1554. அழிதகன் குறுகு வான் முன் அங் கயல் கண்ணி தந்தக்
குழை இரு காதும் கோத்துக் கொலை கெழு புலி பல்                                                         தாலி
நுழை மயிர் நெடு நாள் பின்னல் நோன் பிடர்                                            அலைப்பப் பூண்டோர்
பழி தகையாத வேடப் பாவை யாய்ப் படிவம் கொள்ள.
21
உரை
   
1555. கொலை இரும் பழிக்கு அன்று அஞ்சும் கூடல் எம்                                              பெருமான் கொன்றை
மிலை இரும் குஞ்சி வேங்கை மெல் இணர்க் கண்ணி                                                    வேய்ந்து
கலை இரு மருப்பில் கோடிக் காது அளவோடும் தாடி
சிலை இரும் தடக்கை வேடம் திரு உருக் கொண்டு                                                    தோன்றி.
22
உரை
   
1556. கொண்டல் கண் படுக்கும் மாடக் கோபுர மருங்கில்                                                    போந்து இன்
கண்டகக் கருக்கு வாய குரைக்கும் நாய் கதுவிக்                                                    காப்பப்
புண் தளை வாளி வில்லோர் புறம் கிடந்து இமைப்ப                                                    திங்கள்
உண்ட வாள் நுதலாளோடும் சூது போர் ஆடல்                                                    செய்வான்.
23
உரை
   
1557. வெரு வரு வேழம் உண்ட வெள்ளில் போல் வறியன்                                                        ஆகிப்
பருவரல் உடன் ஆங்கு எய்தும் பாதகன் வரவு நோக்கி
ஒருவரு உள்ளத்தாலும் உன்னரும் கொடிய பாவி
வருவது காண்டி என்னா மாதரை நோக்கிக் கூறும்.
24
உரை
   
1558. அணங்கு நோய் எவர்க்கும் செய்யும் அனங்கனால்                                            அலைப்பு உண்டு ஆவி
உணங்கினார் உள்ளம் செல்லும் இடன் அறிந்து ஓடிச்                                                         செல்லா
குணம் குலம் ஒழுக்கம் குன்றல் கொலை பழி பாவம்                                                         பாரா
இணங்கு இன் உயிர்க்கும் ஆங்கே இறுதி வந்து                                                உறுவது எண்ணா.
25
உரை
   
1559. கள் உண்டல் காமம் என்ப கருத்து அறை போக்குச்                                                      செய்வ
எள் உண்ட காமம் போல எண்ணினில் காணில்                                                      கேட்கில்
தள் உண்ட விடத்தின் நஞ்சம் தலைக் கொண்டால்                                                    என்ன ஆங்கே
உள் உண்ட உணர்வு போக்கா உண்டபோது அழிக்கும்                                                    கள் ஊண்.
26
உரை
   
1560. காமமே கொலை கட்கு எல்லாம் காரணம் கண் ஓடாத
காமமே களவுக்கு எல்லாம் காரணம் கூற்றம் அஞ்சும்
காமமே கள் உண்டற்கும் காரணம் ஆதலாலே
காமமே நரக பூமி காணியாக் கொடுப்பது என்றான்.
27
உரை
   
1561. கொலைப்பழி கோட் பட்டு ஆங்கே குறுகியான் முகம்                                                       கண்டு ஏட
அலைப்படர் உழந்து சாம்பி அழிவது என் பார்ப்பான்                                                        என்னக்
கலைப்படு திங்கள் வேணிக் கானவன் அருள் கண்                                                        நோக்கம்
தலைப்படச் சிறிது பாவம் தணிந்து தன் அறிவு தோன்ற.
28
உரை
   
1562. முற் பகல் இழைத்த பாவ முதிர்ச்சியால் பிறந்து தந்தை
தன் பகன் ஆன ஆறும் தாதையை வதைத்த ஆறும்
பிற் பகல் அந்தப் பாவம் பிடித்து அலைத்து எங்கும்                                                          தீராது
இப்பதி புகுந்த வாறு எடுத்து உரைத்து இரங்கி                                                        நின்றான்.
29
உரை
   
1563. மறப் பெரும் படிவம் கொண்டு மனத்து அருள் சுரந்து                                                        நின்ற
அறப் பெரும் கருணை மூர்த்தி அழி தகை அவனைப்                                                     பார்த்து இத்
திறப் பழி ஆங்குச் சென்று ஈங்கு அன்றித் தீராது                                                        என்றக்
கறை பழி தீரும் வண்ணம் கருதி ஓர் உறுதி கூறும்.
30
உரை
   
1564. வருதி நின் நாமம் சொன்னோர் வருக்கமும் நரகில்                                                          வீழக்
கருதி நீ செய்த பாவம் கழிப்பவர் எவர் யா நோக்கம்
தருதலால் எளிதில் தீரச் சாற்றுதும் அய்யம் கை ஏற்று
ஒருபொழுது உண்டி ஈசன் உறுதவர் ஏவல் செய்தி.
31
உரை
   
1565. செம்கதிர்க் கடவுள் வானம் தீண்டு முன் எழுந்து தீம்                                                           தண்
பைங் கதிர் அறுகு கொய்து பசுக்களை அருத்தி                                                        ஆர்வம்
பொங்கமுப் போதும் கோயில் புறத் தொட்டித் தீர்த்தம்                                                        ஆடிச்
சங்கரன் தனை நூற்று எட்டு மெய்வலம் சாரச் செய்தி.
32
உரை
   
1566. இத்தவ நெறியில் நின்றால் இப்பழியும் கழியும் என்னாச்
சித்த அன்பு உடைய வேடத் திரு உருக் கொண்ட                                                    கொன்றைக்
கொத்தவன் உரைத்தான் கேட்டு கொடிச்சியாய் இருந்த                                                    அம்மை
மத்தவன் கரித்தோல் போர்த்த மறவனை                                                  வினவுகின்றாள்.
33
உரை
   
1567. ஐய இக் கொடியோன் செய்த பாவத்துக்கு அளவு இல்                                                         காலம்
வெய்ய நால் ஏழு கோடி நரகு இடை வீழ்ந்தாள் ஏனும்
உய்வகை இலாத பாவி இவனுக்கு என் உய்யும் தேற்றம்
செய்வகை என்று கேட்பச் செம்கண் மால் விடை                                                 யோன் செப்பும்.
34
உரை
   
1568. அடுபழி அஞ்சா நீசர் ஆயினும் நினைக்கின் அச்சம்
படு பழி அஞ்சான் செய்த பாதகத் தொடக்கு உண்டு                                                         எங்கும்
விடு வகை இன்றி வேறு களை கணும் இன்றி வீயக்
கடவனைக் காப்பது அன்றோ காப்பு என்றன்                                                 கருணைமூர்த்தி.
35
உரை
   
1569. நெய்தல் போது அனைய உண் கண் நேரிழை நீயாது                                                    ஒன்றும்
செய்தற்கும் செய்யாமைக்கும் வேறு ஒன்று செயற்கும்                                                    ஆற்றல்
மெய் தக்க கருணை வள்ளல் வேண்டின் எவ்                                                 வினைஞர் ஏனும்
உய்தக்கோர் ஆதல் செய்கை உன் அருள் விளையாட்டு                                                    அன்றோ.
36
உரை
   
1570. என்று அக மகிழ்ச்சி பொங்க இயம்பினாள் இயம்ப                                                       லோடும்
குன்றக நாட்ட வேடக் குழகனும் மறைந்து வெள்ளி
மன்று அகம் நிறைந்தான் மேகம் மறைந்திட மறைந்து                                                       செல்லும்
மின் தக விடாது பின் போம் விளங்கு இழை மடந்தை                                                       யோடும்.
37
உரை
   
1571. ஆததாய் இயும் கண்டு ஆனா அற்புதம் அடைந்து                                                         கூடல்
நாதனார் நவின்ற ஆற்றான் நல்நெறி விரதச் செய்கை
மாதவ ஒழுக்கம் தாங்கி வரு முறை மதிய மூன்றில்
பாதகம் கழிந்து தெய்வப் பார்ப்பன வடிவம் ஆனான்.
38
உரை
   
1572. சொல்பதம் கடந்த எந்தை சுந்தர நாதன் தாளில்
பல பல வடசொல் மாலை பத்தியில் தொடுத்துச்                                                    சாத்திச்
தற்பர அறிவு ஆனந்தத் தனி உரு உடைய சோதி
பொன் பத மருங்கில் புக்கான் புண்ணிய மறையோன்                                                    அம்மா.
39
உரை
   
1573. அன்னையைப் புணர்ந்து தாதை குரவன் ஆம்                                                    அந்தணாளன்
தன்னையும் கொன்ற பாவம் தணித்து வீடு அளித்தது                                                    என்றால்
பின்னை நீர் இழி நோய் குட்டம் பெரு வயிறு ஈளை                                                    வெப்பு என்று
இன்ன நோய் தீர்க்கும் தீர்த்தம் என்பதோ இதற்கு                                                    மேன்மை.
40
உரை
   
1574. அழிந்த வேதியன் மா பாதகம் தீர்த்தது அறிந்து                                    வேந்து அமைச்சர் ஊர் உள்ளார்
ஒழிந்த பார் உள்ளார் வான் உளார் வியப்பம் உற்று                                        நல் உரை உணர்வு எல்லாம்
கழிந்த பேர் அருளிக் கயவன் மேல் வைத்த காரணம்                                              யாது எனக் கண்ணீர்
வழிந்து நான் மாடக் கூடல் நாயகனை வழுத்தினார்                                          மகிழ்ச்சியுள் திளைத்தார்.
41
உரை