தொடக்கம் |
|
|
1760. | கொத்து இலங்கு கொன்றை வேய்ந்த கூடல் ஆதி மாட நீள் பத்தியம் பொன் மருகு அணைந்து வளைபகர்ந்த பரிசு முன் வைத்து இயம்பினாம் இயக்க மாதர் வேண்ட அட்டமா சித்தி தந்த திறம் இனித் தெரிந்த வாறு செப்புவாம். | 1 |
|
|
உரை
|
|
|
|
|
1761. | மின் அலங்கள் வாகை வேல் விழுப் பெரும் குலத்தினில் தென்னவன் தன் ஆணை நேமி திசை எலாம் உருட்டும் நாள் முன்னை வைகல் ஊழி தோறும் ஒங்கும் மொய்வரைக்கணே மன்னு தண் பராரை ஆல நிழல் மருங்கு மறை முதல். | 2 |
|
|
உரை
|
|
|
|
|
1762. | அடுப்ப மாசு இல் வெள்ளி வெற்பின் அருகு இருக்கும் மரகதம் கடுப்ப வாம மிசை இருந்து கனக வெற்பன் மகள் எனும் வடுப்படாத கற்பினாள் மடித்து வெள் இலைச் சுருள் கொடுப்ப நேசம் ஊறு போக குரவன் ஆகி வைகினான். | 3 |
|
|
உரை
|
|
|
|
|
1763. | பிருங்கி நந்தியே முதல் பெரும் தகைக் கணத்தரும் மருங்கு இருந்த சனகாதி மா தவத்தர் நால்வரும் ஒருங்கு இறைஞ்சி உண்ண உண்ண அமுதம் ஊறு சிவ கதைக் கரும்பு அருந்த வாய் மலர்ந்து கருணை செய்யும் எல்லை வாய். | 4 |
|
|
உரை
|
|
|
|
|
1764. | பௌவம் மூழ்கு சூர் தடிந்த பாலனுக்கு முலை கொடுத்து தெவ்வம் ஆய வினைகள் தீர் இயக்க மாதர் அறுவரும் தெய்வ நீறு முழுதும் அணிந்து செய்ய வேணி கண்டிகைச் சைவ வேட மாதவம் தரித்து வந்து தோன்றினார். | 5 |
|
|
உரை
|
|
|
|
|
1765. | மந்திரச் சிலம்பு அலம்பும் மலரடிக் கண் வந்தி செய்து எந்தை அட்ட சித்தி வேண்டும் எங்களுக்கு எனத் தொழா அம் தளிர்க் கையவர் இரப்ப அண்ணல் தன் மடித்தலம் தந்திருக்கும் மாதை அங்கை சுட்டி ஈது சாற்றும் ஆல். | 6 |
|
|
உரை
|
|
|
|
|
1766. | அலர் பசும் பொலங் கொம்பு அன்ன வணங்கி இவண் நிறைவால் எங்கும் மலர் பரா சத்தி ஆகி மகேசையாய் அணிமா ஆதிப் பலர் புகழ் சித்தி எட்டும் பணிந்து குற்றேவல் செய்யும் சிலதியர் ஆகிச் சூழ்ந்து சேவகம் செய்ய வைகும். | 7 |
|
|
உரை
|
|
|
|
|
1767. | இவளை நீர் சிந்தித் தான் முன் நீட்டிய வினையை நீக்கித் தவலரும் சித்தி எட்டும் தரும் எனக் கருணை பூத்துச் சிவபரம் சோதி எட்டுச் சித்தியும் தெளித்தல் செய்தான் அவர் அது மறந்தார் உம்மை ஆழ் வினை வலத்தான் மன்னோ. | 8 |
|
|
உரை
|
|
|
|
|
1768. | செழுமதிப் பிளவு வேய்ந்த தேவும் அக் குற்றம் நோக்கி முழுமதி முகத்தினாரை முனிந்து நீர் பட்ட மங்கைப் பழுமரம் முதலாம் ஞானப் பாறையாய் கிடமின் என்னக் கழுமல் உற்று அவர் தாழ்ந்து கழிவது இச் சாபம் என்றார். | 9 |
|
|
உரை
|
|
|
|
|
1769. | இப்படிக் கரும் கலாகிக் கிடத்தி ஆயிரம் ஆண்டு எல்லைக் அப்புறம் மதுரை நின்று அடுத்து உமை தொடுத்த சாபத்து உப்பற நோக்கி நுங்கள் தொல் உரு நல்கிச் சித்தி கைப்படு கனிபோல் காணக் காட்டுதும் போதிர் என்றான். | 10 |
|
|
உரை
|
|
|
|
|
1770. | கொடி அனார்கள் அறுவரும் நெடிய வான் நிமிர்ந்து கார் படியும் பட்ட மங்கையால் அடியில் பாறை ஆயினார். | 11 |
|
|
உரை
|
|
|
|
|
1771. | கதிர் கலம் பெய் காட்சி போல் உதிர் பழத்தின் உடல் எலாம் புதை படக் கிடந்தனர் மத அரித் தடம் கணார். | 12 |
|
|
உரை
|
|
|
|
|
1772. | பருவம் ஆயிரம் கழிந்து ஒருவ மாட மதுரை எம் குரவன் எண்குணத்தினான் திரு உளம் திரும்பினான். | 13 |
|
|
உரை
|
|
|
|
|
1773. | தன்னது இச்சை கொண்டது ஓர் இன் அருள் குரவனாய் அந் நெடும் கல் ஆயினார் முன்னர் வந்து தோன்றினான். | 14 |
|
|
உரை
|
|
|
|
|
1774. | இருட்ட தும்பு கோதையார் மருட்ட தும்பு வினை கெட அருள்ததும்பு கண்ணினால் தெருள்ததும்ப நோக்கினான். | 15 |
|
|
உரை
|
|
|
|
|
1775. | அடிகள் நோக்க அம்புயம் கடிகொள் நெய்தல் காந்தள் பைங் கொடி கொள் முல்லை குமுத மேல் படியப் பூத்த பாறையே. | 16 |
|
|
உரை
|
|
|
|
|
1776. | தாக்க வேத கத் திரும் பாக்கம் உற்ற பொன் என நீக்கம் அற்ற இருள் மல வீக்கம் அற்று விட்டதே. | 17 |
|
|
உரை
|
|
|
|
|
1777. | நிறையும் அன்பு எனும் நதி பொறை எனும் கரை கடந்து இறைவனின் அருள் கடல் துறையின் வாய் மடுப்ப வே. | 18 |
|
|
உரை
|
|
|
|
|
1778. | எழுந்து இறை அடிக் கணே அழுந்து நேச மொடு தவக் கொழுந்து அனார்கள் அறுவரும் விழுந்து இறைஞ்சினார் அரோ. | 19 |
|
|
உரை
|
|
|
|
|
1779. | குமரற்கு ஊட்டும் இள முலை உமை ஒப்பார்கள் சென்னி மேல் அமலச் சோதி அம்கை ஆங்கு கமலப் போது சூட்டினான். | 20 |
|
|
உரை
|
|
|
|
|
1780. | சித்தி எட்டும் அந் நலார் புத்தியில் கொளுந்தவே கைத்தலத்தில் வைத்தது ஒர் முத்து எனத் தெருட்டுவான். | 21 |
|
|
உரை
|
|
|
|
|
1781. | அணிமா மகிமா இலகிமா அரிய கரிமாப் பிராத்திமலப் பிணி மாசு உடையோர்க்கு அரிய பிர காமியம் ஈசத்துவம் மெய் துணிமா யோகர்க்கு எளிய வசித்துவம் என்று எட்டாம் இவை உளக் கண் மணி மாசு அறுத்தோர் விளையாட்டின் வகையாம் அவற்றின் மரபு உரைப்பாம். | 22 |
|
|
உரை
|
|
|
|
|
1782. | அறவும் சிறிய உயிர் தொறும் தான் பரம காட்டை அணுவாய்ச் சென்று உறையும் சிறுமை அணி மா ஆம் உவரி ஞாலம் முதல் மேல் என்று அறையும் சிவா அந்தம் ஆறா ஆறும் முள்ளும் புறனும் அகலாதே நிறையும் பெருமை தனை அன்றோ மகிமா என்னும் நிரம்பிய நூல். | 23 |
|
|
உரை
|
|
|
|
|
1783. | இலகு மேரு பாரம் போல் இருக்கும் யோகி தனை எடுத்தால் இலகுவான பர அணுப் போல் இருப்பது இலகிமா ஆகும் இலகு வான பர அணுப் போல் இருக்கும் யோகி தனை எடுத்தால் இலகு மேரு பாரம் என இருப்பது அன்றோ கரி மாவாம். | 24 |
|
|
உரை
|
|
|
|
|
1784. | பிலத்தில் இருந்தோன் அயன் உலகில் புகுதன் மீண்டும் பிலம் அடைதல் பலத்தின் மிகுந்த பிராத்திய தாம் பரகாயத்தின் நண்ணுதல் வான் புலத்தின் இயங்கல் இச் சித்த போகம் அனைத்தும் தான் இருக்கும் தலத்தின் இனைந்த படிவருதல் பிரகாமியம் ஆம் தவக் கொடியீர். | 25 |
|
|
உரை
|
|
|
|
|
1785. | விண்ணில் இரவி தன் உடம்பின் வெயிலால் அனைத்தும் விளக்குதல் போல் மண்ணில் உள ஆம் பொருள் பலவும் காலம் மூன்றும் வானத்தின் கண்ணில் உள ஆம் பொருளும் தன் காயத்து தெளியாது இருந்து அறிதல் எண்ணில் இதுவும் மறை ஒரு சார் பிரகாயம் என்று இயம்பும் ஆல். | 26 |
|
|
உரை
|
|
|
|
|
1786. | ஈசன் என முத் தொழிலும் தன் இச்சை வழி செய்து எழு புரவித் தேசன் முதல் கோள் பணி கேட்பத் திகழ்வது தீசத்துவம் ஆகும் பூசல் அவுணர் புள் விலங்கு பூத மனிதர் முதல் உலகும் வாச வாதி எண் மருந்தன் வசமாக் கொள்கை வசித்துவம் ஆம். | 27 |
|
|
உரை
|
|
|
|
|
1787. | எம்மை உணர்ந்த யோகியர்கள் இவற்றை விரும்பார் எனினும் அவர் தம்மை நிழல் போல் அடைந்து உலகர்க்கு அனையார் பெருமை தனை உணர்த்தும் செம்மை உடைய இவை என்னச் சித்தி எட்டும் தெளிவு எய்தக் கொம்மை முலையார் அறுவருக்கும் கொளுத்தினான் எண் குணச் செல்வன். | 28 |
|
|
உரை
|
|
|
|
|
1788. | தேவதேவு உபதேசித்த சித்தியைச் சிலம்பன் செல்வி பாவனை வலத்தால் நன்கு பயின்றுவான் வழிக் கொண்டு ஏகிப் பூவலர் கதுப்பின் நல்லார் அறுவரும் புரம் மூன்று அட்ட காவலன் விரும்பி வைகும் கயிலை மால் வரையில் புக்கார். | 29 |
|
|
உரை
|
|
|
|