1856. வரதன் மீனவன் படை இடை வந்து நீர்ப் பந்தர்
விரதன் ஆகி நீர் அருந்திய வினை செய்ததும்
பரத நூலியன் நாடகப் பாவையாள் ஒருத்திக்
இரத வாதம் செய்து அருளிய ஆடலை இசைப்பாம்.
1
உரை
   
1857. பரும் கை மால்வரைப் பூமியன் பைந்தமிழ் நாட்டின்
இரங்கு தெண் திரைக் கரங்களால் ஈர்ம் புனல் வைகை
மருங்கில் நந்தனம் மலர்ந்த பன் மலர் தூ உய்ப் பணியப்
புரம் கடந்தவன் இருப்பது பூவண நகரம்.
2
உரை
   
1858. எண்ணில் அங்கு உறை சராசரம் இலிங்கம் என்று எண்ணி
விண்ணின் நால்களும் கோள்களும் விலங்குவது யாக்கைக்
கண்ணினான் கதிர் முதல் பல கடவுளர் பூசை
பண்ணி வேண்டிய நல்வரம் அடைந்தது அப்பதியில்.
3
உரை
   
1859. கிளிஉளார் பொழில் பூவணக் கிழவர் தம் கோயில்
தளி உளார் தவப் பேறு எனா அடாது கு பூந்தார்
அளி உளார் குழல் அணங்கு அனாள் அந்தரத்தவர்க்கும்
களி உளார் தர மயக்கு உறூம் கடல் அமுது அனையாள்.
4
உரை
   
1860. நரம்பின் ஏழ் இசை யாழ் இசைப் பாடலும் நடநூல்
நிரம்பும் ஆடலும் பெண்ணல நீர்மையும் பிறவும்
அரம்பை மாதரை ஒத்தனள் அறநெறி ஒழுகும்
வரம்பினால் அவர் தமக்கு மேல் ஆயினாள் மன்னோ.
5
உரை
   
1861. ஆய மாதர் பேர் பொன் அனையாள் என்பவள் தன்
நேய ஆய மோடு இரவின் இருள் நீங்கு முன் எழுந்து
தூய நீர் குடைந்து உயிர் புரை சுடர் மதிக் கண்ணி
நாயனார் அடி அருச்சனை நியமும் நடாத்தி.
6
உரை
   
1862. திருத்தர் பூவண வாணரைச் சேவித்துச் சுத்த
நிருத்தம் ஆடி வந்து அடியரைப் பொருள் என நினையும்
கருத்தளாய் அருச்சித்து அவர் களிப்ப இன் சுவை ஊண்
அருத்தி எஞ்சியது அருந்துவாள் அஃது அவள் நியமம்.
7
உரை
   
1863. மாதர் இந் நெறி வழங்கும் நாள் மற்று அவள் அன்பை
பூதலத்து இடைத் தெருட்டு வான் பொன் மலை வல்லி
காதல் நாயகன் திரு உருக் காணிய உள்ளத்து
ஆதரம் கொடுத்து அருளினார் பூவணத்து ஐயர்.
8
உரை
   
1864. ஐயர் தந்த பேர் அன்பு உரு ஆயினாள் மழுமான்
கையர் தன் திரு உருவினைக் கருவினால் கண்டு
மைய கண்ணினாள் வைகலும் வரு பொருள் எல்லாம்
பொய் இல் அன்பு கொண்டு அன்பர்தம் பூசையின் நேர்                                                            வாள்.
9
உரை
   
1865. அடியர் பூசனைக்கு அன்றி எஞ்சாமையால் அடிகள்
வடிவு காண்பது எப்படி என்று மடி இலாச் செழியற்கு
கொடிவில் பொன் கிழி நல்கிய வள்ளலை உன்னிப்
பிடி அனாள் இருந்தாள் அஃது அறிந்தனன் பெருமான்.
10
உரை
   
1866. துய்ய நீறு அணி மெய்யினர் கட்டங்கம் தொட்ட
கையர் யோகப் பட்டத்து இடைக் கட்டினர் பூதிப்
பையர் கோவணம் மிசை அசை உடையினர் பவளச்
செய்ய வேணியர் அங்கு ஒரு சித்தராய் வருவார்.
11
உரை
   
1867. வந்து பொன் அனையாள் மணி மாளிகை குறுகி
அந்தம் இன்றி வந்து அமுது செய்வா ரொடும் அணுகிச்
சிந்தை வேறு கொண்டு அடைந்தவர் திருவமுது அருந்தாது
உந்து மாளிகைப் புறம் கடை ஒரு சிறை இருந்தார்.
12
உரை
   
1868. அமுது செய் அரும் தவர் எலாம் அகல வேறு இருந்த
அமுத வாரியை அடிபணிந்து அடிச்சியர் ஐய
அமுது செய்வதற்கு உள் எழுந்து அருள்க என உங்கள்
அமுது அனாளை இங்கு அழை மின் என்று அருளலும்                                                       அனையார்.
13
உரை
   
1869. முத்தரா முகிழ் வாள் நகை அல்குலாய் முக்கண்
அத்தவர் ஆனவர் தமர் எலாம் அமுது செய்து அகன்றார்
சித்தராய் ஒருதம் பிரான் சிறு நகையின ராய்
இத் தரா தலத்து யார் இருக்கின்றார் என்றார்.
14
உரை
   
1870. நவ மணிக் கலன் பூத்த பூம் கெம்பரின் நடந்து
துவர் இதழ்க் கணி வாயினாள் சுவா கதம் அங்கு இல                                                       என்று
உவமை அற்றவர்க்கு அருக்கிய ஆசனம் உதவிப்
பவம் அகற்றிய வடிமலர் முடிஉறப் பணிந்தாள்.
15
உரை
   
1871. எத்தவம் செய்தேன் இங்கு எழுந்து அருளுதற்கு என்னாச்
சித்தர் மேனியும் படி எழில் செல்வமும் நோக்கி
முத்த வாள் நகை அரும்ப நின்று அஞ்சலி முகிழ்ப்ப
அத்தர் நோக்கினார் அருள் கணார் அருள் வலைப்                                                       பட்டாள்.
16
உரை
   
1872. ஐய உள் எழுந்து அருளுக அடிகள் நீர் அடியேன்
உய்ய வேண்டிய பணி திரு உளத்தினுக்கு இசையச்
செய்ய வல்லன் என்று அஞ்சலி செய்ய உள் நகையா
மையள் நோக்கியை நோக்கி மீன் நோக்கிதன் மணாளன்.
17
உரை
   
1873. வடியை நேர் விழியாய் பெருவனப் பினை சிறிது உன்
கொடியை நேரிடை என விளைத்தனை எனக் கொன்றை
முடியினான் அடி ஆரம் மென் முகிழ் முலைக் கொடி                                                       தாழ்ந்து
அடிய னேற்கு வேறாய் ஒரு மெலிவு இலை ஐயா.
18
உரை
   
1874. எங்கள் நாயகர் திரு உருக் காண்பதற்கு இதயம்
தங்கும் ஆசையால் கரு உருச் சமைத்தனன் முடிப் பேற்கு
இங்கு நாள் தொறும் என் கையில் வரும் பொருள் எல்லாம்
உங்கள் பூசைக்கே அல்லதை ஒழிந்தில என்றாள்.
19
உரை
   
1875. அருந்து நல் அமுது அனையாள் அன்பு தித்திக்கத்
திருந்து தேன் என இரங்கு சொல் செவி மடுத்து ஐயர்
முருந்து மூரலாய் செல்வ மெய் இளமை நீர் மொக்குள்
இருந்த எல்லையும் நிலை சில என்பது துணிந்தாய்.
20
உரை
   
1876. அதிக நல் அறம் நிற்பது என்று அறிந்தனை அறத்துள்
அதிகம் ஆம் சிவ புண்ணியம் சிவ அர்ச்சனை அவற்றுள்
அதிகம் ஆம் சிவ பூசையுள் அடியவர் பூசை
அதிகம் என்று அறிந்து அன்பரை அருச்சனை செய்வாய்.
21
உரை
   
1877. உறுதி எய்தினை இருமையும் உன் பெயர்க்கு ஏற்ப
இறுதி இல்லவன் திரு உரு ஈகையால் காணப்
பெறுதியாக நின் மனைக் கிடை பித்தளை ஈயம்
அறுதியான பல் கலன்களும் கொணர்தி என்று அறைந்தார்.
22
உரை
   
1878. ஈயம் செம்பு இரும்பிர சிதம் என்பவும் புணர்ப்பால்
தோயும் பித்தளை வெண்கலம் தரா முதல் தொடக்கத்து
ஆயும் பல் வகை உலோகமும் கல் என அலம்பத்
தேயும் சிற்றிடை கொண்டு போய்ச் சித்தர் முன் வைத்தாள்.
23
உரை
   
1879. வைத்த வேறு வேறு உலோகமும் மழு உழை கரந்த
சித்த சாமிகள் நீற்றினைச் சிதறினர் பார்த்தே
இத்தை நீ இரா எரியில் இட்டு எடுக்கின் பொன் ஆம்
அத்தை நாயகன் திருஉக் கொள்க என அறைந்தார்.
24
உரை
   
1880. மங்கை பாகரை மடந்தையும் இங்கு நீர் வதிந்து
கங்குல் வாய் அமுது அருந்தி இக் காரியம் முடித்துப்
பொங்கு கார் இருள் புலரும் முன் போம் எனப் புகன்றாள்
அம் கயல் கண் ஆள் தனைப் பிரியார் அதற்கு                                                       இசையார்.
25
உரை
   
1881. சிறந்த மாட நீள் மதுரையில் சித்தர் யாம் என்று
மறைந்து போயினார் மறைந்த பின் சித்தராய் வந்தார்
அறைந்த வார் கழல் வலம்பிட வெள்ளி மன்று ஆடி
நிறைந்த பேர் ஒளியாய் உறை நிருத்தர் என்று அறிந்தாள்.
26
உரை
   
1882. மறைந்து போயினார் எனச் சிறிது அயர்ச்சியும் மனத்தில்
நிறைந்த ஓர் பெரும் கவர்ச்சியை நீக்கினார் என்னச்
சிறந்து ஓர் பெரும் மகிழ்ச்சியும் உடைய வளாய்ச் சித்தர்
அறைந்தவாறு தீப் பெய் தனன் உலோகங்கள் அனைத்தும்.
27
உரை
   
1883. அழல் அடைந்த பின் இருள் மல வலி திரிந்து அரன் தாள்
நிழல் அடைந்தவர் காட்சி போல் நீப்பரும் களங்கம்
கழல வாடகம் ஆனதால் அது கொண்டு கனிந்த
மழலை ஈர்ஞ் சொலாள் கண்டனள் வடிவு இலான் வடிவம்.
28
உரை
   
1884. மழ விடை உடையான் மேனி வனப் பினை நோக்கி                                                       அச்சோ
அழகிய பிரானோ என்னா அள்ளி முத்தம் கொண்டு                                                       அன்பில்
பழகிய பரனை ஆனாப் பரிவினால் பதிட்டை செய்து
விழவு தேர் நடாத்திச் சில் நாள் கழிந்த பின் வீடு                                                       பெற்றாள்.
29
உரை
   
1885. நையும் நுண் இடையினாள் அந் நாயகன் கபோலத்து                                                       இட்ட
கை உகிர்க் குறியும் சொன்ன காரணக் குறியும்                                                       கொண்டு
வெய்ய வெம் கதிர் கால் செம் பொன் மேனி வேறு                                                   ஆகி நாலாம்
பொய் உகத்தவருக்குத் தக்க பொருந்து உருவு ஆகி                                                       மன்னும்.
30
உரை