2149. கூடல் அம் பதியில் ஆடக மேருக் கொடிய வில்குரிசில்
                                                     அடியவனுக்குப்
பாடலின் பரிசில் ஆகிய செம் பொன் பலகை இட்டபடி
                                                 பாடின மன்னான்
வீடரும் பொருவில் கற்புடையாள் ஓர் விறலி யைப் பரமன்
                                                 இறை அருள் பற்றி
மாடகம் செறியும் யாழ் வழி பாதி வாது வென்ற வரலாறு
                                                     இசைப்பாம்.
1
உரை
   
2150. வரகுணன் கதி அடைந்தபின் அம் பொன் மௌலி சூடிய
                                                      இராச ராசப்
புரவலன் புவி மடந்தையை வேட்டுப் புயம் தழீஇக் கொடு
                                                 நயம் தரு நாளில்
பரவு மன்பதை புரந்து ஒழுகும் அந்தப் பஞ்சவற்கு உரிய
                                                 அஞ்சன உண்கண்
மரபின் வந்த மடவார் பலர் ஏனை மையல் செய்யும்
                                                 மடவார் பலர் மாதோ.
2
உரை
   
2151. அன்ன போக மடாவாருள் ஒருத்தி அரசனுக்கு அமுதும்
                                                  ஆவியும் ஆகும்
மின்னலாள் மதுர கீதம் இசைக்கும் விஞ்சையின் துறை
                                                  வலாளவளுக்கும்
பன்னக ஆபரணன் இன்னிசை பாடும் பத்திரன் பொருவில்
                                                  கற்புடை யாட்கும்
மன்னு கீத வினையால் இதன் மூள வழுதி காதல் மடமாது
                                                  பொறாளாய்.
3
உரை
   
2152. பாடினிக்கு எதிர் ஒர் பாடினி தன்னைப் பாட விட்டிவள்
                                                 படைத்த செருக்கை
ஈடழிப்பல் என எண்ணி எழீத் தன் இறை மகற்கு அஃது
                                                 இசைத்தலும் அந்தத்
தோடிறப் பொருகயல் கணி நாடகன் சொன்ன வாறு ஒழுகு
                                                 மன்னவர் மன்னன்
நாடி அத்தகைய விறலியை ஈழ நாட்டினும் வர வழைத்து
                                                        விடுத்தான்.
4
உரை
   
2153. பந்தயாழ் முதுகு தைவர விட்டுப் பாட லயம் இரு பக்கமும்
                                                      மொய்ப்ப
வந்த பாடினி மடந்தையும் மன்னர் மன்னனைத் தொழுது
                                             ஓர் கின்னர மாதின்
சந்த ஏழிசை மிழற்றினாள் தன்னை நோக்கி
                                             ஒருமின்னிடையாள் மேல்
சிந்தைபோக்கி வரு தீப்பழி நோக்காத் தென்னருக்கு
                                             அரசன் இன்னது செப்பும்.
5
உரை
   
2154. பத்திரன் மனைவி தன்னை எம் முன்னர்ப் பாடுதற்கு
                                        அழை அதற்கு அவள் ஆற்றாது
உத்தரம் சொலினும் யாம் அவள் சார்பாய் உனை
                                        விலக்கினும் விடாது தொடர்ந்தே
சித்தம் நாணம் உற வஞ்சினம் இட்டுச் செல்லல் நில்
                                        என வளைந்து கொள் என்னா
எய்த்த நுண் இடையினாளை இருக்கைக்கு ஏகி நாளை
                                        வருக என்று விடுத்தான்.
6
உரை
   
2155. பின்னர் இன்னிசைப் பத்திரன் பெருந்தகை விறலி
தன்னை அங்கு அழைத்து உளத்து ஒன்று புறத்து ஒன்று
                                                         சாற்றும்
என்னோடு இன்னிசைப் பாடுவார் உளர் கொலோ இங்கு
                                                          என்று
உன்னி வந்து இருக்கின்றனள் இசைவலால் ஒருத்தி.
7
உரை
   
2156. ஆடு அமைத் தடம் தோளினாய் அவளொடும் கூடப்
பாட வல்லையோ பகர் எனப் பாடினி பகர்வாள்
கோடரும் தகைக் கற்பும் இக் கூடல் எம் பெருமான்
வீடரும் கருணையும் எனக்கு இருக்கையால் வேந்தே.
8
உரை
   
2157. பாடி வெல்வதே அன்றி நான் பரிபவம் உழந்து
வாடுவேன் அலேன் என்று உரை வழங்கலும் மதுக்கால்
ஏடு வார்குழல் அவளையும் இருக்கை உய்த்து இருந்தான்
நீடு வார் திரைப் பொருனை அம் தண் துறை நிருபன்.
9
உரை
   
2158. மற்றை வைகல் அவ் இருவரைப் பஞ்சவன் மதுரைக்
கொற்றவன் தன் அவை இடை அழைத்து நேர் குட்டிக்
கற்ற ஏழ் இசை கேட்கு முன் கலத்தினும் போந்த
வெற்றி வேல் மதர் நெடும் கணாள் விறலியை வைதாள்.
10
உரை
   
2159. குற்றம் எத்தனை எத்தனை குணங்கள் யாழ்க் கோலுக்கு
உற்ற தெய்வம் ஏது இசைப்பது எவ் உயிர் உடம்பு உயிர்
                                                             மெய்
பெற்ற ஓசை எவ் அளவைக்கு உத்தரம் பேசி
மற்ரு என்னோடு பாடில்லையேல் வசை உனக்கு என்றாள்.
11
உரை
   
2160. இருமையும் பெறு கற்பினால் இயம்புவாள் கலத்தின்
வரும் அரும் பெறற் கல்வியும் வாதின் மேல் ஊக்கப்
பெருமையும் பலர் விரும்புறு பெண்மையின் செருக்கும்
திருமகன் சபை அறியவாய் திறக்க வேண்டாவோ.
12
உரை
   
2161. நெய் உண் பூம் குழல் மடவரான் இன்னொடும் வாது
செய்யும் பூசலுக்கு எதிர் அலால் தீயவாய் திறந்து
வையும் பூசலுக்கு எதிரலேன் மானம் விற்று உன் போல்
உய்யும் பாவையரே அதற்கு எதிர் என உரைத்தாள்.
13
உரை
   
2162. வென்றி மீனவன் விலக்குவான் போல் எதிர் விலக்கித்
துன்று தார் குழல் மடந்தை மீர் பாடுமின் தோற்றோர்
வென்ற மாதரார்க்கு அடிமையாய் விடுவதே சபதம்
என்று மானம் உண்டாக்கலும் ஈழ காட்டு அரிவை.
14
உரை
   
2163. முந்தி யாழ் இடம் தழீஇக் குரல் வழி முகிழ் விரல் போய்
உந்தவே பெருமித நகை உள் கிடந்து அரும்பச்
சந்த ஏழ் இசை இறை மகன் தாழ் செவிக்கு அன்பு
வந்த காதலால் மழையின் அமுது என ஆர்த்தாள்.
15
உரை
   
2164. வீணை வாங்கினள் மாடகம் முறுக்கினள் விசித்து
வாண் நரம்பு எறிந்து இரு செவி மடுத்தனர் இயக்கர்
நாண மெல் விரல் நடை வழி நாவிளை அமுதம்
பாணர் கோமகன் விறலியும் பலர் செவி நிறைத்தாள்.
16
உரை
   
2165. அரசன் உட்கிடை அறிந்திலர் அவைக் களத்து உள்ளார்
விரைசெய் வார் குழல் பாடினி பாடலை வியந்தார்
புரைசை மானிரைப் பூழியன் இலங்கையில் போந்த
வரை செய் குங்குமக் கொங்கையாள் பாடலை மகிழ்ந்தான்.
17
உரை
   
2166. தென்னவன் உள் கோள் எல்லை தெரிந்தனர் வையத்து
                                                        உள்ளார்
அன்னவன் புகழ்ந்த வாறே புகழ்ந்தனர் அவளைத் தானே
முன்னவன் அருளைப் பெற்று மும்மையும் துறந்தோர் ஏனும்
மன்னவன் சொன்னவாறே சொல்வது வழக்காறு அன்றோ.
18
உரை
   
2167. பொன் தளிர் அனையாள் மையல் புதுமது நுகர்ந்து தீது
நன்று அறியாத கன்னி நாடவன் அனவையை நோக்கி
இன்று ஒரு நாளில் தேரத் தக்கதோ இது என்று அந்த
வென்று அடு வேல் கணாரைப் போம் என விடுத்தான்
                                                       மன்னோ.
19
உரை
   
2168. மருவிய ஆயம் ஏத்த விருந்தினாள் மனைவந்து எய்திப்
புரவலன் தனது பாட்டைப் புகழ்ந்ததே புகந்தது ஆகப்
பெருமிதம் தலைக் கொண்டாள் அப் பெரும் களிப்பு
                                               அடைந்து மஞ்சத்து
திரு மலர் அணை மேலார் வந்து இளைத்து இனிது
                                               இருந்தாள் இப்பால்.
20
உரை
   
2169. வணங்கு உறு மருங்கில் கற்பின் மடவரல் மதங்கி தானும்
அணங்கு இறை கொண்ட நெஞ்சன் அம் கயல் கண்ணி
                                                         பாகக்
குணம் குறி கடந்த சோதி குரை கழல் அடிக்கீழ் எய்தி
உணங்கினள் கலுழ் கண்ணீர் ஒதுங்கு நின்று இதனைச்
                                                         சொன்னாள்.
21
உரை
   
2170. தென்னவன் ஆசி வையம் செய்ய கோல் செலுத்திக் காத்த
மன்னவ வழுதி வார வழி வழக்கு உரைப்பது ஆனான்
அன்னவன் கருத்துக்கு ஏற்ப அவையரும் அனையர் ஆனார்
பின் நடு நிலைமை தூக்கிப் பேசுவார் யாவர் ஐயா.
22
உரை
   
2171. உன் அருள் துணை செய்து என் பால் உறு கண் நோய்
                                                 துடைப்பது என்ன
மின் அனாய் நீயே நாளை வெல்லும் மா செய்தும்
                                                       அஞ்சேல்
என்ன ஆகாய வாணி ஈறு இலான் அருளால் கேட்டு
மன்னரும் கற்பின் ஆடன் மனை புகுந்து இருந்தான்
                                                        மன்னோ.
23
உரை
   
2172. அன்று போல் மற்றை ஞான்றும் அழைத்தனன் பாடல்
                                                       கேட்டுக்
குன்று போல் புயத்தான் தென்னன் கூறிய வாறே கூற
மன்று உளார் பலரும் அன்ன வண்ணமே சொன்னார்
                                                        கேட்டு
நின்ற பாண் மடந்தை பாண்டி நிருபனை நோக்கிச்
                                                     சொல்வாள்.
24
உரை
   
2173. தென்னர் ஏறு அனையாய் ஞால மனு வழிச் செங்கோல்
                                                         ஓச்சும்
மன்னர் ஏறு அனையாய் வார வழக்கினை ஆதலால் நீ
சொன்னவாறு அவையும் சொல்லத் துணிந்தது துலை நா
                                                         அன்ன
பன்னக ஆபரணர் முன் போய்ப் பாடுகேம் பாடும் எல்லை.
25
உரை
   
2174. இருவரேம் பாட்டும் கேட்டுத் துணிந்து இவள் வென்றாள்
                                                          என்னா
ஒருவர் சந்நிதியில் சொன்னால் போதும் என்று உரைத்தாள்
                                                          பாண்டித்
திரு மகன் அனைய வாறே செய்மினீர் செய்மின் என்ன
மருவளர் குழலினார் தம் மனை புகுந்து இருந்தார் பின்
                                                          நாள்.
26
உரை
   
2175. தென்றல் நாடனும் மந்திரச் செல்வரும்
நன்று தீது உணர் நால் வகைக் கேள்வியோர்
ஒன்ற ஏகி ஒளி விடு வெள்ளி மா
மன்ற வாணர் மா மண்டபத்து எய்தினார்.
27
உரை
   
2176. எய்தி அம் மடமாதரை இங்கு உறச்
செய்திர் என்னத் திருமகன் ஏவலோர்
நொய்தின் ஓடி நொடித்து அழைத்தா ரொடு
மை திகழ்ந்த விழியார் வருவர் ஆல்.
28
உரை
   
2177. படிமையார் தவப் பாடினி வந்து எனக்கு
அடிமையாவள் இன்று ஐயம் இன்றால் எனக்
கொடுமையார் மனக் கோட்டச் செருக் கொடும்
கடுமையாக வந்தாள் கலத்தின் வந்தாள்.
29
உரை
   
2178. கற்பின் மிக்கு எழு கற்பும் கருத்தினில்
சிற் பரஞ் சுடர் சேவடி மேல் வைத்த
அற்பு மிக்கு எழ மெல்ல வந்தாள் அரோ
பொற்பின் மிக்கு உள பத்திரன் பொன் அனாள்.
30
உரை
   
2179. அலங்கு ஆ ரமோடு அங்கதம் ஆதி பல்
கலன்கள் தாங்கிக் கலைஞர் குழாத்து இடை
இலங்கு மாட மதுரைக்கு இறைவரும்
புலம் கொள் நாவலர் போல் வந்து வைகினார்.
31
உரை
   
2180. அந்த வேந்து அவை தன்னில் அரும் கலம்
வந்த வேய்த் தடம் தோள் இசை மாதராள்
முந்த வேத்திசை பாடினாள் முந்தை யோர்
சிந்தை வேட்டு ஒன்றும் செப்பினர் இல்லை ஆல்.
32
உரை
   
2181. வீணை தோள் இடன் ஏந்திய வெண் மலர்
வாணி பாட இருக்கையின் வைகியே
யாழ் நரம்பு எறிந்து இன்னிசை ஓர்ந்து எழீப்
பாணர் கோமகன் பன்னியும் பாடும் ஆல்.
33
உரை
   
2182. குடங்கை நீரும் பச்சிலையும் இடுவார்க்கு இமையாக்
                                                     குஞ்சரமும்
படம் கொள் பாயும் பூ அணையும் தருவாய் மதுரைப்
                                                      பரமேட்டி
படம் கொள் பாயும் பூ அனையும் கையில் படுதலை
                                                      கொண்டு
இடங்கள் தோறும் இரப்பாய் என்று ஏசுவார்க்கு என்
                                                     பேசுவனே.
34
உரை
   
2183. தேனார் மொழியார் விழிவழியே செல்லாதவர்க்கே வீடு
                                                         என்று
நானா வேதப் பொருள் உரைத்தாய் நீயே மதுரை நம்பரனே
நானா வேதப் பொருள் உரைத்தாய் நீயே பாதி நாரி உரு
ஆனாய் என்று பிறர் பழித்தால் அடியேன் விடை ஏது
                                                         அறைவேனே.
35
உரை
   
2184. வரதன் ஆகி எவ் உயிர்க்கும் மாயா விருத்தி வலி
                                                     அடக்கிச்
சரதம் ஆன வீட்டு இன்பம் தருவாய் மதுரைத் தனி முதலே
சரதம் ஆன வீட்டு இன்பம் தருவாய் வீடு பெறுவார் போல்
விரத யோக நிலை அடைந்தாய் என்பார்க்கு என் நான்
                                                     விளம்புவனே.
36
உரை
   
2185. கண் நுதல் மதுரைப் பிரானை இவ்வாறு கருதிய பாணியால்
                                                               கனிந்து
பண் நுதல் பரிவட்டு அணை முதல் இசைநூல் பகர் முதல்
                                             தொழில் இரு நான்கும்
எண் உறுவார் தல் வடித்து இடன் முதல் ஆம் எட்டு
                                             இசைக் காரணமும் பயப்ப
மண்ணவர் செவிக்கோ வானவர் செவிக்கும் ஆக்கினாள்
                                                    விளை அமுதம்.
37
உரை
   
2186. இடையினோடு ஏனைப் பிங்கலை இயக்கம் இகந்து மூலம்
                                                     ஒடுத்து இயக்கி
நடு உறு தொழிலால் பிரம நந்திரம் நடைபெற இசைக்கும்
                                                     உள் ஆளாம்
மிடறு வீங்காள் கண் இமைத்திடாள் எயிறு வெளிப் படாள்
                                                புருவம் மேல் இமிராள்
கொடிறு அது துடியாள் பாடலும் அது கேட்டு அனைவரும்
                                                குதூகலம் அடைந்தார்.
38
உரை
   
2187. கன்னி நாடு உடையான் கைதவன் எனும் பேர்க் காரணம்
                                              தேற்றுவான் எனத்தான்
இன்னிசை அறிஞனாகியும் முன்போல் இயம்புவான் ஒரு
                                              படு கின்றான்
முன்னவன் அருளால் தன் மனக் கோட்ட முரண் கெடப்
                                              பொதுமையான் நோக்கி
இன்னவள் தானே வென்றனள் என்றோன் இனையவாறு
                                              அனைவரும் மொழிந்தார்.
39
உரை
   
2188. கரி உரை மொழிந்த கைதவன் இலங்கைக் கைதவப்
                                                  பாடினி கழுத்தில்
புரிகுழல் மாதை இருத்து என இருத்தும் போதுமை இடம்
                                                  கரந்து இருந்த
அரிய நாவலர் ஈது அற்புதம் ஈது அற்புதம் என
                                                  அறைந்தவை காண
விரிகதிர் மின் போல் மறைந்தனர் யாரும் வியந்தனர்
                                                  பயந்தனன் வேந்தன்.
40
உரை
   
2189. செம் கண் ஏறு அழகர் ஆடல் ஈது என்றே யாவரும்
                                                 தெளிந்தனர் ஏத்தி
அம் கண் நாயகர் தம் கருணையின் திறனும் அடியவர்
                                                 அன்பையும் தூக்கித்
தம் கணார் அருவி பெருக ஆனந்தத் தனிப் பெரும்
                                                 சலதியில் ஆழ்ந்தார்
வங்கம் மேல் வந்தாள் பிடர் மிசை இருந்த மாண் இழை
                                                 விறலியை மன்னன்.
41
உரை
   
2190. இறக்குவித்து அவட்கு முந்த முத்தாரம் எரிமணிக் கலன்
                                              துகில் வரிசை
பெறக் கொடுத்தேனை அவட்கு உள் மகிழ்ச்சி பெறச் சில
                                              வரிசை தந்து அவையில்
சிறக்க வந்து ஒருங்கு வைகி வான் இழிந்த தெய்வதக்
                                              கோயில் புக்கு இருந்த
அறக் கொடி இடம் சேர் பெரும் புல வோர்க்கு அரும்
                                              கலன் ஆதிகள் நல்கா.
42
உரை
   
2191. மன்னவர் வலிகள் எல்லாம் தெய்வத்தின் வலிமுன் நில்லா
அன்ன மா தெய்வம் செய்யும் வலி எலாம் அரண் மூன்று
                                                           அட்ட
முன்னவன் வலிமுன் நில்லா எனப்பலர் மொழிவது எல்லாம்
இன்ன பாண் மகளிற் காணப்பட்டது என்று இறும்பூது
                                                            எய்தா.
43
உரை
   
2192. மின் இயல் சடையினானை விடை கொடு வலம் செய்து
                                                           ஏகி
இன்னியம் இயக்கம் செய்ய எழில் கொடு தன் கோயில்
                                                         எய்தித்
தொல் நிதி பெற்றான் போலச் சுகுண பாண்டியனைப்
                                                         பெற்று
மன்னிய மகிழ்ச்சி வீங்க வைகினானன் இராசராசன்.
44
உரை