2131. கருத் துழாய் முகில் ஒருபால் கலந்து அவர் பத்திரற்கு நிதி
திருந்து தார் உதியன் இடைத் திருமுகம் ஈந்து அளித்த இது
வருந்தி யாழவன் இசைப்ப மழை தூங்கு நள் இரவில்
இருந்து பாடு எனப் பலகை இட்டதூம் இனிப்பகர்வாம்.
1
உரை
   
2132. முன்பு உடைய நாயகனை முப்போதும் புகுந்து இறைஞ்சி
இன்பு உறும் ஏழ் இசைக் கிழவன் இரு நிதியம் அருளிய                                                           பின்
அன்பு சிறந்து அரை இரவு அடைந்து பணிந்து அடல்                                                           விடையின்
பின்புற நின்று ஏழ் இசையும் பாடி வரும் பேறு அடைவான்.
2
உரை
   
2133. தொழும் தகை அன் பரும் தேவர் தொகுதிகளும் தொழத்
                                                          திங்கள்
கொழுந்து அலைய நதி அலையக் குனிக்கின்ற தனிக்
                                                        கடவுள்
செழும் தரளச் சிவிகையின் மேல் தேவி திருப் பள்ளி  
                                                      யறைக்கு
எழுந்து அருளும் போது பணிந்து ஏத்துவான் ஓர் இரவில்.
3
உரை
   
2134. இன்னிசை யாழ்ப் பெரும் பாணன் எவ் இடையூறு
                                                    அடுத்தாலும்
தன் நியம நெறி ஒழுக்கம் தவான் என்பது உலகு அறியப்
பொன் இயலும் சடை மௌலிப் புராணர் திருவிளை
                                                    யாட்டால்
அன்னிலையில் கரும்கொண்மூ ஆர்த்து எழுந்த திசை
                                                    எல்லாம்.
4
உரை
   
2135. தடித்து நிரை புடை பரப்பித் தடுமாறி திசை மயங்கத்
துடித்து விடவாய் அரவம் சோர்ந்து சுருண்டு அளை
                                                         ஒதுங்க
இடித்து உடுவின் கணம் புதைப்ப இருள் கான்று சலபதி
                                                           முன்
முடிதிடுவான் வரவிடுத்த முகல் ஏழும் வளைந்த என.
5
உரை
   
2136. கரும் கடலை விசும்பு எடுத்துக் கவிப்பது என வெண்
                                                        தாரை
நெருங்கி இருளின் இருப்புக் கோன் நிரைத்த என நிறம்
                                                        கருக
ஒருங்கு சொரிந்து உள் உணரார் உள்ளம் போல் உள்
                                                        புறம்பு
மருங் கொடு கீழ் மேல் என்று தெரியாத மயங்கு
                                                        இருள்வாய்.
6
உரை
   
2137. மா மாரி இடை நனைந்து வருவானம் மாரி தனைப்
பூ மாரி என நினைந்து திருக்கோயில் புகுந்து எய்திக்
காமாரி தனைப் பணிந்து கருணை மாரியின் நனைந்து
தே மாரி பொழிவது எனத் தெள் விளி யாழ் வாசிப்பான்.
7
உரை
   
2138. விடைக் கடவுள் பின்னின்று வீணை இடத் தோள் கிடத்திப்
புடைத்து நரம்பு எறிந்து மிடற்று ஒலி போக்கிப் பொலம்
                                                        கொன்றைச்
சடைக் கடவுள் செவி வழிபோய் அருள் பைங் கூழ் தலை
                                                        எடுப்பத்
தொடைத் தமிழின் இசைப் பாணிச் சுவை அமுத மடை
                                                        திறந்து.
8
உரை
   
2139. நரம்பு நனைந்து இசை மழுங்க நனைந்து உடலம் பனிப்ப
                                                             இசை
வரம்பு ஒழுகு விரல் விறைத்து வலி வாங்க மயிர் சிலிர்ப்ப
நிரம்பிய சேறு அடிபுதைப்ப நின்று நிறை அன்பின்
                                                       இசையாய்
அரும்புதல் போல் என்பு உருக்கும் அமுத இசை பாடும்
                                                           ஆல்.
9
உரை
   
2140. மாதர் நகையாய் மதுரேசர் உண் பலிக்கு எம் மனைவாய்
                                                             வந்து
காதன் முகத்து அரும்பிக் காட்டி என் சிந்தை கவர்ந்தார்
                                                          போலும்
காதன் முகத்து அரும்பக் கையறவு தீரக் கலப்பேன் பாதி
பேதை உருவாய் இருந்தார் நாணி விழித்து ஆவி
                                            பிழைத்தேன் போலும்.
10
உரை
   
2141. ஒண் நுதலாய் வெண் தலை கொண்டு உண் பலிக்கு நம்
                                             மனையின் ஊடேகூடல்
கண் நுதலார் உள் ஆளக் கானம் இசைத்து என் உள்ளம்
                                                  கவர்ந்தார் போலும்
கண் நுதலார் பாடு அவி நயம் கண்டு ஆகம் கலப்பேன்
                                                           பாதி
பெண் உருவமாய் இருந்தார் வெள்கி விழித்து ஆவி
                                               பெற்றேன் போலும்.
11
உரை
   
2142. ஐயரி உண் கண்ணாய் திருவால வாயுடையார் ஐயம்
                                                 கொள்வான்
மையன் நகை செய்து என் வனமுலையின் மேல் செம்
                                           கைவைத்தார் போலும்
மைய நகை செய்வது என் வனமுலை மேல் கை வைப்ப
                                                 மாழ்கிச் சோர்வேன்
தையல் இடம் கண்டு நடு நடுங்கி விழித்து ஆவி
                                                 தரித்தேன் போலும்.
12
உரை
   
2143. பாடுவார் இருவர்க்கு அன்று பரிசிலாக் கொடுத்த சங்கத்
தோடுவார் செவியில் ஊட்டும் தொண்டு கண்டு இதன்
                                                   மேல் நின்று பாடுவாய்
உனக்கே இந்தப் பலகை என்று ஆழ்ந்த
                                                      அன்பின்
நாடுவார் விசும்பில் கூறி நகை மணிப் பலகை இட்டார்.
13
உரை
   
2144. இறை அருள் ஆணை அஞ்சி இட்ட பொன் பலகை ஏறி
நறை கெழு மதுர கீதம் பாடி நான் மறைகள் சூடும்
அறை கழல் அகத்து உட்கொண்டு பலகையும் அம் கை
                                                        கொண்டு
மறை வழி யாழ் வல்லோன் தன் மனைவயின் செல்லும்
                                                         எல்லை.
14
உரை
   
2145. மின்னுமா மேகம் நீங்கி விசும்புவாய் விளங்கித் தென்றல்
மன்னு மா மலய மேய மாதவன் குடித்த வைகல்
பொன்னு மா மணியும் முத்தும் புலப்படக் கிடந்த வேலை
என்ன மீன் விளங்கித் தோன்ற ஏகி இல் புகுந்தான் இப்பால்.
15
உரை
   
2146. பாய் இருள் படலம் கீண்டு பரிதி கண் விழித்துச் செம் கை
ஆயிரம் பரப்பி முந்நீர் அலைகடல் நீந்தும் எல்லை
மாயிரு ஞாலம் காக்கும் வரகுணன் இரவு தங்கள்
நாயகன் பாடற்கு ஈந்த நல் அருள் பரிசில் கேட்டான்.
16
உரை
   
2147. இன்னிசைக்கு அரசை இட்ட பலகை மீது இருத்தி மன்னர்
மன்னவன் இவனே எங்கள் மதுரை நாயகன் என்று உன்னி
மின்னிவர் மணிப்பூண் நல்கி விளை நில மிகவும் நல்கி
நன்னிதி வெறுப்ப நல்கி வரிசையான் நடாத்தி வந்தான்.
17
உரை
   
2148. இறை அருள் வரிசை பெற்ற பத்திரனும் மேறு  
                                         உயர்த்தவரை நாற்போதும்
முறையினால் வழிபட்டு ஒழுகுவான் ஆக முடிகெழு
                                                வரகுண வேந்து
மறை முதல் அடிகள் வந்து வந்தனையால் வழுத்துவான்
                                                சில் பகல் கழிய
நிறை பெரும் சுடரோன் திரு உரு அடைந்து நெறியினால்
                                                சிவபுரம் அடைந்தான்.
18
உரை