1333. சத்த நால் மறைப் பொருள் வரை தள்ளு நீள் முடிமேல்
வைத்த கார்கள் நான் மாடமாய் மதுரை மேல் வருணன்
உய்த்த மாரியைத் தடுத்தவாறு உரைத்துமே உயர்த்தோர்
சித்தராய் விளையாடிய செயல் சிறிது உரைப்பாம்.
1
உரை
   
1334. தேட அரும் கதிர் மணி முடிச் செழியனும் பாண்டி
நாடரும் திரு எய்தி மேல் நல்ல வீடு எய்தக்
கூடல் அம் பதி மேவிய குணம் குறி கடந்த
வேடர் அங்கு ஒரு சித்த மெய் வேடராய் வருவார்.
2
உரை
   
1335. வட்ட வார் சடைக் குஞ்சியும் பூண நூல் மார்பும்
இட்ட நீறு அணி திலகமும் இணைக் குழை தூங்க
விட்ட வெள்ளை முத்திரையும் தோல் விரித்த                                                        பட்டிகையும்
சுட்ட வெண் பொடிப் பொக்கணம் தூக்கிய தோளும்.
3
உரை
   
1336. துய்ய வெண் பொடி அழிந்து மெய் சிவந்திடச் சுவடு
செய்யும் வெண்திரள் படிக நீள் மாலையும் சிவந்த
கையில் அங்கு கட்டங்கமும் கண்டவர் மனம் சென்று
உய்ய வன்புற வீக்கிய உதர பந்தனமும்.
4
உரை
   
1337. அட்ட வேங்கை ஈர் உரிவை கீண்டு அசைத்த                                                      கோவணமும்
ஒட்ட வீக்கிய புலி அதன் உடுக்கையும் இடத் தோள்
இட்ட யோக பட்டிகையும் பொன் இடை இடை கட்டப்
பட்ட சுஃறொலி வேத்திரப் படைக்கையும் படைத்து.
5
உரை
   
1338. வேத கிங்கிணி சிலம்பு சூழ்ந்த அடிகளில் மிழற்ற
ஓத அரும் பத முளரி ஊறு அருண் மது ஒழுகப்
போத ஆனந்த மது நுகர்ந்து அலர் முகம் பொலியப்
பாத பங்கய உப நிடதப் பாதுகை சூட.
6
உரை
   
1339. சிறிது மூரலும் வெயர் வையும் திருமுகத்து அரும்பக்
குறுகி ஆவணம் சித்திர கூட நால் சந்தி
மருகு சூளிகை உபரிகை மாளிகை வாயில்
அறுகு சூழ் நிரைத்த தெற்றி இவ் விடம் தொறும்                                                        அடைந்து.
7
உரை
   
1340. தெற்கு இருப்பவர் போல் வடதிசை வயில் சென்று
புக்கு இருப்பதும் கிழக்கு உள்ளார் போல மேல்                                                        திசையில்
நக்கு இருப்பதும் யாவரும் நாடினர் அறியத்
தக்கது அன்றியே இந்திர சாலமாத் தணந்தும்.
8
உரை
   
1341. சேய வெற்பினை அணியதாச் செய்து மற்று அணித்தாய்
மேய வெற்பினைச் சேயதா விடுத்தும் மெய்ம் முது                                                           மூப்பு
ஆய மக்களை இளையவர் ஆக்கியும் குதலை
வாய மக்களைக் கழிமுது மக்களாய் வகுத்தும்.
9
உரை
   
1342. ஆணைப் பெண் உரு ஆக்கியும் பெண்ணை ஆண்                                                         உருவாய்
மாணக் காட்டியும் மலடியை மகப் பெறச் செய்தும்
கோணல் கூன் செவிடு ஊமை கண்குருடு பங்கு எவரும்
காணத் தீர்த்து நாலு லோகமும் கனகமாச் செய்தும்.
10
உரை
   
1343. செல்வர் தம் மனைப் பொருள் எல்லாம் வறுமையில்                                                        சிறந்தோர்
இல்லம் எய்தவும் நட்டவர் இகல் இன்றித் தம்மின்
மல்லு வெம் சமர் இழைப்பவும் காஞ்சிர மரத்தின்
நல்ல தீம் கனி பழுப்பவும் விஞ்சைய கண் ஐந்தும்.
11
உரை
   
1344. பருவம் மாரிய பருவத்தில் வைகை நீர் பரந்து
வருவது ஆக்கியும் மீளவும் வறந்திடச் செய்தும்
பொருவி தீம் சுவையோடு அடையும் பொய்கையும்                                                       உவர்ப்புத்
தருவ ஆக்கியும் உவரியின் சுவையவாத் தந்தும்.
12
உரை
   
1345. வீசி மாத்திரைக் கோலினை விண்ணில் நட்டு                                                       அதன்மேல்
ஊசி நாட்டி இட்டு ஊசிமேல் பெருவிரல் ஊன்றி
ஆசு இல் ஆடியும் ஊசிமேல் அவை கிழக்காக
மாசு இல் சேவடிப் போதுவான் மலர்ந்திடச் சுழன்றும்.
13
உரை
   
1346. சண்ட வெம் பணிப் பகை எனப் பறந்து விண் தாவிக்
கொண்டலைப் பிடித்து இடி யொடும் குடித்த நீர்                                                         பிழிந்து
கண்டவர்க்கு அதிசயம் பெறக் காட்டியும் காண
விண் தலத்தினில் பண்டுபோல் இறை கொள விடுத்தும்.
14
உரை
   
1347. எல் இடைப் படும் பொருள் களை இரா எழப்                                                       பார்த்தும்
அல் இடைப் படும் பொருள் களைப் பகல் வர                                                       அமைத்தும்
வல் அழல் புனல் உளர் வலி கெடப் பார்த்தும்
நல்ல போது காய் கனி இலா நாள் படக் கண்டும்.
15
உரை
   
1348. பீளையால் விழிக் கிழவரைப் பிரம்பினால் வருடிக்
காளை ஆடவர் ஆக்கி அக் கணவருக்கு இசைய
ஈளை வாய் முது கற்பினார் கரு அடைந்து இளமை
ஆள வேத்திரம் வருடி நீறு அளித்து அருள் செய்தும்.
16
உரை
   
1349. அகரம் ஆதி மூன்று ஆகிய ஆகருடணமே
புகர் இலா அதிரிச்சிய அஞ்சனம் பொருவில்
வகரம் ஆதி மூன்று ஆகிய வசியமே வாதம்
இகல் இலா வயத்தம்பம் என்று இன்னவை செய்தும்.
17
உரை
   
1350. வேத நூல் தெளியார்கள் எக் கலைகளும் விளங்கப்
பூதி நாவினில் சிதறியும் பூழியன் காதன்
மாதராரொடும் பயில் புது மணமலர்க் காவில்
காதநீண்ட கோள் தெங்கினைக் கரும் பனை செய்தும்.
18
உரை
   
1351. ஏனை வான் தருக் குலங் களைப் புட்களை இருகோட்டு
ஆனை ஆதி பல் விலங்கினை ஒன்றை ஒன்று ஆக
நான நோக்கினால் நோக்கியும் நாடிய இளையோர்
மானின் நோக்கியர் ஆகிலோம் என எழில் வாய்த்தும்.
19
உரை
   
1352. நாக நாடு பொன் நாட்டு உள பொருளும் அந் நகருள்
ஆக ஆக்கியும் இன்னணம் விச்சைகள் அனந்தம்
மாக நாயகன் மலைமகள் நாயகன் மதுரை
ஏக நாயகன் திரு விளையாடல் செய்து இருந்தான்.
20
உரை
   
1353. சித்த யோகிகள் செய்கின்ற ஆடல் மேல் செலுத்தி
வைத்த கண்களும் சிந்தையும் வாங்கலர் திகைத்துத்
தந்த மாள் வினைத் தொழில் மறந்து இருந்தனர்                                                         தகைசால்
முத்த வேதியர் ஆதிய முதுநகர் மாக்கள்.
21
உரை
   
1354. இனைய செய்தியை உழையரால் இறைமகன் அறிந்தான்
அனைய சித்தரை இங்ஙனம் தருக என அடுத்தார்
தனை அகற்றினன் சித்தரைச் சார்ந்தவர் தாமும்
வினைய வென்றவர் ஆடலை வியந்து கண்டு இருந்தார்.
22
உரை
   
1355. அமைச்சர் தங்களை விடுத்தனன் அமைச்சரும் சித்தர்
அமைச்சர் அண் பணிந்து அரசன் முன் வருக எனத்                                                        தவத்தோர்
எமக்கு மன்னனால் என் பயன் என மறுத்திட மண்
சுமக்கும் மன்னவன் தம்மவர் தொழுதனர் போனார்.
23
உரை
   
1356. மன்னன் முன் அமைச்சர் சித்தர் மறுத்து உரை மாற்றம்                                                         கூற
முன்னவன் அருள் பெற்று இம்மை மறுமையும் முனிந்த                                                         யோகர்
இந் நில வேந்தர் மட்டோ இந்திரன் அயன் மால்                                                         ஏனோர்
தன்னையும் மதிப்பரோ என்று இருந்தனன் தரும                                                         வேந்தன்.
24
உரை