தொடக்கம் |
|
|
1195. |
சுகந்த வார் பொழில் மதுரை எம் பிரான் தனது துணைத்தாள் உகந்த வாவறு கண்ணுவ முனி முதல் ஓதும் அகந்த வாத பேர் அன்பருக்கு அருமறைப் பொருளைப் பகர்ந்த வாறு இது மாணிக்கம் பகர்ந்த வா பகர்வாம். |
1 |
|
|
உரை
|
|
|
|
|
1196. |
அன்ன நாள் வயின் வீரபாண்டியற்கு அணங்கு அனைய மின் அனார் உளைம் போகமும் விளைநிலம் அனைய பொன் அனார் பெறு காளையர் ஐங்கணைப் புத்தேள் என்ன வீறினார் வான் பயிர்க்கு எழுகளை என்ன. |
2 |
|
|
உரை
|
|
|
|
|
1197. |
பின்னரும் பெறல் குமரனைப் பெறுவது கருதி மன்னனும் குலத்தேவியும் கயல் கணி மணாளன் தன்னை நோக்கி அட்டமி சதுர்த்தசி மதிவாரம் இன்ன நோன்பு நோற்று ஒழுகுவார் இறை வனின் அருளால். |
3 |
|
|
உரை
|
|
|
|
|
1198. |
சிறிது நாள் கழிந்து அகன்ற பின் கங்கையில் சிறந்த மறுவிலா வடமீன் புரை கற்பினாள் வயிற்றில் குறிய ஆல வித்து அங்குரம் போன்று ஒரு குமரன் நிறையும் நீர் உலகு உருட்டு குடை நிழற்ற வந்து உதித்தான். |
4 |
|
|
உரை
|
|
|
|
|
1199. |
அத்தன் இச்சிறு குமரனுக்கு அகம் களி சிறப்ப மெய்த்த நூல் முறை சாதக வினை முதல் வினையும் வைத்த நான் பொலிவுஎய்து நாள் மன்னவன் ஊழ் வந்து ஒத்த நாள் வர வேட்டைபுக்கு உழுவை கோள் பட்டாள். |
5 |
|
|
உரை
|
|
|
|
|
1200. |
வேங்கை வயப்பட்டு மீனவன் விண் விருந்து ஆக வாங்குநூல் மருங்கு இறக்கரம் மார்பு எறிந்து ஆரம் தாங்கு கொங்கை சாந்து அழிந்திட தடம் கண் முத்து இறைப்ப ஏங்க மாதர் பொன் நகர் உளார் யாவரும் இரங்க. |
6 |
|
|
உரை
|
|
|
|
|
1201. |
மற்ற வேலைக் காமக் கிழத்தியர் பெறு மைந்தர் அற்றம் நோக்கி ஈது அமயம் என்று ஆனை மா ஆதி உற்ற பல் பிற பொருள் நிதி ஒண் கலனோடும் கொற்ற மோலியும் கவர்ந்தனர் கொண்டு போய் மறைந்தார். |
7 |
|
|
உரை
|
|
|
|
|
1202. |
மன்னன் ஆணை ஆறு ஒழுகிய மந்திரக் கிழவர் மின்னு வேல் இளம் குமரனைக் கொண்டு விண் அடைந்த தென்னர் கோமகற்கு இறுதியில் செய்வினை நிரப்பி அன்ன காதலற்கு அணி முடி சூட்டுவான் அமைந்தார். |
8 |
|
|
உரை
|
|
|
|
|
1203. |
நாடிப் பொன் அறை திறந்தனர் நவமணி மகுடம் தேடிக் கண்டிலர் நிதி சில கண்டிலர் திகைத்து வாடிச் சிந்தை நோய் உழந்து இது மாற்றலர் கூட்டு உண்டு ஓடிப் போயினது ஆகும் என்று உணர்ந்து இது நினைவார். |
9 |
|
|
உரை
|
|
|
|
|
1204. |
வேறு மா முடி செய்தும் ஆல் என்னினோ விலை மிக்கு ஏறுமா மணி இலை அரசு இருக்கையின்றி இன்றேல் ஏறு நீர் உல கலையும் என் செய்தது இங்கு என்னா ஆறு சேர் சடையார் அருள் காண்டும் என்று அமைச்சர். |
10 |
|
|
உரை
|
|
|
|
|
1205. |
கரை செயாப் பெரும் கவலை சூழ் மனத்தராய்க் கறங்கும் முரசு கண் படாக் கடிமனை முற்ற நீத்து அருமை அரசு இளம் தனிக் கொழுந்தினைக் கொண்டு போய் அம்பொன் வரை செய் கோபுர வாயின் முன் வருகுவார் வருமுன். |
11 |
|
|
உரை
|
|
|
|
|
1206. |
எற்ற தும்பு கோவண உடை இடம்படக் பிறங்கத்து உற்ற பல் கதிர் மணிப் பொதி சுவன் மிசைத் தூங்க மல் தடம் புய வரை மிசை வரம்பு இலா விலைகள் பெற்ற வங்க தம் பரிதியில் பேர்ந்து பேர்ந்து இமைப்ப. |
12 |
|
|
உரை
|
|
|
|
|
1207. |
மந்திரப் புரி நூலது வலம்படப் பிறழ இந்திரத் திரு வில் என ஆரம் மார்பு இலங்கச் சுந்தரக்குழை குண்டலம் தோள் புரண்டு ஆடத் தந்திரம் தரு மறை கழி தாள் நிலம் தோய. |
13 |
|
|
உரை
|
|
|
|
|
1208. |
பொன் அவிர்ந்து இலங்கு கோபுரம் முன் போதுவார் முன்னவர் துனிவு கூர் முன்ன நீக்கிய தென்னவர் குலப் பெரும் தெய்வம் ஆகிய மன்னவர் வணிகராய் வந்து தோன்றினார். |
14 |
|
|
உரை
|
|
|
|
|
1209. |
வந்தவர் எதிர்வருவாரை மம்மர் கொள் சிந்தையர் ஆய் வரு செய்தி யாது என முந்தை இல் விளைவு எலாம் முறையில் கூறினார்க்கு எந்தை ஆம் வணிகர் ஈது இயம்புவார் அரோ. |
15 |
|
|
உரை
|
|
|
|
|
1210. |
என் படர் எய்து கின்றீர்கள் என் வயின் ஒன்பது மணிகளும் உள்ள ஆல் அவை பொன் பதினாயிரம் கோடி போன என்று அன்புற மணி எலாம் அடைவில் காட்டுவார். |
16 |
|
|
உரை
|
|
|
|
|
1211. |
இருந்தனர் கீழ்த்திசை நோக்கி இட்டது ஓர் கரும் துகின் நடுவும் இந்திராதி காவலர் அரும் திசை எட்டினும் அடைவு இல் செம்மணி பெரும் தண் முத்து ஆதி எண் மணியும் பெய்தரோ. |
17 |
|
|
உரை
|
|
|
|
|
1212. |
இம் மணி வலன் உடல் சின்னம் என்ன அக் கைம் மறி கரந்தவர் கூறக் கற்றநூல் செம் மதி அமைச்சர் அச் செம்மல் யார் அவன் மெய்ம் மணி ஆயது என் விளம்புக என்னவே. |
18 |
|
|
உரை
|
|
|
|
|
1213. |
மேவரும் வலன் எனும் அவுணன் மேலை நாள் மூவரின் விளங்கிய முக்கண் மூர்த்தி செம் சேவடி அருச்சனைத் தவத்தின் செய்தி ஆல் ஆவது வேண்டும் என்று இறைவன் கூறலும். |
19 |
|
|
உரை
|
|
|
|
|
1214. |
தாழ்ந்து நின்று இயம்பும் யான் சமரில் யாரினும் போழ்ந்து இறவா வரம் புரிதி ஊழ்வினை சூழ்ந்து இறந்தால் என் மெய் துறந்த மாந்தரும் வீழ்ந்திட நவமணி ஆதல் வேண்டும் ஆல். |
20 |
|
|
உரை
|
|
|
|
|
1215. |
என்று வேண்டலும் வரம் ஈசன் நல்கினான் அன்று போய் அமர் குறித்து அமரர் கோனொடு சென்று போர் ஆற்றலும் தேவர் கோன் எதிர் நின்று போர் ஆற்றலன் நீங்கிப் போயினான். |
21 |
|
|
உரை
|
|
|
|
|
1216. |
தோற்று வான் நாடவன் மீண்டு சூழ்ந்து அமர் ஆற்றினும் வெல்லரி அழிவு இலா வரம் ஏற்றவன் ஆதலால் இவனைச் சூழ்ச்சியால் கூற்றின் ஊர் ஏற்றுதல் குறிப்பு என்று உன்னியே. |
22 |
|
|
உரை
|
|
|
|
|
1217. |
விடம் கலுழ் படைக்கலன் இன்றி விண்ணவர் அடங்கலும் தழீஇக் கொள அடுத்துத் தானவ மடங்கலை வருக என நோக்கி வானவக் கடம் கலுழ் யானை போல் கரைந்து கூறுவான். |
23 |
|
|
உரை
|
|
|
|
|
1218. |
விசைய நின் தோள் வலி வென்றி வீக்கம் எத் திசையினும் பரந்த அச்சீர்த்தி நோக்கி உண் நசை அறா மகிழ்ச்சியால் நல்குவேன் உனக்கு இசைய வேண்டிய வரம் யாது கேள் என. |
24 |
|
|
உரை
|
|
|
|
|
1219. |
கடிபடு கற்பக நாடு காவலோன் நொடி உரை செவித்துளை நுழைத் தானவன் நெடிய கை புடைத்து உடன் நிமிர்ந்து கார்படும் இடி என நகைத்து இகழ்ந்து இனைய கூறுவான். |
25 |
|
|
உரை
|
|
|
|
|
1220. |
நன்று இது மொழிந்தார் யாரும் நகைக்க நீ எனை வெம் கண்ட வென்றியும் அதனால் பெற்ற புகழும் நின் வீறு பாடும் இன்று நின் போரில் காணப்பட்ட வேய் இசை போய் எங்கும் நின்றதே இது போல் நின்கை வண்மையும் நிற்பது அன்றோ. |
26 |
|
|
உரை
|
|
|
|
|
1221. |
ஈறு இலான் அளித்த நல்ல வரம் எனக்கு இருக்க நின்பால் வேறு நான் பெறுவது உண்டோ வேண்டுவது உனக்குயாது என்பால் கூறு நீ அதனை இன்னே கொடுக்கலேன் ஆகி நின் போல் பாறு வீழ் கனத்தில் தோற்ற பழிப்புகழ் பெறுவன் என்றான். |
27 |
|
|
உரை
|
|
|
|
|
1222. |
மாதண்ட அவுணன் மாற்றம் மகபதி கேட்டு வந்து கோதண்ட மேருக் கோட்டிக் கொடும் புரம் பொடித்தான் வெள்ளி வேதண்டம் எய்தி ஆங்கு ஓர் வேள்வி யான் புரிவன் நீ அப்போது அண்டர்க் கூட்ட வா வாய்ப் போது வாய் வல்லை என்றான். |
28 |
|
|
உரை
|
|
|
|
|
1223. |
அன்று ஒரு தவத்தோன் என்பு வச்சிரம் ஒன்றெ ஆக ஒன்றிய கொடையால் பெற்ற புகழ் உடம்பு ஒன்றெ என்போல் வென்றியினாலும் ஈயா மெய் எலாம் மணிகள் ஆகப் பொன்றிய கொடையினாலும் புகழ் உடம்பு இரண்டு உண்டாமே. |
29 |
|
|
உரை
|
|
|
|
|
1224. |
மேலவன் அல்லை நீயே நட்டவன் மேலை வானோர் யாவரும் அருந்தும் ஆற்றால் அறம் புகழ் எனக்கே ஆக ஆ உரு ஆதி என்றாய் அன்னதே செய்வேன் என்றான் ஈவதே பெருமை அன்றி இரக்கின்றது இழிபே அன்றோ. |
30 |
|
|
உரை
|
|
|
|
|
1225. |
அதற்கு இசைந்து அவுணர் வேந்தன் அமரர் வேந்து அதனை முன்போக்கி மதர்க் கடும் குருதிச் செம்கண் மைந்தனுக்கு இறைமை ஈந்து முதல் பெரும் கலை ஆம் வேத மொழி மரபு அமைந்த வானாய்ப் புதர்க்கடு வேள்விச் சாலை புறத்து வந்து இறுத்து நின்றான். |
31 |
|
|
உரை
|
|
|
|
|
1226. |
வாய்மையான் மாண்ட நின்போல் வள்ளல் யார் என்று தேவர் கோமகன் வியந்து கூறத் தருக்கு மேல் கொண்டு மேரு நேமியோடு இகலும் இந்த வரை என நிமிர்ந்து வேள்விக்கு ஆம் எனை யூபத்தோடும் யாம் இன்று எடுத்து நின்றான். |
32 |
|
|
உரை
|
|
|
|
|
1227. |
யாத்தனர் தருப்பைத் தாம்பால் ஊர்ணையால் யாத்த சிங்கப் போத்து என நின்றான் வாயைப் புதைத்து உயிர்ப்பு அடங்க வீட்டி மாய்த்தனர் மாய்ந்த வள்ளல் வலனும் மந்தார மாரி தூர்த்திட விமானம் ஏறித் தொல் விதி உலகம் சேர்ந்தான். |
33 |
|
|
உரை
|
|
|
|
|
1228. |
மணித்தலை மலையின் பக்கம் மாய்த்தவன் வயிர வேலால் பிணித்து உயிர் செகுத்த வள்ளல் பெரும் தகை ஆவாய் வேதம் பணித்திடும் வபையை வாங்கிப் படர் எரி சுவை முன் பார்க்கக் குணித்த வான் நாடார் கூட்டிக் கோது இலா வேள்வி செய்தான். |
34 |
|
|
உரை
|
|
|
|
|
1229. |
அத்தகை ஆவின் சோரி மாணிக்கம் ஆம் பல் முத்தம் பித்தை வைடூயம் என்பு வச்சிரம் பித்தம் பச்சை நெய்த்த வெண் நிணம் கோமேதந் தசை துகிர் நெடும் கண் நீலம் எய்த்தவை புருடராகம் இவை நவ மணியின் தோற்றம். |
35 |
|
|
உரை
|
|
|
|
|
1230. |
இவ் வடிவு எடுத்துத் தோன்றி இருள் முகம் பிளப்பக் காந்தி தைவரு மணி ஒன்பானும் சார்விட நிறங்கள் சாதி தெய்வத ஒளி மாசு எண்ணி சோதனை செய்து தேசும் மெய்வர அணிவோர் எய்தும் பயன் இவை விதியால் கேண்மின். |
36 |
|
|
உரை
|
|
|
|
|
1231. |
வாள் அவர் மாணிக்கம் கிரேத உகம் நான்கும் வழியே மக்கம் காளபுரம் தும்புரம் சிங்களம் இந் நான்கு இடைப் படும் அக்கமல ராகம் ஆளுநிற ஒன்பது அரவிந்த மாதுளம் பூ இத் தழல் கல் ஆரம் கோள் அரிய அச் சோத நரந்த நறும் பலம் தீபம் கோபம் என்ன. |
37 |
|
|
உரை
|
|
|
|
|
1232. |
இந்நிறத்த பொது வாய மாணிக்கம் மறையவர் முன்னிய நால் சாதி தன் இயல்பால் சாதரங்கம் குருவிந்தம் சௌகந்தி கங்கோ வாங்கம் என்னும் இவற்றால் சிறந்து நான்கு ஆகும் இவ் அடைவே இந் நான்கிற்கும் சொன்ன ஒளி பத்து இரு நான்கு இரு முன்று நான்கு அவையும் சொல்லக் கேண்மின். |
38 |
|
|
உரை
|
|
|
|
|
1233. |
சாதரங்க நிறம் கமலம் கரு நெய்தல் இரவி ஒளி தழல் அச் சோதம் மாதுளம் போது அதன் வித்துக் கார் விளக்குக் கோபம் என வகுத்த பத்தும் மேதகைய குருவிந்த நிறம் குன்றி முயல் குருதி வெள்ளம் ஓத்தம் போது பலா சலர் திலகம் செவ் அரத்தம் விதார மெரி பொன் போல் எட்டு. |
39 |
|
|
உரை
|
|
|
|
|
1234. |
களி தரு சௌகந்திகத்தின் இற இலவம் போது குயில் கண் அசோகம் தளிர் அவிர் பொன் செம்பஞ்சியை வண்ணம் என ஆறு தகுதோ வாங்க ஒளி குரவு குசும்பை மலர் செங்கல் கொவ்வைக் கனி என ஒருநான்கு அந்த மிளிர் பதும ராகத்தைப் பொதுமையினால் சோதிக்க வேண்டும் எல்லை. |
40 |
|
|
உரை
|
|
|
|
|
1235. |
திண்ணிய தாய் மேல் கீழ் சூழ் பக்கம் உற ஒளிவிடுதல் செய்தால் செவ்வே அண்ணிய உத்தமம் முதல் மூன்று ஆம் என்பர் சாதரங்கம் அணிவோர் விச்சை புண்ணியவான் கன்னி அறுசுவை அன்ன முதலான புனித தானம் பண்ணியதும் பரிமேத யாகம் முதல் மகம் புரிந்த பயனும் சேர்வர். |
41 |
|
|
உரை
|
|
|
|
|
1236. |
குருவிந்தம் தரிப்பவர் பார் முழுதும் ஒரு குடை நிழலில் குளிப்ப ஆண்டு திருவிந்தை உடன் இருப்பர் சௌகந்திகம் தரிப்போர் செல்வம் கீர்த்தி மருவிந்தப் பயன் அடைவர் கோவங்கம் தரிப்போர் தம் மனையில் பாலும் பெரு விந்தம் எனச் சாலி முதல் பண்டம் உடன் செல்வப் பெருக்கும் உண்டாம். |
42 |
|
|
உரை
|
|
|
|
|
1237. |
எள்ளி இடும் குற்றம் எலாம் இகந்து குணன் ஏற்று ஒளிவிட்டு இருள் கால் சீத்துத் தள்ளிய இச் செம்பது மராகம் அது புனை தக்கோர் தம்பால் ஏனைத் தெள்ளிய முத்து உள்ளிட்ட பன் மணியும் வந்து ஓங்கும் செய்யா ளோடும் ஒள்ளிய நல் செல்வம் அதற்கு ஒப்ப நெடு பால் கடலின் ஓங்கும் மாலோ. |
43 |
|
|
உரை
|
|
|
|
|
1238. |
பிற நிறச் சார்பு உள்ளி புள்ளடி பிறங்கு கீற்று மறு அறு தராசம் என்ன வகுத்த ஐம் குற்றம் தள்ளி அறை தரு பண்பு சான்ற அரதன மணியும் வேந்தன் செறுநர் வாள் ஊற்றம் இன்றிச் செரு மகட்கு அன்பன் ஆவான். |
44 |
|
|
உரை
|
|
|
|
|
1239. |
குறுநிலக் கிழவனேனும் அவன் பெரும் குடைக்கீழ்த் தங்கி மறுகுநீர் ஞாலம் எல்லாம் வாழும் மற்று அவனைப் பாம்பு தெறு விலங்கு அலகை பூதம் சிறு தெய்வம் வறுமை நோய் தீக் கருவு கொள் கூற்றச் சீற்றம் கலங்கிட ஆதி ஆவாம். |
45 |
|
|
உரை
|
|
|
|
|
1240. |
முன்னவர் என்ப கற்றோர் வச்சிர முந்நீர் முத்தம் மன்னவர் என்ப துப்பு மாணிக்கம் வணிகர் என்ப மின் அவிர் புருடராகம் வயிடூரியம் வெயில் கோ மேதம் பின்னவர் என்ப நீல மரகதம் பெற்ற சாதி. |
46 |
|
|
உரை
|
|
|
|
|
1241. |
பார்த்திபர் மதிக்கும் முத்தம் பளிங்கு அன்றி பச்சை தானும் சாத்திகம் துகிர் மாணிக்கம் கோமேதம் தாமே அன்றி மாத் திகழ் புருடராகம் வயிடூயம் வயிரம் தாமும் ஏத்திரா சதமா நீலம் தாமதம் என்பர் ஆய்ந்தோர். |
47 |
|
|
உரை
|
|
|
|
|
1242. |
இனையவை அளந்து கண்டு மதிக்கும் நாள் எழு மான் பொன்தேர் முனைவ நாள் முதல் ஏழின் முறையினால் பதுமராகம் கனை கதிர் முத்தம் துப்புக் காருடம் புருடராகம் புனை ஒளி வயிரம் நீலம் என் மனார் புலமை சான்றோர். |
48 |
|
|
உரை
|
|
|
|
|
1243. |
வெய்யவன் கிழமை தானே மேதக மணிக்கும் ஆகும் மையறு திங்கள் தானே வயிடூரிய மணிக்கும் ஆகும் ஐயற இவை ஒன்பானும் ஆய்பவர் அகம் புறம்பு துய்யராய் அறவோராய் முன் சொன்ன நாள் அடைவே ஆய்வர். |
49 |
|
|
உரை
|
|
|
|
|
1244. |
அல்லி அம் பதுமம் சாதி அரத்தவாய் ஆம்பல் கோடல் வல்லி சேர் மௌவல் போது நூற்று இதழ் மரை கால் ஏயம் மெல் இதழ்க் கழுநீர் பேழ்வாய் வெள்ளை மந்தாரம் இன்ன சொல்லிய முறையால் வண்டு சூழத்தன் முடிமேல் சூடி. |
50 |
|
|
உரை
|
|
|
|
|
1245. |
தலத்தினைச் சுத்தி செய்து தவிசினை இட்டுத் தூய நலத்துகில் விரித்துத் தெய்வ மாணிக்கம் நடுவே வைத்துக் குலத்த முத்து ஆதி எட்டும் குணதிசை முதல் எண் திக்கும் வலப்பட முறையே பானு மண்டலம் ஆக வைத்து. |
51 |
|
|
உரை
|
|
|
|
|
1246. |
அன்பு உறு பதுமராகம் ஆதி ஆம் அரதனங்கள் ஒன்பதும் கதிரோன் ஆதி ஒன்பது கோளும் ஏற்றி முன்புரை கமலப் போது முதல் ஒன்பான் மலரும் சாத்தி இன்புற நினைந்து பூசை இயல் முறை வழாது செய்தல். |
52 |
|
|
உரை
|
|
|
|
|
1247. |
தக்க முத்து இரண்டு வேறு தலசமே சலசம் என்ன இக் கதிர் முத்தம் தோன்றும் இடம் பதின் மூன்று சங்கம் மைக் கரு முகில் வேய் பாம்பின் மத்தகம் பன்றிக்கோடு மிக்க வெண் சாலி இப்பி மீன் தலை வேழக் கன்னல். |
53 |
|
|
உரை
|
|
|
|
|
1248. |
கரி மருப்பு பைவாய் மான்கை கற்பு உடை மடவார் கண்டம் இரு சிறைக் கொக்கின் கண்டம் எனக் கடை கிடந்த மூன்றும் அரியன ஆதிப்பத்து நிறங்களும் அணங்கும் தங்கட்கு உரியன நிறுத்தவாறே ஏனவும் உரைப்பக் கேண்மின். |
54 |
|
|
உரை
|
|
|
|
|
1249. |
மாட வெண் புறவின் முட்டை வடிவு எனத் திரண்ட பேழ் வாய் கோடு கான் முத்தம் வெள்ளை நிறத்தன கொண்மூ முத்தம் நீடு செம் பரிதி அன்ன நிறத்தது கிளை முத்து ஆலிப் பீடு சால் நிறத்த அராவின் பெரு முத்தம் நீலத்து ஆம் ஆல். |
55 |
|
|
உரை
|
|
|
|
|
1250. |
ஏனமா வாரம் சோரி ஈர்ஞ் சுவை சாலி முத்தம் ஆனது பசுமைத்து ஆகும் பாதிரி அனையது ஆகும் மீனது தரளம் வேழம் இரண்டினும் விளையும் முத்தம் தான் அது பொன்னின் சோதி தெய்வதம் சாற்றக் கேண்மின். |
56 |
|
|
உரை
|
|
|
|
|
1251. |
பால் முத்தம் வருணன் முத்தம் பகன் முத்தம் பகலோன் முத்தம் மான் முத்தம் நீல முத்தம் மாசு அறுகுருதி முத்தம் கான் முத்தம் பசிய முத்தம் காலன்தன் முத்தம் தேவர் கோன் முத்தம் பொன் போல் முத்தம் குணங்களும் பயனும் சொல்வாம். |
57 |
|
|
உரை
|
|
|
|
|
1252. |
உடுத்திரள் அனைய காட்சி உருட்சி மாசு இன்மை கையால் எடுத்திடில் திண்மை பார்வைக்கு இன்புறல் புடிதம் என்ன அடுத்திடு குணம் ஆறு இன்ன அணியின் மூது அணங்கோடு இன்மை விடுத்திடும் திருவந்து எய்தும் விளைந்திடும் செல்வம் வாழ்நாள். |
58 |
|
|
உரை
|
|
|
|
|
1253. |
மாசு அறு தவத்தோன் என்பும் வலாசுரன் என்பும் வீழ்ந்த கோசலம் ஆதி நாட்டில் பட்டது குணத்தான் மாண்ட தேசதாய் இலேசது ஆகித் தெள்ளிதாய் அளக்கின் எல்லை வீசிய விலையது ஆகி மேம்படு வயிரம் தன்னை. |
59 |
|
|
உரை
|
|
|
|
|
1254. |
குறுநிலத்து அரசும் தாங்கில் குறைவுதிர் செல்வம் எய்தி உறுபகை எறிந்து தம் கோன் முழுது உலகு ஓச்சிக் காக்கும் வருமை நோய் விலங்கு சாரா வரைந்த நாள் அன்றிச் செல்லும் கறுவு கொள் குற்றம் பூதம் கணங்களும் அணங்கும் செய்யா. |
60 |
|
|
உரை
|
|
|
|
|
1255. |
மா மணி மரபுக்கு எல்லாம் வயிரமே முதன்மைச் சாதி ஆம் என உரைப்பர் நூலோர் அதிகம் யாது என்னின் ஏனைக் காமரு மணிகட்கு எல்லாம் தமர் இடு கருவி ஆம் அத் தூமணி தனக்குத் தானே துளை இடும் கருவி ஆகும். |
61 |
|
|
உரை
|
|
|
|
|
1256. |
மரகதத் தோற்றம் கேண்மின் வலாசுரன் பித்தம் தன்னை இரை தமக்கு ஆகக் கௌவிப் பறந்தபுள் ஈர்ந்த தண் டில்லித் தரை தனில் சிதற வீழ்ந்த தங்கிய தோற்றம் ஆகும் உரைதரு தோற்றம் இன்னும் வேறு வேறு உள்ள கேண்மின். |
62 |
|
|
உரை
|
|
|
|
|
1257. |
விதித்த வேல் அனைய வாள்கண் வினதை மாது அருணச் செல்வன் உதித்தவான் முட்டை ஓட்டை உவண வேல் தரையில் யாப்பக் கதிர்த்தவோடு அரையில் தப்பி வீழ்ந்து ஒரு கடல் சூழ் வைப்பில் உதித்தவாறு ஆகும் இன்னும் உண்டு ஒரு வகையால் தோற்றம். |
63 |
|
|
உரை
|
|
|
|
|
1258. |
முள்ளரை முளரிக் கண்ணன் மோகினி அணங்காய் ஓட வள்ளரை மதியம் சூடி மந்தர வரை மட்டாகத் துள் இள அரி ஏறு போலத் தொடர்ந்து ஒரு விளையாட்டாலே எள் அரிதாய செந்தி இந்தியக் கலனம் செய்தன். |
64 |
|
|
உரை
|
|
|
|
|
1259. |
அப் பொழுது அமலன் வித்தில் அரிகரகுமரன் கான வைப்புரை தெய்வத் தோடும் வந்தனன் அந்த விந்து துப்புரு கருடன் கௌவிக் கடலினும் துருக்க நாட்டும் பப்புற விடுத்தவாறே பட்டது கலுழப் பச்சை. |
65 |
|
|
உரை
|
|
|
|
|
1260. |
காடமே சுப்பிரமே காளம் எனக் குணம் மூன்றாம் கருடப் பச்சைக் கீட அறுகின் இதழ் நிறத்த காடம் அது சாதியினால் இரு வேறு ஆகும் சாடரிய சகுணம் எனச் சதோடம் என அவை இரண்டில் சகுணம் ஆறாம் பீடுபெறு காடமொடு முல்ல சிதம் பேசல் அம்பித் தகமே முத்தம். |
66 |
|
|
உரை
|
|
|
|
|
1261. |
புல்லரிய பிதுகம் என இவை ஆறில் காடமது புல்லின் வண்ணம் உல்லசித மெலிதாகும் பேசலமே குளச் செந்நெல் ஒண்தரளம் போலும் அல் அடரும் பித்தகாம பசுங்கிளியின் சிறை நிறத்தது ஆகும் முத்தம் குல்லை நிறம் பிதுகம் மரை இலையின் நிறம் சதோடத்தின் குணன் ஐந்தாகும். |
67 |
|
|
உரை
|
|
|
|
|
1262. |
தோடலே சாஞ்சிதமே துட்டமே தோட மூர்ச்சிதமே சிதமே வெய்ய தோடலே சத்தினொடு சூழ் மந்த தோடம் எனத் தொகுத்த ஐந்தில் தோடலே சாஞ்சி தஞ்சம் பிரவிலையா மலரி இலை துட்ட நீலத் தோடதாம் புல்லின் நிறம் தோட மூர்ச்சித முளரி தோடலேசம். |
68 |
|
|
உரை
|
|
|
|
|
1263. |
மந்த தோடம் கலப மயில் இறகின் நிறமாம் இவ் வகுத்த தோடம் சிந்த வான் ஆதகுண மணி அணிவோர் நால் கருவிச் சேனைவாழ்நாள் உந்த வாழ் ஆர்வலன் கண் நீலம் இரண்டு அரன் கண்டத்து ஒளிவிட்டு ஓங்கும் இந்திர நீலம் தான் மா நீலம் என வேறு இரண்டு உண்டு இன் நீலம். |
69 |
|
|
உரை
|
|
|
|
|
1264. |
முந்தியவிந்திர நீலம் விச்சுவ ரூபனை மகவான் முடித்த நாளின் நந்தி அடு பழி தவிர்ப்பான் புரியும் மகப் பரிமகத்தின் அறிய தூமம் உந்தி அரும் பரி இமையா நாட்ட நுழைந்து அளி சேற்றின் ஒழுகும் பீளை சிந்திய ஆற்றிடைப் படும் ஒன்றி இந்திர வில் நிலம் எனத் திகழும் நீலம். |
70 |
|
|
உரை
|
|
|
|
|
1265. |
சஞ்சை ஆம் பகல் கடவுள் மனைவி அவள் கனல் உடலம் தழுவல் ஆற்றா அஞ்சுவாள் தன் நிழலைத் தன் உருவா நிறுவி வனம் அடைந்து நோற்க விஞ்சையால் அறிந்து இரவி பின்தொடர மாப் பரியா மின்னைத் தானும் செஞ்செவே வயப்பரியாய் மையல் பொறாது இந்தியத்தைச் சிந்தினானே. |
71 |
|
|
உரை
|
|
|
|
|
1266. |
அவை சிதறும் புலம்தோன்று நீலமா நீலம் இவை அணிவோர் வானோர் நவை அறு சீர் மானவர் இந் நகை நீலம் சாதியில் நால் வேறு அந்தக் கவல் அரிய வெள்ளை சிவப்பு எரி பொன்மை கலந்து இருக்கில் அரிதாய் முற்றும் தவலரிதாய் இருக்கில் இரு பிறப்பாளர் முதல் முதல் நால் சாதிக்கு ஆகும். |
72 |
|
|
உரை
|
|
|
|
|
1267. |
இலங்கு ஒளிய இந் நீலம் மெய்ப் படுப்போர் மங்கலம் சேர்ந்து இருப்பர் ஏனை அலங்கு கதிர் நீலத்தில் பெருவிலை ஆயிரப் பத்தின் அளவைத்து ஆகித் துலங்குவதான் பால் கடத்தின் நூறு குணச்சிறப்பு அடைந்து தோற்றும் சோதி கலங்கு கடல் உடைவைப்பில் அரிது இந்த இந்திரன் பேர்க் கரிய நீலம். |
73 |
|
|
உரை
|
|
|
|
|
1268. |
மைந்துறு செம் மணி முத்து வாள் வயிரம் பச்சை ஒளி வழங்கும் நீலம் ஐந்து இவை மேல் கோமேதக முதல் பவளம் ஈறாக வறைந்த நான்கும் நந்து ஒளிய வேனும் அவை சிறு வேட்கை பயப் பவழ நகு செம் குஞ்சி வெம் தறுகண் வலன் நிணங்கள் சிதறும் இடைப் படுவன கோ மேதம் என்ப. |
74 |
|
|
உரை
|
|
|
|
|
1269. |
உருக்கு நறு நெய்த் துளி தேன் துளி நல் ஆன் புண்ணிய நீர் ஒத்துச் சேந்து செருக்கு பசும் பொன் நிறமும் பெற்று மெலிதாய்த் தூய்தாய்த் திண்ணிதாகி இருக்கும் அது தரிக்கின் இருள் பாவம் போம் பரிசுத்தி எய்தும் வென்றித் தருக்கு வலன் கபம் விழுந்த விடைப் புருடராகம் ஒளி தழையத் தோன்றும். |
75 |
|
|
உரை
|
|
|
|
|
1270. |
தாழ்ந்த பிலத்து இழிந்து எரிபொன் கண் அவுணன் உயிர் குடிக்கும் தறுகண் பன்றி போழ்ந்த முழை வாய் திறந்து திசை செவிடு பட நகைத்துப் பொன் போல் கக்கி வீழ்ந்த கபம் படுதவில் படும் உச்சி வட்டமாய் மெலிதாய்ப் பொன் போல் சூழ்ந்து ஒளி விட்டு அவிர் தழல் போல் தெளிவு எய்தி மனம் கவர்ந்து தோற்றம் செய்யும். |
76 |
|
|
உரை
|
|
|
|
|
1271. |
இந்த மணி பாரியாத் திரகிரியில் கொடு முடியாய் இலங்கும் தெய்வ மந்தர மால் வரைப் புறம் சூழ் மேகலையாம் மயன் இந்த மணியினாலே அந்தர நாடவன் நகரும் அரசு இருப்பும் மண்டபமும் அமைத்தான் இந்தச் சந்த மணி தரிப்பவரே தரியார் வெந் நிட வாகை தரிக்க வல்லார். |
77 |
|
|
உரை
|
|
|
|
|
1272. |
வலன் மயிராம் வயிடூரியம் இளாவிருத கண்டத்தில் வந்து தோன்றிப் பலர் புகழும் கோரக்க மகதம் சிங்களம் மலயம் பாரசீகம் இலகு திரி கூடாதி தேயங்கள் பிற தீபம் எங்கும் தோற்றும் அலை கடலும் படும் இறுதிக் கார் இடிக்கும் போது நிறம் அதற்குயாது என்னில். |
78 |
|
|
உரை
|
|
|
|
|
1273. |
கழை இலை கார் மயில் எருத்தம் வெருகின் கண் நிறத்தது ஆய்க் கனத்தது ஆகி விழைவு தரு தெளிதாகித் திண்ணிதாய் மெலிதாகி விளங்கும் ஈதில் அழகு பெற வலம் இடம் மேல் கீழ் ஒளி விட்டன முறையோர் அறவோர் ஆதித் தழை உறு நால் சாதி களாம் தினம் இதனைப் பூசித்துத் தரிக்க சான்றோர். |
79 |
|
|
உரை
|
|
|
|
|
1274. |
வலத்து அவுணன் தசை வீழ்ந்த வழிபடுதுப்பு அயன் சந்தி வடிவ மாத்து என் புலத்தவரை விதிக்கும் இடத்தவனுடன் மாசி இழிபுலத்தும் புயல் போல் வண்ணள் வலத்த மது கைடவரைக் குறை குருதி வழிநிலத்தும் மகவான் வெற்பின் குலத்தை இற கரி சோரி சிதறிடத்தும் வந்து குடி கொண்டு தோன்றும். |
80 |
|
|
உரை
|
|
|
|
|
1275. |
அவ் வழியில் பகு பவள முருக்கம் பூ பசுங்கிளி மூங்கு அலர்ந்த செவ்வி செவ்வரத்த மலர் கொவ்வைக் கனி போலும் குணம் குற்றம் திருகிக் கோடல் எவ்வம் உறப் புழு அரித்தல் தன் முகம் ஒடிதல் பெரும் பாலும் இப் பூண் ஏந்தல் பெய் வளையார் தமக்கே ஆம் தரிக்கின் மகப்பேறு முதல் பேறு உண்டாகும். |
81 |
|
|
உரை
|
|
|
|
|
1276. |
இரவி எதிர் எரி இறைக்கும் கல்லும் மதி எதிர் செழு நிர் இறைக்கும் கல்லும் உரை இடு ஒன்பதில் ஒன்றில் உள் கிடையாய்க் கிடக்கும் என ஒன்பான் வேறு மரபு உரைத்து வணிகர் ஏறு ஆகிய வானவர் ஏறு வடபால் நோக்கி பரவி இருந்து அருச்சித்து மணிக் கைக் கொண்டு எதிர் மதுரை பரனை நோக்கா. |
82 |
|
|
உரை
|
|
|
|
|
1277. |
அஞ்சலி செய்து அக நோக்கால் இக்கு மரற்கு அளவிறந்த ஆயுள் செல்வம் விஞ்சுக என்று அளித்து அருள் இறை மகனும் விண் இழிந்த விமானம் நோக்கிச் செம் சரணம் பணிந்து இருக்கைத் தாமரையும் விரித்து ஏற்றான் செல்வ நாய்கர் மஞ்சனையும் புடைநின்ற அமைச்சரையும் நோக்கி முகம் மலர்ந்து சொல்வார். |
83 |
|
|
உரை
|
|
|
|
|
1278. |
இம் மணியால் இழைத்து நவ முடி சூட்டி இச் சிங்க இள ஏறு அன்ன செம் மறனை அபிடேக பாண்டியன் என்று இயம்பும் எனச் செம் பொன் தூக்கிக் கைம் மறியில் வணிகருக்கு விலை கொடுப்பான் வருவார் முன் கருணை நாட்டாம் அம் மகன் மேல் நிரப்பி இள நகை அரும்பி நின்றாரை அங்குக் காணார். |
84 |
|
|
உரை
|
|
|
|
|
1279. |
ஓர் உருவாய் தேர் நின்ற வணி கேசர் விடையின் மேல் உமையா ளோடும் ஈர் உருவாய் முக்கண்ணும் நால்கரமும் அஞ்சாமல் இறவாவாறு கார் உருவாய் எழு மிடரும் காட்டித் தம் கோயில் புகக் கண்டார் இன்று பார் உருவாய் நின்ற அணி கேசவர் எனவே பின் பற்றிப் போவார். |
85 |
|
|
உரை
|
|
|
|
|
1280. |
தேன் செய்த கொன்றை நெடும் சடையார் முன் தாழ்ந்து எழுந்து செம் கை கூப்பி யான் செய்யும் கைம் மாறாய் எம்பிராற்கு ஒன்று உண்டோ யானும் என்ன ஊன் செய் உடலும் பொருளும் உயிரும் எனின் அவையாவும் உனவே ஐயா வான் செய்யும் நன்றிக்கு வையகத்தோர் செய்யும் கைம்மாறு உண்டேயோ. |
86 |
|
|
உரை
|
|
|
|
|
1281. |
என்னா முன் வழுத்தல் உறும் விறன் மாறன் கோக் கொழுந்தை இகல் வேல் விந்தை மன் ஆகும் இவற்கு மனம் வாக்கு இறந்த பூரணமாம் மதுரை நாதன் பொன்னாரு மணி மகுடம் சூட மணி நல்குதலால் புவியநேகம் பன்னாளும் முறை புரியத் தக்கது என வாழ்த்தினார் பல் சான் றோரும். |
87 |
|
|
உரை
|
|
|
|
|
1282. |
ஏத்தி வலம் கொண்டு நான்கு இபம் தழுவப் பெற்று ஓங்கி இருக்கும் அட்ட மூர்த்தி விடை அருள் பெற்று மூவ நன் மலையாகி முனிவர் கூறப் பார்த்திவன் தன் பொலன் மாட மனைபுகுந்தான் இறை மணிப் பண் பயும் கேள்விச் சத்திரரும் மந்திரரும் மணி நோக்கி வியப்பு அடைந்தார் சங்கை கூர்ந்தார். |
88 |
|
|
உரை
|
|
|
|
|
1283. |
வேள் என வந்த நாய்கர் சுந்தர விடங்கர் ஆனால் நாள்களும் கோளும் பற்றி நவமணி ஆக்கினாரோ தாள்களும் தோளும் மார்பும் தரித்த நீள் நாகம் ஈன்ற வாள் விடு மணியோ ஈந்தார் யாது என மதிக்கற் பாலேம். |
89 |
|
|
உரை
|
|
|
|
|
1284. |
இந்திரக் கடவுள் நாட்கும் இம் மணி அரிய என்னா மந்திரக் கிழவர் நல்கி மயனினு மாண்ட கேள்வித் தந்திரக் கனகக் கொல்லர்க்கு உவப்பன ததும்ப வீசிச் செம் திரு மார்பினார்க்கு திருமணி மகுடம் செய்தார். |
90 |
|
|
உரை
|
|
|
|
|
1285. |
மங்கல மரபன் மாலை மணி முடி சூட்டி நாமம் செம்கண் ஏறு உயர்த்த நாய்கர் செப்பிய முறையால் வேத புங்கவர் இசைப்ப வீதி வலம் செய்து புனிதன் பாத பங்கயம் இறைஞ்சி வேந்தன் பன் மணிக் கோயில் எய்தா. |
91 |
|
|
உரை
|
|
|
|
|
1286. |
போர் மகள் உறையுள் ஆன புயத்து அபிடேகத் தென்னன் தேர் முதல் கருவித் தானைத் தெவ்வர் நீள் முடி எலாம் தன் வார் கழல் கமலம் சூட மனு முறை பைம் கூழ் காக்கும் கார் எனக் கருணை பெய்து வையகம் காக்கும் நாளில். |
92 |
|
|
உரை
|
|
|
|
|
1287. |
தந்தை தன் காமக் கிழத்தியர் ஈன்ற தனயராய் தனக்கு முன்னவராய் முந்தை நாள் அரசன் பொன்னறை முரித்து முடி முதல் பொருள் கவர்ந்து உட்கும் சிந்தையர் ஆகி மறு புலத்து ஒளித்த தெவ்வரைச் சிலர் கொடு விடுப்ப வந்தவர் கவர்ந்த தனம் எலாம் மீள வாங்கினார் ஈர்ங்கதிர் மருமான். |
93 |
|
|
உரை
|
|
|
|