1626. சுருதி இன்புறத்து அவர் விடு அராவினைச் சுருதி
கருதரும் பரன் அருள் உடைக் கௌரியன் துணித்த
பரிசிதங்கது பொறாத அமண் படிறர் பின் விடுப்ப
வரு பெரும் பசு விடையினான் மாய்த்ததும் பகர்வாம்.
1
உரை
   
1627. பணப் பெரும் பகுவாய் உடைப் பாந்தளை அனந்த
குணப் பெருந்தகை துணித்த பின் பின் வரு குண்டர்
தணப் பரும் குழாம் காலினால் தள்ளுண்டு செல்லும்
கணப் பெரும் புயல் போல் உடைந்து ஓடின கலங்கி.
2
உரை
   
1628. உடைந்து போனவர் அனைவரும் ஓர் இடத்து                                                     இருள்போல்
அடைந்து நாமுன்பு விடுத்த மால் யானை போல் இன்று
தொடர்ந்த பாம்பையும் தொலைத்தனர் மேலினிச்                                                         சூழ்ச்சி
மிடைந்து செய்வதை யாது என வினயம் ஒன்று ஓர்வார்.
3
உரை
   
1629. ஆவை ஊறு செய்யார் பழி அஞ்சுவார் அதனை
ஏதுவாம் இதுவே புணர்ப்பு என்று சூழ்ந்து இசைந்து
பாவ காரிகள் பண்டு போல் பழித்து அழல் வளர்த்தார்
தாவிலா உரு ஆகி ஓர் தானவன் முளைத்தான்.
4
உரை
   
1630. குண்டு அழல் கணின் எழுந்த அக் கொடிய வெம்                                                         பசுவைப்
பண்டு போல் அவர் விடுத்தனர் கூடல் அம் பதிமேல்
உண்டு இல்லையும் எனத் தடுமாற்ற நூல் உரைத்த
பிண்டியான் உரை கொண்டு உழல் பேய் அமண்                                                         குண்டர்.
5
உரை
   
1631. மாட மலி மாளிகையில் ஆடு கொடி மானக்
கோடுகளி னோடு முகில் குத்தி மிசை கோத்துச்
சேடன் முடியும் கதிர் கொள் சென்னி வரையும் தூள்
ஆட அடி இட்டு அலவை அஞ்சிட உயிர்த்தே.
6
உரை
   
1632. விடுத்திடும் உயிர்ப்பின் எதிர் பூளை நறை வீபோல்
அடுத்திடும் சரா சரம் அனைத்தும் இரிவு எய்தக்
கடுத்திடும் சினக் கனலிக்கு உலகம் எல்லாம்
மடுத்திடும் அழல் கடவுள் வார் புனலை மான.
7
உரை
   
1633. உடன்றி இறை கொள் புள்ளொடு விலங்கு அலறி ஓட
மிடைந்த பழுவத்தொடு விலங்கலை மருப்பால்
இடம் தெறி மருத்து என வெறிந்து அளவி லோரைத்
தொடர்ந்து உடல் சிதைத்து உயிர் தொலைத்து இடியின்                                                        ஆர்த்தே.
8
உரை
   
1634. மறலி வரும் ஆரு என மறப் பசு வழிக் கொண்ட
அறலிவர் தடம் பொருனை ஆறு உடைய மாறன்
திறலி மலர் மங்கை உறை தென் மதுரை முன்னா
விறலி வாலி வருகின்றதது மீனவன் அறிந்தான்.
9
உரை
   
1635. மீனவனும் மா நகருள் மிக்கவரும் முக்கண்
வானவனை மாமதுரை மன்னவனை முன்னோர்
தானவனை ஆழிகொடு சாய்த்தவனை ஏத்தா
ஆனது உரை செய்தும் என ஆலயம் அடைந்தார்.
10
உரை
   
1636. நாத முறையோ பொதுவின் மாறி நடமாடும்
பாத முறையோ பல உயிர்க்கும் அறிவிக்கும்
போத முறையோ புனித பூரண புராண
வேத முறையோ என விளித்து முறை இட்டார்.
11
உரை
   
1637. நின்று முறை இட்டவரை நித்தன் அருள் நோக்கால்
நன்று அருள் சுரந்து இடப நந்தியை விளித்துச்
சென்ற அமணர் ஏவ வரு தீப் பசுவை நீ போய்
வென்று வருவாய் என விளம்பினன் விடுத்தான்.
12
உரை
   
1638. தண்டம் கெழு குற்றமும் அஞ்ச தறுகண் செம்கண்
குண்டம் தழன்று கொதிப்பக் கொடு நாக்கு எறிந்து
துண்டம் துழாவக் கடைவாய் நுரை சோர்ந்து சென்னி
அண்டம் துழாவ எழுந்தன்று அடல் ஏறு மாதோ.
13
உரை
   
1639. நெற்றித் தனி ஒடை நிமிர்ந்து மறிந்த கோட்டில்
பற்றிச் சுடர் செம் மணிப் பூண் பிறை பைய நாகம்
சுற்றிக் கிடந்தால் எனத் தோன்று வெள் ஆழி ஈன்ற
கற்றைக் கதிர் போல் பருமம் புறம் கௌவி மின்ன.
14
உரை
   
1640. கோட்டுப் பிறைகால் குளிர் வெண் கதிர்க் கற்றை                                                         போலச்
சூட்டுக் கவரித் தொடைத் தொடங்கலும் நெற்றி                                                         முன்னாப்
பூட்டுத் தரள முகவட்டும் பொலியப் பின்னல்
மாட்டுச் சதங்கைத் தொடை கல் என வாய் விட்டு                                                         ஆர்ப்ப.
15
உரை
   
1641. பணி நா அசைக்கும் படி என்னக் கழுத்தில் வீர
மணி நா அசைப்ப நகைமுத்தின் வகுத்த தண்டை
பிணி நாண் சிறு கிண் கிணி பிப்பல மாலைத் தொங்கல்
அணி நாண் அலம்பச் சிலம்பு ஆர்ப்ப வடிகண்                                                         நான்கும்.
16
உரை
   
1642. அடி இட்டு நிலம் கிளைத்து அண்டம் எண் திக்கும்                                                     போர்ப்பப்
பொடி இட்டு உயிர்த்துப் பொரு கோட்டினில் குத்திக்                                                     கோத்திட்டு
அடி இட்டு அதிர் கார் எதிர் ஏற்று எழுந்தாங்கு                                                     நோக்கிச்
செடி இட்டு இரு கண் அழல் சிந்த நடந்தது அன்றே.
17
உரை
   
1643. பால் கொண்ட நிழல் வெண் திங்கள் பகிர் கொண்ட                                                மருப்பில் கொண்மூச்
சூல் கொண்ட வயிற்றைக் கீண்டு துள்ளி ஓர் வெள்ளிக்                                                     குன்றம்
கால் கொண்டு நடந்தால் என்ன கடிந்து உடன்று                                                     ஆவைச் சீற்றம்
மேல் கொண்டு நாற்றம் பற்றி வீங்கு உயிர்ப்பு எறிந்து                                                     கிட்டா.
18
உரை
   
1644. குடக்கது குணக்கது என்னக் குணக்கது குடக்கது என்ன
வடக்கது தெற்கது என்னத் தெற்கது வடக்கது என்ன
முடுக்குறு மருப்பில் கோத்து முதுகு கீழாகத் தள்ளும்
எடுக்குறு மலையைக் கால் போர்த்து எனத் திசை                                                      புறத்து வீசும்.
19
உரை
   
1645. கொழு மணிச் சிகர கோடி சிதை படக் குவட்டில் வீசும்
பழுமரச் செறிவில் வான்தோய் பணை இற எறியும்                                                         வானின்
விழும் அறப் பசு போல் வீழ வேலை வாய் வீசும்                                                         இங்ஙன்
செழு மதிக் கோட்டு நந்தித் தேவிளையாடல் செய்து.
20
உரை
   
1646. பூரியர் எண்ணி ஆங்கே பொருது உயிர் ஊற்றம்                                                        செய்யாது
ஆரிய விடைதன் மாண்ட அழகினைக் காட்டக்                                                        காமுற்று
ஈரிய நறும் பூ வாளி ஏறு பட்டு ஆவியோடும்
வீரியம் விடுத்து வீழ்ந்து வெற்பு உரு ஆயிற்று அன்றெ.
21
உரை
   
1647. வாங்கின புரிசை மாட மா நகர் ஆனா இன்பம்
தூங்கின வரவாய் வேம்பின் தோடு அவிழ் தாரான்                                                     திண் தோள்
வீங்கின இரவி தோன்ற வீங்கு இருள் உடைந்தது                                                          என்ன
நீங்கின நாணமோடு நிரை அமண் குழாங்கள் எல்லாம்.
22
உரை
   
1648. உலகு அறி கரியாத் தன் பேர் உருவினை இடபக்                                                        குன்றாக்
குல உற நிறுவிச் சூக்க வடிவினால் குறுகிக் கூடல்
தலைவனை வணங்க ஈசன் தண் அருள் சுரந்து பண்டை
இலகு உரு ஆகி இங்ஙன் இருக்க என இருத்தினானே.
23
உரை
   
1649. அந் நிலை நகர் உளாரும் அரசனும் மகிழ்ச்சி தூங்கிச்
சந்நிதி இருந்த நந்தி தாள் அடைந்து இறைஞ்சிப்                                                         போக
மின் அவிர் சடையான் நந்தி வென்றி சால் வீறு                                                         நோக்கி
இன் அமுது அனையா ளோடும் களி சிறந்து இருக்கும்                                                         நாளில்.
24
உரை
   
1650. அவ் இடை வரை மேல் முந்நீர் ஆர்கலி இலங்கைக்கு                                                         ஏகும்
தெவ் அடு சிலையில் இராமன் வானர சேனை சூழ
மை வரை அனைய தம்பி மாருதி சுக்கிரீவன்
இவ் அடல் வீரரோடும் எய்தி அங்கு இறுத்தான்                                                         மன்னோ.
25
உரை
   
1651. அன்னது தெரிந்து விந்தம் அடக்கிய முனி அங்கு                                                           எய்தி
மன்னவற்கு ஆக்கம் கூறி மழவிடைக் கொடியோன்                                                           கூடல்
பன்னரும் புகழ்மை ஓது பனு வலை அருளிச் செய்ய
முன்னவன் பெருமை கேட்டு முகிழ்த்தகை முடியோன்                                                           ஆகி.
26
உரை
   
1652. முனியொடு குறுகிச் செம் பொன் முளரி உள் மூழ்கி                                                           ஆதித்
தனிமுதல் அடியை வேணி முடி உறத் தாழ்ந்து வேத
மனு முறை சிவ ஆகமத்தின் வழி வழாது அருகித்து                                                           ஏத்திக்
கனி உறும் அன்பில் ஆழ்ந்து முடிமிசைக் கரங்கள்                                                           கூப்பி.
27
உரை
   
1653. புங்கவ சிவன் முத்தி புராதிப புனித போக
மங்கலம் எவற்றினுக்குங் காரண வடிவம் ஆன
சங்கர நினது தெய்வத் தானங்கள் அனந்தம் இந்த
அங்கண் மா ஞாலம் வட்டத்து உள்ளன வைக தம்மில்.
28
உரை
   
1654. அற்புதப் பெரும் பதி இந்த மதுரை ஈது ஆற்றப்
பொற்பு உடைத்து என்பது எவன் பல புவனமும்                                                        நின்பாற்
கற்பு வைத்துய நீ செய்த கருமத்தின் விருத்தம்
வெற்பு உருக்களாய்ப் புடை நின்று விளங்கலான்                                                        மன்னோ.
29
உரை
   
1655. கண்ட எல்லையில் துன்பங்கள் களைதற்கும் அளவை
கண்டரும் பெரும் செல்வங்கள் அளித்தற்கும் கருணை
கொண்டு நீ உறை சிறப்பினால் குளிர் மதிக் கண்ணி
அண்ட வாண இவ் இலிங்கதுக்கு ஒப்பு வேறு ஆமோ.
30
உரை
   
1656. தோய்ந்திடும் பொழுது தீட்டிய தொல்வினைப் படலம்
மாய்ந்திடும் படி மாய்த்து நின் மங்கல போகம்
ஈந்திடும் படிக்கு இருந்த மா தீர்த்தத்தின் இயல்பை
ஆய்ந்திடும் பொழுது அதற்கு ஒரு தீர்த்தம் ஒப்பு                                                          ஆமோ.
31
உரை
   
1657. எத் தலத்தினும் ஒவ் வொன்று விழுமிதாம் இந்த
மெய்த் தலத்தில் இம் மூவகை விழுப்பமும் விளங்கும்
அத்த ஆதலால் இத்தலம் அடைந்தவர் எவர்க்கும்
சித்த சுத்தியும் பலவகைச் சித்தியும் பயக்கும்.
32
உரை
   
1658. அடியனேன் எண்ணும் கருமமும் சரதமே ஆக
முடியும் மா அரிது அச்செயன் முடியும் எப்படி அப்
படி புரிந்து அருள் கடிது என பணிந்தனன் பரனும்
நெடிய வான் படும் அமுது என எதிர் மொழி                                                      நிகழ்த்தும்.
33
உரை
   
1659. இரவி தன் மரபின் வந்த இராம கேள் எமக்குத் தென்                                                           கீழ்
விரவிய திசையில் போகி விரிகடல் சேதுக் கட்டிக்
கரவிய உள்ளக் கள்வன் கதிர் முடி பத்தும் சிந்தி
அரவ மேகலை யினாளை அரும் சிறை அழுவம் நீக்கி.
34
உரை
   
1660. மீண்டு நின் அயோத்தி எய்தி வரிகடல் உலகம்                                                       பல்நாள்
ஆண்டு இனிது இருந்து மேல் நாள் வைகுண்டம்                                                       அடைவாயாக
ஈண்டு நீ கவலை கொள்ளேல் எனும் அசரீரி கேட்டு
நீண்டவன் மகிழ்ந்து தாழ்ந்து நிருத்தனை விடை                                                       கொண்டு ஏகி.
35
உரை
   
1661. மறைப் பொருள் உரைத் தோன் சொன்ன வண்ணமே                                                     இலங்கை எய்தி
அறத்தினைத் தின்ற பாவி ஆவி தின்றனை யான்                                                         செல்வத்து
திறத்தினை இளவற்கு ஈந்து திரு விரா மேசம் கண்டு
கறைப்படு மிடற்றினானை அருச்சித்துக் கருணை                                                         வாங்கி.
36
உரை
   
1662. பற்றிய பழியின் நீந்தி இந்திரன் பழியைத்தீர்த்த
வெற்றிகொள் விடையினானை மீளவும் வந்து போற்றி
அல் திரள் அனைய கோதைக் கற்பினுக்கு அரசி                                                         யோடும்
சுற்றிய சடையின் இராமன் தொல் நகர் அடைந்தான்                                                         இப்பால்.
37
உரை
   
1663. செங்கோல் அனந்த குண மீனவள் தேயம் காப்பக்
கொங்கோடு அவிழ்தார்க் குல பூடனன் தன்னை ஈன்று
பொங்கு ஓத ஞாலப் பொறை மற்றவன் பால் இறக்கி
எம் கோன் அருளால் சிவமா நகர் ஏறினானே.
38
உரை