1724. வேதம் தனது வடிவு என்று விண்ணின்று இழிந்த                                                    விமான மறைக்
கீதன் செழியன் தனக்கு உலவாக் கிழி தந்து அளித்த                                                     வழி இது அப்
போதம் கடந்த பொருள் வணிகப் புத்தேள் மாட மணி                                                         மறுகு
பாதம் தடவ நடந்து வளை பகர்ந்த பரிசு பகர்                                                         கிற்பாம்.
1
உரை
   
1725. இறைவன் குல பூடணன் திகிரி இவ்வாரு உருட்டு நாள்                                                         முன்னாள்
சிறை வண்டு அறையும் தாருவன தெய்வ முனிவர்                                                     பன்னியர் தம்
நிறை அன்று அளந்து கட்டுக என நெடியோன்                                            மகனைப் பொடி ஆக்கும்
அறவன் தானோர் காபாலி ஆகிப் பலிக்கு வரு                                                        கின்றான்.
2
உரை
   
1726. வேதம் அசைக்கும் கோவணமும் மெய்யில் நீறும் உள்                                                         ஆகக்
கீதம் இசைக்கும் கனிவாயும் உள்ளே நகையும்                                                     கிண்கிணி சூழ்
பாதமலரும் பாதுகையும் பலி கொள் கலனும் கொண்டு                                                         ரதி
மாதர் கணவன் தவ வேடம் எடுத்தால் ஒத்து வரும்                                                         எல்லை.
3
உரை
   
1727. விள்ளும் கமலச் சேவடி சூழ் சிலம்பின் ஒலியும் மிடறு                                                         அதிரத்
துள்ளும் கீத ஒலியும் கைத்துடியின் ஒலியும் துளைச்                                                     செவிக் கீண்டு
உள்ளம் பிளந்து நிறை களைந்து ஈர்த் தொல்லைவரும்                                                   முன் வல்லியர்கள்
பள்ளம் கண்டு வருபுனல் போல் பலிகொண்டு இல்லின்                                                   புறம் போந்தார்.
4
உரை
   
1728. ஐயம் கொண்டு அணைவார் ஐயர் பரிகலத்து ஐயம்                                                         அன்றிக்
கை அம் பொன் வளையும் பெய்வார் கருத்து நாண்                                                     அன்றிக் காசு
செய்யும் பொன் மருங்கு நாணும் இழப்பர் வேள் சிலை                                                     அம் பன்றிச்
கொய்யும் தண் மலர்க் கண் அம்பும் கொங்கையில்                                                 சொரியச் சோர்வார்.
5
உரை
   
1729. மட மயில் அனையார் எங்கள் வளையினைத் தருதிர்                                                         என்றார்
கடல் விடம் அயின்றான் உங்கள் கந்தரத்து உள்ளது                                                         என்றான்
தடமதி கொம்பு அனார் எம் கலையினத் தருதிர்                                                         என்றார்
முட மதி மிலைந்தான் உங்கள் முகமதி இடத்தது                                                         என்றான்.
6
உரை
   
1730. இடை அறிந்து எம்மைச் சேர்மின் என்றனர் இளையர்                                                         எம் கோன்
கடல் அமுது அனையீர் நுங்கள் இடை இனிக் காணாது                                                         என்றான்
மட நலார் அஃதேல் பண்டை வண்ணம் ஈந்து இல்லில்                                                         செல்ல
விடை அளித்து அருண் மின் என்றார் வேலைபுக்கு                                                  உறங்கும் என்றான்.
7
உரை
   
1731. நங்கையர் கபாலிக்கு என்று நடு இலை போலும்                                                         என்றார்
அம் கண் நடுவு இலாமை நும்மனோர்க் அடுத்தது                                                         என்றான்
மங்கையர் அடிகள் நெஞ்சம் வலிய கல் போலும்                                                         என்றார்
கொங்கு அலர் கொன்றை யானும் கொங்கையே வன்                                                      கல் என்றான்.
8
உரை
   
1732. காது வேல் அன்ன கண்ணார் கங்கை நீர் சுமந்தது                                                         ஏதுக்கு
ஓதுமின் என்றார் நும்பால் உண் பலி ஏற்க என்றான்
ஏது போல் இருந்தது ஐய இசைத்த செப்பு என்றார்                                                         ஈசன்
கோது உறா அமுது அன்னீர் நும் கொங்கை போல்                                                 இருந்தது என்றான்.
9
உரை
   
1733. கறுத்ததை எவன் கொல் ஐய கந்தரம் என்றர் வேளை
வெறுத்தவன் மாரி பெய்தற்கு என்றனன் விழியால்                                                         வேலை
ஒறுத்தவர் ஆவது என்றீர் உத்தரம் என்றார் கூற்றைச்
செறுத்தவன் தென்பால் நின்று நோக்கினால் தெரிவது                                                         என்றான்.
10
உரை
   
1734. செக்கர் அம் சடையான் கண்ணில் தம் உருத் தெரிய                                                         நோக்கி
இக் கொடியார் போல் கண் உள் எம்மையும் இருத்திர்                                                         என்றார்
நக்கன் உம் தனை அன்னார் கண் இடைக் கண்டு                                                  நகைத்து நம்மின்
மிக்கவர் நும் கண் உள்ளார் விழித்து அவர்க்                                                 காண்மின் என்றான்.
11
உரை
   
1735. அஞ்சலிப் போது பெய்வார் சரணம் என்று அடியில்                                                         வீழ்வார்
தஞ்சு எனத் தளிர்க்கை நீட்டித் தழுவிய கிடைக்கும்                                                         தோறும்
எஞ்சுவான் எஞ்சாது ஏத்தி எதிர் மறை எட்டும்                                                         தோறும்
வஞ்சனாய் அகல்வான் மையல் வஞ்சியர்க்கு அணியன்                                                         ஆமோ.
12
உரை
   
1736. அடுத்து எமைத் தழாதிர் ஏனீர் அவிழ்த்த பூம்                                                     கலையை மீள
உடுத்துமின் உம்பால் யாங்கள் மையல் நோய் உழப்ப                                                         நோக்கிக்
அடுத்து எமர் முனியா முன்னம் கழற்றிய வளையும்                                                         கையில்
எடுத்து இடும் என்றார் நாளை இடுதும் என்று                                                      ஏகினானே.
13
உரை
   
1737. பிள்ளை வெண் திங்கள் வேய்ந்த பிரான் கொண்டு                                                    போன நாணும்
உள்ளம் மீட்கல் ஆற்றாது உயங்கினார் கலையும்                                                         சங்கும்
துள்ள ஐம் கணையான் வாளி துளைப்ப வெம் பசலை                                                         யாகம்
கொள்ளை கொண்டு உண்ண நின்றார் அந்நிலை                                                 கொழுநர் கண்டார்.
14
உரை
   
1738. பொய் தவ வடிவாய் வந்து நம் மனைப் பொன்னின்                                                         அன்னார்
மெய் தழை கற்பை நாண வேரொடும் களைந்து போன
கைதவன் மாடக் கூடல் கடவுள் என்று எண்ணித்                                                         தேர்ந்தார்
செய் தவவலியால் காலம் மூன்றையும் தெரிய வல்லார்.
15
உரை
   
1739. கற்புத் திரிந்தார் தமை நோக்கிக் கருத்துத் திரிந்தீர்                                                         நீர் ஆழி
வெற்புத் திரிந்த மதில் கூடல் மேய வணிகர்                                                     கன்னியராய்ப்
பொற்புத் திரியாது அவதரிப்பீர் போம் என்று இட்ட                                                     சாபம் கேட்டு
அற்புத் திரிந்தார் எங்களுக்கு ஈது அகல்வது எப்போது                                                     என முனிவர்.
16
உரை
   
1740. அந்த மாட மதுரை நகர்க்கு அரசு ஆகிய சுந்தரக்                                                         கடவுள்
வந்து நும்மைக் கைதீண்டும் வழி இச்சாபம் கழியும்                                                         எனச்
சிந்தை தளர்ந்த பன்னியரும் தென்னர் மதுரைத்                                                     தொல் நகரில்
கந்த முல்லைத் தார் வணிகர் காதல் மகளிராய்ப்                                                         பிறந்தார்.
17
உரை
   
1741. வளர்ந்து பேதை இளம் பருவ மாறி அல்குல் புடை                                                         அகன்று
தளர்ந்து காஞ்சி மருங்கு ஒசியத் ததும்பி அண்ணாந்து                                                      அரும்பு முலை
கிளர்ந்து செல்லும் பருவத்தில் கிடைத்தார் ஆக                                                      இப்பான்மண்
அளந்த விடையான் வந்து வளை பகரும் வண்ணம்                                                      அறைகிற்பாம்.
18
உரை
   
1742. கங்கை கரந்து மணி கண்டம் கரந்து நுதல் கண் கரந்து                                                         ஒரு பால்
மங்கை வடிவம் கரந்து உழையும் மழுவும் கரந்து மழ                                                         விடை ஊர்
அம் கண் அழகர் வளை வணிகர் ஆகி ஏனம் அளந்து                                                         அறியாச்
செம் கமலச் சேவடி இரண்டும் திரை நீர் ஞால மகள்                                                         சூட.
19
உரை
   
1743. பண்டு முனிவர் பன்னியர் பால் கவர்ந்த வளையே                                                      பட்டு வடம்
கொண்டு தொடுத்து மீண்டு அவர்க்கே இடுவோம்                                          என உள் கோளினர் போல்
தொண்டர் தொடுத்த கை வண்ணத்து உணர்ந்தார்                                             போலத் தோள் சுமந்து
மண்டு வளையை விலை பகர்ந்து வணிக மறுகில்                                                      வருகின்றார்.
20
உரை
   
1744. மன்னு மறையின் பொருள் உரைத்த மணிவாய் திறந்து                                                   வளை கொண்மின்
என்னும் அளவில் பருவ முகில் இமிழ் இன்னிசை                                            கேட்டு எழில் மயில் போல்
துன்னு மணி மேகலை மிழற்றத் தூய வணிகர் குல                                                         மகளிர்
மின்னு மணி மாளிகை நின்றும் வீதி வாயில்                                                         புறப்பட்டார்.
21
உரை
   
1745. வளைகள் இடுவார் எனத்தங்கள் மனம் எல்லாம் தம்                                                    புடை ஒதுங்கத்
தளைகள் இடுவார் வருகின்றர் தம்மைக் கொம்மை                                                    வெம் முலையார்
துளைகள் இடும் தீம் குழல் இசை போல் சுரும்பு பாடக்                                                    கரும் குழல் மேல்
விளை கள் ஒழுக நுடங்கி வரு மின் போல் அடைந்து                                                         கண்டார்கள்.
22
உரை
   
1746. கண்ட வடிவால் இளைப்பதற்குக் கழிபேர் அன்பு                                                       காதல்வழிக்
கொண்டு செல்ல ஒருசார் தம் குணனா நாணமுதல்                                                         நான்கும்
மண்டி ஒரு சார் மறு தலைப்ப மனமும் உழன்று                                                         தடுமாற
அண்டர் பெருமான் விளையாடற்க் அமையச் சூழ்ந்து                                             ஆர் அமுது அனையார்.
23
உரை
   
1747. இரங்கும் மேகலை சிலம்பு அன்றி ஏனைய
விரும்பிய குழை தொடி மின் செய் கண்டிகை
மருங்கு இறச் சுமப்பினும் வளைகைக்கு இல் எனின்
அரும்பிய முலையினார்க்கு அழகு உண்டாகுமோ.
24
உரை
   
1748. செல்வ நல் வணிகிர் எம் செம் கைக்கு ஏற்பன
நல் வளை தெரிந்திடும் என்று நாய்கர் முன்
வல்வளர் இள முலை மகளிர் மின் உமிழ்
கல்வளர் கடக மெல் காந்தள் நீட்டினார்.
25
உரை
   
1749. பண் தரும் கிளவி அம் கயல் கண் பாவை கைத்
தண் தளிர் பற்றிய தடக்கை மாடர் கைம்
முண்டகம் பற்றியே முகிழ்த்துப் பல் வரி
வண்டுகள் ஏற்றுவார் மையல் ஏற்றுவார்.
26
உரை
   
1750. புங்கவன் இடுவளை புடைத்து மீள வந்து
எங்களுக்கு இடவிலை இடுதி ரால் எனக்
கொங்கு அவிழ் பைங்குழல் எருத்தம் கோட்தி நின்று
அம் கரம் நீட்டுவார் ஆசை நீட்டுவார்.
27
உரை
   
1751. எமக்கு இடும் எமக்கு இடும் எனப் பின் பற்றியே
அமைத் தடம் தோளினார் அனங்கள் பூம் களை
தமைத் துளை படுத்த ஒர் சார்பு இலாமையால்
அமைப்புறு நாண் முதல் காப்பு நீங்கினார்.
28
உரை
   
1752. முன் இடும் வளை எலாம் கழல முன்பு சூழ்ந்து
இன்னவை பெரிய வேறு இடும் என்று இட்டபின்
அன்னவும் அனையவே ஆக மீள வந்து
இன்னமும் சிறிய வா விடும் என்று ஏந்துவார்.
29
உரை
   
1753. பின் இடும் வளைகளும் சரியப் பேது உறா
முன் எதிர் குறுகி நீர் செறித்த மொய்வளை
தன்னொடு கலைகளும் சரிவதே என
மின் என நுடங்கினார் வேல் நெடும் கணார்.
30
உரை
   
1754. இவ்வளை போல் வளையாம் முன் கண்டிலேம்
மெய்வளை வணிகிர் இவ் அரிய வெள் வளை
எவ்வயின் உள்ள இன்று இனிய ஆகி எம்
மெய்ம் மயிர் பொடிப்பு எழ வீக்கம் செய்தவே.
31
உரை
   
1755. நாளையும் வளை இட நண்ணும் இங்கு என்பார்
கோள்வளை விலை இது கொண்டு போம் என்பார்
வாள் விழி ஈர் பினாள் வாங்கிக் கோடும் என்று
ஆள் அரி யேறு அனார் ஆடிப் போயினார்.
32
உரை
   
1756. போயின வணிகர் தம் புடையின் மின் எனப்
பாயின மகளிரும் பலரும் காண முன்
மேயின விண் இழி விமானத்து உள் ஒளி
ஆயின திரு உரு ஆகித் தோன்றினார்.
33
உரை
   
1757. மட்டு அலம்பு கோதையார் முன் வளை பகர்ந்த                                                     வணிகர் தாம்
பட்டு அசைந்த அல்குல் நங்கை பாகர் ஆகும் என                                                         வியந்து
உட்ட தும்பு உவகை வெள்ளம் உற்று எழுந்த குமிழி                                                         போல்
சுட்ட தும்பு புனலில் ஆழ்ந்த களி அடைந்த நகர்                                                         எலாம்.
34
உரை
   
1758. உருவிலாளி உடல் பொடித்த ஒருவர் கூட இருவரான்
மரு இலார் திருக் கை தொட்டு வளை செறித்த                                                         நீர்மையால்
கருவின் மாதர் ஆகி நாய்கர் கன்னிமார் கண் மின்னு                                                         வேல்
பொருவில் காளை என வரம்பில் புதல் வரைப்                                                         பயந்தனர்.
35
உரை
   
1759. பிறந்த மைந்தர் அளவு இறந்த பெருமை கொண்ட                                                         பெருமிதம்
சிறந்த வீரம் ஆற்றல் ஏற்ற திறல் புனைந்து வைகினார்
மறந்த தும்பு வேல் நெடும் கண் வணிக மாதர் சிறிது                                                         நாள்
துறந்து அன்று அருள் அடைந்து துணை அடிக்கண்                                                         வைகினார்.
36
உரை