1575. வேதகம் தரத்து முக்கண் வேதியன் மறையோன் செய்த
பாதகம் தவிர்த்தவாறு பகர்ந்தனம் விஞ்சை ஈந்த
போதகன் மனைக்குத் தீங்கு புந்தி முன்னாகச் செய்த
சாதகன் தனைப் போர் ஆற்றித் தண்டித்த தண்டம்                                                      சொல்வாம்.
1
உரை
   
1576. கூர்த்த வெண் கோட்டி யாவைக் குலோத்துங்க வழுதி                                                        ஞாலம்
காத்து அரசு அளிக்கும் நாளில் கடிமதில் உடுத்த                                                        கூடல்
மாத் தனி நகருள் வந்து மறு புலத்தவனாய் யாக்கை
மூத்தவன் ஒருவன் வைகி முனைய வாள் பயிற்றி                                                      வாழ்வான்.
2
உரை
   
1577. வாள் வினைக் குரவன் அன்னான் வல் அமண் விடுத்த                                                        வேழம்
தோள் வினை வலியால் அட்ட சுந்தரவிடங்கன்                                                        தன்னை
ஆள் வினை அன்பும் தானும் வைகலும் அடைந்து                                                        தாழ்ந்து
மூள் வினை வலியை வெல்லும் மூது அறிவு உடையன்                                                        அம்மா.
3
உரை
   
1578. கை வினை மறவாள் விஞ்சைக் காவலன் அவனைத்                                                    தாழ்ந்து
தெவ் வினை வெல்வான் கற்கும் சிங்க ஏறு அனையார்                                                    தம் முன்
உய்வினை உணராப் பாவி சித்தன் என்று ஒருவன்                                                    உள்ளான்
அவ்வினை நிரம்பக் கற்றன் ஆகல் ஊழ் வலியால்                                                    அன்னான்.
4
உரை
   
1579. மானவாள் விஞ்சை யாலே தனை நன்கு மதிக்கத் தக்க
ஆனது ஓர் செருக்கின் ஆற்றல் தன் ஆசிரியற்கு                                                        மாறாய்த்
தானும் ஒர் விஞ்சைக் கூடம் சைமத்து வாள் பலரும்                                                          கற்க
ஊன் உலாம் படை வல்லானில் ஊதியம் மிதப்பக்                                                    கொள்வான்.
5
உரை
   
1580. ஒருத்தனே இருவர் வாளின் விருத்தியும் ஒருங்கு                                                    கொள்ளும்
கருத்தனாய் விருத்தன் ஊரில் கழிவது கருதி அன்னான்
வருத்து வாள் இளையர் தன் பால் வர மனம் திரித்து                                                    நாளும்
விருத்தமே செய்வான் தாயை விரும்பினோன்                                           கிளையோன் அன்னான்.
6
உரை
   
1581. தொடத் தொடத் பொறுக்கும் திண்மைத்து ஒன்னில                                               மனையான் இல்லா
இடத்தவன் தேவிபால் போய் இடன் உண்டே இடன்                                               உண்டே என்று
அடுத்து அடுத்து அஞ்சாது என்றும் கேட்டுக் கேட்டு                                               அகல்வான் ஆக
நடைத் தொழில் பாவை அன்ன நங்கை வாளாது                                                    இருந்தான்.
7
உரை
   
1582. பின் ஒரு பகல் போய்ச் செம்கை பிதித்தனன் வலிப்பத்                                                    தள்ளி
வல்நிலைக் கதவு நூக்கித் தாழக்கோல் வலித்து மாண்ட
தன் நிலைக் காப்புச் செய்தாள் தனி மனக் காவல்                                                    பூண்டாள்
அந்நிலை பிழைத்த தீயோன் அநங்கத் தீ வெதுப்பப்                                                    போனான்.
8
உரை
   
1583. அறம் கடை நின்றாள் உள்ளம் ஆற்றவும் கடையன்                                                      ஆகிப்
புறம் கடை நின்றான் செய்த புலமை தன் பதிக்கும்                                                      தேற்றாள்
மறம் தவிர் கற்பினாள் தன் மனம் பொதிந்து உயிர்கள்                                                      தோறும்
நிறைந்த நான் மாடக் கூடல் நிமலனை நினைந்து                                                      நொந்தாள்.
9
உரை
   
1584. தாதக நிறைந்த கொன்றைச் சடையவன் புறம்பு செய்த
பாதகம் அறுக்கும் கூடல் பகவன் எவ்வுயிர்க்கும்                                                    தானே
போதகன் ஆகித் தேற்றும் புண்ணியன் புலைஞன்                                                    செய்த
தீது அகம் உணர்ந்து தண்டம் செய்வதற்கு உள்ளம்                                                    கொண்டான்.
10
உரை
   
1585. கோள் உடைக் குரவனே போல் சித்தனைக் குறுகிச்                                                       சித்தா
காளையாய் நீயும் சாலக் கழிய மூப்பு அடைந்த யாமும்
வாள் அமர்ஆடி நம் தம் வலிகளும் அளந்து காண்டும்
நாளைவா வருதும் நாமும் நகர் புறத்து ஒரு சார்                                                       என்றான்.
11
உரை
   
1586. நாதன் ஆம் குரவன் கூற நன்று என உவந்து நாலாம்
பாதகன் அதற்கு நேர்ந்தான் படைக்கலக் குரவன்                                                       மீண்டும்
போதரும் அளவில் வையம் புதை இருள் வெள்ளத்து                                                       ஆழ
ஆதவன் வைய முந்நீர் வெள்ளத்து ஆழ்ந்தது அம்ம.
12
உரை
   
1587. ஆசி நல் குரவற்கு இன்னா ஆற்றினோன் பாவம் போல
மாசு இருள் திணிந்த கங்குல் வலிகெட வடிவாள்                                                    விஞ்சைத்
தேசிகன் ஒருவன் அன்னான் திணி உடல் சிதைப்பத்                                                    தீட்டும்
காய் சின வாள் போல் கீழைக் கல் இடை முளைத்தான்                                                    வெய்யோன்.
13
உரை
   
1588. நன்றியைக் கொன்று தின்றோன் நாயகன் ஆணைக்கு                                                        அஞ்சம்
வன் திறல் அரி மான் ஊர்தித் தெய்வதம் வழிபட்டு                                                         ஏத்தி
வென்றி வாள் பரவிக் கச்சு வீக்கி வாள் பலகை                                                         ஏந்திச்
சென்று வாள் உழவன் சொன்ன செருக்களம்                                                    குருகினானே.
14
உரை
   
1589. மதுகை வாள் அமர்க்கு நென்னல் வந்து அறை கூவிப்                                                        போன
முதுகடும் புலி ஏறு அன்ன முடங்கு உடல் குரவன்                                                        தானும்
அதிர் கழல் வீக்கிக் கச்சும் அசைத்து வெண் நீறும்                                                        சாத்திக்
கதிர் கொள்வாள் பலகைதாங்கிக் கயவனுக்கு எதிரே                                                        வந்தான்.
15
உரை
   
1590. மடங்கல் ஏறு ஒன்றும் பைம் கண் அரி ஒன்று                                               மலைந்தால் என்ன
முடங்கல் வான் திங்கள் ஒன்று முக்கணும் நான்கு                                                    தோளும்
விடம் கலும் மிடறும் தோறா வென்றி வாள் விஞ்சை                                                    வேந்தும்
அடங்கல் தானும் நேரிட்டு அமர் ஆடல் செய்வார்.
16
உரை
   
1591. எதிர்ப்பர் பின் பறிவர் நேர் போய் எழுந்து வான் ஏறு                                                        போல
அதிர்ப்பர் கேடகத்துள் தாழ் உற்று அடங்குவர்                                              முளைப்பவர் வாளை
விதிர்ப்பர் சாரிகை போய் வீசி வெட்டுவர் விலக்கி                                                        மீள்வர்
கொதிப்பர் போய் நகைப்பர் ஆண்மை கூறுவர் மாறி                                                        நேர்வர்.
17
உரை
   
1592. வெந் இடுவார் போல் போவர் வட்டித்து விளித்து                                                    மீள்வர்
கொன் இடு வாண் மார் பேற்பர் குறி வழி பிழைத்து                                                    நிற்பர்
இந்நிலை நாலைங் கன்னல் எல்லை நின்று ஆடல்                                                    செய்தார்
அந்நிலை அடு போர் காண்பார் அனைவரும் கேட்க                                                    ஐயன்.
18
உரை
   
1593. குரத்தியை நினைத்த நெஞ்சைக் குறித்து உரை நாவைத்                                                        தொட்ட
சரத்தினைப் பார்த்த கண்ணைக் காத்தனை கோடி                                                     என்று என்று
உரைத்து உரை தவற்றுக்கு எல்லாம் உறும் முறை                                                   தண்டம் செய்து
சிரத்தினைத் தடிந்து வீட்டித் திரு உரு மறைந்து                                                    நின்றான்.
19
உரை
   
1594. போர் கெழு களம் கண்டாருள் பொரு படைக்                                               கேள்விச் செல்வர்
வார் கெழு கழல் காலானைக் கண்டிலர் மனையில்                                                        தேடி
ஏர் கெழு கற்பினாளை எங்கு உற்றான் குரவன்                                                        என்னக்
கூர் கெழு வடிவேல் கண்ணாள் போயினார் கோயிற்கு                                                        என்றாள்.
20
உரை
   
1595. என்ற அப்போதே கோயிற்கு ஏகினான் மீண்டான்                                                        தேடிச்
சென்றவர் சித்தன் தன்னைக் செருக் களத்து அடுபோர்                                                        செய்து
வென்றனையே பின் அந்த வெம் களத்து எங்கும் தேடி
நின்றனைக் காணாது இங்கு நேர்ந்தனம் யாங்கள்                                                        என்றார்.
21
உரை
   
1596. விரை செய் தார் அவன் யான் அங்கம் வெட்டினேன்                                               அல்லேன் நீங்கள்
உரை செய்வது எவன் யார் என்போல் சித்தனை                                               உடன்று மாய்த்து
வரை செய் தோள் விந்தைக்கு ஈந்தார் மற்று இது                                               சுற்றம் வைகைத்
திரை செய் நீர்க் கூடல் எந்தை திரு உளச் செயல்                                               கொல் என்றான்.
22
உரை
   
1597. மட்டித்த கலவைக் கொங்கை மனைவியும் சித்தன்                                                    தன்னைக்
கிட்டிப் பல் காலும் வந்து கேட்டது நெருநல் வாய்                                                    வந்து
தொட்டுத் தன் கையைப் பற்றி ஈர்த்ததும் உள்ளம்                                                    வெந்து
தட்டிப் போய் கதவம் தாழ் இட்டு இருந்ததும்                                                    சாற்றினாளே.
23
உரை
   
1598. அம்மனை அருளிச் சொன்னபடி எலாம் அருளிச்                                                      செய்து
தெம் முனை அடுவாள் வீரர் சித்தனை மாய்த்தார் ஈது
மெய்மை ஆம் என்று கண்ட மைந்தரும் விளம்பக்                                                      கேட்டான்
எம்மை ஆளுடை கூடல் இறை விளையாடல் என்றான்.
24
உரை
   
1599. கொடியை நேரிடையாள் ஓடும் கொற்ற வாள் இளைஞ                                                       ரோடும்
கடிய நான் மாடக் கூடல் கண்ணுதல் அடிக்கீழ்த்                                                       தாழ்ந்து
நெடியன் நான் முகனும் தேறா நெறியது சிறிய ஏழை
அடியனேன் அளவிற்றே நின் அருள் விளையாடல்                                                    என்றான்.
25
உரை
   
1600. தண்மதி வழி வந்தோனும் நகர் உளார் தாமும் பாதி
விண் மதி மிலைந்த வேணி விடையவன் ஆடல்                                                       நோக்கிக்
கண்மலர் வெள்ளத்து ஆழ்ந்து கனை கழல் அடியில்                                                       தாழ்ந்து
பண் மலர் கீதம் பாடி ஆடினார் பழிச்சி நின்றார்.
26
உரை
   
1601. அடியவருக்கு எளியர் இவர் பரதேசி காவலர் என்று                                               அடி வீழ்ந்து ஏத்தி
வடி அயில் வேல் குலோத்துங்கன் மாணிக்க மாலை                                          எனும் மனையா ளோடும்
தொடி அணி தோள் முது மகனைக் களிறு ஏற்றி நகரை                                           வலம் சூழ்வித்து இப்பால்
முடி அணிவித்து அனந்த குண பாண்டியற்குத் தன்                                         இறைமை முழுதும் ஈந்தான்.
27
உரை
   
1602. நிலை நிலையாப் பொருள் உணர்ந்து பற்று இகந்து                                     கரணம் ஒரு நெறியே செல்லப்
புலன் நெறி நீத்து அருள் வழி போய்ப் போதம் ஆம்                                     தன் வலியைப் பொத்தி நின்ற
மலவலி விட்டு அகல அரா உமிழ்ந்த மதி போல்                                             விளங்கி மாறி ஆடும்
தலைவன் அடி நிழல் பிரியாப் பேரின்பக் கதி                                     அடைந்தான் தமிழ்ர் கோமான்.
28
உரை