1883. அழல் அடைந்த பின் இருள் மல வலி திரிந்து அரன் தாள்
நிழல் அடைந்தவர் காட்சி போல் நீப்பரும் களங்கம்
கழல வாடகம் ஆனதால் அது கொண்டு கனிந்த
மழலை ஈர்ஞ் சொலாள் கண்டனள் வடிவு இலான் வடிவம்.
28
உரை
   
1887. பொன் நெடும் தேரி ராச புரந்தரன் புரந்தர் ஆதி
பல் நெடும் தேவர் ஏத்தப் பரன் உலகு அடைந்தான்                                                       இப்பால்
அந் நெடும் தகையோன் மைந்தன் அடல் இரா சேச                                                       என்பான்
இந் நெடும் தகையோன் மைந்தன் இராசகம் பீரன்                                                     என்போன்.
2
உரை
   
1888. மற்று இவன் குமரன் பாண்டி வங்கிய தீபன் அன்னான்
பொன் திணி தடம் தோள் மைந்தன் புரந்தர சித்தாம்                                                       அன்னான்
வெற்றிகொள் குமரன் பாண்டி வங்கிய பதாகன் வீரம்
பற்றிய சுந்தரேச பாத சேகரன் அவன் சேய்.
3
உரை
   
1889. பலர் புகழ் சுந்தரேச பாத சேகரன் ஆம் தென்னன்
அலை புனல் உடுத்த கூடல் அடிகளுக்கு அன்பன் ஆகிக்
கொலை புணர் வேலால் வெம் கோல் குறும்பு எனும்                                                களைகள் தீர்த்து
மலர் தலை உலகம் என்னும் வான் பயிர் வளர்க்கும்                                                       நாளில்.
4
உரை
   
1890. பத்துமான் தடம் தேர் நூறு பனைக்கை மா நூற்றுப் பத்துத்
தத்துமான் அயுத மள்ளர் தானை இவ் அளவே ஈட்டி
இத்துணைக்கு ஏற்ப நல்கி எஞ்சிய பொருள்கள் எல்லாம்
சித்து உரு ஆன கூடல் சிவனுக்கே செலுத்தும் மன்னோ.
5
உரை
   
1891. கண்டிகை மகுடம் ஆதிக் கலன் நிரை குயின்றும் திங்கள்
மண்டலம் மிடறும் சென்னிக் கோபுர மாடம் ஆதி
எண் திசை இருள் கால் சீப்ப எரி மணி இழைத்து                                                       வேய்ந்தும்
திண் திறல் உடையான் இன்ன திருப்பணி பிறவும்                                                       செய்தான்.
6
உரை
   
1892. கல்லு மாறு அகன்ற மார்பன் கருவியின் சிறுமை நோக்கி
மல்லு மாறாத திண்தோள் வளவர் கோன் ஒருவன் காலில்
செல்லும் ஆயிரம் பரிக்கு ஓர் சேவகன் என் போன் தானே
வெல்லும் மாறு எண்ணி வஞ்சி வேய்ந்து கொண்டு எழுந்து                                                         போந்தான்.
7
உரை
   
1893. பல்வகைக் கருவி ஈட்டப் படையொடும் பரவை சீறிச்
செல்வது போலக் கன்னித் தீம் புனல் நாடு நோக்கி
மல்வரையாத தோளான் வரவு அறிந்து எழுந்து மேருக்
கல்வரி சிலையான் முன் போய்க் கைதவன் தாழ்ந்து கூறும்.
8
உரை
   
1894. பொன்னது அனைய வேணிப் புனித இப் பூமி நேமி
உன்னது வலத்தினாலே உருட்டும் என் வலத்தை                                                       நோக்கான்
தன்னது வலத்தினால்என் தானையின் சிறுமை நோக்கி
என்னது தேயம் கொள்வான் எண்ணினான் போலும்                                                       மன்னோ.
9
உரை
   
1895. காவிரி நாடன் சேனைக் கடல் இடை எரி போல் மூண்டு
மேவினன் என்று கூறி மீனவன் வேண்ட வானில்
பூவிரி வாகை நீயே புனைய நாம் பொருதும் என்னா
நாவிரியாத மாற்ற நாயகன் கூறக் கேட்டான்.
10
உரை
   
1896. எல்லி அம் கமலச் செவ்வி எனமுகம் மலர்ந்து நாதன்
அல்லி அம் கமலச் செம் தாள் அகம் தழீஇப் புறம்பு                                                       போந்து
பல்லியம் துவைப்பத் தானைப் பரவையுள் பரிமா ஊர்ந்து
கொல்லி அம் பொருப்பன் சேனை கடல் எதிர்                                                     குறுகினானே.
11
உரை
   
1897. பண்ணுதல் இசை வண்டு ஆர்க்கும் பசும் தொடைச்                                                 செழியன் தானை
எண்ணுதல் இல ஆம் சென்னி இரும் படைக் கடல்                                                   நேர் ஆறாய்
நண்ணுதல் எனப் போய்ப் பொன்னி நாடவன் தமர்                                                   கட்கு எல்லாம்
கண்ணுதல் அருளால் ஆங்கு ஓர் கடல் எனத்                                               தோன்றிற்று அம்ம.
12
உரை
   
1898. கடல் என வருமா ஊர்ந்து கைதவன் சேனை முன்போய்
அடல் அணி மேருக் கோட்டி ஆலவாய் நெடு நாண் பூட்டி
மடல் அவிழ் துழாய்க் கோன் ஆட்டி வாய் எரி                                                 புரத்தில் ஊட்டி
மிடல் அணி கூடல் கோமான் வேடு உருவாகி நின்றான்.
13
உரை
   
1899. கங்குல் வாய்த் திங்கள் போலக் காது அணி தந்தத்                                                       தோடும்
கங்குல் வாய் முளைத்த மீன் போல் கதிர் முத்த                                                 வடமும் குஞ்சிச்
கங்குல் வாய்ச் சிலை போல் வெட்சிக் கண்ணிசூழ்                                                 கலாபச் சூட்டும்
கங்குல் வாய் கிழிக்கும் தந்தக் கடகமும் மின்னுக் கால.
14
உரை
   
1900. அண்டத்தார் அமரர் நாமம் அன்று தொட்டு அடையத்                                                       தோற்று
கண்டத்தார் இருளே எங்கும் கலந்து எனக் கறுத்த                                                       மேனி
கொண்டத்தார் ஆரினார்கு ஓர் கூற்று என கொல்                                                   வேல் ஏந்திச்
சண்டத் தீ என்ன நின்றான் காவிரித் தலைவன் காணா.
15
உரை
   
1901. சீறி ஆயிரம் பரிக்கு ஓர் சேவகன் வந்தேன் என்னாக்
கூறினான் எதிர்த்தான் வெள்ளிக் குன்றவன் பத்து நூறு
மாறு இலாப் பரிக்கு மட்டு ஓர் வயவன் நீ அன்றோ                                                       எண்ணில்
ஈறு இலாப் பரிக்கும் ஒற்றைச் சேவகன் யானே என்றான்.
16
உரை
   
1902. என்ற சொல் இடி ஏறு என்ன இரு செவி துளைப்பக்                                                       கேட்டு
நின்றவன் எதிரே மின்னு நீட்டிச் செல் மேகம் போலச்
சென்று வேல் வலம் திரித்துச் செயிர்த்தனன் அதிர்த்துச்                                                               சீற
வன் திறன் நூற்றுப் பத்து வயப்பரிக்கு ஒருவன் அஞ்சா.
17
உரை
   
1903. யாம் இனி இந்த வேலால் இறப்பதற்கு ஐயம் இல்லை
யாம் என அகன்றான் மாவோடு ஆயிரம் பரிக்கு ஓர்                                                       மள்ளன்
காமனை வெகுண்ட வேடன் மறைந்தனன் கங்குல்                                                       சோதி
மா மகன் அது கண்டு ஓடும் வளவனைத் துரத்திச்                                                       சென்றான்.
18
உரை
   
1904. துரந்திடும் அளவில் ஓடும் சோழனும் திரும்பி நோக்கிக்
கரும் தடம் கண்ணி பாகம் கரந்த வேடு வனைக்                                                       காணான்
வரும் துயர் அச்சம் தீர்ந்தான் மதுரையின் அளவும்                                                       பற்றிப்
புரந்தரற் புறம் கண்டானைப் புறம் கண்டு முடுக்கிப்                                                       போனான்.
19
உரை
   
1905. கால் ஒன்று முடுக்கப் பட்ட கனல் ஒன்று நடந்தால்                                                       ஒத்து
வேல் ஒன்று தடக்கை நேரி வேந்தனால் முடுக்கு                                                    உண்டு ஒடும்
சேல் ஒன்று கொடியினான் தன் செழு நகர் விரைந்து                                                       செல்வான்
மால் ஒன்று களிற்றின் ஆங்கு ஓர் மது மலர்க்                                              கிடங்கில் வீழ்ந்தான்.
20
உரை
   
1906. மீனவன் மதுரை மூதுர் மேல் திசைக் கிடங்கில் வீழ
மான வெம் புரவி யோடும் வளவனும் வீழ்ந்தான் கூடல்
கோன் அவன் அருளால் வானோர் குரை கடல்                                               கடையத் தோன்றும்
ஆனையின் எழுந்தான் தென்னன் கோழிவேந்து                                               ஆழ்ந்து போனான்.
21
உரை
   
1907. பிலத்து அளவு ஆழ்ந்த கடி மலர்க் கிடங்கில்                                 பெருந்தகை அவிந்தவன் துகில் பூண்
கலம் தரும் பேழை படை பரி மான் தேர் கரி எலாம்                                         கவர்ந்து தண் பொருனைத்
தலத்தவன் தங்கள் நாயகர் அணியத் தக்க தூசு அணி                                                     கலன் நல்கி
நலத்தகையவர் பேர் அருள் கடற்கு அன்பு நதி எனப்                                         பெருகி வீற்று இருந்தான்.
22
உரை