தொடக்கம் |
|
|
1819. | சம்பு மதுரைப் பரன் இரவு தனியே வந்து தனைப் பணிந்த வெம்பு கதிரோன் மருமானை விடுத்து மீண்டும் தாழ் இறுக்கி அம் பொன் கதவின் விடை பொறித்தது அறைந்தும் தென்னன் அடு படைக்கு வம்பு மலர் தோய் புனல் பந்தர் வைத்துக் காத்த வகை சொல்வாம். | 1 |
|
|
உரை
|
|
|
|
|
1820. | தென்னன் அரச புரந்தரன் கோல் செலுத்த நாளில் காடு எறிந்த மன்னன் பின்னர் வெளிப்படையாப் போந்து போந்து மது ரேசன் பொன் அம் கமலத் தாள் வணங்கிப் போவான் முன்னிப் பொரும் பொருனைக் கன்னி நாடன் கேண்மை பெற விடுத்தான் வரிசைக் கையுறையே. | 2 |
|
|
உரை
|
|
|
|
|
1821. | பொன்னி நாடன் வர விடுத்த பொலம் பூண் ஆடை முதல் பிறவும் கன்னி நாடன் கை கவர்ந்து தானும் கலக்கும் தொடர் பினால் உன்னி வேறு கையுறையாய்த் துறவு செய்ய உவப்பு எய்திச் சென்னி காதல் மகல் கொடுப்பான் இசைந்தான் அந்தச் செழியற்கு. | 3 |
|
|
உரை
|
|
|
|
|
1822. | செழியன் தனக்கு வரையறுத்த செய்தி கேட்டுச் செம்பியர் கோன் கழி அன்புடை குலமகளைத் தான் போய்க் கொள்வான் கருதிமதி வழிவந்தவற்குத் தம்பி என வந்த அரச சிங்கம் எனும் பழி அஞ்சாதான் வஞ்சித்துப் பழனக் காஞ்சிப் பதி புகுவான். | 4 |
|
|
உரை
|
|
|
|
|
1823. | காஞ்சிப் பதிமுன் குறுகும் இளம் காவலோனைக் கடல் சேனை தாம் சுற்றிய வந்து எதிர் கொடு போய்த் தன் முன் தனக்கு என்று இருந்த மகள் ஆம் சிற்றிடையை மணம் புணர்த்தி அந்த மருகற்கு அரசு நிலை வாஞ்சித்து அரச புரந்தரனைப் பிடிக்க மதித்தான் வனம் எறிந்தான். | 5 |
|
|
உரை
|
|
|
|
|
1824. | மருமகன் தன்னுடன் எழுந்து மாமனான வளவர் கோன் பொரும் அகன்ற சேனை யானை புடை நெருங்க மதி வழித் திரு மகன் தன் மேல் அமர்த் திறம் குறித்து முரசு அறைந்து உரும் அகன்ற பல்லியம் ஒலிப்ப வந்துளான் அரோ. | 6 |
|
|
உரை
|
|
|
|
|
1825. | திரண்டு அதிர்ந்து எழுந்து வந்த சென்னி சேனை தன் நகர்க் இரண்டு யோசனைப் புறத்து இறுக்கும் முன்னர் ஒற்றரால் தெருண்டு தென்னனை மாட நீ கூடல் மேய சிவன் தாள் சரண் புகுந்து வேண்டுக என்று சார்ந்து தாழ்ந்து கூறுவான். | 7 |
|
|
உரை
|
|
|
|
|
1826. | அன்று பாதி இரவில் வந்து அடி பணிந்து தமியனாய்ச் சென்ற சென்னி என்னும் நின்ன திருவடிக் கண் அன்பினான் இன்றும் அந் நிலையனாய் எனக்கு வேண்டுவன விடுத்து ஒன்று கேண்மை புரிகுவான் உளத்தில் ஒன்றை உன்னினான். | 8 |
|
|
உரை
|
|
|
|
|
1827. | அறத்தினுக்கு உள்ளாகி அன்று நின்ற நீ அவன் செயும் மறத்தினுக்கு உள்ளாகி இன்று வன்மை செய்வதே அறப் புறத்தினார் புரம் பொடித்த புண்ணியா எனக் கரைந்து உறைத்து வேண்டினான் வேலை உம்பர் நாதன் அருளினால். | 9 |
|
|
உரை
|
|
|
|
|
1828. | மெய் துறந்த வாய்மை ஒன்று விண்ணின் நின்று அண்ணலே ஐது நுங்கள் சேனையேனும் மாகவத்து நாளைநீ எய்தி வந்த தெவ்வரோடு எதிர்ந்து உருத்து நின்று போர் செய்தி வென்றி நின்னது ஆல் செய்தும் என்று எழுந்தது ஆல். | 10 |
|
|
உரை
|
|
|
|
|
1829. | காய வாணி செவி நுழைந்த காலை வேந்தர் இந்திரன் நாயனார் அடிக்கணே நயந்த அன்பு முவகையும் ஆய வேலை வீழ்ந்து தாழ்ந்து அகன்று தன் இருக்கை போய் மேயினான் நிமிர்ந்த கங்குல் விடியும் எல்லை நோக்குவாள். | 11 |
|
|
உரை
|
|
|
|
|
1830. | கழிந்த கங்குல் இற விசும்பு கண் விழிக்கும் முன்னரே விழித்து எழுந்து சந்தி ஆதி வினை முடித்து வானநீர் சுழித்து அலம்பு வேணி அண்ணல் தூய பூசை செய்து எழீ இத் தெழித்து எழுந்த சேனை யோடு செரு நிலத்தை நண்ணினான். | 12 |
|
|
உரை
|
|
|
|
|
1831. | அலை சிறந்த சலதி மீது ஒரு ஆறு செல்லு மாறு போல் மலைசிறந்த நேரி வெற்பன் மள்ளர் சேனை வெள்ள மேல் கலை சிறந்த மதி நிறைந்த கன்னி நாடு காவலன் சிலை சிறந்த சிறிய சேனை சென்று அலைத்து நின்றதே. | 13 |
|
|
உரை
|
|
|
|
|
1832. | உருமு அன்ன குரலினார் உலவை அன்ன செலவினார் வெருவுதீயின் வெகுளியார் வெடித்த வீர நகையினார் செரு வின் மான அணியினார் சினஇ மடித்த வாயினார் இருவர் சேனை மள்ளரும் எதிர்ந்து கை கலந்தனர். | 14 |
|
|
உரை
|
|
|
|
|
1833. | மன்றல் அம் தெரியல் நேரி மலையவன் தமர்க்கு எலாம் தென்றல் அம் பொருப்பினான் திரண்டநான்கு கருவியும் மின் தயங்கு செய்ய வேணி விடையவன் தன் அருளினால் ஒன்று அனந்தம் ஆக வந்து உருத்து எதிர்ந்து தோன்றும் ஆல். | 15 |
|
|
உரை
|
|
|
|
|
1834. | தேரின் ஓதை கந்துகம் சிரிக்கும் ஓதை சொரிமதக் காரின் ஓதை பேரியம் கறங்கும் ஓதை மறவர் தம் போரின் ஒதை வீரர்தோள் புடைக்கும் ஒதை யோடு முந் நீர் ஓதை ஒன்று எனக் கலந்து ஒடுங்கி நின்றதே. | 2 |
|
|
உரை
|
|
|
|
|
1835. | சிலை பயின்ற வீரரோடு சிலை பயின்ற வீரரே கலை பயின்ற வாளரோடு கலை பயின்ற வாளரே கொலை பயின்ற வேல ரோடு கொலை பயின்ற வேலரே மலை பயின்ற மல்லரோடு மலை பயின்ற மல்லரே. | 17 |
|
|
உரை
|
|
|
|
|
1836. | கரி உகைத்த பாகரோடு கரி உகைத்த பாகரே பரி உகைத்த மறவரோடு பகை உகைத்த மறவரே கிரி உகைத்த வலவரோடு கிரி உகைத்த வலவரே எரி உகைத்து எதிர்ந்த கால் எனக் கலந்து மலை வரால். | 18 |
|
|
உரை
|
|
|
|
|
1837. | விடுக்கும் வாளி எதிர் பிழைப்பர் வெய்ய வாளி எய்து பின் தொடுக்கும் வாளி வில் லொடும் துணிப்பர் பின் கணிப்பு அற மடுக்கும் வாளி மார் புதைப்ப வாங்கி மற்று அவ் வாளி கொண்டு அடுக்கும் ஏவலரை எய்து அடர்ப்பர் கிள்ளி மள்ளரே. | 19 |
|
|
உரை
|
|
|
|
|
1838. | சோனை மாரியில் சரம் சொரிந்து நின்று துள்ளுவார் ஆன வாளி எதிர் பிழைத்து ஒதுங்கி நின்று அழல் சரம் கூனல் வாளி சிலை இறத் தொடுத்து எறிந்து கூவுவார் மீன கேதனத்து வேந்தன் வீரர் சென்னி வீரர் மேல். | 20 |
|
|
உரை
|
|
|
|
|
1839. | தறிந்த தாள் தகர்ந்த சென்னி தரை உருண்ட வரை எனச் செறிந்த தோள் சரிந்த தேர் சிதைந்த பல் படைக்கலம் முறிந்த யானை கையிறா முழங்கி வீழ்ந்த செம்புனல் பறிந்த பாரு பார் இடங்கள் பைத்த கூளி மொய்த்தவே. | 21 |
|
|
உரை
|
|
|
|
|
1840. | மடலின் நீடு தார் அலங்கன் மன்னர் சேனை இன்னவாறு உடலின் நீழல் அடி அகத்து ஒடுங்க உம்பர் உச்சியில் கடலின் நீடு கதிர் பரப்பு கடவுள் எய்தும் அளவு நின்று அடலின் நீடி இடைவிடாமல் அமர் உழந்ததால் அரோ. | 22 |
|
|
உரை
|
|
|
|
|
1841. | அந்தம் நாள் அனைத்தையும் அழிக்க நின்ற அரன் நுதல் சிந்தும் தீ எனக் கனன்று உருத்து நின்று தெறுதலால் எந்த ஆறும் அற வறப்ப இம்பர் அன்றி உம்பரும் வெந்து வான ஆறும் வற்ற வேனில் வந்து இறுத்ததால். | 23 |
|
|
உரை
|
|
|
|
|
1842. | மண் பிளந்து பிலம் நுழைந்து வரை பிளந்து நிரைய வாய் எண் பிளந்து நின்ற பொங்கர் இலை உகப் பிளந்து மேல் விண் பிளந்து பரிதி நீடு வெம் கரங்கள் யாரையும் கண் பிளந்து அழன்று வீசு கானல் எங்கும் ஆனதே. | 24 |
|
|
உரை
|
|
|
|
|
1843. | ஆயிடை அலகைத் தேரும் அடைந்தவர் வெயர்வும் அன்றித் தூய நீர் வறந்த அந்தச் சுடுபுலம் தோய்ந்த காலும் மீ உயர் மதி நிலவும் வெய்ய வாய்ச் சுடு நல் லோரும் தீயவர் தம்மைச் சேர்ந்தால் தீயவர் ஆவர் அன்றோ. | 25 |
|
|
உரை
|
|
|
|
|
1844. | விளை மத ஊற்று மாறி வெகுளியும் செருக்கும் மாறித் துளை உடைக் கைமான் தூங்கு நடைய வாய்ச் சாம்பிச் சோர்ந்த உளர் தரு ஊழிக் காலினோடும் ஆம் புரவி எய்த்துத் தளர் நடை உடைய வாகித் தைவரும் தென்றல் போன்ற. | 26 |
|
|
உரை
|
|
|
|
|
1845. | கானல் அம் தேர் மேல் சூறைக் கால் எனும் பாகன் தூண்ட வேனில் வேந்து ஏறிச் சீறி வெப்பம் ஆம் படைகள் வீச மாநிலம் காவல் பூண்ட மன்னவர் இருவர் தங்கள் தானையும் உடைந்து தண்ணீர் நசை சுடச் சாம்பிற்று அன்றே. | 27 |
|
|
உரை
|
|
|
|
|
1846. | இரக்கம் இல் கொடிய செல்வர் மருங்கு போய் இரப்பார் போல உருப்பம் மொண்டு இறைக்கும் கள்ளி நீழல் புக்கு ஒதுங்குவாரும் தருக்கு அற நிரப்பால் எய்த்தோர் தம்மினும் வறியர் பால் சென்று இரப்ப போல் இலை தீந்து துக்க மரநிழல் எய்துவாரும். | 28 |
|
|
உரை
|
|
|
|
|
1847. | கொல் இபம் பரி மான் தேரின் குறு நிழல் ஒதுங்கு வாரும் அல் இருள் வட்டத் தோல் வெண் கவிகையுள் அடங்கு வாரும் செல் இடம் பிறிது காணார் வீரவான் சென்றோர் நின்ற கல்லுடன் நிழல் சேர்வாரும் ஆயினார் களமர் எல்லாம். | 29 |
|
|
உரை
|
|
|
|
|
1848. | ஆயது ஓர் அமையம் தன்னில் அளவு இலா உயிர்க்கும் ஈன்ற தாயனார் துலை போல் யார்க்கும் சமநிலை ஆய கூடல் நாயனார் செழியன் தானை நனந்தலை வேத நாற்கால் பாயதோர் தண்ணீர்ப் பந்தர் பரப்பி அப் பந்தர் நாப்பண். | 30 |
|
|
உரை
|
|
|
|
|
1849. | புண்டர நுதலும் காதின் புறத்து அணி மலரும் பாத முண்டக மலர் மேல் ஒற்றைக் கிண் கிணி முழக்கும் கச்சியாப்பு உண்ட தோல் உடையும் கண்டோர் உள்ளமும் கண்ணும் கொள்ளை கொண்ட புன்னகையும் உள்ளக் கருணையின் குறிப்பும் தோன்ற. | 31 |
|
|
உரை
|
|
|
|
|
1850. | அரு மறை அகத்து நின்றாங்கு அருந்தவர் ஆகி வேணிப் பொரு புனல் பூரித்து ஆங்கு ஓர் புண்ணியச் சிரகம் தாங்கி ஒருவருக்கு ஒன்றெ ஆகி இலக்கருக்கு இலக்கம் ஆகித் அருகுறும் புழையால் வாக்கித் தணித்தனர் தண்ணீர்த் தாகம். | 32 |
|
|
உரை
|
|
|
|
|
1851. | சுந்தரப் புத்தேள் வைத்த துறு மலர் வாசத் தெண்ணீர்ப் பந்தர் புக்கு அடைந்து நன்னீர் பருகி எய்ப்பு அகல ஆற்றல் வந்தபின் செழியன் தன்னோர் வளவன் மேல் ஏறிச்சீறி அந்தம் இல் அனிகம் சிந்தித் தும்பை வேய்ந்து அடு போர் செய்தார். | 33 |
|
|
உரை
|
|
|
|
|
1852. | கடல் உடைத்து என்னப் பொன்னி காவலன் தானை சாய மடல் உடை வாகை வேய்ந்து வளவனை மருக னோடும் மிடல் உடைத் தறுகண் சேனை வீரர் வெம் கையால் பற்றி அடல் உடைக் கன்னி நாடர்க் அரசன் முன் கொண்டு போந்தார். | 34 |
|
|
உரை
|
|
|
|
|
1853. | கொடுவந்த வளவன் தன்னைக் கோப் பெரும் செழியர் கோமான் வடுவந்த தம்பி யோடு மாட நீள் கூடன் மேய கடு வந்த மிடற்றார் முன்போய் விடுத்து எந்தை கருதியது யாது என்ன நடுவந்த நிலையான் கேட்ப நாயகன் இகழ்த்து மன்னோ. | 35 |
|
|
உரை
|
|
|
|
|
1854. | அறவன் நீ அல்லையோ உன் அகத்தினுக்கு இசைந்த செய்கென இறைவனது அருளால் வானின் எழுமொழி கேட்டு வைகைத் துறைவனும் அறத்தின் ஆற்றால் சோழனைச் சிலமால் யானை மற வயப் பரிபூண் மற்றும் வழங்கினான் விடுத்தான் பின்னர். | 36 |
|
|
உரை
|
|
|
|
|
1855. | வள்ளல் தன் தம்பி என்னும் மன்னவர் சிங்கம் தன்னைத் தள்ளரும் தறுகண் ஆண்மைத் தருக்கு அறத்து ஆனாள் செல்வம் உள்ளன சிறிது மாற்றி ஒதுக்கி எவ் உயிர்க்கும் தாயாய்ப் பள்ள நீர் அகலம் காத்து பல்வளம் பழுக்க வாழ்ந்தான். | 37 |
|
|
உரை
|
|
|
|