1705. அடியார் பொருட்டுப் பரிவயவர் ஆகிச் செழியன்                                                  காண விடைக்
கொடியார் வந்து மெய்க் காட்டுக் கொடுத்த வண்ணம்                                                  எடுத்து உரைத்தும்
கடியார் கொன்றை முடியார் அக் கன்னி நாடன்                                                  தனக்கு இசைந்த
படியால் உலவாக் கிழி கொடுத்த படியை அறிந்தபடி                                                         பகர்வாம்.
1
உரை
   
1706. வள்ளல் குல பூடணன் திங்கள் வாரம் தொடுத்து                                                        சிவதருமம்
உள்ள எல்லாம் வழாது நோற்று ஒழுகும் வலியால்                                                     தன் நாட்டில்
எள்லல் இல்லா வேதியரை இகழ்ந்தான் அதனான்                                                     மழை மறுத்து
வெள்ளம் அருக வளம் குன்றி விளைவு அஃகியது                                                     நாடு எல்லாம்.
2
உரை
   
1707. அறவோர் எல்லாம் நிரப்பு எய்தி ஆகம் இடந்த நூல்                                                         அன்றி
மறை நூல் இழந்து முனி வேள்வி வானோர் வேள்வி                                                    தென் புலத்தின்
உறைவோர் வேள்வி இழந்து இழிந்த தொழில் செய்து                                         ஆற்றாது உயிர் வளர்ப்பான்
புற நாடு அணைந்தார் பசியாலே புழுங்கி ஒழிந்த குடி                                                         எல்லாம்.
3
உரை
   
1708. எந்த நாடு அணைவோம் என இரங்க இரங்கி                                              மதிக்கோன் மதிநாளில்
பொன் நாண் முளரித் தடம் குடைந்து சித்திக்                                              களிற்றைப் பூசித்துத்
தன் ஆதரவால் கயல் கண்ணி தலைவன் தன்னை                                                       அருச்சித்து
முன்னா வீழ்ந்து கரம் முகிழ்த்துப் பழிச்சி மகிழ்ந்து                                                   மொழி கின்றான்.
4
உரை
   
1709. அந்த உலகில் உயிர்க்கு உயிர் நீ அல்லையோ அவ்                                               உயிர் உயிர் பசியால்
எய்த்த வருத்தம் அடியேனை வருத்தும் மாறு என்                                                      யான் ஈட்டி
வைத்த நிதியம் தருமத்தின் வழியே சென்றது                                                      இளியடிகள்
சித்த மலர்ந்து என் இடும் பை வினை தீர அருள்கண்                                                      செய்க என.
5
உரை
   
1710. கோளா அரவம் அரைக்கு அசைத்த கூடல் பெருமான்                                                     குறை இரக்கும்
ஆளாம் அரசன் தவறு சிறிது அகம் கொண்டு                                            அதனைத் திருச் செவியில்
கேளர் போல வாளாதே இருப்ப மனையில் கிடைத்த                                                         அமலன்
தாள் ஆதரவு பெற நினைந்து தரையில் கிடந்து துயில்                                                         கின்றான்.
6
உரை
   
1711. அம்கண் வெள்ளி அம் பலத்துள் ஆடும் அடிகள்                                                    அவன் கனவில்
சங்கக் குழையும் வெண்ணிறும் சரிகோவணமும் தயங்க                                                         உரன்
சிங்க நாதம் கிடந்து அசையச் சித்த வடிவா எழுந்து                                                         அருளி
வெம் கண் யானைத் தென்னவர் கோன் முன் நின்று                                                இதனை விளம்புவார்.
7
உரை
   
1712. ஏடார் அலங்கல் வரை மார்ப வெம்பால் என்றும்                                                    அன்பு உடைமை
வாடா விரத விழுச் செல்வம் உடையாய் வைய மறம்                                                         கடிந்து
கோடாது அளிக்கும் செம் கோன்மை உடையாய்                                         உனக்கு ஓர் குறை உளது உன்
வீடா வளம் சேர் நாட்டி இந் நாள் வேள்விச் செல்வம்                                                        அருகியதால்.
8
உரை
   
1713. மமறையே நமது பீடிகையாய் மறையே நமது                                                       பாதுகையாம்
மறையே நமது வாகனம் மா மறையே நமது நூபுரம்                                                         ஆம்
மறையே நமது கோவணம் ஆம் மறையே நமது                                                       விழியாகும்
மறையே நமது மொழியாகும் மறையே நமது வடிவாகும்.
9
உரை
   
1714. வேதம் தானே நமது ஆணைச் சத்தி வடிவாய்                                                     விதிவிலக்காய்
போதம் கொளுத்தி நிலை நிறுத்திப் போகம்                                          கொடுத்துப் பல் உயிர்க்கும்
பேதம் செய்யும் பிணி அவிழ்த்து எம் பிரியா வீடு                                                     தருவது ஏன்
நாதம் செய்யும் தார் வேந்தே நமது செம் கோல் அது                                                         ஆகும்.
10
உரை
   
1715. அந்த மறைகள் தமக்கு உறுதி ஆவார் அந்நூல் வழி                                                       கலி நோய்
சிந்த மகத் தீ வளர்த்து எம்பால் சிந்தை செலுத்தும்                                                       அந்தணரால்
இந்த மறையோர் வேள்வி மழைக்கு ஏது வாகும் இவர்                                                       தம்மை
மைந்த இகழ்ந்து கை விட்டாய் அதனான் மாரி                                                   மறுத்தன்று ஆல்.
11
உரை
   
1716. மும்மைப் புவனங்களும் உய்ய முத்தீ வேட்கும் இவர்                                                         தம்மை
நம்மைப் போலக் கண்டு ஒழுகி நாளும் நானா வறம்                                                         பெருக்கிச்
செம்மைத்தருமக் கோல் ஓச்சித் திகிரி உருட்டி வாழ்தி                                                         என
உம்மைப் பயன் போல் எளி வந்தார் உலவாக் கிழி                                                    ஒன்று உதவுவார்.
12
உரை
   
1717. இந்தக் கிழியில் எத்துணைப் பொன் எடுத்து வழங்கும்                                                   தொறும் நாங்கள்
தந்த அளவில் குறையாத தன்மைத்து ஆகும் இது                                                         கொண்டு
வந்த விலம்பாது அகற்று என்று கொடுத்து வேந்தன்                                                    மனக் கவலை
சிந்தத் திரு நீறு சாத்தி மறைந்தார் ஐயர் திரு உருவம்.
13
உரை
   
1718. கண்ட கனவு நனவு ஆகத் தொழுதான் எழுந்து                                                    எளரியர் கோன்
அண்டர் பெருமான் திருவடிபோல் அம் பொன் கிழியை                                                    முடித்தலை மேல்
கொண்டு மகிழ்ச்சி தலை சிறப்ப நின்றோர் முகூர்த்தம்                                                         கூத்தாடித்
தண்டா அமைச்சர் படைத் தலைவர் தமக்கும் காட்டி                                                        அறிவித்தான்.
14
உரை
   
1719. செம் கண் அரி மான் பிடர் சுமந்த தெய்வ மணிப்                                                   பூந்தவிசு ஏற்றிச்
சங்கம் முழங்க மறை முழங்கச் சாந்தம் திமிர்ந்து தாது                                                         ஒழுகத்
தொங்கல் அணிந்து தசாங்க விரைத் தூப நறு நெய்ச்                                                    சுடர் வளைத்து
கங்கை மிலைந்த கடவுள் எனக் கருதிப் பூசை வினை                                                        முடித்தான்.
15
உரை
   
1720. அடுத்து வணங்கி வலம் செய்திட்டு அம் பொன்                                             கிழியைப் பொதி நீக்கி
எடுத்து முத்தீ வினைஞர்க்கும் யாகங்களுக்கும்                                                     யாவர்க்கும்
மடுத்து நாளும் வரையாது வழங்க வழங்க                                                     அடியார்க்குக்
கொடுக்கக் குறையா வீட்டு இன்பம் ஆயிற்று ஐயர்                                                     கொடுத்த கிழி.
16
உரை
   
1721. ஆய பொதியில் விளை பொன்னால் அசும்பு செய்து
                                                  விசும்பு இழிந்த
கோயில் அதனை அகம் புறமும் குயின்று ஞானக்
                                                  கொழுந்து அனையது
ஆயில் அறுகால் பீடிகை வான் தடவு கொடிய நெடிய
                                                        பெரு
வாயில் பிறவும் அழகெறிப்ப வேய்ந்தான் மறையின்
                                                  வரம்பு அறிந்தான்.
17
உரை
   
1722. முந்திக்குறையா நிதிக்கடலை முகந்து முகந்து நாள்                                                         தோறும்
சிந்திக் குலபூடணக் கொண்ட தெய்வ தரும்ப பயிர்                                                         வளர்ப்பப்
பந்தித் திரை முந் நீர் மேகம் பருகிச் சொரியப் பல                                                         வளனும்
நந்திக் கன்னி நாடு அளகை நகர் போல் செல்வம்                                                      தழைத்தன்றே.
18
உரை
   
1723. வையா கரணர்கணையா இகர் மறை வல்லோர் மறை                                               முடி சொல்லாய் ஓர்
மெய்யா மிருதிகள் பொய்யா விரதிகள் வேள்வித்                                          தழல்களை வாழ்விப் போர்
பை ஆடு அரவு அணி ஐயா னனனுரை பகர் வோர்                                          உலகியல் அகல் வோர்கள்
எய்யாது உறைதலின் ஐயா தளகையது என்னப்                                               பொலிவது தென்னாடு.
19
உரை