1307. பூதங்கள் அல்ல பொறி அல்ல வேறு புலன் அல்ல                                                    உள்ள மதியின்
பேதங்கள் அல்ல இவை அன்றி நின்ற பிறிது அல்ல                                                   என்று பெருநூல்
வேதம் கிடந்து தடுமாறும் வஞ்ச வெளி என்ப கூடல்                                                          மறுகில்
பாதங்கள் நோவ வளை இந்தன் ஆதி பகர் வாரை                                                    ஆயும் அவரெ.
1
உரை
   
1308. திருமகள் வலக்கண் வாக்கின் சேயிழை இடக்கண்                                                         ஞானப்
பெருமகன் நுதல் கணகப் பெற்று வான் செல்வம் கல்வி
அருமை வீடு அளிப்பாள் யாவன் அவன் உயிர்த்                                                   துணைவன் காண
ஒரு முலை மறைந்து நாணி ஒசிந்த பூம் கொம்பின்                                                          நின்றாள்.
2
உரை
   
1309. கதிர் மதி மிலைந்த வேணிக் கண்ணுதல் வருணன் ஏய
அதிர் கடல் வறப்பச் செய்த ஆடல் ஈது அனையான்                                                      ஏய
முதிர் மழை ஏழின் மேலும் முன்னை நால் முகிலும்                                                      போக்கி
மதுரை நான் மாடக் கூடல் ஆக்கிய வண்ணம்                                                      சொல்வாம்.
3
உரை
   
1310. எற்று தெண் திரை நீர்ச் சேர்ப்பன் தன் செயல்                                                    இழுக்கி நாணம்
உற்று இரு கண்ணும் சேப்ப உடன்று எழு கோபச் செம்                                                         தீப்
பற்றிட ஆகம் வெம்பிப் பரவையும் ஆறும் வெந்து
வற்றிட வெகுண்டு நின்றான் மானமும் வலியும்                                                        குன்றான்.
4
உரை
   
1311. நளிர் புனல் மதுரை மூதுர் நாயகன் ஆடல் தன்னைத்
தெளிகிலன் ஆகிப் பின்னும் செழு முகில் ஏழும் கூவிக்
குளிர் கடல் வறந்தது என்னக் குடித்து எழுந்து                                                    இடித்துப் பெய்யா
ஒளி வளர் மதுரை முற்றும் ஒல் எனக் களைமின்                                                        என்றான்.
5
உரை
   
1312. பொள் என மேகம் ஏழும் புகுந்து பார் தெரிய முந்நீர்ப்
பள்ளமும் வறப்ப முற்றப் பருகி மெய் கருகி மின்னித்
தெள்ளரும் திசையும் வானும் செவிடு உறப் பிலமும்                                                          பாரும்
விள்ளாமல் வரைகள் எட்டும் வெடிபட மேருச் சாய.
6
உரை
   
1313. ஊழிநாள் வெடிக்கும் அண்ட கடாகத்தின் ஒலிபோல்                                                       ஆர்த்துப்
பாழிவான் உருமு வீழப் பணாடவி மணிகள் சிந்தி
ஆழி நீர் ஞாலம் தாங்கும் அரா உடல் நெளிய                                                       திக்கில்
சூழி மால் யானை நின்ற நிலை கெடத் துணுக்கம்                                                       கொள்ள.
7
உரை
   
1314. வெள்ளிய நீறு பூத்து முழவென வீங்கு காய் போல்
தெள்ளிய வாலி சிந்தத் திரண்ட திண் பளிக்குத்                                                       நூண்போல்
ஒள்ளிய தாரை சோர உம்பர் மீன் கணங்க ளோடும்
துள்ளிய திரையில் ஆடு மீன் கணம் துடித்து வீழ.
8
உரை
   
1315. ஆர்த்து எழு கொண்மூ ஏழும் சராசரம் அனைத்தும்                                                        சூழ்ந்து
போர்த்தன ஞாலம் உண்ணப் புக்கது ஓர் வடிவம்                                                        கொண்ட
தீர்த்தனில் விசும்பும் பாரும் திசைகளும் தெரியா ஆகப்
பார்த்த கண் நுழையா வாகப் பரந்து இருள் கான்ற                                                        அன்றே.
9
உரை
   
1316. பைஞ்சுடர் எறிக்கும் பச்சை கார் ஒளி பரப்பு நீலம்
புஞ்ச வாள் உடுக்கள் அன்ன நித்திலம் பொன்னம்                                                         குப்பை
செம் சுடர் மணிகள் துப்புச் சிதறுவ கணவ ரோடும்
விஞ்சையர் மகளிர் ஊடி வெறுத்து எறி கலன்கள்                                                         போல.
10
உரை
   
1317. கடிய கால் உதைப்பப் பெய்யும் கடும் செல எழிலி                                                           மாடக்
கொடிய நீள் கரைச் சூழ்ந்து புதைத்தலும் கோல் ஒன்று                                                          ஓச்சிப்
படி எலாம் புரக்கும் கோனும் நகர் உளார் பலரும்                                                         ஞாலம்
மடியும் நாள் இதுவே என்னா மயங்கினார்                                                    உயங்கினாரே.
11
உரை
   
1318. கண் நுதல் மூர்த்தி தானே இன்னமும் காக்கும்                                                       என்னாப்
புண்ணிய நகரோடும் பொருக்கென கோயில் எய்தி
விண் இழி விமான வாழ்க்கை விடையவன் அடிக்கீழ்                                                       வீழ்ந்தான்
அண்ணலார் ஆடல் முன்னும் அறிந்து கை கண்ட                                                       வேந்தன்.
12
உரை
   
1319. விடையினை ஆலம் உண்ட மிடற்றினை கங்கை                                                        தாங்குச்
சடையினை கூற்றை வென்ற தாளினை மேரு சாபப்
படையினை அடியேம் துன்பப் பாட்டினை நீக்கி ஆளும்
நடையினை ஆகி எங்கள் நல் உயிர் காத்தல்                                                        வேண்டும்.
13
உரை
   
1320. என்னலும் தென்னர்க்கு என்றும் எய்திய இடுக்கண்                                                        தீர்க்கும்
முன்னவன் முன்போல் நான்கு முகிலையும் நோக்கி                                                        இன்ன
தொல் நகர் எல்லை நான்கும் சூழ்ந்து நான் மடம்                                                        ஆகி
வின் நெடு மாரி ஏழும் விலக்குமின் என விடுத்தான்.
14
உரை
   
1321. வந்து நான் மாடம் ஆகி வளைந்து நால் திசையும்                                                         சூழ்ந்து
சந்து வாய் தெரியாது ஒன்றித் தாம் ஒரு குடிலாய்                                                          மாடப்
பந்தி கோபுரம் செய் குன்றம் கால்கள் போல் பரிப்பப்                                                        போர்த்த
இந்து வார் சடையோன் ஏய எழிலிமா நகரம் எங்கும்.
15
உரை
   
1322. அன்ன நான் மாடத்துள்ளும் நகர் உளார் அமைச்சர்                                                      வேந்தன்
அன்ன நால் கருவித் தானை சராசரம் பிறவும் தாழ்ந்து
முன்னை நாள் தனினும் இன்பம் மூழ்கி நன்கு                                                  இருந்தார் ஊழில்
பொன்ன நாள் பாகன் தாளில் புக்கு அமர்ந்து                                                  இருந்தார் ஒத்தார்.
16
உரை
   
1323. கழை கெழு வரையின் உச்சி கவிழ்கின்ற புயல் போல்                                                      கார் சூழ்ந்து
இழை மணி மாடத்து உம்பர் எறிதுளி உடைந்து                                                      துள்ளத்
தழை கடல் வறப்ப வாங்கித் தம் உடல் வறப்பப்                                                      பெய்து
மழைகளும் வெள்கி நின்ற வருணனும் வெள்கி                                                      நின்றான்.
17
உரை
   
1324. நடுங்கினன் கழிந்த அச்சம் நாணம் மீதுர மானம்
ஒடுங்கினான் உள்ளத்து உள்ளத்து ஓர் உவகை வந்து                                                 எய்தப் பொன்பூத்து
தடம் கரை குறுகா முன்னோய் தணிந்து பின்                                                  தோய்ந்து பாசம்
மடங்கினன் அடங்கா அன்பின் வள்ளலைப் பூசை                                                      செய்வான்.
18
உரை
   
1325. புனித நீராடிக் கண்டி பூண்டு வான் கங்கை ஆதி
வனிதையர் பசும் பொன் கும்ப வாசநீர் வடித்து நீட்டப்
பனிமலர் சந்தம் கந்தம் அணிகலன் பசும் பொன்                                                         ஆடை
இனையன பிறவும் ஈன்று கற்பகம் எடுத்துக் காட்ட.
19
உரை
   
1326. ஐம் கனி அமுதம் ஐந்து கௌவிய அமுதும் தூபம்
செம் கதிர் விளக்க மின்ன தேவரான் கொடுப்ப                                                        சேல்கண்
நங்கை தன் பதியை பூசித்து ஆயிரம் நாமம் கூறிப்
பைங்கதிர் முத்தம் சாத்தித் தொழுது அடி பணிந்து                                                        நின்றான்.
20
உரை
   
1327. அருச்சனை உவந்த ஆதி அமலன் நீ யாது வேண்டிற்று
உரைத்தி என்று ஓத நீர்க் கோன் ஒல்லை தாழ்ந்து                                                       ஒன்றினாலும்
கரைத்திட அரிய இந்தக் கடிய என் வயிற்று நோய்                                                             நின்
திரைத் தடம் ஆடும் முன்னே தீர்ந்திடப் பெற்றேன்                                                           எந்தாய்.
21
உரை
   
1328. வேத முதல் கலை காட்சி முதல் அளவை விரிஞ்சன்                                          முதல் விண்ணோர் செய்யும்
சோதனை உள் அகப்படா சோதி உனைச் சோதிக்கத்                                               துணிந்தேன் அந்தோ
பேதைமையேன் இடத்து என்ன குணம் கண்டு என்                                    பிணி தீர்த்து என் பெற்றாய் ஆசை
கோதம் இலாய் குற்றமே குணம் ஆகக் கொள்வது நின்                                                     குணமோ ஐயா.
22
உரை
   
1329. பொன் நகரான் காலம் தாழ்த்து உனை அருச்சித்து                                         அயர்ச்சியோடும் போனவாறும்
என் என யான் வினவியதும் வலாரி இறை கொடுத்ததும்                                             அவ் இறைக்கு நேர் யான்
பின்னை வினாயதும் அவன் சொல் வழி உன்னை                                              சோதித்த பெற்றி தானும்
முன்னவனே உன் அருளால் என் பிணிக்கு மருந்தாகி                                                     முடிந்த வாறே.
23
உரை
   
1330. ஆறு மதி முடி அணிந்த அருள் கடலே வயிற்று நோய்                                                 அன்றி மேல் நாள்
மாறுபடு இரு வினையும் மனவலியும் கெட வீட்டின்                                                 வழியும் பெற்றேன்
வேறு இனி மந்திரம் என்னை மணி என்னை மருந்து                                           என்னை மெய்ம்மை ஆகத்
தேறும் அவர்க்கு இப்புனித தீர்த்தமே பிணி                                       அனைத்தும் தீர்ப்பது அன்றோ.
24
உரை
   
1331. அடியனேன் முன்னம் செய்த அபராதம் இரண்டும்                                                           தீரும்
படி பொறுத்து அருள்வாய் என்று பன் முறை பரவித்                                                           தாழ்ந்து
மடி விலா மகிழ்ச்சி பொங்க வரங்களும் சிறிது                                                         வேண்டிக்
கடியதன் நகரம் புக்கான் குடதிசை காவல் வேந்தன்.
25
உரை
   
1332. வன் திறல் வருணன் விட்ட மாரியை விலக்க ஈசன்
மின் திகழ் சடையினின்று நீங்கிய மேகம் நான்கும்
குன்று போல் நிவந்து நான்கு கூடமாக் கூடலாலே
அன்று நான் மாடக் கூடல் ஆனது ஆன் மதுரை                                                           மூதூர்.
26
உரை