தொடக்கம் |
|
|
1908. | மின் பனிக் கதிர் வேணி வானவன் மீனவன் தனை மான வேல் முன் பனிக்க வலம் திரிந்து முடுக்கி நேரி அடுக்கலான் பின் பனிக் கமலத் தடத்து இற விட்ட வாறு இது பெருமைசால் அன்பனுக்கு உலவாத கோட்டை அளித்தவாறு கிளத்துவாம். | 1 |
|
|
உரை
|
|
|
|
|
1909. | பொடி ஆர்க்கும் மேனிப் புனிதர்க்குப் புனித ஏற்றுத் கொடியார்க்கு வேதக் குடுமிக்கு இணையான கூடல் படியார்க்கும் சீர்த்திப் பதி யேர் உழவோருள் நல்லான் அடியார்க்கு நல்லான் அறத்திற்கும் புகழ்க்கும் நல்லான். | 2 |
|
|
உரை
|
|
|
|
|
1910. | அனையான் அறத்திற்கு அருள் போன்றவள் ஆன்ற கற்பின் மனையாள் மரபின் வழுவாத தரும சீலை எனையாரும் நன்கு மதிக்கும் இருக்கும் நீராள் தனை ஆள் பதிக்குக் கதிக்குத் தனிச் சார்பு போல்வாள். | 3 |
|
|
உரை
|
|
|
|
|
1911. | பல்லேர் உழவின் தொழில் பூண்டு பயன்கள் கொள்வான் வில்லேர் உழவன் கடன்கொண்டு மிகுந்த எல்லாம் இல்லேர் உழத்தி மடைச் செல்வம் இயற்றி ஏந்த அல் ஏறு கண்ட அடியாரை அருத்து நீரான். | 4 |
|
|
உரை
|
|
|
|
|
1912. | தொகை மாண்ட தொண்டர் சுவை ஆறு தழீஇய நான்கு வகைமாண்ட மாறுபடும் உண்டி மறுத்து அருந்த நகை மாண்ட அன்பின் தலை ஆயவன் நல்க நல்கப் பகைமாண்ட செல்வ மணல் கேணியில் பல்கு நாளின். | 5 |
|
|
உரை
|
|
|
|
|
1913. | இந்நீர வாய வளம் குன்றினும் இன்மை கூறாத் தன்னீர்மை குன்றான் எனும் தன்மை பிறர்க்குத் தேற்ற நன்னீர் வயலின் விளைவு அஃகி நலிவு செய்ய மின்னீர வேணி மதுரேசர் விலக்கினாரே. | 6 |
|
|
உரை
|
|
|
|
|
1914. | குன்றா விருத்திக் கடன் கொண்டு கொண்டு அன்பர் பூசை நன்ற நடாத்தத் தொடுத்தான் கடன் தானும் கிட்டாது ஒன்றாலும் கொண்ட விரதத்துக்கு உறுதி இன்றி நின்றான் உடம்பை ஒறுக்கின்ற நியமம் பூண்டான். | 7 |
|
|
உரை
|
|
|
|
|
1915. | கொடுப்பார் அவரே விளைவும் கடன் கோளும் மாற்றி தடுப்பார் எனின் மற்று அதை யாவர் தடுக்க வல்லார் அடுப்பார் விழுமம் களைவார் அடியார்க்கு நல் ஊண் மடுப்பான் நியமம் தடைபட்டு வருந்து கின்றான். | 8 |
|
|
உரை
|
|
|
|
|
1916. | விண் ஆறு சூடும் விடையான் தமர்க் கூட்டி அன்றி உண்ணாதவன் தன் உயிர்க்குத் துணை ஆய கற்பில் பண்ணார் மொழி தன்னொடும் பட்டினி விட்டு நெஞ்சம் புண்ணாக ஆகம் பசித்தீயில் புழுங்கப் பட்டான். | 9 |
|
|
உரை
|
|
|
|
|
1917. | இறக்கும் உடம்பால் பெறும் பேறு இனி ஆவது என்னா அறக் குன்று அனையான் மனையோடும் அடைந்து இச் செய்தி நிறக் கின்ற செம் பொன் சிலையார்க்கு நிகழ்த்தி ஆவி துறக் கின்றது வே துணிவு என்று துணிந்து போனான். | 10 |
|
|
உரை
|
|
|
|
|
1918. | ஐயன் திரு முன்னர் அடைந்து அடி தாழ்ந்து வானோர் உய்யும் படி நஞ்சு அமுது உண்ட வொருவ உன் தன் மெய் அன்பர் பூசைக்கு இடையூறு விளைய என்றன் செய்யும் புலமும் விளைவு இன்றிச் சிதைந்த என்னா. | 11 |
|
|
உரை
|
|
|
|
|
1919. | விடம் நல்கு சூலப் படையாய் கடன் வேறு காணேன் கடன் நல்க வல்லார் தமைக் காட்டுதி காட்டு இலா யேல் மடம் நல்கும் இந்த உடம்பின் சுமை மாற்று வேன் என்று உடன் நல்கு கற்புக்கு உரியா ளொடும் வேண்டும் எல்லை. | 12 |
|
|
உரை
|
|
|
|
|
1920. | பஞ்சாதி வேதப் பொருள் சொன்ன பரமன் வாக்கு ஒன்று அஞ்சாதி வேளாண் தலை வாவு உனது அகத்தில் இன்று ஓர் செஞ்சாதி ஆய செழு வால் அரிக் கோட்டை உய்த்தேம் எஞ்சாது இருக்கும் எடுக்கும் தொறும் என்றும் மாதோ. | 13 |
|
|
உரை
|
|
|
|
|
1921. | நீ நாளும் பூசித்து அதில் வேண்டிய கொண்டு நித்தம் ஆனாத அன்பர்க்கு அமுது ஊட்டி எவர்க்கும் அன்ன தானாதி நானா தருமங்களும் செய்தி வீடு மேல் நாள் அளிக்கின்றனம் என்று விசும்பில் கூற. | 14 |
|
|
உரை
|
|
|
|
|
1922. | கேட்டு இன்பம் எய்தி கிளர் விம்மிதன் ஆகி வேதப் பாட்டின் பயனை பணிந்து இல்லம் அடைந்து பண்டை ஈட்டும் தவப் பேறு எனக் கண்டனன் தொண்டர்க்கு எந்தை கூட்டும் கதி போல் உலவாமல் கொடுத்த கோட்டை. | 15 |
|
|
உரை
|
|
|
|
|
1923. | வான் ஆறு சூடி தரு கோட்டையை வைகல் தோறும் பூ நாறும் சாந்தம் புகை ஒண் சுடர் கொண்டு அருச்சித்து ஆனாத செவ்வி அடிசிற்கும் அதற்கு வேண்டும் நானா கருவி விலைக்கும் அது நல்க வாங்கா. | 16 |
|
|
உரை
|
|
|
|
|
1924. | மின் ஆர் சடையான் தமர் ஆய்ந்தவர் வேதச் செல்வர் தென் நாடர் தெய்வம் விருந்து ஒக்கல் செறிந்து நட்டோர் முன் ஆம் எவர்க்கும் முகில் போல் வரையாமல் நல்கி எந்நாளும் நோய் இன்றி அளகாபதி என்ன வாழ்ந்தான். | 17 |
|
|
உரை
|
|
|
|
|
1925. | அன்பன் அடியார்க்கு இனியான் அனி நாள் அளந்து அல்கித் தன் பன்னி யொடும் அயலார் சுற்றம் தமரோடும் பின்பு அந்நிலையே இமவான் மகனைப் பிரியாத இன்பன் உருவாய் சிவ மா நகர் சென்று இறை கொண்டான். | 18 |
|
|
உரை
|
|
|
|