1428. தழை உலாங் கையர் ஏவிய தந்திமேல் விடை மேல்
அழகர் சேவகம் செய்தவாறு அறைந்தனம் அவரே
கிழவன் ஆகிப் பின் காளை யாய்க் கிஞ்சுகச் செவ்வாய்
குழவியாய் விளையாடிய கொள்கையைப் பகர்வாம்.
1
உரை
   
1429. தென்னன் விக்கிரமன் புயத் திரு நிலச் செல்வி
மன்னி வாழும் நாள் மதுரையின் மறையவன் ஒருவன்
அன்னவன் விருபாக்கன் ஆம் அவன் குடி வாழ்க்கை
மின்னல் ஆள் வட மீன் ஆள் பெயர் சுப விரதை.
2
உரை
   
1430. அனையர் தங்களுக்கு அரும் பெறல் மகவு இன்றி                                                       அநந்தம்
புனித நல் அறம் செய் தொழில் ஒழுக்கமும் பூண்டு
நனைய வார் குழல் அன்னையர் எழுவர் பால் அண்ணி
இனிய மாதவம் செய்து ஒரு பெண் மகவு ஈன்றார்.
3
உரை
   
1431. பேரும் கௌரி என்று அழைத்தனர் பிராயம் ஒர்                                                     ஐந்தில்
சாரும் கௌரியும் பிறவிநோய் தணிப்பதற்கு உறுதி
தேறும் சிந்தையால் தன் தந்தையை வணங்கிச்                                                     செனனம்
ஈரும் தெய்வத மந்திரம் யாது என வினவ.
4
உரை
   
1432. அந்தணாளனும் அதிசயித்து அரும் பெறல் மகட்குச்
சிந்தை ஆர்வமோடு இறைவி தன் மனுவினைச் செப்பத்
தந்தை பால் அது தெளிந்து நாத் தழும்பு உறப்                                                      பயின்றாள்
முந்தை நாள் அரும் தவக் குறை முடித்திட வந்தாள்.
5
உரை
   
1433. தாதை தன் தவக் கொழுந்தினுக்கு இசைய மா சைவ
மாதவத்தனா ஆதி ஆச்சிரமத்தில் வழங்கும்
வேத வித்தும் ஆய் மரபினான் மேம் படுவான் எப்
போது போதும் என்று உளத்தொடு புகன்று கொண்டு                                                      இருந்தான்.
6
உரை
   
1434. பருவம் நால் இரண்டு ஆக மேல் கடிமணப் பருவம்
வருவது ஆக அங்கு ஒரு பகல் வைணவப் படிவப்
பிரம சாரியாய்க் கடை தொறும் பிச்சை புக்கு உண்பான்
ஒருவன் வந்தனன் பலிக்கு அவண் அயல் புலத்து                                                      உள்ளான்.
7
உரை
   
1435. பிச்சை வேண்டினான் அவற்குத் தன் பெண்ணினைக்                                                    கொடுப்பான்
இச்சை கூர்ந்து அரும் தவத்தினால் வருந்தி ஈன்று                                                        எடுத்த
விச்சை வேதியன் மனையொடு சுற்றமும் வினவாது
அச்சம் இன்றி நீர் எடுத்து அவன் அங்கையில்                                                    பெய்தான்.
8
உரை
   
1436. கலிக்கும் நூபுரச் சீறடிக் கன்னி தன் விதியும்
பலிக்கு வந்தவன் நல் வினைப் பகுதியும் துரப்ப
ஒலிக்கும் மந்திரக் சிரக நீர் ஒழுக்கினான் முந்திச்
சலிக்கும் அன்னையும் தமர்களும் கேட்டு உளம்                                                      தளர்வார்.
9
உரை
   
1437. குலனும் ஓர்கிலன் கோத்திரம் ஓர்கிலன் குடிமை
நலனும் ஓர்கிலன் ஒழுக்கமும் கல்வியும் நண்ணும்
தலனும் ஓர்கிலன் கன்னியைத் தத்தம் செய்தான் எப்
புலனும் ஓர்ந்தவன் விதி வழி மதி எனப் புலர்ந்தார்.
10
உரை
   
1438. மற்று அவன் குடி கோத்திரம் சூத்திரம் மற்றும்
உற்று அறிந்து நம் மரபினுக்கு ஒக்கும் மான் மாயோன்
சொற்ற தந்திர வைணவத் தொடக்குண்டு திரியும்
குற்றம் ஒன்று இனி மறுப்பது என் கொடுப்பது என்று                                                     இசைந்தார்.
11
உரை
   
1439. தாயும் ஒக்கலும் ஒத்தபின் தாதையும் வேதத்து
ஆயும் எண் மணத்து ஆதி ஆம் அறநிலை ஆற்றால்
தேயும் நுண் இடைக் கன்னியைச் செம் பொனால்                                                      புதைத்துக்
காயும் ஆர் அழல் முன்னர் அக் காளை கைக்                                                    கொடுத்தான்.
12
உரை
   
1440. தெய்வ மங்கல வரிசைகள் செய்து தான் பயந்த
மௌவல் அம் குழல் கன்னியை மணமக னோடும்
கௌவை அம் புனல் வேலி சூழ் கடிநகர் விடுத்தான்
சைவ மங்கல வேதியத் தாபதன் இப்பால்.
13
உரை
   
1441. இல்லார்க்கு கிழிஈடு நேர் பட்டால் எனப் பல்லார்
                                                இல்லந் தோறும்
செல்லா நின்று இரந்து உண்டு திரிந்த மகன் மணமகனாய்ச்
                                                செல்வ நல்க
வல்லாளை மணந்து வருவான் போற்றும் மனை புகுத
                                                வன்கண் சீலப்
பொல்லாராய் வைணவத்துப் புக்கு ஒழுகு தாய் தந்தை
                                                பொறார்கள் ஆகி.
14
உரை
   
1442. வந்த மணவாட்டி சிவ சிந்தனையும் சைவ தவ வடிவு                                                       நோக்கி
வெந்த உடல் போல் மனமும் வெந்தவளை வேறு                                          ஒதுக்கி வேண்டார் ஆகி
நிந்தனை செய்து ஒழுகுவார் அவளை ஒரு நாணீத்து                                                நீங்கி வேற்றூர்த்
தந்த அமர் மங்கலம் காண்பார் தனியே வைத்து                                   அகம் பூட்டித் தாங்கள் போனார்.
15
உரை
   
1443. உள் மாசு கழுவுவது நீறு என்றே உபநிடதம் உரைப்பக்                                                       கேட்டும்
மண் மாசு படப் பூசும் வடிவு உடையார் அகன்ற அதன்                                            பின் மனையில் வைகும்
பெண் மாசு கழிய ஒரு சிவன் அடியார் தமைக் காணப்                                             பொறாமல் இன்று என்
கண் மாசு படுவது எனக் கனிந்து ஒழுகு தலையன் பால்                                                 கவலை கூர்வாள்.
16
உரை
   
1444. சிவன் அடியார்க்கு அன்பு இலாச் சிந்தையே இரும்பு                                              ஏவல் செய்து நாளும்
அவன் அடியார் திறத்து ஒழுகா ஆக்கையே மரம்                                           செவி கண் ஆதி ஐந்தும்
பவன் அடியார் இடைச் செலுத்தாப் படிவமே பாவை                                               மறை பரவுஞ் சைவ
தவ நெறி அல்லா நெறியே பவ நெறியான் தனியாளாத்                                               தளர்வாள் பின்னும்.
17
உரை
   
1445. எனைத்து உயிர்க்கும் உறுதி இக பரம் என்ப அவை                                       கொடுப்பார் எல்லாம் தானாய்
அனைத்து உயிர்க்கும் உயிராகும் அரன் என்ப அவன்                                       அறிவார்க்கு அங்கம் வாக்கு
மனத்து உறு மெய்ப் பத்தி வழி வரும் என்ப அப்                                            பத்தி வழி நிற்பார்க்கு
வினைத் துயர் தீர்த்திட எடுத்த வடிவு என்பது அவன்                                       அடியார் வேடம் அன்றோ.
18
உரை
   
1446. என்ன இருந்து அலமருவாள் இருக்கும் இடத்து அவள்                                         உள்ளத்து எண்ணி ஆங்கே
தென்னவனாய் இருந்து அரசு செய்த பிரான் அவட்கு                                         அருளும் செவ்வி நோக்கிக்
கன்னம் உரம் கரம் சிரம் தோள் கண்டமும் கண்டிகை                                         பூண்டு கையில் தம்போல்
பல் நெடும் நாள் பழகியது ஓர் தனிப் பெரிய                                         புத்தகமும் பக்கம் சேர்த்தி.
19
உரை
   
1447. கரிந்த நீள் கயல் உன்னின் அரையும் முது திரை                                       கவுளும் கனைக்கும் நெஞ்சும்
சரிந்த கோவண உடையும் தலைப் பனிப்பும் உத்தரியம்                                                தாங்கும் தோளும்
புரிந்த நூல் கிடந்து அலையும் புண்ணிய நீறு அணி                                            மார்பும் பொலிய நீழல்
விரிந்தது ஓர் தனிக் குடையும் தண்டு ஊன்றிக்                                 கவிழ்ந்த அசையும் மெய்யும் தாங்கி.
20
உரை
   
1448. ஒருத்தராய் உண்டி பல பகல் கழிந்த பசியினர் போல்                                                   உயங்கி வாடி
விருத்த வேதியராய் வந்து அகம் புகுதக் கண்டு                                           எழுந்து மீதூர் அன்பின்
கருத்தளாய்த் தவிசு இருத்திக் கை தொழுது சிவனை                                              இங்குக் காண என்ன
வருத்த மா தவம் உடையேன் என முனிவர் பசித்                                         துன்பால் வந்தேம் என்றார்.
21
உரை
   
1449. இல் பூட்டிப் போயினர் எமரங்கள் எனக் கௌரி                                                 இயம்ப மேரு
வில் பூட்டிப் புரம் பொடித்த வேதியர் நின் கை                                         தொட்டு விடு முன் யாத்த
கொல் பூட்டு விடும் திறந்து கடிது அடிசில் சமைத்து                                         இடுதி எனக் குமரி தாளில்
அல் பூட்டு மடவாலும் அவ்வாறே அட்டில் புகுந்து                                                 அடிசில் ஆக்கி.
22
உரை
   
1450. தையல் மா தவக் கொழுந்து புறம் போந்து சிரக நீர்                                                 தளிர்கை தாங்கி
ஐயனே அமுது செய எழுந்து அருளும் என எழுந்த                                                 அடிகள் பாதச்
செய்ய தாமரை விளக்கி அந்நீர் தன் சென்னின் மேல்                                                 தெளித்துப் பாச
ஐயன் மாசு இருள் கழுவி அகம் புகுவித்துத் ஆசனம்                                           மேல் வைத்துப் பின்னர்.
23
உரை
   
1451. நகை மலர் இட்டு அருச்சித்து நல்ல பரிகலம் திருத்தி                                               நறு வீ முல்லை
முகை அனைய பால் அடிசில் வெள்ளி மலை எனப்                                       பருப்பு முதுகில் செம்பொன்
சிகரம் எனப் பல்வேறு அருகு அனை புறம் தழீக்                                       கிடந்த சிறு குன்று ஈட்ட
வகை என நெய் அருவி எனப் படைத்து அனைய                                       சிற்றுண்டி வகையும் பெய்து.
24
உரை
   
1452. செய்ய வாய் இடை இடையே முகமன் உரை இன்                                         அமுது செவியில் ஊட்டத்
தையலாள் வளைக்கை அறு சுவை அமுது வாய்                                         ஊட்டத் தளர்ந்த யாக்கை
ஐயர் தாம் திரு அமுது செய் அமுது உண்டவர் என                                            மூப்பு அகன்று பூவில்
கையதே மலர் வாளிக் காளை வடிவாய் இருந்தார்                                                   கன்னி காண.
25
உரை
   
1453. பூசிய வெண் நீறு போய் கலவை ஆய் கண்டிகை                                      போய்ப் பொன் செய் பூணும்
காசு அணி பொன் குண்டலமும் கடகமும் ஆய் மூப்பு                                              போய் காளை ஆன
தேசு உருவம் கண்டு நடு நடுங்கி வளைக் கரம்                                      நெரித்துத் திகைத்து வேர்த்துக்
கூசி ஒரு புறத்து ஒதுங்கி நின்றாள் அக் கற்பு மலர்                                               கெம்பர் அன்னாள்.
26
உரை
   
1454. ஆன பொழுது அரும் கடி நல் மணம் குறித்து                                    மனையில் தீர்ந்து அயலூர் புக்க
தேன் ஒழுகு துழாய் அலங்கல் தீர்த்தனுக்கு அன்பு                                    உடையார் போல் திரியும் வஞ்ச
மானம் உடையார்மீண்டு மனை புகலும் பதினாறு வய                                                   வயதின் மேய
பால் நல் மணி கண்டன் நுதல் காப்பு அணிந்தோர்                                    பசும் குழவி படிவம் கொண்டான்.
27
உரை
   
1455. எழுத அரிய மறைச் சிலம்பு கிடந்து புறத்து அலம்ப                                          அன்பர் இதயம் என்னும்
செழு மலர் ஓடையின் மலர்ந்து சிவானந்தத் தேன்                                          ததும்பு தெய்வக் கஞ்சத்
தொழுதகு சிற்றடிப் பெரிய விரல் சுவைத்து மைக்                                          கணிர் துளும்ப வாய்விட்டு
அழுது அணையா ஆடையில் கிடந்தான் தனை
அனைத்து உயிரும் ஈன்று காத்து அழிக்கும் அப்பன்.
28
உரை
   
1456. தாய் விட்டுப் போனது ஒரு தனிக் குழவி எனக்                                         கலங்கித் தாங்கித் தேடி
ஆய் விட்டுப் பிரமன் அழ மறைகள் அழ                                     அன்புடையாள் அன்பில் பட்டு
வாய்விட்டுக் கிடந்து அழுத மகவினைக் கண்டு                                 அணங்கு அனையாள் மாமி என்னும்
காய் விட்டு மதக் கொடியாள் இம் மகவு ஏது எனக்                                        கேட்டாள் கௌரி தன்னை.
29
உரை
   
1457. நத்தம் அனயன் தனக்கு அரிய நாயகனுக்கு அன்பு                                       உடையாள் நவில்வாள் தேவ
தத்தனயன் தரு மனைவி யொடு போந்து சிறு போது                                                   தையல் ஈண்டு
இத் தனயன் தனைப் பார்த்துக் கோடி என வைத்து                                       அகன்றான் என்னா முன்னம்
சித்த நயனம் கலங்கச் சீறி மணவாட்டி தன் மேல்                                             செற்றம் கொண்டாள்.
30
உரை
   
1458. என்பு பூண்டு இடு காட்டில் பொடி ஆடும்                                          உருத்திரனுக்கு இடை அறாத
அன்பு பூண்டான் மகவுக்கு அன்பு உடையாய் நீயும் எமக்கு                                                      ஆகா என்னாத்
துன்பு பூண்டு அயர்வாளை மகவையும் கொண்டு அகத்தை                                                       துரத்தினார்கள்
வன்பு பூண்டு ஒழுகு வைணவம் பூண்டு பொறை இரக்க                                                       மான நீத்தோர்.
31
உரை
   
1459. தாய் இலாப் பிள்ளை முகம் தனை நோக்கித் தெருவின்                                          இடைத் தளர்வாள் உள்ளம்
கோயிலாக் கொண்டு உறையும் கூடல் நாயகனை மனக்                                                  குறிப்பில் கண்டு
வேயில் ஆக்கிய தடம் தோள் கௌரி திரு                                       மந்திரத்தை விளம்ப லோடும்
சேயிலாய்க் கிடந்து அழுத குழவி விசும்பு இடை மேல்                                               தெரியக் கண்டாள்.
32
உரை
   
1460. மழவு உருநீத்து அடல் ஏற்றின் வருவார் தம் இடத்து                                         அணங்கின் மனுவை ஓதிப்
பழகிய பார்ப்பன மகளைப் பார்ப்பதியின் வடிவு                                         ஆக்கிப் பலரும் கண்டு
தொழ விடை மேல் ஏற்றி விசும்பு ஆறு ஆக மலர்                                              மாரி சுரர்கள் ஊற்ற
அழகர் எழுந்து அருளினார் களிதூங்கி அதிசயித்தார்                                                 அவனி மாக்கள்.
33
உரை