்                                                          பயின்று
அன்ன காதலான் விளங்க அகம்மகிழ்ச்சி அடையும்                                                          நாள்.
4
உரை
   
1116. மல்கு மாறுஇல் கோள் திரிந்து மழை சுருங்கி நதியும்                                                         நீர்
ஒல்கு மாறு பருவம் மாறி உணவு மாறி உயிர் எலாம்
மெல்குமாறு பசி உழந்து வேந்தனுக்கு விளைபொருள்
நல்கு மாறி இலமை இன்னல் நலிய வந்த நாடு எலாம்.
5
உரை
   
1117. மழை வறந்தது என் கொல் என்று வழுதிகூற முழுது                                                         உணர்ந்து
அழிவு இலாத பிரம கற்பம் அளவு எல்லை கண்ட நூல்
உழவர் கோள்கள் இரவி தன்னை உற்று நோக்கி                                                       நிற்றலால்
தழையும் மாரி வருடியாது ஓர் வருடம் என்று                                                       சாற்றினார்.
6
உரை
   
1118. மகவு உறு நோயை நோக்கி வருந்து உறு தாய்போல்                                                         மன்னன்
பக உறு மதியம் சூடும் பரம் சுடர் முன் போய் தாழ்ந்து
மிக உறு பசியால் வையம் மெலிவதை ஐய என்னாத்
தகவு உற இரங்கி கண்ணீர் ததும்ப நின்று இரந்து                                                         வேண்ட.
7
உரை
   
1119. திரைக்கடல் விடம் சேர் கண்டர் காலத்தின்                                                  செவ்விநோக்கி
இரக்கம் இல்லாதவர் போல் வாளா இருத்தலும்                                                  மருத்தார் மார்பன்
கரைக்கு அரிது ஆய துன்பக் கடலில் வீழ்ந்து                                                   இருக்கைபுக்கான்
அரக்கர் போல் கடலில் நீந்தி அருக்கன் நீர்க் கடலில்                                                        வீழ்ந்தான்.
8
உரை
   
1120. வள்ளல் தன் குடைக் கீழ் தங்கும் உயிர்ப்பசி வருத்தம்                                                  வருத்தம் எல்லாம்
கொள்ளை கொண்டு இருந்த நெஞ்சில் குளிர் முகச்                                                     செவ்விகுன்றத்
தள் உரும் துயரின் மூழ்கித் தரை இடைத் துயின்றான்                                                          ஆக
வெள்ளி மன்று உடையார் சித்த வேடராய்க் கனவில்                                                          வந்தார்.
9
உரை
   
1121. அடல் கதிர் வேலோய் மாரி அரிதி இப்போது அதனை                                                        வேண்டி
இடப் படல் வரைக்கு வேந்தாய் இருக்கின்ற எரி பொன்                                                        மேருத்
தடப் பெரு வரையின் மாடு ஓர் தனிப் பெரு முழையில்                                                        இட்டுக்
கிடப்பது ஒர் எல்லை இல்லாக் கேடு இலாச் சேம                                                        வைப்பு.
10
உரை
   
1122. கிடைத்து மற்று அனைய மேரு கிரி செருக்கு அடங்கச்                                                        செண்டால்
புடைத்து நின் ஆணைத் தாக்கிப் பொன் அறை                                                   பொதிந்த பாறை
உடைத்து நீ வேண்டும் காறும் தொட்டு எடுத்து அதனை                                                             மீள
அடைத்து நின் குறி இட்டு ஐய வருதி என்று அடிகள்                                                             கூற.
11
உரை
   
1123. விழித்தன எழு மான் தேரோன் விழிக்கும் முன்                                                 கடன்கள் எல்லாம்
கழித்தனன் மீன நோக்கி கணவனை வலமாப் போந்து
கழித்து எறி கடல் அனீகத் தொகை புறம் சூழக்                                                      கொண்டல்
கிழித்து எழு வாயின் நீங்கிக் கீழ்த் திசை நோக்கிச்                                                       செல்வான்.
12
உரை
   
1124. அதிர்ந்தன முரசம் சங்கம் அதிர்ந்தன வியங்கள்                                                          அண்டம்
பிதிர்ந்தன என்ன ஆர்ப்பப் பெயர்ந்து வெண் கவரி                                                          துள்ள
முதிர்ந்த நான் மறையோர் ஆசி மொழிய நா வல்லோர்                                                        ஏத்தப்
பதிந்து பார் கிழியத் திண்தேர் பாகுமுன் செலுத்த                                                       ஊர்ந்தான்.
13
உரை
   
1125. பவளக்கால் பிச்சம் பொன் கால் பல் மனிக் கவிகை                                                         முத்தக்
தவளக்கால் பதாகைக் காதும் தான வான் அருவி                                                         தூங்கும்
கவளக்கால் பொருப்பும் பாய்மாக் கடலும் மண்                                                    மடந்தை ஆகம்
துவளக் கால் வயவர் மான் தேர் தொகுதியும் சூழல்                                                         போக.
14
உரை
   
1126. கோழ் இணர் ஞாழல் அன்ன கோட்டு உகிர்ப் புலவுப்                                                      பேழ் வாய்த்
தாழ்சின உழுவை ஒற்றைத் தனிப் பெரும் கொடியும்                                                        கூனல்
காழ் சிலைக் கொடியும் சூழக் கயல் கொடி நிலம்                                                        துழாங்கை
ஏழ் உயர் வரை மேல் தோன்றி இரும் விசும்பு                                                        அகடுகீற.
15
உரை
   
1127. தென் கடல் வடபால் நோக்கிச் செல்வது போலத்                                                          தென்னன்
தன் கடல் அணிகம் கன்னித் தண் தமிழ் நாடு நீந்தி
வன் கட நெறிக் கொண்டு ஏகி வளவர் கோன் எதிர்                                                 கொண்டு ஆற்றும்
நன் கடன் முகமன் ஏற்று நளிர் புனல் நாடு நீந்தி.
16
உரை
   
1128. தண்டக நாடு தள்ளித் தெலுங்க நாடு அகன்று சாய்                                                          தாள்
கண்டகக் கைதை வேலிக் கரு நடம் கடந்து காடும்
தொண்டகம் துவைக்கும் குன்று நதிகளும் துறந்து                                                          கள்வாய்
வண்டக மலர்க்கா வேலி மாளவ தேசம் நண்ணி.
17
உரை
   
1129. அங்கு நின்று எழுந்து தீவா அரும் சுர நெறிப் பட்டு                                                          ஏகி
அங்கு நின்று அதிரும் செம்பொன் மாட நீள் விராட                                                          நண்ணிக்
கொங்கு நின்று அவிழும் கானம் குன்று ஒரீஇ வாளை                                                          பாயத்
தெங்கு நின்று இளநிர் சிந்து மத்திய தேயத்து எய்தி.
18
உரை
   
1130. அந் நெடு நாடு நீங்கி ஆடல் ஏறு உயர்த்த தோன்றல்
பொன் நெடும் சடையில் தாழ்ந்து புனிதம் ஆம்                                                      தீர்த்தக் காசி
நல் நெடு நகரம் எய்தி நளிர் புனல் கங்கை நீந்திக்
கல் நெடு நெறி அநேக காவதம் கடந்த பின்னர்.
19
உரை
   
1131. மடம்கல் மா நாகம் யாளி வழங்கலான் மனிதர் செல்லா
இடம் கடந்தாக வைஞ்நூற்று இரட்டி யோசனைத்தாம்                                                          எல்லைக்
கடம் கெழு குமரி கண்டம் கடந்து மற்று அது போல்                                                          எட்டுத்
தடம் கெழு கண்டம் கொண்ட பாரத வருடம் தள்ளி.
20
உரை
   
1132. யாவையும் ஈன்றாள் தன்னை ஈன்ற பொன் இமயம்                                                      தன்னைத்
தாவி அப் புறம் போய்ப் போகம் ததும்பு கிம்புருடக்                                                      கண்டம்
மேவி அங்கு அது நீத்து ஏம வெற்பு அடைந்து அது                                                      பின் ஆக
ஓவியப் புறத்துத் தோன்றும் அரி வருடத்தை உற்று.
21
உரை
   
1133. உற்றது கழிந்து அப்பால் போய் நிடத வெற்பு ஒழிந்து                                                      சம்புப்
பொன் தருக் கனி கால் யாறு போகி இளா விருத                                                      கண்டத்து
உற்றனன் கண்டான் மூன்று ஊர் ஒருங்கடு ஞான்று                                                      கூனி
வெற்றி வெஞ் சிலையாய் நின்ற வெற்பினை மலய                                                      வெற்பன்.
22
உரை
   
1134. வெம் படை மறவர் சேனை வெள்ளம் நீத்து ஏகித்                                                      தென்பால்
சம்புவின் கனியின் சாறு வலம் படத் தழுவி ஓடும்
அம் பொன் ஈர் ஆறு ஆற்றின் அருகு பொன் மயமாய்                                                      நிற்கும்
பைம்புனம் கானம் நோக்கி வளைந்து தென்பால் வந்து                                                      எய்தா.
23
உரை
   
1135. அவ் வரை அரசை நோக்கி வரைகளுக்கு அரசே                                                      எந்தை
கைவரி சிலையே பாரின் களைகணே அளவில் வானம்
தை வரு சுடரும் கோளும் நான்களும் தழுவிச் சூழும்
தெய்வத வரையே மேலைத் தேவர் ஆலயமே என்னா.
24
உரை
   
1136. மாணிக்கம் இமைக்கும் பூணான் விளித்தலும் வரைக்கு                                                      வேந்தன்
பாணித்து வரவு தாழ்ப்பப் பாக சாதனனை வென்றோன்
நாணித் தன் சினமும் மேரு நகை வரைச் செருக்கு                                                      மாறச்
சேண் உற்ற சிகரம் தன்னில் செண்டினால் அடித்து                                                      நின்றான்.
25
உரை
   
1137. அடித்தலும் அசையா மேரு அசைந்து பொன் பந்து                                                      போலத்
துடித்தது சிகர பந்தி சுரர் பயில் மாடப் பந்தி
வெடித்தன தருண பானு மண்டலம் விண்டு தூளாய்ப்
படித்தலை தெறித்தால் என்னப் பல் மணி உதிர்ந்த                                                      அன்றே.
26
உரை
   
1138. புடை வரைக் குலங்கள் எட்டும் புறம் தழீஇக் கிடக்கும்                                                     செம் பொன்
அடைகல் ஓர் நான்கு கிடங்கரும் மலர்ந்த நான்கு
தட மலர்ப் பொழிலும் நான்கு தருக்களும் சலித்த                                                      அம்மா
உடையவன் இடையூறு உற்றால் அடுத்த வர்க்கு உவகை                                                      உண்டோ.
27
உரை
   
1139. புடைத்த பின் மேருத் தெய்வம் புடைக்குல வரை எட்டு                                                      என்னப்
படைத்த எண் தோளும் நான்கு முடியும் மேல் படு                                                      வெண் சோதி
உடைத் தனிக் குடையும் கொண்ட உருவினோடு எழுந்து                                                      நாணிக்
கிடைத்தது கருணை வேந்தன் கிளர் சினம் தணிந்து                                                      நோக்கா.
28
உரை
   
1140. இத்தனை வரவு தாழ்த்தது என் என மேருத் தெய்வம்
வித்தக நம்பி கேட்டி மீனெடும் கண்ணியோடும்
பைத்தலை அரவம் பூண்டபரனை இப் படிவம் கொண்டு
நித்தலும் போகிப் போகி வழிபடு நியமம் பூண்டேன்.
29
உரை
   
1141. இன்று கேட்டிலையோ ஐயா ஏந்திழை ஒருத்தி காமம்
துன்று மா கடலின் மோகச் சுழித்தலைப் பட்டு வெள்ளி
மன்றுள் ஆடிய பொன் பாதம் வழிபடல் மறந்து                                                        தாழ்ந்து
நின்றுளேன் இனைய தீங்கின் இமித்தினால் அடியும்                                                        பட்டேன்.
30
உரை
   
1142. திருவடி பிழைத்த தீங்கு தீர்த்தனை இதனில் ஐயன்
தருவது ஓர் உறுதி தானும் தக்கது ஒர் கைம்மாறு                                                        என்னால்
வருவது உண்டாம் கொல்லோ மற்று அது நிற்க மன்றல்
பருவரை மார்ப வந்த பரிசு என் கொல் பகர்தி என்ன.
31
உரை
   
1143. மன்னவன் வெறுக்கை வேண்டி வந்தனன் என்றான் ஐய
உன்னது புலத்து ஓர்க் ஏற்ப உரைபடு மாற்றது ஆய
பொன் அவிர் தேமா நீழல் புதை படக் கிடக்கும் செம்                                                          பொன்
என்ன அம் கையால் சுட்டிக் காட்டிய தெரி பொன்                                                          குன்றம்.
32
உரை
   
1144. மின் நகு வேலான் முந்நீர் வேலையை வணக்கம்                                                     கண்டோன்
பொன்னறை மருங்கில் போகிப் பொத்திய பாறை                                                         நீக்கித்
தன் அவா அளவிற்று ஆய தபனிய முகந்து மூடிப்
பின்னதும் தன்னது ஆகப் பெயர் இலச்சனையும்                                                         தீட்டா.
33
உரை
   
1145. மின் திகழ் மணிப் பூண் மார்பன் மீண்டு தன் தானை                                                          யோடும்
தென் திசை நோக்கிப் பாகன் செலுத்த மான் தடம்தேர்                                                          ஊர்ந்து
பொன் திகழ் வரையும் போக பூமியும் பிறவும் நீத்து
நன்றி கொள் மனிதர் வைப்பின் நண்ணுவான் நண்ணும்                                                          எல்லை.
34
உரை
   
1146. மாத்திமர் விராட மன்னர் மாளவர் தெலுங்க தேயப்
பார்த்திபர் பிறரும் தத்தம் பதிதொறும் வரவு நோக்கித்
தேர்த்திகழ் அனிகத் தோடும் சென்று எதிர் முகமன்                                                      செய்யத்
தார்த் திரு மார்பன் கன்னித் தண் தமிழ் நாடு                                                      சார்ந்தான்.
35
உரை
   
1147. கன்னிப் பொன் எயில் சூழ் செம் பொன் கடி நகர்க்கு                                                    அணியன் ஆகிப்
பொன்னில் செய்து இழைத்த நீள் கோபுரத்தினைக்                                                         கண்டு தாழ
உன்னித் தேர் இழிந்து எட்டோடு ஐந்து உறுப்பினால்                                                    பணிந்து எழுந்து
வன்னிச் செம் சுடர்க் கண் நெற்றி மன்னவன் மதுரை                                                          சார்ந்தான்.
36
உரை
   
1148. அறத்துறை அந்தணாளர் துறந்தவர் அரன் தாள் பற்றிப்
புறத்துறை அகன்ற சைவபூதியர் புனிதன் கோயில்
நிறத்துறை அகத்துத் தொண்டர் திரண்டு எதிர் கொள்ள                                                          முத்தின்
நிறத்துறை வைகை நீத்து நெடு மதில் வாயில் புக்கான்.
37
உரை
   
1149. கொங்கு அலர் கோதை மாதர் குங்குமம் பனிப்பச்                                                          சிந்தும்
மங்கல மறுகின் ஏகி மறைகள் சூழ் கோயில் எய்தித்
தங்கள் நாயகனைச் சூழ்ந்து தாழ்ந்து எழுந்து ஏத்திப்                                                          போந்து
திங்கள் சூழ் குடுமிச் செல்வத் திருமணிக் கோயில்                                                          புக்கான்.
38
உரை
   
1150. பொன் மலைக் கடவுள் ஈந்த புண்ணிய நிதியை அந்த
நல் மலை மானக் கூப்பி நல்கிப்பல் குடியும் ஓம்பித்
தென்மலைக் கிழவன் தெய்வம் தென் புல வாணர்                                                        ஒக்கல்
தன் மனை விருந்து காத்துத் தருக்கினான் இருக்கும்                                                        நாளில்.
39
உரை
   
1151. ஐ வினை நடாத்தும் ஈசன் ஆணையால் நடக்கும்                                                        கோளும்
செய்வினைத் திரிவும் மாறத் தென்னன் நாடு எங்கும்                                                        மாரி
பெய் வினை உடையது ஆகிப் பெருவளம் பகிர்ந்து                                                        நல்க
உய் வினை உடைய ஆகி உயிர் எலாம் தழைத்த                                                        அன்றே.
40
உரை
   
1152. புவனி இம் முறையால் புரந்து அளித்து ஆரம்பூண்ட                                           பாண்டியன் திரு மகனுக்கு
அவனி ஏழ் அறிய வீரபாண்டியன் என்று அணிமுடி                                                கவித்து அரசளித்து
நவ நிரதிசய பூரண இன்ப ஞான நோக்கு அருளிய                                                          மதுரைச்
சிவனடி நிழலில் பிளப்பு அற பழைய தேசு ஒடு                                          நிறைந்து வீற்று இருந்தான்.
41
உரை