தொடக்கம் |
|
|
1664. | பாவம் என வடிவு எடுத்த படிற்று அமணர் பழித்து அழல் செய் தேவ வரு மறப்பசுவை ஏறு உயர்த்தோன் விடை நந்திக் காவலனை விடுத்து அழித்த கதை உரைத்தும் அட்டாலைச் சேவகன் மெய்க் காட்டிட்டு விளையாடும் திறம் உரைப்பாம். | 1 |
|
|
உரை
|
|
|
|
|
1665. | வெவ்வியமும் மதயானை விறல் குல பூடணன் சமணர் அவ்வியம் வஞ்சனை கடந்த அனந்த குணச் செழியன் பால் செவ்விய செம் கோல் வாங்கித் திகிரி திசை செல உருட்டி வவ்விய வெம் கலி துரந்து மண் காத்து வருகின்றான். | 2 |
|
|
உரை
|
|
|
|
|
1666. | சவுந்தர சாமந்தன் எனத் தானை காவலன் ஒருவன் சிவந்த சடை முடி அண்ணல் அடியவரே சிவம் ஆகக் கவர்ந்து ஒழுகி அருச்சிக்கும் கடப்பாட்டின் நெறி நின்றோன் உவந்து அரசற்கு இருமைக்கும் துணை ஆகி ஒழுகு நாள். | 3 |
|
|
உரை
|
|
|
|
|
1667. | வல் வேடர்க்கு அதி பதியாய் வரு சேதி ராயன் எனும் வில் வேடன் ஒருவன் அவன் விறல் வலியான் மேல் இட்டுப் பல் வேறு பரிமான் தேர்ப் பஞ்சவன் மேல் படை எடுத்துச் செல்வேன் என்று உற வலித்தான் தென்னர் பிரான் அஃது அறிந்தான். | 4 |
|
|
உரை
|
|
|
|
|
1668. | தன்னு தாள் நிழல் நின்ற சாமந்தன் தனைப் பார்த்து எம் பொன் அறை தாழ் திறந்து நிதி முகந்து அளித்துப் புதிதாக இன்னமும் நீ சில சேனை எடுத்து எழுதிக் கொள்க என்றான் அன்னது கேட்டு ஈசன் அடிக்கு அன்பு உளான் என் செய்வான். | 5 |
|
|
உரை
|
|
|
|
|
1669. | தென்னவர் கோன் பணித்த பணி பின் தள்ளச் சிந்தையில் அன்பு உன்ன அரன் அருள் வந்து முன் ஈர்ப்ப ஒல்லை போய்ப் பொன் அறை தாழ் திறந்து அறத்து ஆறு ஈட்டி இடும் பொன் குவையுள் அன்ன உள்ளத்து அவா அமையத்து தக்க நிதி கைக்கவரா. | 6 |
|
|
உரை
|
|
|
|
|
1670. | எண் இறந்த களிப்பினொடும் திருக் கோயில் இடத்து அணைந்து கண் நிறைந்த பொன் முளரிக் கயந்தலை நீர் படிந்து தனது உள் நிறைந்த மெய் அன்பின் ஒளி உருவாய் முளைத்து எழுந்த பண் நிறைந்த மறைப் பொருளைப் பணிந்து இறைஞ்சி இது வேண்டும். | 7 |
|
|
உரை
|
|
|
|
|
1671. | பண்ணியன் ஆன் மறை விரித்த பரமேட்டி எம் கோமான் எண்ணிய காரியம் முடிப்பாய் இவை உனக்கும் உன் அடிக்கீழ் அண்ணிய மெய் அடியவர்க்கு மா தக்க என இரந்து அப் புண்ணிய மா நிதி முழுதும் அவ்வழியே புலப்படுப்பான். | 8 |
|
|
உரை
|
|
|
|
|
1672. | அண்ட முகடு உரிஞ்சி நிமிர் கோபுரமும் ஆயிரக்கால் மண்டபமும் கண்டிகையும் வயிர மணிக் கோளகையும் குண்டலமும் தண் தரளக் குடை நிரையும் கொடி நிரையும் கண்டனன் முன் அவன் அருளால் பிறப்பு ஏழும் கரை கண்டோன். | 9 |
|
|
உரை
|
|
|
|
|
1673. | வான் நாடர்க்கு அவி உணவின் வகை முந்நூல் மன்றல் முதல் நானா ஆம் சிறு வேள்வி நான் மறையோர்க்கு அறுசுவையின் ஆனாத பேர் உண்டி துறவு அடைந்தோர்க்கு அருத்துபலி தான் ஆதி பல வேறு தருமம் நனி தழைவித்தான். | 10 |
|
|
உரை
|
|
|
|
|
1674. | எவரேனும் உருத்திர சாதனம் கண்டால் எதிர் வணங்கி அவரே நம் பிறப்பு அறுக்க வடிவு எடுத்த அரன் என்று கவராத அன்பு உள்ளம் கசிந்து ஒழுக அருச்சித்துச் சுவை ஆறின் அமுது அருத்தி எஞ்சிய இன் சுவை தெரிவான். | 11 |
|
|
உரை
|
|
|
|
|
1675. | இன்றைக்கு ஆயிரம் நாளைக்கு இரு மடங்கு வரு நாட்கும் அன்றைக்கு அன்று இரு மடங்கா அரசனது பொருள் எல்லாம் கொன்றைச் செம் சடையார்க்கும் அடியார்க்கும் கொடுப்பதனைத் தென்றல் கோன் கெவிமடுத்தார் சேனைக்கோன் இது செய்வான். | 12 |
|
|
உரை
|
|
|
|
|
1676. | காவலன் அவையத்து எய்திக் காரியம் செய்வா ரோடு மேவினன் பிற நாட்டு உள்ள வீரர்க்கு வெறுக்கைப் போக்கிச் சேவகம் பதிய ஒலை செலவிடுத்து அழைப்பான் போலப் பாவகம் செய்து தீட்டிப் பட்டிமை ஓலை உய்ப்பான். | 13 |
|
|
உரை
|
|
|
|
|
1677. | எழுதுக தெலுங்கர்க்கு ஓலை எழுதுக கலிங்கர்க்கு ஓலை எழுதுக விராடர்க்கு ஓலை எழுதுக மராடர்க்கு ஓலை எழுதுக கொங்கர்க்கு ஓலை எழுதுக வங்கர்க்கு ஓலை எழுதுக துருக்கர்க்கு ஓலை என்று பொய் ஓலை விட்டான். | 14 |
|
|
உரை
|
|
|
|
|
1678. | எங்கும் இப்படியே ஓலை செலவிடுத்து இருப்ப ஆறு திங்களின் அளவு அந்தச் சேவகர் வரவு காணா தம் கதிர் வேலோன் சேனைக்கு அரசனை அழைத்து நாளை வெம் கதிர் படு முன் சேனை யாவையும் விளித்தி என்றான். | 15 |
|
|
உரை
|
|
|
|
|
1679. | என்ற மன்னவனுக்கு ஏற்கச் சாமந்தன் இசைந்து வெள்ளி மன்றவன் அடிக்கீழ் வீழ்ந்து வள்ளலே அரசன் ஈந்த குன்று உறழ் நிதியம் எல்லாம் கொண்டு எனைப் பணிகொண்டாயே வன்திறல் சேனை ஈட்டும் வண்ணம் யாது என்ன நின்றான். | 16 |
|
|
உரை
|
|
|
|
|
1680. | அடியவர் குறைவு தீர்த்து ஆண்டு அருள்வதே விரதம் பூண்ட கொடி அணி மாடக் கூடல் கோ மகன் காமன் காய்ந்த பொடி அணி புராணப் புத்தேள் புண்ணியன் அருளினாலே இடி அதிர்விசும்பு கீறி எழுந்தது ஓர் தெய்வ வாக்கு. | 17 |
|
|
உரை
|
|
|
|
|
1681. | சூழ்ந்து எழும் சேனை யோடும் தோற்றுதும் நாளை நீயும் வீழ்ந்து அரச அவையை எய்தி மேவுதி என்ன விண்ணம் போழ்ந்து எழு மாற்றம் கேட்டுப் பொருநரே உவகை வெள்ளத்து தாழ்ந்தனன் முந்நீர் வெள்ளது அலர் கதிரவனும் ஆழ்ந்தான். | 18 |
|
|
உரை
|
|
|
|
|
1682. | மீனவன் காண மேரு வில்லி தன் தமரை வன்கண் மான வேல் மறவர் ஆக்கி வாம் பரி வீரன் ஆகத் தானும் ஓர் கூத்துக் கோலம் சமைந்து வந்து ஆடவிட்ட நீல் நிற எழினி போலக் கார் இருள் வந்தது எங்கும். | 19 |
|
|
உரை
|
|
|
|
|
1683. | புண்ணிய மனையில் போகிப் புலர்வது எப்போழ்து என்று எண்ணி அண்ணல் சாமந்தன் துஞ்சான் அடிகடி எழுந்து வானத்து எண் நிறை மீனம் நோக்கி நாழிகை எண்ணி எண்ணிக் கண்ணிதல் எழுச்சி காண்பான் அளந்தனன் கங்குல் எல்லாம். | 20 |
|
|
உரை
|
|
|
|
|
1684. | தெருட்டு அரு மறைகள் தேறா சிவபரம் சுடரோர் அன்பன் பொருட்டு ஒரு வடிவம் கொண்டு புரவி மேல் கொண்டு போதும் அருள் படை எழுச்சி காண்பான் போல ஆர் கலியின் மூழ்கி இருட்டுகள் கழுவித் தூய இரவி வந்து உதயம் செய்தான். | 21 |
|
|
உரை
|
|
|
|
|
1685. | பொருநரே அனையான் நேர்ந்து போந்து நான் மாடக் கூடல் கருணை நாயகனைத் தாழ்ந்து கை தொழுது இரந்து வேண்டிப் பரவி மீண்டு ஒளி வெண் திங்கள் பல் மணிக் குடைக்கீழ் ஏகிக் குரு மதி மருமான் கோயில் குறுகுவான் குறுகும் எல்லை. | 22 |
|
|
உரை
|
|
|
|
|
1686. | கரை மதி எயிற்றுச் சங்கு கன்னன் முன் ஆன வென்றிப் பிரமத கணமும் குண்டப் பெரு வயிற்று ஒருவன் ஆதி வரை புரை குறும் தாள் பூத மறவரும் குழுமி வீக்கு குரை கழல் வலிய நோன் தாள் கோள் உடை வயவர் ஆகி. | 23 |
|
|
உரை
|
|
|
|
|
1687. | நெட்டு இலை வடிவாள் குந்தம் தோமர நேமி நெய்த்தோர் ஒட்டிய கணிச்சி சாபம் உடம் பிடி முதலா எண்ணப் பட்ட வெம் படை மூ ஆரும் பரித்த செம் கையர் காலில் கட்டிய கழலர் காலில் கடியராய்ப் புறம்பு காப்ப. | 24 |
|
|
உரை
|
|
|
|
|
1688. | வார் கெழு கழல்கால் நந்தி மாகாளன் பிருங்கி வென்றித் தார் கெழு நிகும்பன் கும் போதரன் முதல் தலைவர் யாரும் போர் கெழு கவசம் தொட்டுப் புண்டரம் நுதலில் திட்டிக் கூர் கெழு வடிவாள் ஏந்தி குதிரைச் சேவகராய்ச் சூழ. | 25 |
|
|
உரை
|
|
|
|
|
1689. | கற்றைச் சாமரைகள் பிச்சம் கவிகை பூம் கொடிக்காடு எங்கும் துற்றக்கார் ஒலியும் நாணத் தூரியும் முழுதும் ஏங்கக் கொற்றப் போர் விடையைத் தானே குரங்கு உளைப் பரியா மேல் கொண்டு ஒற்றைச் சேவகராய் மாறி ஆடிய ஒருவர் வந்தார். | 26 |
|
|
உரை
|
|
|
|
|
1690. | பல்லியம் ஒலிக்கும் மார்பும் பாய் பரி கலிக்கும் மார்ப்பும் சொல் ஒலி மழுங்க மள்ளர் தெழித்திடும் மார்பும் ஒன்றிக் கல் எனும் சும்மைத்து ஆகிக் கலந்து எழு சேனை மேனாள் மல்லன் மா நகர் மேல் சீறி வருகடல் போன்றது அன்றே. | 27 |
|
|
உரை
|
|
|
|
|
1691. | சேனையின் வரவு நோக்கித் திருமகன் திருமுன் ஏகும் தானை அம் தலைவன் தென்னன் தாள் நிழல் குறுகிக் கூற மீனவன் உவகை பூத்து வெயில் மணி கடையில் போந்து அங்கு கான மண்டபத்தில் செம் பொன் அரியணை மீது வைகி. | 28 |
|
|
உரை
|
|
|
|
|
1692. | தெவ் அடு மகிழ்ச்சி பொங்கச் சேனையின் செல்வ நோக்கி எவ் எவ் தேயத்து உள்ளோர் இவர் என எதிரே நின்று கௌவையின் மனச் சாமந்தன் கையில் பொன் பிரம்பு நீட்டி அவ் அவர் தொகுதி எல்லாம் மணி அணி நிறுவிக் கூறும். | 29 |
|
|
உரை
|
|
|
|
|
1693. | கொங்கர் இவர் ஐய குரு நாடர் இவர் ஐய கங்கர் இவர் ஐய கருநாடர் இவர் ஐய அங்கர் இவர் ஐய இவர் ஆரியர்கள் ஐய வங்கர் இவர் ஐய இவர் மாளவர்கள் ஐய. | 30 |
|
|
உரை
|
|
|
|
|
1694. | குலிங்கர் இவர் ஐய இவர் கொங்கணர்கள் ஐய தெலுங்கர் இவர் ஐய இவர் சிங்களர்கள் ஐய கலிங்கர் இவர் ஐய கவுடத்தர் இவர் ஐய உலங்கெழு புயத்து இவர்கள் ஒட்டியர்கள் ஐய. | 31 |
|
|
உரை
|
|
|
|
|
1695. | கொல்லர் இவர் ஐய இவர் கூர்ச்சர்கள் ஐய பல்லவர் இவர் ஐய இவர் பப்பரர்கள் ஐய வில்லர் இவர் ஐய இவர் விதேகர் இவர் ஐய கல் ஒலி கழல் புனை கடாரர் இவர் ஐய. | 32 |
|
|
உரை
|
|
|
|
|
1696. | கேகயர்கள் இவர்கள் கேழ் கிளர் மணிப் பூண் மாகதர் ஆல் இவர் மராடர் இவர் காஞ்சி நாகர் இகரால் இவர்கள் நம்முடைய நாட்டோர் ஆகும் இவர் தாம் என மெய்க் காட்டி அறிவித்தான். | 33 |
|
|
உரை
|
|
|
|
|
1697. | இத்தகைய சேட் புலன் உளாரை இவண் உய்த்த இத்தகைமை என் என வினாவி அருள் செய்யேல் அத்த நின்னரும் பொருள் அனைத்தும் வரையாதே உய்த்தலின் அடைந்தனர்கள் என உரைத்தான். | 34 |
|
|
உரை
|
|
|
|
|
1698. | அந் நெடும் சேனை தன்னுள் சேண் இடை அடல் மா ஊர்ந்து பின் உற நிற்கும் ஒற்றைச் சேவகப் பிரானை நோக்கி மன்னவன் அவர் யார் என்னச் சாமந்தன் வணங்கி ஐய இன்னவர் சேனை வெள்ளத்து யாரை என் அறிவது என்றான். | 35 |
|
|
உரை
|
|
|
|
|
1699. | அவரை இங்கு அழைத்தி என்றான் அரசன்தன் வழிச் செல்வார் போல் கவயம் இட்டவரும் போந்தார் காவலன் களி கூர்ந்து அம் பொன் நவமணிக் கலன் பொன் ஆடை நல்கினான் உள்ளத்து அன்பு தவறிலான் பொருட்டு வாங்கித் தரித்து தன் தமர்க்கும் ஈந்தார். | 36 |
|
|
உரை
|
|
|
|
|
1700. | ஆய்ந்த வெம் பரிமாத் தூண்டி ஐங்கதி நடத்திக் காட்டி ஏய்ந்த தம் சேனை வெள்ளத்து எய்தினார் எய்தும் எல்லை வேய்ந்த தார்ச் சேதிராயன் வேட்டை போய்ப் புலி கோட் பட்டு மாய்ந்தனன் என்று ஓர் ஒற்றன் வேந்தன் முன் வந்து சொன்னான். | 37 |
|
|
உரை
|
|
|
|
|
1701. | முரசு அதிர் அனிகம் நோக்கி முகம் மலர்ந்து உவகை பூத்த அரசனும் அனிக வேந்தற்கு அளவு இல் சீர்த் தலைமை யோடும் வரிசை கண் மிதப்ப நல்கி வந்து மெய்க் காட்டுத் தந்து பரசிய பதாதி தத்தம் பதி புகச் செலுத்துக என்றான். | 38 |
|
|
உரை
|
|
|
|
|
1702. | அறைந்தவர் கழல் கால் சேனை காவலன் அனிகம் தம்தம் சிறந்த சேண் நாட்டில் செல்லத் செலுத்துவான் போன்று நிற்ப நிறைந்த நான் மாடக் கூடல் நிருத்தன் அந் நிலை நின்று ஆங்கே மறைந்தனன் மனித்த வேடம் காட்டிய மறவ ரோடும். | 39 |
|
|
உரை
|
|
|
|
|
1703. | கண்டனன் பொருனை நாடன் வியந்தனன் கருத்தா சங்கை கொண்டனன் குறித்து நோக்கி ஈது நம் கூடல் மேய அண்டர் தம் பெருமான் செய்த ஆடல் என்று எண்ணிக் கண்ணீர் விண்டனன் புளகம் போர்ப்ப மெய்யன்பு வடிவம் ஆனான். | 40 |
|
|
உரை
|
|
|
|
|
1704. | தனக்கு உயிர்த் துணையா நின்ற சாமந்தன் தன்னை நோக்கி உனக்கு எளி வந்தார் கூடல் உடைய நாயகரே என்றால் எனக்கு அவர் ஆவார் நீயே என்று அவற்கு யாவும் நல்கி மனக்கவல்பு இன்றி வாழ்ந்தான் மதி வழி வந்த மைந்தன். | 41 |
|
|
உரை
|
|
|
|