2031. நெடியவன் பிரமன் தேட நீண்டவன் தென்னற்கு ஏழின்
முடியது ஆம் சிவ லோகத்தைக் காட்டிய முறை ஈது ஐயன்
படிமிசை நடந்து பாடிப் பாணன் தன் விறகு ஆளாகி
அடிமை என்று அடிமை கொண்ட அருள் திறம் எடுத்துச்
                                                          சொல்வாம்.
1
உரை
   
2032. மன்றல் அம் தெரியல் மார்பன் வரகுணன் செங்கோல்
                                                        ஓச்சிப்
பொன் தலம் காவலானில் பொலியும் நாள் ஏமநாதன்
என்று ஒரு விறல் யாழ்ப் பாணன் வட புலத்து இருந்தும்
                                                         போந்து
வென்றி கொள் விருதினோடும் விஞ்சை சூழ் மதுரை
                                                    சார்ந்தான்.
2
உரை
   
2033. பூழியர் பெருமான் கோயில் புகுந்து வேத்து அவையத்து
                                                         எய்திச்
சூழி மால் யானை யானைத் தொழுது பல் புகழ் கொண்டாடி
ஏழ் இசை மழலை வீணை இடந்தழீ இச் சுருதி கூட்டி
வாழியின் இசைத்தேன் மன்னன் அரும் செவி வழியப்
                                                         பெய்தான்.
3
உரை
   
2034. முகை உடைத்து அவிழ்ந்த மாலை முடித்தலை துளக்கித்
                                                              தூசு
பகல் அவிர் மணிப்பூண் நல்கிப் பல் உணாக் கருவி நல்கி
அகன் மனை வேறு காட்டி அரசர் கோன் வரிசை செய்ய
இகல் அறு களிப்பினோடு இசை வல்லான் இல்லில்
                                                          புக்கான்.
4
உரை
   
2035. மீனவன் வரிசை பெற்ற செருக்கினும் விருதினானும்
மான மேல் கொண்டு தன்னோடு இன்னிசை பாடவல்ல
தான யாழ்ப் புலவர் வேறு இங்கு இல் எனத் தருக்கும்
                                                         செய்தி
கோன் அறிந்து உழையர்க் கூவி பத்திரற் கொணர்திர்
                                                      என்றான்.
5
உரை
   
2036. உழையரால் விடுக்கப் பட்ட பத்திரன் உவரிவென்றோன்
கழல் பணிந்து அருகு நிற்பக் கௌரியன் நோக்கிப் பாணி
பழகு இசை வல்லானோடும் பாடுதி கொல்லோ என்ன
மழலை யாழ் இடம் தோள் இட்ட பாணர் கோன் வணங்கிச்
                                                         சொல்வான்.
6
உரை
   
2037. தென்னவர் பெரும யான் உன் திரு உள வலனும் கூடல்
முன்னவன் அருளும் ஊட்டும் முயற்ச்சியான் முயன்றுபாடி
அன்னவன் விருது வாங்கி அவனை வீறு அழிப்பன்
                                                         என்றான்
மன்னவன் நாளைப் பாடு போ என வரைந்து சொன்னான்.
7
உரை
   
2038. இல் கண்ணே இசைவல்லா போய் இருந்துழி அனையான்
                                                        பாங்கர்
கற்கும் பாண் மக்கள் மல்ல ஆவணம் கவலை மன்றம்
பொன் குன்றம் அனைய மாட மறுகு எங்கும் போகிப்
                                                        போகிச்
சொல் குன்றா வகையால் பாடித் திரிந்தனர் வீறு தோன்ற.
8
உரை
   
2039. இவ் விசை கேட்டு நன்று என்று அதிசயித்து இசை
                                                   வல்லான்பால்
வவ்விசை மைந்தர் பாடும் வண்ணம் ஈது என்னை
                                                     கெட்டேன்
அவ்விசை வல்லான் பாடும் முறை எற்றோ அவனை
                                                       நாளைச்
செவ்விசை பாடி வெல்வது எவன் எனத் திவவுக் கோலான்.
9
உரை
   
2040. மை அணி மிடற்றினானை மதுரை நாயகனை வந்தித்து
ஐயனே அடியேற்கு இன்று உன் அருள் துணை செய்யல்
                                                         வேண்டும்
மெய்யனே என்று போற்றி வேண்டு கொண்டன்பு தோய்ந்த
பொய்யறு மனத்தான் இல்லாம் புக்கு இனிது இருந்தான்
                                                         இப்பால்.
10
உரை
   
2041. வருத்தன் ஆகி வந்து இரந்தவன் இசைப் பகை மாற்ற
விருத்தன் ஆம் விறகு ஆள் என விண் இழி விமானத்து
ஒருத்தனான் அறிவு ஆகிய உண்மை ஆனந்தத்
திருத்தனார் தமது இச்சையால் திரு உருக் கொள்வார்.
11
உரை
   
2042. அழுக்கு மூழ்கிய சிதர் அசைத்து அவிர் சடை அமுதம்
ஒழுக்கு வான்மதி வாங்கியே செருகியது ஒப்ப
மழுக்கு கனல் வெள் வாய்க் குயம் வலம் படச் செருகி
இழுக்கு தேய் செருப்பு அருமறை கடந்தான் ஏற்றி.
12
உரை
   
2043. பழைய தோர் பொல்லாம் பொத்திய பத்தர் யாழ்க்கோன்
                                                          தோள்
உழைய தாகி விட்டு எருத்தலைத்து ஊசல் ஆடிய ஒண்
குழைய காதினில் களவிணர்க் குறிய காய் தூக்கித்
தழையும் வார்சிகை சரிந்திடச் சுமை அடை தாங்கி.
13
உரை
   
2044. தறிந்த இந்தனம் தினந்தோறும் தாங்கி நீள் பங்கி
பறிந்து தேய்ந்து அழுந்திய தலை உடையராய்ப் பரிந்து
மறிந்த கங்கையும் பங்கு உறை மங்கையும் காணா
தெறிந்த இந்தனச் சுமை திரு முடியின் மேல் ஏற்றி.
14
உரை
   
2045. என்பு தோன்றி ஊன் இன்றியே இளைத்த யாக்கையராய்
அன்பு தோன்றியே கண்டவர் அகம் கனிந்து இரங்க
வன்பு தோன்றிய மன மொழி கடந்த தாள் மலர் பார்
முன்பு தோன்றிய தவத்தினாள் முடிமிசைச் சூட.
15
உரை
   
2046. திருமுகத்து வேர் அரும்ப வாய் குவித்து ஒலி செய்ய
வருவர் கல் சுமை தாங்கி மேல் சார்த்து வார் மடு நீர்
பருகுவார் எடுப்பார் தலை வெம்மை வேர்பறிய
இருகை யாலடிக் கடி எடுத்து ஏந்தி ஊர் புகுவார்.
16
உரை
   
2047. நடந்து கொள்ளுநர்க்கு அறவிலை பகர்ந்து நான் மாடம்
மிடைந்த வீதியும் கவலையும் முடுக்கரு மிடைந்து
தொடர்ந்த வேதமும் பிரமன் மால் சூழ்ச்சியும் பகலும்
கடந்து போகி அவ் இசை வலான் கடைத் தலைச் செல்வார்.
17
உரை
   
2048. வரவு நேர்ந்து அழைப்பவர் என ஆம்பல் வாய் மலர
இரவு கான்று வெண்மதி நகைத்து எழ உயிர்த்துணைவன்
பிரிவு நோக்கினார் எனக் கணீர் பில்கு தாமரையின்
நிரைகள் கூம்பிடக் கதிரவன் குட கடல் நீந்த.
18
உரை
   
2049. பறவை வாய் அடைத்து அருகு அணை பார்ப் பொடும்
                                                  பெடையைச்
சிறகரால் அணைத்து இரும் பொழில் குடம் பையுள் செறிய
நறவவாய்ப் பெடை உண்ட தேன் நக்கி வண்டு ஓடைப்
பொறைகொள் தாமரைப் பள்ளியுள் புகுந்து கண் படுக்க.
19
உரை
   
2050. புல் என் நீள் நிலைக் குரங்கினம் பொதும்பர் புக்கு உறங்க
முல்லை யாய் மகா உய்த்தரக் கன்று உள்ளி முந்திக்
கொல்லை அன் நிரை மனை தொறும் குறுகிடச் சிறுபுன்
கல்வி மாணவச் சிறார் பயில் கணக்கு ஒலி அடங்க.
20
உரை
   
2051. புனைந்த வாழ் கடல் கரும் படாம் உடம்பு எலாம் போர்த்து
வனைந்த பூண் முலை நிலமகள் துயில்வது மானக்
கனைந்த கார் இருண் மெல் எனக் கவிதரப் பிரிவால்
இனைந்த காதலர் நெஞ்சில் வேள் எரிகணை நாட்ட.
21
உரை
   
2052. திங்கள் வாள் நுதல் முயல் கறைத் திலகமும் சிவந்த
மங்குல் ஆடையும் மயங்கு இருள் ஓதியும் வான்மீன்
பொங்கும் ஆரமும் பொலிந்து தன் கொண்கனைப்
                                                    பொருப்பன்
மங்கை தேடி வந்தாள் என வந்தது மாலை.
22
உரை
   
2053. எடுத்த இந்தனம் ஒருபுறத்து இறக்கி இட்டு ஊன்றி
அடுத்த வன்புறம் திண்ணை மீது அமர்ந்து இளைப் பாறித்
தொடுத்த இன்னிசை சிறிது எழீப் பாடினார் சுருதி
மடுத்தி யார் அவன் பாடுவான் என்று இசை வல்லான்.
23
உரை
   
2054. வண்டு அறை கொன்றையான் முன் வந்து நீ யாரை
                                                       என்றான்
பண் தரு விபஞ்சி பாணபத்திரன் அடிமை என்றான்
முண்டக மலரோன் மாயோன் புரந்தரன் முதல் மற்ற ஏனை
அண்டரும் தன் குற்றேவல் அடிமையாக் கொண்ட
                                                      அம்மான்.
24
உரை
   
2055. கனி இசைக் கிழவன் தன் கீழ்க் கற்பவர் அனேகர் தம்
                                                            முள்
நனி இசைக் கிழமை வேட்டு நானும் அவ் வினைஞன்
                                                         ஆனேன்
தனி இசைக் கிழவன் நோக்கித் தலை எலாம் ஒடுங்க
                                                         மூத்தாய்
இனியிசைக் கிழமைக்கு ஆகாய் என்று எனைத் தள்ளி
                                                        விட்டான்.
25
உரை
   
2056. வெவ் விறகு எறிந்து கட்டி விலை பகர்ந்தேனும் ஐய
இவ்வயிறு ஓம்புகேன் இத் தொழில் பூண்டேன் என்ன
நைவளம் தெரிந்த ஏம நாதனும் விறகு மள்ளா
அவ்விசை ஒருகால் இன்னும் பாடு என ஐயன் பாடும்.
26
உரை
   
2057. குண்டு நீர் வறந்திட்டு அன்ன நெடும் கொடிக் குறுங்காய்ப்
                                                          பத்தர்த்
தண்டு நீள் நிறத்த நல் யாழ் இடம் தழீஇ தெறித்துத்
                                                          தாக்கிக்
கண்டு ஆடகம் திரித்துக் கௌவிய திவ விற் பாவ
விண்டு தேன் ஒழு கிற்று என்ன விக்கி மென் சுருதி கூட்டி.
27
உரை
   
2058. விசை யொடு தானம் தோறும் விரல் நடந்து ஊசல் ஆட
இசை முதல் ஏழில் பல் வேறு இன்னிசை எழும் சாதாரி
அசை யோடு வீதிப் போக்கு முடுகியல் அராகம் யார்க்கும்
நசைதரு நரம்பு கண்ட ஒற்றுமை நயம் கொண்டு ஆர்ப்ப.
28
உரை
   
2059. வயிறது குழிய வாங்கல் அழுமுகம் காட்டல் வாங்கும்
செயிர் அறு புருவம் ஏறல் சிரம் நடுக்கு உறல் கண் ஆடல்
பயிர் அரு மிடறு வீங்கல் பையென வாய் அங்காத்தல்
எயிறு அது காட்டல் இன்ன உடல் தொழில் குற்றம் என்ப.
29
உரை
   
2060. வெள்ளை காகுளி கீழோசை வெடி குரல் நாசி இன்ன
எள்ளிய எழாலின் குற்றம் எறிந்து நின்று இரட்டல் எல்லை
தள்ளிய கழி போக்கு ஓசை இழைத்தன் நெட்டு உயிர்ப்புத்                                                           தள்ளித்
துள்ளல் என்று இன்ன பாடல் தொழில் குற்றம் பிறவும்                                                           தீர்ந்தே.
30
உரை
   
2061. எழுது சித்திரம் போல் மன்னி இழும் எனும் அருவி ஓதை
முழவு ஒலி கஞ்சம் நாதம் வலம் புரி முரலும் ஓசை
கொழுதிசை வண்டின்று ஆரி என குணனும் வேரல்
விழும் இலை சிரன் மீன் மேல் வீழ் வீழ்ச்சி போல் பாடல்                                                            பண்பும்.
31
உரை
   
2062. பொருந்த மந்தரத் தினோடு மத்தி மந்தாரம் போக்கித்
திருந்திய துள்ளல் தூங்கல் மெலிவது சிறப்பச் செய்து
மருந்தன செய்யுள் ஓசை இசை ஓசை வழாமல் யார்க்கும்
விருந்து எனச் செவியின் மாந்தப் பாடினார் வேத கீதர்.
32
உரை
   
2063. விரைசார் மலரோன் அறியா விகிர்தன்
அரசாய் மதுரை அமர்ந்தான் என்னே
அரசாய் மதுரை அமர்ந்தான் அவன் என்
புரை சார் மனனும் புகுந்தான் என்னே.
33
உரை
   
2064. பாடல் மறையும் தெளியாப் பரமன்
கூடல் கோயில் கொண்டான் என்னே
கூடல் போலக் கொடி ஏனகமும்
ஆடல் அரங்கா அமர்ந்தான் என்னே.
34
உரை
   
2065. நீல வண்ணன் தேறா நிமலன்
ஆல வாயில் அமர்ந்தான் என்னே
ஆல வாயான் அலரில் வாசம்
போல் என் உளமும் புகுந்தான் என்னே.
35
உரை
   
2066. பாணர் தம்பிரானைக் காப்பான் பருந்தோடு நிழல் போக்கு
                                                           என்ன
யாழ் நரம்பிசை பின் செல்ல இசைத்த இன்னிசைத் தேன்
                                                           அண்ட
வாணர்தம் செவிக்கால் ஓடி மயிர்த்துனை வழியத் தேக்கி
யாணரின் அமுத யாக்கை இசை மயம் ஆக்கிற்று அன்றே.
36
உரை
   
2067. தருக்களும் சலியா முந்நீர்ச் சலதியும் கலியா நீண்ட
பொருப்பிழி அருவிக் காலும் நதிகளும் புரண்டு துள்ளா
அருள் கடல் விலைத்த கீத இன்னிசை அமுதம் மாந்தி
மருள் கெட அறிவன் திட்டி வைத்த சித்திரமே ஒத்த.
37
உரை
   
2068. வீணை கை வழுக்கிச் சோர்வார் சிலர் சிலர் விரல்
                                                         நடாத்தும்
யாணர் அம்பு எழலும் கண்டத்து எழாலும் வேறு ஆக
                                                         வேர்ப்பர்
நாண மோடு உவகை தள்ள நாத்தலை நடுங்கித் தங்கள்
மாண் இழை அவர் மேல் வீழ் வார் விஞ்சையர் மயங்கிச்
                                                         சில்லோர்.
38
உரை
   
2069. போது உளான் பரமன் பாதப் போது உளான் ஆனான்
                                                         வேலை
மீது உளான் பரமானந்த வேலை மீது உள்ளான் ஆனான்
தாது உளாங் கமலக் கண்போல் சதமகன் உடலம் எல்லாம்
காது உளான் அல்லேன் என்றான் கண் உளான் கானம்
                                                         கேட்டு.
39
உரை
   
2070. முனிவரும் தவத்தர் ஆதி முத்தர் மாசித்தர் அன்பன்
துனி வரும் பழங்கண் தீர்ப்பான் சுந்தரத் தோன்றல் கீதம்
கனிவரும் கருணை என்னும் கடலில் அன்பு என்னும்                                                        ஆற்றில்
பனி வரும் கண்ணீர் வெள்ளம் பாய்ந்திட இன்பத்து                                                        ஆழ்ந்தார்.
40
உரை
   
2071. ஊதி வேறு ஒதுங்கித் துன்ப உவரியுள் குளித்தார் தம்மில்
கூடிவேறு அற்ற இன்பக் குளிர் கடல் வெள்ளத்து
                                                       ஆழ்ந்தார்
நாடி வேறு இடைப் பிரிந்தார் மேல் மனம் நடாத்தி மேனி
வாடி வேள் அலைப்பச் சோர்ந்து மம்மர் நோய் உழந்தார்
                                                       மண்ணோர்.
41
உரை
   
2072. பைத் தலை விடவாய் நகம் பல் பொறி மஞ்ஞை நால்வாய்
மத்தமான் அரிமான் புல்வாய் வல்லிய மருட்கை எய்தித்
தத்தமாறு அறியாவாகி தலைத்தலை மயங்கிச் சோர
இத்தகை மாவும் புள்ளும் இசை வலைப் பட்ட அம்ம.
42
உரை
   
2073. வன்தரை கிழிய வீழ்போய் வான் சினை கரிந்து நின்ற
ஒன்றறி மரங்கள் எல்லாம் செவி அறி உடைய ஆகி
மென்தளிர் ஈன்று போது விரிந்து கண் நீரும் சோர
நன்று அறி மாந்தர் போல நகை முகம் மலர்ந்த மாதோ.
43
உரை
   
2074. வாழிய உலகின் வானோர் மனிதர் புள் விலங்கு மற்றும்
ஆழிய கரணம் எல்லாம் அசைவு அற அடங்க ஐயன்
ஏழ் இசை மயமே ஆகி இருந்தன உணர்ந்தோர் உள்ளம்
ஊழியில் ஒருவன் தாள் புக்கு ஒடுங்கிய தன்மை ஒத்த.
44
உரை
   
2075. கண் நிறை நுதலோன் சாம கண்டத்தின் எழுந்த முல்லைப்
பண் நிறை தேவ கீதம் சரா சர உயிரும் பாரும்
விண் நிறை திசைகள் எட்டும் விழுங்கித் தன் மயமே
                                                        ஆக்கி
உள் நிறை உயிரும் மெய்யும் உருக்கிய இசை வல்லானை.
45
உரை
   
2076. சிந்தை தோயும் ஐம் பொறிகளும் செவிகளாப் புலன்கள்
ஐந்தும் ஓசையா இசைவலான் இருந்தனன் ஆகப்
பந்த நான்மறை நாவினால் பத்திரன் ஆளாய்
வந்து பாடினார் இந்தனச் சுமையொடு மறைந்தார்.
46
உரை
   
2077. யான் அறிந்த சாதாரி அன்று இம்பருள் இதனை
நான் அறிந்தது என்று ஒருவரும் நவின்றிலர் தேவ
கான மீது அவற்கு உணர்த்தினோன் கடவுளே அன்றி
ஏனை மானுடர் வல்லரோ இது வியப்பு என்னா.
47
உரை
   
2078. இழுக்கி விட்ட இக் கிழமகன் இசை இதேல் அந்த
வழுக்கு இல் பத்திரன் பாதல் எற்றோ என மதியா
அழுக்கம் உற்று எழுந்து இசைவலான் அடுத்த தன் பண்டர்
குழுக்களும் குலை குலைந்திட இருள் வழிக் கொண்டான்.
48
உரை
   
2079. மடக்கு பல் கலைக் பேழையும் அணிக்கலம் பிறவும்
அடக்கும் பேழையும் கருவியாழ்க் கோலும் ஆங்கே
                                                       ஆங்கே
கிடக்க மானமும் அச்சமும் கிளர்ந்து முன் ஈர்த்து
நடக்க உத்தர திசைக்கணே நாடினான் நடந்தான்.
49
உரை
   
2080. சிவிகை ஓர் வழி விறலியர் ஓர் வழி செல்லக்
கவிகை ஓர் வழி கற்பவர் ஓர்வழி கடுகக்
குவிகை ஏவலர் ஒருவழி கூட நாண் உள்ளத்
தவிகை யோ வரும் ஒருவழி அகன்றிட அகன்றான்.
50
உரை
   
2081. அன்று பத்திரன் கனவில் வந்து அடல் ஏற்று அழகர்
இன்று பத்திர இசைவலான் இடை விறகு ஆளாய்ச்
சென்று பத்திரன் அடிமையாம் என்று பாண்செய்து
வென்று பத்திரம் செய்து நின் வேண்டுகோள் என்றார்.
51
உரை
   
2082. குஞ்சி நாள் மலர் கொன்றையார் அங்ஙனம் கூறும்
நெஞ்சினான் இனைப் பரிய சொல் கேட்டலும் நெஞ்சம்
அஞ்சினான் இது செய்யவோ அடியனேன் மறைகள்
கெஞ்சினாரை இன்று இரந்த வாறு என்று கண் விழித்தான்.
52
உரை
   
2083. கண் மலர்ந்து எழு பத்திரன் கரை இலா உவகை
உண் மலர்ந்து எழும் அன்பு கொண்டு ஊக்க
                                                      வெம்கதிரோன்
விண்மலர்ந்து எழு முன்பு போய் விசும்பு இழி கோயில்
பண் மலர்ந்த நான் மறைப் பொருள் அடித்தலம்
                                                      பணிந்தான்.
53
உரை
   
2084. கடிய கானகம் புகுதவோ கட்டிய விறகை
முடியில் ஏற்றவோ முண்டகத்தாள்கள் நொந்திட வந்து
அடியனேன் பொருட்டு அடாதசொல் பகரவோ வஞ்சக்
கொடியனேன் குறை இரந்தவா விளைந்ததே குற்றம்.
54
உரை
   
2085. நெடிய னேன் முதல் வானவர் நெஞ்சமும் சுருதி
முடியன் ஏகமும் கடந்த நின் முண்டகப் பாதம்
செடியனேன் பொருட்டாக இச் சேண் நிலம் தோய்ந்த
அடியனேற்கு எளிது ஆயதோ ஐய நின் பெருமை.
55
உரை
   
2086. நாத அந்தமும் கடந்த மெய்ஞ் ஞான ஆனந்த
போதம் என்பர் அஃது இன்று ஒரு புடவி மானுடமாய்
ஆதபம் தெற வெறிந்த இந்தனம் சுமந்து அடியேன்
பேதை அன்பு அளவு ஆயதோ பெரும நின் உருவம்.
56
உரை
   
2087. மறிந்த தெண் திரை கிடந்தவன் உந்தியில் வந்தோன்
அறிந்த அன்று அரும் பொருள் வரம்பு அகன்று
                                                   எழுவிசும்பும்
செறிந்த அண்டமும் கடந்தது சிறியனேன் பொருட்டாத்
தறிந்த இந்தனம் சுமந்ததோ தம்பிரான் முடியே.
57
உரை
   
2088. என்ன வந்தனை செய்து நின்று ஏத்தி அம் கயல் கண்
மின் அமர்ந்த பங்கு ஒருவனை வலம் கொடு மீண்டு
மன்னர் தம்பிரான் ஆகிய வரகுண தேவன்
தன்னை வந்து அடி பணிந்தனன் தந்திரிக் கிழவோன்.
58
உரை
   
2089. வந்த ஏழ் இசைத் தலைமகன் வரவு அறிந்து அரசன்
அந்த ஏழ் இசைக் கிழவனை அழை என உழை யோர்
பந்த யாழ் மகன் இருக்கை போய்ப் பார்த்தனர் காணார்
சிந்தை ஆகுலம் அடைந்தவன் போனவா தெரியார்.
59
உரை
   
2090. எங்கு உளான் எனத் தேடுவார் இவர் எதிர் அயல்வாய்
அங்கு உளார் சிலர் அறிந்த வாறு அறைகுவார் அவன்
                                                             நேற்று
இங்கு உளான் விறகு எடுத்து ஒரு முது மகன் இவன் பால்
பொங்கும் ஏழ் இசைப் பத்திரன் அடிமையாய்ப் போந்தான்.
60
உரை
   
2091. பாடினான் பின்பு பட்டது தெரிகிலேம் பானாள்
ஓடினான் எனக் கேட்டலும் ஒற்றர் போய்க் கொற்றம்
சூடினான் அவை அடைந்தவர் சொல்லிய வாறே
ஆடினார் வியப்படைந்து அனுமானம் உற்று அரசன்.
61
உரை
   
2092. தன் அடைந்த அத் தந்திரித் தலைவனை நோக்கி
என்னவாறு அவன் போனவாறு இங்கு இனும் போன
பின்னை யாது நீ செய்தனை என இசைப் பெருமான்
தென்னர் கோன் அடி தொழுது தன் செய்தியை
                                                   மொழிவான்.
62
உரை
   
2093. நென்னல்வாய் அடியேன் நினது தாள் நிழல் நீங்கிப்
பின்னல் வார் சடை மௌலி எம் பிரான் அடி பணிந்தேன்
இன்னலார் குறை இரந்து மீண்டு இருக்கை புக்கு இருந்தேன்
கன்னலார் மொழி பங்கர் என் கனவில் வந்து அருளி.
63
உரை
   
2094. ஓடி உன் பொருட்டாக நாம் விறகு எடுத்து உழன்று
வாடி நின் பகைப் புறம் கடை வந்து சாதாரி
பாடி வென்று நின் பகைவனைத் துரந்தனம் எனச் சொல்
ஆடினார் விழித்தேன் இது நிகழ்ந்தது என்று அறைந்தான்.
64
உரை
   
2095. ஏவல் மைந்தர் போய் விளங்கி வந்து இசைத்தலும் வீணைக்
காவலன் கனா நிகழ்ச்சியும் ஒத்தலில் கைக்கும்
பூ அலங்கலான் இஃது நம் பொன் நகர்க் கூடல்
தேவர் தம்பிரான் திரு விளையாட்டு எனத் தெளிந்தான்.
65
உரை
   
2096. இகழ்ந்த கூற்று எறி சேவடிக்கு இடை அறா நேயம்
திகழ்ந்த பத்திரன் அன்பையும் தேவரைக் காப்பான்
அகழ்ந்த ஆழி நஞ்சு உண்டவன் அருளையும் வியந்து
புகழ்ந்து போய் மதுரா புரிப் புனிதனைப் பணியா.
66
உரை
   
2097. பத்தர் யாழ் இசைக் கிழவனைப் பனைக்கை மான் எருத்தில்
வைத்து மாட நீள் நகர் வலம் செய்வித்து மலர்ந்த
சித்தம் ஆழ்ந்திட வரிசை கண் மிதப்புறச் செய்து
தத்து மான் தொடை தேரினான் தன் மனை புகுவான்.
67
உரை
   
2098. தேவரும் தவமுனிவரும் தேவரில் சிறந்தோர்
யாவரும் தமக்கு ஆத் செய இருப்பவர் இருதாள்
நோவ வந்து உமக்கு ஆட் செய்து நும் குறை முடித்தார்
அவரேல் உமக்கு அனைவரும் ஏவலர் அன்றோ.
68
உரை
   
2099. ஆதலால் எனக்கு உடையார் நீர் உமக்கு நான் அடியேன்
ஈதலால் எனக்கும் உமக்குமொடு வழக்கு வேறிலை நான்
ஓதல் ஆவது ஒர் குறை உளது இன்று தொட்டு உமக்கு
வேத நாதனைப் பாடலே கடான் என விடுத்தான்.
69
உரை
   
2100. அரசன் நல்கிய வெறுக்கை பூண் ஆடைகள் பிறவும்
பரசு நாவலர் மாணவர் யாவர்க்கும் பகிர்ந்து
வரிசையால் இசைக் கிளையொடு மனையில் வந்து எய்திக்
கரை செயா மகிழ் சிறந்து இசைக் காவலன் இருந்தான்.
70
உரை