2101. முன்னவன் மதுரை மூதுர் முழுமுதல் இசைவலானை
இன்னிசை பாடி வென்றது இன் உரை செய்தேம் அந்தத்
தென்னவன் சேரன் மாடே திருமுகம் கொடுத்துப் பாணர்
மன்னவன் தனக்கு செம் பொன் வழங்கிய வழக்கம்
                                                        சொல்வாம்.
1
உரை
   
2102. இனி மதி எமக்கு ஈது என்னா யாழ் வல்லோன் அன்று                                                        தொட்டுப்
பனி மதி மருமான் கோயில் பாண் இசைக் கிழமை நீத்துக்
குனிமதி மிலைந்த நாதன் கோயில் முப்போதும் எய்திக்
கனிமதி அன்பில் பாடும் கடப்படு நியமம் பூண்டான்.
2
உரை
   
2103. இத் தொழில் அன்றி வேறு தொழில் இவற்கு இன்மையாலே
பத்திரன் இலம்பாது எய்த பொறுப்பரோ பழனக் கூடல்
சித்தவெம் அடிகள் வேந்தன் பொன்னறைச் செல்வம்
                                                       வௌவிப்
பத்தர் யாழ் இடத் தோள் ஏந்திப் பாடுவான் காணவைப்பார்.
3
உரை
   
2104. சில பொலம் காசு சில் நாள் மணிக்கலன் சில் நாள்
                                                         செம்பொன்
கலைவகை சில் நாள் அம்பொன் சாமரைக் காம்பு சில்
                                                         நாள்
அலர்கதிர் அரிமான் சேக்கை ஆடகத்தகடு சில் நாள்
குலமணி வருக்கம் சில் நாள் கொடுத்திடக் கொண்டு
                                                         போவான்.
4
உரை
   
2105. கைவரும் பொருளைத் தந்த கள்வரும் தானும் அன்றி
எவ் எவர் தமக்கும் தோற்றாது எரியில் இட்டு அழித்தும்
                                                         சின்னம்
செய்வன செய்தும் தன்னைச் சேர்ந்தவர் இரந்தோர்
                                                         கைபார்த்து
உய்பவர் பிறர்க்கு மாறாது உதவி உள் கவலை தீர்ப்பான்.
5
உரை
   
2106. வைகலும் கொடுப்போர் பின் நாள் மறுத்தனர் ஆகப்
                                                 போய்ப் போய்க்
கை தொழுது இறைஞ்சி வாளா வரும் அவன் கலியின்
                                                         மூழ்கி
உய் வகை வேறு காணாது ஒக்கலும் ஒக்க வாடிக்
கையறாவு அடைய நோனாது உறங்கினான் கனவின்
                                                        எல்லை.
6
உரை
   
2107. சித்த எம் பெருமான் வந்து செப்புவார் அப்பா நிம்பத்
தொத்தவன் கோசம் தன்னில் தும்பி உண் கனியின் வௌவி
இத்தனம் இன்று காறும் ஈந்தனம் எம்பால் அன்பு
வைத்தவன் அறிந்தால் சங்கை மனத்தன் ஆய் விகற்பம்
                                                         கொள்வான்.
7
உரை
   
2108. மயல் அறக் கற்புக் காக்கும் மகளிர் போல் துறவு காக்க
முயலும் யோகரில் உட்காப்பு முரசு எறி புறம் சூழ் காப்பும்
கயல் இலச்சினையும் நிற்கக் கவர்ந்த அற்புதம் இக் கள்வன்
உயிர் தொறும் ஒளித்து நின்ற ஒருவனோ வறியேன்
                                                     என்பான்.
8
உரை
   
2109. கோமகன் இனைய செய்தி அறியும் மேல் கோசம்
                                                     காப்போர்க்
காமுறு தண்ட நின் போல் அன்பகத்து எம்மை வைத்த
தேம் மரு போந்தின் கண்ணிச் சேரமான் தனக்கு இப்போது
நாம் ஒரு முடங்கல் தீட்டி நல்குவம் போதி என்னா.
9
உரை
   
2110. மறைக்கு உரை செய்த வாக்கான் 'மதி மலி புரிசை' என்னும்
சிறப்பு இயல் சீர்சால் செய்யுள் பாசுரம் செப்பித் தீட்டிப்
பிறைச் சடைப் பெருமான் நல்கி மறைந்தனன் பெரும்பாண்
                                                        செல்வன்
உறக்கம் நீத்து ஆடிப் பாடி உவகை மாக் கடலில்
                                                        ஆழ்ந்தான்.
10
உரை
   
2111. வாங்கிய திருமுகம் மணிப் பட்டாடை இட்டு
ஆங்கு இறை அடிபணிந்து அகன்று பத்திரன்
ஓங்கிய கோயிலை வலம் கொண்டு ஒல்லென
நீங்கி மேல் வரைப் புல நெறிக் கொண்டு ஏகுவான்.
11
உரை
   
2112. கொல்லையும் குறிஞ்சியும் கொதிக்கும் வெம் பரல்
கல்லதர் அத்தமும் கடந்து முள் புறப்
பல் சுளைக் கனி அடி இடறப் பைப் பைய
நல் வளம் கெழு மலை நாடு நண்ணினான்.
12
உரை
   
2113. அலைகடல் நெடும் துகில் அந்த நாடு எனும்
தலைமகள் தனக்கு வான் தடவு குன்று பூண்
முலை என விளங்கின முகத்தில் தீட்டிய
திலகமே ஆனது திரு வஞ்சைக் களம்.
13
உரை
   
2114. அறமகள் ஆக்கமும் மலரின் மேய செம்
நிறமகள் ஆக்கமும் நீதி சான்ற போர்
மற மகள் ஆக்கமும் வடசொல் தென் கலைத்
திறமகள் ஆக்கமும் சிறந்தது அந்நகர்.
14
உரை
   
2115. மண் புகழ் அந் நகர் மறுகின் மாது ஒரு
தண் புனல் சாலையில் சார்ந்து உளான் இப்பால்
விண் புகழ் நீதி அவ் வேந்தற்கு அன்றி இராக்
கண்புனை நுதலினார் கனவில் தோன்றினார்.
15
உரை
   
2116. தென்னவன் மதுரையில் இருக்கும் சித்தர் யாம்
நின் இடை வந்துளே நின்னைக் கண்டு தான்
நன் நிதி வேண்ட நம் ஓலை கொண்டு நம்
இன்னிசைப் பாண பத்திரன் இங்கு எய்தினான்.
16
உரை
   
2117. மற்று அவற்கு அருநிதி கொடுத்து மன்ன நீ
தெற்று என வரவிடுக என்று சித்தர் தாம்
சொற்றனர் போயினார் சுரக்கும் தண் அளி
ஒற்றை வெண் குடையினான் உறக்கம் நீங்கினான்.
17
உரை
   
2118. கங்குல்வாய் கண்ட அக் கனவைப் பெண்ணை அம்
தொங்கலான் தமரொடு சொல்லிச் சேல் கண்ணாள்
பங்கினாள் திருமுகம் கொணர்ந்த பத்திரன்
எங்கு உளான் கொல் எனத் தேட எண்ணுவான்.
18
உரை
   
2119. மற்று அவர் தமைத் துரீஇ வருக இல் லெனக்
கொற்றவன் ஏவலோர் குறுகி மாடமும்
தெற்றியும் நியமமும் மன்றும் சென்று சென்று
எல்திகழ் மணி நகர் எங்கும் தேடுவார்.
19
உரை
   
2120. தரும நீர்ப் பந்தரில் இருக்கும் தந்திரி
வரும் இசைக் கிழவனைக்கண்டு வல்லை போய்த்
திரு மகற்கு உணர்த்தினர் சேனை யோடு எழீப்
பெருமகன் பாணர்தம் பிரானை நண்ணினான்.
20
உரை
   
2121. கண்டனன் முகிழ்த்த கைக் கமலம் சென்னி மேல்
கொண்டனன் பாடினன் கூத்தும் ஆடினன்
தண்டு என வீழ்ந்தனன் பின் தண் நறா
வண்டு என மகிழ்ந்தனன் மன்னர் மன்னனே.
21
உரை
   
2122. வாங்கினன் திருமுகம் மலர்க்கண் ஒற்றினன்
தாங்கினன் முடிமிசைத் தாமம் போல் மகிழ்
தூங்கினன் தடம் கணீர் துளிப்ப மெய் எல்லாம்
வீங்கினன் பொடிப்பு எழ வேந்தர் வேந்தனே.
22
உரை
   
2123. மின் அவிரும் செம் பொன் மணி மாடக் கூடல் மேய
                                சிவன் யாம் எழுதி விடுக்கும் மாற்றம்
நன்னர் முகில் எனப் புலவர்க்கு உதவும் சேர நரபாலன்
                                காண்க தன் போல் நம்பால் அன்பன்
இன் இசை யாழ்ப் பத்திரன் தன் மாடே போந்தான்
                      இருநிதியம் கொடுத்து வர விடுப்பதுஎன்னத்
தென்னர் பிரான் திரு முகத்தின் செய்தி நோக்கிச் சோர்
                          பிரான் களிப்பு எல்லை தெரியான் ஆகி.
23
உரை
   
2124. பொன்னின் தளிகை மிசை வைத்துப் புழைக்கை மதமான்                                                       தலை ஏற்றி
மன்னும் கொளை யாழ்ப்புலவனை முன் வைத்துப் பின்னே                                                       தான் இருந்து
மின்னும் கதிர் கால் இணைக் கவரி வீசிப் பல வேறி யங்                                                       கலிப்பத்
தென்னென் தளியார் இசைத்தார் ஆன் திருமா நகரை                                                       வலம் செய்யா.
24
உரை
   
2125. பஞ்சு தடவும் சீறடியார் பல மங்கலம் கொண்டு எதிர் போத
மஞ்சு தடவு நீள் குடுமி மாடாமனையில் கொடு போகி
நஞ்சு தடவு மணிகண்டன் அன்பன் தனை நன்னீர் ஆட்டி
அஞ்சு தடவி ஓவியம் செய்து அமைத்த மணி மண்டபத்து
                                                             ஏற்றி.
25
உரை
   
2126. அம் பொன் தவிசு இட்டு அருச்சனை செய்து ஆறு
                                        சுவையின் அமுது அருத்திச்
செம்பொன் கலவை நறும் சாந்தம் தீம் பூ ஆதி முகவாசம்
பைம்பொன் கலத்து வெள் இலை தீம் பழுக்காய் பிறவும்
                                                    முறை நல்கி
உம்பர்க்கு இறைவன் திருமுகத்தில் உய்ப்பது எனலால்                                                     உய்த்தும் என.
26
உரை
   
2127. செம் பொன் அறையைத் திறந்து அழைத்துக் காட்டி
                                               இனைய திரு எல்லாம்
உம்பர் பெருமான் அடியீர் நீர் உடையீர் கவர்ந்து
                                                    கொள்மின் என
இம்பர் நிழற்றும் வெண் குடையான் இசைப்ப எதிர்
                                               தாழ்ந்து இசைக் கிழவன்
நம்பன் அருளுக்கு உரியீர் நீர் நல்கிற்று அமையும்
                                                    எனக்கு என்ன.
27
உரை
   
2128. மன்னன் தான் எண்ணிய ஆற்றால் வழங்க வழங்க மறுத்து                                                           மறுத்து
இன்னல் திரும் இசைக் கிழவன் இலங்கும் பொலம் பூண்                                                         இரு நிதியம்
பொன் அம் சிவிகை கரி பரிமான் பொன் பட்டாடை பல                                                           பிறவும்
தன்ன என்னும் அளவு ஆற்றால் தானே கொள்ளத் தார்                                                           வேந்தன்.
28
உரை
   
2129. பின்னே ஏழ் அடி சேண் சென்று பெருமை சான்ற
                                                    வரிசையினால்
தன் நேரிசையான் தனை விடுத்து மீண்டான் ஆகத் தமிழ்
                                                    மதுரை
மின்னேர் சடையார் இசைத் தொண்டன் தானும் மீண்டு
                                                    வெயில் விரிக்கும்
பொன்னேர் மௌலி நிதிக்கிழவன் போல மதுரை நகர்
                                                    புக்கான்.
29
உரை
   
2130. வந்து மதுரைப் பெருமானை வணங்கிக் கொணர்ந்த நிதி
                                                          எல்லாம்
இந்து மருமான் நகர் உள்ளார் யாவும் அறிய யாவர்க்கும்
முந்தை வேத முதல்வர்க்கும் புலவோர் தமக்கு முறை
                                                          நல்கிச்
சந்த யாழின் இசைப்பாணர் தருமம் அனையான் வைகினான்.
30
உரை