1603. செம் கண் மால் விடை மேல் விடங்கர் செருக்களத்து                                               இடை வாள் எடுத்து
அங்கம் வெட்டிய சேவகத்தை அறைந்தனம் தமிழ்                                                     மாறன் மேல்
சங்கை இட் அமனிசரார் ஆற்றிய தறு கண் வேள்வி                                                     முளைத்து ஓர்
வெம் கண் வாள் அரவைத் துணித்து விளித்தவாறும்                                                     விளம்புவாம்.
1
உரை
   
1604. கோது இலாத குனத்து அனந்த குணப் பெரும் தகை                                                        மீனவன்
ஆதி நாயகன் உருவம் ஆகிய ஐந்து எழுத்தொடு                                                    கண்டி வெண்
பூதி சாதனம் ஆவதே பொருள் என்று பத்திமை பூண்டு                                                           தன்
தாதையே முதலாய மன்னவர் தம் மினும் தலை                                                     ஆயினான்.
2
உரை
   
1605. அத்தகைச் சிவ சாதனம் தனில் அன்பு மிக்கவன்                                                   ஒழுகலால்
அத்தன் மெய்த் திரு ஐந்து எழுத்து ஒலியால் நீற்று                                                   ஒலியாலும் உள்
பைத்த வல் இருளும் புற இருளும் சிதைந்து பராபரன்
வித்தக திருவேடம் ஆனது மீனவன் திரு நாடு                                                      எல்லாம்.
3
உரை
   
1606. நாயினும் கடை ஆன மாசுடன் இருள் புரை நெஞ்சு                                                         அரண்
ஆயினும் சமண் வேடர் அன்ன தறிந்து கொண்டு                                                வெகுண்டு அழற்று
ஓ இரும்பு என மான வெம் கனல் சுட்டிடத்தரியார்                                                         களாய்
மாயிரும் தமிழ் மாறனைத் தெற வஞ்ச வேள்வி                                                      இயற்றுவார்.
4
உரை
   
1607. எல்லை காதம் அளந்து சாலை எடுத்து அழல் படு                                                      குண்டமும்
கல்லி ஆர் அழல் இட்டு எழும் புகை கௌவி எண்                                                 திசைகளும் உறச்
செல்லவான உடுக்களும் பொரியில் பொரிந்தன சிதற                                                           நீள்
ஒல்லைதாவி விசும்பு தைவர ஒட்டி வெம் கனல்                                                      மூட்டினார்.
5
உரை
   
1608. அத்து அழன்று எரி குண்டம் நின்றும் அகன் பிலத்து                                                    எழுவான் என
பத்து துஞ்சிருள் வாயும் வாய் இருபாலும் வலிய பகிர்                                                    மதிக்கு
ஒத்தும் நஞ்சு இனம் ஒழுகு பற்களும் ஊழி ஆரல்                                                    விழிகளும்
வைத்து அசைந்து ஒரு வெற்பு வந்து என வந்துளான்                                                    ஒரு தானவன்.
6
உரை
   
1609. உதித்த செம் கண் அரக்க வஞ்சகன் உருத்து எழுந்து                                                   எரிவடவையில்
கொதித்து அடும் பசி தாகமும் கொடிதால் எனக்                                                கொடியோரை நீர்
விதித்திடும் பணி யாது எனக்கு என மீனவன் தனை                                                   மதுரை யோடு
எதிர்த்து எடுத்து விழுங்கிவா என ஏவினார் உடன்                                                   ஏகினான்.
7
உரை
   
1610. பாய் உடை அவர் விட நாகப் படிவு கொள் இசி சர                                                  நிலன் அண்டம்
தோய் உடலின் உடல் விட மூறிச் சொரி துளை                                        எயிற்றினன் வடவைச் செந்தீ
தீ உடையன என எரி கண்ணன் திணி இருள் வரை                                                முழை என விண்ட
வாய் உடையவ னொடு நெறி முன்னி மழைநுழை வரை                                                என வருகின்றான்.
8
உரை
   
1611. அரவு இறை உறை பிலம் வெளி காண வரை உடல்                                             புதை பட நிலம் விள்ள
வரு விழி அழல் எழ உயிர் கான் முன் வளி உளர்                                             கிளர் வலி விளி எய்தப்
பொருசின விழி எதிர் படு பைங்கூழ் புகை எழ வன                                             மரை பொரி பொங்கர்
கருகிட முது சினை இறை கொள்ளும் கக நிரை சிறை                                                    சுருள் படவீழ.
9
உரை
   
1612. அகல் நிலம் வெரு உற நிலன் ஏந்து மர இறை வெரு                                                 உற வெயில் காலும்
பகல் மதி வெரு உற இவை கௌவும் பணிகளும் வெரு                                                 உற அகல் திக்கின்
புகர் மலை வெருஉற வடு தண்டப் புரவலன் வெரு உற                                                 வரு செம் கண்
நகை மதி புரை எயிறவன் மாட மகர் எதிர் குடவயின்                                                 வரும் எல்லை.
10
உரை
   
1613. கண்டவர் கடிநகர் கடிது ஓடிக் கௌரியன் அடி                                            தொழுது அடி கேள் அம்
கொண்டல் கண் வளர் மதில் வளை கூடல் குடவயின்                                               ஒரு பெரு விடநாகம்
அண்டமும் அகிலமும் ஒரு வாய் இட்டு அயிர                                            வருவதை என நீள் வாய்
விண்டு கொண்டு அனைவதை என லோடும் வெரு                                             வலன் மதிகுல மறவீரன்.
11
உரை
   
1614. மற்று இது முன் மதகரி விட்டோர் வரவிட வருவதை                                                 என எண்ணம்
உற்று இது அனையும் விளத்தற்கு எம் உடையவர்                                              விடையவர் விட நாகம்
சுற்றிய சடையினர் உளர் என்னாச் சுரர் உலகு இழி                                                 சுடர் என நிற்கும்
கல் தளி இடை உறை இறை முன் போய்க் கனைகழல்                                        அடி தொழுது அறை கிற்பான்.
12
உரை
   
1615. வழி வழி அடிமை செய்து ஒரு போது மறவலன்                                              வழிபடும் அடியேனின்
மொழி வழி முறை செய்து வருவேன் இம் முது நகர்                                           அடையவும் அமண் ஈசர்
அழிவது கருதினர் விடு நாகம் அடைவது அருள்வழி                                                 அதன் ஆவி
கழிவது கருதிய அடியேனைக் கருணை செய்து                                           அருளியது கடன் என்றான்.
13
உரை
   
1616. அனுமதி கொடு தொழுது இறை பாத மகமதி கொடு                                                    புறன் அடைகின்ற
பனிமதி வழி வரு தமிழ் மாறன் பகழி யொடு அடுசிலை                                                    யினன் ஏகிக்
குனி மதி தவழ் தரு மதி நீடும் கொடி அணி குட கடை                                                    குறுகா முன்
தனிவரை என நிகர் தரு கோபத்தழல் விழி அரவினை                                                    எதிர் கண்டான்.
14
உரை
   
1617. பல் பொறிப் பகுவாய்ப் படம் புடை பரப்பிப் பக்கம்                                          எண் திசை யொடு விசும்பில்
செல் கதிர் புதைத்துத் திணி இருள் பரப்பத் திங்களின்                                                  பகிர் புரை நஞ்சம்
பில் எயிறு அதுக்கிப் பெரிது உயிர்த்து அகல் வாய்                                      பிளந்து மா நகர் எலாம் ஒருங்கே
ஒல் எனக் கௌவி விழுங்கு வான் சீறி உறுத்தனன்                                               உரக வாள் அவுணன்.
15
உரை
   
1618. அடுத்தனன் அரச சிங்க ஏறு இடி ஏறு அஞ்ச ஆர்த்து                                               அம் கையில் சாபம்
எடுத்தனன் நெடு நாள் இருதலை வணக்கி எரி முகக்                                               கூர்ங்கணை தொடுத்து
விடுத்தனன் விடுத்த சரம் எலாம் உரகன் வெறும்                                         துகள் படக் கறித்து உமிழ்ந்து
படுத்தனன் பொறது பஞ்சவன் புராரி பங்கயச் சேவடி                                                          நினையா.
16
உரை
   
1619. கொடிய தோர் பிறைவாய் அம்பினை விடுத்துத் கோள்                                        அரா வளை உடல் துணித்தான்
இடியதோ என ஆர்த்து எரி நிறக் குருதி இரங்கி வீழ்                                                 அருவியில் கவிழ
நெடியது ஓர் உடலம் புரள் படக் கூர் வான் எளி                                                 விளிபவன் மேலைக்
கடியது ஓர் ஆல கால வெள்ளம் போலக் கக்கினான்                                                 கறை இருள் நஞ்சம்.
17
உரை
   
1620. தீவிடம் உருத்துத் திணி இருள் கடுப்பத் திருநகர்                                                 எங்கணும் செறிந்த
காவிடம் கூவல் கயம் தலை சதுக்கம் கழகம் ஆவணம்                                                 அகழ் இஞ்சி
கோவிடம் மாடம் உபரிகை மேடை கோபுர அரங்கம்                                                 எலாம் பரந்து
தாவிட மயங்கி உறங்கினார் போலச் சாம்பினார்                                                 தனிநகர் மாக்கள்.
18
உரை
   
1621. நிலை தளர்ந்து உடலம் திமிர்ந்து வேர் அரும்பி நிறை                                             புலன் பொறி கரணங்கள்
தலை தடுமாறி உரை மொழி குழறித் தழு தழுப்பு                                             அடைந்து நா உணங்கி
மலை தரு கபம் மேல் நிமிர்ந்து உணர்வு அழிந்து                                      மயங்கி மூச்சு ஒடுங்கி உள் ஆவி
அலை தர ஊசல் ஆடினார் கிடந்தார் அன்ன தொல்                                                 நகர் உளார் எலாம்.
19
உரை
   
1622. தென்னவன் விடம் கண்டு அஞ்சும் ஆல் போலச்                                  சினகரம் அடைந்து தாழ்ந்து எந்தாய்
முன்னவ ஆதி முதல்வ வித்தின்றி முளைத்தவ முடிவு                                                    இலா முனிவ
என்னவ அன்பர்க்கு எளிய யாவர்க்கும் இறையவ இந்                                                    நகர்க்கு என்றும்
மன்னவ அநாதி மறையவ முக்கண் வானவ நினைச்                                                 சரண் அடைந்தேன்.
20
உரை
   
1623. அடுத்து வந்து அலைக்கும் ஆழியைத் துரந்தும் ஆழி
                                            உண்டு ஏழும் ஒன்றாகத்
தொடுத்து வந்து அலைக்கும் பெருமழை தடுத்து துளைக்கை
                                  விண் துழவ வெண் பிறைக் கோடு
எடுத்துவந்து அலைக்கும் களிற்றினை விளித்து இந்நகர்
                                                புரந்தனை இன்று
மடுத்து வந்து அலைக்கும் விடத்தினான் மயங்கும்
                                  வருத்தமும் களைதி என்று இரந்தான்.
21
உரை
   
1624. அருள் கடல் அனைய ஆதிநாயகன் தன் அவிர் சடை                                            அணி மதிக் கொழுந்தின்
பெருக்கு அடை அமுதத் தண் துளி சிறிது                                       பிலிற்றினான் பிலிற்றிடலோடும்
பொருக்கு என எங்கும் பாலினில் பிரை போல் புரை                                          அறக் கலந்து பண்டு உள்ள
திருக்கிளர் மதுரா நகரம் ஆப் புனிதம் செய்த                                                 அச்சிறுதுளி அம்மா.
22
உரை
   
1625. இரவி முன் இருள் அது என இறை அருண் முன்                                       இருண் மல வலி என எங்கும்
பரவிய அமுதால் விடம் அகன்று அவசப் படி ஒழிந்து                                                 யாவரும் இன்பம்
விரவிய களிப்பின் மேவினார் இருந்தார் மீனவர்                                              பெரும் தகை வேந்தன்
அரவு அணி சடையார்க்கு அன்பு உருத் தானே ஆகி                                       மண் காவல் செய்தி இருந்தான்.
23
உரை