தொடக்கம் |
|
|
1288. |
காழ் கெழு கண்டத்து அண்ணல் கௌரியன் மகுடம் சூட வீழ்கதிர் மணிகள் ஈந்த வியப்பு இது விடையோன் சென்னி வாழ் கரு முகிலைப் போக்கி மதுரை மேல் வருணன் விட்ட ஆழ் கடல் வறப்பக் கண்ட ஆடலைப் பாடல் செய்வாம். |
1 |
|
|
உரை
|
|
|
|
|
1289. |
சித்திரை மதியில் சேர்ந்த சித்திரை நாளில் தென்னன் மைத்திரள் மிடற்று வெள்ளி மன்று உளாற்கு களவு மாண்ட பத்திமை விதியில் பண்டம் பலபல சிறப்ப நல்கிப் புத்தியும் வீடு நல்கும் பூசனை நடத்தல் உற்றான். |
2 |
|
|
உரை
|
|
|
|
|
1290. |
நறிய நெய் ஆதி ஆர நறும் குழம்பு ஈறா ஆட்டி வெறிய கர்ப்புர நீர் ஆட்டி அற்புத வெள்ளம் பொங்க இறைவனை வியந்து நோக்கி ஏத்துவான் எறிநீர் வைகை துறைவ நீ என் கர்ப்பூர சுந்தரனேயோ என்றான். |
3 |
|
|
உரை
|
|
|
|
|
1291. |
பூசனை புரியும் எல்லைப் பொன் நகர்க்கு இறைமை பூண்ட வாசவன் வருடம் தோறும் பூசித்து வருவான் அன்ன காசறு மனத்தான் பூசை கழி உறும் அளவும் தாழத்துத் தேசு அமை சிறப்பார் பூசை செய்து தன் நாடு புக்கான். |
4 |
|
|
உரை
|
|
|
|
|
1292. |
அன்று நீர்க் கடவுள் வேள்வி நாயகன் அவையத்து எய்தி நின்றவன் தன் நோய் தீரும் செவ்வியின் இகழ்ச்சி தோன்றக் குன்ற வன் சிறகு ஈர்ந்த கொற்றவன் முகத்தை நோக்கி இன்று நீ சிறிது தேம்பி இருத்தியால் என் கொல் என்றான். |
5 |
|
|
உரை
|
|
|
|
|
1293. |
சிலைப்படு முகில் ஊர் அண்ணல் செப்புவான் இருள் தீர் அன்பின் வலைப்படு பெருமான் எம்மான் மதுரை எம் பிரானை அன்பு தலைப்படு பூசை செய்யத் தாழ்த்தது இன்று அதனால் இப்போது அலைப்பட சிறிது என் உள்ளம் ஆகுலம் அடைந்தது உண்டால். |
6 |
|
|
உரை
|
|
|
|
|
1294. |
என்ன அவன் இலிங்கம் தான் மாஇலிங்கமோ என்று முந்நீர் மன்னவன் வினவலோடு மகபதி மொழிவான் முன்பு என் தன்னரும் பழியும் வேழச் சாபமும் தொலைத்தது அன்றோ அன்னதை அறிந்திலாய் கொல் என்ன நீர் அண்ணால் கூறும். |
7 |
|
|
உரை
|
|
|
|
|
1295. |
அற்று அது ஆகில் தெய்வ மருத்துவராலும் தீரச் செற்றிட அரிதா என்னைத் தெறும் பெரு வயிற்று நோயை அற்றிடு மாறு தீர்க்கும் கொல் என வலாரி ஐயம் உற்று நீ வினாயது என் என்று உள் நகை அரும்பிச் சொல்வான். |
8 |
|
|
உரை
|
|
|
|
|
1296. |
அரி அயரலும் தீராப் பிறவி நோய் அறுக்க வல்ல பெரியவன் இந்த யாக்கைப் பெரும் பிணி பிறவும் தீர்த்தற்கு அரியனோ ஐயன் செய்யும் திருவிளையாட்டை இன்னே தெரிய நீ சோதி என்னத் தெண் கடல் சேர்ப்பன் சொல்வான். |
9 |
|
|
உரை
|
|
|
|
|
1297. |
கல் இறகு அரிந்தோய் இங்கு நான் வரும் காலை வேட்டார்க்கு எல்லை இல் காம நல்கும் சுரபியும் இன்பால் சோரப் புல்லிய கன்று மாற்றுப் பட்ட அப்போது கண்ட நல்ல சோபனத்தால் இந்த நல் மொழி கேட்டேன் என்னா. |
10 |
|
|
உரை
|
|
|
|
|
1298. |
வருணனும் ஏகி வெள்ளி மன்று உடை அடிகள் செய்யும் திருவிளையாடல் கண்டு வயிற்று நோய் தீர்ப்பான் எண்ணி முரசு அதிர் மதுரை மூதூர் முற்றும் நீ அழித்தி என்னாக் குரை கடல் தன்னை வல்லே கூவினான் ஏவினானே. |
11 |
|
|
உரை
|
|
|
|
|
1299. |
கொதித்து எழுந்து தருக்கள் இறக் கொத்தி எடுத்து எத்திசையும் அதிர்த்து எறிந்து வகைள் எல்லம் அகழ்ந்து திசைப் புறம் செல்லப் பிதிர்த்து எறிந்து மாட நிரை பெயர்த்து எறிந்து பிரளயத்தில் உதித்து எழுந்து வருவது என ஓங்கு திரைக் கடல் வரும் ஆல். |
12 |
|
|
உரை
|
|
|
|
|
1300. |
கந்த மலர்த் தனிக் கடவுள் கற்பத்தும் அழியாத இந்தவளம் பதிக்கு இடையூறு எய்திய எம் பதிக்கும் இனி வந்தது எனச் சுந்தரனை வந்து இறைஞ்சி வானவரும் சிந்தை கலங் கினர் வருணன் செய்த செயல் தெளியாதார். |
13 |
|
|
உரை
|
|
|
|
|
1301. |
சூலமோடு அழல் ஏந்தும் சொக்கர் திரு விளையாட்டின் சீலமோ நாம் இழைத்த தீ வினையின் திறம் இது வோ ஆலமோ உலகம் எலாம் அழிய வரும் பேர் ஊழிக் காலமோ எனக் கலங்கிக் கடி நகரம் பனிப்பு எய்த. |
14 |
|
|
உரை
|
|
|
|
|
1302. |
மண் புதைக்கத் திசை புதைக்க மயங்கி இருள் போல் வருநீத்தம் விண் புதைக்க எழு மாட வியன் நகரின் புறத்து இரவி கண் புதைக்க வரும் அளவில் கண்டு அரசன் நடுங்கிப் பெண் புதைக்கும் ஒருபாகப் பிரான் அடியே சரண் என்னா. |
15 |
|
|
உரை
|
|
|
|
|
1303. |
ஆலம் எழுந்து இமையவர் மேல் அடர்க்க வரும் பொழுது அஞ்சும் மால் எனவும் தன் உயிர் மேல் மறலி வரும் பொழுது அஞ்சும் பாலன் எனவும் கலங்கிப் பசுபதி சேவடியில் விழுந்து ஓலம் என முறை இட்டான் உலகுபுக முறை இட்டான். |
16 |
|
|
உரை
|
|
|
|
|
1304. |
முறை இட்ட செழியன் எதிர் முறுவலித்து அஞ்சலை என்னாக் கறை இட்டு விண் புரந்த கந்தர சுந்தரக் கடவுள் துறை இட்டு வருகடலைச் சுவறப் போய்ப் பருகும் எனப் பிறை இட்ட திருச் சடையில் பெயல் நான்கும் வர விடுத்தான். |
17 |
|
|
உரை
|
|
|
|
|
1305. |
நிவப்பு உற எழுந்த நான்கு மேகமும் நிமிர்ந்து வாய் விட்டு உவர்பு உறு கடலை வாரி உறிஞ்சின உறிஞ்ச லோடும் சிவப் பெரும் கடவுள் யார்க்கும் தேவ் எனத் தெளிந்தோர் ஏழு பவப் பெரும் பௌவம் போலப் பசை அற வறந்த அன்றெ. |
18 |
|
|
உரை
|
|
|
|
|
1306. |
அந் நிலை நகர் உளாகும் வானவர் ஆதி யோரும் தென்னவர் பிரானும் எந்தை திருவிளை யாடல் நோக்கிப் பன்னரு மகிழ்ச்சி பொங்கப் பன் முறை புகழ்ந்து பாடி இன்னல் தீர் மனத்தர் ஆகி ஈறு இலா இன்பத்து ஆழ்ந்தார். |
19 |
|
|
உரை
|
|
|
|