1490. ஈறு இலான் செழியன் அன்புக்கு எளியவன் ஆகி                                                      மன்றுள்
மாறி ஆடிய கூத்து என்சொல் வரம்பினது ஆமே                                                      கங்கை
ஆறுசேர் சடையான் தான் ஓர் அரும் பழிக்கு அஞ்சித்                                                      தென்னன்
தேறலா மனத்தைத் தேற்றும் திருவிளை ஆடல்                                                      சொல்வாம்.
1
உரை
   
1491. இனைய நாள் சிறிது செல்ல இராச சேகரன் காதல்
தனையன் ஆம் குலோத்துங்கற்குத் தன் அரசு                                                    இருக்கை நல்கி
வினை எலாம் வென்று ஞான வெள்ளி அம்பலத்துள்                                                    ஆடும்
கனை கழல் நிழலில் பின்னிக் கலந்து பேரின்பம்                                                    உற்றான்.
2
உரை
   
1492. குரவன் செம்கோல் கைக் கொண்ட குலோத்துங்க                                               வழுதி செம்கண்
அரவு அங்கம் பூண்ட கூடல் ஆதி நாயகனை நித்தம்
பரவு அன்பின் வழிபாடு ஆனாப் பத்திமை நியமம்                                                    பூண்டான்
இரவு அஞ்சும் கதுப்பின் நல்லார் ஈர் ஐயா இரவர்                                                    உள்ளான்.
3
உரை
   
1493. அப்பதின் ஆயிரவர்க்கு ஒவ் வொருத்திக்கு அவ்                                                      ஆறாய்
ஒப்பரிய அறுபதினாயிரம் குமரர் உளர் அவருள்
செப்ப அரிய வல் ஆண்மைச் சிங்க இள ஏறு                                                      அனையான்
வைப்பு அனையான் முதல் பிறந்த மைந்தன் பேர்                                                 அனந்த குணன்.
4
உரை
   
1494. கலை பயின்று பரி நெடும் தேர் கரி பயின்று பல                                                    கைவாள்
சிலை பயின்று வருகுமரர் திறல் நோக்கி மகிழ்                                                    வேந்தன்
அலை பயின்ற கடலாடை நில மகளை அடல் அணி                                                    தோள்
மலை பயின்று குளிர் தூங்க மகிழ்வித்து வாழும் நாள்.
5
உரை
   
1495. செய் ஏந்து திருப்புத்தூர் நின்று ஒரு செழு மறை                                                    யோன்
பை ஏந்தும் அரவு அல்குல் மனைவி யொடும் பால்                                                    நல் வாய்
கை ஏந்தும் குழவி யொடும் கடம் புகுந்து மாதுலன்                                                    பால்
மை ஏந்தும் பொழில் மதுரை நகர் நோக்கி                                                    வருகின்றான்.
6
உரை
   
1496. வருவான் உண்ணு நீர் வேட்டு வருவாளை வழி நிற்கும்
பெரு வானம் தடவும் ஒரு பேர் ஆலின் நீழலின் கீழ்
ஒருவாத பசுங் குழவி உடன் இருத்தி நீர் தேடித்
தருவான் போய் மீண்டு மனை இருக்கும் இடம் தலைப்                                                    படுமுன்.
7
உரை
   
1497. இலைத்தலைய பழு மரத்தின் மிசை முன் நான் எய்த                                                          ஒரு
கொலைத் தலைய கூர் வாளி கோப்புண்டு கிடந்தது                                                          கால்
அலைத்து அலைய வீழ்ந்து உம்மை வினை உலப்ப                                                    ஆங்கிருந்த
வலைத் தலைய மான் நோக்கி வயிறு உருவத் தைத்தது                                                    என்றால்.
8
உரை
   
1498. அவ்வாறு அவ் அணங்கு அனையாள் உயிர் இழந்தாள்                                                    உவ் வேலைச்
செவ் வாளி ஏறிட்ட சிலை உடையான் ஒரு வேடன்
வெவ் வாளி ஏறு அனையான் வெயிற்கு ஒதுங்கும்                                                    நிழல் தேடி
அவ் ஆல நிழல் எய்தி அயல் நின்றன் இளைப் பாற.
9
உரை
   
1499. தண்ணீருக்குப் போய் ஆவி தலைப் பட்ட மறையவனும்
உண் நீர்க் கைக் கொண்டு மீண்டு ஒருங்கு இருந்த                                                    குழவி யோடும்
புண் நீர் வெள்ளத்துக்கா தாழ்ந்து உயிரைப் புறம்                                                    கொடுத்த
பண் நீர மழலை மொழிப் பார்ப்பனியைக் கண்                                                    உற்றான்.
10
உரை
   
1500. அயில் போலும் கணை ஏறுண்டு அவ்வழிப் புண் நீர்                                                          சோர
மயில் போல உயிர் போகிக் கிடக்கின்றாள் மருங்கு                                                 அணைந்து என்
உயிர் போல்வாய் உனக்கு இது என் உற்றது என                                                 மத்து எறி தண்
தயிர் போலக் கலங்கி அறிவு அழுந்து மனம் சாம்                                                        பினான்.
11
உரை
   
1501. இனையது ஒர் பெண் பழியை யார் ஏற்றார் எனத்                                                    தேர்வான்
அனையது ஒர் பழு மரத்தின் புறத்து ஒரு சால் அழல்                                                    காலும்
முனையது ஒர் கணையோடு முடக்கி அகைச் சிலை                                                    ஏந்தி
வினையது ஓர்ந்து எதிர் நின்ற விறல் வேடன் தனைக்                                                    கண்டான்.
12
உரை
   
1502. காப்பு அணி தானன் வாளொடு வீக்கிய கச்சாளன்
கூர்ப் பகழிக் கோல் ஏறிடு வில்லன் கொலை                                                      செய்வான்
ஏற்பன கைக் கொண்டு இவ் இடை நின்றான் இவனே                                                      என்
பார்ப் பனியைக் கொன்று இன் உயிர் உண்டு பழி                                                      பூண்டான்.
13
உரை
   
1503. என்ன மதித்தே ஏடா வேடா என் ஏழை
தன்னை வதைத்தாய் நீயே என்னா அழல் கால் கண்
மின்னல் எயிற்றுக் குற்று என வல் வாய் விட்டு                                                      ஆர்த்து
மன்னவன் ஆணைப் பாசம் எறிந்து வலித்து ஏகும்.
14
உரை
   
1504. மாண்டவளைத் தன் வெந் இடை இட்டான் மகவு                                                        ஒக்கல்
தாண்ட அணைத்தான் தாய் முலை வேட்டு அழும்                                                    தன் சேயைக்
காண் தொறும் விம்மாக் கண் புனல் சோரக் கடிது                                                        ஏகா
ஆண் தகை மாறன் கூடல் அணைந்தான் அளி                                                    அன்றான்.
15
உரை
   
1505. மட்டு அவிழ் தாரான் வாயின் மருங்கே வந்து எய்தா
உள் துகள் இல்லா வேடனை முன் விட்டு உயிர்                                                      அன்னாள்
சட்டக நேரே இட்டு எதிர் மாறன் தமர் கேட்பக்
கண்துளி சிந்தா முறை யிடு கின்றன் கை ஓச்சா.
16
உரை
   
1506. கோமுறை கோடாக் கொற்றவர் ஏறே முறையே யோ
தாமரையாள் வாழ் தண் கடி மார்பா முறையேயோ
மா மதி வானோன் வழிவரு மைந்தா முறையே யோ
தீமை செய்தாய் போல் செங்கை குறைத்தாய் முறையே                                                          யோ.
17
உரை
   
1507. பிறங்கும் கோலான் மாறடு கொற்றம் பெறு வேந்தன்
உறங்கும் போதும் தன் அருள் ஆணை உலகு எங்கும்
அறம் குன்றாவாக் காப்பதை என்ப அஃதி யாதி இம்
மறம் குன்றாதான் செய் கொலை காவா வழி என்றான்.
18
உரை
   
1508. வாயில் உளார் தம் மன்னவன் முன் போய் மன்னா நம்
கோயிலின் மாடு ஓர் வேதியன் மாதைக் கொலை                                                        செய்தான்
ஆயினன் என்று ஓர் வேடனை முன் விட்டு                                                    அவிந்தாளைத்
ஆயினன் வந்து இங்கு இட்டு அயர் கின்றான் தமியன்                                                        என்றார்.
19
உரை
   
1509. இறை மகன் அஞ்சா என் குடை நன்று ஆல் என்                                                        காவல்
அறம் மலி செம்கோல் அஞ்சு பயம் தீர்த்து அரசு                                                        ஆளும்
முறைமையும் நன்றன் மண் கலி மூழ்கா முயன்று ஏந்தும்
பொறைமையும் நன்றல் என்று புலந்து புறம் போந்தான்.
20
உரை
   
1510. வேதியன் நிற்கும் தன்மை தெரிந்தான் மெலிவு உற்றான்
சாதியின் மிக்காய் வந்தது உனக்கு என் தளர் கின்றாய்
ஓதுதி என்னக் காவலனைப் பார்த்து உரை சான்ற
நீதி உளாய் கேள் என்று உரை செய்வான் நிகழ்                                                        செய்தி.
21
உரை
   
1511. இன்று இவளைக் கொண்டு ஓர் வட நீழல் இடை                                                       விட்டுச்
சென்று தணீர் கொண்டு யான் வருமுன் இச் சிலை                                                       வேடன்
கொன்று அயல் நின்றான் என்று உலை ஊட்டும்                                              கொலை வேல்போல்
வன்திறல் மாறன் செவி நுழைவித்தான் மறையோன்                                                       ஆல்.
22
உரை
   
1512. அந்தணன் மாற்றம் தன்னையும் உட் கொண்டு அற                                                      நோக்கும்
சந்தன வெற்பன் மறவனை நோக்கத் தாழ்ந்து                                                      அன்னான்
எந்தை பிரானே நாய் அடியேன் நின்று எய்ப்பாற
வந்து புகுந்தேன் அந்த மரத்தின் மருங்கே ஓர் சார்.
23
உரை
   
1513. ஐயே நானும் கொன்றவன் அல்லேன் கொன்றாரைக்
கையேன் வேறும் கண்டிலன் என்றான் இவள் ஆகத்து
எய்யேறு உண்ட வாறு என் என்றார் எதிர் நின்றார்
மெய்யே ஐயா யான் அறியேன் இவ் விளைவு என்றான்.
24
உரை
   
1514. இக் கொலை செய்தான் யான் அலன் என்னா துள                                                        என்னத்
தக்கவ னேயோ தறுகண் மறவன் உரை மெய்யோ
சிக்க ஒறுத்தால் அல்லதை உண்மை செப்பான் என்று
ஒக்க உரைத்தார் மந்திரர் உள்ளார் பிறர் எல்லாம்.
25
உரை
   
1515. மன்னன் தானும் மற்று அது செய்மின் என மள்ளர்
பின்னம் தண்டம் செய்தனர் கேட்கப் பிழை இல்லான்
முன்னம் சொன்ன சொல் பெயரானாய் மொழியா நின்று
இன்னல் தீரத் தேருமின் என்றான் என்செய்வான்.
26
உரை
   
1516. ஆற்ற ஒறுக்கும் தண்டமும் அஞ்சான் அறைகின்ற
கூற்றமும் ஒன்றெ கொன்ற குறிப்பு முகம் தோற்றான்
மாற்றவரேயோ மாவோ புள்ளோ வழி வந்த
கோல் தொடியைக் கொன்று என் பெற வல்லான்                                               கொலை செய்வான்.
27
உரை
   
1517. கைதவன் ஆம் இக் கானவனேயோ பிறரேயோ
செய்தவர் யாரே இக் கொலை வேட்டம் செய்தோர் மா
எய்த இலக்கில் தப்பிய கோல் தான் ஏறு உண்டு இம்
மை தவழ் கண்ணான் மாய்ந்தன ளேயோ அறியேன்                                                           ஆல்.
28
உரை
   
1518. என்னா உன்னித் தென்னவன் இன்னம் இது முன்னூல்
தன்னால் ஆயத்தக்கது அதை என்றன் தகவிற்று தன்
அன்னார் அந்நூல் ஆய்ந்து இது நூலால் அமையாது                                                          ஆல்
மன்னா தெய்வத் தாலே தேறும் வழி என்றார்.
29
உரை
   
1519. வேந்தர்கள் சிங்கம் வேதியனைப் பார்த்து இது தீர
ஆய்ந்து உனது உள்ளக் கவலை ஒழிப் பேன்                                                  அஞ்சேன் இந்
ஏந்திழை ஈமக்கடன் நிறுவிப்போது என்றேஇத்
தேந்து உணர் வேங்கைத் தார் மறவோனைச் சிறை                                                  செய்தான்.
30
உரை
   
1520. மின் அனையாள் செய்கடன் முற்றா மீண்டோனைத்
தன்னமர் கோயில் கடை வயின் வைத்துத் தான் ஏகிக்
கொன்னவில் வேலான் தங்கள் குடிக்கு ஓர் குல                                                       தெய்வம்
என்ன இருந்தார் அடிகள் பணிந்தான் இது கூறும்.
31
உரை
   
1521. மன்று ஆடும் மணியே இம் மறவன் தான்                                                    பார்ப்பனியைக்
கொன்றானோ பிறர் பிறிதால் கொன்றதோ இது அறநூல்
ஒன்றலும் அளப்பரிது ஆக் கிடந்தது ஆல் உன்                                                        அருளால்
என் தாழ்வு கெடத் தேற்றாய் என்று இரந்தான் அவ்                                                         வேலை.
32
உரை
   
1522. திரு நகரின் புறம்பு ஒரு சார் குலவணிகத் தெருவின்                                                          கண்
ஒரு மனையின் மணம் உளது அங்கு அந்தணனோடு                                                      ஒருங்கு நீ
வருதி உனது உளம் தேறா மாற்றம் எலாம் தேற்றுதும்                                                       என்று
இரு விசும்பின் அகடு கிழித்து எழுந்தது ஆல்                                                       ஒருவாக்கு.
33
உரை
   
1523. திரு வாக்குச் செவி மடுத்துச் செழியன் தன் புறம்                                                    கடையில்
பெருவாக்கு மறையவனோடு ஒருங்கு எய்தி பெரும்                                                    பகல் போய்க்
கருவாக்கும் மருள் மாலைக் கங்குல் வாய்த் தன்னை                                                    வேற்று
உருவாக்கிக் கடிமனைபோய் ஒரு சிறை புக்கு இனிது                                                    இருந்தான்.
34
உரை
   
1524. அன்று இறைவன் அருளால் அங்கவர் கேட்க அம்                                                    மனையின்
மன்றல் மகன் தனக்கு அளந்த நாள் உலப்ப மறலி                                                    இருள்
குன்றம் இரண்டு என விடுத்த கொடும் பாசக் கையினர்                                                    வாய்
மென்று வரும் சினத்தவரில் ஒருவன் இது வினவும்                                                    ஆல்.
35
உரை
   
1525. இன்றே இங்கு இவன் உயிரைத் தருதிர் எனும் இரும்                                                     பகட்டுக்
குன்று ஏறும் கோன் உரையால் கொள்வது எவன்                                                   பிணி உடம்பின்
ஒன்றேன் உமிலன் ஒரு காரணம் இன்றி உயிர்                                                    கொள்வது
அன்றே என் செய்தும் என மற்றவன் ஈது                                                    அறைகிற்பான்.
36
உரை
   
1526. ஆற்று ஆல் ஏறு உண்ட கணை அருகு ஒதுங்கும்                                                    பார்ப்பனியைக்
காற்றுஆல் வீழ்த்து எவ்வாறு கவர்ந்தோம் அப்படி                                                    இந்தச்
சாற்று ஆரவாரத்தில் தாம்பு அறுத்துப் புறம் நின்ற
ஈற்று ஆவை வெருள விடுத்து இவன் ஆவி கவர்க                                                    என்றான்.
37
உரை
   
1527. அந்த மொழி கேட்டு அரசன் அரு மறையோய்                                                  கேட்டனையோ
இந்த மொழி எனப் பனவன் இவன் இவ்வாறு சிறந்தால்                                                           என்
பைந்தொடியாள் இறந்ததும் அப்படியே என்                                                 மனக்கவலை
சிந்த இது காண்பேன் என்று ஒருங்கு இருந்தான்                                                 தென்னனோடும்.
38
உரை
   
1528. ஒட்டிய பல் கிளை துவன்றி ஒல் ஒலிமங்கலம்                                                    தொடங்கக்
கொட்டிய பல்லியம் முழங்கக் குழுமிய ஓசையின்                                                    வெருண்டு
கட்டிய தாம்பிறப் புனிற்றுக் கற்றா ஒன்று அதிர்ந்து                                                    ஓடி
முட்டிய தால் மண மகனை முடிந்தது ஆல் அவன்                                                    ஆவி.
39
உரை
   
1529. மண மகனே பிண மகனாய் மணப் பறையே                                               பிணப்பறையாய்
அணி இழையார் வாழ்த்து ஒலிபோய் அழுகை                                                ஒலியாய்க் கழியக்
கணம் அதனில் பிறந்து இறும் இக் காயத்தின் வரும்                                                    பயனை
உணர்வு உடையார் பெறுவர் உணர் ஒன்றும் இலார்க்கு                                                   ஒன்றும் இலை.
40
உரை
   
1530. கண்டான் அந்தணன் என்ன காரியம் செய்தேன்                                                  எனத்தன்
வண்டு ஆர் பூம் குழல் மனைவி மாட்சியினுங் கழி                                                  துன்பம்
கொண்டான் மற்று அவனொடும் தன் கோயில் புகுந்து                                                  அலர் வேப்பந்
தண் தாரான் அமைச்சர்க்கும் பிறர்க்கும் இது                                                  சாற்றினான்.
41
உரை
   
1531. மறையவனை இன்னும் ஒரு மண முடித்துக் கோடி என
நிறைய வரும் பொருள் ஈந்து நீ போதி என விடுத்துச்
சிறை அழுவத்து இடைக்கிடந்த செடித் தலையஇடிக்                                                      குரல
கறை உடல் வேடனைத் தொடுத்த கால் யாப்புக்                                                      கழல்வித்து.
42
உரை
   
1532. தெளியாதே யாம் இழைத்த தீத்தண்டம் பொறுத்தி என
விளி ஆவின் அருள் சுரந்து வேண்டுவன நனி நல்கி
அளி ஆனாம் மனத்து அரசன் அவனை அவன் இடைச்                                                      செலுத்திக்
கனி யானை விழ எய்த கௌரியனைப் போய்ப்                                                      பணிவான்.
43
உரை
   
1533. ஆதரம் பெருகப் பாவியேன் பொருட்டு எம் மடி கணீர்                                                அரும் பழி அஞ்சு
நாதராய் இருந்தீர் எந்தையர்க் குண்டோ நான் செயத்                                            தக்கது ஒன்று என்னாக்
காதலில் புகழ்ந்து பன் முறை பழிச்சிச் கரையின் மா                                            பூசனை சிறப் பித்து
ஏதம் அது அகற்றி உலகினுக்கு குயிராய் இருந்தனன்                                            இறை குலோத்துங்கன்.
44
உரை
   
1534. வேத நாயகன் வெம் பழி அஞ்சிய
நாதன் ஆன நலன் இது நல்கிய
தாதையைக் கொலை செய்த தனயன் மா
பாதகம் தனைத் தீர்த்தமை பாடுவாம்.
1
உரை
   
1535. விரை செய் மாலைக் குலோத்துங்க மீனவன்
திரை செய் நீர் நிலம் செம் கோல் செலத் தனி
அரசு செய்யும் அந் நாளில் அவந்தி என்று
உரை செய் மா நகர் ஆன் ஒரு பூசுரன்.
2
உரை
   
1536. வெருவும் காய் சின மாறிய வேதியன்
மருவும் காதல் மனை எனும் பேரினாள்
திருவும் காமன் நல் தேவியும் மண் புனை
உருவும் காமுறு ஒப்புஇல் வனப்பினாள்.
3
உரை
   
1537. படி இல் ஓவியப் பாவை ஒப்பு ஆகிய
வடிவில் ஆள் அவள் பான் மகன் என்று ஒரு
கொடிய பாவி பிறந்து கொலை முதல்
கடிய பாவக் கலன் போல் வளரும் நாள்.
4
உரை
   
1538. கோடி கோடி அடும் சிலை கோட்டியே
கோடி கோடி கொடும் கணை பூட்டியே
கோடி கோடி விகாரமும் கூட்டியே
கோடி கோடி அனங்கர் எய்தார் கொலோ.
5
உரை
   
1539. இளமைச் செவ்விய யாக்கையன் மையல்கூர்
வளமைக் காமமும் வல் வினையும் நிறைத்
தளைவிட்டு ஈர்த்தலில் தன்னை வயிற்று இடை
விளைவித்து ஈன்றவள் தன்னை விரும்பினான்.
6
உரை
   
1540. அன்னை எனும் அழிதகை யாள் அகத்து
இன் உயிர்த் துணையும் மனக் காவலாய்
மன்னும் நாணம் மடம் முதல் நால்வரும்
தன்னை நீங்கலில் ஊனும் ஒத்தாள் அரோ.
7
உரை
   
1541. இன்பமோ சிறிது ஆகும் இதில் வரும்
துன்பமோ கரை இல்லாத் தொடு கடல்
என்பது ஆரும் இவனால் அறிய இவ்
வன்பது ஆன வினையால் வருந்துவான்.
8
உரை
   
1542. மையன் ஆக மதியை விழுங்க அக்
கையன் ஆயைக் கலந்து ஒழுகும் செயல்
ஐயன் தான் குறிப்பால் கண்டு அயல் செவிக்கு
உய்யலா வண்ணம் உள்ளத்து அடக்கினான்.
9
உரை
   
1543. வேற்று ஓர் வைகல் வெளிப்படக் கண்டு அறம்
சாற்று நாவினன் வேறு ஒன்றும் சாற்றிலன்
சீற்றம் மேல் கொடு செல்வன் கொல்வேன் என
ஏற்று எழுந்தனன் ஈன்றாள் விலக்குவாள்.
10
உரை
   
1544. தாயிலின் இன்பம் நுகர்ந்தனை தந்தையைக்
காயில் என் பெறுவாய் எனக் காமுகர்க்கு
ஆயில் அன்னையில் அப் பனி என் பயன்
ஏயிலின் அருள் என் அறம் என் என்றான்.
11
உரை
   
1545. மண் தொடும் கருவிப்படை வன் கையில்
கொண்டு தாதை குரவன் என்று ஓர் கிலான்
துண்டம் ஆகத் துணித்தான் ஆய் வாய்முகம்
துண்ட காம நறவால் உணர்வு இலான்.
12
உரை
   
1546. மைக் கரும் கங்குல் வாய்க் கொன்ற தாதைக்குத்
தக்க தீத் தவிசு இட்டு அன்னை தன்னொடும்
கைக்கு அடங்கு பொருளொடும் கல் நெறி
புக்கனன் புடைசூழ்ந்தார் புளி நரே.
13
உரை
   
1547. எய்யும் கோலொடு வில்லர் இடிக்கு நேர்
செய்யும் சொல்லினர் செல்லலை நில் எனக்
கையில் உள்ளவும் கைக் கொண்டு காரிகைத்
தையல் தன்னையும் தாம் கொடு போயினார்.
14
உரை
   
1548. சென்று சேண் இடைச் சிக்கு அற வாழலாம்
என்ற எண்ணம் ஒன்று எய்திய வண்ணம் ஒன்று
ஒன்று நாம் என்னத் தெய்வம் ஒன்று எண்ணியது
என்ற வார்த்தை இவன் இடைப் பட்டது ஆல்.
15
உரை
   
1549. தாதை தன் தனயற்கு இனி யார் துணை
மாதர்யாயை மறவர் கைக் கொள்ள இப்
போது தான் துணை என்பவன் போன்றுமா
பாத கத்து உருவாய் வந்து பற்றினான்.
16
உரை
   
1550. ஆவ என்னும் அழும் சிவ தா எனும்
பாவம் பாவம் பழி இதுவோ வைய
கோ எனும் கை குலைத்து எறியும் நிழல்
பாவை போல விடாது பின் பற்றும் ஆல்.
17
உரை
   
1551. நல்ல தீர்த்தம் சிவ தலம் நலோர் பக்கமும்
செல்ல ஒட்டாது அரன் சீர்த்தி நாமம் செவிப்
புல்ல ஒட்டாது உளம் புகுத ஒட்டாது நாச்
சொல்ல ஒட்டாது கண்துயில ஒட்டாது அரோ.
18
உரை
   
1552. சுற்று முன் பின் புறச் சூழ்ந்து தன் கொடுக்கினில்
பற்றிநின்று ஈர்க்கு மா பாதகத்தால் அலைந்து
எற்றினில் செய்வது என் ஆற்றலால் இடர் உழந்து
உற்றவே உலகு எலம் அச்சம் உற்று உழலும் ஆல்.
19
உரை
   
1553. உறுகணோ ஆற்ற நாள் உற்று உழன்று உலகு எலாம்
மறுகவே திரியும் மா பாதகன் வலி எலாம்
சிறுகுவான் சிவன் அருள் செயலினில் பாதகம்
குறுகு நாள் குறுகு நாள் கூடலைக் குறுகினான்.
20
உரை