தொடக்கம் |
|
|
1461. | திருத்தராய் மதுரா புரி மேவிய சித்தர் ஆகியச் செல்வர் விருத்தராய் இளையவரும் ஆய் மழவும் ஆய் வேடம் கொண்டு அடல் ஏற்றின் ஒருத்தர் ஆய் விளையாடிய ஆடலை உரைத்தனம் இனி மன்றுள் நிருத்தர் ஆயவர் மாறி நின்று ஆடிய நிலை சிறிது உரை செய்வாம். | 1 |
|
|
உரை
|
|
|
|
|
1462. | வேந்தன் மீன வண் கொடியவன் ஆகிய விக்கிரமன் தன் தோள் வந்து மண் பொறை இராச சேகரன் புயத்து இறக்கி ஐந்தரு நாடன் பூம் தண் மா மலர் வேதியன் மாதவன் புரத்தின் மேல் பொலிந்து ஓங்கும் சாந்த நீறு எனக் கண்ணித்த புண்ணியத் தனி முதல் நகர் சார்ந்தான். | 2 |
|
|
உரை
|
|
|
|
|
1463. | கண்ணகன் புவி இராச சேகரன் பொதுக் கடிந்து செங்கோல் ஓச்சி வண்ண வெண் குடை நிழற்றுவான் ஆனந்த வடிவமாய் தனி மன்றுள் அண்ணால் ஆடிய திரு நடனத்து அன்பினால் ஆடல் நூல் ஒழித்து ஏனை எண்ணி மூ இரு பத்து முக்கலையும் கற்று இறை முறை செய்யும் நாளில். | 3 |
|
|
உரை
|
|
|
|
|
1464. | சிலம்பி வாயின் நூல் இழைத்திடும் பந்தரில் செம் கண் மால் தொழ வைகும் அலம்பு தெண் திரைப் பொன்னி அம் தண் துறை ஆனைக்கா இறைக்கு அன்பு கலந்த சிந்தையான் மூ இருபத்து நால் கலைகளும் பயின்று உள்ளம் மலர்ந்தவன் கரிகால் பெருவளத்தவன் வையம் புரக்கின்றான். | 4 |
|
|
உரை
|
|
|
|
|
1465. | பொன்னி நாடவன் வாயில் உள்ளான் ஒரு புலவன் வந்து அலர் வேம்பின் கன்னி நாடனைக் கண்டு முன் பரவுவான் கனைகழல் கரிகால் எம் மன்னவற்கு அறுபத்து நால் கலைகளும் வரும் வாராது உனக்கு ஒன்று தென்னர் ஏறு அனையால் அது பரத நூல் தெரிந்திலை எனச் சொன்னான். | 5 |
|
|
உரை
|
|
|
|
|
1466. | கேட்ட மீனவன் மறு புல விஞ்சையன் கிளத்து சொல் இகல் மானம் மூட்ட ஆகுலம் மூழ்கிய மனத்தனாய் முது மறைச் சிர மன்றுள் நாட்டம் மூன்று உடை நாயகன் ஆடலை நானும் ஆடுதற்கு உள்ளம் வேட்டதே கொலாம் இதுவும் எம் பிரான் விதி என அது கற்பான். | 6 |
|
|
உரை
|
|
|
|
|
1467. | ஆடல் நூல் வரம்பு கண்டவர் ஆகி அவ்வழி ஆடாலும் பயின்ற நாடக நடை தேர் புலவரைத்துருவி நண்ணிய அவர்க்கு எலாம் மகிழ்ச்சி வீடரும் சிறப்பால் அறுவையும் பூணும் வெறுக்கையும் வெறுத்திடக் கொடுத்துப் பாடல் வண்டாற்றும் தாரினான் பரதப் பனுவலும் கசடு அறப் பயில்வான். | 7 |
|
|
உரை
|
|
|
|
|
1468. | பாவமோடு ராகம் தாளம் இம் மூன்றும் பகர்ந்திடும் முறையினால் பரதம் ஆவியின் அங்கம் முபாங்கமே பிரத்தியாங்கமே அலர் முக ராகம் ஓவறு சீர்சால் கரப்பிரசாரம் உவமையில் சிரக்கர கருமம் தாவறு கரகேந்திரம் கரகரணம் தானகமே சுத்த சாரி. | 8 |
|
|
உரை
|
|
|
|
|
1469. | விண்டிடாத் தேசி சாரியே நியாயம் விருத்தியே பிரவி சாரம் பூ மண்டலம் உடனா ஆகாச மண்டலமே மாசு இல் சுத்தக் கரணம் சீர் கண்ட உற் புலித கரணமே அங்க காரமே இரேசதம் என்னக் கொண்ட நாலைந்து பேதமும் கற்று கோது அறப் பயின்றபின் அவற்றுள். | 9 |
|
|
உரை
|
|
|
|
|
1470. | வருத்தம் இல் மனோ பாவம் ஆதி ஆம் எட்டுவகை நிருத்தங்களில் சாரி நிருத்தம் ஆகிய தாண்டவம் அக மார்க்கம் நிகழ்த்திடும் தேசியும் வடுகே அருத்தம் ஆகிய சிங்களம் என மூன்றாம் அது நிலை ஆறு மூ இரண்டு திருத்தம் ஆம் பதமும் திகழ் இரேகை ஆதி செப்பிய அங்கம் ஈர் எட்டும். | 10 |
|
|
உரை
|
|
|
|
|
1471. | நால் வகைத்து ஆகும் கரணமும் மேலோர் நாட்டிய இருவகைக் கரமும் கால்வகை புரிகை முதல் பதினாறும் கவான் மனை ஆதி ஆம் இரண்டும் பாலது மடிப்பு வகை எழு நான்கும் பழிப்பு அறு சுத்த சாரி எனும் ஏல் உறு பூ சாரிகள் பதினாறும் இத்துணை ககன சாரிகளும். | 11 |
|
|
உரை
|
|
|
|
|
1472. | ஏற்ற திக்கிரந்தம் ஆதி ஆம் முப்பது இருவகைத் தேசி சாரிகளும் காற்றினும் கடும் தேர்ச் சக்கர முதல் ஆம் ககன சாரிகை கள் ஏழ் ஐந்தும் சாற்று வித்து வற்பிராந்தம் ஆதிய வாம் சாரிபத்து ஒன்பதும் ஆகப் போற்றி இவை அனைத்தும் உட்படப் புட்ப கடத்து இலக்கண முதல் பொருள்கள். | 12 |
|
|
உரை
|
|
|
|
|
1473. | ஆச வாத்தியம் முன் பொருள் முதல் களாசம் ஆதி ஆம் பாட பேதங்கள் பேசிய பதினாறு ஒன்பதும் படக பேதம் ஒன்று ஒழிந்த நால் ஐந்தும் மாசு அறும் அளகம் ஆதி ஆம் பாட வகைகள் நால் ஏழும் மற்று அவற்றில் பூசல் வார்த்திகம் தொட்டு ஐவகை சச்சபுட ஆதி ஆம் தாள மாத்திரையும். | 13 |
|
|
உரை
|
|
|
|
|
1474. | கிளந்த மாத்திரையின் கதிகளும் சொல்லும் கீதமும் படமும் எழுத்தும் வளம் தரு மணிபந்தம் ஆதி கீதத்தின் வகுத்த கட்டளை எழு நான்கும் அளந்திடும் சரளை ஆதி கட்டளை ஏழ் ஐந்து நன்கு அமைந்த பா ஆதி விளம்பிய மூன்று கலப்பும் ஈறு ஆக விளைத்திடும் கூத்த மார்க்கம். | 14 |
|
|
உரை
|
|
|
|
|
1475. | உரைத்த இக் கூத்துக் கற்கும் போது தன் உடன் பிறப்பில் சால வருத்த நோய் எய்தி இந்த வருத்த நான் மறையும் தேறா அருத்தமாய் அறிவாய் வெள்ளி அம்பலத்து ஆடி நின்ற நிருத்தனார் தமக்கும் உண்டே என்பது நினைவில் கொண்டான். | 15 |
|
|
உரை
|
|
|
|
|
1476. | கரிய தாமரைக் கண்ணானும் கமல நான் முகனும் காண்டற்கு அரிய தாள் ஒன்றெ நோவ வாற்ற நாணி நிற்பது அந்தோ உரியதாம் இதனைக் கற்று வருத்தம் உற்று ஓர்ந்தும் ஈது தெரிய நான் இருப்பதே யோ அறன் எனச் சிந்தை நோவான். | 16 |
|
|
உரை
|
|
|
|
|
1477. | வடுப்படு பிறவிப் பௌவ வரம்பு காண்கின்ற நாள் வந்து அடுப்பவர் யாவரேனும் அவர்க்கு எலாம் போகம் வீடு கொடுப்பவர் செய்யும் இந்தக் கூத்தை எப்படி நான் சென்று தடுப்பது தகாது அன்று ஏனும் வருந்துமே சரணம் என்னா. | 17 |
|
|
உரை
|
|
|
|
|
1478. | இதற்கு இது துணிவு என்று உன்னி எழுந்து போய்ச் சிவன் இராவில் கதக் களிற்று ஒருத்தல் ஏந்தும் கதிர்மணிக் குடுமிக் கோயில் மதக்கரி உரியினாற்கு வரம்பு அறச் சிறந்த பூசை விதப்பட யாமம் நான்கும் விதிவழி இயற்றல் செய்யா. | 18 |
|
|
உரை
|
|
|
|
|
1479. | விண்டக மலர்த்தாள் ஏத்தி வெள்ளி அம் பலத்துள் அன்பர் தொண்டகம் மலர நின்ற சோதி மெய்ஞ் ஞானக் கூத்தைக் கண்டக மகிழ்ந்து தாழ்ந்து கண்புனல் சேரச் செம்கை முண்டக முடிமேல் ஏற்றி முகிழ்த்து நின்று இதனை வேண்டும். | 19 |
|
|
உரை
|
|
|
|
|
1480. | நின்ற தாள் எடுத்து வீசி எடுத்ததாள் நிலமீது ஊன்ற இன்று நான் காண மாறி ஆடி என் வருத்தம் எல்லாம் பொன்று மாசு எய்தி அன்றேல் பொன்றுவல் என்னா அன்பின் குன்று அனான் சுரிகை வாள் மேல் குப்புற வீழ்வேன் என்னா. | 20 |
|
|
உரை
|
|
|
|
|
1481. | நாட்டினான் குறித்துப் பாய நண்ணும் முன் இடத்தாள் ஊன்றி நீட்டினான் வலத்தாள் வீசி நிருமலன் மாறி ஆடிக் காட்டினான் கன்னி நாடன் கவலையும் பாசம் மூன்றும் வீட்டினான் பரமானந்த வேலையுள் வீட்டினானே. | 21 |
|
|
உரை
|
|
|
|
|
1482. | விளைகள் வாய் வீழ்ந்த வண்டின் மெய் அறி இன்பம் என்னும் அளவு இலா முந்நீர் வெள்ளத்து ஆழ்ந்தவன் எழுந்து பின்னும் உளமும் வாசகமும் மெய்யும் உடையவன் அதுவே ஆகப் பளகிலா அன்பு தானே படிவமாய்ப் பழிச்சல் உற்றான். | 22 |
|
|
உரை
|
|
|
|
|
1483. | பெரியாய் சரணம் சிறியாய் சரணம் கரி ஆகிய அம் கணனே சரணம் அரியாய் எளியாய் அடி மாறி நடம் புரிவாய் சரணம் புனிதா சரணம். | 23 |
|
|
உரை
|
|
|
|
|
1484. | நதி ஆடிய செம் சடையாய் நகை வெண் மதியாய் மதியாதவர் தம் மதியில் பதியாய் பதின் எண் கணமும் பரவும் துதியாய் சரணம் சுடரே சரணம். | 24 |
|
|
உரை
|
|
|
|
|
1485. | பழையாய் புதியாய் சரணம் பணிலக் குழையாய் சரணம் கொடுவெண் மழுவாள் உழையாய் சரணம் உருகாதவர் பால் விழையாய் சரணம் விகிர்தா சரணம். | 25 |
|
|
உரை
|
|
|
|
|
1486. | இருளாய் வெளியாய் சரணம் எனையும் பொருளாக நினைந்து புரந்தரன் மால் தெருளாத நடம் தெரிவித்து எனை ஆள் அருளாய் சரணம் அழகா சரணம். | 26 |
|
|
உரை
|
|
|
|
|
1487. | அயனத்தன் எனப்படும் ஆடு அரவச் சயனத்தவனைத் தரு தத்துவ நால் வயனத்து தவ வானவர் வானவ சேல் நயனத்தவள் நாயகனே சரணம். | 27 |
|
|
உரை
|
|
|
|
|
1488. | கத வெம் கரியின் உரியாய் சரணம் முதல் அந்தம் இலா முதலே சரண் என்று அதிர் பைங் கழல் நூபுர வண்டு அலரும் பத பங்கயன் முன்பு பணிந்து அரசன். | 28 |
|
|
உரை
|
|
|
|
|
1489. | என்று இப்படியே இந்தத் திருநடம் யாரும் காண நின்று அருள் செய்ய வேண்டும் நிருமலமான வெள்ளி மன்றவ அடியேன் வெண்டும் வரம் இது என்று தாழ்ந்தான் அன்று தொட்டு இன்று எம் கோன் அந் நட நிலையாய் நின்றான். | 29 |
|
|
உரை
|
|
|
|