தொடக்கம் |
|
|
1926. | தாமம் நார் இதழியார்தம் தமர்க்கு அன்பன் வறுமைப் பட்டோன் ஆம நாள் உலவாக் கோட்டை அருளிய முறை ஈது ஐயன் தே மன் நாள் முல்லைத் தீம் தார் சிறு தகை வணிகற்கு ஆக மாமன் ஆம் படிவம் கொண்டு வழக்கு உரை வண்ணம் சொல்வாம். | 1 |
|
|
உரை
|
|
|
|
|
1927. | கன்னி நான் மாடக் கூடல் கடி நகர் வணிக மாக்கள் தன்னின் மா நிதிக் கோன் அன்னான் தனபதி என்னும் பேரான் மன்னினான் அனையான் கற்பின் மடவரல் சுசீலை என்பாள் பொன்னி நாள் முளரிச் சேக்கைப் புண்ணியத் திருவின் அன்னாள். | 2 |
|
|
உரை
|
|
|
|
|
1928. | என இவர் தமக்கு மைந்தற் பேறு இன்றி இரங்கும் நாளில் தனபதி மருமகன் தன்னைத் தகவுசால் மகவாக்கொண்டு மன மகிழ் சிறப்பால் நல்க மனைவியும் தொழுது வாங்கிப் புனைவன புனைந்து போற்றிப் பொலிவு உற வளர்த்துக் கொண்டாள். | 3 |
|
|
உரை
|
|
|
|
|
1929. | தனபதி மகப்பேறு அற்றான் ஆயினும் தணவாக் காதல் மனைவிமேல் வைத்த ஆசை மயக்கினால் வருந்தி ஈன்ற தனையனை மகவாத் தந்த தங்கை மேல் தீராப் பூசல் வினை விளைத்து ஒழுக ஓர் நாள் இளையாளும் வெகுண்டு சொல்வாள். | 4 |
|
|
உரை
|
|
|
|
|
1930. | பெருமிதம் உனக்கு ஏன் பிள்ளைப் பேறு அற்ற பாவி நீ என் அருமை நல் மகனால் அன்றோ இருமையும் அடைவாய் என்னப் பெரிது நாண் அடைந்து மேலைக்கு ஆயினும் பிள்ளைப் பேறு தரு தவம் புரிவேன் என்னாத் தனபதி தவம் மேல் செல்வான். | 5 |
|
|
உரை
|
|
|
|
|
1931. | தன் பெரும் செல்வம் எல்லாம் மருமகன் தனக்கே ஆக்கி அன்பு கொள் மனைவி யோடு அரும் தவ நெறியில் சென்றான் பின்பு அவன் வரவு தாழ்ப்ப மருமகன் பெற்ற எல்லாம் வன்பினால் வழக்குப் பேசி வௌவினார் தாய மாக்கள். | 6 |
|
|
உரை
|
|
|
|
|
1932. | விளை நிலன் அடிமை பைம் பூண் வெறுக்கை நல் பசுக்கள் ஏனை வளனும் மாற்றவர் கைக் கொள்ள வன் சிறை இழந்த புள் போல் தளர் உறு மகனும் தாயும் சார்பு இலாத் தம்மனோர்க்கு ஓர் களை கணாய் இருக்கும் கூடல் கடவுளே சரணம் என்னா. | 7 |
|
|
உரை
|
|
|
|
|
1933. | வந்து வான் அகடு போழ்ந்த மணி முடி விமானக் கோயில் சுந்தர நாதன் பாதத் துணை தொழுது இறைஞ்சி யார்க்கும் தந்தையும் தாயும் ஆகும் தம்பிரான் நீரே எங்கள் எந்தையும் யாயும் என்னா இரங்கி நின்று இனைய சொல்வாள். | 8 |
|
|
உரை
|
|
|
|
|
1934. | என் மகன் தன்னை மைந்தன் இன்மையால் எவரும் காணத் தன் மகனாகக் கொண்டு தகுதியால் அன்றே காணி பொன் மனை பிறவும் நல்கிப் போயினான் என் முன் இப்பால் வன்மையால் தாயத்தார்கள் அவை எலாம் வௌவிக் கொண்டார். | 9 |
|
|
உரை
|
|
|
|
|
1935. | ஒருத்தி நான் ஒருத்திக்கு இந்த ஒரு மகன் இவனும் தேரும் கருத்து இலாச் சிறியன் வேறு களைகணும் காணேன் ஐய அருத்தி சால் அறவோர் தேறு அருட் பெரும் கடலே எங்கும் இருத்தி நீ அறியாய் கொல்லோ என்று பார் படிய வீழ்ந்தாள். | 10 |
|
|
உரை
|
|
|
|
|
1936. | மாறு கொள் வழக்குத் தீர்க்க வல்லவர் அருளினாலே சீறு கொள் வடிவேல் கண்ணாள் சிறு துயில் அடைந்தாள் மெய்யில் ஊறு கொள் கரணம் ஐந்தும் உற்று அறி கனவில் கங்கை ஆறு கொள் சடையார் வேதச் செல்வராய் அடுத்துச் சொல்வார். | 11 |
|
|
உரை
|
|
|
|
|
1937. | புலர்ந்தபின் தாயத்தோரை புரவலன் ஆணை ஆற்றால் வலம் தரு மன்றத்து ஏற்றி மறித்து அனை இருத்தி யாம் போந்து தலம் தரும் அறிவான் மூத்தோர் அனைவரும் இசைய வந்து அச் சலம் தரு வழக்குத் தீர்த்துத் தருகுவம் போதி என்றார். | 12 |
|
|
உரை
|
|
|
|
|
1938. | வேரி அம் குவளை உண்கண் விழித்தனள் வியந்து கெட்டேன் ஆரும் இல்லார்க்குத் தெய்வம் துணை என்பது அறிந்தேன் என்னாத் கார் இரும் கயல் உண் கண்ணாள் கணவனைத் தொழுது வாழ்த்திச் சீர் இளம் குமரனோடும் தெரிவை தன் மனையில் சென்றாள். | 13 |
|
|
உரை
|
|
|
|
|
1939. | சென்றவள் கங்குல் எல்லை தெரிந்தபின் எழுந்து வெள்ளி மன்றவன் கோயில் வாயில் வந்து வந்தனை செய்து அம் பொன் குன்றவன் உரைத்த ஆற்றால் கொடுமைசால் வழக்குப் பூட்டி வென்றவர் இருக்கை எய்தி விளம்புவாள் பலரும் கேட்ப. | 14 |
|
|
உரை
|
|
|
|
|
1940. | அட்டில் வாய் நெருப்பு இடேல் ஓர் அடி இடேல் அறத்தான்றிப் பட்டிமை வழக்கால் வென்று போக ஒட்டேன் பலரும் கேட்க இட்டனன் அரசன் ஆணை அறத்தவிசு ஏறி ஆன்றோர் ஒட்டிய படி கேட்டு எங்கள் உரிப் பொருள்தந்து போமின். | 15 |
|
|
உரை
|
|
|
|
|
1941. | என்றனள் மறித்தலோடும் இழுக்கு உரையாடி வைது வன்திறல் வலியார் தள்ளி அடித்தனர் மைந்தனோடும் சென்றனள் முறையோ என்னாது இருந்த அறத்தவினோர் முன் நின்று உரையாடினாள் கேட்டு அறிந்தனர் நீதி நூலோர். | 16 |
|
|
உரை
|
|
|
|
|
1942. | அறத்து தவிச்சு இருப்போர் ஏவல் ஆடவரோடும் போந்து மறித்து அவைக் களத்தில் கூட்டி வந்தனள் வந்த எல்லை அறக் கொடி பாகர் வெள்ளி அம்பல வாணர் தாம் அத் திறத்து தனபதியே என ஈத் திரு உருக்கொண்டு செல்வார். | 17 |
|
|
உரை
|
|
|
|
|
1943. | பெரு விலைக் குண்டலம் பிடரில் பத்தி பாய்ந்து எரிகதிர் கவிழ்ப்ப வாள் எறிக்கும் அங்கதம் அருவரைத் தோள் கிடந்து இமைப்ப ஆகம் மேல் குருமணிக் கண்டிகை குலாய்ப் பின் கோட்டவே. | 18 |
|
|
உரை
|
|
|
|
|
1944. | முரல் அளி புற இதழ் மொய்ப்பச் செய்ய தா மரை சிறிது அலர்ந்து என அணி செய் மோதிரக் கரதலம் வீசி ஓர் கடும் கண் ஏறு எனப் பெருமித நடை கொடு நடக்கும் பெற்றியார். | 19 |
|
|
உரை
|
|
|
|
|
1945. | வாடிய முளரிபோல் மாறு இட்டார் இடத்து ஊடியும் மலர்ந்த போது ஒப்ப மைந்தன் மேல் நாடிய தண் அளி நயந்து உட்கிடை கூடிய முகத்தினர் குறுகுவார் அவை. | 20 |
|
|
உரை
|
|
|
|
|
1946. | அரசன் இங்கு இல்லை கொல்லோ ஆன்றவர் இல்லை கொல்லோ குரை கழல் வேந்தன் செங்கோல் கொடியதோ கோது இல் நூல்கள் உரை செயும் தெய்வம் தானும் இல்லை கொல் உறுதியான தருமம் எங்கு ஒளித்ததே கொல் என்று அறத் தவிசில் சார்வார். | 21 |
|
|
உரை
|
|
|
|
|
1947. | தனபதி வரவு நோக்கி வஞ்சனைத் தாயத்தார்கள் இனை உறு மனத்தர் ஆகி விம்மிதம் எய்தி வெல்லும் மனவலி இழந்து பண்டு வழக்கு அலா வழக்கால் வென்ற வினை நினைந்து உள்ளம் அச்சம் நாணினால் விழுங்கப் பட்டார். | 22 |
|
|
உரை
|
|
|
|
|
1948. | மாதுலர் ஆகி வந்தோர் மருகனைத் தம்பின் வந்த தாது உலராத கோதை தன் னொடும் தழீஇத் தம் கண்டம் மீது உலராத சாம வேதம் ஆர்ப்பவர் போல் வாய் விட்டு ஆதுலர் ஆனீர் அந்தோ ஐய என்று அழுது நைந்தார். | 23 |
|
|
உரை
|
|
|
|
|
1949. | குடங்கையின் நெடும் கணாளும் குமரனும் வணிகர் தாளில் தடங்கணீர் ஆட்ட வீழ்ந்தார் தடக்கையால் எடுத்துப் புல்லி மடங்கல் ஏறு அனையார் தாமும் மற்று அவர் தம்மைத் தம் கண்ணீர் நெடும்கடல் வெள்ளத்து ஆழ்த்திக் குமரனை நேர்ந்து நைவார். | 24 |
|
|
உரை
|
|
|
|
|
1950. | ஐம் படை மார்பில் காணேன் சிறு சிலம்பு அடியில் காணேன் மொய்ம்பு இடை மதாணி காணேன் முகத்து அசை சுட்டி காணேன் மின் படு குழைகள் காணேன் வெற்று உடல் கண்டேன் அப்பா என் பெறும் என்று பிள்ளைப் பணிகளும் கவர்ந்தார் என்னா. | 25 |
|
|
உரை
|
|
|
|
|
1951. | அனைவரும் இரங்க வாய்விட்டு அழுதவர் இளையாள் தன்னைத் தனையனைக் கண்ணீர் மாற்றித் தடக்கையான் முதுகு தைவந்து இனையன் மின் என் முன் வேறு ஒன்று எண்ணன் மின் எண்ணாவஞ்ச வினைஞர் வல் வழக்குச் சோர்ந்து விடுவது காண்மின் என்னா. | 26 |
|
|
உரை
|
|
|
|
|
1952. | நட்பு இடை வஞ்சம் செய்து நம்பினார்க்கு ஊன் மாறாட்டத்து உட்பட கவர்ந்து ஏற்றோர்க்கு இம்மியும் உதவார் ஆயும் வட்டியின் மிதப்பக் கூறி வாங்கியும் சிலர் போல் ஈட்டப் பட்டதோர் அறத்தாறு ஈட்டு நம் பொருள் படுமோ என்னா. | 27 |
|
|
உரை
|
|
|
|
|
1953. | மங்கல மாடம் ஓங்கு மதுரை நாயகனை நோக்கிச் செம் கரம் சிரமேல் கூப்பி மாணிக்கம் தேற்றி விற்கும் எம் குல வணிகர் ஏறே எம்மனோர் வழக்கை இந்தப் புங்கவர் இடனாத் தீர்த்துத் தருக எனப் புலம்பி ஆர்த்தார். | 28 |
|
|
உரை
|
|
|
|
|
1954. | ஆவலித்து அழுத கள்வர் வஞ்சரை வெகுண்டு நோக்கிக் காவலன் செங்கோன் உண்நூல் கட்டிய தருமத்தட்டில் நா எனும் துலை நா விட்டு எம் வழக்கையும் நமராய் வந்த மேவலர் வழக்கும் தூக்கித் தெரிகென விதந்து சொன்னார். | 29 |
|
|
உரை
|
|
|
|
|
1955. | நரை முது புலி அன்னான் சொல் கேட்டலும் நடுங்கிச் சான்றோர் இருவர் சொல் வழக்கு மேல்கொண்டு அநுவதித்து இரண்டும் நோக்கித் தெரி வழி இழுக்கும் ஞாதி வழக்கு எனச் செப்பக் கேட்டு வெருவினர் தாயத்தார்கள் வலியரின் வேறு சொல்வார். | 30 |
|
|
உரை
|
|
|
|
|
1956. | தவலரும் சிறப்பின் ஆன்ற தனபதி வணிகர் அல்லர் இவர் என அவையம் கேட்ப இருகையும் புடைத்து நக்குக் கவள மான் உரித்துப் போர்த்த கண்ணுதல் வணிகர் கோமான் அவரவர் குடிப்பேர் பட்டம் காணி மற்று அனைத்தும் கூறும். | 31 |
|
|
உரை
|
|
|
|
|
1957. | தந்தை தாய் மாமன் மாமி தாயத்தார் அவரை ஈன்றார் மைந்தர்கள் உடன் பிறந்தார் மனைவியர் கிளைஞர் மற்றும் அந்தம் இல் குணங்கள் செய்கை ஆதிய அடையாளங்கள் முந்தையின் வழுவா வண்ணம் முறையினான் மொழிந்தான் முன்னோன். | 32 |
|
|
உரை
|
|
|
|
|
1958. | அனையது கேட்ட ஆன்றோர் அனைவரும் நோக்கி அந்தத் தனபதி வணிகர் தாமே இவர் எனச்சாற்ற லோடும் மனவலித் தாயத்தார் தம் வழக்கு இழுக்கு அடைந்த ஈது நனை வழி வேம்பன் தேரின் தண்டிக்கும் நம்மை என்னா. | 33 |
|
|
உரை
|
|
|
|
|
1959. | இல்லினுக்கு ஏகி மீள்வன் யான் என்றும் குளத்திற்கு ஏகி ஒல்லையில் வருவேன் என்று ஒவ்வொரு வார்த்தை இட்டு வல் எழு அனைய தோளார் அனைவரும் வன் கால் தள்ளச் செல் எழு முகில்போல் கூட்டம் சிதைந்தனர் ஒளித்துப் போனார். | 34 |
|
|
உரை
|
|
|
|
|
1960. | அனை அவர் போக நின்ற அறன் நவில் மன்றத்து உள்ளோர் தனபதி வணிகர் தந்த தனம் எலாம் தந்த மைந்தற்கு என மனை எழுதி வாங்கி ஈந்தனர் ஈந்த எல்லை மனம் மொழி கடந்த நாய்கர் மறைந்து தம் கோயில் புக்கார். | 35 |
|
|
உரை
|
|
|
|
|
1961. | இம் எனப் பலரும் காண மறைந்தவர் இரும் தண் கூடல் செம்மல் என்று அறிந்து நாய்கச் சிறுவனுக்கு உவகை தூங்க விம்மிதம் அடைந்து வேந்தன் வரிசைகள் வெறுப்ப நல்கிக் கைம் மறி வணிகர் கோயில் புதுக்கினான் கனகம் கொண்டு. | 36 |
|
|
உரை
|
|
|
|
|
1962. | பூத நாயகன் பூரண சுந்தரப் புத்தேள் பாத சேகரன் வரகுண பாண்டியன் புயத்தில் ஓத நீர் உலகின் பொறை சுமக்க வைத்து உம்பர் நாதர் சேவடித் தாமரை நகை நிழல் அடைந்தான். | 37 |
|
|
உரை
|
|
|
|