1153. உலம் பொரு தடம் தோள் உக்கிரச் செழியன் உயரிய                                     மேரு மால் வரையைப்
பொலம் புரி செண்டால் புடைத்து வைப் பெடுத்துப்                           பேந்துஅருள் அடைந்த வா புகன்றும்
வலம் படு திணிதோள் வீரபாண்டியன் கோல் வழங்கும்                                  நாள் மதுரை எம் பெருமான்
புலம் பொரு முனிவர் தேற நால் வேதப் பொருள்                               உணர்த்திய திறம் புகல்வாம்.
1
உரை
   
1154. ஐம் பெரும் பூத நிலை திரிந்து ஈர் ஏழ் அடுக்கிய                                              உலகொடு மயன் மால்
உம்பர் வான் பதமும் உதித்தவாறு ஒடுங்க உருத்தது                                              ஓர் ஊழி வந்து எய்தச்
செம் பொருள் மறையும் ஒடுங்கிய வழி நாள் செம் சுடர்                                                கடவுள் முன் மலரும்
வம்பு அவிழ் கமலம் என அரன் திருமுன் மலர்ந்ததால்                                                 அகிலமும் மாதோ.
2
உரை
   
1155. பண்டுபோல் பின்னும் முத் தொழில் நடாத்தப் பரா                                              பரஞ்சுடர் திரு உள்ளம்
கொண்டு போர்த் திகிரி வலவனைத் தாவிக் குரி சிறன்                                              நாபி முண்டகத்தில்
வண்டு போல் பிரமன் உதித்து மூ உலகும் வரன் முறை                                              படைக்கும் நாள் நஞ்சம்
உண்டு போற்றிய வானவர்க்கு உயிர் அளித்த உம்பர்                                               நாயகன் திருவாக்கில்.
3
உரை
   
1156. பிரணவம் உதித்தது அதன் இடை வேதம் பிறந்தன                                                  நைமி சாரணியத்து
அருள் நிறை முனிவர் கண்ணுவர் கருக்கர் ஆதியோர்                                               அதிகரித்து அவற்றின்
பொருள் நிலை தெரியாது உள்ளமும் முகமும்                                        புலர்ந்தனர் இருப்பவர் போதத்
இருள் மல வலி வென்றவன் அரபத்தன் என்று ஒரு                                                  வேதியன் வந்தான்.
4
உரை
   
1157. வந்த வேதியனை இருந்த வேதியர்கள் வர எதிர்ந்து                                            இறைஞ்சி வேறு இருக்கை
தந்த வேலையில் அம் மறையவன் முனிவர் தமை முகம்                                             நோக்கி ஈது உரைப்பான்
பந்த வேதனை சாலவா வெறுப்பு இகந்த பண்பினன்                                                     ஆயினிர் நீவிர்
சிந்தை வேறு ஆகி முகம் புலர்ந்து இருக்கும் செய்தி                                          யாது என அவர் சொல்வார்.
5
உரை
   
1158. மருள் படு மாயை கழிந்தவன் மொழிந்த மறை பயின்று                                               உரை செய்தே சிகனன்
இருள் படு மனத்தேம் இருத்து மாலைய யாது சூழ்                                               இதற்கு எனக் கேட்ட
தெருள் படு மனத்தோன் செப்புவான் வேதம் செப்பிய                                                     சிவபரம் சுடரே
அருள் படி எடுத்துப் பொருளையும் உணர்த்தும்                                      அல்லது சூழ்ச்சி யாது அறைவீர்.
6
உரை
   
1159. பண்ணிய தவத்தால் அன்றி யாதானும் படுபொருள்                                                பிறிது இலை தவமும்
புண்ணிய தவத்தின் அல்லது பலியா புண்ணிய                                                தவத்தினும் விழுப்பம்
நண்ணிய சைவ தலத்தினில் இயற்றின் நல்கும் அச் சிவ                                                       தலங்களினும்
எண்ணிய அதிக தலத்தினில் இயற்றின் இரும் தவம்                                              எளிது உடன் பயக்கும்.
7
உரை
   
1160. அத்தகு தலம் மற்று யாது எனில் உலக அகிலமும் தன்                                                     உடம்பு ஆன
வித்தகன் சென்னிப் பன்னிரு விரல் மேல் விளங்கிய                                                  தலம் அது சீவன்
முத்தராய் எண்ணில் வானவர் முனிவோர் முயன்று மா                                               தவப் பயன் அடைந்து
சித்தம் மாசு அகன்று வதிவது என்று அற நூல் செப்பிய                                                மதுரை அந் நகரில்.
8
உரை
   
1161. தெளி தரு விசும்பின் இழிந்தது ஓர் விமான சிகாமணி                                              அருகு தென் மருங்கின்
முனிதரு பராரை வட நிழல் பிரியா முழுமுதல் வழி                                               படும் அறவோர்க்கு
களிதரு கருணை முகம் மலர்ந்து அளவா வரும் கலை                                           அனைத்தையும் தெளிவித்து
ஒளிதரும் அனைய மூர்த்தியே நுங்கட்கு ஓதிய மறைப்                                                பொருள் உணர்த்தும்.
9
உரை
   
1162. அங்கு அவன் திருமுன் அரும் தவ விரதம் ஆற்றுவான்                                                செல்லுமின் என அப்
புங்கவன் அருள் போல் வந்த மாதவன் பின் புனித மா                                                 முனிவரும் நங்கை
பங்கவன் மதுரைப் பதி புகுந்து அம் பொன் பல் மணிக்                                             கோயில் புக்கு ஆழிச்
சங்கவன் கை போல் வளை செறி செம் பொன்                                           தாமரைத் தடாக நீர் ஆடி.
10
உரை
   
1163. கரை கடந்து உள்ளம் கடந்த அன்பு உந்தக் கடிது                                         போய் நான்கு இரு வெள்ளி
வரை கள் தம் பிடரில் கிடந்த ஓர் மேரு வரை புரை                                              விமானம் மேல் காணா
உகைகள் தம் பொருளைக் கண்களால் கண்டு ஆங்கு                                       உம்பர் தம் பிரானை நேர்கண்டு
திரை கடந்திடும் பேர் இன்ப வாரியிலும் சேண்                                        நிலத்திலும் விழுந்து எழுந்தார்.
11
உரை
   
1164. கை தலை முகிழ்த்துக் கரசரணங்கள் கம்பிதம் செய்து                                                 கண் அருவி
பெய் தலை வெள்ளத்து ஆழ்ந்து வாய் குழறிப் பிரமன்                                              மால் இன்னமும் தேறா
மை தழை கண்ட வெள்ளி மன்று ஆடும் வானவர்                                                 நாயக வானோர்
உய்தர விடம் உண்டு அமுது அருள் புரிந்த உத்தம                                              போற்றி என்று ஏத்தா.
12
உரை
   
1165. மறை பொருள் காணா உள்ளம் மால் உழந்து வாதிய                                                 எமக்கு நீயே அந்
நிறை பொருளாகி நின்றனை அதற்கு நீ அலால்                                         பொருள் பிறிதி யாது என்று
இறைவனை இறைவன் பங்கில் அம் கயல் கண்                                        இறைவியை அம் முறை ஏத்தி
முறைவலம் செய்து வடநிழல் அமர்ந்த மூர்த்தி முன்                                             எய்தினார் முனி வோர்.
13
உரை
   
1166. சீதளப் பளிக்கு மேனியும் பளிக்குச் செழுமலை                                                 பதித்துப் பன்ன
பாதமும் செவ்வாய் மலரும் முக்கண்ணும் பங்கயச்                                                செம் கரம் நான்கும்
வேத புத்தகமும் அமுத கும்பமும் தன் விழி மணி                                               வடமும் மெய்ஞ்ஞான
போதமும் திரையும் தரித்தது ஓர் தனிமைப் போதன்                                         முன் தாழ்ந்து எழுந்து ஏத்தா.
14
உரை
   
1167. வடநிழல் அமர்ந்த மறை முதல் மேதா மனு எழுத்து                                                இருபதும் இரண்டும்
திடம் உற வரபத்தன் தன்னால் தெளிந்து தேள் நிறை                                               மதி முதல் அடைவில்
படுமதி அளவும் தருப்பணம் ஓமம் பார்ப்பன உண்டி                                                 முப் போதும்
அடைவுற நுவன்று நோற்கும் மாதவர் முன் அரு மறைப்                                           பொருள் வெளிவரும் ஆல்.
15
உரை
   
1168. மான முனிவோர் அதிசயிப்ப வட நீழல்
மோன வடிவு ஆகிய முதல் குரவன் எண் நான்கு
ஊனம் இல் இலக்கண உறுப்பு அகவை நான் நான்
கான ஒரு காளை மறையோன் வடிவம் ஆகி.
16
உரை
   
1169. நீண்ட திரிமுண்டம் அழல் நெற்றி விழி பொத்தக்
காண் தகைய கண்டிகை வளைந்து ஒழுகு காதில்
பூண்ட குழை கௌவிய பொலன் செய் பல காசு
சேண் தவழ் இளம் கதிர் சிரித்து அருள் சிதைப்ப.
17
உரை
   
1170. உத்தரிய வெண் படம் வலம் பட ஒதுங்க
முத்த வள நூலினொடு முத்தம் இடை இட்டு
வைத்து அணியும் அக்க வடம் மாலை எறி வாளால்
பத்தரை மறைத்த மல பந்த இருள் சிந்த.
18
உரை
   
1171. கண்டிகை தொடுத்து இரு கரத்தினொடு வாகு
தண்டின் இடு மாலை விட வாள் அரவு தள்ள
வெண் துகிலின் ஆன விரி கோவண மருங்கில்
தண்டரிய பட்டிகை வளைந்து ஒளி தழைப்ப.
19
உரை
   
1172. வண்டு வரி பாடுவன போல மலர் பாத
புண்டரிக மேல் உழல் சிலம்புகள் புலம்பத்
தொண்டர் அக மாசு இருள் துணித்து முடி சூட்டும்
முண்டக மலர்ப்புறம் விறல் கழல் முழங்க.
20
உரை
   
1173. ஏதம் இல் பவித்திரம் வலக்கரன் இமைப்பப்
போதம் வரை புத்தகம் இடக்கையது பொற்ப
ஒதி உணராதல் அறி ஓலம் இடும் வேதம்
பாது கைகள் ஆகி இரு பாத மலர் சூட.
21
உரை
   
1174. கன்ன முளரிக் குள் முரல் கானை அறு கால
புள் ஒலியின் நாவும் இதமும் புடை பெயர்ந்து
துள்ள எழு வேத ஒலி தொண்டர் செவி ஆற்றால்
உள்ள வயல்புக்கு வகை ஒண் பயிர் வளர்ப்ப.
22
உரை
   
1175. சீதமணி மூரல் திரு வாய் சிறிது அரும்ப
மாதவர்கள் காண வெளி வந்து வெளி நின்றான்
நாத முடிவாய் அளவினான் மறையின் அந்த
போத வடிவாகி நிறை பூரண புராணன்.
23
உரை
   
1176. வட்ட வாண்மதி கண்டு ஆர்க்கும் மூவாக் கடல் மான                                                         மாண்ட
சிட்டர் ஆம் முனிவர் காளைத் தேசிக வடிவம் நோக்கி
ஒட்டு அறா உவகை வெள்ளம் மேற் கொள உருத்த                                                         கூற்றை
அட்டதாமரை தம் சென்னிக்கு அணி மலர் ஆகத்                                                        தாழ்ந்தார்.
24
உரை
   
1177. அள வறு கலைகட்கு எல்லாம் உறைவிடம் ஆகி வேத
விளை பொருள் ஆகி நின்ற வேதிய சரணம் என்ற
வளை உறு மனத்தினாரைத் தேசிக வள்ளல் நோக்கிப்
பளகறு தவத்தீர் வேட்கை யாது எனப் பணிந்து                                                        சொல்வார்.
25
உரை
   
1178. அடியரே உய்யும் ஆறு உலகு எலாம் அளிக்கும் ஆறும்
படியிலா வரத்த வேதப் பயன் அருள் செய்தி என்னக்
கொடிய மா பாசம் தீர்ப்பான் குரவன் நம் முனிவரோடு
முடிவுஇலா இலிங்கம் முன்போய் மறைப் பொருள்                                                 மொழிவது ஆனான்.
26
உரை
   
1179. அந்தணிர் கேண்மின் சால அருமறைப் பொருள்கள்                                                         எல்லாம்
மந்தணம் ஆகும் இந்த மறைப் பொருள் அறிதல் தானே
நந்தல் இல்லாத போகப் பயனுக்கு நலியும் பாச
பந்தனை கழிக்கும் வீட்டின் பயனுக்கும் கருவி ஆகும்.
27
உரை
   
1180. உத்தம சயம்புக்கு உள்ளும் உத்தம தரமாய் மேலாம்
தத்துவம் ஆகும் இந்த சுந்தர சயம்பு லிங்கம்
நித்தம் ஆய் மறைகட்கு எல்லாம் நிதானம் ஆம்                                              பொருளாய் உண்மைச்
சுத்த அத்து விதம் ஆன சுயம் பிரகாசம் ஆகும்.
28
உரை
   
1181. நிறை பாரற் பரம் விஞ்ஞான நிராமயம் என்று நூல்கள்
அறை பரம் பிரமம் ஆகும் இதன் உரு ஆகும் ஏக
மறை இதன் பொருளே இந்தச் சுந்தர வடிவாய் இங்ஙன்
உறைசிவ லிங்கம் ஒன்றெ என்பர் நூல் உணர்ந்த                                                         நல்லோர்.
29
உரை
   
1182. ஆகையால் மறையும் ஒன்றே அருமறைப் பெருளும்                                                           ஒன்றே
சாகையால் அந்தம் ஆகித் தழைத்த அச் சாகை                                                         எல்லாம்
ஓகையால் இவனை ஏத்தும் உலகு தாயாதிக்கு ஈந்த
ஏகன் ஆணையின் ஆன் மூன்று மூர்த்தியாய்                                                  இருந்தான் அன்றே.
30
உரை
   
1183. மலர் மகனாகி மூன்று வையமும் படைத்து மாலாய்
அலைவற நிறுத்தி முக்கண் ஆதியாய் ஆழித்தம் மூவர்
தலைவனாய் பரமாகாச சரீரியாய் முதல் ஈறு இன்றித்
தொலை வரும் சோதி ஆம் இச் சுந்தர இலிங்கம்                                                           தன்னில்.
31
உரை
   
1184. ஆதி இலான் மதத்துவம் ஆன அலர் மகன் பாகமும்                                                          நடுவில்
நீதியில் விச்சா தத்துவம் ஆன நெடியவன் பாகமும்                                                          முடிவில்
ஓதிய சிவத் தத்துவம் எனலாம் ஆன உருத்திர                                                  பாகமும் உதிக்கும்
பேதி இம் முன்றில் எண்ணில் தத்துவங்கள் பிறக்கும்                                           இம் மூன்றினும் முறையால்.
32
உரை
   
1185. ஓத அரும் அகார உகாரமே மகாரம் உதித்திடும்                                                    பிரணவம் விந்து
நாதமோடு உதிக்கும் வியத்த தாரகத்தின் அல்ல                                                   காயத்திரி மூன்று
பேதம் ஆம் பதத்தால் பிறக்கும் இக் காயத்திரி                                             இருபேதம் ஆம் பேதம்
யாது எனில் சமட்டி வியட்டி என்று இரண்டும் ஏது                                           ஆம் வேட்டவை எல்லாம்.
33
உரை
   
1186. இன்னவை இரண்டும் இவன் அருள் வலியால் ஈன்ற                                         நான் மறையை அந் நான்கும்
பின்னவன் அருளால் அளவு இல ஆன பிரணவம் ஆதி                                                          மந்திரமும்
அன்னவாறு ஆன தாரகத் தகாரம் ஆதி அக்கரங்களும்                                                            உதித்த
சொன்ன அக் கரத்தில் சிவாகம நூல் இச் சுரவன்                                                  நடுமுகத்தில் உதித்த.
34
உரை
   
1187. கீட்டிசை முகத்து ஒன்று அடுத்த நால் ஐந்தில்                       கிளைத்தது ஆல் இருக்க அது தென்பால்
ஈட்டிய இரண்டாம் வேத நூறு உருவோடு எழுந்தது                                                  வடதிசை முகத்தில்
நீட்டிய சாமம் ஆயிரம் முகத்தான் நிமிர்ந்தது குடதிசை                                                          முகத்தில்
நாட்டிய ஒன்பது உருவொடு கிளைத்து நடந்தது நான்கு                                                    அதாம் மறையே.
35
உரை
   
1188. அருமறை நால் வேறு ஆகையால் வருண                                         ஆச்சிரமங்களும் நான்காம்
தருமம் ஆகதி கருமமும் மறையின் தோன்றின மறையும்
கரும நூல் ஞான நூல் என இரண்டாம் கரும நூல்                                               இவன் அருச்சனைக்கு
வரும் வினை உணர்த்து ஞான நூல் இவன் தன் வடிவு                                          இலா வடிவினை உணர்த்தும்.
36
உரை
   
1189. முதல் நுகர் நீரால் சினை குழைத் தாங்கி இம் முழு                                         முதல் கருத்து நல் அவியின்
பதம் இவன் வடிவப் பண்ணவர் பிறர்க்கும் திருத்தி                                         யாம் பரன் இவன் முகத்தின்
விதம்உறு நித்தம் ஆதி மூவினைக்கும் வேண்டி ஆங்கு                                                    உலகவர் போகம்
கதி பெற இயற்றும் சிவார்ச்சனை வினைக்கும் காரணம்                                                    இச் சிவ கோசம்.
37
உரை
   
1190. மறைபல முகம் கொண்ட அறிவாய் இளைத்து மயங்க                                            வேறு அகண்ட பூரணமாய்
நிறை பரம் பிரமம் ஆகும் இக் குறியைக் கரும                                              நன்னெறி வழாப் பூசை
முறையினும் ஞான நெறி இனிப் பொருளை அருளினான்                                              முயக்குஅற முயங்கும்
அறி வினும் தெளிவது உமக்கு நாம் உரைத்த
                      அருமறைப் பொருள் பிறர்க்கு அரிது ஆல்.
38
உரை
   
1191. கருமத்தான் ஞானம் உண்டாம் கருமத்தைச் சித்த சுத்தி
தருமத்தால் இகந்த சித்த சுத்தியைத் தருமம் நல்கும்
அருமைத்து ஆம் தருமத்தாலே சாந்தி உண்டகும்                                                          ஆண்ட
பெருமைத்து ஆம் சாந்தியாலே பிறப்பது அட்டாங்க                                                          யோகம்.
39
உரை
   
1192. கிரியையான் ஞானம் தன்னால் கிளர் சிவ பத்தி பூசை
தரிசனம் சைவ லிங்க தாபனம் செய்தல் ஈசற்கு
உரிய மெய் அன்பர் பூசை உருத்திர சின்னம் தாங்கல்
அரிய தேசிகன் பால் பத்தி அனைத்தையும் தெரியல்                                                          ஆகும்.
40
உரை
   
1193. மறைவழி மதங்கட்கு எல்லாம் மறை பிரமாணம்                                                          பின்சென்ற
அறைதரு மிருதி எல்லாம் அவைக்கனு குணம் ஆம்                                                          இன்ன
முறையின் ஆன் மார்த்தம் என்று மொழிவ தம்மார்த்தம்                                                          சேர்ந்த
துறைகள் வைதிகம் ஆம் ஏலாச் சொல்வது இச் சுத்த                                                          மார்க்கம்.
41
உரை
   
1194. தெருள் பெறு போகம் வீடு காரணமாய் சிவமயம் ஆம்                                                   மறைப் பொருளை
இருள்கெட உரைத்தேம் இப் பொருட்கு அதிகம்                                    இல்லை இப் பொருள் எலாம் உமக்கு
மருள் கெடத் தெளிவதாக என வினைய வழி வழா                                                   மாதவர் புறத்தை
அருள் கையால் தடவி இலிங்கத்துள் புகுந்தான் அருள்                                               பழுத்தன்ன தேசிகனே.
42
உரை