1386. கட்டு அவிழ் கடுக்கையர் கல்யானை கழை தின்ன
இட்டது இது பஞ்சவன் இடத்து அமணர் ஏவி
விட்ட மத யானை விழ மேவலர் புரத்தைச்
சுட்ட கணை விட்டு உயிர் தொலைத்த முறை                                                      சொல்வாம்.
1
உரை
   
1387. விக்கிரம பாண்டியன் வெலற்கு அரிய செம் கோல்
திக்கு நிலனும் திறை கொள் செல்வம் நிறைவு எய்த
அக்கிரம வெம்கலி அரும் பகை ஒதுங்கச்
சக்கரம் உருட்டி இடர் சாய்த்து முறை செய்வான்.
2
உரை
   
1388. புத்தர் அமண் அதிய புறக்களை அகழ்ந்து
நித்த மறை ஆகம நெறிப் பயிர் வளர்த்து
மெய்த்த விதி பத்தியின் விளைந்த பயன் யாரும்
துய்த்திட மனுத் தொழில் நடத்தி வரு தூயோன்.
3
உரை
   
1389. மரு இதழியான் உறையும் வான் இழி விமானத்து
அருகு வட பக்கம் உற ஆலயம் எழுப்பி
உருவரு இரண்டினையும் ஒருவி வரு சித்தர்
திரு உருவு கண்டு பணி செய்து ஒழுகு நாளில்.
4
உரை
   
1390. செய்ய கதிரோன் வழிய செம்பியன் ஒருத்தன்
கையன் அவன் வென்றி பயில் காஞ்சி நகர் உள்ளான்
பொய் அமணர் கட்டுரை புறத் துறையின் நின்றான்
மையின் மதி மாற னொடு மாறு பட நின்றான்.
5
உரை
   
1391. முடங்கல் மதி செம் சடை முடித்து விடை ஏறும்
விடங்கரது சேவடி விழுங்கிய மனத்து
மடங்கல் நிகர் தென்னன் எதிர் வந்து பொர ஆற்றாது
தடங்கல் ஓர் வஞ்சனையினால் அட மதித்தான்.
6
உரை
   
1392. அஞ்சனம் கவுஞ்சம் கோவர்த்தனம் திரிகூடம் காஞ்சிக்
குஞ்சரம் சையம் ஏம கூடமே விந்தம் என்னும்
மஞ்சு இவர் வரைகள் எட்டும் வைகுறு அமணர்                                                       தம்மில்
எஞ்சல் இல் குரவர்க்கு ஓலை வேறு வேறு எழுதி                                                       விட்டான்.
7
உரை
   
1393. வடிவு போல் உள்ளம் எல்லாம் மாசு இருள் புதைய                                                        நின்ற
அடிகள்மார் ஆவார் எண்ணாயிர வரும் ஆர்த்தார்                                                        வேய்ந்த
முடி கெழு வேந்தன் விட்ட முடங்கலை நிமிர்த்து                                                        வாசித்து
இடி கெழு கார் போல் குன்றின் இழிந்து வேறு                                                 இடத்தில் செல்வார்.
8
உரை
   
1394. யாவரும் ஒருங்கு கூடி இருள் வழி கொள்வது ஏய்ப்பக்
காவல் வல் அரணம் சூழ்ந்த காஞ்சி மா நகரத்து                                                         எய்திப்
பூ அலர் தாரான் கோயில் புறம் கடை புகுந்து                                                         வேந்தன்
ஏவலர் விடுப்ப உள் போய் இறைமகன் இருக்கை                                                         புக்கார்.
9
உரை
   
1395. மன்னவன் முடிமேல் பீலி வைத்தனர் ஆக்கம் கூற
அன்னவன் அவரை நோக்கி வசிய முன் ஆறும்                                                         வல்லீர்
தென்னனை யாபி சாரம் செய்து உயிர் செகுத்தால்                                                        உங்கட்கு
என்னது நாடு பாதி தருவல் போய் இயற்றும் என்றான்.
10
உரை
   
1396. தவம் புரிந்து அவமே செய்வார் தாம் அதற்கு உடன்                                                        பட்டு ஏகி
சிவந்த தெண் திரை நீர்ப் பாலி நெடும் கரைக் காதம்                                                         மூன்றில்
கவர்ந்து அகன் சாலை கோலி யோசனை அகலம்                                                         கல்லி
அவம் படு வேள்விக் குண்டம் கோணம் எட்டு ஆகக்                                                         கண்டார்.
11
உரை
   
1397. விடம் பொதி காட்டம் பெய்து நிம்ப நெய் விராய                                                       நஞ்சின்
உடம் புடை உயிரின் கோ ழூன் கறிப் பொடி ஊறு                                                       எண்ணெய்
இடம் பட வாயம் காத்த வெரிக் குழி புதையப் பெய்து
கொடும் பழி வேள்வி செய்தார் கொல்லாத விரதம்                                                       பூண்டார்.
12
உரை
   
1398. மாடு உள பொதும்பர் நந்த வனம் உள சோலை உள்ள
காடு உள கருகிச் சயக் கயல் உள ஓடை உள்ள
கோடு உள வாவி உள்ள குளம் உள வறப்பத் தாவிச்
சேடு உள முகிலும் தீயச் சிகை எழு குண்டத் தீவாய்.
13
உரை
   
1399. கூற்று எழு தோற்றம் போல அஞ்சனக் குன்றம் போலக்
காற்று எழு செவியும் நால்வாய் கௌவிய மருப்பும்                                                         மாறா
ஊற்று எழு மதமும் ஊசல் ஆடிய ஒற்றைக் கையும்
ஏற்று எழு விடம் போல் சீறி எழுந்தது ஓர் தறுகண்                                                         யானை.
14
உரை
   
1400. அந்த மா வேள்வித் தீயும் அவிய மும் மதமும் சோர
வந்தமா களிற்றை நீ போய் வழுதியை மதுரை யோடும்
சிந்தவே தொலைத்தி என்னாத் தென் திசைச் செல்ல                                                           ஏவி
முந்தவே விடுத்த மாசு மூழ்கு உடல் அமணப் பேய்கள்.
15
உரை
   
1401. அருள் அற்று இருள் உடலில் புதை அமணக்                                                     கயவர்களுள்
அருள் அற்று மறையில் படர் செயல் அற்று இக பர                                                          மெய்ப்
பொருள் அற்றவன் அனிகத் தொடு புறம் மொய்த்திட                                                          மதமா
வெருள் அற்று இடி குரலில் வெடி பட்டிட வரும் ஆல்.
16
உரை
   
1402. அடியின் அளவு அகல் பாதல முடியின் அளவு                                                         அண்டம்
இடியின் அளவு எழுகார் செவி எறி கால அளவு                                                         அகிலம்
மடியும் அளவு உளர் கான் மத மழையின் அளவு உலக
முடிவின் எழு கடல் கண் அழல் அளவாம் முது                                                         வடவை.
17
உரை
   
1403. கூற்று அஞ்சிய வரும் இக் கரி குரல் அம் செவி                                                        முழைவாய்
ஏற்றம் செய மடங்கும் செவி எறி கால் வழி விழித்தீ
ஊற்றம் செய மடைவாய் உடைத்து ஒழுகும் கட மத நீர்
நாற்றம் செயத் திசை வேழமும் நடுக்கம் செய்து                                                         நலியும்.
18
உரை
   
1404. இடிக்கும் புயல் வயிற்றைக் கிழித்து இடி ஏற்றினை                                                       உதிர்க்கும்
வெடிக்கும் பிளிர் ஒலியால் திசை விழுங்கிச்                                                     செவிடாக்கும்
துடிக்கும் புழைக் கை ஓச்சிவிண்தொடு குன்றினைச்                                                       சுற்றிப்
பிடிக்கும் கடல் கலக்கும் தனிப் பெரு மத்து எனத்                                                       திரிக்கும்.
19
உரை
   
1405. உருமுக் குரல் ஒலி இற்றுளர் ஒலி விட்டுஎறி                                                      செவியிற்று
இரு முள் பிறை எயிற்றில் அழல் எரி கண் இரு                                                         உடலில்
தருமுக் கடல் வருவித்து உரல் அடி இற்றென நிலம்                                                           மேல்
வரும் உக்கிர வடவைக் கனல் வரின் ஒப்பது மதமா.
20
உரை
   
1406. தெழிபட்ட திக் கயத்தின் செவி தீயப் பகையோடும்
வழிபட்டு ஒரு கடும் கூற்று என வரு குஞ்சர வரவை
விழிபட்டவர் மொழியால் உணர் விரை பட்டலர்                                                        வேம்பன்
சுழி பட்டலை புனல் போல் மனம் சுழன்றான் நினைந்து                                                        அழன்றான்.
21
உரை
   
1407. மைப் போதகம் பொறை ஆற்றிய மணிக் கோயின்முன்                                                          குறுகாக்
கைப் போதகம் உரித்தான் கழல் கால் போதகம் உறத்                                                          தாழ்ந்து
இப் போதகம் தனையும் தொலைத்து எனைக் காத்தி                                                   என்று இரந்தான்
அப் போது அகல் வானின்று ஒரு திருவாக்கு                                                       எழுந்தன்றே.
22
உரை
   
1408. விட்டார் வலி கெட நாம் ஒரு வில் சேவகனாகி
ஒட்டார் விட வரும் வெம் கரி உயிர் வௌவுது முதல்                                                           நின்
மட்டார் பொழில் கடி மாகர் அயல் கீட்டிசை மருங்கு                                                           ஓர்
அட்டாலை மண்டபம் செய்க என அது கேட்டு எழுந்து                                                           அரசன்.
23
உரை
   
1409. அகம் கவ்விய களிப்பு எய்தி வந்து அட்டாலை                                                  மண்டபம் பொன்
நகம் கவ்வியது எனத் தூண் ஒரு நானான் கினில்                                                        எடுத்தே
சகம் கவ்விய புகழான் செயத் தறுகண் கனை மதமா
முகம் கவ்விய வில் சேவகன் வருவான் அது                                                      மொழிவாம்.
24
உரை
   
1410. நீல் நிறம் நீத்த நிழல் மதி இரண்டு உண்டு என்ன
வானிற வலயக் சங்கவார் குழை நுழைவித்து அம் பூம்
பால் நிற வெகினம் காணப் படர் சடை மறைத்துத்                                                        தோற்றும்
கான் நிறை குஞ்சிச் சூட்டில் களிமயில் கலாபம் சூடி.
25
உரை
   
1411. கரும் கடல் முளைத்த செக்கக் கதிர் எனக் குருதிக்                                                          கச்சை
மாங்குற வீக்கிச் சோரி வாய் உடை வாளும் கட்டி
இரங்கு நான் மறைகள் ஏங்க இருநிலம் தீண்டு தாளில்
பொருங்கழல் வளைத்து வாளிப் புட்டிலும் புறத்து                                                          வீக்கி.
26
உரை
   
1412. வீங்கிய தடம் தோள் இட்ட வார் சிலை வில்லினோடும்
பாங்குறை இமயப் பாவை பாதியே அன்றி முற்றும்
வாங்கிய வண்ணம் போன்றும் அல்லது மாலும் ஓர்பால்
ஓங்கிய வண்ணம் போன்று ஒளி நிறம் பசந்து தோன்ற.
27
உரை
   
1413. காமனும் காமுற்று அஞ்சும் காளை ஆம் பருவத்                                                       தோன்றத்
தாம் உலகு அளந்த வென்றித் தனிவில் சேவகனாய்த்                                                       தோன்றி
மா மறை மகுடம் அன்ன மண்டபத்து ஏறித் தென்னர்
கோமகன் இடுக்கண் தீர்ப்பான் குஞ்சர வரவு நோக்கா.
28
உரை
   
1414. அஞ்சு கூவிளிச் சேய்த்து என்ன வதுவர வறன்                                                       இலாதான்
வெம் சினக் கோலி நோன்தாள் மிதித்து மெய் குழைய                                                       வாங்கிச்
செம் சிலை நெடு நாண் பூட்டித் திரு விரல் தெறித்துக்                                                       தாக்கிக்
குஞ்சரம் எட்டும் அஞ்சக் கோளரி முழக்கம் காட்டி.
29
உரை
   
1415. இங்கித நெடும் கோதண்டம் இடம் கையில் எடுத்து நார
சிங்க வெம் கணை தொட்டு ஆகம் திருக முன்                                                 இடத்தாள் செல்ல
அங்குலி இரண்டால் ஐயன் செவி உற வலித்து                                                       விட்டான்
மங்குலின் முழங்கும் வேழ மத்தகம் கிழிந்தது அன்றே.
30
உரை
   
1416. கொண்டலின் அலறிச் சீறி வீழ்ந்தது கொடிய வேழம்
பிண்டது பாரும் சேடன் சென்னியும் பிளந்த தண்டம்
விண்டது போலும் என்னத் துண் என வெருவிப் போன
பண்டைய தருக்கும் வீறும் படைத்தன திசை மால்                                                         யானை.
31
உரை
   
1417. புதை படக் கரித்தோல் போர்த்த புண்ணிய மூர்த்தி                                                         தாளால்
உதை படக் கிடந்த கூற்றம் ஒத்தது மத்த யானை
சுதைபடு மதிக்கோ வேந்தன் தொழுகுலச் சிறுவன்                                                         ஒத்தான்
பதை படும் அமணர் கால படர் எனப் படரில் பட்டார்.
32
உரை
   
1418. இருள் கிடந்தது அனைய தானை இட்ட சிந்துரங்கார்                                                         மாலை
இருள் முகத்து ஒதுங்கிச் செல்லும் இரவி செம் கிரணம்                                                         போன்ற
இருள் முழுதும் உண்ணக் காலை எழு கதிர் வட்டம்                                                         அன்ன
இருளினை மறைத்த கண்டன் எய்தவாய் பெய்யும்                                                         செந்நீர்.
33
உரை
   
1419. பொய் அறா மனத்தார் தேற்றும் புன்நெறி ஒழுக்கம்                                                         பூண்ட
வெய்ய கோன் கொடுங்கோல் தன்னை வெண் மருப்பு                                                     ஆகத் தாங்கி
மையன் மா வடிவம் கொண்டு வந்த வெம் கலியைத்                                                         தென்னன்
செய்ய கோல் ஐயன் சிங்க வாளியாய்ச் சிதைந்தது                                                         அன்றே.
34
உரை
   
1420. உருமு வீழ்ப் உண்ட குன்றினும் பன்மான் அம்பு                                                         தொட்ட
பெருமுழை வாயும் வாயும் பெருகின அருவிச் சோரி
கருமுகில் மானச் சேனம் கழுதுகள் பூதம் மொய்த்த
திருமணித் தடம் தோள் வீங்கத் தென்னவன் உவகை                                                         பூத்தான்.
35
உரை
   
1421. ஆனையின் புண் நீர் உண்ண அடுத்த கார் உடல்                                                      பேய் என்ன
சேனை பின் செல்லப் போந்த திணி இருள் அமணர்                                                         தம்மை
மீனவன் கண்டு சீற வேந்து அவன் குறிப்பில் நிற்கும்
மான வெம் சின வேல் மள்ளர் வல்லை போய் முடுகல்                                                         உற்றார்.
36
உரை
   
1422. எடுத்தனர் கையில் தண்டம் எறிந்தனர் மறிந்து சூழ்                                                         போய்த்
தடுத்தனர் கரகம் தூள் ஆத் தகர்த்தனர் பீலி யோடும்
தொடுத்தனர் உடுத்த பாயை துணி படக் கிழித்துக்                                                         கால்வாய்
விடுத்தனர் மானம் போக்கி விட்டனர் சில்லோர்                                                         தம்மை.
37
உரை
   
1423. எறி உண்டு செய்த மாயம் இழப் புண்டு சேனையோடு
முறியுண்டு நடுக்கம் பாவம் மூழ்குண்டு மாழ்கிச்                                                         சாம்பிப்
பறி உண்ட தலையர் யாரும் பழிப்பு உண்டு பாயும்                                                         தாமும்
உறி உண்ட கரகத்தோடும் ஒதுங்கு உண்டு பதுங்கிப்                                                         போனார்.
38
உரை
   
1424. மாதங்கம் தடிந்து தட்டாலை மண்டபத்து இருந்த வீரன்
பாதங்கள் கையால் பற்ரிப் பாண்டியன் இரந்து                                                      வேண்டிப்
போதங்கள் கடந்தாய் என்றும் பொலிய இங்கு இருத்தி                                                      என்ன
வேதங்கள் அருத்தம் சொன்ன வேதியன் அதற்கு                                                      நேர்ந்தான்.
39
உரை
   
1425. பின்னும் சில் வரங்கள் நல்கப் பெற்று நான் மாடக்                                                         கூடல்
மன்னும் சின் மயனை வந்து வந்தித்து வருநாள் காமன்
என்னும் சில் மலர்ப் பூம் தண்தார் இராச சேகரனைப்                                                         பெற்று
மின்னும் சில்லியம் தேர் வேந்தன் மேதினி புரக்கும்                                                         மன்னோ.
40
உரை
   
1426. வம்புளாய் மலர்ந்த வார் ஆன் வரவிடு மத்தக் குன்றில்
சிம்புளாய் வடிவம் கொண்ட சேவகன் ஏவல் செய்த
அம்புளாய்த் தூணம் வள்ளவன் அவதரித்தவா போல்
செம்புளாய்க் கொடிய நார சிங்கம் ஆய் இருந்தது                                                          அன்றெ.
41
உரை
   
1427. உலகு எலாம் அழித்து மீள உண்டாக்கும் உருத்திரன்                                                    விர சத்தியினில்
சில தரித்து இறவா அவுணன் பிடந்த சிங்க நாயகனை                                                      அங்கு எய்தி
அலகுஇல் மாதவம் செய் உரோமசன் தன் பேர் அறிய                                             ஓர் தீர்த்தம் உண்டாக்கி
இலகு பேர் அடைந்தான் பிரகலாதனும் நோற்று ஈறு                                        இலாப் பெருவரம் அடைந்தான்.
42
உரை