1963. பண் கொண்ட வேத முதல் இடை ஈறு நாடரிய பரமன்
                                         மாமனாகிய ஒரு வணிகன்
எண் கொண்ட காணி பொருள் கவர் ஞாதி மாதுலரை
                                   எதிர் ஏறி வென்ற படி இதுவாம்
தண் கொண்ட நேமி வரகுண தேவன் எய்து பழி
                               தன்னைத் துடைத்து அனையம் அவன்
கண் கொண்டு காண உயர் சிவ லோகம் மதுரை தனில்
                                   வருவித்த காதை இனி மொழிவாம்.
1
உரை
   
1964. இய மானன் இந்து ரவி எரி வான் இலஞ்சல் இல
                                   எறிகால் எனும் பகுதி இரு நால்
மயமான சுந்தரனை மனம் வாய் மெய் அன்பின் இறை
                                   வழிபாடு அடைந்து வர குணனாய்ச்
சய வேளை வென்ற வடிவினன் ஈறு இல் வென்றி பெறு
                                   சத வேள்வி இந்திரனை நிகர்வோன்
இயன் மேனி கொண்ட ஒளியினில் ஏழ் பசும் புரவி
                                   இனன் தேசு வென்ற வர குணனே.
2
உரை
   
1965. மறை ஆதி கலை பலவும் மகம் ஆதி பல வினையும்
                                   வழுவாது நிறுவு தலின் மலர்மேல்
இறை ஆகி மலர் வனிதை பிரிவான திருமகளிர் இக
                                   போகம் விளைய முறை செயலால்
கறை ஆழி வளைகள் அணி கரன் ஆகி இகல் செய் பொறி
                                   கரண் ஆதி பகைகளையும் நெறியால்
அறை வாய்மை உரையின் முழுது உணர்வால் எவ் உயிரும்
                         நிறை அரன் ஆகி உலகு முறை செயு நாள்.
3
உரை
   
1966. வேட்டம் செய் காதல் ஒரு நாட்டம் ஏகி வன மேட்
                                       டெங்கும்மா தடவி எரியா
நாட்டம் செய் காய் உழுவை நீட்டும் கை யானை முக
                                  நாட்டும் பல் ஏனம் இவை முதலா
ஓட்டம் செய் தேரி ரவி கோட்டின் கணேறி இருள் ஊட்டம்
                                  அந்தி மாலை வரும் அளவாக்
கோட்டம் செய்வார் சிலையின் மாட்டு அம்பின் ஊரியிர்
                                  கூட்டு உண்டு மா நகரில் வருவான்.
4
உரை
   
1967. காலில் கடும் புரவி மேலிற் கடிந்து வரு காலக் கடம்
                                           தனில் ஓர் மறையோன்
மால் உற்று அயர்ந்து முகம் வேர்வைக் குறும் திவலை
                                  வாரக் கிடந்து விழி துயில் வோன்
மேலக் கடும் புரவி கால் வைப்ப அந்தணனும் வீவுற்று
                                           அவிந்தனன் அறியான்
கோலில் செலும் பரியின் மீனத்தனும் தனது கோயில்
                                            புகுந்தனன் வளவே.
5
உரை
   
1968. கனவட்டத்து அடி இடறப் பொறி விட்டுப் புலன் அவியக்
                           கரணத் உட்பொதி உயிர் விட்டவன் ஆகம்
தனை ஒக்கல் பவனர் எடுத்தனர் கிட்டிக் குரிசில் கடைத்
                           தலை இட்டத் திறம் மொழியத் தமிழ் மாறன்
இனை உற்றுப் பனவர் கையில் கனகக் குப்பைகள் நிறை
                        வித்து எமதிக் உற்றவனை எடுத்து எரிமாலை
புனைவித்த அக் கடன் முடிவித்தனன் மற்றப் பழி படரின்
                            புதையப் பற்றியது இடைவிட்டு அகலாதே.
6
உரை
   
1969. பற்றிய பழிக்குத் தீர்வு பழ மறைக் கிழவர் சொன்ன
பெற்றியினை வேறுண்டி நதிக்கரைப் பெரு நூற் கேள்வி
முற்றிய மறை யோர்க்கு ஈந்து மூவராம் தாரு வேந்தைச்
சுற்றியும் தூர்வை கொய்து சுரபிகள் சுவைக்க ஈந்தும்.
7
உரை
   
1970. அக மருடணத்தால் ஒமம் ஆற்றியும் ஆன் ஐந்து ஆவின்
நகை மணிக் கோடு தோய்ந்த நளிர் புனல் குடித்தும் தான
வகை பல கொடுத்து நீங்கா வலியதாய் இழுது பெய்த
புகை அழல் என மேல் இட்டுப் புலப்பட வளைந்தது                                                       அன்றே.
8
உரை
   
1971. ஏங்கும் பெருமூச்சு எறியும் கை யெறியும் குன்றின்
ஒங்கும் சிறுகும் உடன் ஆர்த்திடும் முன்னும் பின்னும்
பாங்கும் தொடரும் சிரிக்கும் பகுவாயை மெல்லும்
நீங்கும் குறுகும் பழிதா என நேர்ந்து பற்றும்.
9
உரை
   
1972. மாசு உண்ட தெய்வ மணிபோல் பணி வாயில் பட்ட
தேசு உண்ட தீம் தண் மதிபோல் ஒளி தேம்பி வண்டு
மூசு உண்டதான முகமா உண்ட வெள்ளில் போலக்
காசுண்ட பூணன் அறைபோய கருத்தன் ஆனான்.
10
உரை
   
1973. மறையோர்கள் பின்னும் பழி மேலிடு வண்ண நோக்கி
இறையோய் இது நான் முகன் சென்னி இறுத்த கூடல்
அற வேதியனைத் தினம் ஆயிரத் எண்கால் சூழல்
உறவே ஒழிக்கப் படும் இன்னம் உரைப்பக் கேட்டி.
11
உரை
   
1974. ஆனா விரத நெறியால் இரண்டு ஐந்து வைகல்
வான நாடனையும் அம் முறையால் வலம் செய்து வந்தாய்
ஆனல் அதற்கு வழிகாட்டும் என்று ஐயர் கூறப்
போனான் அரசன் புனிதன் திருக் கோயில் புக்கான்.
12
உரை
   
1975. விழி ஆயிரத் தோன் பழி தீர்த்தனை வேதியன் தன்
கழியாத மாபாதகம் தீர்த்தனை கௌவைக் கங்கைச்
சுழி ஆறு அலைக்கும் சடையாய் எனைத் தொட்டு
                                                    அலைக்கும்
பழியான் அதுந் தீர்த்து அருள் என்று பணிந்து வீழ்ந்தான்.
13
உரை
   
1976. எண்ணும் படியும் முறையால் வளைந்து ஏத்த ஐயன்
விண்ணின்று இயம்பும் அரசே பரி மேத வேள்வி
நண்ணும் பயனோர் அடிவைப்பின் நண்ண வெம்மைப்
பண்ணும் வலத்தான் மகிழ்ந்தேம் பழி அஞ்சன் மன்னோ.
14
உரை
   
1977. பொன்னோடு முத்தம் கொழிக்கும் துறைப் பொன்னி நாடன்
நின்னோடு அமர் ஆற்ற நினைந்து எழு நீயு நேர்வாய்
அன்னோன் உனக்குப் புறகு இட்டு அகன்று ஓடும் நீயும்
பின்னோடி எட்டிப் பிடிப்பாரில் துரத்தும் எல்லை.
15
உரை
   
1978. எமையாம் அருச்சித்து இருக்கும் தலத்து எய்து வாயால்
அமையாத வன்கண் பழி ஆற்றுதும் என்னச் சேல்கண்
உமையாள் மணாளன் அருள் வாழ்த்தி உரகன் உச்சிச்
சுமையாறு தோளான் தொழுதான் இருக்கை புக்கான்.
16
உரை
   
1979. ஆர்த்தார் முடியோன் சில நாள் கழித்து ஆற்றல் ஏற்ற
போர்த்தாவு வேங்கைக் கொடித்தானை புடவி போர்ப்பப்
பேர்த்தார் கலிவந்து எனப் பேரியம் ஆர்ப்பக் கன்னிப்
பார்த்தாமம் வேன் மீனவன் நாட்டில் படர்ந்த எல்லை.
17
உரை
   
1980. மிடைந்து ஏறு நேரிப் பொருப்பன் படை வேலை மேல்
                                                      சென்று
அடைந்து ஏறி மீனக் கொடி யோன் அமர் ஆட வாழி
கடைந்து ஏறு வெற்பில் கலங்கிற்று எனக் கிள்ளி சேனை
உடைந்து ஏக வெந்நிட்டு உடைந்தோடினன் உள்ளம்
                                                      வெள்கா.
18
உரை
   
1981. சுறவக் கொடி அண்ணல் துரந்து பின் பற்றிச் செல்வோன்
புறவக் கடி முல்லையும் தாமரைப் போதும் ஏந்தி
நறவக் கழி நெய்தலங் கானலின் ஞாங்கர் மொய்த்த
இறவப் புலவு கழுவீர்ந் துறைப் பொன்னி சேர்ந்தான்.
19
உரை
   
1982. பூசத் துறையில் புகுந்து ஆடியப் பொன்னித் தென்சார்
வாசத்து இடை மா மருதைப் பணிதற்கு வைகைத்
தேசத்தவன் கீழ்த்திசை வாயில் கடந்து செல்லப்
பாசத் தளையும் பழியும் புற நின்ற அன்றே.
20
உரை
   
1983. சுருதிச் சுரும்பு புறம் சூழ்ந்து குழறத் தெய்வ
மருதில் சிறந்த பெரும் தேனைக் கண் வாய் அங்காந்து
பருகிப் படிந்து அழல் வாய் வெண்ணெய்ப் பாவை ஒப்ப
உருகிச் செயல் அற்று உரை அற்று உணர் வாகி நின்றான்.
21
உரை
   
1984. நிரா மய பரமானந்த நிருத்த நான் மாடக் கூடல்
பராபர இமையா முக்கண் பகவ பார்ப்பதி மணாள
புராதன அகில நாத புண்ணிய மருதவாண
அரா அணி சடையா என்று என்று அளவு இலாத்துதிகள்
                                                      செய்தான்.
22
உரை
   
1985. சொல் பதம் கடந்த சோதி துதித்து அடி பணிந்த வேந்தை
மற் பெரும் தோளாய் கீழை வாயிலில் பிரமச் சாயை
நிற்பதம் நெறியால் செல்லேல் நிழல் மதி உரிஞ்சு மேலைப்
பொற்பெரு வாயின் நீங்கிப் போதி நம் மதுரைக்கு என்றான்.
23
உரை
   
1986. வரகுணன் அது கேட்டு ஐயன் மருதினை வளைத்து
                                                      நீங்கற்கு
அருமையால் வாயில் தோறும் அடிக்கடி வீழ்ந்து வீழ்ந்து
வரை துளைத்து அன்ன மேலை வாயிலால் போவான்
                                                      அன்ன
திருமணிக் கோபுரம் தன் பெயரினால் செய்து சின்னாள்.
24
உரை
   
1987. திருப்பணி பலவும் செய்து தென் திசை வழிக் கொண்டு
                                                      ஏகிச்
சுருப்பணி நெடு நாண் பூட்டுஞ் சுவைதண்டச் சிலையால்
                                                      காய்ந்த
மருப்பணி சடையான் கோயில் வழி தொறும் தொழுது
                                                      போற்றிப்
பொருப் பணி மாடக் கூடல் பொன்னகர் அடைந்தான்
                                                      மன்னோ.
25
உரை
   
1988. தொடுபழி தொலை வித்து ஆண்ட சுந்தரத் தோன்றல் பாதக்
கடிமலர் அடைந்து நாளும் கைதொழுது உலகம் எல்லாம்
வடு அறு செங்கோல் ஒச்சும் வரகுணன் அறவோர் நாவால்
அடு சுவை அமுதம் அன்ன அரன் புகழ் செவி மடுப்பான்.
26
உரை
   
1989. வேதம் ஆகமம் புராணம் மிருத்திகள் முதலா நூலும்
ஒதுவது உலகின் மிக்கத்து ருத்திர உலகம் என்னும்
போதம் அது அகம் கொண்டு அந்தப் பொன் பதி காண                                                          வேண்டும்
காதல் செல் வழியே ஈசன் கங்குலில் கோயில் எய்தா.
27
உரை
   
1990. மாழை மான் மட நோக்கிதன் மணாளனை வணங்கிப்
பிழை ஏழ் பவம் கடந்து நின் அடி நிழல் பெற்றோர்
சூழ நீ சிவபுரத்தில் வீற்று இருப்பது தொழுதற்கு
ஏழை யேற்கு ஒரு கருத்து வந்து எய்தியது எந்தாய்.
28
உரை
   
1991. என்ற காவலன் அன்பினுக்கு எளியராய் வெள்ளி
மன்ற வாணர் அவ் உலகை இவ் வுலகு இடை வருவித்து
இன்று காட்டுதும் இவற்கு எனத் திரு உளத்து எண்ணம்
ஒன்றினார் அஃது உணர்ந்ததால் உருத்திர உலகம்.
29
உரை
   
1992. கோடி மாமதிக் கடவுளார் குரூச்சுடர் பரப்பி
நீடி ஒர் இடத்து உதித்து என மின் மினி நிகர்த்து
வாடி வான் இரு சுடர் ஒளி மழுங்க வான் இழிந்து
தேடினார்க்கு அரியான் உறை சிவபுரம் தோன்ற.
30
உரை
   
1993. ஆண்ட நாயகன் நந்தியை அழைத்து எமக்கு அன்பு
மாண்ட காதலான் வரகுண வழுதி நம் உலகம்
காண்டல் வேண்டினான் காட்டு எனக் கருணையால் ஏவல்
பூண்ட வேத்திரப் படையினான் தொழுதனன் போந்தன்.
31
உரை
   
1994. வருதியால் எனப் பணிந்து எழு வரகுணன் கொடு போய்க்
கருதி ஆயிரம் பெயர் உடை கடவுளன் முகத்தோன்
சுருதி ஆதி ஈறு அளப்பரும் சொயம் பிரகாசப்
பரிதி ஆள் சிவபுரம் இது பார் எனப் பணித்தான்.
32
உரை
   
1995. கருப்பும் கமழ் துளர் பசும் கால்களால் உதை உண்டு
அருப்பினம் சிதைந்து ஆயிரப் பத்தி யோசனை போய்
மருக் கமழ்ந்து நூறு ஆயிரம் வால் இதழ்க் கமலம்
இருக்கும் ஒடைகள் புடை தொறும் தழுவிய ஆறும்.
33
உரை
   
1996. வரம்பின் மாதரார் மதுரவாய் திறந்து தேன் வாக்கும்
நரம்பின் ஏழ் இசை யாழ் இசை நகை மலர்த் தருவின்
சுரும்பின் நேரிசை நாரத தும்புரு இசைக்கும்
இரும்பு நீர் மெழுகு ஆக்கிய இன்னிசை எங்கும்.
34
உரை
   
1997. அமுத வாவியும் பொன் மலர் அம் புயத் தடமும்
குமுதவாய் அரமாதர் ஆம் குயில் இனம் பயிலும்
நிமிர வாள் விடு மரகத நெடிய பைம் காவும்
திமிர மாசறக் கழுவிய தேவர் வாழ் பதமும்.
35
உரை
   
1998. அலங்கு பால் கடல் போல் புறத்து அமுதநீர் அகழும்
பொலம் செய் ஞாயில் சூழ் புரிசையும் பொன் செய்
                                                    கோபுரமும்
நலம் கொள் பூ இயல் விதியும் நவ மணி குயின்ற
துலங்கு மாளிகைப் பந்தியும் சூளிகை நிரையும்.
36
உரை
   
1999. ஐம் புலங்களும் வைகலும் விருந்ததா வருந்த
வெம்பு நால் வகை உண்டியும் வீணையும் சாந்தும்
செம் பொன் ஆரமும் ஆடலின் செல்வமும் தெய்வப்
பைம் பொன் மேகலை ஓவியப் பாவை ஒப்பாரும்.
37
உரை
   
2000. படர்ந்த வார் சடை உருத்திரர் பணைத்து இறு மாந்த
வடம் கொள் பூண் முலை உருத்திர மகளிரொடு அமரும்
இடம் கொள் மாளிகைப் பந்தியும் இகல்விளை துன்பம்
கடந்த செல்வமும் கவலை இல் போகமும் காட்டி.
38
உரை
   
2001. முண்டக ஆசனன் பதம் இது மூவுலகு அளந்த
தண் துழாயவன் புரம் இது தனி முதல் வடிவம்
கொண்டு வீறு சால் உருத்திரர் கோப்பதி இன்ன
எண் திசா முகம் காவலர் உறை விடம் இவை காண்.
39
உரை
   
2002. புலரும் முன் புனல் ஆடி நீறு ஆடி நம் புனிதன்
இலகும் ஆலயம் வினக்கி நம் தன் பணி இயற்றி
மலர் கொய்து ஆய்ந்தனர் தொடுத்து அரன் புகழ் செவி                                                       மடுத்து இவ்
உலக வாணராய்ப் போகம் உற்று உறைகு நர் இவர்காண்.
40
உரை
   
2003. தூயர் ஆகி ஐஞ் சுத்தி செய்து அகம் புறம் இரண்டின்
நேயராய் விதி நெறியின் நான் முகமன் ஈர் எட்டால்
காயம் வாய் மனம் ஒருமையால் அர்ச்சித்துக் கடவுள்
நாயன் அரருகு உறைபதம் நண்ணினார் இவர் காண்.
41
உரை
   
2004. கிளர்ந்த காலினால் அங்கியை நிமிர்த்து மேல் கிடைத்து
வளர்ந்த பிங்கலை இடை நடு வழி உகு மதியின்
விளைந்த இன் அமுது உண்டு நம் விடையவன் வடிவம்
குளம்தனில் குறித்து அவன் உருக் கொண்டவர் இவர்
                                                      காண்.
42
உரை
   
2005. முக்கண் நாயகன் பொருட்டு என வேள்விகள் முடித்துத்
தொக்க வேதியர் இவர் புனல் சாலை இத் தொடக்கத்
தக்க பேர் அறம் புகழ் பயன் தமை நன்கு மதிக்கும்
பொக்க மாறிய நிராசையால் புரிந்தவர் இவர் காண்.
43
உரை
   
2006. மறையின் ஆற்றினார் தந்திர மரபினான் மெய்யின்
நிறையும் நீற்றினர் நிராமயன் இருந்த ஐந்து எழுத்தும்
அறையும் நாவினர் பத்தராய் அரன் புகழ் கேட்கும்
முறையினால் இவர் வினை வலி முருக்கினார் கண்டாய்.
44
உரை
   
2007. மறைகளின் சத உருத்திர மந்திரம் நவின்றோர்
நிறை கொள் கண்டிகை நீறு அணி நீரர் யாரேனும்
குறி குணம் குலன் குறித்திடாது அன்பரைச் சிவன் என்று
அறியும் அன்பினால் பிறவி வேர் அறுத்தவர் இவர் காண்.
45
உரை
   
2008. ஆன் அஞ்சு ஆடிய பரம் சுடர் இறை சிவஞான
தானம் செய்தவர் தருப்பணம் செய்தவர் சாம
கானம் செய்தவற்கு ஆலயம் கண்டு தாபித்தோர்
ஊனம் சேர் பிறப்பு அறுத்து வாழ் உத்தமர் இவர்காண்.
46
உரை
   
2009. சிவனை அர்ச்சனை செய்பவர்க்கு இசைவன செய்தோர்
அவன் எனக் குறித்து அடியரைப் பூசை செய்து ஆறு
சுவைய இன் அமுது அருத்தினோர் தொண்டர் தம்
                                                                பணியே
தவம் எனப் புரிந்து உயர்ச்சியைச் சார்ந்தவர் இவர்காண்.
47
உரை
   
2010. ஆதி சுந்தரக் கடவுளுக்கு ஆலயம் பிறவும்
நீதியால் அருச்சனை பிற பணிகளும் நிரப்பிப்
பூதி சாதன வழி நிலம் புரந்து இவண் அடைந்த
கோது இலாத நின் குடிவழிக் கொற்றவர் இவர்காண்.
48
உரை
   
2011. என்று வேத்திரம் கொடு குறித்து எம் இறை நந்தி
கொன்றை வேணியன் அடியர் தம் குழாத்தினைத் தேற்றி
நின்று வீழ்ந்து வீழ்ந்து அஞ்சலி முகிழ்த்திட நெறியே
சென்று வானவர் நாயகன் திரு முன்பு விடுத்தான்.
49
உரை
   
2012. மறைகள் ஆகமம் வடிவு எடுத்து இரு புடை வாழ்த்த
நறை கொள் யாழ் தழீஇத் தும்புரு நாரதர் பாட
அறை கொள் வண்டு இமிர் கொம்பரின் அரம்பையர் ஆடக்
குறைகொள் வானவர் பதம் கிடையாது இறை கொள்ள.
50
உரை
   
2013. மதங்க விழ்க்கும் ஆல் வரை முக மைந்தனும் சூரன்
கதங்கவிழ்த்த வேல் கந்தனும் கருதலன் வேள்வி
விதங்க விழ்த்த வாள் வீரனும் வெயின் முடித்தார் தேன்
பதங்க விழ்ப்ப வீழ்ந்து ஏயின பணி வழி நிற்ப.
51
உரை
   
2014. தூங்கு தானையை ஒதுக்கி வாய் துணைக் கரம் பொத்தி
ஓங்கு மால் அயன் தம் குறை ஒதுங்கி நின்று உரைப்ப
வாங்குவான் சிலை இந்திரன் முதல் திசை வாணர்
தாங்கள் தாம்புரி காரியக் குறை நின்று சாற்ற.
52
உரை
   
2015. எழுவினோடு தண்டு ஏந்தி வாய் மென்று எயிறு அதுக்கிக்
குழுமு பாரிடத் தலைவரும் கோடி கூற்று ஒதுங்கி
விழும முழ்கி மெய் பனித்திட விதிர்க்கும் முக்குடுமிக்
கழுமுள் ஏந்திய கணத்தவர் கடை தொறும் காப்ப.
53
உரை
   
2016. சித்தர் வானவர் தானவர் சாரணர் திணி தோள்
வைத்த யாழினர் கின்னரர் மாதவர் இயக்கர்
பைத்த பாரிடர் காருடர் பாதல வாணர்
சுத்த யோகியர் முதல் கணத் தொகை எலாம் பரவ.
54
உரை
   
2017. இனி வரும் பிறப்பு அறுத்து எமைக் காத்தியால் எனத் தம்
கனி அரும்பிய அன்பு எழு கருணை ஆர் அமுதைப்
பனி வரும் தடம் கண்களால் பருகி மெய் பனிப்ப
முனிவர் சங்கர சிவ சிவ என முறை முழங்க.
55
உரை
   
2018. வரம் தவாதன யாவர்க்கும் வரன் முறை வழங்கி
முருந்தவா நகை மலைக் கொடி முகிழ் நகை அரும்பத்
திருந்த ஆயிரம் கதிர் விடு சிங்க மெல் அணைமேல்
இருந்த நாயகன் இருக்கை கண்டு இறைஞ்சினான் இறைவன்.
56
உரை
   
2019. உரைகளும் தடுமாற மெய் உரோமமும் சிலிர்ப்பக்
கரை இறந்த இன்னருள் பெரும் கடலில் அன்பு எனும்
திரை இறந்தவாறு ஈர்த்திட மிதந்து போய்ச் செப்பின்
வரை இறந்த ஆனந்த வார் அமுதை வாய் மடுத்தான்.
57
உரை
   
2020. தன் புலன்களும் கரணமும் தன்னவே ஆக்கி
அன்பு உடம்பு கொண்டு அவன் எதிர் அருள் சிவ லோகம்
பின்பு பண்டு போல் மதுரையாப் பிராட்டியும் தானும்
முன்பு இருந்தவாறு இருந்தனன் சுந்தர மூர்த்தி.
58
உரை
   
2021. வேந்தர் சேகரன் வரகுணன் விண் இழி கோயில்
ஏந்தல் சேவடி இறைஞ்சி நின்று இறை அருள் பெருமை
ஆய்ந்த வாவு தன் அகம் புக இன்ப மோடு அன்பு
தோய்ந்து ஆரையர் துளும்ப நாக் குழறிடத் துதிப்பான்.
59
உரை
   
2022. நாயினேன் தன்னை நடுக்கும் பழி அகற்றித்
தாயின் நேர் ஆகித் தலை அளித்தாய் தாள் சரணம்
சேயினேன் காணச் சிவலோகம் காட்டிப் பின்
கோயில் நேர் நின்ற அருள் குன்றெ நின் தாள் சரணம்.
60
உரை
   
2023. மாழ் ஆழ்ந்து செய்யும் வினை வழி போய் வல் நரகில்
ஆழா அடியனேற்கு அன்பு தந்தாய் தாள் சரணம்
ஏழ் ஆகி நான்கு வகையாய் எழுபிறப்பும்
பாழாக என்னைப் பணி கொண்டாய் தாள் சரணம்.
61
உரை
   
2024. வெம்கண் பழியின் வினையேனை வேறு ஆக்கித்
திங்கள் குலக் களங்கம் தீர்த்தாய் நின் தாள் சரணம்
அம் கண் சிவபுரம் உண்டு அன்புடையார்க்கு என்பதை
                                                        இன்று
எங்கட்குக் காட்டி இசைவித்தாய் தாள் சரணம்.
62
உரை
   
2025. என்ன ஏத்தி இன் அருண் முகத்து ஈறு இலா அன்பால்
பின்னர் வேறு பல் பூசையும் பிறக்கு வித்து இருந்தான்
மன்னர் ஏறு அடையார்க்கு ஒரு மடங்கலே அடல் வேல்
தென்னர் ஏறு எனத் தோன்றிய வர குண தேவன்.
63
உரை
   
2026. என்ற தென் மலை முனிவனை இருடிகள் நோக்கி
அன்று வாசவன் பழி கரி சாபம் அந்தணனைக்
கொன்று தாயொடும் கூடிய கொடுவினை முதலாத்
துன்று பாவமும் மதுரையில் தொலைத்தனன் அன்றோ.
64
உரை
   
2027. பரமன் எண் குணன் பசுபதி வரகுணன் பற்றும்
பிரம வன் பழி இடை மருது இடை விட்டுப் பெயர
வரம் அளித்தவாறு என்னைகொல் வள்ளலே இதனைத்
திரம் உறப் புகல் எமக்கு என முனிவர் கோன் செப்பும்.
65
உரை
   
2028. பூத நாயகன் சுந்தரன் புண்ணிய மூர்த்தி
ஆதலால் அன்ன தலத்து உறை அடியவர் அஞ்சிப்
பாதகம் செயாது ஒழுகு உறூஉம் படி நினைந்து இனைய
தீது உறூஉம் பழிதனை இடை மருதினில் தீர்த்தான்.
66
உரை
   
2029. என்ற அகத்திய முனி இறை இறை கொடுத்து இயம்ப
நன்று எனச் சிரம் பணித்து மெய்ஞ் ஞான ஆனந்தம்
துன்றி நற்றவர் சுந்தரச் சோதி சேவடிக் கீழ்
ஒன்று அற்புத ஆனந்த உததியுள் குளித்தார்.
67
உரை
   
2030. அன்ன தனித் தொல் மதுரை அன்று தொடுத்து இன்று
                                                        எல்லை
தன் அனையது ஆகிய தலங்கள் சிகாமணி ஆகிப்
பொன் நகரின் வளம் சிறந்து பூ உலகில் சிவலோகம்
என்ன இசை படப் பொலிந்தது ஏழ் இரண்டு புவனத்தும்.
68
உரை