1789. சந்து சூழ் மலயச் சிலம்பர் தவம் புரிந்த இயக்கி மார்க்
அந்த நால் இரு சித்தி தந்தது அறைந்தனன் அடி தொழா
வந்து மீன் வளவன் பொருட்டு வடாது வாயில் திறந்து                                                        அழைத்து
இந்து சேகரன் விடை இலச்சினை இட்டவாறு விளம்புவாம்.
1
உரை
   
1790. தோடு வெட்டி மலைத்து வாள் விதிர் துணை                                              விழிக்குயில் இள முளை
கோடு வெட்டிய குறி கொள் மேனியர் குடி கொள் மா                                              நகர் கடி கொள் பைங்
காடு வெட்டிய காரணக் குறி காடு வெட்டிய சோழன்                                                          என்று
ஏடு வெட்டிய வண்டு சூழ் பொழில் எயில் கொள் கச்சி                                                     உளான் அவன்.
2
உரை
   
1791. உத்தம சிவ பத்திரில் பெரிது உத்தமன் புது விரைகலன்
மித்தை என்று வெண் நீறு கண்டிகை ஆரம் என்று                                                 அணி மெய்யினான்
நித்த வேத புராணம் ஆதி நிகழ்த்திடும் பொருள்                                                         கண்ணுதல்
அத்தனனே பர தத்துவப் பொருள் என்று அளந்து                                                  அறி கேள்வியான்.
3
உரை
   
1792. அங்கம் ஆறோடு வேதம் நான்கும் அறிந்து                                       மெய்ப்பொருள் ஆய்ந்து உளம்
சங்கை கொண்டு அனுதினம் அரன்புகழ் சாற்று சைவ                                                     புராண நூல்
பொங்கும் இன் சுவை அமுது தன் செவி வாய் திறந்து                                                     புகட்டி உண்டு
எங்கள் நாயகன் அடி இணைகண் இருத்தும் அன்பு                                                     கருத்துளான்.
4
உரை
   
1793. முக்கண் நாயகன் முப்புரத்தை முனிந்த நாயகன்                                                       மங்கை ஓர்
பக்க நாயகன் மிக்க வானவர் பரவு நாயகன் அரவு                                                          அணிச்
சொக்க நாயகன் உடலும் செவியான் முகந்து சுவைத்                                                          தரும்
தக்க பாலோடு தேன் கலந்து தருக்கி உண்பவன்                                                      ஆயினான்.
5
உரை
   
1794. அம் கயல் கண் மடந்தை பாகன் அடித்தலம் தொழும்                                                       ஆசை மேல்
பொங்கி மிக்கு எழும் அன்பனாய் மது ரேசன் மின்னு                                                       பொலங்கழல்
பங்கயப் பதம் என்று நான் பணிவேன் எனப் பரிவு                                                       எய்தியே
கங்குலில் துயில்வான் கயல் புரை கண்ணி பங்கனை                                                       உன்னியே.
6
உரை
   
1795. அன்று செம்பியர் கோமகன் கனவின் கணே அருள்                                                       வெள்ளிமா
மன்றுள் நின்றவர் சித்தராய் எதிர்வந்து மன்னவ நின்                                                       உளத்து
ஒன்றும் அஞ்சல் ஒருத்தனாகி உருத்திரிந்து தனித்து                                                         வந்து
இன்று வந்தனை செய்து போதி எனப் புகன்றனர்                                                       ஏகினார்.
7
உரை
   
1796. கேட்டு வேந்தன் விழித்து உணர்ந்து கிளர்ந்த அற்புதன்                                                          ஆகிய
ஈட்டு சேனை அமைச்சுளார் பிறர் யாரும் இன்றி வழிக்                                                          கொளீஇ
நாட்டம் மூன்றவன் ஆம்வாள் கொடு நல் அருட்                                                    துணையாய் வழி
காட்ட அன்பு எனும் இவுளி மேல் கொடு கங்குல் வாய்                                                    வருவான் அரோ.
8
உரை
   
1797. கல்லும் ஆர் அழல் அத்தமும் பல கலுழியும் குண                                                      கனை கடல்
செல்லும் மா நதி பலவும் வான் நிமிர் கன்னலும் செறி                                                       செந் நெலும்
புல்லு மாநிலனும் கழிந்து புறம் கிடக்க நடந்து போய்
வல்லு மா முலையார் கணம் பயில் வைகை அம் துறை                                                       எய்தினான்.
9
உரை
   
1798. குறுகு முன்னர் அதிர்ந்து வைகை கொதித்து அகன்                                                    கரை குத்திவேர்
பறிய வன் சினை முறிய விண் தொடு பைந் தருக்களை                                                          உந்தியே
மறுகி வெள்ளம் எடுத்து அலைத்தர மன்னவன் கரை                                                   தன்னில் நின்று
இறுதியில் அவனைத் தொழற்கு இடையூறு இது என்று                                                  அஞர் எய்துவான்.
10
உரை
   
1799. இழுதொடும் சுவை அமுது பென் கலன் இட்டு உணாது                                                    இரு கண் கணீர்
வழிய வந்து விலக்குவாரின் வளைந்தது ஆறு பகல்                                                          செய்யும்
பொழுது எழும் பொழுதோ மறுக்கம் விளைக்குமே                                                     இகல் பூழியன்
வழுதி அன்றியும் வைகையும் பகை ஆனது என்று                                                     வருந்தினான்.
11
உரை
   
1800. வெள்ளம் நோக்கி அழுங்கு செம்பியன் மெலிவு                                             நோக்கி விரைந்தெழீஇக்
கள்ள நோக்கில் அகப்படாதவர் கனவு போல் அவன்                                                     நனவில் வந்து
துள்ள நோக்கு உடை அன்பருக்கு அருள் உருவம்                                                     ஆகியசித்தர்தாம்
பள்ளம் நோக்கி வரும் பெரும் புனல் வற்ற நோக்கினர்                                                          பார்த்தரோ.
12
உரை
   
1801. வறந்தவாறு கடந்து வந்து வடக்கு வாயில் திறந்து                                                          போய்
நிறைந்த காவல் கடந்து வீதிகள் நிந்தி நேரியர்                                                      வேந்தனைச்
சிறந்த வாடக புனித பங்கய திப்பியப் புனல் ஆடுவித்து
அறம் தவாத அறை கான கண்டர் தம் ஆலயம்                                                      புகுவித்தரோ.
13
உரை
   
1802. வெம்மை செய் கதிர்கால் செம்பொன் விமான                                                  சேகரத்தின் மேய
தம்மையும் பணிவித்து எண் இல் சராசரம் அனைத்தும்                                                        ஈன்ற
அம்மை அம் கயல் கணாளம் அணங்கையும் பணிவித்து                                                        உள்ளம்
செம்மை செய் இன்ப வெள்ளத்து அழுத்தினார்                                                        சித்தசாமி.
14
உரை
   
1803. எண்ணிய எண்ணி ஆங்கே யான் பெற முடித்தாய்                                                          போற்றி
பண்ணியன் மறைகள் தேறா பால்மொழி மணாள                                                          போற்றி
புண்ணியர் தமக்கு வேதப் பொருள் உரை பொருளே                                                          போற்றி
விண் இழி விமான மேய சுந்தர விடங்க போற்றி.
15
உரை
   
1804. எவ்வுடல் எடுத்தேன் மேல் நாள் எண் இலாப் பிறவி                                                         தோறும்
அவ் உடல் எல்லாம் பாவம் மறம் பொருட்டாக அன்றோ
தெவ் உடல் பொடித்தாய் உன்றன் சேவடிக்கு அடிமை                                                         பூண்ட
இவ் உடல் ஒன்றே அன்றோ எனக்கு உடல் ஆனது ஐயா.
16
உரை
   
1805. இன்னன பலவும் ஏத்தி இறைஞ்சி இப் பல் வரமும்                                                         வேண்டும்
மின் நகு வேலினானை வேந்த நீ போந்த வண்ணம்
தென்னவன் அறிந்தால் ஏதம் செய்யும் என்று ஆர்த்தார்க்                                                              கண்ணி
மன்னைச் சித்த சாமி உத்தர வழிக் கொண்டு ஏகா.
17
உரை
   
1806. மண்ணினை வளர்க்கும் வைகை வடகரை அளவு                                                        நண்ணிப்
புண்நிய நீற்றுக் காப்புப் புண்டர நுதலில் சாத்தி
உள் நிறை கருத்துக்கு ஏற்ப உறுதுணை உனக்கு                                                        உண்டாகி
நண்ணுக என்று பொன்னி நாடனை விடுத்து மீண்டு.
18
உரை
   
1807. காப்புச் செய்த கதவில் விடைக்குறி
யாப்புச் செய்து அமைத்து ஈர்ஞ்சடைச் சித்தர் போய்த்
துப்புக் கைவரை சுழ் வட மேருவில்
கோப்புச் செய்த பொன் கோயிலின் மேயினார்.
19
உரை
   
1808. கங்குலின் அரும் கை குறைப்பான் எனச்
செம் கை நீட்டித் தினகரன் தோன்றலும்
எங்கள் நாயகன் இட்ட குறி அறிந்து
அங்கண் வாயில் திறப்பவர் ஐயுறா.
20
உரை
   
1809. மற்றை வாயில் கண் மூன்றினும் வல்லை போய்
உற்று நோக்கினர் தாம் நென்னல் ஒற்றிய
கொற்ற மீனக் குறி பிழை யாமை கண்டு
எற்றி இது ஆம் கொல் என்று ஏந்தல் முன் எய்தினார்.
21
உரை
   
1810. போற்றி மன்ன நம் பொன் அம் கயல் குறி
மாற்றி உத்தர வாயில் கதவு அதில்
ஏற்று இலச்சினை இட்டனர் யாரை என்று
ஆற்றல் வேந்த அறிகிலம் யாம் என்றார்.
22
உரை
   
1811. வையை நாடனும் வந்து அது நோக்கு உறீஇ
ஐய இன்னது ஓர் அற்புத மாயையைச்
செய்ய வல்லவர் யார் எனத் தேர் இலன்
ஐயம் எய்தி அகன் மனை நண்ணினான்.
23
உரை
   
1812. மறுத்த உண்டியன் மா மலர்ப் பாயலை
வெறுத்து அகன்று தரை மேல் பள்ளி கொள்ளவும்
பொறுத்தனன் அன்று துயின்றான் இன் அருள்                                                     போழ்தினில்
கறுத்த கண்டர் கன வினில் கூறுவார்.
24
உரை
   
1813. மட்டது அலம்பிய தாதகி மாலையான்
உட்ட தும்பி ஒழுகிய அன்பினால்
கட்டு இல் அங்கு எயில் கச்சியில் காடு எலாம்
வெட்டி நம் புடை வித்திய பத்தியான்.
25
உரை
   
1814. வந்து நமை வழி பட வேண்டினான்
இந்த வாயில் திறந்து அழைத்து இன் அருள்
தந்து மீள விடுத்துப் பின் ஆட் கொளீஇ
நந்த மால் விடை நாம் பொறித்தேம் எனா.
26
உரை
   
1815. அருளினான் ஐயம் தேற்றி அகன்றபின்
மருளின் நீங்கி மலர்க்கண் விழித்து எழீஇ
வெருளினான் வெயர்த்தான் விம்மினான் பல
பொருளின் ஆற்றுதித்தான் குல பூடணன்.
27
உரை
   
1816. வள்ளல் அன்புக்கு எளிவந்த மாண்பு கண்டு
உள்ள உள்ள நின்று நூற்று எழும் அற்புத
வெள்ளமும் பரமானந்த வெள்ளமும்
கொள்ளை கொண்டு தன் கோமனை நீங்கினான்.
28
உரை
   
1817. அளி அறா மனத்து அன்புடைய அன்பருக்கு
எளியர் ஆடலை யார்க்கும் வெளிப்படத்
தெளியு மாறு தெளிவித்துத் தன்னைப் போல்
விளி இலா இன்ப வெள்ளத்து அழுத்தினான்.
29
உரை
   
1818. கோடாத செங்கோலும் வெண் குடையும் கோ முடியும்
ஏடார் அலங்கல் இரா சேந்திரற்கு அளித்துத்
தோடார் இதழியான் தாள் கமலம் சூடி வான்
நாடாள அரசு உரிமை பெற்றான் னரபதியே.
30
உரை