1357. செல்லார் பொழில் சூழ் மதுரா புரிச் சித்தர் எல்லாம்
வல்லார் அவர் ஆடலை யார் உரை செய்ய வல்லார்
எல்லாரும் வியப்பு உற இத் தனிச் சித்த சாமி
கல்லானை தின்னக் கரும்பு ஈந்த கதையும் சொல்வாம்.
1
உரை
   
1358. பின்னேய அச்சம் பெருகப் பெரியோரை எண்ணாது
என்னே எளியார் என யான் இகழ்ந்து இங்ஙன நீண்டச்
சொன்னேன் அவர்க்கு என்குறை என்னில் உருவி                                                           நானே
தன்னேர் இலாதார் தமைக் காணத் தகுவன் என்னா.
2
உரை
   
1359. ஆனந்த சித்தர் தமைக் காண்பல் என்று அன்பு கூர்ந்த
மீனம் தரித்த கொடி வேந்தன் குறிப்பு நோக்கி
மோனம் தரித்த சிவயோகரும் முந்தித் தம்பொன்
மானம் தனக்கு வட மேல் திசை வந்து இருந்தார்.
3
உரை
   
1360. அருகாத செல்வத்து அவன் அன்று தைத் திங்கள்                                                        தோற்றம்
வரு காலம் ஆக மதுரேனை வந்து வந்தித்து
உருகா தரத்தால் கழிந்து உள் வலமாக மீள
வருவான் அவன் முன் வரு காஞ்சுகி வன்கண்                                                        மாக்கள்.
4
உரை
   
1361. சீறிட்ட வேங்கை அதள் சேக்கையர் சீறி ஐந்தும்
பாறிட்ட வேடர் யோக பட்டத்தர் கட்டங் கத்தில்
ஏறிட்ட கையர் இறுமாந்து இருப்பாரை நோக்கி
மாறிட்டு நீக்கி எழப் போக என வந்து சொன்னார்.
5
உரை
   
1362. பின்னா வரு தென்னர் பிரான் பெரியோரை நோக்கி
என் நாடு நும் ஊர் நுமக்கு என் வரும் யாது                                                       வேண்டும்
நும் நாமம் ஏது நுவல் மின் என வைய எந்தன்
நல் நாது எந்த நகர் உள்ளும் திரிவம் அப்பா.
6
உரை
   
1363. ஆனாலும் இப்போது அணி கான்மிர நாட்டில் காசி
தான் நாம் இருக்கும் தலம் ஆகும் அநாதர் ஆகி
ஆனாத பிச்சைப் பெரு வாழ்வு உடையார் நமரா
நாள் நாளும் விஞ்சை நடாய்த் திரி சித்தரேம் யாம்.
7
உரை
   
1364. ஆனந்த கானம் தொடுத்து இங்கு உள ஆன சைவத்
தானம் பலவும் தொழுதல் பரமாகி வந்தேம்
ஞானம் தரும் இந் நகர் இம்மையில் சிவன் முத்தி
ஆனந்தம் ஆன பர முத்தி மறுமை நல்கும்.
8
உரை
   
1365. ஈண்டு உள்ளவர்க்கு எம் விளை யாடலைக் காட்டி                                                         இச்சை
வேண்டும் பலசித்தியும் நல்குவம் வேதம் ஆதி
மாண்டு அங்கு எண் எண் கலை ஞானமும் வல்லம்                                                         அல்லால்
சேண் தங்கு எல்லாப் பொருளும் வல்ல சித்தரேம்                                                         யாம்.
9
உரை
   
1366. உன்னால் நமக்குப் பெறல் வேண்டுவது ஒன்றும்                                                      இல்லை
தென்னா என உள் நகை செய்தனர் சித்தயோகர்
மன்னா இவர் தம் இறுமாப்பும் செருக்கும் வீறும்
என்னால் அளவிட்டு அறிவேன் என எண்ணித்                                                      தேர்வான்.
10
உரை
   
1367. தேறும் பொழுது ஓர் உழவன் ஒரு செல்வக் கன்னல்
ஆரும் கமுகு என்ன வயிர்ப் உறக் கொண்டு தாழப்
பாரும் திசையும் புகழ் பங்கயச் செங்கை தாங்கி
நீரும் பிறையும் கரந்தார் தமை நேர்ந்து சொல்வான்.
11
உரை
   
1368. வல்லாரில் வல்லேம் என உம்மை மதித்த நீர் இக்
கல் ஆனைக்கு இந்த கரும்பை அருத்தின் எல்லாம்
வல்லாரும் நீரே மதுரைப் பெருமானும் நீரே
அல்லால் எவர் நும் மனம் வேட்டது அளிப்பன்                                                        என்றான்.
12
உரை
   
1369. என்னா முகிலைத் தளை இட்டவன் கூறக் கேட்டுத்
தென்னா வருதி எனப் புன்னகை செய்து சித்தர்
நின்னால் வருவது எமக்கு ஏது நினக்கு நாமே
உன் ஆசை தீரத் தருகின்றது அலாமல் உண்டோ.
13
உரை
   
1370. செல்லா உலகத்தினும் சென்று ஒரு விஞ்ஞை கற்றோர்
பல்லாரும் நன்கு மதிக்கப் பயன் எய்துவார்கள்
எல்லாம் அறிந்த எமக்கு ஒன்றிலும் ஆசை இல்லை
கல் ஆனை கன்னல் கறிக்கின்றது காண்டி என்றார்.
14
உரை
   
1371. கடைக்கண் சிறிதே குறித்தார் முன் கடாக் கல் யானை
மடைக் கண் திறந்து மதம் மூன்றும் வழிய விண் வாய்
அடைக்கும் படிவாய் திறந்து ஆர்த்துப் புழைக்கை                                                           நீட்டித்
தொடைக் குன்று அனான் கைச் சுவைத் தண்டைப்                                                  பறித்தது அன்றே.
15
உரை
   
1372. பறித்துக் கடைவாய் வழிசாறு அளி பாய்ந்து நக்கக்
கறித்துக் குதட்டிப் பருகிக் கரம் ஊசல் ஆட
நெறித்துத் தருக்கி நிழல் சீறி நிமிர்ந்து நிற்ப
மறித்துக் கடைக்கண் குறித்தார் பினும் மாயம் வல்லார்.
16
உரை
   
1373. மட்டு உற்ற தாரான் கழுத்தில் கண்ட மாலை தன்னை
எட்டிப் பறித்த இகல் காஞ்சுகி மாக்கள் சீறிக்
கிட்டிக் களிற்றைப் புடைப்பான் கிளர் கோல் கொண்டு                                                           ஓச்சச்
சிட்டத்தவர் கண் சிவந்து ஆனையைச் சீறி நோக்க.
17
உரை
   
1374. கண்டா வளியைச் களிறு உண்டது கண்கள் சேப்புக்
கொண்டான் அரசன் சிவ யோகரில் கோபம் மூளத்
தண்டா அரசன் தமருள் தறு கண்ணர் சீறி
வண்டார் இதழி மறைத்தாரை அடிக்க வந்தார்.
18
உரை
   
1375. அப்போது இள மூரல் அரும்பியச் சித்த சாமி
கைப்போது அமைத்துக் கடிந்தோர் தமை நின்மின்                                                         என்ன
மைப் போதக மன்னவர் வைத்த அடி போக்கல்                                                         ஆற்றாது
ஒப் போது அரிய நிலை ஓவியம் போல நின்றார்.
19
உரை
   
1376. மத்தக் களிற்றான் வெகுளித் தழல் மாறி அன்பு
பொத்தப் புதைந்த மனத்து அற்புதம் பொங்கிச் சோரச்
சித்தப் பெருமான் அடிமா முடி தீண்டப் பாச
பெத்தத் தமியேன் பிழையைப் பொறும் என்று வீழ்ந்தான்.
20
உரை
   
1377. அன்புக்கு இரங்கும் கருணைக் கடல் ஆன வையர்
இன்பு உற்று வேண்டும் வரம் கேள் எனத் தாழ்ந்து                                                         வேந்தன்
நல் புத்திரப் பேறு அருள் வாய் என நல்கிச் செம் கை
வன்பு உற்ற வேழ மிசை வைத்து அருள் நாட்டம்                                                         வைத்தார்.
21
உரை
   
1378. தழைக்கும் நீள் கதிர்த் தண் முத்த மாலையைப்
புழைக்கை நீட்டிக் கொடுத்தது போதகம்
மழைக்கை நீட்டினன் வாங்கினன் நீதியில்
பிழைக்கல் ஆத பெருந்தகை வேந்தனே.
22
உரை
   
1379. முத்த மாலிகை வாங்குமுன் முன் நின்ற
சித்த சாமி திரு உருக் கண்டிலன்
மத்த யானை வடிவமும் ஏனைய
ஒத்தது ஆக உரவோன் வெருவினான்.
23
உரை
   
1380. இந்த ஆடல் எமக்கு உயிர் ஆய இவ்
அந்தம் இல்லி அருள் விளையாட்டு எனா
முந்தை வேத முதல் வனை மீளவும்
வந்து வந்தனை செய்தனன் மன்னனே.
24
உரை
   
1381. முழுது உணர்ந்த முதல்வ நின் ஆடலை
இழுதையேன் அறியாது அளந்தேன் எனா
அமுது இறைஞ்சி அபராதம் ஈந்து கை
தொழுது நின்று துதிக்கத் தொடங்கினான்.
25
உரை
   
1382. வேதியாய் வேத விளை பொருளாய் வேதத்தின்
நீதியாய் நீதி நெறி கடந்த நீள் ஒளியாய்
ஆதியாய் ஈராய் நடுவாய் அவை கழிந்த
சோதியாய் நின்றாய் என் சோதனைத்தோ நின்                                                        இயல்பே.
26
உரை
   
1383. நின்னான் மொழிந்த மறை நின் அடிகள் வந்தித்தும்
பல் நாள் அருச்சித்தும் பாதம் தலை சுமந்தும்
உன் நாமம் வாசித்தும் உன்னை அறியேன் என்று
சொன்னால் அடியனேன் சோதனைத்தோ நின்                                                       இயல்பே.
27
உரை
   
1384. பெரியதினும் பெரியதும் ஆய்ச் சிறியதினும் சிறியதும்                                                         ஆய்
அரியதினும் அரியதும் ஆய் எளியதினும் எளியதும்                                                         ஆய்க்
கரியதும் ஆய் காண்பானும் காட்சியும் ஆய் அவை                                                         கடந்த
துரியமும் ஆய் நின்றய் என் சோதனைத் தோ நின்                                                         இயல்பே.
28
உரை
   
1385. என்று பல முறை பழிச்சி மனை எய்தி விக்கிரமனை                                                   ஈன்று பன்னாள்
ஒன்று முறை கோல் ஓச்சி விக்கிரமன் சுவன் மிசைப்                                                பார்சுமத்திப் பாசம்
வென்று களைந்து அருள் சித்த சாமி திரு அருள்                                         நோக்கால் விளை பேரின்ப
மன்றல் மது வீழ் வண்டில் கலந்து இருந்தான்                                           அபிடேக மாறன் மன்னோ.
29
உரை